அத்தியாயம்-25
தேவராஜன் மாப்பிள்ளையின் அழைப்பை ஏற்று வந்தவராக, இளவழகியிடம் சம்பந்தி நலம் விசாரித்து மகளிடம் பேசிவிட்டு மாப்பிள்ளையிடம் வந்தார்.
அவன் தான் கலர் சோடாவை உடைத்து கொடுத்து சிறிது நேரம் நின்று நலம் விசாரித்து மீண்டும் கடைக்கு வந்து ஆல்டர் வேலையில் மூழ்கினானே.
“என்ன மாப்பிள்ளை… வேலையா இருக்கிங்களா? நான் வேண்டுமின்னா உதவவா?” என்று வந்தார்.
“இல்லைங்க… எனக்கு நானே செய்தாதான் சரிவரும்” என்று முடிக்க, அர்ஜுனனையும் அம்முவையும் பார்த்தார்.
அம்மு முகமெல்லாம் மலர்வாய் பேசுகின்றாள்.
பெண் சந்தோஷமாக தான் வாழ்வது அவர் முகத்தை வைத்து படித்து கொண்டார்.
என்ன மாங்காய் வைத்து மனைவி சந்திரிகா கேட்டதும், “ஏன்மா இப்படி இருக்க.. லூசா நீ.. கல்யாணம் ஆனா போதுமே. ரெடிமேட் கேள்வியா இதை கேட்டுடு. அப்படியெல்லாம் எதுவும் இல்லை.” என்று கையை பிடித்து கதைக்க முதலில் வருத்தம் கொண்டாலும், பெரியவளே சும்மா தானே இருக்கா. சின்ன புள்ளை இது. பொறுமையா வர்றப்ப வருவதும் சரிதான்’ என்று தேற்றிக்கொண்டார்.
‘வியாபாரம் கிராமத்தை விட இங்க பரவாயில்லையா?” என்று கேட்டார். மகளை கொடுத்ததால் கேட்கலாம்.
“அதெல்லாம் நல்லா விற்குது. ஆனாலும் அங்க சேமிப்புன்னு காசு சேரும். இங்க எவ்ளோ வித்தாலும் கையில காசு நிற்க மாட்டேங்குது” என்று உண்மையை சொன்னான்.
'ஆமா.. இவனுக்கு நல்லா வியாபாரம் ஆனாலும், இல்லை இல்லைன்னு சொல்லியே பழகிடுச்சு.' என்று முனங்கினார்.
“அத்தை சும்மாயிருங்க. அப்பறம் கோபப்படுவார்” என்று அம்மு கூற, “அதுவும் சரி தான். இல்லைன்னா வளைகாப்பு வைக்கிறப்ப முகத்தை உம்முன்னே வைப்பான்.” என்று இளவழகி மருமகளிடம் பேசுவதை கேட்டு சந்திரிகா ஆச்சரியப்பட்டு கொண்டார்.
பெரிய மகள் அஞ்சனாவை கட்டிக் கொடுத்த இடத்தில் சம்பந்தி சுலோச்சனா இப்படி மகளிடம் தன்மையாக பேச மாட்டார். ‘சும்மாயிருங்க’ என்று சின்ன மகள் பேசியது போல வார்த்தை விட்டால் மாப்பிள்ளை சரவணனிடம் ‘உன் பொண்டாட்டி இப்படி பேசினா’ என்று வத்தி வைப்பார்கள்.
இதில் தங்களிடம் வேறு, ‘என்ன பொண்ணை இப்படி வளர்த்து வஞ்சியிருக்கிங்க?’ என்று குறைகளாக வரிசையாக அடுக்குவார்.
சந்திரிகாவுக்கு மகளிடம் முகம் கடுகடுவென காட்டி இரண்டு வார்த்தை கூட சந்தோஷமாக பேச முடியாது.
அதை நினைத்தபடி மகளையும் சம்பந்தியும் பார்த்தார்.
”அம்மு அந்த இறாவை உறிக்கப்போ. இதை நான் பார்த்துக்கறேன்” என்று கறியை வதங்கினார்.
“கொடுங்க சம்பந்தி நானும் சமைக்கறேன்” என்றார்.
