புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை -29

அத்தியாயம்-29

    அமிழ்தினி இங்கு வந்த அலுப்பில் அசதியில் படுக்க, வயிற்று வலி பின்னி எடுத்தது. உட்காருகின்றாள் நிற்க்கின்றாள், நடக்கின்றாள் ஏனோ முடியவில்லை. இதில் பயத்தில் முத்துகள் போல வேர்வை ஊற்றியது.

    இளவழகி சந்திரிகா இருவரும் பேச்சு சுவாரசியத்தில் இருக்க, தேவராஜ் கடையில் மாப்பிள்ளையுடன் பேசினார்.‌

  ஒரு வாரம் பிரிவில் இருந்த அர்ஜுனுக்கு மனைவியையே பார்வையிட அவளது முகபாவணை அவனுக்கும் பயத்தை மூட்டியது.

  “ஏய் அமிழ்தினி என்ன பண்ணுது?” என்று வந்தான்.‌

   “முடியலைங்க வயிறு விட்டு விட்டு சுருக் சுருக்னு குத்துது வலிக்குது. என்னவோ மாதிரி இருக்கு” என்றாள்.

  அடுத்த நிமிடம் வீட்டை களோபரமாக்கினான்.
  இது பிரசவ வலியாக இருக்கும் என்று கூற, இளவழகியோ இது ஏழாம் மாசம் தானே டா முடிந்துயிருக்கு” என்றார்.‌

    “அதெல்லாம் தெரியாது” என்று மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தான். சந்திரிகா கூட, “இல்லைங்க மாப்பிள்ளை சூட்டு வலியா இருக்கும். பனிக்குடம் உடையலையே.” என்றார்.

  “ஏன் உடையணுமா? முதல்ல அவ வலிக்குன்னு துடிக்கா, ஹாஸ்பிடல்ல போய் பார்ப்போம்” என்று கிளப்பினான்.

  யார் சொல்லியும் கேளாமல் கடையை அடைத்து குடும்பத்தோடு ரெட்ஹில்ஸில் அவர்கள் எப்பொழுதும் காணும் மருத்துவமனையில் நின்றார்கள்.‌

   அங்கு டியூட்டி பார்க்கும் நர்ஸோ அமிழ்தினியை ஆராய்ந்தார்.

  அர்ஜுனுக்கு நர்ஸா.. என்று பார்வை பதித்து, “டாக்டரு இல்லை?” என்று கேட்டான்.

  முதல்ல நான் செக் பண்ணி பிபி வெயிட் பார்த்துட்டு அனுப்புவேன்” என்றார்.

  “அப்ப டாக்டர் எப்ப பார்க்கறது. பேஷண்ட் துடிக்கறது கண்ணுக்கு தெரியலை? வார்டை ரெடி பண்ணுங்க” என்று பதறினான்.‌

  “சார்… அவங்களுக்கு டேட் இன்னமும் இருக்கு. இது பிரசவ வலி இல்லை” என்று கூறினார்.

  அர்ஜுனோ கலாட்டா செய்யாத குறையாக கத்த, டாக்டரே வெளியே வந்து விட்டார்.

  முதலில் இந்த பொண்ணுக்கு என்னாச்சு ட்ரு பாருங்க’ என்று மற்ற பேஷண்ட் கூறும் அளவிற்கு அவன் பயமும் பேச்சும் ஏச்சும் இருந்தது.

  டாக்டர் அமிழ்தினியை அறைக்குள் அழைத்து பார்த்து சோதிக்க, சூட்டு வலி என்றதே ஊர்ஜிதமானது.
 
     டாக்டர் அமிழ்தினி அர்ஜுனிடம் ‘முதல் பிரசவமா? கணவர் ஓவர் பாசமா இருக்கு. சார் இன்னிக்கு அதிகமா டிராவல் பண்ண சூடு பிடிச்சிருக்கு. அடி வயிறு சுண்டி வலிக்குது. வலிக்கு ஜீரக தண்ணி குடிங்க. கொஞ்ச நேரத்துல மட்டுப்படும். பிரசவம் நெருங்க இன்னும் மினிமம் ஒன்றரை மாசமிருக்கு” என்று சிரிக்க அர்ஜுனோ அப்ப இன்னிக்கு குழந்தை வெளியே வராதா?” என்று கேட்டான்.

