அத்தியாயம்-31
அர்ஜுன் குட்டி யானை வண்டியை ஓட்டி வேர்த்து வழிந்தான்.
சிக்னலில் வண்டி ஊர்ந்தது. சாதாரணமாகவே டிராபிக் பொறுமையை சோதிக்கும். இதில் மனைவி பிரசவத்தில் மருத்துவமனையில் சேர்த்திருக்க, அர்ஜுன் மனம் என்ன பாடுபடும்.
கால் மணி நேரம் ஒரு இஞ்சும் நகராமல் வண்டி நின்றது. அர்ஜுன் துடித்த துடிப்பு அவன் மட்டுமே அறிவான்.
அந்த நேரம் சந்திரிகா போனில் கூப்பிட்டு “பையன் பிறந்திருக்கான் மாப்பிள்ளை” என்றார்.
அர்ஜுனுக்கு கண்ணீர் வழிய, “அம்மு எப்படியிருக்கா அத்தை? நார்மல் பிரசவம் தானே? பனிக்குடம் உடைந்ததா சொன்னிங்க” என்று குரல் தழுதழுத்தது.
“அதெல்லாம் நல்லாயிருக்கா மாப்பிள்ளை. பனிக்குடம் உடைஞ்சது. ஆனா முழு தண்ணீ வெளியேறும் முன்ன வந்துட்டோம். என்ன டிராபிக் தான் அதிகமாக இருந்தது.” என்றார்.
“நானும் டிராபிக்ல தான் அத்தை மாட்டிட்டு இருக்கேன். அவளை பார்த்துக்கோங்க. குழந்தை எப்படியிருக்கான்?” என்று கேட்க, “அம்மு போட்டோ எடுத்து அனுப்பறதா சொன்னா” என்றதும் நோட்டிபிகேஷன் வந்தது.
“சரிங்க அத்தை வந்துடறேன் கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்று குரல் கமறி அணைத்து விட்டு போட்டோவை பார்த்தான்.
நர்ஸ் பெண்ணை வைத்து போட்டோ எடுத்திருப்பாள் போல. அசதியில் நலுங்கிய நைட்டியுடன் லேசாக சிரிக்க முயன்று இருந்தாள்.
பக்கத்தில் தலைமுடி இவனை போலவே அடர்த்தியாக வைத்து இளஞ்சிவப்பு நிறத்தில் குழந்தை இருந்தது.
இடுப்பில் வெள்ளை துணி கட்டியிருந்தது.
பிஞ்சு கைகளை கண்டதும் போனிற்கு முத்தமிட்டான்.
“என்ன சார் வண்டி மூவ் ஆகாம இருக்கு.” என்று பக்கத்தில் இருந்த ஆட்டோக்காரன் கேட்க அதற்கு ஆட்டோவிற்குள் இருந்த ஒருவனோ, “எல்லாம் ஊர்லயிருந்து இங்க வந்து படிப்பு, வேலை பார்க்கறாங்க. சென்னையில் ஜனத்தொகை ஏறுது. இப்படி லீவு அதுயிதுன்னு சொந்த ஊருக்கு படையெடுக்கறாங்க. பொங்கல் தீபாவளி என்றாலே இப்படி கூட்டம். டிராபிக் தவிர்க்க முடியாது.” என்றார்.
“ஆமாப்பா… சொந்த மண்ணுல இல்லாம வேலை படிப்புக்கு மட்டும் இந்த ஊரை போற்றுவாங்க. ஆனா ஏதாவதுன்னா எங்க ஊர் மாதிரி இல்லைன்னா பேசுவாங்க. சென்னையை மட்டும் தட்டுவினுங்க.
அவங்க அவங்க ஊர்லயே படிப்பு வேலைன்னு எவன்பார்க்கான். எல்லாம் வருமானம் குறைச்சல்னு இங்க தானே படையெடுக்காங்க. எவனாவது சொந்த மண்ணில வர்ற வருமானம் போதும்னு வாழ்ந்து அதுல முன்னேறுறானா? அங்க வக்கு இல்லை.” என்று பேச டிராபிக் மெதுவாய் ஊர்ந்தது.
அர்ஜுன் இந்நேரம் வரை ‘ஊராயிது சட்டுனு ஹாஸ்பிடல் போக முடியுதா?’ என்று மனதில் சலிப்படைந்தான்.
வண்டி நகரவும் அவனும் ஓட்ட, இருபது நிமிடம் கழித்து, ஒரு கடைக்காரனிடம் நிலைமையை சொல்லி அங்கே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு ஓடினான். பின்னே வசதியான இடத்தில் கரும்பு, காய்கறி இருக்கும் வண்டியை பார்க் செய்தால் நன்றாக இருக்குமா?
அர்ஜுன் அறைக்கு வர, அவனை நர்ஸுகள் மேலும் கீழும் பார்த்திட தவறவில்லை. உடை தான் சங்கடப்படுத்தியது. என்னதான் பேண்ட் சட்டை என்றாலும் அதை இன் செய்யவில்லை. வார் செருப்பு அணிந்திருந்தான். ஏதோ பொங்கல் வருகின்றதென்று அமிழ்தினிக்காக மீண்டும் ட்ரிம் செய்திருந்தான். பார்க்க முரட்டு பீஸாக அதே கணம் அழகனாக.
அதனால் நேராக முகம் அலம்பி மாமியார் சந்திரிகா கொடுத்த துண்டில் துடைத்து தன்னவளையும் தன் உயிரின் மறு உருவத்தையும் காண வந்தான்.