“அட அதெல்லாம் வேண்டாம்.” என்று மறுக்க, “இல்லைங்க சம்பந்தி. உங்களிடம் பேசிட்டே வேலை ஆகும்ல” என்றார் சந்திரிகா.
இளவழகியோ “கிச்சன்ல இங்க ஒரு ஆள் தான் நிற்கவே முடியும்.” என்றார்.
“நீங்க வேண்டுமின்னா வெங்காயம் உறிங்க அண்ணி” என்று மாற்று வேலை தந்து பேச ஆரம்பித்தனர்.
"அம்மு வேலையெல்லாம் பார்க்கறாளா? எதும் குறை செல்லறாப்ள நடக்கலையே" என்று பயந்து கேட்டார்.
“அட ஊர்லயிருந்தப்பவும் நேரத்துக்கு எழுந்து அர்ஜுனுக்கு டீ போடும். வந்ததும் சாப்பிட வச்சிடுவா. நான் கூட சாப்பிட சொன்னா கடைக்கு ஓடிடுவான். மோர் கஞ்சியா குடிச்சிப்பான்.
அம்மு வந்தப்பிறகுமோர் கஞ்சியா இருந்தாலும் நிதானமா குளிச்சிட்டு குடிச்சிட்டு கடைக்கு போங்கன்னு சொல்லி பழக்கப்படுத்திட்டா.
அர்ஜுன் எல்லாம் நம்ம சொல்லறதை கேட்கற அளவேயில்லை. நீங்களே பார்த்திருப்பிங்களே. கல்யாணத்துக்கு கூட அவன் தலைமுடியும் தாடியும்.
அதென்னவோ இப்ப ட்ரிம் பண்ணி நல்லாயிருக்கான். எல்லாம் உங்க பொண்ணு பேச்சை கேட்கறான்.” என்று பெருமைப்பட்டார்.
மகள் சொல் பேச்சை மாப்பிள்ளை கேட்க தாயுள்ளம் தன் பேச்சை கேட்காமல் போனான் என்று குறைப்படுவாரோ என்றா சந்திரிகா கேட்க, ‘சேசே யாராவது ஒருத்தர் பேச்சை கேட்கணும். அது நல்லது சொல்லறவங்களா இருந்தா போதும். அம்மு எல்லாம் என் பையன் நல்லதுக்கு தான் சொல்வா. இதுல குறைபட என்னயிருக்கு. நமக்கு பிறவு அவங்க தானே ஒருத்தருக்கு ஒருத்தர் துணை.” என்றதும் சந்திரிகா மகள் கொடுத்து வைத்தவளென்று எண்ண, தேவராஜனோ “அம்மு அம்மு.. மாப்பிள்ளைக்கு தண்ணி கொண்டா” என்றார்.
அம்மு உடனடியாக கையை கழுவிவிட்டு தண்ணீர் எடுத்து வந்தாள்.
அர்ஜுன் விக்கலெடுத்து நிற்க நீர் செம்பை நீட்டினாள்.
குடிக்க செம்பை சாய்கும் நேரம் இறால் நாற்றம் வரவும், நீரை பாதி குடித்து நிறுத்திவிட்டான்.
”படிச்சவ தான நீ. இறால் உறிச்ச கையோட தண்ணி செம்பை எடுத்தா அதே வாடை வராது. செம்பை கழுவ போடு.” என்றான்.
அவன் அப்படி பேசிவிட்டு வேலையில் முனப்பாய் மாற, தேவராஜோ, மகளை ஏறிட்டார்.
அம்முவோ சங்கடமாய் மாறினாள்.
கிச்சன் அறைக்கு வந்து செம்பை வாஷ்பேஷனில் போட்டு மீதி இறாலை உறிக்க ஆரம்பித்தாள். தேவராஜன் மாப்பிள்ளையின் முன் அமர சங்கோஜமாய் மகளிடம் வந்தார்.
“ஏ கழுத.. படிச்சவன்னு பீத்திக்கிட்டியோ?” என்று கடித்தார்.
“ஆமா… நான் பெராமை பேசறேன். உங்க மாப்பிள்ளைக்கு கல்யாணம் ஆனா அன்னைக்கு நைட்டே தெரியும். புஸ்தகம் மேல் ஸெல்ப்ல பார்வைக்கு படற மாதிரி தான் இருந்ததாம். அதுல தே.அமிழ்தினி பி.எஸ்சி போட்டிருந்ததை வச்சி நான் காலேஜ் முடிச்சவன்னு தெரிந்துக்கிட்டார்.