  “நீங்க குறை பிரசவமா? அதான்… உங்க குழந்தையையும் அப்படியே எதிர்பார்க்கறிங்க.” என்று கிண்டலாக கூறி நர்ஸிடம் அனுப்பினார்.
 
  நர்ஸ் அருகே வந்ததும், “என் சர்வீஸ்ல எத்தனை பேரை பார்த்திருக்கேன்‌. சூட்டு வலியா பிரசவவலியானு எனக்கு தெரியாது?
   எனக்கு நாலு குழந்தை.. எனக்கு தெரியாததா உனக்கு தெரிய போகுது. என்னமோ குதிகுதின்னு குதிக்க. பார்வையை பாரு புள்ளை பிடிக்கறவர் மாதிரி” என்று நர்ஸ் அர்ஜுனை திட்டியபடி அமிழ்தினியை பார்த்துக்கொண்டார்.
 
  அர்ஜுனோ அந்த நர்ஸை பிடிக்காமல் போனது.

  இளவழகியும் சந்திரிகாவும் அர்ஜுன் மருத்துவமனையில் செய்த அலைப்பறையில் ஆடிப்போய் இருந்தனர்.

   தேவராஜுக்கு மகளுக்காக மாப்பிள்ளை முதல் முறை குரலுயர்த்தி பேசியதில் துடித்ததில் மகிழ்ந்தார்‌.

  அதன் பின் வீட்டுக்கு வந்து அமிழ்தினி உறங்கினாள்.
   இதில் பாதி நாள் கடையை அடைத்து விட்டு போனதும், கூடுதலாய் மருத்துவ செலவை இழுத்து வைத்தான்.
   
   “என்னை செலவு பண்ணுறதா புலம்புவான். இன்னிக்கு இவன் தான் தேவையேயில்லாம டாக்டருக்கு பணத்தை அழுதுட்டு வந்தான்” என்று இளவழகி கூற, அர்ஜுனுக்கு தன் நிலையே வித்தியாசமாக தோன்றியது‌. 
 
   அமிழ்தினி முகம் வாடினால் தனக்குள் இதயம் துடிப்பது காதலா? என்று புரிய இத்தனை நாட்கள் ஆனது.

    அதன் பின் தேவராஜ் திருவண்ணாமலைக்கு கிளம்பினார். சந்திரிகா மட்டும் கூடவேயிருந்தார்‌.

   இளவழகி சந்திரிகா இருவரும் சம்பந்தி என்றதை தாண்டி அக்கா தங்கை போல பேசி சிரிப்பார்கள்.

   மகள் ரஞ்சிதம் வந்து பேசி விட்டு செல்ல, அமிழ்தினி தன் நாத்தனாரிடம் அவங்க தம்பி அர்ஜுன் மருத்துவமனையில் செய்த அலப்பறையை விவரிக்க சிரிப்பு தான் வந்தது.

  இதில் ரஞ்சிதம் மகள் கவிதா செய்யும் குறும்பு என்று நாட்கள் ஓடியது. நடுவே அர்ஜுன் மருத்துவமனைக்கு அழைத்து வர, அதே நர்ஸ் அர்ஜுனை கேலி செய்து பேச முசுடு காரனுக்கு கோபம் உதித்தது.

இதில் அமிழ்தினிக்கு பார்க்கும் டாக்டர் இனி இங்கு வரப்போவதில்லை அவர் வெஸ்ட்அண்ணா நகர் கிளையில் வேலை மாற்றப்பட்டதாக அறியவும் கலைக் கொண்டார்.

  அர்ஜுனோ “வெஸ்ட் அண்ணா நகர்னா இந்த பாடி மேம்பாலம் ஏறியிறங்க வருமே அதுவா?” என்று கேட்க ஆமென்றார்.

