அத்தியாயம்-14
ஐஸ்வர்யா என்ன நினைத்தாளோ அவள் அடுத்த நாள் காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள். ரித்தீஷ் தான் சோர்வில் கொஞ்சம் கண் அசந்திட எழுந்த பிறகே ரியா கல்லூரிக்கு தயாராகி நிற்பதை பார்த்தான்.
தாலி கழுத்தில் இல்லாமல் போக மெட்டியையும் கழட்டி கொண்டு இருந்தாள். ரித்தீஷ் அதிகாலையில் இதனை கண்டவன் கொஞ்சம் அதிர்ச்சி ஆனான்.
”எங்க கிளம்பிட்டு இருக்க” என கழுத்தில் கண்ணை பதித்தே கேட்க அவன் பார்வை அறிந்து கொண்டவள்.
”எங்க போவாங்க? எல்லாம் காலேஜிக்கு தான்.. ஆட்டோ ஒட்டினாலும் படிக்கணும் என்று நீங்க நினைக்கறப்பா, கல்யாணம் ஆனாலும் படிக்கணும் என்று எனக்கும் தெரியும்” என்றே அவன் முகத்தை பார்க்காமல் பேசி கொண்டு செல்ல அவனோ தாலி எங்கே கழட்டி வச்சியிருக்க என்று கேட்க நினைத்து தவித்தான்.
”இன்னும் என்ன மசமசனு கிளம்பிட்டு வாங்க எனக்கு அப்பறம் லேட் ஆகிட போகுது” விரட்டினாள். எழுந்தவன் பிரஷ் எடுத்து கொண்டு குளியல் அறைக்கு சென்றான்.

‘தாலி எல்லாம் இவளிடம் நான் ஏன் தேடறேன்’ என்றதற்கு மனசாட்சி முன் வந்து ‘டேய் ரித்தீஷ் அவ உன் பொண்டாட்டி டா’ என்று எடுதுரைக்க அவனோ அதற்கு பதிலாக ‘ஆமா எல்லாரும் கேட்டா கட்டி வச்சாங்க இதோ என்ன போல தான் மஸ்தான் அவர் ஊரில் இருக்கறவர் தெரிந்தவர் என்று உதவி செய்தமையை காரணம் காட்டி அவர் பெண்ணை கட்டி வைத்தார் இப்போ மஸ்தானும் நிம்மதியா இல்லை இலாவும் நிம்மதியா இல்லை.. கல்யாணம் செய்த அந்த பொண்ணு பாத்திமாவும் பாவம்.
அப்படி தான் இங்கயும் ஆனா எனக்கு ரியாவை கட்டிக்கிட்டாலும் நான் எப்பவும் போல நிம்மதியா தான் இருக்கேன் அவள் என்னிடம் என்கூட இருக்கா அதுல எனக்கு எந்த மாற்றமும் தெரிலை ஆனா பாவம் அவளின் பணம், நிம்மதி, வசதி இது எல்லாம் என்னால அவளுக்கு கிடைக்கலை அவள் தாலி கழட்டி வைத்தது எல்லாம் தவறில்லை’ என ஷவர் நீரில் நேரத்தை கடத்தினான்.
”மாமா… எவ்ளோ நேரம் குளிப்ப…. வா” என்ற குரலில் வெளியே வந்தான். இடையில் ஒரு டவல் தலையில் தேய்த்தவன் அவள் இருப்பதை அறிந்து அந்த டவலை அவன் போர்வை போல போர்த்தியபடி
”நீ போ சொன்னதும் அப்படியே போயிட்டேன் அதான்” என்றதும் ஐஸ்வர்யா தலையை குனிந்தவள் எழும்பவில்லை.
ரீடிங் டேபிள்தலை வைத்தவள் அப்படியே இருக்க
”இந்தா நூடுல்ஸ்… இன்னிக்கு இதை சாப்பிட்டுக்கோ கொஞ்சம் தூங்கிட்டேன்” என்று கொடுக்க வாங்கி ருசித்தவள்.
”மதியம்…?” என அவள் கேட்க அவனோ
”லஞ்ச் கொண்டு வந்து கொடுக்கவா இல்லை கேண்டீன்ல வாங்கிக்கறியா? ஏன் கேட்கறேனா.. உனக்கு காலேஜ் ல.. நான் வருவது பிடிக்காது” என இழுக்க
”கொண்டு வந்து விட போறது நீ தான் மாமா.. அப்போ மதியமும் கொண்டு வா” என்று சொல்ல ஹ்ம் என்றான். மனசாட்சி அவனிடம் ‘டேய் வேலை இருக்கு நீயே கேண்டீன்ல சாப்பிடுனு சொல்லு டா அதை விட்டு ஹ்ம் சொல்ற’ என்று அவன் மனசாட்சி பேசுவதை கேட்காமல் வெளியே வந்து கதவை பூட்டினான்.

ஐஸ்வர்யா செருப்பை நின்றபடி மாட்ட அவளுக்கு சரியாக மாட்டா முடியாது தடுமாற குனிந்து செருப்பின் வாரை மாட்டி கொண்டிருந்தாள். அப்பொழுது ரித்தீஷ் கதவை பூட்டி திரும்ப அவளின் கழுத்தில் வளைவில் எட்டி பார்த்தது அவன் அணிவித்த மாங்கல்யம்.
அவன் செயின்னா தாலியா என்ற குழப்பத்தில் இருக்க அவனுக்கு டென்ஷன் கொடுக்காமல் அந்த புத்தம் புதிய மாங்கல்யம் வெளியே நன்றாக வந்து நின்றது. செருப்பை அணிந்து நிமிர்ந்தவள் தாலியை இமைக்காமல் பார்க்கும் ரித்திஷை கண்டு தாலியை உள்ளே எடுத்து போட்டவள். பர்சில் இருந்து ஸேஃப்டி பின் எடுத்து வெளியே விழாமல் இருக்க சுடிதாரோடு சேர்த்து பின் குத்தி மறைத்தாள்.
”உன… உனக்கு போட்டுட்டு போக பிடிக்கலை என்றால் கழட்டி கூட வச்சிக்கோ…” என்றான் எங்கோ பார்த்தபடி
”எதுக்கு வைதேகி வந்து தொடப்பத்தால அடிக்கவா…. ஒன்னும் வேணாம்… எனக்கு இதோட இம்பார்டண்ட் தெரியும்” என்று சொல்லிவிட்டு படிகளில் வேகமாக போக ரித்தீஷ் சொல்ல இயலா சந்தோஷத்தில் மிதந்தான்.
அப்பொழுது தான் இலா மகாலட்சுமியோடு கை தாங்கலாக நடந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
”என்னடா காலேஜ் கிளம்பிட்டியா?” என மகாலட்சுமி கேட்க அவர்கள் இருக்கும் பிரச்சனையில் தன்னை கேட்கின்றாறே என்றெண்ணினாள் ஐஸ்வர்யா.
”ஆமா.. அவங்க இப்போ எப்படி இருக்காங்க?” என்றாள்.

”பரவாயில்லை டா.. இனி ஒன்னுமில்லை.. நீ பார்த்துப்போ” என்றதும் உள்ளே ஆட்டோவில் சென்று அமர்ந்தாள்.
ரித்தீஷ் தான் அடிக்கடி ஆட்டோவில் அவளை பார்த்து புரியாமல் குழம்பி நின்றான். அவளோ இலாவை நினைத்து கொண்டு எண்ணங்களை எங்கோ ஒட்டி சென்றாள்.
கல்லூரியில் இறங்கியது தான் நினைவு வந்தது. எப்பொழுதும் எதையாவது மறந்து வைத்து பின்னர் ரித்தீஷ் ஐஸூ என்று அழைத்து கொடுப்பது வழக்கம் என்பதால் அதே நினைவில், அவளோ தயங்கி தயங்கியே பார்த்து செல்ல அவனும் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்.
இருவருக்குள் என்னவோ அவர்கள் உடலில் ரத்தசெல் என்னவோ எடுத்துரைக்க அதனை என்ன என்று தான் இருவரும் அறியாமல் குழம்பினார்கள்.
ஐஸ்வர்யா ஓடி வந்தால், ரித்தீஷ் அருகே வந்து, அவனின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாயை எடுத்து பார்த்தவள் பார்சில் வைத்து கொண்டாள்.
”என்ன பார்க்கறிங்க சாப்பிடு என்றால் கேண்டீனுக்கு யாரு பே பண்றது.. உங்க மாமனார் கட்டி வச்சி இருக்கார்” என்று உதடு சுழித்து செல்ல ரித்தீஷ் மந்திரித்து இருந்தவன் போல அங்கேயே நின்றான்.
”ஆட்டோ தம்பி வண்டி எடுங்க…” என்று வாட்ச் மேன் குரல் கேட்க விழித்தவன் வெட்கம் கலந்த சிரிப்பில் ஆட்டோவை எடுத்தான்.
வழி நெடுகில் அவள் தனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்த உரிமை அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எப்பவும் அவள் ஏதேனும் அவன் வாங்கி வந்து கொடுத்தால் அது ஒரு பொருளே அல்ல என்ற தோரணையில் இருக்கும் ஐஸ்வர்யா இப்பொழுது இப்படி செய்தது, அவனுக்குள் அதீத சந்தோஷம் கொடுத்தது,
இங்கு ஐஸ்வர்யா கல்லூரிக்கு வந்து வகுப்பில் செல்ல, லேகா அவளாகவே அவளிடம் இருந்து ஒதுங்கி கொண்டாள். ஐஸூ அதற்காக எல்லாம் கவலை கொள்ளவில்லை. அதே போல வெங்கட், திலீப், பிரபு மூவரும் கூட அன்றைய நாட்கள் கழித்து, ரித்திஷோ அல்லது ஐஸூவின் அப்பவோ வந்து பிரின்சிப்பால் வரை போகும் என்றிருக்க ஐஸூ அப்படியே விட்டு விட்டாள். அதனால் மீண்டும் தெனாவட்டாக இருந்தார்கள்.
உங்களுக்கு நானும் சளைத்தவள் அல்ல என்று ஐஸூ சுற்றிக்கொண்டு இருந்தாள். கல்லூரியில் பூர்வீ மட்டும் பேசினால் பேசுவாள்.
அதே சந்தோசத்தோடு அன்றைய நாட்கள் நகர, மாலை அவளை கூட்டிட்டு வந்து வீட்டிலும் விட்டு விட்டு அவளுக்கு தனியாக ஆப்பிள் பப்ஸ் என்றே வாங்கி கொடுத்தும் சென்றான்.
”சாப்பிட்டு படி” என்றே கிளம்பினான்.
”நீ.. நீங்க சாப்பிடலையா…” என்று கேட்டுவிட்டு தலையை குனியா அவனோ இது இன்னும் புதிதாக தோன்றியது அவனுக்கு. வைதேகி சில சமயத்தில் ஏதேனும் செய்து வைத்திருந்தால் தனது பங்கை தின்று முடித்து மீண்டும் சாப்பிட வர ‘அது என் தம்பிக்கு டி.. ‘ என வைதேகி சொல்ல, அதற்கு இவளோ ‘உன் தம்பிக்கு மறுபடியும் செய்துக்கோ இது எனக்கு வேணும் என்று தட்டோடு எடுத்து சாப்பிடும் ஐஸ்வர்யாவா? இன்று தன்னை சாப்பிடலையா? என கேட்கின்றாள்.
”உங்களுக்கு வேணுமா வேணாமா.. அப்பறம் உங்க பங்கை நானே காலி பண்ணிடுவேன்” என்றாள்.
”பரவாயில்லை நீயே சாப்பிடு நான் உனக்கு மட்டும் தான் வாங்கி வந்தேன்” என்று செல்ல பார்த்தவனை,
”நில்லுங்க…” என்றவள் வேகமாக கத்தி வைத்து பப்ஸை சரிபாதியாக வெட்டி ”பிடிங்க சாப்பிட்டு போங்க” என நீட்ட அதிர்ச்சி மேல் அதிர்ச்சியோடு சாப்பிட்டு முடித்தான்.
”இப்பயாவது போலாமா?” என்று சிரித்தபடி கேட்க
”பின்ன இங்க இருந்து என்ன செய்ய போறிங்க” என்று கேட்டவள் புத்தகம் எடுத்து உட்கார அவளின் பேச்சில் என்ன செய்ய வேண்டும் என்று எதிரபார்க்கின்றாள்? என ஒன்றும் புரியாமல் திரும்பி திரும்பி பார்த்தபடி குழப்பமாகவே போனான்.
மஸ்தான் நேற்றிலிருந்து வராமல் போக சண்முகம் பயந்தவாறு ”அவனை போய் ஒரு எட்டு பார்த்துட்டு வா ஈஸ்வர்.. இலா செய்து கொண்டது போல ஏதாவது செய்து கொண்டானானு பயமா இருக்கு” என்றதும் அவனை பார்க்க சென்றான்.
அங்கே மாடியில் ஏறும் பொழுதே பாத்திமா சத்தம் தான் அதிகமாக கேட்டது. ரித்தீஷ் ‘சே மறுபடியுமா என மேலே போனான். இது எப்பொழுதும் நடப்பது தான் மஸ்தான் பாத்திமா சண்டயிட்டு கொள்வது.
அங்கே கதவு திறந்து இருக்க கபாத்திமா தந்தை இருக்க கண்டவன் மனதினுள் ‘போச்சு ஏற்கனவே நன்றி கடன் அதுயிதுனு பேசுவார்.. இதுல இலா தற்கொலை முயன்றது தெரிந்தது மஸ்தானை கூட்டிட்டு ஊருக்கே போயிடுவாரோ? என உள்ளே வர அங்கே இன்னொரு ஆடவன் இருக்க கண்டு மஸ்தானை பார்க்க மஸ்தானோ என்றும் இல்லாமல் நிம்மதி கொண்டவனாக தோன்றியது.
ரித்தீஷ் வந்ததை பார்த்தும், பாத்திமா அவள் அப்பவோடு பேசுவதை தொடர்ந்தாள்.
”இவர் நீங்க பணம் கொடுத்து அனுப்பி இப்போ இந்த நிலைமையிலயாவது இருக்க காரணம் நீங்க தான் வாப்பா.. ஆனா அதுக்காக அவருக்கு கொடுத்த தண்டனை அவர் வாழ்க்கை அழிச்சது தான். என் வாழ்க்கை தான் அழிச்சு இவரிடம் கட்டி கொடுத்து இருந்திங்க என்று இத்தனை நாள் இருந்தேன் இவரும் ஏமாற்றி வசதிக்கு ஆசைப்பட்டு தான் இப்படி கல்யாணம் செய்து கொண்டார் என்று, இவரையும் தப்பா தான் நினைச்சேன் ஆனா நேற்றோட எல்லாம் புரிந்துடுச்சு.

இனியும் இந்த சமூகம் என்ன சொல்லும் நீங்க என்ன சொல்வீங்க என்று எல்லாம் பார்க்க நான் தயாரா இல்லை நான் அன்வர் கூடவே போறேன்… என்ன இதை நான் கல்யாணத்துக்கு முன்னவே செய்திருக்கனும்… அப்போ செத்து போவேன் மானம் மரியாதை என்னென்னவோ சொல்லி என்னை கட்டி போடுட்டிங்க… அதுக்கு இப்போ யார் யாரோ சாக அனுமதிக்க மாட்டேன். அன்வர் அரபியா போறார்… நானும் போறேன்..” என்றதும் ரித்தீஷ் திகைப்பாக மஸ்தானை நோக்க அவனோ அதே போல நின்று இருந்தான்.
”நீ என்ன முட்டாளா? இவனோட வாழ்ந்துட்டு இப்போ இவனோட போறேனு சொல்லற?”
”மனசு இரண்டும் சேர்ந்தா தான் கணவன் மனைவியா வாழ ஆரம்பிபாங்க.. இது என்ன உங்க காலமா கல்யாணம் முடிந்து அன்னிக்கே எல்லாம் நடந்து முடிக்க.. இன்னும் மனசு புரிந்து வாழ ஆரம்பிக்க தான் எந்த மனுஷனும் விரும்புவான். கவலைப்படாதிங்க நான் இன்னும் உங்க பொண்ணா தான் இருக்கேன்..” என்றவள் மஸ்தானை பார்த்து ”இதுல கையெழுத்து போட்டுட்டேன்… வேற எதுலயாவது கையெழுத்து போடணும் என்றாலும் அன்வருக்கு சொல்லுங்க அட்ரஸ் கொடுக்கறோம் அனுப்புங்க.. என்னை மீறி ஏதாவது தப்பு செய்து உங்க மனசை காயப்படுத்தி இருந்தா மன்னிச்சுடுங்க…” என்று கையை எடுத்து கும்பிட்டாள்.
”இந்த அன்வர் உன்னை அங்க போனதுக்கு அப்பறம் சந்தேகப்படுவான் துன்புறுத்துவான்” என பாத்திமா தந்தை பயத்தை விதைத்தார்.
”பரவாயில்லை இங்கே ஒரே அறையில் இருந்து என்னால எத்தனை பேருக்கு கஷ்டம் என்று எனக்கு தெரியும்… அன்வர் கூட வாழ முடிவு செய்துவிட்டேன்… அவருக்கு என்னை புரியும்.

நீங்க சொல்லியது போல அங்க போய் சந்தேகமோ இல்லை எனக்கு கஷ்டமோ எது நடந்தாலும் அது என்னோட போகட்டும் ஆனா அவர் அப்படி செய்ய மாட்டார்…” என்று சொல்ல அன்வர் அமைதியாக பாத்திமா தோளில் கையை அழுத்த அவளோ கழுத்தில் எல்லா நகைகாளையும் கழட்டி விட்டு பர்தா அணிந்து புறப்பட்டாள்.
”நான் வர்றேங்க… அவர் சொல்வது போல சந்தேகம் எல்லாம் படமாட்டேன்… முன்ன எப்படி அவளை விரும்பினேனா அதே போல பார்த்துப்பேன்” என அன்வர் பாத்திமா கிளம்பினார்கள். அவர் தந்தை தான் மஸ்தானை முறைத்து கொண்டு புறப்பட்டார்.
புறப்படும் பொழுது, ”உன்னை ஊரில் இருந்து இங்க அனுப்ப பணம் சொலையா 80000 கொடுத்து அனுப்பினேன். அந்த நன்றி எல்லாம் நீ மறக்க மாட்டனு தான் பொண்ணை கட்டி கொடுத்தேன். ஆனா நீ இப்படி செய்துட்ட ஒரே ஊர் காரன் என்பதாலா தானே உன்னிடம் வந்தேன் இப்படி என் பொண்ணு கூட வாழாம அவளே இப்படி ஒரு முடிவு எடுக்க வச்சிட்ட நீயெல்லாம் மனுஷனா?” என திட்டிவிட்டு சென்றார்.
அவர் அப்படி பேசினாலும் மஸ்தான் இன்று தான் நிம்மதியாக உணர்ந்தான். போகும் அவரை வழி மறித்து ”உங்க காசு எப்படியும் திரும்ப கொடுத்துடுவேன் சார்” என்று சொல்ல அவரோ கண்கள் சிவக்க சென்றார்.
”ஈஸ்வர்…. ரொம்ப நிம்மதியா இருக்கு டா… எவ்ளோ நாள் தெரியுமா.. நிம்மதியா தூங்கி” என்று மகிழ்ந்தான் மஸ்தான்.
ரித்தீஷ் மனநிறைவோடு கிளம்பினான்.
படிக்கட்டில் ஏறும் முன் இலா வழி மறித்து மஸ்தானை பற்றி கேட்க அவனும் நடந்ததைவை எல்லாம் சொல்ல இலா சாந்தோஷத்தில் மிதந்தாள்.
”டேய் அப்போ கொஞ்ச நாள் கழிச்சு டிவோர்ஸ், தென் மேரேஜ், அப்படி தானே டா?” என்று கேட்க ரித்தீஷ் ஆம் என்று தலையசைத்தான்.
ரித்தீஷ் குரல் கேட்டு வந்த ரியா இவர்களின் கடைசி பேச்சை கேட்டு ஸ்தம்பித்தாள்.
ரியாவுக்காக சப்பாத்தி செய்தவன் கால் மணி நேரத்தில் கிழங்கு வைத்து கொடுக்க மூன்று உண்டு முடித்தாள்.
”எதுக்கு உம்முனு இருக்க? காலேஜ்ல யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டான்.

”எவனாவது என்கிட்ட பேசினா நான் ஒன்றும் சும்மா விட மாட்டேன்” என உற்றென்று திருப்பி கொள்ள
”பிறகு எதுக்கு இப்படி உம்மு இருக்க” என்றான்.
”உங்களுக்கு என்ன இதுக்கு முன்னாடி இப்படி தான் கேட்டுட்டு இருந்திங்களா… வருவிங்க உங்க அக்கா.. கொடுக்கறதை கொட்டிக்கிட்டு அமைதியா புத்தர் மாதிரி போயிடுவிங்க, இப்ப என்ன புதுசா கேள்வி எல்லாம் கேட்கறிங்க?” என்று எரிந்து விழ, இவளோட வாயை கொடுத்தா, எதிர்ல இருக்கறவனுக்கு தான் சமாதி டேய் ரித்தீஷ் இது தெரிந்த கதை தானே.. எதுக்கு இப்படி கேட்டு வாங்கி கட்டிக்குற?’ என்று எழுந்து கொண்டான்