Skip to content

தாரமே தாரமே வா-17

58 / 100 SEO Score

அத்தியாயம்-17

இன்று காலையில் போர்வை இழுத்து முடியவள் சற்றே கண் திறந்த விழியில் ரித்தீஷ் வெளியே படுத்திருக்க கண்டாள்.

இந்த மாமா என்ன ரூமுக்குள் தானே தூங்கும் எதுக்கு வெளியே தூங்குது என்று அருகே வர பெட்ஷிட் இழுக்க அவனோ பனியன் இன்றி உறங்கியவன் எழுந்தவுடன் “என்ன ரியா” என விழிக்க ஐஸ்வர்யாவுக்கு இவர் காலையில் எழுந்ததும் ஷர்ட் மாட்டிப்பாரா? கடவுளே!’

‘என்னை எழுப்பிட்டு பேசாம போறா?’ என சோம்பல் முறிக்க அவன் முருக்கேறிய திண்ம தோள்கள்’ அச்சச்சோ இதுக்கு தானா பேசாம ஓடினா.’ என தலைக்கு மேல கழற்றி வைத்த ஷர்ட் எடுத்து அணிந்தான்.

கிச்சனில் எதையோ தேடி கொண்டு இருக்க கண்டவன் ”என்ன தேடற ரியா என்றான்.

”இல்லை நீ தானே எப்பவும் எனக்கு காபி பிரேக் பாஸ்ட் செய்து தருவ இன்னிக்கு நான் ட்ரை பண்ணலாம்னு பார்த்தேன் இங்க எதுல பால் காய்ச்சுவிங்க” என்று நோட்டமிட பால் குக்கர் எடுத்து நீட்டினான்.

”இது என்ன?” என்றதுக்கு

”இதுல தான் பால் காய்ச்சுவேன்” என்று குளிக்க சென்றான்.

இவளே பாலை கட் செய்து ஊற்றினாள், தீயோ கொழுந்து விட்டு எரிந்தது.

கொஞ்ச நேரத்திலே விசில் சத்தம் ரித்தீஷ் குளிக்கும் இடம் நோக்கி அதீத ஒளியெழுப்ப குளித்த படி இருந்தவன் ‘என்ன இது குக்கர் சத்தம் போடுது இவ ஆப் பண்ணாம என்ன பண்றா?’ குளித்து முடித்தும் சத்தம் அப்படியே இருக்க வேகமாக வந்தவன் பார்க்க குக்கர் சத்தம் கேட்டும் ஐஸ்வர்யா அருகே இருந்து முழித்து கொண்டு இருக்க கண்டவன் அடுப்பை அணைத்தான்.

”குக்கர் தான் சத்தம் போடுதே ஆப் பண்ணாம என்ன ஆராய்சி பண்ற?” என்றான்

”ஐயோ மக்கு மாமா ஒரு சவுண்ட் தானே நிற்காம வருது அம்மா சொல்லி இருக்காங்க 2 சவுண்ட் வரனுமாம்.. இந்த சவுண்டே இன்னும் முடியலை” என்று சொல்ல ரித்தீஷ் கலகலவென வயிற்றை பிடித்து சிரித்து கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ”மாமா… மாமா.. எதுக்கு சிரிக்கிற.. சொல்லிட்டு சிரி…மாமா… டேய் ரித்தீஷ்” என்றதும் சிரிப்பதை நிறுத்தி அவளை மேலும் கீழும் பார்த்தான்.

”அது… இல்லை.. நீங்க கூப்பிட கூப்பிட சிரிச்சிங்களா அதான் பேர் சொல்லி” என்றதும் மீண்டும் சிரித்தவன்

”அக்கா மகளே பால் குக்கருக்கும், ரைஸ் குக்கருக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கியே?” என இரண்டிற்கும் இருக்கும் வித்தியாசத்தை விளக்க ஐஸூ அசடு வழிந்தாள்.

