புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை -8

அத்தியாயம்-8

   அமிழ்தினியை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு, அவளது அக்கா மாமா அஞ்சனா-சரவணன் கிளம்பினார்கள். அமிழ்தினி தாய் சந்திரிகா, தந்தை தேவராஜ் மட்டும் அன்று ஒரு நாள் சின்ன மாப்பிள்ளை வீட்டில் இருக்க நினைத்தார்கள்.

   அமிழ்தினிக்கு முதல் நாளே தனியாக தன்னை இங்கே விட்டு செல்லும் சூழல் அமைந்திடக்கூடாதென்று பார்த்து செய்தார்கள்.

   இளவழகி சந்திரிகா இருவரும் கதை பேசியபடி பொன்மாலை பொழுதை கடத்திட, தேவராஜோ மளிகைகடையில் அமர்ந்து அர்ஜுன் வியாபாரம் செய்யும் விதத்தை அளந்தார்.

   பெரும்பாலும் மளிகைகடை பற்றியே பேச அர்ஜுன் அவனுக்கு தெரிந்த விபரத்தை பேசியபடி இருந்தான்.

   “சர்க்கரை முந்தி எல்லாம் பழுப்பு கலர்ல இருக்கும். அது தான் நல்லது. எங்க இப்பயெல்லாம் அது அழுக்குன்னு வெள்ளை வெளிறினு இருக்கறதா வாங்கறாங்க. அது உடம்புக்கு கெடுதி எவன் கேட்கான்” என்று சர்க்கரையை ஆராய்ந்தார்.

  “அட மாமா வெல்லாமே இப்ப எல்லாம் மஸ்டர் கலர்ல கேட்கறாங்க. கையில உருக கூடாதாம். மைசூர்பாக்கு ஷேப்ல கேட்கறாங்க. வெல்லம்னா உருகி வழிய தான் செய்யும். கருப்பா இருக்கும். அதையே இப்படி இருக்க கூடாது அப்படியிருக்க கூடாதுனு கேட்கறாங்க. நீங்க சர்க்கரைக்கு அக்கறை படறிங்க. சுத்தமா இருக்கணும்னு சொல்லிட்டு சுத்த சத்தில்லாத உணவை தான் திங்கறாங்க” என்று பொட்டுகடலையை மடித்து கடைக்கு வந்தவர்களுக்கு நீட்டினான்.

   என்னதான் தன்னிடம் வாய் பேசினாலும் கை வேலையை செய்தது. கண்ணோ யார் முந்தி  வந்தார்கள் பிந்தி வந்தார்கள் என்ற எடைப்போட்டு வரிசையாக தான் கொடுத்தான்.

  மேலும் கடைக்கு வந்தவர்களில் சிலரும் தேவராஜை யாரென்று விசாரிக்க, “என் மாமனார் அக்கா” என்று கூறி வாய் வலிக்காத குறை.

    அமிழ்தினி கன்னத்தில் கைவைத்து அன்னையையும் அத்தையையும் வேடிக்கை பார்த்தாள்.
 
   ஒரு நாளைக்கே மலைத்தது. தனக்குயிங்கே போரடிப்பது உறுதியென்று தன் துணிமணியை அடுக்க அறைக்கு வந்தாள்.

      பீரோவை திறக்கவும் மொத்தமாய் ‘உன் பாதம் பணிந்தேன் தேவியே’ என்றது போல அர்ஜுன் துணிமணிகள் அவள் காலடியில் வீழ்ந்தது.

   அமிழ்தினிக்கு சட்டென பயம் வந்துவிட்டது. என்னடா இது மொத்தமா கலைச்சிவிட்டேன்னு என்னை திட்டறதுக்கா? என்று மடமடவென எடுத்து திணித்தாள்.

   அமிழ்தினியின் மென்கரத்தில் தீண்ட கொடுத்து வைத்தது போல மீண்டும் மீண்டும் விழவும், வாசலை எட்டி எட்டி பார்த்து ஒவ்வொன்றாய் திணிக்க, அது ஒவ்வொன்றாய் விழுந்தது. அக்கணம் அறைக்குள் நிழலாடியது. அங்கு வந்தது அர்ஜுன் தான். கடை வியாபாரத்தில் ஒரு கண்ணை பதித்தாலும் மறுகண்ணில் இங்கே இவளை அளந்துக்கொண்டிருந்தானோ என்னவோ அமிழ்தினியை காணவில்லையென்றதும் தண்ணி குடிச்சிட்டு வந்துடறேன் என்று ஒரெட்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

  தனது உடையோடு கபடியாடியவளிடம் “தள்ளு” என்று கூறிவிட்டு மொத்தமாய் துணியை குப்பை போல அள்ளி உள்ளே தள்ளி கதவை மூடினான்.