ஆனா முந்தா நேத்து தான் என்னிடம் வாயை திறந்து கேட்டார். ஆமான்னு சொல்லிட்டேன். எத்தனை நாள் பொய்யை மறைப்பிங்க?” என்று முகம் திருப்பினாள்.
தேவராஜனோ முகவாட்டம் அடையவும், “இதுக்காக எல்லாம் எங்களுக்குள் சண்டை வராது.” என்று கூறவும் மகளிடம் ஒன்றும் சொல்லாமல் அர்ஜுன் முன் வந்தார்.
“எங்க மேல கோபமா மாப்பிள்ளை.” என்றார்.
கண்ணாடி பாட்டிலை அடுக்கி வைக்கும் ரேக்கை தயாரித்தவன், அதனை கடைக்கு முன்னாள் ஆணி அடித்து வைக்கும் முடிவோடு ஆணியை கையில் எடுத்தான்.
“கோபப்பட என்ன தப்பு பண்ணிங்க? படிக்காதவளை படிச்சவன்னு சொன்னாளாவது ஏமாந்து வேலை. ஏன்னா எனக்குன்னு எதிர்பார்ப்பு இருந்தது ஏமாந்தேன்னு சொல்லலாம்.
படிச்ச புள்ளையை என்னை மாதிரி மளிகைகடைகாரனை கட்டி வச்சி அந்த புள்ளை வாழ்க்கையை இறால் உறிக்க வச்சிட்டிங்க. இதே மாச சம்பளகாரனுக்கு கட்டி வச்சியிருந்தா, வீட்டு வேலைக்கு ஆள் இருந்திருக்கும். அம்மு கஷ்டபட்டிருக்க மாட்டா.
நீங்க அவளுக்கு தான் ஏமாற்றாத்தை தந்துட்டிங்க. எதிர்பார்ப்பை உடைச்சிருக்கிங்க.
நீங்க இன்னும் கூடுதலா வரன் தேடியிருக்கலாம்” என்றான்.
தேவராஜன் தலை குனிந்து நின்றார். “மனசும் உடம்பும் ஒத்துழைக்கலை மாப்பிள்ளை.
வீடு கட்டி பெரியவளை கட்டி கொடுத்த கொஞ்ச நாள்லயே இதயத்துல அடைப்பு வந்துடுச்சு. வீட்லயிருக்கறவங்களுக்கு தொரியாது. அதான் மனசுல திடமா இருக்கறப்பவே நல்லவனிடம் பொண்ணை ஒப்படைக்கணும்னு எண்ணம்.
உங்க ஜாதகம் அமைந்தது. படிப்பை தவிர எந்த குறையும் எனக்கு தெரியலை.
பிள்ளைங்க மனசுல ஆயிரம் எதிர்பார்ப்பு ஆசையிருக்கலாம். எல்லாமே தர்றவன் தகப்பன். அதுக்குன்னு நல்லது இருந்தும் இன்னும் நல்லதா தேட பேராசைப்படலை.
எனக்கு உங்களை பார்த்ததும் பிடிச்சது. பொண்ணு பார்க்க வந்த பொண்ணு அம்முனு தெரியாமலையே, யாரோ ஒருத்தியாக அவ கண்ணுல தண்ணியை கண்டு சாதகமா பேசினிங்க. முதல் அபிப்ராயம் நிறைவா இருந்தது. வேற யோசிக்கவேயில்லை. ஒரு தகப்பனா ‘பையன்னா இந்தளவு இருப்பதே பெருமையா.” என்றதும் ‘அப்பா..’ என்று அலறியவன் கையெல்லாம் ரத்தம்.
ஆணியை அடிப்பதாக சுத்தியலால் கையை அடித்து தசை பிதுங்கி, ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.
“அச்சோ… வேலை பார்க்குற இடத்துல பேசி தொந்தரவு தந்துட்டேன்” என்று கூறி “அம்மு.. அம்மு. பஞ்சு எடுத்துட்டு வா” என்று கத்தினார்.