   அர்ஜுனுக்கு ஏற்கனவே இங்கு வர தயக்கம். இதில் இத்தனை நாட்கள் அமிழ்தினிக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டரும் இனி வரப்போவதில்லை என்றதும் அங்கு வந்தால் அமிழ்தகனிக்கு மருத்துவம் பார்ப்பிங்களா? என்று கேட்டான்.

  “அது கொஞ்சம் பெரிய ஹாஸ்பிடல்” என்று டாக்டர் உரைக்க, “பரவாயில்லை… எனக்கு என் மனைவிக்கு உங்களிடமே தொடர்ந்து சிகிச்சை பார்க்கட்டும்” என்றான்.

  பின்னர் அண்ணாநகரில் மருத்துவமனை இடம் கேட்டு அறிந்து அங்கு தான் செக்கப்பிற்கு அழைத்து செல்ல உத்தரவிட்டான்.

     ஓலோ ஆட்டோ புக் செய்து அம்மாவையும் அமிழ்தினி அம்மாவையும் மனைவியின் துணைக்கு ஏற்றி செக்கப்பிற்கு அனுப்புவான்.

  ரஞ்சிதம் கூட “இது செலவு அது செலவுன்னு கத்துவான். பொண்டாட்டியை மட்டும் எப்படி கவனிக்கிறான் பாரும் மா” என்று கூறுவாள்.

   “அவவயிற்று அவன் வாரிசு இருக்கு. அப்படி தான் இருப்பான். உனக்கென்ன? உன் புருஷன் உன்னை தாங்காததா?” என்று பதிலுக்கு உரைப்பார்.

“கொஞ்சம் மாமியார் மாதிரி இரும்மா‌. இல்லை… என்னை நாத்தனாரா நடிக்க விடு. இரண்டும் பண்ண விட மாட்டேங்குது. உன் பையன் மட்டும் எப்படி வளர்த்திருக்க?” என்று சலிப்பாள்.

   ”என் புள்ளைக்கு என்னடி குறைச்சல்? படிப்பு டிகிரி இல்லை. டிப்ளமோ தான். மத்தது ஒரு குறையும் இல்லை‌. அவனவன் சென்னையில் வியாபாரம் நடத்தறது குதிரை கொம்பான விஷயம்‌. என்‌மகன் இங்க வந்தும் காலூன்றி இருக்கான்.‌
 
    மத்த பசங்க மாதிரி காதலிச்சு மானத்தை வாங்கலை. நான்‌பார்த்து முடிச்சி பொண்ணை மனசார ஏத்து வாழறான். ஒரு பீடி சிகரெட் தண்ணி பழக்கமிருக்கா? ஏன் கடையில் கூட விற்க மாட்டான்.” என்றதும் கர்ணா சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பதால் ரஞ்சிதம் முகம் லேசாய் வாடியது‌.

  அதை கவனிக்காமல் “என்ன கொஞ்சம் முகத்தை சிடுசிடுன்னு வச்சிப்பான். அது இந்த புதர்ல கூடுதலா பயமுறுத்துது. முன்ன எல்லாம் கொஞ்சம் ட்ரிம் பண்ணிருந்தான்.” என்று பேசவும் அமிழ்தினியோ கணவனை தான் பார்வையால் விழுங்கினாள்.

   ரஞ்சிதமும் ‘சரி நான் கிளம்பறேன். பார்த்துக்கோங்க அத்தை… இங்கன்னா ஹாஸ்பிடல் அரைமணி நேரம் தான்‌ இப்ப பிரசவ வலி வந்தா வெஸ்ட் அண்ணாநகருக்கு ஓடணும்’ என்று நழுவினாள்.

   சந்திரிகா இளவழகி தான் பெரும்பாலும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். ஆட்டோ என்பதால் வீட்டில் சும்மாயிருக்க இருவருமே அமிழ்தினியோடு செல்வார்கள்.

   அமிழ்தினி கூட அவ்வளவு தூரம் எதுக்குங்க. இங்கேயே பார்க்கறேன் என்றாள்.

