Skip to content
Home » சிநேகம் 3

சிநேகம் 3

திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையம்.. தமிழும் மலையாளம் கலந்து மக்கள் அங்கும் இங்குமாய் சிதறடிக்கப்பட்டிருக்க மொழி தெரியாத புதிய ஊர் என உள்ளம் கலங்கியிருக்க அந்த நிலையிலும் தென்றல் காற்று மேனி சீண்டி உடல் சிலர்ப்பது போல அவளுள் ஓர் உணர்வு. யாரும் காண இயலாத பல வேதனைகளை தனக்குள்ளே தாண்டி தன் மனதில் உள்ளே புதைத்து மீண்டு வந்தவளுக்கு மொழியும் ஊரும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருந்தது. அதனாலே தன்னுள்ளே பிறந்த அந்த புதிய உணர்வினை ரசித்தவள் தன் பயணத்தை ஏற்று கொண்டதாய் உணர்ந்தாள்.தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரயிலை விட்டு இறங்கியவளை மீண்டும் அழைத்தாள் மாளவிகா. பயணத்தில் தொடங்கிய பேச்சு பயணத்தோடு முடியும் என ஆதவி நினைத்திருக்க விதி அவ்வாறு நினைத்திருக்கவில்லையோ என்னவோ அவளை மீண்டும் நெருங்கி வந்தாள் மாளவிகா.ஆதவி ஸ்டாப் ஸ்டாப் என்று மாளவிகா கத்திக் கொண்டே வரவும் அவளுக்காக நின்றாள். அருகில் வந்த மாளவிகாஆதவி இப் யு டோன்ட் மைண்ட் நியான் ஒன்னு சோயிச்சோட்டே? (உங்களுக்கு பிரச்சனை இல்லைனா நான் ஒன்று கேட்கவா?) என கேட்க ஆதவியும் ஆம் என‌தலையசைத்தாள். மாளவிகா ” எவ்டே ஸ்டே செய்யான் போகுன்னு?” ( எங்க ஸ்டே பண்ண போறீங்க)இது ஏதடா புது வில்லங்கமாக இருக்கிறது என நினைத்த ஆதவியும் போனால் போகட்டும் என “கொல்லம் பக்கத்துல ஒரு பிஜி பாத்திருக்கேன் அங்கதான் போய் ஸ்டே பண்ணனும்” என்றதும் அதைக்கேட்டு சிரித்த மாளவிகா “ஆது ஞானும் கொல்லம் தன்னே.. என்ற சேட்டன் இப்ப என்ன பிக் செயான் வரும் இப் யூ டோன்ட் மை ஞங்கள கூடே கூடாமோ? ” ( ஆது.. நானும் கொல்லம் தான் போறேன். என் அண்ணா இப்போ என்னை பிக் பண்ணவருவாங்க… எங்க கூட வர்றீங்களா?)இதனை ஏற்க மறுத்த ஆதவி ” இல்ல மாளவிகா, நான் கேப் புக் பண்ணியே போயிடுவேன் பிரச்சனை இல்ல ஐ கேன் மேனேஜ்” என்றாள்.ஆதவியின் மறுப்பை ஏற்க இயலாமல் நின்ற மாளவிகா ” ஆதவி, பேடிக்கண்டா(பயப்படாதீங்க).. உன்ன நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம்.. ப்ராமிஸ்..” என்று கூற ஆதவிக்கோ இது சற்று எரிச்சலை மூட்டியது. பயணத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்ததால் அவள் பேசினாள். அதுவே அவளை கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தது. பேசியது தவறு என்னும் அளவிற்கு ஆதவியை யோசிக்க செய்திருந்தாள் மாளவிகா. யோசித்தது மட்டுமின்றி தவறு என சில நிமிடங்களிலேயே முடிவு செய்தாள் ஆதவி. “ஆதவி நான் பறையுந்நத குறைச்சு கேக்கு. இப்ப நமக்கு கொல்லம் போகனுமெங்கில் த்ரீ(3) ஹவர்ஸ் ட்ராவல் ஆனு.. த்ரீ ஹவர்ஸ் தனியா போக வேண்டாம்.‌சேட்டன் சீக்கிரம் வரும்…‌அவர்களுடன் சென்றால் பெட்ரோல் மட்டும் தான் பைசா(காசு) குடுத்தா மதி(போதும்)அவள் கூறியதை யோசித்தவள் இந்த ஐடியாவும் நல்லா தானே இருக்கு ஆனா பிரதர்ஸ் அப்படிங்கிறப்போ எந்த நம்பிக்கையில் போகலாம் என யோசித்தவள் கண் முன்னே வந்த இருவரை கண்டதும் விழி விரித்து நின்றாள்.