தேவராஜன் பதடப்பட, “இப்ப எதுக்கு பதறுறிங்க. ஒன்னும் ஆகாது.” என்றவன் அம்முவிடம் காட்டன் துணியை கேட்டான்.
தண்ணீரில் கையை அலம்பிவிட்டு கட்டு கட்ட போனான்.
“ஹாஸ்பிடல் வாங்க. ஒரு இஞ்செக்ஷன் போட்டா நல்லது” என்று அம்மு கூற, “எதுக்கு அவன் காசு புடுங்குவான். இதுக்கெல்லாம் ஹாஸ்பிடல் போவாங்க” என்றான்.
"அட்லிஸ்ட் டெட்டால் போட்டு கட்டுங்க" என்று கடையிலிருந்து சின்ன டெட்டாலை உடைத்து பஞ்சு கொண்டு துடைத்து கட்டினாள்.
"வலிக்குது டி" என்று பல்லை கடித்து கத்த, "ஆஹ் பின்ன வலிக்காம சுகமா இருக்குமா? ரத்தம் எப்படி கொட்டுது. ஸப்பா.. அங்க பாருங்க அத்தை மயங்கிட்டாங்க. எங்கம்மா அவங்களை தண்ணி கொடுத்து உட்கார வைக்கிற மாதிரி பண்ணிட்டிங்க" என்று திட்டினாள்.
அர்ஜுன் அன்னையை கண்டான். “ஏன்டா பார்த்து செய்யறது இல்லை” என்று கூறவும் “கறிக்குழம்பு தீய போகுது” என்றவன் அம்முவிடம், “போய் வேலையை பாரு” என்றான்.
தேவராஜ் ஓய்வெடுக்க கூறியும் கடையில் விட்ட வேலையை தொடர்ந்தான் அர்ஜுன்.
தேவராஜ் பக்கத்தில் போனால் அர்ஜுன் அடிக்கடி தடுமாறி போக, அறைக்கு வந்து உட்கார்ந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின் மகளை காண வந்ததால் மதிய விருந்து முடித்தார்கள்.
நல்லவேளை அடிப்பட்டது இடது கை என்பதால் சுள்ளென்று வலி மட்டும். இதே வலது கை என்றால் கஷ்டப்பட்ட இருப்பான்.
இன்று தங்கிவிட்டு செல்வதால் மாலை எங்கயாவது செல்ல முடிவெடுத்தனர். ரஞ்சிதம் அவள் கணவன் வீட்டிலிருந்தாள்.
சந்திரிகா இளவழகி அம்மு என்று மூவரும் பேசி சிரிக்க, சம்பந்தி வீடு என்ற பயம் குறைந்தது. ரஞ்சிதத்தையும் பார்த்துவிட்டு வந்தனர்.
மாலை அதே ரெட் ஹில்ஸ் புழல் ஏரிக்கு தான் வந்திருந்தார்கள். அர்ஜுன் வர மறுத்தும் விடாப்படியாக அம்மு இழுத்து வந்துவிட்டாள்.
தேவராஜனோ "சென்னைக்கு இதுலயிருந்து தண்ணி போகுதா மாப்பிள்ளை" என்று கேட்க, "ஆமாங்க" என்றவன் அம்முவை தான் அடிக்கடி திரும்பி பார்த்தான்.
இங்கு வந்தப்போது துண்டு மாங்காய் மிளாகாய் தூள் போட்டதை கேட்டிருந்தாலே.
அதே நினைப்பு.
அவள் பார்வை மாங்காய் பத்தை பக்கம் போனால் வாங்கி தரும் முடிவோடு இருந்தான். அவள் கேட்டு அவள் தந்தை வாங்கி தந்துவிட்டால்…
அவளோ கைப்பையில் இருந்து மாங்காய் பத்தையை எடுத்து சுவைத்தாள்.
தேவராஜிடம், ‘ஒரு நிமிஷம்’ என்று விடைப் பெற்றவன், மனைவியிடம் வந்து, என்னதிது?” என்றான்.