  அர்ஜுனோ ‘ஒன்னும் வேண்டாம். அங்க போனா அங்க வேலை பார்க்குற நர்ஸ் எல்லாம் என்னை பார்த்து சிரிக்கறாங்க. நாளைக்கே குழந்தை பிறந்தா நாலு நாள் ஹாஸ்பிடல்ல வச்சியிருப்பாங்க. நான் வர்றப்ப அந்த நர்ஸ் பொம்பளையை பார்த்து நெளிநஞ்சுட்டே வரணும். எனக்கு பிடிக்கலைன்னா விடேன். உனக்கென்ன அதே டாக்டரம்மா. அதை விட பெரிய ஹாஸ்பிடல்” என்று கூறினான்‌.

  “செலவு அதிகமே” என்றாள் அமிழ்தினி.
  
   ”என் குழந்தை வருவது செலவு இல்லைடி. வரவு.” என்றவன் முத்தத்தை பகிர்ந்தான்.

   “கால் கிலோ காதல் என்ன விலை?அப்படின்னு இருந்திங்க. இப்ப என்ன என்னயென்னவோ பேசறிங்க.” என்றாள்.

“எவ்வளவு விலையா இருந்தாலும் அந்த காதல் கருமத்தை வாங்கிடலாம்னு முடிவுப் பண்ணிட்டேன். விலையை பத்தி யோசிகாகலாமா? ஒரு விஷயத்துல லாபம் வருதுன்னா வாங்கலாம்.” என்று வியாபார புத்தியில் கூறி அமிழ்தினி வயிற்றில் கையை வைத்து அதையே பார்த்தான்.

அமிழ்தினியோ தன் கரத்தால் அர்ஜுன் சிகைக்குள் கையை விட்டு கோதினாள்.

   அடர்ந்த கேசம் சுருள் சுருளான முடி, அவளை நெளிய வைத்து கிறக்கம் வைத்த தாடி, என்று பார்வையிட்டாள்.

   இவனை முதலில் கண்ட போது ‘என்ன நம்மளையே பார்க்கறான்னு திட்டிய நேரம், பூச்சாண்டி மாதிரி முடியை வளர்த்து இருக்கான்.’ என்றாளே. அதே முடி மீது காதலா? என்று அவளுக்கும் ஆச்சரியம்.

  ‘சரி நான் கடைக்கு போறேன். பொங்கல் வருது’ என்று எழவும், “பார்த்தியா… கால் கிலோ தான் உன் காதல்” என்று சிரிக்க, ‘கால் கிலோ காதல் கிலோவா காதலை கொட்டறேன். அப்ப தான் நல்லது. மொத்தமா மூட்டையா காதலை கொட்டினேன். அப்பறம் வருஷத்துக்கு ஒரு பிள்ளைன்னு வயிற்றை தள்ளற நிலைமை ஆகிடும்” என்று சீண்டி சென்றான்.‌

  அமிழ்தினியும் அவன் கூற்றை பேச்சை ரசித்தாள்.‌

-பிரவீணா தங்கராஜ்

17 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -29”

  1. Super sis semma epi 👌👍😍 aha Arjun first time unna eppdi parka santhoshama eruku pa kaal kilo kaadhal yedai koodikitey pogattum

  2. Nice sis 🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  3. மளிகை கடைகாரனின் கால் கிலோ காதல் செமயா இருக்கு சகோதரி வாழ்த்துகள்

  4. Thadikara konja nerathula clinic ah yae pathravachitan ithula ultimate yae innaiku kuzhandhai varatha nu ivan kettan parunga ivan ah enna tha solla aana payapulla love ah konjam kammichalum nalla than iruku

  5. Veena akka adhu endha nurse nu sollunga enga arju paiyala poi pulla pudikuravan maadhri😡 iruken nu sonnadhu…. Address kudunga ka poi sanda poda poren…

  6. கால் கிலோவோ அரை கிலோவோ, எதுவா இருந்தாலும் தன் குழந்தைன்னு வந்துட்டா காசு பணமெல்லாம் பார்க்க முடியாது தானே.
    😃😃😃

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!