Skip to content
Home » சிநேகம் 9

சிநேகம் 9

  • Arulmozhi 

மாளவிகா மற்றும் உத்தவ் இருவருடன் இருந்த அந்தப் பெண்ணை கண்டதும் ஆதவியின் மூளை தன்னுள்ளே ஏதேதோ நினைத்துக் கொள்ள மீண்டும் சென்னைக்கு கிளம்பலாம் என முடிவெடுத்தவள் ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்தாள். (யார்ரா இவ)அறைக் கதவை திறந்து வெளியே வந்தவள் மாளவிகா நிறபதை கண்டும் காணாதது போல் அறையினுள் நுழைந்தாள். ஆதவி எதுவும் பேசாமல் மீண்டும் திரும்பி யோசனையாக செல்வதை பார்த்த மாளவிகா உத்தவிற்கு அழைத்து கூறினாள். அவர்கள் யோசனைப்படி புகைப்படத்தை கண்டு அவள் ஏதேனும் கேட்க வேண்டும்… அது நடவாதிருக்க ஆதவியிடம் சென்று பேசலாம் என நினைத்த மாளவிகா அவளின் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றாள். அங்கோ இதுவரையிலும் வெறுப்பையும் கோபத்தையும் அகங்காரத்தையும் மட்டுமே முகத்தில் காட்டிய ஆதவி உடைந்து அழுது கொண்டிருந்தாள். இது மாளவிகா சற்றும் எதிர்பாராத ஒன்று. சேச்சி எந்தினா கரையுன்னே? என பதற்றத்துடன் கேட்ட மாலவிகாவிற்கு “ஐ ஜஸ்ட் வான்ட் டு பி அலோன்” என்று கூறினாள் ஆதவி. இவங்கள புரிஞ்சுக்கவே முடியலையே என தனக்குள்ளே நினைத்துக் கொண்டவள் இப்படியே விட்டுவிடக் கூடாது என முடிவெடூத்து ஒரு டம்ளரில் தண்ணீருடன் மீண்டும் ஆதவியின் அறைக்கு வந்தாள். ” சேச்சி. சேச்சி இப்ப எந்தினா கரையுன்னெந்நூ எனிக்கறியில்லா. பக்ஷே எனிக்கு ஈ வீட்டில் ஆரெங்கிலூம் கரையாம்பாடில்லா.. அது எனிக்கி இஷ்டமுமல்லா.. சேச்சி ஆத்யம் ஒரு க்ளாஸ் வெள்ளம் குடி ( அக்கா நீங்க இப்போ எதுக்கு அழறீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா என்னோட இந்த வீட்ல யாரும் அழக்கூடாது அது எனக்கு பிடிக்காது அதனால அக்கா நீங்க முதல்ல ஒரு கப் தண்ணி குடிங்க) என்றவள் ஆதவியை தண்ணீர் அருந்த வைத்தாள். ஆதவிக்கு மாளவிகா கூறிய வார்த்தைகள் மற்றொருத்தியை நினைவுபடுத்த மாளவிகாவிடமே தன் முதல் கேள்வி முடிச்சு அவிழ்க்க துவங்கினாள். உன்னோட ரூம்ல ஒரு போட்டோ பார்த்து அந்த மூணு பேர் இருந்தீங்க நீயும் உத்தவவும் அந்த இன்னொரு பெண் என நிறுத்திய விலை உருவம் சுருங்க உற்றுப் பார்த்தவள் “அது என்ற சேச்சி..பேரு கோபிகா” என்றாள். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தவள் அப்போ நீ கோபிகா தங்கச்சியா? அவ இப்ப எங்க இருக்கா? என்ன பண்றா? என கேட்டாள்.‌”என்னைக் காட்டிலும் சேச்சியகுறிச்சிஆதவி சேச்சிகல்லே நன்னாயிற்று அறியாம். அந்நு சேச்சி எவிட போணென்னு பறஞ்சது நிங்களெடுத்தானு. அப்போ நிங்களல்லே பறையணும்”(என்ன விட என் அக்காவை பத்தி உங்களுக்கு தான் தெரியும் அன்னைக்கு அக்கா எங்க போறான்னு சொன்னது உங்ககிட்ட தான் அப்ப நீங்கல்ல சொல்லணும்)என கேள்வியை ஆதவிப்புறமே திருப்பினால் மாளவிகா. ஆனால் இந்த இடத்தில வெறும் அமைதி காத்துக் கொண்டு நின்றிருந்தாள் கோபிகாவின் உயிர் தோழி. அவளது அமைதியை உபயோக படுத்த நினைத்த மாளவிகா தமிழில் ” அவளை வழியனுப்பி விட்டுட்டு எதுவுமே தெரியாத மாதிரி என்னா நடிப்பு.. கூடவே தீபக் சேட்டனும் உத்தவ் சேட்டனும் அவங்க கூட்டுகாரரும்(நண்பர்களும்) காரணம்னு அவங்ககிட்ட மூஞ்சி திருப்பிட்டீங்க… ஒண்ணு கேட்கிறேன் எதையும் பொறுமையா யோசிக்கமாட்டீங்களா? நீங்க நினைக்கிறது தான் உண்மைனு இருப்பீங்களா? உங்களால எத்தனை பேர் வாழ்க்கை தங்கியே இருக்கு தெரியுமா? இது எதுவும் தெரியாம உங்களுக்கு நீங்களோ முகத்திரையை போட்டுட்டு சுத்துறீங்க” என தன்னால் முடிந்து மட்டும் பேசியவள் அங்கிருந்து வெளியே