“எப்படியும் ஏதாவது வாங்கி சாப்பிட தோணும். இங்க வேர்கடலை மாங்காய் சோளப்பொரி இருக்கும். அதான் தெரிந்தே காசை கரியாக்கணும். மாங்காய் கடையிலயிருந்து எடுத்து பத்தை போட்டு மிளாகாய் பொடி தூவி டிபன் பாக்ஸில் எடீத்துட்டு வந்துட்டேன். அத்தை வேர்கடலை அவிச்சி எடுத்தாங்க” என்று நீட்டினாள்.
“எப்படி மளிகைக் கடைக்காரர் பொண்டாட்டியா யோசகச்சேனா?” என்று கேட்க அர்ஜுன் உதடு விரிந்தது.
“உன்னை.” என்று அவள் கையை கிள்ளி திருகினான்.
அர்ஜுன் சிரித்து முதல் முறை மாமனார் பார்க்க நிறைவாக மனதிற்குள் ஆனந்தப்பட்டார்.
“இங்க ஜெயில் இருக்காமே சம்பந்தி அதுயெங்க?” என்று சந்திரிகா கேட்க, தேவராஜ் தூரத்தில் வரும் போது ஒரு சுவர் பார்க்கலை. நல்லா உசரமா?” என்று நினைவுப்படுத்தினார்.
“அந்த தாடி மட்டும் ட்ரிம் பண்ணாம சுத்தினா உங்களையும் அங்க தூக்கி போட்டுயிருப்பாங்க. பக்கா பொறுத்தும் பத்தும் அர்ஜுனுக்கு பொருந்தியிருக்கு .” என்று கேலி செய்ய, “வீட்டு வா தோளை உறிக்கேன்” என்று மனைவியிடம் பேசி வந்தான்.
அவனுக்குள் தேவராஜன் பேசிய வார்த்தை இன்னமும் ஓடியது. ‘ஒரு தகப்பனா ‘பையன்னா இந்தளவு இருப்பதே பெருமையா.’ என்ற வார்த்தை. அவன் தந்தை பொன்வண்ணன் உரைத்தது. இன்று காலம் கடந்து மாமனார் அவனை பாராட்டி உதிர்த்த வார்த்தை அல்லவா?!
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Unaku ena arjun nee nalla prupana paiyan intha vayasula elam eduthu porupa seira appa vana edathula irunthu . Un pondati ipo unaku etha mari iruka
Ajju ni romba romba nalla poruppa irukka…. Aana ena kovam tha mookku mela varuthu😘😘😘😘
Super sis nice epi 👍👌😍 Arjun sirukuradhu mamanar ku ulaga adhisaiyama eruku 🤣 ponnu santhoshama erundha avarukum happy dhane🥰😘
Nice sis waiting for next ud 🤩🤩🤩😍🥰🥰
Yenakku ennamo doubt a irukku….ammu oruvelai pregnant a irupaalonnu….🤔🤔🤔…mamanar, marumaganidam …ivulo iruntha pothum nu sonnathuku peruma 😇😇😇varama…ratham 🩸🩸🩸varuthu….achcho….😄😆😆…nice move sis….👏👏👏👍💐💐💕💕💕
மாறிட்டே வரான்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Dei aju payalae unna nenaicha perumaiya irukku❤️❤️….super da… Waiting for next ud akka….
Arjun oru appa ah va paiyan oda gunam pidichi poi than ammu ah unnaku katti kuduthurau ippo va chum sirichiyae athu varaikkum happy
Hahaha மளிகைக்கார ன் பெண்டாட்டி என்றால் அது நம்ம அம்முதான்
Nice sis
Super epi👍
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
❤❤❤❤
Wow. Arjun you are great man. good pair. Intresting sis.
When u will continue Rasavaathi Viddhagan story mam
வாஸ்தவம் தான்..! மாமனார் வாயால நல்லப்பேரு வாங்கிறது…. டாக்டர் பட்டம் கிடைச்சதுக்கு சமம் தானே…!
ஆனா, இந்த அர்ஜூன் ஏன் பேங்க்ல வோன் வாங்கி டிபார்ட்மென்டல் ஸ்டோர் மாதிரி வைக்க கூடாது.
Super super super super super
அம்முவோட அப்பா அவர் உடம்ப பார்க்காமல் ஏன் இவ்வளவு அஜாக்கிரதையா இருக்காரு
அருமையான பதிவு
Interesting