அத்தியாயம்-3
ஒரு வாரம் கடந்தன… ரித்தீஷ் இங்கிருந்து சென்றதால், ஐசுவிற்கு அவன் இல்லாதது அவளின் மனதை தாக்கவில்லை… அவள் செல்லும் நேரம் அவன் வரும் நேரம் மட்டுமே எதிர் பார்ப்பாள் அது அவளுக்கே தெரியாது. தானாக ஜன்னளில் நின்று பார்த்து ஏதோ இழந்த சோகதோடு திரைசீலை சாற்றி கொள்வாள்.
அன்று காலையில் எழுந்து கல்லூரி கிளம்பி அறையில் இருந்து ஐசு வந்ததில் இருந்து அவளுக்கு உணவு பரிமாறியபடி இருக்க போனில்
”என்ன சமைச்ச?”
”…..”
”அம்மாவுக்கு அந்த கார சட்டினி ரொம்ப பிடிக்கும்”
”……….”
”உனக்கு எதுக்கு தலையெழுத்து.. இங்க இருந்தா வகையா நானே செய்திருப்பேன்” என தாய் வைதேகி பேசவும், அந்த பேச்சிலே எதிரே பேசுபவன் ரித்தீஷ் என்று அறிந்து கொண்ட ஐசு தன்னை பற்றி அவன் ஏதேனும் கேட்பான் என்று காதினை கூர்மையாக தீட்டினாள்.
தாயும் அவனும் சமையல் சகிதம் பேசி முடித்து வைக்க கடுப்போடு பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டாள்.
கையில் புத்தகமொன்றை இறுக பற்றியவள் நடந்து ஆட்டோ ஒன்றில் ஏறிட அதில் நிமிடத்திற்கு ஒரு முறை கண்ணாடியில் பார்க்க அதில் ரித்தீஷ் முகமே வந்து போனது. எப்பொழுதும் அவன் ஆட்டோவில் அவள் பார்க்க அவனோ ரோட்டில் கண்கள் இருக்க இவளாக திட்டியபடி வந்து நிற்பாள். ஆனால் இன்று அவன் இல்லை ஆனாலும் அவளுக்கு கண்ணாடியில் அவன் முகமாக மாறி பின்னர் வேறு ஒருவன் இருக்க கண்டு தலையில் அடித்து கொண்டாள் பின்னர் காலேஜ் வந்த பின்னும் அவள் அப்படியே இறங்கி போனாள்.
லேகா பூர்வீ பிரபு கண்டதும் ஐசு இதுவரை அந்த ஆட்டோ காரன் பாதுகாப்பில் இருந்ததால் அருகே வராத வெங்கட் அருகே வந்து பேசிட முனைந்தான்.
மாலையில் ஆட்டோ அருகே வந்து இடம் சொல்லி பணம் பற்றி கேட்க ரித்தீஷ் திரும்ப, ஐசு ‘இவனா?’ என அலட்சியமாக நின்றாள்.
ரித்தீஷோ இம்முறை ஐசு அருகே இருந்த பெண்மணியை பார்த்து “அக்கா நீங்க கோயம்பேடு போகணும் சொன்னிங்க உட்காருங்க” என ஐசுவை பார்க்காமல் வண்டியை எடுத்தான்.
கொஞ்ச நேரம் முன்ன கோயம்பேடு வராது என்று சொன்னவன் அவனாக வந்ததும் கிளம்பி போக ஐசு தான் ‘ஏன் என்னை வீட்ல விட்டுட்டு போக இவருக்கு என்னவாம்?’ என்றே அவனை வறுத்து எடுத்தாள். தான் அவனை ‘இவனா’ என்ற அலட்சியம் செய்யாமல் இருந்தால் தன்னை ராணியாக அழைத்து செல்வான் என அவள் உணராமல் போனாள்.
அதே நேரம் வெங்கட் அருகே வந்து ”நான் வேண்டுமென்றால் ட்ராப் செய்யவா ஐசு… அந்த பக்கம் தான் போகணும்” என்றதும் ரித்தீஷ் மேலிருந்த கோவத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
இன்றே தான் அவளிடம் சில்மிஷம் செய்தால் நிச்சயம் தனக்கு அவளிடம் கெட்ட பெயர் தான் இன்று விட்டு பிடிப்போம் என வெங்கட் மிக கண்ணியமாகவே அழைத்து சென்று விடுத்தான்.
ஹாலில் நுழையும் பொழுதே ‘தம்பியாம் தம்பி இவங்களை சொல்லணும் சாப்பிடியா ராஜா…. என் தம்பி போல யாருமில்லை… அப்படி இப்படி சொல்லிட்டு இந்த அம்மாகிட்ட வரட்டும் இன்னிக்கு இருக்கு” என புத்தகப்பையை தூக்கி சோபாவில் எறிந்து மற்றொரு புறம் நோட் விசிறி எறிய கிச்சனுள் இருந்து ரித்தீஷ் காபி குடித்தபடி வந்து நின்றான்.
‘இவன் எங்க இங்க? இவன் தானா?’ என கண்ணை கசக்கி கொண்டே பார்க்க மேலே வைதேகி தணிகாசலம் அறையில் இருந்து ஸ்குரு எடுத்து வந்து நீட்டினார்.
”இது போதும் அக்கா” என ட்யூப் லைட்டை சரி செய்தான். நான்கு நிமிடத்தில் அவ்வறை பிரகாசித்தது.
”சரி அக்கா கிளம்பறேன்” என ஆயத்தமாக,
”டேய் ரித்தீஷ் ஐசுவோட பாத்ரூம்லா ஹீட்டர் கூட ஒர்க் ஆகலை… அதையும் பார்க்க முடியுமா?” என்று கோரிக்கை வைத்தார்.
”அக்கா நீயும் கூட வா” என சொல்லிவிட்டு ஐசு முன் நின்றான். அவன் பார்வையோ அவளை தவிர்த்திருந்தது.
அறைக்கதவை திறந்தவுடன் உள்ளே சென்றவன் கண்களில் பட்டது ஃபிரிட்ஜ் அதன் மேல திண்பண்டம் இருக்க, தனியாக அழகு செய்ய ட்ரெஸ்ஸிங் டேபிள் மற்றும் படிக்க வசதியாக டேபிள் லாம்ப், கட்டிலில் மட்டும் உடைகள் பரப்பி இருந்தது.
”பாத் ரூம்ல ஹீட்டர் சரி செய்யணும்” என அவளை பார்க்காமல் சொல்லி முடிக்க அவன் தன்னிடம் பேசும் பொழுது எல்லாம், அவளை அறியாமல் அவன் கண் தன்னை பார்க்கின்றதா? என்று பார்த்து பார்த்து ஏமாந்தாள்.
கொஞ்சம் ஸ்டூல் வேணும்” என்று கேட்க எடுத்து கொடுக்க அதனை வாங்கி, “ஹீட்டர் ஸ்விட்ச் போடு” என்றான். ஐஸூ ஆன் செய்ய அவன் அதனை தொட்டதும் சட்டென ஷாக் அடித்தது.
”ரித்தீஷ் மாமா.. பார்த்து..” என அவளை அறியாமல் சிறுவயதில் அழைத்தது போலவே கூப்பிட, அவன் அவளின் கண்களை கண்டவன் அவள் தலைக்குனிய வந்த வேலையினை கவனித்தான்.
கொஞ்சம் ஓயர் எல்லாம் மாற்றி ஒழுங்குப்படுத்தி விட்டு, மீண்டும் அவனே ஆன் செய்து சரியாகிவிட்டது என்றதும் கிளம்ப போக,
”மறுபடியும் ஷாக் அடிக்குமா?” என்று கேட்டாள். அதில் மாமா என்ற அழைப்பு இல்லாமல் போக அதற்கு எல்லாம் வருந்தாமல்
”ஷாக் அடிக்காது.” என்று திரும்பியவன் ”அந்த வெங்கட் நல்லவன் இல்லை அவனோட பழகாதே… மாமாவுக்கு அவனோட நீ வந்தது தெரிந்தா வருந்துவார்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
இவளோ ‘ஆமா பெரிய இவன் நீ இருந்து கூப்பிட்டு வந்து இருந்தா நான் அந்த கோவத்தில் அவனோட ஏறியிருக்கவே மாட்டேன். பெருசா பேசிட்டு போறான்… ஹுகும்’ என அறைக்கதவை சாற்றி ஆடை மாற்றினாள்.
வெளியே வந்து பார்க்க அதற்குள் அவன் சென்ற சுவடு மட்டும் தெரிய
”ஏன் மா எதுக்கு இப்படி உன் தம்.. மாமாவை கூப்பிட்டு இருக்க காசு கொடுத்தா யாராவது வந்து சரி பார்க்கா போறாங்க எதுக்கு இப்படி பண்ற?” என்றாள்.
வைதேகியோ ”காசு கொடுத்தா எல்லாம் செய்ய ஆளு இருக்கங்கா ஆனா அவனை பார்க்க அவனை தான கூப்பிடணும்… அவன் இப்போ எல்லாம் இங்க வருவதே இல்லை அதான் இந்த சாக்கு வைத்து வரவழைச்சேன்” என கண்ணீர் துடைத்தபடி கூறினார்.
”ரொம்ப தான் சென்டிமெண்ட்’ என நொடித்து கொண்டாள் ஐஸூ.
அடுத்த நாள் குளிக்க செல்கையில் பாத் ரூமில் டெஸ்டர் இருக்க எடுத்து பார்த்தாள். அது பெண் மூடி போல இருக்க அதனை எடுத்தவள் மூட ஒரு பக்கம் டெஸ்டர் மறுபக்கம் பேனா என இருந்தது. ‘ஐ வித்தியாசமா இருக்கு’ என அவளே வைத்து கொண்டாள்.
அங்கு டெஸ்டர் தேடியவன் எங்கு விட்டுவிட்டு வந்தோம் அக்கா வீட்டில் கிச்சன் அல்லது ஹாலில் விட்டு இருப்போம், இலக்கியா தான் அதனை வாங்கி கொடுத்தது. அவள் கேட்டால் சொல்லி கொள்ளலாம் என விட்டு விட்டான்.
ஐஸூ அங்கே இருந்த பொழுது தன்னை அவள் ‘ரித்தீஷ் மாமா’ என்றது கருத்தில் தோன்ற ஒரு குறுஞ்சிரிப்பை உதிர்த்தபடி இருக்க பால் பொங்கி வழிந்து இன்டெக்ஸ் ஸ்டவ் முழுவதும் பாழாகியது.
இலக்கியாவோ ”டேய் டேய் ஸ்டவ் ஆஃப் பண்ணு” என்றதும் சுதாரித்தவன் ஆப் செய்து முடித்து திரும்பிட இலக்கியா கைகளை கட்டியபடி
”என்ன கனவு கண்டுட்டு இருக்க ஈஸ்வர்? பாலை எல்லாம் பொங்கி காபி குடிக்கலாம் என்று இங்க வந்தேன்” என கேட்டாள்.
”கனவு தான் இலா… ஆமா எதுக்கு இப்படி கஷ்டபட்டு மாடிக்கு வந்த? ஒரு குரல் கொடுத்தா கீழே வந்து காபி கொடுக்க போறேன்” என அவள் கஷ்டப்பட்டு வந்தாலே என்று கேட்டுவிட்டான்.
”ஆமா பக்கத்தில இருக்கற பாலை ஒழுங்கா பார்க்காம கனவில் முழுகிட்ட, இதுல நான் கீழே இருந்து கூப்பிட்டதும் உனக்கு காது கேட்கும்” என கூற ஸ்டவ் துடைத்தவன்
”எதுக்கு வந்த உண்மையை சொல்லு” என்றான்.
”அப்பா டிராவல்ஸ்ல ஒரு புது கார் வந்திருக்கு… அப்பா யாருக்கும் உடனே கொடுக்க யோசிக்கறார்… நீ அதை ஒட்டினா அப்பா ஓக்கே சொல்லிடுவார்… நீ பேசாம கார் ஓட்டேன்” என்றாள்.
”என்ன விளையாடறியா எனக்கு ஆட்டோ போதும்…… என் சொந்த ஆட்டோ கார் எல்லாம் வேண்டாம்… அதுவும்…”
”சுய காலில் நிற்கணும் கார் என்றால் அப்பாவுக்கு கீழே ஒர்க் பண்ணனும் அப்படி தானே டா?” என்று பொறிந்தாள்.
”எனக்கு ஆட்டோ முதலில் வாடகைக்கு கொடுத்ததே உங்க அப்பா தான். சோ அவருக்கு கீழே வேலை பார்க்கறதை நான் தப்பா எடுத்துக்கலை ஆனா இப்போ இது போதும் எனக்கு மேல போக இப்போ தோணலை… முதலில் நீ சேர்த்து வைத்த இடத்தில மார்க் வரட்டும் அப்பறம் அதுக்குண்டான ஒர்க் பார்க்கலாம்” என எழுந்துக்கொண்டான்.
”கிளம்ப போறியா?” என அவளும் எழுந்துகொள்ள தடுமாற இலக்கியாவை தாங்கி பிடித்தவன், நிற்க வைத்து, “பத்திரமா போ இலா இனி மேல வராதே உனக்கு தானே கஷ்டம்” என்றான்.
”எப்படியும் மாடி ஏறி தானே பழக்கணும் கல்யாணம் ஆனா பிறகு.. அதுக்கு ஏறி பழகிக்கறேன்…” என்றாள் இலா.
”ஆமா ஆமா… அதுக்கு இது டிரையலா? நல்லா வருவ மா நீ… உங்க அப்பாவுக்கு தெரிந்தது என் தோல் உரியும். கீழே இறங்கு” என படிக்கட்டில் மெல்ல மெல்ல இறங்கினாள்.
ரித்தீஷ் தான் சாப்பிடாமல் போக இலக்கியா தான் சண்முகதிடம் “அப்பா அவன் ஸ்டவ் முழுதும் பாலை கொட்டி பட்டினியோட போறான்.. காபியாவது குடிக்க சொல்லுங்க” என வற்புறுத்த அவர் சொல்லவும் ஈஸ்வர் மறுக்க முடியாமல் காபி குடித்து கிளம்பினான். கிளம்பும் பொழுது இலக்கியா அவளின் காலேஜ் விடுவித்து நின்றவன்.
”உன் அப்பாகிட்ட முதலில் காதலை சொல்லு… அவர் எப்படியும் ஏற்றுக்கொள்வார்” என கிளம்பினான்.
இலக்கியாவோ மனதில் ‘இல்லை என் அப்பா காதலை சொன்னா கண்டிப்பா எனக்கு கீழே வேலை செய்பவனை ஏற்றுக்கொள்ள மாட்டார் ஆனா எப்படியும் நான் பின் வாங்க மாட்டேன்’ என்றெண்ணி கிளம்பினாள்.
தூரத்தில் ஐஸூ ஆட்டோவில் ரித்தீஷ் கண்டதும் முகம் பிரகாசமாக பார்த்தவள் அவன் அந்த பெண்ணின் கையை பிடித்து இறக்கி விட அதில் கோவம் கொண்டாள். தனக்கு எதுக்கு அதற்கு கோவம் வருகின்றது என்று எல்லாம் அவளுக்கு தோன்றவில்லை… ‘பெருசா அவனை நல்லவன் நினைச்சேன் ஆனா அப்பா மேல இருக்கற பயத்தில் தான் என்கிட்ட மரியாதையா நடந்திருக்கான்.. இப்போ இந்த பெண்ணை கையை பிடிச்சு அணைத்து இறக்கி விடறான் எல்லாம் வெளி வேஷம்’ என அவளின் ஆட்டோவில் கடந்தபடி வெதும்பிக் கொண்டே சென்றாள்
-தொடரும்
