Skip to content

தாரமே தாரமே வா-29

58 / 100 SEO Score

அத்தியாயம்-29

மூன்று நாட்கள் கூட சென்று இருக்காது.. ஐஸூ இப்பொழுது எல்லாம் ரித்தீஷ் வரவையும் அவனின் அன்பையும் அதிகமாக எதிர் பார்க்கின்றாள் என்று தணிகாசலமே அடுத்த இரு தினத்தில அவர்கள் வீட்டுக்கே அனுப்ப எண்ணினார்.

அன்று தணிகாசலம் கார் பழுதாக அமைய அந்த வழியில் வந்த ரித்தீஷ் தான் அவரை ஏற்றி கொண்டு வீட்டுக்கு வர அன்றும் அங்கே தங்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது.

இரவு பரத் தணிகாசலம் ரித்தீஷ் உண்ண எழும் நேரம் ஐஸூ அவளை அறியாமல் ரித்தீஷ் சாப்பிட்ட தட்டை எடுத்து செல்ல, தணிகாசலம் மகளின் முழு மாற்றம் அறிந்து மகிழ்ந்துக்கொண்டார்.

யாரும் அறியாது கண்கள் கலங்கிய சுவடு தெரியாது துடைத்து கொண்டார்.

ஐஸூ தட்டு வைத்து திரும்ப இதை கவனித்தாலும் தந்தை பேசியது மனதில் தோன்ற அவளுக்கு கோவமில்லை என்றாலும் அவரிடம் பேசாமல் இருந்தாள்.

இரவு அவளின் அறையில் பரத்திற்கும் சேர்த்து பாடம் சொல்லி கொடுக்க ரியா தான் மனதிற்குள்ளே ரித்திஷை திட்டி தீர்த்தாள்.

‘சரியான மங்குனி மாமா.’ என்று முனங்கியபடி அவள் படிக்க செய்தாலும் தன்னோடு பரத் படிக்க கொஞ்சம் சுறுசுறுப்போடு தான் படித்தாள்.

சந்தேகம் கேட்கும் பொழுது ரித்திஷை ஒட்டி அமர, ரித்தீஷ் தானாக அவளிடம் தள்ளி உட்கார, பரத்திற்கு ரித்தீஷ் மாமா மேல கொஞ்சம் மரியாதை கூடியது.

அவனும் அடுத்த வருடம் கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும் காளை தானே.

இரவு அவுட் ஹவுஸ் சாவி எடுத்து செல்ல கண்ட ஐஸூ அடப்பாவி அப்போ இங்க நீ தங்கலையா என்று பார்த்தாள்.

அறைக்குள் படுத்துக்கொண்டு எல்லோரும் தூங்க ஐஸூவோ மெல்ல மெல்ல ரித்தீஷ் கூறும் வெள்ளை பூனை போல் நடந்து வந்தாள்.

கதவைத்திறந்து அவுட்ஹவுஸ் நோக்கி சென்றவள் கால் அங்கே அவுட்ஹவுஸ் திண்டியில் ரித்தீஷ் உட்கார்ந்து போனில் ”தூங்கிட்டியா ரியா” என்று வாட்ஸ்ஆப்-இல் அனுப்ப அவளோ பின்னாடி இருந்து

”இல்லை…….” என்றதும் திரும்பியவன் ரியா அங்கே நிற்க

”தூங்காம இங்க என்ன பண்ற? பூனை மாதிரி மெதுவா வந்திருக்க?”

”ஹ்ம்… நீ தனே சொன்ன… கொலுசு வளையல் சத்தம் கேட்டு அதான் மெல்ல நடந்தேன்.” என்று அவன் மூக்கை ஆட்டினாள்.

”ஆஹ்…” என்று அலறியவன் ”மாமா பார்த்தார் அவ்ளோ தான்.. அக்கா பார்த்தாங்க உன் காலில் சூடு விழும்”

”விழும் விழும்… அவங்க சூடு வச்சதுக்கு தான் அப்பா அம்மாவுக்கு நாலு அறை விட்டார். அதோட நான் ஒன்னும் எங்க அம்மாவோட தம்பி அவுட்ஹவுஸ்ல இருக்க அவரை சைட் அடிக்க வரலை. என்னோட புருஷன் ரித்தீஸ்வரனை பார்க்க வந்திருக்கேன். இங்க பாரு நீ கட்டின தாலி” என்று அவனின் மடியில் உட்கார்ந்து கழுத்தில் மாலையாய் கரம் கோர்த்தாள்.

”ரியா உன் ரூம்ல போய் தூங்கு.” என்றான்.

” நீ இப்படி வெளியே அவுட்ஹவுஸ்ல படுக்க பார்த்து எனக்கு கஷ்டமாயிருக்கு… நீ ஏன் வீட்டுக்குள்ள தூங்கலை…” என்று கேட்டாள்.

”பழகிடுச்சு டா… இங்க இருக்கும் பொழுது இங்க தூங்கி வானத்தில வேடிக்கை பார்த்து பழக்கிடுச்சு” என்றான்

”மாமா நானும் இங்கே இருக்கவா?” என்று கேட்க,

”அம்மா தாயே நீ ரூமுக்கு போ… எனக்கு தூக்கம் வருது”

”பொய் என்னை அனுப்ப தூக்கம் வருது சொல்ற”

”ஆமா போ” என ரித்தீஷ் சொல்லவும், ஐஸூ முகம் தூக்கி வைத்து கொள்ள

”போ மா….” என அவனின் பார்வை சுற்றியே இருக்க கண்டவள் அவன் அக்கா மாமா வந்திடுவார்கள் பயப்படுவதை ரசித்தாள். அதிகம் அவனை குடைச்சல் தராமல்,

”ஒகே போறேன் ஆனா தூக்கிட்டு போ” என்று பிடிவாத குரலில் சொல்ல

”ரியா விளையாடாதே அர்த்த ராத்திரியில”

”தூக்கிட்டு போய் ரூமில் வீடு ஒழுங்கா தூங்கறேன் இல்லை இங்க தான் நைட் முழுக்க இருப்பேன்” என தோதுவாக அமர்ந்தாள்.

ரித்தீஷ் இவள் இன்று முடிவோட இருக்கா என்றே சுற்றும் முற்றும் பார்த்தவன் தூக்கினான்.

”மாமா டூ டைம்ஸ், நீ தூக்கி இருக்க தூங்கிட்டு இருந்தேன்… இப்போ தான் ஹாப்பியா இருக்கு…” என்றாள்.

”எனக்கு இங்க ஹார்ட் பீட் ஏறுது, நான் வாங்கி வைத்த நற்பெயரை ஈஸியா ஸ்பாயில் பண்ற டி” என்று பெட்ரூம் கட்டிலில் அவளை கிடத்தி ‘குட் நைட்’ என்று நழுவ அவனை தன்னோடு இழுத்து முத்தமிட்டாள்.

ரித்தீஷ் பதிலுக்கு வழங்க ”இப்ப மட்டும் அக்கா மாமா வர மாட்டாங்க” என்று அவனை பார்த்து கூற கதவுத்திறந்துயிருக்க கண்டவன் அவளின் தலையில் தட்டி கிளம்பினான்.

தணிகாசலம் ஐஸூ போகும் பொழுதே பார்த்தவர் ரித்தீஷ் அழைத்து தூக்கி கொண்டு வந்து விடவும் ரித்தீஷ் மேலே இன்னும் அன்பு கூடியது.

நாளைக்கு அவர்கள் வீட்டுக்கு ஐஸூவை அழைத்து செல்ல வேண்டும் சாஸ்திரதிற்காக ஒரு வாரம் இங்கு அழைத்து வந்தது போதும். அதனை சொல்லி அடுத்த நாள் கிளம்ப கூறவும் ஐஸ்வர்யா ஆர்வமாக கிளம்பினாள்.

 

ரித்தீஷ் அடுத்த நாள் கல்லூரிக்கு விட செல்ல, யுகனின் பார்வை ரித்தீஷ் ஐஸூவை விட்டு அகலாமல் பார்த்தது. ரித்திஷிடம் பேசுவதற்கு முன் ஐஸூவின் அப்பாவிடம் பேசணும் என்று கல்லூரியில் விடுப்பு எடுத்து கிளம்பினான்.

தணிகாசலம் வீட்டில் இருக்க கேட்டுக்கொண்டு கிளம்பினான்.

தணிகாசலம் வைதேகியிடம் உங்க மகள் ஐஸூ பற்றி பேசணும் என ஹாலில் அமர்ந்தான்.

யுகனின் பேச்சை கேட்க கேட்க தணிகாசலதிற்கு தான் முத்துமுத்தாக வேர்த்து போனது. வைதேகி கண்களில் கண்ணீர் உகுந்தது.

தணிகாசலம் வைதேகி யுகனின் பேச்சில் எதுவும் நிறுத்தவில்லை…

”நீங்க உங்க மகளை நாளைக்கு என்னோட அனுப்பலை.. இந்த போட்டோ நாளைக்கு உங்க மகளுக்கு அனுப்புவேன்… அதோட நிறுத்த மாட்டேன்… புரியும்னு நினைக்கின்றேன்” என்று யுகன் கிளம்பினான்.

”என்னங்க போலீஸ்ல…”

”போக முடியாது மா…” என தணிகாசலம் உடைந்து போனார்.

இதை எப்படி நான் ஈஸ்வரிடம் சொல்றது… அவனுக்கு தெரிந்தா என்னாகும். என்று கவலை கொண்டார்கள்.

யுகன் கொடுத்த நேரமும் முடிய யுகன் நேராக வீட்டுக்கே வந்து நின்றான்.

”நான் அவ்ளோ சொல்லியும் இப்படி அவளிடம் சொல்லாமல் இருக்கீங்க? அப்போ கோர்ட் போயி தான்…”

”ஐயோ தம்பி அப்படி இல்லை எங்களால் ஐஸூவிடமோ இல்லை இவ தம்பியிடமோ சொல்ல தெம்பு இல்லை.” என்று காலில் விழுந்தார்.

யுகனோ கொஞ்சமும் இறங்காமல் கோவமாக வெளியேறினான்.

மாலையில் ரித்தீஷிற்கு போன் செய்து ஐஸூவை அழைத்து அவனின் வீட்டுக்கு விரைவாக வர சொன்னார். தாங்கள் அங்கு வருவதாக உரைத்தார் தணிகாசலம். அவனும் “சரி மாமா” என்றவன் ‘மாமா குரல் ஏன் வித்தியாசமா இருக்கு ஏதோ வருத்தமா பேசியது போல இருக்கு… என குழம்பி கல்லூரி வந்து சேர்ந்தான்.

அங்கே ஏற்கனவே ரியா பிரபுவை அடித்து நிற்க ரித்தீஷ் வர மனைவியை இழுத்து சென்றான்.

”எதுக்கு டி அவனை அடிச்ச…”

”நீ வெங்கட், பிரபுவை அடிச்சியா? பதிலுக்கு பதில் கேள்வியாக கேட்க

”அது எப்பவோ? அதுக்கும் இதுக்கும் என்ன?”

”நீ என்னிடம் அதை சொல்லலைல, அப்போ இப்போ ஏன் அடிச்சேனு நான் சொல்லமாட்டேன்” என்று திரும்ப ரித்தீஷ் இவளிடம் இப்போ கேட்டு ஒன்றும் வாங்கிட முடியாது இவளை வீட்டுக்கு அழைச்சிட்டு போய் கேட்டுபோம்” என வண்டியை கிளப்பினான்.

நாளை மறுநாள் இவனின் அலுவலக பணி செல்ல வேண்டும் ஆட்டோ எல்லாம் இனி எடுக்க முடியாது என்று அதனை கொடுத்துவிட்டு பைக் எடுத்து வந்திருக்க அதனை பார்த்தவள்

”ஐ மாமு பைக் எப்போ வாங்கின?” என்றாள்.

”இப்போ தான் ஷோ ரூம்ல இருந்து நேரா இங்க தான் வருது மகாராணி என்னான சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க” என்று அமர சொல்ல

”மாமு எனக்கு உன்கூட பைக்ல போக ரொம்ப புடிக்கும்.. ”

”நீ ஃபர்ஸ்ட் டைம் என்கூட வந்தப்ப சொன்னியே அப்போவே வாங்கணும் இருந்தேன் முடியலை.. இப்போ தான் நேரம் அமைந்தது” என்றான்.

”மாமு உன்னை எதுக்கு பைக் வாங்க சொன்னேன் தெரியுமா? இதுக்கு தான் என அவனை கட்டி கொள்ள அவன் தனது ஒரு கையை எடுத்து அவளின் தலையில் வைத்து அழுத்தி தன்னோடு அணைத்தான்.

”மாமா கோவிலுக்கு போகலாமா?”

”இல்லை மா அக்கா மாமா வீட்டுக்கு வர்றேனு சொல்லி இருக்காங்க அதனால நாம வீட்டுக்கு போகலாம் நாளைக்கு தான் சனி ஞாயிறு வருதே அப்போ கோவிலுக்கு போகலாம்” என வீட்டுக்கு வந்தான்.

கதவு திறந்து அவர்களுக்காக காத்திருக்க, அங்கே அவர்கள் வருவதற்குள் குடிக்க ஏதாவது செய்யலாம் என ஆப்பிள் பழங்களை நறுக்கி துண்டாக வெட்டி இருக்க, காலிங் பெல் அடிக்க ஐஸூ தான் திறக்கப்போனாள்.

கதவு திறந்து தணிகாசலம் வைதேகி வர அவர்களுக்கு பின்னால் யுகந்திரன் வந்து நின்றான்.

”நீங்க எங்க இங்க?” என ஐசு கேட்க ரித்தீஷோ

”ஹேய் யுகன்.. என்ன டா உனக்கு என் வீடு தெரியுமா?” என்றான் ரித்தீஷ்.

யுகனோ எதற்கும் பதில் தராமல் ”நீங்க சொல்லுறிங்களா? இல்லையா?” என வைதேகி தணிகாசலமிடம் மிரட்டினான்.

”எங்களால் சொல்ல முடியாது… நீயே சொல்லு” என்றனர் வைதேகி தணிகாசலம்.

ரித்தீஷ் புரியாமல் அவர்களுக்குள் பார்த்து கொள்ள

தணிகாசலமே “ரித்தீஷ்வரன்… இவரோட போங்க ஐஸூவிடம் அவர் எல்லாம் சொல்லுவார்..” என கண்ணீர் சிந்தினார். ரித்தீஷ் புரியாமல் யுகனை பார்த்தான்.

யுகனோ ”போலாம்.. பெரிப்பா வெயிட் பண்ணிட்டு இருப்பார்” என்றான். ”ரித்தீஷ் அவளை கூட்டிட்டு போ, அவ கூடவேயிரு.. திரும்ப கூட்டிட்டு வா டா” என்று ரித்திஷிடம் வைதேகி அழுகையோடு உரைத்தார்.

ஐஸூவோ ரித்தீஷ் இருக்க எனக்கு என்ன என கிளம்பினாள்

யுகன் காரில் ஏற ரித்தீஷ் அவனின் பைக்கில் உட்கார ஐஸூ அவனோடு அமர யுகனோ ”நீ வேணுன்னா காரில் வா…” என்று ஐஸூவை பார்த்து கூறினான்.

யுகனின் இந்த உரிமை ரித்தீஷிற்கு என்னவோ தோன்றியது.

தணிகாசலம் வைதேகி அழுதது அவனுள் முன்பு ஒரு முறை தணிகாசலம் வைதேகியிடம் புலம்பிய உண்மை கண்ணில் தோன்ற யுகனை, ஐசுவை பார்த்தவன் அமைதியாக இருந்தான். கொஞ்சம் அவனும் யோசித்தான். அவனுக்கு ‘அது தான்’ என்று தெரியாமல் எதுவும் உலரக்கூடாது என அமைதியாக இருந்தான்.

ஐசுவோ ஒண்ணும் வேணாம் நான் என் மாமா கூட வர்றேன்” என்று ஒழுங்கு காட்ட இதுவரை கடினமாக பேசிய யுகன் கண்கள் சிரிப்பில் பூத்தது.

‘மூஞ்சுயும் முகரையும் பாரு குரங்கு.’ என்று ரித்தீஷ் பைக்கில் அமர்ந்தாள்.

ரித்தீஷ் முகம் சந்தேகதோடு தான் யுகனின் காரினை தொடந்தது.

வழியில் அவர் எங்க காலேஜ் நியூ லெக்சர்’ என்று ரியா கூற, தனக்கு ஃப்ரெண்ட் மாமா அக்காவிற்கு என்ன அறிமுகமோ என்று ரித்தீஷ் நினைத்தான்.

ஒரு பெரிய வீட்டின் முன் கரினை நிறுத்தி யுகன் இறங்கி திரும்ப, ரித்தீஷ் ஐசஸூ வர ”நில்லு எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இருக்க? யார் வீடு? என்ன என்று ஒழுங்கா சொல்லு.. நீ பாடம் நடத்துறது போல இதுவரை இங்க வந்தது ஒண்ணும் புரியலை.. ” என்று ஐஸூ யுகனை வாத்தியார் என்றும் பாராமல் வார்த்தையால் விளசினாள்.

”உள்ள வா சொல்றேன்” என்று அழைத்து செல்ல ‘நான் பாடம் நடத்தறது புரியலையாம்‌ இவளுக்கு பாதி நேரம் தூங்கிட்டு பேச்சை பாரு’ என் முனங்கி சென்றான்.

”ரியா பி சீரியஸ்” என ரித்தீஷ் சொல்ல ஐசுவோ

”மாமா நிஜமா அந்த ஆள் சொல்லி தர்றது சுத்தமா புரியாது தாலாட்டு பாடற மாதிரி நடத்துவான்” என்றாள். அவளை முறைத்து ”சும்மா வா” என அழைத்து சென்றான்.

 

To be continue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!