அம்மு லேசாய் சிரிக்க, சுருக்கென்ற அடிவயிற்றில் வலி, முகம் சுணங்கினாள். “ஏய் ஸ்டெயின் பண்ணாத டி” என்று கடிந்தபடி வந்தான்.
”உங்களை மாதிரியே முடி. இங்கயிருக்கற நர்ஸ் எல்லாம் ஆம்பள குழந்தைக்கு இவ்ளோ முடியான்னு பேசிக்கிட்டாங்க.” என்றாள் வசதியை புறம் தள்ளி.
சந்திரிகா மருமகனிடம் குழந்தையை கொடுக்க, “இல்லைத்தை மார்க்கெட்டிலிருந்து அப்படியே வர்றேன். இருக்கட்டும் தூரயிருந்து பார்த்துக்கறேன்.” என்றான்.
“அம்மா… அவருக்கு குழந்தையை தூக்க தெரியாது. கவிதா குட்டியை கூட தலை நின்றப்பிறகு தான் தூக்கினார்” என்று உண்மையை உடைத்தாள்.
குழந்தையை அம்மு அருகே வைத்து விட்டு நகர்ந்தார் சந்திரிகா.
அர்ஜுன் அம்மு அருகே வந்து, “சட்டுனு வரமுடியலை. இந்த மளிகைகடைக்காரனே இப்படி தான்னு திட்டாத. டிராபிக்ல மாட்டிக்கிட்டேன்” என்று கூற, அம்முவோ, அவன் கையை பிடித்து கன்னத்தில் ஒற்றினாள்.
குழந்தையை இமைக்காமல் பார்த்தவன் “ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா? அந்த டாக்டர் இல்லைன்னு அத்தை சொன்னாங்க” என்றான்.
“ஜென்ஸ் டாக்டர்.” என்றாள்.
“உயிரை மீட்டு தர்ற சாமிக்கு ஆண் பெண் வித்தியாசம் இல்லை அம்மு.” என்று முடித்துவிட்டு மகனின் கைவிரலில் முத்தமிட்டான் அர்ஜுன். காலில் முத்தமிட, மீசை குத்தி சிணுங்கியது.
“அடஅடஅடா என் பேரன் ஏன் அழுவுறான்” என்று இளவழகி வந்தார்.
பின்னாலே ரஞ்சிதம் குழந்தையோடு வர, அறையில் இருவரை தவிர யாரும் இருக்க கூடாதென்று அர்ஜுன் மனைவியிடம் “நான் வெளியே இருக்கேன்” என்றான்.
ம்ம்” என்றவள் சாய்வாய் அமர முயன்றாள். இளவழகி அமர வைத்து பிள்ளையை தூக்கி கொண்டார்.
அதன் பின் அங்கே பேரனுக்கு கொஞ்சல் மட்டும்.
அம்மு உறங்கி வழிந்தாள்.
ஊரிலிருந்து மாலை ஆறு மணிக்கு தேவராஜன் வந்தார். மகளையும் பேரனையும் பார்த்து பூரித்தார். பெரிய மகள் அஞ்சனா உடனடியாக வந்து பார்க்க முடியாதென்று, திருவண்ணாமலை வந்ததும் காண வருவதாக உரைத்தாள்.
எப்படியும் திருவண்ணாமலைக்கு அமிழ்தினி போக வேண்டும். போன முறை போல ஒரு வாரத்தில் அம்மு திரும்பி வரமாட்டாளென புரிய துவங்கியது. ஏனெனில் தீட்டு கழிக்காமல் அனுப்ப மாட்டார்கள். அதனால் மருத்துவமனையில் இருந்த நான்கு நாட்களும் கடையை அடைத்துவிட்டு வந்து மனைவி மகனை காண வந்தான் அர்ஜுன்.
அங்கிருந்தபடியே திருவண்ணாமலைக்கு மகளை அழைத்து சென்றனர் அம்மு குடும்பத்தார்.
அர்ஜுன் அதன் பின் தன் முடிவை எடுத்தவனாய் மாறினான்.
அம்முடிவில் ரஞ்சிதம் கர்ணா தான் கவலைக்கொண்டனர். இளவழகிக்கு மகனின் முடிவு எதுவோ அதை பின் தொடரும் ஆத்மா அவர்.
முப்பது நாளில் அழைத்து செல்வானென்று எண்ணியிருக்க, அர்ஜுனோ மூன்று மாதம் முடியட்டும் என்று வரவேண்டாமென உரைத்தான்.
அமிழ்தினி ‘இந்த தாடிக்காரனுக்கு என் மேல குழந்தை மேல கொஞ்சூண்டு தான் பாசம்’ என்று முனங்குவாள். ஆனால் பத்து நாட்களுக்கு ஒரு முறை அர்ஜுன் மகனை மனைவியை காண வந்திடுவான்.
அஞ்சனாவுக்கும் குழந்தை இன்னமும் உருவாகாததால், கொஞ்சம் பேருக்கு தான் அர்ஜுன் அமிழ்தினி மகனுக்கு பெயர் சூட்டும் விழாவின்போது கூறியிருந்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து காரில் புக் செய்து வர சொல்லியிருந்தான் அர்ஜுன். ஆட்டோ வேண்டாம் என்று தவிர்த்து விட்டான்.