சென்றாள். ஆதவிக்கும் தனிமை தேவைப்பட்டது. அதையும் தாண்டி பல விஷயங்கள் தெளிவாக தெரிய வேண்டியிருந்தது. இது தெரிந்து கொள்ள உத்தவ் மட்டும் தான் உதவி செய்வான் என நினைத்தாள். எங்கயோ ஏதோ தவறாக நடந்துள்ளது, பேசினால் சரியாகியிருக்க வேண்டியது என்பதையும் உணர்ந்து கொண்டாள். இனி அவர்கள் நட்பில் எவ்வித பாதிப்பும் இல்லை… ஆனால் அவள்? காணாமல் போனவள்? வருடங்கள் தாண்டி உயிருடன் தான் இருக்கிறாளா அவள்? குழப்பங்கள் தீர ஒரே வழி நண்பர்களுடன் மீண்டும் இணைவது மட்டுமே என புரிந்து கொண்டவள் தனது திடீர் முடிவினை மாற்றிவிட்டு அலுவலகம் செல்லவும் தான் எடுத்திருக்கும் கேசை முடிக்கவும் முடிவெடுத்தாள். மேலும் இதுவரையிலும் சிரிப்புடன் கடந்து சென்ற மாளவிகாவிடம் நல்லதொரு நட்புறவை ஏற்படுத்த நினைத்துக் கொண்டாள்.மஞ்சள் வானம் மையலிட்டு காத்திருக்க அதனை ஏமாற்றாது சுற்றி வந்து சுடர்விடும் சூரியன் தனது அரண்களுக்கு இடையிலிருந்து வெளியே வந்தான். வந்தவனின் வெளிச்சம் எங்கும் ஒளிவிட பரபரப்பு துவங்கியது திருவனந்தபுரம் மாநகரம். அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்த மாளவிகாவை பார்த்து சிரித்தது ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவு பதார்த்தங்கள். என்னடா இது என மனதில் எழும்பி கேள்வி உடன் அதிலேயே நிற்க கையில் ஒரு ஹாட் பாக்ஸ் உடன் வந்தாள் ஆதவி. நேற்று நடந்தது எதுவும் நினைவில்லாதது போல் வெகு சாதாரணமாக எந்தா சேச்சி என கேட்டால் மாளவிகா. எதுவும் நடவாதது போல் பேசிக்கொண்டவளைப் பார்த்து அர்த்த புன்னகை சிரித்தவள் வா சாப்பிடலாம் என மாளவிகாவை சாப்பிட அழைத்தாள். ஒரே நாளில் இவளுக்கு ஏதாவது நிகழ்ந்து விட்டதோ என ஒரு நிமிடம் யோசித்தவள் புருவம் உயர்த்தி என்ன என புரியாமல் வினவினாள். அவள் உள்ளே இது கோபிகாவதற்காக செய்யப்படும் செயலோ என ஒரு கேள்வி எழுந்தது ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதமாக இருந்தது ஆதியின் பதில். அது ஒன்னும் இல்ல மாளவிகா இங்க வந்த அப்புறம் சாப்பாடுக்கான செலவே ஒரு நாளைக்கு 250 லிருந்து 300 ரூபா வரைக்கும் ஆகுது இப்படியே 30 நாளைக்கு பார்த்தோம்னா சம்பாதிக்கிற காசு சாப்பாட்டுக்கு மட்டுமே போயிரும் அதனால இனி தினமும் குக் பண்ணி சாப்பிடலாம்னு இருக்கேன் நீயும் இங்கதான இருக்க உனக்கும் சேர்த்து குக் பண்ணி இருக்கேன் ரெண்டு நாள் டேஸ்ட் பாரு புடிச்சிருக்குன்னா கன்வே பண்ணு இல்லன்னா விட்ரு. ஓகே என்றவள் அப்படியே புடிச்சு தினமும் சாப்பிட்டாலும் பீஜில மெஸ்டீஸ் கட்டுற மாதிரி உங்களுக்கு சாப்பாட்டுக்கான காசு கொடுத்துடுவேன் என்று மலையாளத்தில் கூறினாள். ஓகே டன் என்றவள் வந்து சோபாவில் அமர்ந்திட எதிரே அமர்ந்தாள் மாளவிகா. ஆதவி உண்ண ஆரம்பித்திட மாளவிகாவும் அவளைத் தொடர்ந்தாள். மிக நன்றாக இருக்கிறது எனக்கூற முடியாது ஆனால் குறை சொல்லாமல் சாப்பிடலாம். அதனாலும் ஆதவி சொன்னது போலவே தினமும் வெளியிலிருந்து வாங்கி சாப்பிட்டால் செலவுகளை அதிகம் என்பதையும் கருத்தில் கொண்டு வீட்டிலேயே சாப்பிடலாம் என மனதில் நினைத்துக் கொண்டாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த அவளிடம் படிக்கும் கல்லூரி மற்றும் அவளது பாடல் குழு என மாணவியாவின் விவரங்களை ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொண்டவள் அவசரத்திற்கு வேண்டுமென்றால் அழைக்க ஆதவியின் தொலைபேசி எண்ணையும் அளித்தாள். இனி இவர்களுக்கிடையே நல்லதொரு உறவு தானாகவே உருவாகிவிடும். ஆனால் நண்பர்களிடையே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *