Skip to content

தாரமே தாரமே வா-35

64 / 100 SEO Score

தாரமே தாரமே வா-35

அத்தியாயம்-35

வெங்கடேஷ் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து ரித்தீஷ் வருகைக்கு அவனை சீண்ட காத்திருக்க ரித்திஷ் வந்தவன்.

”வெல்கம் வெல்கம்… இப்படி இங்க என்னை எதிர்பார்த்திருக்க மாட்ட அப்படி தானே?” என்று வெங்கட் ஒரு வித ஏளனதோடு கேட்க அவனின் தோரணையில் ரித்தீஷ் அதற்கும் மேலாக திமிருடன் பொறுமையாக வந்து டேபிளில் கையை ஊன்றி

”இது உன் அலுவலகம் என்று தெரிந்த பின், திரும்ப இங்க நான் வருவதே அபூர்வம். அப்படி இருக்க இங்க வேலை செய்வேனு எப்படி நீ நினைப்ப? உன்னை அன்னிக்கே அடிச்சி துவைச்சு ஹாஸ்பிடல் அனுப்பி இருந்தேன் இப்படி நீ இன்னும் தெனாவட்டா பேசிட்டு இருக்க மாட்ட… இட்ஸ் மை மிஸ்டேக் அன்னிக்கு அடிச்சா நீ சொல்றதை நான் உண்மையா எண்ணி அடிக்கிறேன் ரியா என்னிட கூடாதேனு பொறுமையா இருந்தேன்…. ஹ்ம் இனியும் அப்படியே இருப்பேனு எண்ணிடாதே… ஏற்கனவே வாங்கின அடி நினைவு இருக்கும்…” என்றதும் வெங்கட் சினதோடு முகம் கடுகடுத்தான்.

”குட் இந்த நக்கல் பார்வை போச்சா… நல்லது.. ஏன் டா ஒரு பொண்ணு உன்னோட ஃப்ரெண்ட்லியா பழகறா அதுக்கு நீ என்ன செய்து இருக்கணும் அந்த நட்பை காலம் முழுக்க களங்கம் இல்லாமல் பார்த்து இருக்கணும் ஆன நீ என்ன செய்த? அவளை உன் பிறந்த நாளுக்கு ஹோட்டலில் அழைச்சு தப்பா நடக்க பார்த்து இருக்க அதுல அவள் தப்பித்து போனதும், அவளை தொந்தரவு செய்யாம இருந்து இருக்கணும். செஞ்சியா நீ.. அவளுக்கு வருகின்ற வரன்களை எல்லாம் திலீப் கூட சேர்ந்து வந்த போட்டோ காட்டி, அவளுக்கு வந்த வரங்களை தடுத்து என்ன ஒரு குரூரம் டா…

சரி உனக்கு தான் எல்லாம் கெடுத்து அவளுக்கு நான் ஒரு ஆட்டோகாரன் கட்டிக்கிட்டேன் அப்பயாவது விடலாம் இல்ல. எதுக்கு திரும்ப திரும்ப அவளிடம் வம்புக்கு போகணும்… எதுக்கு என்னிடம் சில்லு மூக்கு உடைய அடி வாங்குற? இப்ப என்ன இந்தக் ஜாப்ல நான் உனக்கு கீழே வேலை பார்க்க போறேன் அப்படி தானே எண்ணிட்டு இருக்க” என்று அந்த அப்பாயின்மெண்ட் லெட்டர் கிழித்து அவனிடமே கொடுத்து “பிடி… எனக்கு உன் கீழே ஒர்க் பண்ற அளவுக்கு தன்மானம் இறங்கி போகலை டா.. ரித்தீஷ்க்கு செல்ப் ரெஸ்ப்பெக்ட் ஜாஸ்தி” என்று முகத்தில் விட்டெறிந்து கிளம்பினான்.

தான் அவனை நிற்க வைத்து கேள்வி கேட்டு கூனி குறுக நிற்க வைத்தால் அவன் தன்னை பற்றி பேசி, தன்னை ஈயடா நிற்க வைத்து விட்டானே என்று அப்பொழுதும் கோவமாக திரிந்தான்.

ரித்தீஷ் வெளியே வந்து பைக் எடுத்து அவனின் இருப்பிடம் வந்து சேர்ந்தான்.

அவனின் மனம் என்னதான் வெங்கட்டிடம் வீம்பு பேசி வீடு வந்தாலும் அந்த வேலை போனதற்கு கவலைபடவில்லை ஆனால் அவனிடம் சொந்த உழைப்பில் வாங்கிய ஆட்டோ கையிலிருந்து போனதே என்ற மனவருத்தம் கொண்டான். இந்நேரம் அது மட்டும் இருந்து இருந்தால் கவலை கொண்டிருக்க மாட்டான். ஆனால் ஆட்டோ விற்று பைக் வாங்கி விட்டு அடுத்து தங்கள் தேவைகளை எப்படி சரிசெய்ய என யோசித்தான்.

இப்படி ஒரு சூழ்நிலை வருமென்றே அவன் எண்ணவில்லை அதனால் தான் ஆட்டோ விற்றதே… குழம்பி குழம்பி தவித்தவன் மாலை மூன்று ஆனதும் மூன்று முப்பது ரியா அழைத்து வர கிளம்பினான்.

தன்னை தானாக வீட்டுக்கு போக சொன்ன ரித்தீஷ் அவனே அழைத்து வர வந்ததும் ரியா எதுக்கு வந்தான் எப்படி வந்தான்? அலுவலகம் என்ன ஆனது? என்று எல்லாம் கேட்காமல் ஆணின் வருகை மட்டுமே இன்பம் கொண்டு அவனிடம் அவனின் பைக் ஏறி அமர்ந்து கொண்டு

”மாமா நீ வருவ என்று எதிர்பார்க்கலை மாமா… ரொம்ப ஹாப்பியா இருக்கு… இன்னிக்கு அந்த அறுவை என்னை இங்க தெரிந்த பொண்ணு மாதிரியே காட்டிக்கலை மாமா.. சித்தப்பா மட்டும் என்னை பார்த்ததும் சிரிச்சார்” என்றாள்.

”ஹ்ம்” என்றே சிக்னலில் நின்றவன் பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஒன்றையே பார்த்து கொண்டிருக்க, ரியா அதன் பிறகே கவனித்தாள்.

அவன் ஆட்டோவை ‘மிஸ்’ செய்கின்றானென அறிந்து கொண்டாள். ஆட்டோவை பிரித்த வேலையினை பற்றி இப்பொழுது கேட்கவும் யோசித்து அவனிடம் வேறு ஏதாவது பேச செய்தாள்.

அதற்கு ஏற்றார் போல வீட்டுக்கு போனதும் இலா மஸ்தான் திருமணம் பற்றி பேசியிருக்க ரித்தீஷ் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தினான். அப்பொழுது கூட அடுத்து என்ன செய்ய? இதுவரை தனியாக இருந்துவிட்டான் அவனுக்கென்று தானியாக எதையும் யோசித்தது இல்லை… ஆனால் இன்றோ ரியா அக்கா மகளாக இருக்கும் பொழுதே அவளின் தேவைகள் இங்கே இல்லை என்பது அவன் நினைப்பு. இன்றோ ஸ்ரீநிவாசன் மகள் வேறு அவளின் தேவைகளுக்கு ஆட்கள் இருக்க இங்கே அவளின் அத்தியாவசிய தேவைகளை கூட இனி வரும் காலங்களில் எப்படி வாங்கி கொடுக்க என்றதில், அவனுள் நிம்மதி கொஞ்சம் குறைந்தே போனது.