அம்முவும் மூன்று மாதம் கழித்து கணவனை தன் வீட்டில் காணப்போவதால் இரவெல்லாம் உறங்காமல் அடுத்த நாள் காரில் உறங்கினாள். முப்பது நாளில் கயிறு கட்டி பெயர் சூட்டும் விழா வைப்பது அவர்கள் வழக்கம். ஆனால் சில காரணத்தால் மூன்று மாதம் என்று தள்ளி வைத்தான் அர்ஜுன். அவனுக்கு முன்பு ஒரு வாரம் மனைவியை பாராததே கவலையை கொடுத்தது. ஆனாலும் இந்த முறை மனைவி மகளை மூன்று மாதம் பிரிந்திருந்தான்.
தடுப்பூசி எல்லாம் அம்மா வீட்டிலேயே போட்டதாலும், அவளும் குழந்தையை பார்த்துக்கொள்ள கற்றுக்கொண்டால் பரவாயில்லை என்று தோன்ற மூன்று மாதம் பிரிவை கடந்தார்கள்.
அமிழ்தினி கண் விழித்த நேரம், ஆவணியாபுரத்தில் தன் சொந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க கார் நின்றியிருந்தது .
“இறங்குமா” என்று தேவராஜ் கூற, இங்க..” என்று விழிக்க, ‘பொன்வண்ணன் ஸ்டோர்’ என்ற சிறு கடை அருகே ஒரு பெரிய ஹால் மட்டும் எழுப்பியிருந்தனர்.
அங்கு தான் பெயர் சூட்டும் விழா என்று பேனர் தொங்கவிடப்பட்டது.
“இந்த இடம்… இங்க எப்படி?” என்று கேட்டவளிடம், “இனி இங்க தான். பொன்வண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைக்க போறேன். இந்த பெயர் சூட்டு விழா முடிஞ்சதும் இதே இடத்துலே சரக்கு வாங்கி மளிகை கடையை டிபார்ட்மெண்ட் கடையா மாத்திடுவேன்.
சென்னை வேண்டாம்… சொந்த ஊர் சொந்த மண்ணுல சாதிக்க முடியாதவனா நான் இருக்கக்கூடாது. வருமானம் கூட குறைய வர்றதை பார்த்துக்கலாம்” என்று அழைத்தான். மகனை தன் கைக்கு மாற்றிக்கொண்டான்
அவன் பேசுவதை கேட்டபடி அடியெடுத்து வைக்க, ‘அந்த ஹால் பெரிதாகவே இருந்தது.
முன்பு கடையில் செவிக்கு பின்னால் பேனாவை சொருகி, பக்கத்தில் இருக்கற நிலமும் நம்மளுடையது தான். செடியா வளர்ந்து கிடக்கு என்றான்.
அப்பொழுது செடி கொடி மரமென சில முட்புதர்களாக இருக்க பெரிதாக யோசிக்கவில்லை. இன்று அந்த முட்புதர் இருந்த இடத்தை தரமட்டமாக்கி சுற்றிலும் சுவர் எழுப்பி தனி கூடாரமாக சுவர் எழுப்பி மாற்றியிருக்க, இடம் பெரிதாக தோன்றியது. ஒரு பக்கம் சேர் மட்டும் போடப்பட்டிருந்தது. அதில் உறவுகளும் தெரிந்தவர்களும் வீற்றிருக்க, மறுபக்கம் சாப்பாடு பந்தியாக பந்தி சேர்கள் இருந்தது.
ஒருயிடத்தில் பெரிய கம்பளம் விரித்து அங்கே தாம்பூலதட்டுகள் இருந்தன. அங்கே முறத்தில் அர்ஜுன் அமிழ்தினியின் கல்யாண உடைகள் மடித்திருந்தது. அதில் குழந்தையை வாங்கி ரஞ்சிதம் வைத்தாள். அத்தை முறையில் மடியில் வைத்து சம்பிரதாயத்தை ஆரம்பித்தனர்.
குழந்தை வீல்லென்று கத்த, “ஏலேய்… கூட்டத்தை பார்த்தா உங்கப்பாவுங்கு ஆகாது அதே மாதிரி வளராதலே” என்று கொஞ்சியபடி மோதிரம் அணிவித்தார்.
குண்டி கொடி, தங்க சங்கிலி என்று ஆளாளுக்கு அணிவிக்க, சிணுங்கியவன் உடலில் புது உடை வேறு அழுகையை அதிகப்படுத்தியது.
பிறகு தெர்மாகோலில் செய்த பெயரை மறைத்த திரைசீலையை திறக்க பொன்வண்ணன் என்ற பெயரை தாங்கியிருந்தது.
‘அட தாடிக்கார… ஒரு பெயரை யோசிச்சு வையுங்கன்னு சொன்னா, மாமானார் பெயரையே வச்சியிருக்கார்.’ என்று எண்ணினாள் அம்மு.
அதன் பின் கடைக்காரம்மா சௌவுக்கியமா என்று அன்பு கூட்டமான ஊர்மக்கள் கூட்டம் சூழ்ந்தது.
லேசான இதம், சென்னையில் பக்கத்து வீட்டு பெண்மணி பெயரை கூட தெரியாமல் இருந்தது. சென்னை வேறு விதமான சௌவுகரியங்களை கொண்டது அல்லவா?!.
இன்று கீதா அக்கா சரளா பாட்டி, சவீதா குட்டி, ரங்கராஜன் அண்ணா என்று அந்த தெரு கூட்டமே வந்து சேர, பெயர் முதல் எந்த வீடு என்றது வரை அறிந்து இருப்பதே அன்று உணர்ந்தாள்.
குடும்பம் சகிதம் விழாவை சிறப்பித்து முடிக்க, அன்று அதேயிடத்தில் பேனை போட்டு மகனை குழந்தைக்குண்டான கூண்டில் போட்டு மூடி உறங்க வைத்தாள்.
அக்கா மாமா அக்கா குடும்பத்தார் என்று வந்தவர்களை பார்த்து வரவேற்று விசாரித்தாள்.
அஞ்சனா மாமியார் உங்கக்கா குழந்தை உண்டாகலை. என்று ஆரம்பிக்க சரவணனோ “அம்மா சும்மாயிருக்க மாட்ட. ஏற்கனவே சின்ன மாப்பிள்ளை தனியா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வச்சியிருக்காப்ள, சின்ன பொண்ணை தாங்கறான்னு, என்மாமனார் புகழறார். இருக்கற மரியாதையை கெடுத்துக்காத. அவ முதல்ல உண்டானப்ப நான் தானே மிதிச்சேன். உன்புள்ள தான் மிதிச்சு என் குழந்தையை வயித்துல இருந்தப்பவே இல்லாம பண்ணிட்டான்னு அஞ்சனா பேசினா மூஞ்சியை எங்க வச்சிப்ப?” என்று அதட்டினான்.
இங்கு வரும் முன் அஞ்சனா ஒரு வார்னிங் கொடுத்திருந்தாள். உங்கம்மா மட்டும் என்னை ஏதாவது சொல்லட்டும். அங்க வச்சி இருக்கு. என்னவோ நான் உண்டாகாத மாதிரியே பேசறாங்க. உங்க கோபத்துல என்குழந்தை வயிற்றுலயே அழிந்துடுச்சு. இதுல பேச்சு. இன்னொரு குழந்தை தானா தங்கற வரை பொறுத்துக்க தெரியாது.” என்று கத்தி விட்டாள். அதன் பலன் அன்னையை அடக்கினான்.
ரஞ்சிதத்திடம் “ஏன் அண்ணி அங்க சென்னையில் வியாபாரம் ஓடலையா? இங்க திரும்ப வந்துட்டார்.” என்று கணவரிடம் கேட்க பயந்ததை நாத்தனாரிடம் கேட்டாள் அம்மு.
“அதெல்லாம் என் தம்பி தொட்டா துலங்காம போகுமா? நல்லா தான் வியாபாரம் ஓடுது. ஆனா அவனுக்கு என்ன நினைப்போ, இங்க வந்துடப்போறேன்னு ஒத்த காலில் குதிச்சான்.
இப்ப அந்த கடையை கவிதா அப்பா(தன் கணவன்) பார்த்துக்கொள்வதாக உரைத்தாள்.
அவர் கூட கேட்டார். உன் தம்பிக்கு என்னவாம். நல்லா ஓடுற கடையை வேண்டாம்னு கிராமத்துக்கே போறான்’னு கேட்டார்.
அர்ஜுன் முடிவெடுத்தா மாத்திக்க மாட்டான். அவனுக்கு சொந்த வீட்ல சொந்த நிலமிருக்க இங்கேயே போதும். வர்ற வருமானம் கூடுதலோ குறைச்சலோ நிம்மதி முக்கியம். அது எங்கப்பா வாழ்ந்த இடம். அவர் பெயர்ல விட்டு போனதை தான் நான் பெரிசுப்படுத்தி காட்டணும்னு சொல்லிட்டான்.” என்று முடித்தார்.
ஏனோ அர்ஜுன் முடிவில் அவளுக்கு அதிருப்தி வரவில்லை. மாறாக, இடத்தை ஆராய்ந்தாள்.
இங்கே ஓரளவு கடையை விரிவுப்படுத்தி செயல்படுத்த நன்றாக வளரும் என்று பாஸிடிவ் வைப் கிடைத்தது.
அன்றிரவு அர்ஜுனிடம் கேட்க “அக்கா சொன்னாளே. அப்பறம் என்ன?” என்று மகனை நெஞ்சில் போட்டு படுக்க வைத்து மனைவியை வலது கை புஜத்தில் படுக்க வைத்தான்.
“ஏன் இந்த எண்ணம் வந்துச்சு?” என்றாள்.
நீண்ட பெருமூச்சை விடுத்து, எனக்கு ஒரு விஷயம் தானா நடந்து அந்த விஷயத்துல நான் ‘ஆமால இது சரி என்று தோணும் போது, கடவுள் தானா இரண்டு மூன்று முறை அது தொடர்பான விஷயமா எனக்கு புள்ளி வச்சி விட்டார்னா, ஓ இது நம்ம வாழ்க்கையில முடிவெடுக்க கடவுளே வழிவகுக்கறார்னு முடிவு பண்ணுவேன்.’
அன்னைக்கு ஹாஸ்பிடல்ல குழந்தை பிறந்தப்ப கோயம்பேடு வழில கூட்டம். டிராபிக் கொஞ்சம் கூட நகரலை.
இதுல அவனவன் பிழைப்பை தேடி ஊர் விட்டு ஊர் வந்துடறானுங்க என்று பேசினப்ப சுருக்குன்னு இருந்தது.
அந்த நேரம் பச் நாமளும் ஊர் விட்டு ஊர் வராம நம்ம ஊர்லயேயிருந்து முன்னேறலையேனு பீல் பண்ணினேன்.
இதுல பிரசவம் அப்ப ரூம்ல வந்து உன்னை பார்த்தப்ப இரண்டு நர்ஸ் பேசிக்கிட்டாங்க. உனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் பையன் கல்யாணமாகாதவன். அவனை ஜோல்லுவிட்டு. அந்த டாக்டர் பையன் சொந்த ஊர்ல அரசாங்க டாக்டரா போகப்போறானாம்.
அவன் இருக்கற செல்வாக்குக்கு தனியா ஹாஸ்பிடல் கட்டி டீனா ஆகலாம். ஆனா இங்க ஒரு வருஷம் அவங்க சொந்த ஊர்ல ஒரு வருஷம் சர்வீஸ் முடிச்சி அப்பறம் தான் ஹாஸ்பிடல் கட்டணும்னு அவன் வாழ்க்கை பாதையில் பிளான் போட்டு தெளிவா இருப்பதா பேசிக்கிட்டாங்க.
சின்ன பசங்க… கல்யாணமாகாதவனுங்க கூட வாழ்க்கைல சிறு உயரம் வரணும். சொந்த ஊர்ல அப்பா பெயர்ல நிலைக்கணும்னு நினைக்கிறப்ப நான் சாதிக்கலையேனு பீல் பண்ணினேன். நம்ம சாதனை எல்லாம் அப்பா பெட்டிக்கடை அளவுக்கு வச்சா, நாம் டிபார்ட்மெண்ட் கடை வைக்கிற அளவுக்காவது வரணும் இல்லையா?!
அதான் நீ இங்க வந்தும் நம்ம ஊர்ல இடத்தை சீராக்க வந்தேன். முள்ளு வேலியை நானே தரைமட்டமாக்கி, அடுத்த வாரமே கட்ட சொல்லிட்டேன்.
அம்மா கூட என்னடா அவசரம்னு கேட்டாங்க. என் பையன் இங்க அடியெடுத்து வைக்கிறப்ப நான் டிபார்ட்மெண்ட் கடை வைக்க ஆரம்பிச்சி இருக்கணும்னு சொல்லிட்டேன்.
அம்மா ஒன்னும் சொல்லலை. அது என்னைக்கு எனக்கு எதிரா சொல்லும். உன்னிடம் ஏதாவது சொல்லிடப் போகுதுன்னு சர்பிரைஸ் பண்ணப் போறேன். நீங்களும் சொல்லாதிங்கன்னு சொன்னேன். அக்கா மாமா கூட வாய் திறக்கலை.
உங்கப்பாவிடம் உன்னை குழந்தையை பார்க்க வந்தப்ப சொன்னேன்.
ரொம்ப சந்தோஷப்பட்டார்… நடுவுல நடுவுல வந்து உதவிலாம் செய்தார்.
உன்கிட்ட சொல்லலை என்பதால் நானும் முப்பது நாள்ல கயிறு கட்டி முடியாதுன்னு சொல்ல, அதுக்கென்ன மூன்றாவது மாதம் கூட்டிட்டு போங்கனு சொன்னார். அவருக்கு வளைகாப்பு அப்ப அத்தை நம்மளோட இருந்தது சந்தோஷம் போல.” என்று கூற, “எல்லாம் சரி… கடனை இழுத்து வச்சியிருக்கிங்களா?” என்று கேட்டாள். கடன் என்றால் அச்சப்படுபவனும் அவன் தானே?
“இந்த அர்ஜுனுக்கு கடன் வாங்கவும் பிடிக்காது. கொடுக்கவும் பிடிக்காது டி. முடிஞ்ச அளவு தவிர்ப்பேன். ஏன்னா எங்கப்பா சொல்லி தந்த பாடம்.
நம்ம நிலம் அம்மா நகையை மட்டும் பேங்க்ல அடமானம் வச்சி பணம் வாங்கியிருக்கேன். அம்மா எங்க நகையை போடறாங்க. எல்லாம் அப்படியே மருமகளுக்குன்னு வச்சியிருக்காங்க. மருமக என்னடான்னா மெட்டல் பீட்ஸ்னு கடையில் வாங்குற நகையை போடுற. உன்னோட தங்க நகையே, இதோ நம்ம கல்யாணத்துக்கு பிறகு இன்னிக்கு தான் போட்டிருந்த.
அதனால் பேங்க்ல வச்சி பணத்தை வாங்கி தைரியமா பண்ணிட்டேன். நமக்கு ஆம்பள பிள்ளை தானே. இதோட பெருசா கல்யாணத்துக்கு தான் செலவு இருக்கும்.” என்றான்.
அம்முவோ ”பார்டா… இங்க தாடிக்காரன் மளிகைக் கடைக்காரர், திட்டம் வகுத்து வாழ்க்கையை வாழறார்.
உங்க திட்டத்துல பெரிய மைனஸ் இருக்கு.” என்றாள்.
”என்ன?” என்றான் திடுக்கிட்டு.
“பொன்வண்ணன்… மட்டும் தான் நமக்கு குழந்தையா? இவனுக்கு பிறகு தங்கச்சி பிறந்து அந்த குழந்தைக்கு பிரசவ செலவு, பெயர் சூட்டும் செலவு, வயசுக்கு வந்தா மஞ்சள் நீராட்டு செலவு, படிப்பு செலவு கல்யாண செலவு இதெல்லாம் தாண்டி தானே பொன்… வண்ணனுக்கு கல்யாணம் பண்ணுவிங்க.” என்றாள் கள்ளத்தனமாய் சிரித்தாள்.