அருகிலே வந்த அவர்கள் இருவரும் “ஹாய் மாளு… எங்கன இருந்நு நிங்கட கச்சேரி?” ( எப்படி இருந்திச்சு உங்க ப்ரோக்ராம்) “எவரிதிங் இஸ் வென்ட் வெல் அண்ட்” என்றவள் சகோதரர்கள் இருவரையும் ஆதவிக்கு காட்டி “ஆதவி இதானே என்ற பிரதர்ஸ் இது உன்னி அவன் சச்சின்” என்று கூறிட ஆதவியை ஓரக்கண்ணால் பார்த்து “மாளு.. இதெல்லாம் நீ அவளுக்கு சொல்ல வேண்டிய தேவையே இல்ல… உனக்கு எங்களை எந்த அளவுக்கு தெரியுமோ அதே அளவுக்கு அவளுக்கும் எங்களுக்கு தெரியும். ” என்று கூறிட மாளவிகாவும் “அதுவும் சரிதான்.. ஆமா நீங்க ரெண்டு பேரும் எதுக்கு திருவனந்தபுரம் வந்தீங்க” என்று தமிழிலேயே கேட்டுவிட்டு பேய் முழி முழித்து நின்றாள். ஆதவிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… அவர்களின் பேச்சு அவளுக்கு அடியாய் விழுந்திட தன் சமாளித்துக் கொண்டு மாளவிகாவை கேள்வியாய் நோக்கினாள். அந்த கேள்வியின் பார்வையில் “என்னை உனக்கு முன்னமே தெரியுமா ?என்ற கேள்வியும் “தமிழ் பேச வருமா?” என்ற கேள்வியும் “அப்போது எதற்காக இந்த நாடகம்?” என்ற கேள்வியும் தொக்கி நிற்க அவளுக்கு பதிலாக அவர்கள் இருவரும் அதாவது உன்னையும் சச்சினும் பதில் சொல்ல முனைந்தனர். அவர்கள் பதில் சொல்ல முன் வந்தது ஆதவிக்கு ஏதோ புரிய அதை எதுவும் கேட்க விருப்பம் இல்லாது கண்களை மூடிக்கொண்டு தன்னை சமாதானப்படுத்தி கொண்டாள். அவளது அமைதியில் ஏதோ புரிந்த சச்சின் “வா நமக்கு கார்ல போய் எதுனாலும் பேசிக்கலாம்” என்று கூறிட ஆதவியோ அவனை முறைத்தாள். அவளது கோபத்தை நன்கு அறிந்த அவர்கள் காரில் ஏறிக் கொண்டனர். இவை அனைத்தையும் ஒரு விரக்தி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். அது ஆதவியை சென்னையில் இருந்து கவனித்துக் கொண்டுதான் வந்தது. ஆதவி யாருக்கு தான் தெரியக்கூடாது என நினைத்து தன்னை மறைத்துக் கொண்டாளோ அவர்கள் அவளுக்கு முன்பே அவளைக் கண்டு கொண்டது ஏனோ? விதியின் விளையாட்டு இப்படித்தானோ? ரயிலில் இருந்து இறங்கிய தீபக் மற்றும் மிதுன், உத்தவ் மூவரும் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி எதிரில் இருந்த பேருந்து நிலையத்தை வந்து சேர்ந்தனர். அங்கிருந்து கொல்லம் செல்லும் பேருந்து பிடித்து அமர்ந்து விட்டனர். மூவரின் எண்ணங்களும் எங்கெங்கோ சிதறடிக்கப்பட்டிருக்க சிறகடித்து கழித்து போய் ஓய்ந்தது என்னவோ ஆதவியின் நினைவில். அவளை ரயிலை கண்டதும் மகிழ்ச்சியா வருத்தமா கோபமா வெறுப்பா என பிரித்தறிய இயலாத ஒரு உணர்வு அவர்களின் மனதை தாக்கியது. அவள் அவர்களை கண்டறிந்தாலும் இதே உணர்வு அவளையும் பிரதிபலிக்கும் என உறுதியாக நம்பினர் நண்பர்கள் மூவரும். ஆனால் அவர்கள் அறியாதது ஆதவியும் அவர்களை கண்டு கொண்டாள் என்பது. அவளை கண்டதும் கேரளத்தை நோக்கிய அவளது முதல் பயணம் இதுவென அறிந்து கொண்டனர். அதனாலேயே அவர்களின் குழுவில் உள்ள அனைவருக்கும் செல்லப் பிள்ளையான மாளவிகாவை அவளோடு பேச அனுப்பி வைத்தனர். மாளவிகாவும் அவர்கள் பேச்சிற்கிணங்கி ஆதவியோடு பேச்சு கொடுத்து அதனை நட்பாகவும் வளர்த்தாள். இதனை நினைத்து கொண்டு இருந்த தீபக்கும் மிதுனிற்கும் நினைவுகள் எங்கெங்கோ சென்றிட தீபக்கின் கண்களிலோ கண்ணீர் சுரக்க இமைசிமிட்டி அதை மறைத்துக்கொண்டான் அவன். . அதையும் தாண்டி உத்தவ் முகம் சொல்லன்னா வருத்தத்தை ஏக்கத்தை உள்ளடக்கி வைத்திருந்தது. ஆதவியின் நிராகரிப்பும் இவர்களின் வருத்தமும் ஏக்கமும் காரணம் என்ன? மாளவிகாவின் சகோதரர்கள் அவளை சமாதானப்படுத்தியதும் அவள் அவளோடு அவர்களோடு செல்வதன் காரணம் என்ன? பொறுத்திருந்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்

1 thought on “சிநேகம் 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *