Skip to content

தாரமே தாரமே வா-22

58 / 100 SEO Score

அத்தியாயம்-22

 

ஐஸூ விழுந்த வேகத்தில் இலா மஸ்தான் இரு கரங்கள் அவளை தாங்கினார்கள்.

”நான் சொல்லலை… இவன் போற வேகமே சரியில்லை…. அவளை ஏதாவது செய்ய போறானு” என மஸ்தானிடம் இலாஉரைத்தாள்.

”நீ படிச்சவ சட்டுனு புரிஞ்சுகிட்ட நான் அப்படியில்லையே” என மஸ்தான் ஐஸூவை கையை பிடித்து எழுப்பி ”என்னடா இது ஈஸ்வர் இப்படியா அடிப்ப?” என்றாள் இலா.

”என்னடா இது மாட்டை அடிச்ச மாதிரி அடிச்சு வச்சியிருக்க மஸ்தான் தண்ணீர் எடு” என்று தண்ணீர் எடுத்து கொடுக்க குடித்தாள் ஐசு.

கட்டிலில் அமர வைக்க அமர்ந்தவள் இலாவிடம்

”ஐ அம் சாரி நான் கையை உதறி தான் விட்டேன் ஆனா அது பணதிமிரில் இல்லை…. இங்க வந்ததில் இருந்து ரித்தீஷ் கூட நீங்க பேசறது எல்லாம் பார்த்து எனக்கு பொறாமை வந்துச்சு… அதோட கோவத்துல தான் கையை உதறினேன்… ஆனா நீங்க ஹேண்ட்டிகேப் என்று எனக்கு சத்தியமா தெரியாது. நான் கவனிக்கலை…” என்று ஐசு திரும்ப திரும்ப உரைத்தாள்.

”மறுபடியும் மறுபடியும் பொய் சொல்ற ஒரே வீட்டில் இருக்கற தெரியாதா? பொய் பொய் உடம்பு முழுக்க பொய் திமிரு” என்று ரித்தீஷ் ஆவேசமாய் வந்தான். ஐசு அழுவதை தவிர எதுவும் செய்யா முடியாது அவனிடம் எப்படி உணர்த்த வழி அறியாது இருந்தாள்.

மஸ்தான் தான் ”ஏன் டா லீவுலா இலா இரண்டு மாசம் டிராவேல்ஸ் ஆஃபிஸ்ல தான் இருந்தா… அதுல ஒரு மாசம் நானும் இலாவை அப்படி தானே நினைச்சேன். இத்தனைக்கு அவள்கிட்ட தானே சாவி வாங்குவேன் பணம் எல்லாம் கொடுப்பேன். ஆம்பளை நானே நிற்குறேன் இவ உட்கார்ந்து

இருக்கா என்றே உன்னிடம் சொல்லிருக்கேன்.. நினைவு இல்லையா டா” என மஸ்தான் ஆதரவாய் பேசினான்.

இலா ரித்திஷிடம் ”டேய் நான் நார்மல் சுடிதார் போட்டா எல்லாம் காலை பார்த்து பரிதாபப்படறாங்கனு தானே ஃபுல் ஸ்கர்ட் குர்தா போடறேன்… ஃபுல் ஸ்கர்ட் என்றதும் கால் எல்லாம் வெளிய தெரியாதுடா பாவம்… அவள்… அவள் பார்த்துயிருக்க வாய்ப்பு இல்லை டா” என்றதும் ரித்தீஷ் மனம் குரங்காய் தாவியது.

”இன்னும் என்னடா ஈஸ்வர்?” என்றாள் இலா.

”இவ எதுக்கு நான் உன்கூட பழகினா உன் மேல கோவமா இருக்கணும்?” என்று ஐஸூவை பார்த்து கேட்டான்.

”நீங்க அவரை விரும்பறதா தப்பா நினைச்சுட்டேன்… இவங்க கை மணிக்கட்டை அறுத்ததுக்கு, எல்லாரும் கல்யாணம் ஆனா பையன் மேல இன்னுமா காதல்? அப்படினு பேசிட்டு போனாங்க” என்றாள்.

இலாவோ மஸ்தானை இழுத்து, ”இந்த முகர கட்டை தான் நான் விரும்பினேன்… இவனுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு… அதை சொல்லி இருப்பாங்கமா.. ரித்தீஷ் என்னை விட ஒரு வருஷம் சின்ன பையன் டா… அவன் எனக்கு தம்பி டா… அவன் இலா சொல்லியே பழகிட்டான்” என ஐஸூ தலையை வருடி விட கொஞ்சம் கொஞ்சமாக அழுகை குறைந்தது. ரித்தீஷ் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்ற உண்மை புரிய.

அதன் பின் ரித்திஷை பார்க்க அவனின் முகம் இன்னும் அதே ரௌத்திர முகமே அவன் தனது காதலை அல்லவா சந்தேகித்து விட்டான் என்றே புரிந்தது

இது இலா பற்றிய பிரச்சனை என்றால் இந்த நிமிடமே அவள் ரித்திஷை சென்று அணைத்திருப்பாள். ஆனால் இவன் பேசிய பேச்சு அப்படி அல்ல என்று அந்த வளர்ந்த குழந்தைக்கு தெளிவாகவே புரிந்து போனதே…

ரித்திஷிற்கு என்ன பதில் அவள் சொன்னாலும் அது நாடகமாகவே தோன்றியது. அது இலா கையை பிடிக்கும் வேளையில் அவள் முகம் சுழிப்புடன் உதறியாதே அவனுக்குள் தோன்றி மறைந்தது. அவனுக்கு மனம் சாதாரண மனிதர்களை அவள் அவமதித்தாலுமே பொறுத்து போயிருக்க மாட்டான் அதிலும் இலா ஒரு மாற்று திறனாளி என அவன் மனம் முரண்டியது.

தான் படிக்க தொழில் புரிய ஒரு ஏணியாக அவள் உதவியது தான் காரணமாக கூட இருக்கலாம்.. அவள் தன்னை விட வயதில் பெரியவள் என்றாலும் தனது கருத்தும் ஏற்று இருக்கின்றாள். சில நேரம் ஏதேனும் என்றால் அவளிடம் தான் சொல்லவே செய்வான். உயிர் தோழன் அவனுக்கு இருப்பதை விட இவளே நல்ல தோழி தோழியாக இருந்தமையாகவும் இருக்கும். அதோடு வைதேகி தணிகாசலம் தவிர்த்து இலா வீட்டில் தான் அவன் உரிமையோடு இருந்தது.

தன்னிலும் கீழே இருக்கும் மஸ்தான் அதுவும் மதம் பார்க்காது அவனுக்காக உயிர் விடும் அளவுக்கு சென்றவள் மதிப்பும் இருந்தது. அவளை போயி ஐஸ்வர்யா முகம் திருப்பி உதற செய்தது. அவனுக்குள் இன்னும் அழியாமல் இருக்க செய்தது.

அதனாலே இந்த கொஞ்ச காலத்தில் முளைத்த காதல் அவன் பார்வைக்கு காமத்தில் தோன்றியதாய் போனது தான் வருத்ததின் உச்சம்.

ஐஸ்வர்யா படிப்பது பிரைவேட் கல்லூரி என்றோ, அங்கே அளவுக்கு அதிகமாக பேச்சும் செயலும் கண்டிருக்கின்றாள் என்பதோ அவனுக்கு அப்பொழுது புரியவில்லை. இந்த காலத்து பிள்ளைகள் தெரிந்து கொள்ளும் விஷயம் தெரிந்து கொள்ளாத விஷ்யம் என்றில்லை, எல்லாமே அறிந்து தான் வைத்திருக்கின்றார் என்பதை அறியாமல்…. அவள் பேசுவது எல்லாமே அன்று குழந்தை பேச்சு என்றெண்ணி சிரிப்புடன் கடந்திட செய்தவனுக்கு இன்றோ அது எல்லாமே அவனுக்குள் எரிச்சலில் தவறாக பேசிட வைத்தது.

இலா மஸ்தான் என்ன என்னவோ பேசி புரிய வைத்து விளையாட்டாக மற்ற பேச்சிலும் சிரிக்க வைக்க ஐஸ்வர்யா சிரித்ததும் தான் இலா நிம்மதி உணர்வு பெற்றாள்.

இருவரும் கிளம்பி செல்ல இலா அவள் வீட்டுக்கு நுழைந்தாள். மஸ்தான் அவனின் வீட்டுக்கு செல்ல இருவரும் போன பின் ஐசு மெல்ல மெல்ல ரித்தீஷ் தோளில் கையை வைக்க, திரும்பியவன் பார்வையில், அவளோ தொடாமல் கண்களை உருட்டினாள்.

”என்னை தொட வந்த மறுபடியும் அடி தான் கிடைக்கும்” என்றதும் கையை பின்னுக்குள் இழுத்து கொண்டாள்.

தனது உடையை மாற்றினான். முன்பு எப்படி உடுத்தினானோ அதே போல உடுத்தி எண்ணெய் வைத்து காக்கி சட்டையை மேலே போட்டு கொண்டு, வார் வைத்த செருப்பை மாற்றி கிளம்பினான்.

ஐஸூ இதுவரை இங்கே ராணியாக தான் இருந்தாள். ஆனால் ஒரே நொடியில் தான் வேசியை விட கேவலமாக தாழ்ந்து போனது போல தோன்றியது.

வருகின்ற கண்ணீரை துடைத்து ரித்தீஷ் மாமா வரும் அதுக்கிட்ட மறுபடியும் தெளிவா பேசி புரியவைக்கலாம் என கண்ணீரை துடைத்தவள் அவளாக காலையில் கிளம்பிய பொழுது எறிந்த துணி மணிகளை அடுக்கி வைத்தாள். அவள் பாதி அடுக்கி வைத்ததும் ரித்தீஷ் வந்தவன் தோசை சுட்டு கொண்டு தரையில் அமர்ந்தான் வேகமாக உண்டவன் எழ போக,

”மாமா எதுக்கு டிரஸ் மாத்திட்ட…” என சாதாரணமாக பேச ஆரம்பிக்க

”நீ வேணுமின்ன சேலை கட்டி என்னை மயக்கலாம்னு யோசிச்சு கட்டி இருக்கலாம் ஆனா நான் என்னோட நிஜத்திலே இருக்கேன் எனக்கு யாரையும் மயக்கும் அவசியம் இல்லை…” என்று முகத்தில் அடித்தார் போல சொன்னான்.

”மாமா நான் சேலை கட்ட கத்துக்கணுமே என்று தான்… அம்மாகிட்ட…” என முடிப்பதற்குள்

”போதும் அதையும் கேட்டுட்டேன்… நீ அக்காகிட்ட பேசியதை…” என்று எழுந்து செல்ல,

”மாமா எனக்கு தோசை?” என்று கேட்டாள்.

”நீ தான் ரொம்ப தெளிவாச்சே… யூட்டுப் பார்த்து சுட்டுக்கோ… என்னால மாவு சட்னி மட்டும் தான் வைக்க முடியும்” என வெளியேறினான்.

ஐஸூவுக்கு மொத்த சத்தும் வடிந்தது.

உணவு சமைக்க மாமாவே செய்வதால் தான் ஆடையாவது தானாக கட்ட கற்று கொள்வோம் இதற்காக மகாலட்சுமியை கூப்பிடும் படி ஆகிவிடும் என்றும், அவர்கள் சேலை கட்ட சொல்லி கொடுத்தால் அவர்கள் முன் வேறு சங்கடமாக நிற்க வேண்டுமே என்று தான் நேற்றே கற்று கொண்டு வந்தது. அதுவும் தற்பொழுது அவனின் பார்வைக்கு விளையாட்டாய் சொல்லிய வார்த்தைகள் விஷமாய் போனதாக பட, பேதை அவள் உள்ளுக்குள் உடைந்தே போனாள்.

நேரம் கூட ரித்தீஷ் போல எங்கு இலாவும் பேச்சுக்கு சொல்லி விட்டு போனார்களோ? தன்னை உண்மையிலே அவர்கள் மன்னிக்கவில்லையோ என தோன்ற வேகமாக கீழே சென்றாள்.

தோசை ஊற்றி அப்பொழுது தான் உண்டு முடித்த இலா ”ஹேய் வா ஐஸூ. நீயா இன்னிக்கு தான் வர…உட்கார்… உன் ரூம் அளவுக்கு எல்லாம் ஸ்பெஷல் இருக்காது மா” என்றாள்.

”மா… ஐஸூக்கு…” என கூப்பிட்டு ‘சே அம்மா அப்பா கூட கடைக்கு மாளிகை பொருள் வாங்க போயிருக்காங்க இரு நான் ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்” என்றே எழ,

”இல்லை அக்கா வேணாம்… நீங்க நிஜமாவே என்னை மன்னிச்சுட்டிங்களா? இல்லை மாமாவுக்காக சும்மா என்னை ஆறுதல்படுத்த வந்தீங்களா? நான் நிஜமாவே நீங்க இப்படி என்று பார்க்கலை… நான் என் காதல் மேல சத்தியம் சொன்னதுக்கு மாமா என் காதலே ட்ரூ இல்லைனு சொல்லிடுச்சு… நான் ஏதோ அதை அதை…” என விக்கி விக்கி அழுதாள்.

”நான் அழகை பார்த்து விரும்பறேனா….? என்னை பார்த்தா அப்படியா இருக்கு…” என்று விம்மி அழுதவளுக்கு எதிரில் இலா ரித்தீஷ் பேசியது ஓரளவு புரிந்தே போனது.

தான் எப்படி ரித்திஷிடம் சிறு வயதில் நடந்தாள். நடுவில் அவன் ஏன் படிக்கவில்லை என்று சொன்னான் அதற்கு அவளுக்கு கோவம் வந்து, தந்தை சொல்லிய காரணத்தால் ரித்தீஷ் மேலே கொஞ்சம் கோவம் இருந்தது. அவனை மணக்க முதலில் மறுத்ததும் பின்னர் அவனை கண்டு உங்களால் தான் பொறாமை வந்ததும் சொல்லி சிரித்தாள். இரு தினமாக ரித்தீஷ் மாமாவிடம் காதலை சொல்ல எண்ணியதாக கூறினாள்.

”மாமா மட்டும் இன்னிக்கு அடிக்காமல் இருந்தா இன்னிக்கோ நாளைக்கோ காதலை சொல்ல நினைத்தேன் அக்கா. ஆனா மாமா என்னவோ எல்லாம் சொல்லிடுச்சு” என விசும்பினாள். நேரம் போக இரண்டு மணி நேரம் ஆக வீட்டுக்கு போ அவன் இன்னிக்கு லீவு தான் போட்டிருப்பான்… இன்னிக்கே லவ் சொல்லு” என்றாள் இலா.

”மாட்டேன்… எனக்கு அங்க போகவே பயமா இருக்கு மாமா ஏதாவது பேசினா அடிச்சுடுமோனு. என் காதலை கொச்சப்படுதிடுச்சு போக மாட்டேன் உங்க கூடவே இருக்கேன்….” என குழந்தையாய் சொல்ல, அவளின் பால் நிற முகத்தில் ரித்திஷின் கை தடம் இல்லாத இடமே இல்லை என்பது போல இருந்தது.

சாது மாதிரி இருந்து என்ன கோவம் அவனுக்கு என இலா அவனிடம் பேசணும் ஆனா நாளைக்கு பார்போம் இன்றே வேணாமென முடிவெடுத்தாள்.

”இலா….. இலா…” என ரித்தீஷ் குரல் வீட்டில் அவ்வறை அதிர ஒலித்தது.

”இலா அவளை காணோம் இலா… 2 ஹவர்ஸ்ஸா தேடறேன்… காணோம்… அவ.. அவ.. அங்கயும் போகலை இலா… பரத்கிட்ட இன்டைரக்ட் ஆஹ் கேட்டுட்டேன்… எங்க போனானு தெரிலை” என்று ரித்தீஷ் துடித்தான்.

”இது நீ கண் மண் தெரியாம அடிச்சியே அப்போ யோசிச்சு இருக்கணும்… அடிவாங்காமல் வளர்ந்த குழந்தை… உன்னையே மாமா மாமா னு சின்ன வயசில் இருந்து கழுத்தை சுற்றே வளர்ந்தவ… ஏதோ தெரியாம செய்த தவறை நீ பெருசாக்கி அந்த அடி அடிச்சுருக்க… ஏன் டா அவ கலருக்கு தக்காளி மாதிரி இருந்தா…. பண்றது எல்லாம் பண்ணிட்டு அவ லவ் பண்றேன் சொல்லியும் வேற என்னவோ சொன்னியாமே…” என்றே இலா இடையில் கை வைத்து கேட்டாள்.

”அவ காணோம் பதறி வந்திருக்கேன் நீ…… நீ.. பேசறது பார்த்தா அவயிங்க இருக்காளா?” என்று எட்டி பார்த்தான்.

”அவ வந்தா கூட்டிட்டு போ இல்லையா… விட்டுடு…. என் தங்கையா இங்கயே இருக்கட்டும்… உன் மேல கேஸ் கொடுக்க சொல்லணும்” என அவள் இங்கே தான் இருக்கின்றாள் என்றறிந்து இலாவை தாண்டி உள்ளே ஆராய்ந்தான்.

”ரியா வா…” என கூப்பிட…. அவளோ மாட்டேன் என்று தலை அசைத்தாள்.

”ரியா பிடிவாதம் பிடிக்காத….” என்றான்.

”நான் வந்து உங்களிடம் அடிவாங்க வா? இங்கயே இருக்கேன்…” என அழுதபடி கூறினாள்.

”இனி அடிக்க மாட்டேன் வா” என்றவன் அவளின் அழுகை அவனுள் என்னவோ செய்ய ”ரியா…. நான் செய்தது தப்பு தான்.” என்றதும் அவள் மேலே அவர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!