இரு நான் காபி போடறேன் என்று எடுக்க காபி தூள் இல்லாமல் வெறுமென இருந்தது. மினிமம் 10 ரூபிஸ் பாக்கெட் சரமாக வாங்கி தான் வைத்து இருப்பான். இன்று ஒரு பாக்கெட் முழுதும் காலி என்றதும் “காபி பொடி எங்க?” என்றான்.

”மாமா பாலோட அப்பவே ஆட் பண்ணிட்டேன்” என்றதும் பால்குக்கரை எட்டி பார்க்க அங்க இருவருக்கு பதில் ஆறு பேருக்கு காபி இருந்தது.

“இப்படி போட கூடாது பால் நல்லா சுட்டதும் இறக்கிட்டு காபி தூள் கலக்கணும் சர்க்கரை சேர்க்கணும் போதும்… இப்படி ஒரு பாக்கெட் பாலுக்கு இந்த பெரிய காபி தூள் முழுசா கொட்ட கூடாது புரிதா” என்றான். சரியென்றே தலையாட்டினாள்.

இரு கப்பிலும் ஆற்றி ஊற்றி கொடுத்து பருக அதுவோ சர்க்கரை பாகாக இனித்தது. செல்ஃபில் இருந்த சக்கரை டப்பாவில் பாதி காணாமல் போயிருந்தது.

அவனுக்கு அதீத இனிப்பு இருக்க இவ எப்படி குடிக்கிறா?’ என்று பார்க்க அவளோ அதீத இனிப்பை ருசித்தாள்.

”என்ன மாமா நான் போட்ட காபி செம டேஸ்ட்ல” என்று சொல்லி கொள்ள

”காபி என்றாலே கொஞ்சம் கசந்து தான் குடிக்கணும் ரியா இப்படி குளோப் ஜாமூன் மாதிரி செய்ய கூடாது” என்றான்.

”அப்போ நான் செய்த காபி உனக்கு பிடிக்கலை அப்படி தானே?’ என சோகமாய் கேட்டாள்.

”அச்சச்சோ அப்படி இல்லை மா இங்க பாரு சொட்டு கூட மிச்சம் வைக்கலை” என காட்டினான்.

அடுத்து அவள் குளித்து வர கையில் ஒரு பூவை எடுத்து நீட்டினான். கூடவே ஒரு சின்ன வெள்ளி கொலுசு பெட்டியை பரிசாக நீட்டினான்.

”மகளிர் தின வாழ்த்துக்கள் ரியா” என்றான்.

”வாவ் மாமா உனக்கு இப்படி எல்லாம் சார்பிரைஸ் செய்ய தெரியுமா? என பூவை வாங்கி கொண்டவள் பெட்டியை திறக்க ஐ கொலுசு..” என்றே காலில் வைத்து பார்க்க சூப்பர் தாங்க்ஸ் மாமா” என காலில் மாட்டா முயன்றாள்.

அடுத்த நொடி என்ன நினைத்தாளோ ”ரித்…தீஷ்… நீயே மாட்டி விடேன்” என சிறுபிள்ளையாய் முகம் கொண்டு கேட்க வாங்கி மாட்ட சென்றான்.

முட்டியிட்டு அவளின் பாதத்தினை எடுத்து தனது மடியில் வைக்க இவளோ நைட்டி கொஞ்சம் கையில் மேலே தூக்கி பிடித்து கொள்ள அவளின் கால்கள் பால் நிறத்தில் தெரிய கொஞ்சம் தடுமாறியவன் கொலுசை மட்டும் அணிவித்திட கஷ்டபட்டான். அதிலும் அந்த சூடு இவனால் ஏற்பட்ட வடு… அதை கண்டு, என்னவோ இன்று ஏற்ப்பட்ட சூடாக கருதி, அதில் இதழ் பதிக்க சென்றான்.

”எவ்ளோ நேரம் ரித்தீஷ்” என கேட்க சட்டென எழுந்தவன் வெளியே போக இன்னொரு பூவை எடுத்தான்.

”இது யாருக்கு ரித்தீஷ் மாமா?”

”இலாகாக டா” என அவன் சொல்லி படிக்கட்டில் செல்ல இதுவரை இருந்த மகிழ்ச்சி வடிந்தன. இலா இலா இலா.. அவளே விட்டா கூட இந்த மங்குனி மாமா விடாது போல.’ என்று மனதில் திட்ட கீழே “தேங்க்ஸ் ரித்தீஷ்” என்ற இலாவின் குரலில் கடுப்பாகி போனாள்.

“ரித்தீஷ் உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல போறேன் டா” என்று இலா சொல்ல

”என்ன? என்றான்.

”ரிசல்ட் வந்துடுச்சு நீ எல்லாவற்றிலும் பாஸ்… உனக்கு ஒரு இடத்தில ஜாப் கேட்டு இருந்தேன் இந்தா இந்த அட்ரஸ் தான்” என்று கொடுத்து “நாளைக்கு போய் பாரு” என்றே சொல்வது ஐஸூவிற்கு கேட்டது.

இந்த இலா சொல்ற இடம் மட்டும் மாமா வேலைக்கு போச்சு அப்பறம் வேலை வாங்கி கொடுத்த நன்றி கடன் அப்படி இப்படினு அப்பா மாதிரி பேசி அவளை கல்யாணம் பண்ண செய்தாலும் செய்யும்… அவ சொல்ற இடத்துக்கு என் மாமா ஜாப் போக கூடாது… அதுக்கு மாமா ஆட்டோ ஓட்டினாலும் பரவாயில்லை.. எனக்கு என் மாமா வேணும் என்ன செய்யலாம் நாளைக்கு போகுதா அப்போ இருக்கு’ என எண்ணி கொண்டாள்.

சமைக்கின்றேன் என்ற பெயரில் உப்புமா செய்திட முனைய அதுவோ அதிக தண்ணீர் ஊற்றி ரவை குறைவாக போட, கொழ கொழவென வர அதையும் வேறு வழியின்றி சாப்பிட்டு முடித்தான். இவனுக்கு பரிமாறிய பின்னர் சாப்பிட அமர்ந்த ஐஸூவிற்கு தான் செய்தது உணவில்லை, விஷம் என்று புரிந்தது. அப்போ கூட இந்த மாமா எப்படி திண்றுச்சு ஒண்ணும் சொல்லாமல் என அதிசயித்திட, அவனோ அவளை அழைத்து மதியம் அவள் விரும்பும் உணவகம் சென்று பின்னர் மாலையில் கடற்கரை அழைத்து சென்றான்.

அங்கே மணலில் அமர்ந்தாவாறு கடலை ரசிக்க கொஞ்ச நேரத்தில் உனக்கு இன்னிக்கு ஹாப்பியா இருந்துச்சா” என்று கேட்டான்.

”ஹ்ம்ம ரொம்ப ஆனா ஆட்டோக்கு பதிலா பைக்ல வந்திருக்கலாம்” என்று அங்கே ஒரு ஜோடி பைக்கில் கட்டி அணைத்து செல்ல கண்டு சொன்னாள். அவனோ ‘ஹ்ம்’ என்று சுருதி குறைந்தது ரித்தீஷ் அடுத்து பைக் வாங்க வேண்டும்’ என்றான்.

வீட்டுக்கு வந்து ”மாமா இன்னிக்கு நான் சுடறேன்” என பிடிங்கி பாதிக்கு மேலாக கருக்கியதுமாக போனது.

”ரியா விடு இதை சாப்பிட்டு கொள்வேன்”

‘சே ஒரு தோசை கூட என்னால மாமாவுக்கு சுட்டு தர முடியலை.. முதலில் இந்த அம்மாவிடம் போயி தோசை சுட கற்றுக்கணும்’

”ஏன் மாமா நல்லா இல்லைனா விடேன்” என்று தன்னால் அவனுக்கு ஒரு தோசை கூட ஒழுங்காக சுட்டு தர முடியால என வருந்தி சொல்ல

”இல்லை ரியா நீ இதுவரை கிச்சன் பக்கம் கூட போனதில்லை அது எனக்கு தெரியும். நீயே ஆசையா காலையில் இருந்து சமைக்கிற இப்பவும் சுட்டு கொடுக்கற நான் சாப்பிடறது நீ எனக்காக மெனக்கெடுத்து சுட்டதிற்காக தான் மா” என்றதும் அவனை முன்னால் வந்து கட்டி கொண்டவள்.

”தேங்க்ஸ் மாமா ஐ..” என்றவள் அப்படியே நிறுத்தினாள். அவனின் நெஞ்சில் அவள் முகம் பதிய அவளுக்குள் என்னவோ மனம் சொல்ல வேகமாக நகர்ந்தாள். அவனுக்குள் அவளின் தேகம் வாசம் அவன் தேகத்தில் தீண்டி சென்றதும் ஏதோ மந்திரத்தில் திளைக்க அவளின் சுடிதார் ஷாலை கை வளைவிலே இருப்பதை தாமதமாக உணர்ந்தான். அவள் ஷால் அவன் கையில் இருக்க கண்டவன் ரியாவை காண அவளோ என்றுமில்லாமல் போர்வையை முழுதும் போர்த்தி படுத்திருந்தாள்.

அவனுக்குள் இருக்கும் நல்லவனோ இதுவரை போர்வை போர்த்தாமல் உறங்கியவள் இன்று இவ்வாறு செய்ய என்னவோ தானே அணைத்தது போல வருந்தினான்.

ஆஹா தேங்க்ஸ் மாமா ஐ லவ் யூ சொல்ல வந்தேன் நல்ல வேளை இப்போ சொல்லி மாமா இல்லைம்மா நான் இலக்கியாவை விரும்பறேன் சொல்லி இருந்தா என்னவாயிருக்கும்… கொஞ்சம் பொறுமையா இருப்போம்… மாமாவும் அது என்ன உடனே உனக்கு என் மேல காதல் வந்துச்சு என்று ஒரு வார்த்தை கேட்டுச்சு அவ்ளோ தான். நானே இங்க வரும் வரை மாமாவை திட்டிட்டு தானே இருந்தேன். ஆனா இந்த மாமா எனக்காக இவ்ளோ யோசிக்குது பேசுது… நான் லவ் பண்றேனு சொன்னா நிச்சயம் எனக்காக யோசிக்கும்… ஆனா அதுக்கு ஏன் மேல வந்த நிஜமான காதலால் இருக்கணும்’ என்று போர்வைக்குள் எண்ணியபடி மாமா மேல போயி இப்படி சட்டுனு கட்டிக்கிட்டேனே அவர் என்ன ரியாக்சன் கொடுத்து இருப்பார், இல்லை என்ன நிலையில் இருக்கார் என்று போர்வையை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி பார்க்க அங்கே ரித்தீஷ் இல்லை எப்பொழுதும் போல வெளியே மடக்கு கட்டிலில் உறங்க போயிருந்தான். இமை மூடி இருக்க உறங்கிவிட்டான் என்றெண்ணி கொண்டாள்.

மக்கு மாமா ஒரு வயசு பொண்ணு கட்டி பிடிச்சுதே ஏதாவது பீல் பண்ணி நம்மளை பார்க்குதா.’ என்று உறங்க அவனோ மணி ஒன்றை வரை உறங்காமல் புரண்டு புரண்டு படுத்தான். அவனுக்குள் அவளின் வாசம் இன்னும் தன்னிடமே இருக்க செய்வதாய் தோன்ற இரண்டு வரை உறங்காமல் பின்னரே கண்ணயர்ந்தான்.

-தெடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!