அர்ஜுனுக்கு மனைவி பயமுறுத்தும் பேச்சு என்னவோ என்று அஞ்சியவனுக்கு தான் அடுத்து நிகழ்ந்த போதும் விளையாட்டிற்கு காய் நகர்த்தவும் மகன் தூங்கியதை ஊர்ஜிதம் படுத்தினான்.
”நீயே சொல்லிட்டு பிறகு அந்த குறையை நிவர்த்தி பண்ணறது தான்டி இந்த அர்ஜுனுக்கு அழகு. அடுத்து பொம்பள குழந்தை பெத்துப்போம்” என்று கொஞ்ச, ‘அந்த குழந்தைக்காவது மாடர்னா பெயர் வைக்கணும்” என்று கூற, “என்ன சொன்ன.. மாடர்னாவா? ஓய்.. இப்ப என் பையன் பெயருக்கு என்னடி குறைச்சல்?
பள்ளிக்கூடத்துல கேளு… மும்பாட்டன் பெயரும் அவர் என்ன தொழில் செய்யறார்னு கேட்டா, பாதிக்கு மேல் குழந்தைங்க, எங்கப்பாவுக்கு தெரியலை மிஸ், எங்கம்மாவுக்கு தெரியலை மிஸ்னு சொல்லும்.
நான் எல்லாம் என் தாத்தா தாத்தாவுக்கு தாத்தா பெயர் வரை நினைவு வஞ்சியிருக்கேன். இப்பவும் ஊர் கோவில் திருவிழாவுல கல்வெட்டும் என் தாத்தா பெயர் இருக்கு.
ஒரு சந்ததி முன்ன இருந்த சந்ததியோட பெயரும் தொழிலும் தெரியாம நாம் என்னத்த பரம்பரை பரம்பரையாக வாரிசை கடத்தறது.
என் பையனுக்கு பொன் வண்ணன் பெயர் அம்சமா இருக்கும்.” என்று நெஞ்சில் சாய்த்த மகனை ஓரமாய் மெத்தையில் கிடத்திவிட்டு மூன்று மாதம் மனைவியை தீண்டாத விரதத்தை முடித்திடும் வேகத்தை கூட்டினான்.
”தாடிக்காரா.. குத்துது. அம்மா.. அவுச்” என்று மனம் விட்டு சிரித்தாள் அமிழ்தினி.
~சுபம்~
பிரவீணா தங்கராஜ்
சைட் ஆரம்பித்து முடிப்பதில் இது என் இரண்டாவது கதை.
ஆர்யனை விட தாடிங்காரனுக்கு நிறைய நியூஸ் போச்சு. நான் தெரியாம forum லிங்க் டெலீட் பண்ணினேன். திரும்ப வர்றது நமக்கு புதுசில்லை.
எப்பவும் ஜீரோல இருந்து வருவது பழகிடுச்சு. அதென்னவோ முகநூல்ல விமர்சனம் வந்தா கெத்துன்னு சில நேரம் தோன்றியது இப்ப அதையும் பழகிட்டேன். என்னோட கதை படிக்க என்னோடவே வர்ற ரீடர்ஸுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து இதே அன்பை வைத்து கொள்ள மட்டும் ஆசை. இது போதும். நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
அர்ஜுன் அமிழ்தினி பிடிச்சிருந்தா உங்க கருத்தை சொல்லுங்க. நன்றி

அருமை. தாடிக்காரனுக்கு spark நம்ம ஆர்யன் டாக்டர். செமையா இருந்தது.
அர்ஜூன் கணக்கு போட்டு வாழ்க்கை நடத்தும் பாங்கு ., சொந்த ஊரில் ஜெயித்து கட்ட வேண்டுமென நினைப்பது, பரம்பரையாக முன்னோர் தொழில் பெயர் அறிந்திருக்க வேண்டுமென கூறுவது கதைக்கு மட்டுமின்றி இக்கால தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று. எப்பொழுதும் போல அருமையான நல்ல கதை.
Super sis👏👏…
Wowww… Super ka…. Starting la irundhu ending varai thendral kaatru edhama veesura maadhri manasukku edhama irundhudhu ka🥰🥰🥰🥰🥰…. 1/4 kilo 1/4 kilo va kadhal la kuduthu ipo kilo kanakula ipo avan mela kaadhal iruku ka engalukku romba cute thaadikaran🥰🥰🥰…. Ammu um semma thaadikaaran ah purichikitu avan kuda ella vidhadhulayum avaloda purithal romba azhaga irundhudhu…. Ilavazhagi amma maadhri oru maamiyar super❤️…. Chandhrika and devarajan character um super ah kuduthuirundhinga… Ottu mothama kadhaila vandha ella characters um super o super ka🥰🥰🥰…. Kutty aju “ponvannan”name nalla irukku😊👍….
Super ka😘😘😘….. Edhuku epilogue iruka ka….
Super…
மளிகைகடைகாரர் மனதை கொள்ளையடித்துவிட்டார்…
அர்ஜீன் செம கேரக்டர்..
Fine. ……..m…. super ending
Very good story. Congratulations for your upcoming stories.
Arumai ❤️🤗 🫂 unmai thaan la enna padichu evlo nalla vaylikku poi kasu PanAm pathalum sontha oorula irrukura thirupthi varathu …ana angaiye poi irrukura kudupanai ellarukum vaikkarathu illa 🥲 athu oru yakkama epavum manasula irruka thaan seyithu …..
Padipu , vasathi , vaylai, puraazhagu lam pathu thaan kadhal ngara intha kala kadhal ku oru adi Arjun vum ammuvum ithu thaan da life la unmaiyana kadhal , reality ipti thaan irrukumnu azhaga padam pottu katirukanga 🤗❤️👌
Intha thadi Karan oda kadhalum , kadaium manmaylum valara vazhuthukal 😉❤️😍🫂
Super akka! First story start pannunappo parda intha thaadi kaaranuku koluppunu thonichi! Aana yosichi paatha ithuthan nijam reality. Firstlam avan ammu mela piriyam vachirukura mathiriye theriyathu! Enaku kushi padathula vijayakumar sir sollura dialogue ninaivu varum! Sariyana echo pidicha kaluthannu!! Aana poga poga avan love feel pannura idamlam superah irunthuchu! Ippolam niraya storyla sollura love story lam padicha pinnadi ithellam nadakura kathaiya bossnu thonum. Aana unmaiyana kathal ippadithan irukum. Athu pora pokkula anubavichi vaazhurathu! Unmaiya namaloda lifoda connect pannura mathiri story irunthuchu. Really excellent 👌👌👌👌. Finally thaadikaaran lovela vilunthutan!!! I’m happy very very happy!
இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன்…! எந்நேரமும் வரவு, செலவை குறைக்கணும், குறைக்கணும்ன்னு நினைக்கிறதை விட
இருக்கிற கடையை அபிவிருத்தி பண்ணி வியாபாரத்தை பெருக்க நினைக்கணும்.
வாழ்க்கை, எப்படி கல்யாணம், பொண்டாட்டி, குடும்பம், குட்டின்னு அபிவிருத்தி ஆகுதோ அதே மாதிரி பலசரக்கு கடையை டிபார்ட்மெண்டல் கடையா மாத்தறது தான் புத்திசாலித்தனம். அதுவும் சொந்த ஊருலேயே அஸ்திவாரத்தை இன்னும் ஸ்ட்ராங்க போடறது புத்திசாலித்தனம். அந்த புத்திசாலித்தனம் அர்ஜூனுக்கு இருந்ததால ஜெயிச்சுக்கிட்டே இருப்பான்.
தவிர, கோபம் இருக்கிற இடத்துலத்தானே குணமே இருக்குது. அதுவும் அவன் கொஞ்சம் கோபக்காரனே தவிர முரட்டுப்பயலா இல்லாததால் தானே அமிழ்தினி அவனோட ஜோடி சேர்ந்தா. உண்மையிலேயே அமிழ்தினி மாதிரி ஒரு மனைவி கிடைக்க அர்ஜூன் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும். படிச்சிருந்தாலும் தன்னோட திமிர் தனத்தை எங்கேயும் காட்டவேயில்லை. அர்ஜூனை நல்லாவே அனுசரிச்சு போனதாலத்தான் நல்ல கணவன், குழந்தை, மாமியார், நாத்தனார், அண்ணன், அக்கா, மாமா,
அப்பா அம்மான்னு நல்ல உறவுகளே அவளுக்கு அமைஞ்சிடுச்சு.
அதுலேயும் இளவழகி மாதிரி ஒரு நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்.
குழந்தை மனசு தான். அதே மாதிரி சண்டையே போடாத
ஃப்ரெண்ட்லியான ஒரு நாத்தனார் ரஞ்சிதா & கர்ணன். ரொம்ப நெருங்கலைன்னாலும், அப்பப்ப தூவற மழைத்துளி மாதிரி பாசக்கார உடன்பிறந்தவள் தான் அஞ்சனா & சரவணன்.
பாசமுள்ள அம்மா சந்திரிகா & அப்பா தாமோதரன்.
இவங்க எல்லாரையும் விட
மாமனார் & மாமியாரே மெச்சும் மருமகப்பிள்ளையான அர்ஜூனுக்கு தாராளமாவே ஒரு ‘ஓஹோ’ போடலாம்.
ஒரு சாதாரண மிடில் க்ளாஸ்ல என்னென்ன பிரச்சினைகள், சங்கடங்கள், செலவுகள், பற்றாக்குறைகள் என்கிறதை வரிசையா பட்டியலிட்டாலும் இதெல்லாத்தையும் ஈடுகட்டுற மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் வந்தால் கூட அதை எப்படி கொண்டாடி தீர்த்துப்பாங்க என்பதையும் கதைபோக்குலயே போய் ரொம்ப அழகா எடுத்துச்சொன்னா கதாசாரியர் பிரவீணாதங்கராஜ்க்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.
குடும்பம் ப்ளஸ் சின்ன சின்ன ரொமான்டிக் வேணுமின்னா இந்த கதையை தாராளமா படிக்க சஜஸ்ட் செய்யலாம். ரியலி ஃபீல் குட் ஸ்டோரி.
😃😃😃
Supr
Super sis. Finishing semma chinna chinna msgs lam nalla irundhuchu. Thadikaran vera level panitan. Namma Ariyan entry kuda nice. Arjun and Amizhdhini sema jodi.
