Skip to content

தாரமே தாரமே வா-21

58 / 100 SEO Score

 

அத்தியாயம்-21

அன்று இரவே தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் ஐஸ்வர்யா-ரித்திஷ். கூடவே இரவு சிக்கன் கிரவி சப்பாத்தி என்று வைதேகி கொடுத்து விட அதனை எடுத்து கொண்டே வந்து சாப்பிட அமர்ந்தார்கள்.

அவன் கீழே அமர்ந்து பாயில் சாப்பிட அதனை போலவே ஐஸூவும் அவன் அருகே தான் அமர்ந்தாள்.

தன்னவள் தன்னை போலவே மாறிக்கொண்டு வருவதை எண்ணி ரித்தீஷ் மனதுக்குள் இதம் பரவ உண்ணும் பொழுது, சிக்கன் அதிக காரம் எடுக்க இருந்த பொழுதும் சுவையில் மனம் செலுத்தி உண்ணும் பொழுது, ரியாவுக்கு விக்கல் வந்தது.

ரித்தீஷ் நீரை எடுத்து கொடுக்க அதனை குடித்தும் விக்கல் தொடர, ரித்தீஷிற்கு காலையில் அக்கா வீட்டில் சாப்பிடும் பொழுது மாமா கேட்ட விஷயம் நினைவு வர மற்றது யோசிக்காமல் அருகே இருந்த அவளை இழுத்து இதழ் பதிக்க ரியாவின் விக்கல் அதன் பின் சத்தமில்லாமல் போனது.

ரித்தீஷ் அவளிதழை, மெதுவாக விடுவித்தான். அவன் சுவைத்த சிக்கன் காரம் அவளின் உதட்டில் மீண்டும் காரத்தை கூட்டியது.

”ஐயோ…காரம் காரம்” என்று நீரை மீண்டும் பருக ரித்தீஷ் அவளை இதுக்கு மேலும் நெளிய வைக்காமல் விலகி எழுந்தான்.

கை அலம்பி சாவி எடுத்து கொண்டு எங்கோ சென்றான். வரும் பொழுது ஐஸ்கிரீம் வாங்கி வந்து அவளிடம் நீட்டினான்.

”எல்லாரும் அல்வா தானே வாங்கிட்டு வருவாங்க” என்று கூறி நாக்கை கடித்தாள் ஐஸ்வர்யா.

ரித்தீஷோ ”ரியா எங்க இது மாதிரி பேச கத்துக்கற” என்றான்.

”நகைச்சுவை பக்கம்…. அதுல இப்படி கணவன் மனைவி ஜோக் எல்லாம் போட்டு ரம்பம் போடறாங்க.” என அவன் வாங்கி கொடுத்த மாதயிதழை காட்டா அவனோ புன்னகையோடு நழுவினான்.

அவனுக்கு கொடுக்காமல் மொத்தமாக காலி செய்து கொண்டு இருக்க அவனோ இமைக்காமல் அவளை தான் பருகி கொண்டிருந்தான்.

”மாமா இந்தா” என்று அவனுக்கு நீட்ட தலையை மறுப்பாக ஆட்டி நீயே சாப்பிடு என்றதும், முழுதும் காலி செய்து முடித்தவள்

ரித்தீஷ் அவளை முறுவலுடன் கடந்தான்.

”பெரிய புத்தர் என்று நினைப்பு… பொறுமையா தலையை ஆட்டறது இல்லையா சிரிச்சுக்கிட்டே நழுவுறது” என்று முனங்க அது கேட்கும் நிலையில் ரித்தீஷ் இல்லாமல் சாப்பிட்ட தட்டை கழுவி அடுக்கி கொண்டிருந்தான்.

அவளோ அங்கேயிருந்த அவனின் தலையனை போர்வை எடுத்து அவளின் கட்டிலில் வைத்து இருந்தாள்.

போனில் யூ-ட்யூபில் புளியோதரை செய்வது எப்படி? என்று வைத்து சத்தமாக கேட்டு கொண்டிருந்தாள். அவனோ கழுவிய பாத்திரத்தை அடுக்கி வைத்து வந்தவன் மடக்கு கட்டிலை எடுக்க அவனின் தலையணை இல்லை.

அவன் அதனை தேட ஐஸூ குப்புறப்படுத்து போர்வை காலில் இழுத்து விட்டு போனில் செய்முறை பார்ப்பதை கண்டான்.

அவனுக்கு தான் புளியோதரை பிடித்தம் என்றறிந்து இப்படி பார்க்கின்றாள் என புரிந்து கொண்டான். அதே கணம் அவனின் தலையணை அவளின் கட்டில் இருக்க ரியாவை தான் யோசனையோடு பார்த்தான்.

அவன் தன்னை தான் குறுகுறுவென பார்க்க ஓர விழியில் கண்டவள் போனை அணைத்து வைத்து போர்வையில் முகம் புதைத்து வெட்கம் கொண்டாள்.

ரித்தீஷிற்கு அவளின் வெட்கம் கூட புதிதாக தான் தோன்றியது. அதுவும் அவனை பார்த்து வர, இவனுக்கும் என்னவோ போல் உடலின் அணுக்கள் ரத்த ஓட்டம் மகிழ்வை தந்தது.

அவள் சொல்லாமலே அவள் அருகே தான் உறங்க வந்தான். நேற்று போலவே கைகளை தலைக்கு பின் வைத்தவன் இமை மூடினான்.

அவள் கண்கள் மெல்ல மெல்ல போர்வையில் இருந்து எட்டி பார்த்து ரித்தீஷ் அருகே இருக்கின்றான் என்ற சந்தோஷத்தில் குதிக்காத குறை.

”இன்னும் தூங்கலையா நீ” என்றவனின் குரலில்

”இல்… இல்லை… லைட்டா தூக்கம் வருது” என்றாள்.

”எதுக்கு சேலை எல்லாம்? நீ எப்பவும் போல டிரஸ் சேஞ்ச் பண்ணி இருக்கலாமே” என்றான், அவள் பார்க்க ”இல்லை அன்கம்பர்டப்ளா இருக்குமேனு கேட்டேன்” என்றான்.

”டெய்லி அப்படி தானே இருக்கேன்… பரவாயில்ல” என்றாள்.

”ரியா… உன்கிட்ட ஒன்னு கேட்கணும்?” என்று தயங்க வேகமாக எழுந்து அமர்ந்து ”என்ன கேட்கணும்” என்றாள் ஆர்வமாக.

”நாளைக்கு ஏன் ஃப்ரெண்ட் மேரேஜ் நாம போகலாமா?” என்றான்.

”ஹ்ம் போகலாம்”

”இல்லை உனக்கு காலேஜ்யிருக்கு”

”லீவு போடலாம்” என்றாள்.

”இதே போல சேலை கட்டிட்டு வர்றியா? ரொம்ப அழகாயிருக்க” என்று கேட்க

”ஹ்ம்…” என்றவளின் அருகே செல்ல போனவன் சுதாரித்து ”குட் நைட்” என்றான்.

அவனோடு முதல் முறை ஒரு திருமணத்திற்கு கூப்பிடுகின்றான் என்றதிலே அவளுக்கு பாதி உறக்கம் வராமல் மகிழ்ச்சி பொங்க, மீதி உறக்கம் அவனின் அருகாமையில் வராது புரண்டு புரண்டு படுக்க அதிகாலை அவனின் கையில் பூந்தளிராக வந்து சேர்ந்தாள்.

அவனுக்கும் அவளை எப்பொழுது அணைத்தோம் என்றெல்லாம் அறியாது உறங்கி இருந்தவன் எப்பொழுதும் போல விழிப்பு தட்ட அருகே இருந்தவளை கண்டு நெற்றியில் அவனாகவே முத்தமிட்டான்.

முதலில் உடை மாற்றி ரெடியாகி அவளை எழுப்ப, அவளோ அரை மயக்கத்திலும் அவன் மயக்கத்திலும் கிடந்தவள் ”ரித்…திஷ்… பேபி… அழகா இருக்க டா” என்று முனங்கி, தலையணையை இன்னும் உறங்க தோதுவாக தலைக்கு வைக்க, அவன் தன்னை தான் பார்க்கின்றான் என்று மீண்டும் ரித்திஷை பார்த்தாள்.

”நேரமாச்சு ரியா மணி எட்டு… பத்து மணிக்கு ஆவது கல்யாணத்துக்கு போகணும் மா” என்றதும், துள்ளி எழுந்தவள் ஹ்ம் டூ மினிட்ஸ்ல வந்துடறேன்” என குளிக்க சென்றாள்.

கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி ”மாமா நீ வெளிய போ” என்றவளின் பேச்சில் குழம்பியவன் தான் மட்டும் போக சொல்கின்றாளோ என்று

”இல்லை ம்மா நீயும் வர்றேனு சொன்ன?” என்று அதே இடத்தில் நின்றான்.

”மாமா சேலை மாற்றணும் போ” என்றதும் விழுந்தடித்து வெளியே வந்தான்.

உப்ஸ் இவ வேற நம்மளை வெட்க பட வைப்பா போலையே..” என்று ரோட்டில் பார்க்க அங்கே இலா மஸ்தானுடன் முதல் முறையாக சண்முகம் சம்மதத்துடன் கிளம்பி கொண்டிருந்தாள். ஆம் இவர்களின் தோழன் சந்திரனுக்கு தான் திருமணம்.

ஐஸ்வர்யா சேலை கட்டி வர அசந்து பார்த்தவன் ஆட்டோவில் அமர வண்டியை ஓட்டினான். நேராக திருமணம் சென்று நிற்க அங்கே இலா ரியாவை வரவேற்று உட்கார வைத்தாள்.

ரியா மனதில் இவ வேற வந்து இருக்காளா… என்று மனதில் ஓடி கொண்டிருந்தது.

ரித்திஷ் உணவு உண்ண அழைக்க ரியா எழுந்துகொள்ள ”நீ இலா” என்றான்.

அவளோ ”டேய் நீ லேட்…நாங்க வந்ததும் சாப்பிட்டோம்” என்றாள்.

“அப்போ வா ரியா” என அழைத்து சென்றான்.

இவர்கள் சாப்பிட்டு அங்கே வர, இலா மஸ்தான் அந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் தனியாக போட்டோ எடுத்து முடித்தனர்.

ரித்தீஷ் வந்து அழைக்க ”இல்லை டா நாங்க எடுத்தாச்சு நீ தனியா போ அதான் ஜோடி இருக்குல” என்று இலா கண் அடிக்க

”வர வர என்னை அவாய்ட் பண்ற இலா நல்லதுக்கு இல்லை” என்று ரித்தீஷ் ரியாவின் கையை பற்றி அழைத்து சென்றான்.

இதே போல ஒரு மனமேடையில் தான் அவன் கரம் பற்றினோம் ஆனால் அன்று அதற்கான மொத்த உணர்வும் இன்று வர, ரித்தீஷ் கைகளை அவளும் அழுத்தப்பற்றினாள்.

போட்டோ எடுக்கும் பொழுது ரித்திஷின் கை அவளின் தோளில் விழ சந்திரன் அவர்களை தனியாக ஒரு ஸ்டீல் எடுக்க சொன்னான்.

ரித்தீஷின் கை அந்த நேரம் ரியாவின் இடையில் பதிந்தது.

நொடியில் நிகழ்ந்த இந்த மாறுதல்கள் ரியாவும் அறியாமல் இல்லை.

ரித்தீஷோ ”சந்திரன் எனக்கு இந்த ஸ்டீல் உடனே கிடைக்குமா டா” என்றான்.

”பரிதி அண்ணா தான் போட்டோ எடுக்கறார் கேளு.. உனக்கு மட்டும்னா தனியா உடனே கொடுப்பார் டா” என்றான்.

போனில் அவரிடம் பேசிட அவரும் உடனே போட்டு தருவதாக சொன்னார்.

மஸ்தான் கீழே ஆட்டோ பார்க்கிங்கில் இருந்து மண்டப வாசலில் எடுத்து வர செல்ல, இலாவும் படிக்கட்டில் மெல்ல நடந்தாள்.

ரித்தீஷ் ஐஸூ சேர்ந்து வர ரித்தீஷ் இலாவிடம் தன்னவளை நிறுத்தி, நீங்க இரண்டு பேரும் வாங்க நான் கீழே ஆட்டோ எடுத்துட்டு வர்றேன்” என்று கிளம்பினான்.

ஐசு வேகமாக “மாமா என்னையும் கூட்டிட்டு போ” என்றாள்.

”இலாவை கூட்டிட்டு வா” என சென்றான். ஐஸ்வர்யாவுக்கு ‘இலா இலா மறுபடியும் இப்ப தான் இவ நினைப்பு இல்லாமல் வந்தேன்’ என்று பல்லை கடிக்க இலாவோ இன்னும் அதே படிக்கட்டில் இருக்க மனதில் திரும்பியபடி ‘மகாராணி இன்னும் அங்க தான் இருக்கா என்றெண்ணி திரும்ப இலா வந்து சேர சரியாக இருந்தது.

“ஐஸ்வர்யா ரித்திஷை உன்னையே சுற்ற வைக்கிற போல” என்று சாதாரணமாக பேசி அவள் கையை பற்ற ரியாவோ அவள் கைகளை பிடிக்க மறுத்து உதறினாள்.

இலா இவளின் கை பற்றுதலில் வேறு எதையும் பிடிக்காமல் போக, மாடியில் சற்று தடுமாறி கீழே விழுந்தாள்.

ஐசு இதை எதிர்பார்க்கவில்லை… நல்ல வேலை படிக்கட்டு மூன்றே மூன்று என்றிருக்க நிம்மதி அடைந்து ஐஸ்வர்யா ஓடி வந்து தூக்க முயல, ரித்தீஷ் ரியா கன்னத்தில் ஓங்கி ஒரறை விட்டான்.

”மாமா…” என புரியாமல் தான் பார்த்தாள். அவனின் ரௌத்திரம் இதுவரை அவள் கண்டதே இல்லை….

”டேய் ஈஸ்வர் அவளை எதுக்கு அடிச்ச நான் தான் சரியாக பார்க்காம வந்தேன்” என்று இலா சொல்ல, மஸ்தானும் அதே நேரம் வந்து தூக்கினான். அப்பொழுது தான் ஐஸ்வர்யா ஒன்றை கவனித்தாள். இலா கொஞ்சம் சாய்ந்து நடக்க கண்டாள். இதுவரை அவள் கருத்தில் அது பதியாமல் போனது அவளின் விதி.

இலா மஸ்தானுடன் போவதை அதுவும் உரிமையாக தோளில் சாய்ந்து செல்வதும் அவனின் ஆட்டோவில் அழைத்து செல்வதும் கண்டாள். ரித்தீஷ் இழுத்த இழுப்பில் ரியா கை தனியாக வராதது அதிசயமே… அவளை தனது ஆட்டோவில் தள்ளி வேகமாக வீட்டுக்கு வந்தான்.

மடமடவென மாடிக்கு அவளை இழுத்து செல்ல ரியாவோ ”மாமா கை வலிக்குது விடுங்க” என்று சொல்ல சொல்ல அறைக்குள் தள்ளி நிறுத்தி கத்த ஆரம்பித்தான்.

”மாமா எதுக்கு இப்படி பண்றிங்க” என்றாள்.

”அறைஞ்சேன் பல்லு சிதறிடும்… எதுக்கு டி அவளை உதறி விட்ட?” என்றான்.

”எனக்கு என் கையை பிடிக்க வந்தாங்க அது பிடிக்கலை அதான்” என்று சொல்ல கன்னத்தில் மற்றொரு அறை மட்டுமே விழுந்தது.

”மாமா வலிக்குது அடிக்காதீங்க.” என்றே ஐஸ்வர்யா குரல் அவனின் செவிக்கு கேட்கவே இல்லை.

”இப்படி தானே அவளுக்கும் வலிச்சிருக்கும்… அவளும் பொண்ணு தானே.. எதுக்கு அப்படி பண்ண?” என்று அவளது நீண்ட சிகையை கொத்தாக பிடித்து கேட்டான்.

”நான் என்ன பண்ணேன்… எனக்கு புரியவே இல்லை” என்று வலியில் துடித்தாள்.

”உன் பணதிமிர் நீ என்ன செய்தனு கூட தெரிலை அப்படி தானே? அவள் ஹேண்ட்டிகேப்னு உனக்கு தெரியாது அவளை எதுக்கு தள்ளி விட்ட?” என்றான்.

”அவங்க ஹேண்ட்டிகேப்னு எனக்கு தெரியாது மாமா” என்றாள்.

”நீ தள்ளி விட்டேன் சாரினு சொன்னாலும் நம்பியிருப்பேன் ஆனா அவ ஹேண்ட்டிகேப்னு தெரியாது சொன்ன பாரு உன்னை” என்று கழுத்தை நெறித்தான்.

”மாமா நிஜமா தெரியாது.. இப்போ தான் அந்த நிமிஷம் தான் தெரியும் மூச்சு முட்டுது” என்றாள்.

”நேற்று வரை நீ இதை சொல்லி இருந்த, அப்படியே நம்பியிருப்பேன் டி.. ஏன்னா நீ குழந்தை பச்சை மண்ணுனு. ஆனா நீ அப்படியில்லை பண திமிர்… அதுல அப்டி பண்ற…”

”நான் ஒன்னும் திமிரா நடக்கலை… நீ தான் எப்ப பாரு இலா இலானு பேசிட்டே இருக்க அந்த கோவம் எனக்கு இருந்தது. அப்போ கூட உன் மனசை மாற்றிடலாம் தான் இருந்தேன்” என்றாள் அழுகையோடு.

”பார்த்தியா அப்ப அவ மேல கோபமிருக்கு? அப்போ வேணுமின்னே தானே கையை உதறின?”

”ஐயோ இல்லை மாமா”

”நீ எவ்ளோ பொய் சொல்வேனு இப்போ புரியுது டி” என்றான்.

”மாமா நான் பொய் சொல்லலை… நிஜமா என் காதல் மேல சத்தியமா” என்று அவனை அணைத்து சொல்ல அவளை தள்ளி விட்டவன்

”சீ கிட்ட வாராதே.. அருவருப்பாயிருக்கு.. என் ரியா இப்படி செய்வா என்று கனவுல கூட நினைக்கலை… என்ன சொன்ன காதலா.? எப்பயிருந்து டி காதல்? எனக்கு ஜாப் கிடைக்க போகுது, படிச்சவன் நீட் ஷர்ட், ஷூ அப்படி பார்த்து முக அழகில் வந்தது தானே?” என்று பேச அவனின் பேச்சில் ‘இல்லை’ என தலை அசைத்தாள்.

அவன் அதை பொருட்படுத்தவில்லை ”நேத்தே யோசிச்சருக்கணும். நீ பேசின பேச்சு எல்லாம் புதுசாயிருக்கு, நீ செய்த செயல் அதை விட புதுசா…சே அப்பவே 30 வருஷமா ஒரே இடத்தில இருந்தப்ப வாராத லவ், உனக்கு என் மேல எப்படி திடீர்னு வந்துச்சு” என்றான்.

”மாமா என்னை என்ன வேணுமின்னா குறை சொல்லு, என் காதலை குறை சொல்லாதே” என்றாள் ஆவேசமாய், ஒரு வித பிடிவாத குரலில்…

அவனோ ”சொல்வேன் டி, அப்படி தான் சொல்வேன் உன்னோடது காதல் இல்லை வெறும் ஈர்ப்பு… உடல் கவர்ச்சி தான்” என்றான்.

 

அவள் “மாமா ப்ளீஸ்.. அப்படி பேசாதே” என்று அவனை மீண்டும் அணைக்க அவன் மீண்டும் தள்ளி விட்டு ஒரு அறை விட்டான்.

அவள் கதவுப்பக்கம் போய விழுந்தாள். அவளை இருவர் தொட்டு தூக்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!