ஆட்டோ மட்டும் கையில் இருந்தால் என்றெண்ணியவன் மீண்டும் அதனை திரும்ப வாங்க முடியுமா என சிந்தனை செல்ல, அதனை கலைக்கும் விதமாக ரியா பேசிக்கொண்டியிருக்க சிந்தனை கலைந்தவன்

”ரியா கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாதே” என்று தன்னிடம் இருக்கும் பாங்க் பேலன்ஸ் இதர நகை, அவன் போட்டு வைத்த இன்சூரன்ஸ், எவ்வளவு இருக்கு என்றே பார்க்க ரியாவோ அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமின்றே அவன் கையில் இருக்கும் ஆவணங்களை பறித்து கட்டிலில் எறிய ரித்தீஷ் பொறுமையிழந்து,

”ரியா ஒரு முறை சொன்னா கேட்க மாட்டியா போ அங்க? எப்ப பாரு விளையாட்டு” என்றதும் ரியா மனதில் மாலை வெங்கட் பேசியது நினைவில் வந்து போனது.

இங்கு ரித்தீஷ் பேசி அவனை எதுவும் செய்ய முடியாது போக, ஐசுவிடம் அவள் மனதில் ரித்தீஷ் தற்பொழுது என்ன நடந்தாலும் இனி முன்பு போல இருக்க மாட்டான். அவனுக்குள் உன்னை பற்றி கொஞ்சம் சந்தேகம் வந்துடுச்சு. என்னிடம் வந்து உன்னை பற்றி கேட்டான். தென் பணம் மேலயும் ஆசை வந்துடுச்சு.. நீ வேற ஸ்ரீநிவாசன் பொண்ணு தெரிந்ததால உங்க அக்கா மாமா வளர்த்தவர்கள் அதனால அங்க உன்னை வைத்து இனி பணம் பிடுங்க முடியாது அதனால ஸ்ரீநிவாசன்கிட்ட நல்ல பேர் எடுத்து அங்க பணம் சம்பாரிக்க பிளான் போடறான்.. நீ வேணுமின்னா பாரு உன்னை இனி ஹர்ட் பண்ணுவான்” என்றதும் வெங்கட் சொல்லி சென்றது காதில் வந்தாலும் ரித்தீஷ் எதார்த்தமாக கூட தன்னை திட்டி இருக்கலாம் என அமைதியாக போனாள்.

ரித்தீஷ் சில நகல்களை எடுத்துக்கொண்டு போனான். அவன் போன கொஞ்ச நேரத்தில் யுகன் வந்து அவளை ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு அழைக்க அவளோ வர மறுத்தாள்.

”குட்டி சாத்தான்.. நீங்க கிளம்பி வந்ததும் மாமா ஒரு மாதிரி கவலையில் இருக்கார் கொஞ்சம் வா.. நாளைக்கு சனி அடுத்த நாளும் லீவு தான் ப்ளீஸ்” என்று கெஞ்ச… இவளோ மறுத்தாள்.

தான் சொன்னால் கேட்க மாட்டாள் என்று ரித்தீஷ் போனில் அழைத்து சம்மதம் பெற அவனோ ”போ ரியா… நான் அப்பறம் வர்றேன்” என்று சோர்வுடன் சொல்லி விட்டான்.

”மாமா நான்” என்று ஏதோ சொல்ல வருவதற்குள் ”வா அதான் அவனே சொல்லிட்டானே” என்றே யுகன் கையை பற்றி இழுக்க முதலில் கையை உதறி தள்ள அவனோ பிடிவாதமாக அழைத்து சொல்ல வேறு வழியின்றி போனாள்.

இரவு வருவதாக தான் ரித்திஷிடம் யுகன் சொல்லி ரியாவை அழைத்து போனான். ஆனால் ரித்தீஷ் இருக்கும் மனநிலைக்கு அவன் அங்கே செல்லவில்லை.

ரியா தனியாக இருக்க யுகனும் தங்கள் பெரிப்பாவிடம் கூடயிருந்தான்.

ரியா இரவு உறங்காமல் நெடு நேரம் கழித்தே உறங்க கண்ட யுகனுக்கே ரியாவை கட்டாயப்படுத்தி அழைத்து வராமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

அதையே தான் ஸ்ரீநிவாசனும் சொல்லவே செய்தார்.

அடுத்த நாள் ஐஸூ தானாக எழுந்து குளித்து வர, யுகன் அவளை பார்த்து ”அம்பு காபி” என நீட்ட இவனால் தான் ரித்தீஷ் இல்லாமல் நேற்று தவித்தது என்று முறைத்தபடி அவனிடம் இருந்து வாங்காமல் சென்றாள்.

”ஒய் நான் ஒன்னும் அத்தை பையன் இல்லை முறைக்கறதுக்கு சும்மா சும்மா முறைக்காதே.. உனக்கு நான் அண்ணன்” என்று பதிலுக்கு நிதானமாக பேசும் விதமாக உரைத்தான்.

”நீ அண்ணா என்பதாலா தான் நான் சும்மா விடறேன் இல்லை நீ என்னை முறைக்கறதுக்கு இந்நேரம் கண்ணு இரண்டையும் பிடுங்கி போட்டு இருப்பேன்” என்றாள்.

”ரித்தீஷ் எவ்ளோ சாப்ட் கேரக்டர் உன்கிட்ட போய் மாட்டினான் பாரு…” என்றே சொல்ல அங்கே ஐஸூ கையில் இருக்கும் பொருட்களை தூக்கி எறிய, யுகனோ அதனிடம் இருந்து தப்பித்து ஓட, ஐஸூ துரத்த அங்கே வந்தவனிடம் மோதி நின்றான்.

திலீப் தான் வந்திருந்தான். அவனுக்கு பின் ரித்தீஷ் இருக்க ஐஸூவுக்கு என்ன செய்யவென்றே அறியாது திருதிருவென முழித்தாள்.

”ஹாய் ஐஸூ….” என்றவன் முறுவலிக்க அவளோ பின்னால் இருந்த ரித்தீஷ் முகத்தினை பார்த்தாள்.

ரித்தீஷ் முகம் சொல்லயியலா வருத்தமும் கோவமா என புரியாது பின்னர் சகஜ நிலைக்கு போனான்.

”வேலைக்கு போகலையா?” என்று திலீப் சாதாரணமாக கேட்க ரித்தீஷ் கோவத்தில் திலீப் சட்டையை பிடித்து

”உனக்கு தெரியாது நான் அவனிடம் அப்பாயின்மேண்ட் லெட்டர் கிழிச்சு அவன் முகத்திலே விட்டு எறிந்தது… அப்படியும் என்ன ஒரு கேள்வி? எங்களை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?” என்று கேட்க யுகனோ திலீப் செய்கை புரிந்து ரித்தீஷை தடுத்தான்.

திலிபோ ஐசுவிடம் ”ஐஸூ நான் எதுவும் செயலை.. வேற என்னவோ நடந்திருக்கு, என்னை அண்ணா தப்பா நினைக்கிறார் டிரஸ்ட் மீ” என்றான்.

”மாமா என்ன பண்ற விடு..” என்றதும் ரித்தீஷ் வேகமாக வெளியேறினான்.

இந்நாள் வரை ரித்தீஷ் கோபம் பார்த்தவள் இங்கு அவன் தன்னை அடித்தது போல எங்கே திலீபை அடித்து விடுவானோ என்று அஞ்சி தான் விடுவிக்க சொன்னாள். ஆனால் அதுவே ரித்திஷ் குழப்பமான மனதில் தீயாய் எரிந்தது.

யுகனே மீண்டும் ரித்தீஷ் விட்டுக்கு அழைத்து வந்து விட்டு சென்றான். வரும் பொழுது திலீப் ரித்தீஷ் ரியா மூவருக்குள் என்ன பிரச்சனை என்றே கேட்டு தெளிவாக அறிந்துக்கொண்டான்.

யுகனுக்கோ.. கொஞ்சம் ஏமாற்றம் தான் திலீப் இன்னாள் வரை கொஞ்சம் ஜாலியாக பேசினாலும் வரம்பு மீறுபவன் அல்ல அப்படியிருக்க இன்று கேட்ட விஷயம் அவனுக்கு திலீப் மேலே கோவம் வந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!