   என்ன? என்பது போல ஒரு பார்வை வேறு வீசினான்.

   “இல்லை என்னோட துணியையும் வைக்கலாம்னு  வைக்க கதவை திறந்தேன். இப்படி குப்…” என்றவள் அர்ஜுனின் புருவமேற்றலில் வார்த்தையை விழுங்கினாள்.
  
  “உனக்கு தான் உங்கப்பா புது பீரோ வாங்கியிருக்கார்ல அதுல வை. என்னோடது எப்பவும் இப்படி தான் இருக்கும்” என்று பேசிவிட, “உங்களோட டிரஸும் வைக்கணும்னு தான் பீரோ திறந்தேன்.” என்றவள் பார்வை கட்டிலில் அர்ஜுன் ஆடையும் இருந்ததை பார்வையால் சுட்டிகாட்டினாள்.

  மடித்து ஐயர்ன் செய்த புதுசட்டைகள் எல்லாம் மொத்தமாய் வெங்காயப்பெட்டியை எடுப்பது போல மொத்தமாய் எடுத்து பீரோவில் திணித்து மூடவும், லேசான அதிருப்தி முகத்தில் காட்டினாள் அமிழ்.

  “மாப்பிள்ளை கடைக்கு ஆளு” என்ற தேவராஜ் குரல் கொடுக்க “இதோ வர்றேன் மாமா” என்றவன் சிட்டாய் பறந்தான்.

   அமிழ்தினிக்கோ அவன் சென்றதும் அவன் பீரோவை மேலும் கீழும் பார்த்து, தந்தை கொடுத்த பீரோவில் உடையை அடுக்கினாள்.

    என்னதான் அவளது பட்டு புடவை சாதா புடவை, சுடிதார் என்று அடுக்கினாலும் ஒரு அலமாரி காலியாக இருக்க அவனது புது உடையை எடுத்து வைக்க நினைத்தாள்.

   திட்டுவானோ என்ற பயம் இருந்தது. திட்டினால் திட்டட்டும் அப்படியா புது துணியை திணிப்பது என்று சத்தமின்றி திறந்து எடுத்து அழகாக அடுக்கினாள்.

  அவளது பீரோ நிரம்பவும், அவனது கலைந்த உடையை மடிக்க ஆரம்பித்தாள்.

   இளவழகி எட்டி பார்த்துவிட்டு உதட்டில் சிறு புன்னகை உதிர்த்து கிளம்பினார். அதை அமிழ்தினி கவனித்தாலா என்றால் நிச்சயம் இல்லை. அர்ஜுன் உடைகள் எல்லாம்  பொட்டலம் போல சுருட்டி இருந்தான்.
 
   அமிழ்தினிக்கு கல்லூரி செல்லும் காலத்தில் உடைகள் ஐயர்ன் செய்து நீட்டாக போட்டு பழகியிருக்க, இந்த பொட்டலம் போல சுருட்டிய துணிகளை பார்த்து கோபமே வந்தது.

   தந்தையோடு அர்ஜுன் பேசிக்கொண்டிருப்பதை கண்டதும் மடமடவென ஐயர்ன் பாக்ஸை பிளக்கில் சொருகி ஐயர்ன் செய்து, அழகாக அடுக்கி முடித்து நிமிரவும், என்னவோ சாதித்த உணர்வு.

  இன்னவர் எல்லாம் அவன் தூக்கி சுருட்டி வைத்தது போலவே மடித்து விட்டாள். ஒருபகுதி ஏனோ தானோ இருந்தால் இருக்கட்டும் என்ற எண்ணம்.
 
      ஐயர்ன் பாக்ஸை அதன் இருப்பிடம் வைத்துவிட்டு, கண்ணை கசக்கி வெளியே வர, அர்ஜுன் மீது மோதினாள்.

  “பச்’ என்று சலித்தபடி நடந்து சென்றவனை ‘இப்ப என்னவாம் தெரியாம தானே இடிச்சாங்க’ கண்ணை கசக்கிட்டு வந்தது நான். அவன் தள்ளி போக வேண்டியது தானே.
  ரொம்ப தான் போறான்’ என்றவள் முகம தூக்கி வெளியே வந்தாள்.

    இரவு உணவை சாப்பிட்டு முடிக்க அமிழ்தினி தான் பரிமாறினாள்.
  சாப்பிடும் போது இரண்டு மூன்று முறை எழுந்து எழுந்து கடைக்கு சென்றான்.

    தேவராஜிற்கும் சந்திரிகாவுக்கும் பெரிதாக வருத்தமில்லை. ஒரு மளிகைகடை வைத்திருப்பவன் சாப்பாட்டில் கை வைக்கும் போது தான் அரிசி, எண்ணெய், கடுகு, உப்பு என்று ஆட்கள் அலைமோதுவார்கள். உணவு தட்டு கேட்பாரற்று கிடக்கும்.

   அமிழ்தினி அவனையே பார்க்க, இளவழகியோ “அவன் வந்து சாப்பிட்டுப்பான்மா. நீ சாப்பிடு. ஆறறதுக்குள்ள சாப்பிடு” என்றதும் தலையாட்டி விழுங்கினாள்.

   அர்ஜுன் சாப்பிட வரும் நேரம் தேவராஜ் சந்திரிகா உறங்கவே சென்றனர்.

   இளவழகியும் அமிழ்தினியும் பேசியபடி மெதுவாக உண்ண, “ஏன்மா ஓட்டு வீடு சரளா அக்காவுக்கு கடன் கொடுத்தியாம்மா?” என்று  இளவழகியிடம் வந்தான்.

   “ஆமாடா கணக்கெழுதி வைக்க நினைச்சேன். மறந்துட்டேன் ராசா” என்று கூற, அந்தக்கா இப்ப தான் காசு கொடுத்துட்டு போச்சு நீ கணக்கெழுதிடாத.” என்று மடமடவென நாலு கை அள்ளி விழுங்கி தண்ணீரை மோத்தமாய் காலி செய்து மீண்டும் கடைக்கு மின்னல் வேகத்தில் சென்றான்.

   “எப்பவும் பத்து மணிக்கு மேல பொறுமையா சாப்பிடுவான். இன்னிக்கு அம்மா அப்பா வந்ததால சீக்கிரம் சாப்பிடவும் இப்படி அவசரத்துல அள்ளி விழுங்கறான்.” என்ற இளவழகி கூற, “எப்பவும் ஒரு அவசரம் இருக்குத்த” என்று கூறவும், “அவனே அவசரத்துக்கு பிறந்தவன் தானே. குறை மாசம்மா.” என்று நகர்ந்தார்.

   இரவு தன் வீட்டில் கொடுத்த கட்டில் அகலமாக இருக்க, அதில் துயில் கொள்ளும் முடிவோடு படுத்தாள்.

   அர்ஜுனோ குளித்து முடித்து தலைதுவட்டி, படுக்க வரும் நேரம் அமிழ்தினி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

    கதவை அடைத்துவிட்டு அவளருகே வந்தான்.

    அர்ஜுனுக்கு அவளை பிடித்திருந்தது. பெரிதாக தனக்கு வரப்போகும் பெண்ணை மனக்கோட்டை கட்டி எதிர்பார்த்தவனில்லை. அதனால் எதிர்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றமின்றி இருந்தான். அதோடு அவனை பொறுத்தவரை தன்னை விட கூடுதலான தகுதியுடைய பெண்ணே தனக்கு வந்ததாக தோன்றியது. அது அவன் வாழ்விற்கு முரணாக அமைந்ததாக எண்ணம்.

    அன்னையிடமும் தன்னிடமும் எப்படி பழகுவாளோ? என்று.

   அர்ஜுன் அவளையே பார்த்து முடிக்க அவனது சிகையிலிருந்த தண்ணீர் திவலைகள் அவளது நெற்றியில் கன்னத்தில் படவும் லேசான முழிப்பு தட்டி இமைத்திறக்க, அர்ஷுன் மெதுவாய் தலையை தொட்டு பார்த்தான். அவன் சிகையிலிருந்து வழிந்த தண்ணீர் என்றதும், அவளது பதட்டமும் சேர்ந்து, “எ…என்ன வேணும்” என்று குரலற்ற விதமாக கேட்டாள்.

   என்னோட பெட்ஷிட்” என்று அவளுக்கு பின்னால் கட்டிலொட்டிய ஸெல்பில் இருந்த பெட்ஷிட்டை எடுத்தான்.

   மூச்சு வாங்க எழுந்தவள் இரண்டு இஞ்ச் பின்னால் நகரவும் அர்ஜுன் பார்வைக்கு பட்டது.

   அவனை கண்டு ஒரு பெண் பயப்படுவதை அறிந்ததும் கோபமாய் திரும்பி படுத்துக்கொண்டான்.

   நெஞ்சில் கைவைத்து அமிழ்தினியும் மறுபுறம் திரும்ப, ‘படிச்ச திமிரு’ என்று அர்ஜுன் முனங்குவது நிச்சயம் அவள் கேட்டிருக்க மாட்டாள். அதே போல அவளது கல்லூரி புத்தகங்களை வைத்து அவளது படிப்பையும் அறிந்திருப்பானென்ற எண்ணமும் அமிழ்தினி அறியாது போனாள்.

  அர்ஜுனுக்கு அந்த சந்தேகம் இருந்தது. இந்த பொண்ணுக்கு என்னை பிடிக்காம கட்டி வச்சிட்டாங்களோ? அவங்க அப்பா திட்டி அடிச்சி கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பாங்க. அதான் வாயை மூடிட்டு இருக்கு. படிச்ச பொண்ணை ஏன் என் தலையில கட்டினாங்களோ?

   அம்மா வேற கல்யாணம் முடிச்சாச்சுனு ஹாயா இருக்கு. இதுல என் வாழ்க்கை தான் எப்படி வாழறதுனு தெரியலை’ என்று மனதராசில் தன்வாழ்வின் பகுதியில் இவளை வைத்து பார்த்தான். தனக்கும் அவளைக்கும் சரிசமமான வாழ்வு மலராது என்றதாகவே எண்ணி துயில் கொண்டான்.

அமிழ்தினியும் இப்படியொரு கற்பாறையில என்னை நிற்க வச்சிட்டாங்களே. என்று தான் இமை இறுகபடுத்திருந்தாள்.

   அடுத்த நாள் கண் விழிக்கும் வரை அதுவே மனதில் வந்து செல்ல, எழுந்ததும் அவனை காணவில்லை என பல் விளக்கி முகம் அலம்பி லேசாக மேலோட்டமாய் தலைவாறி வெளியே வந்தாள்.

    இளவழகி சந்திரிகா இருவரும் காபி பருகி பேச, “அவர் அவரெங்க அத்தை” என்று கேட்டாள்.

   “காலையிலேயே காய்கறி வாங்க மார்க்கெட் போயிட்டான் மா. எப்பவும் சீக்கிரம் கிளம்பி போயிட்டு அதிகாலை வருவான். உட்காரு இப்ப வர்ற நேரம் தான்” என்று கூற, தந்தையை தேடினாள்.

  “அப்பா எங்கம்மா?” என்று அடுத்த வினா அன்னையை கேட்க, “உங்கப்மாவும் மாப்பிள்ளை கூட போயிருக்கார். அவர் வேண்டாம்னு சொல்ல, இல்லை அதிகாலையில சும்மாயிருக்க கூடவர்றேன்னு உங்கப்பா கிளம்பிட்டாரு.” என்று கூறவும் அமிழ்தினிக்கு எரிச்சலே மண்டியது.

   மாப்பிள்ளையகற் அ முதல்  ஃ வரை உள்ள வேலைகளை பார்வையிட்டு வந்து தன்னை தந்தை சாடுவார் என காபியை குடித்தாள்.

   ஒரு டிவிஎஸ் வண்டியில் முன்னாடி காய்கறியை, முகம் மறைக்கும் விதமாக ஏற்றிக்கொண்டு தந்தையை பின்னால் அமர வைத்து வந்தான்.
 
   நேராக பெட்டியை இறக்கி வந்தவன் ஒரு முறைப்பான பார்வையை அவளை நோக்கி வீசினான்.

எதுக்கு முறைக்கிறான் என்று தெரியாது திருதிருவென விழித்து பின் தொடர்ந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

22 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -8”

  1. Veena akka naan tan nambikaiya irundhen ivanuku romance varum nu ana ivanuku romance Vara vaikradhu kastam tan Pola ka….ipo edhuku avala moraichitu irukan nu therilayae …. epadiyo ka avanuku ava degree mudichiruka nu theriyudhae adhuvae podhum….

  2. இப்படி ரெண்டு பேரும் முறைச்சுக்கிட்டே இருந்தா எப்பத்தான் பேசி, பழகி, புரிஞ்சிக்கிறதோ… தெரியலையே,
    தெரியலையே…
    எனக்கொண்ணும்
    புரியலரயே…!

  3. Pocha nee sollalanalum avan therinji kittan. Rendu perum pesina thana therium oruthar ku oruthar ippadiye murachikitte iruntha eppadi

  4. What happened now? Why he behave like this? Arjun too hard man. When will this hard man melts with amil. Let’s wait for sometime. Interesting sis.

  5. மளிகை கடைகாரனின் வாழ்க்கை எதே நோக்கி போகிறது சகி எப்போ இவன் புரிஞ்சி காதல் பண்ணி மோதல் பண்ணி குடும்பத்தை நடத்த போறானோ அவன நினைத்தா நமக்கு தான் கவலையா இருக்கு சகி வாழ்த்துகள்

  6. Athu sari sollama kandu pudichuttana 🤩
    Satharanama paysuna thana athu Normal aa illa attitude aanu thayrium 🤷
    Rendum rendu thinusula irrukunga aprom epti 🤦

  7. இப்படியே ரெண்டு பேரும் முறைச்சிக்கிட்டு இருந்தா என்ன பண்றது வாயைத் திறந்து கொஞ்சம் மனசு விட்டு பேசினா தானே ஒருத்தரப் பத்தி இன்னொருத்தர் என்ன நினைக்கிறாங்க அப்படிங்கறது புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!