Super sis arumaiyana ending 👍👌😍 Arjun character first ellam konjam pidikama erundhuchu pa but eppo keta Arjun a pidikadhavanga yaarum eruka maatanga renduperum arumaiyana pair nadula namma aryan vera vandhutu nammala ennum santhosha paduthitaru semma sis keep rocking waiting for ur next story 😍😘
Super super😍😍 superb ending👏👏
Super ma story super 👍
Semmmmmma…….
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எனக்கு உங்கள் கதைகள் என்றாலே மிகவும் பிடிக்கும்.இந்த தொடரும் மிகவும் நிறைவாகவும் இயல்பாகவும் வாழ்க்கையுடன் பொருந்தும் வகையில் இருக்கிறது.வாழ்த்துக்கள்பிரவீணா.
Arjun amizhthini ah yaruku pidikama irukum . Sikram mudinjitanganu iruku innoru kolanthaium kamichi irukalam sisy. Kandipa unga story kaga epovum wait pannitu iruken athe mari alaga rendu kathai mudichitinga next story padichitu iruken. Superb ah poitu iruku. Athe mari unga story competition story la pota கண்ணுக்குள் கடல் story continue pana mudiuma parunga. Arumaiya kondu poninga story sontha oorke thirumbi poi next step kadaiya katti athula mela vara mari alaga kamichi kallukul eeram irukum thane atha avanukullaum vanthathu antha azhagana kadhal. Good superb great job sisy . Congratulations
Thadikaran enna than karadumuradu ah therinchalum nama pakkathu veetu aalu na ra mathiri feel kuduthathu andha traffic incident um aariya vum arjun ku pazhaiya padi avan sondha ooru kae pora idea ah va kuduthu iruku
Ammu enna than avan ava kita ethachum kobam ah pesuna kooda avanukku yetha pola ava neraiya edathula irundha
Illavazhagi avanga rombha nallla mamiyar ithu mathiri ellam neraiya per irukkirathu yae kedaiyaathu devaraj chandrika anjana ranjini kathir nu ellarum nama sara seri ah pakkura ah aalunga than num pothu easy ah manasula pathinchitanga
உங்கள் கதாநாயகர்கள் எல்லோருமே தனி தனி திறமையுடையவர்களாக காட்டியிருப்பீங்க சகோதரி மளிகை கடைகாரன் கதையை முடிந்ததுதான் வருத்தம் சகி அர்ஜுன் குடும்பத்தோடு எங்கள் பயணம் முடிந்தது மீண்டும் உங்கள் புது கதையின் பயணத்தோடு எங்கள் பயணம் தொடரும்மா வாழ்த்துகள்
Super super super super super super super super ending sis seikirama mudichitinga kojam felling ah iruku paravailla next story ku wait panran sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🫰❤️🥰🥰🤩😍🥰🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Superb ending sis….❤️❤️♥️💕💕💕
arumai sis.
❤❤❤ rmba alagana story oru epi kuda bore adikala arjun character um sema lovely story
சொந்த ஊரு வாழ்க்கை
குடுப்பினை வேணும்
Awesome ending sis. Ariyan sema touching. So story. Thadi Arjun super. Good story
Iyalpana oru vaazhkkai ottam…. Oru kattathula nama vaazhkai ethai nokki poguthunu thonum pothu nama paathaiya aamaichikanum….. Alagana family…. Lovable husband loveable na konjite irukarathu illa sanda vanthalum samathanam aagi oruthara oruthar purinjitu vittu kudukkama irukkaranga….. Sandaiye podatha maamiyar….. 👌👌👌👌👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘
ஆக நம்ம தாடிக்காரரக்கு விடிவெள்ளி ஆர்யன் தானா
கதை நகர்வு அருமை
மிகவும் அருமை
Amizthini அர்ஜுன் உடன் அழகாக பயணித்தோம்
எனது கணவர் கூட departmental store thaan வைத்துள்ளார்
கிராமங்களுக்குள் இப்போதும் மளிகை kadaigaluku தான் மவுசு
Super story sis ♥️♥️♥️
Super story. What happen to Rasavaathi Viddhagan. I am waiting for your reply
Super….nalla message solli irukinga sis..ippalam new generation ku yethum solli tharathu ila… Yellorum yosikka vendiya visayam than sis…super story
Semma sis romba yedharthamana story… beginning la indha milagai ku epdi da love varum nu yosichen but semmaya move….best of for ur next project sisy ma
அருமையான பதிவு
அந்த மொரட்டு தாடிக்காரனுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்தா ரெமோவ அம்மு என்கிற உளி தட்டி எழுப்பி விட்டது.
மொத்தத்துல ஒரு அருமையான கதை படித்த நிறைவு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super super super super super 👌👌👌👌👌👌👌👌👌
Superb
Romba arumai sis, superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
சூப்பர் தாடிக்காரா😍
அருமை அர்ஜுன் பேச்சு எண்ணம் எல்லாமே யதார்த்தமான கருத்துக்கள். … அர்ஜுன் அம்மு இருவரின் காதல் அருமை. .. எவ்வளவு சண்டை வந்தாலும் பிரியாமல் இருந்தது சூப்பர்… அம்மு படித்தாலும் கணவனின் எண்ணங்களை கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் புரிந்து கொண்டு அனுசரித்து அவனுக்கும் புரிய வைத்து அவன் எடுத்த முடிவுக்க ஏற்ப வாழந்தது செம
Arumaiyana kathai. Niraivaana mudivu. Vazhthukkal ma 🥰🥰🥰👍👍👍
Super super super super super