அத்தியாயம்-4
ரித்தீஷ் ஐஸூவோடு வருவதில்லை என்பதிலே வெங்கட், திலீப் மற்றும் பிரபு மூவருக்கும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ரித்தீஷ் மேல் இருக்கும் கோவத்தில் ஐஸூவிடம் ‘ரித்தீஷ் தங்களிடம் ஐஸூ அவளோட லவ்வர் அவளை பார்க்க கூடாது உன் பின்னால் நட்பா கூட சுத்த கூடாது என்று எங்களை மிரட்டி வைத்து இருந்தான்.’ என்ற பொய்களை மூட்டையாக சொல்ல ஐசுவிற்கு ரித்தீஷ் மேல கோவம் வந்தது. உண்மையில் வெங்கட் பல பெண்களோடு கண்டதால் மட்டுமே ரித்தீஷ் அவனிடம் இருந்து விலகி இருக்க சொன்னான். ஆனால் ஐஸூ அதற்கு நேர்மாறாக,
அன்று கூட தன்னிடம் வெங்கட் நல்லவன் இல்லை என்று கூறினானேயென எண்ணி கொண்டாள்.
லேகா கூட ”ரொம்ப தான் பண்ணுவான்… அவனுக்கு பெரிய மன்மதன் என்று நினைப்பு என்கிட்ட கூட சிரிச்சு பேசி வழிவான் எனக்கு பிடிக்காது” என ஏற்றி விட இம்முறை ஐஸூவிற்கு தானாக கண்கள் கலங்கியது. அது எதற்கு என்றே அவளுக்கு புரியவில்லை…. ஆனால் லேகா ஒரு முறை ரித்தீஷ் ஆணழகன் போல கையை கட்டி ஆட்டோ பக்கத்தில் இருந்த சுவரில் ஐஸூவிற்காக காத்திருந்த பொழுது லேகா பேச போக, முகத்தில் அறைந்தது போல பேசிய ரித்திஷை இன்று இப்படி போட்டு கொடுத்து பழிவாங்கிய திருப்தியில் லேகா நின்றாள்.
இப்படியாக ஐஸூ மனதில் தானாக தனக்கு வெறுப்பு இருக்கும் என்று அறியாமல் போனான் ரித்தீஷ். ஆனால் அவன் இதற்கு முன்னே அவன் மீது கோவமாக தான் இருந்தாள்.
சிறு வயதில் தன் தந்தை, ரித்திஷை கல்லூரியில் படிக்க வைக்க முயல.. அதற்கு ரித்தீஷ் தானாக படிக்க மறுக்க செய்ய, அப்பொழுது முதிராத அறிவில் இருந்த ஐஸூவிற்கு அவன் தன் தந்தை கூறியும் அவமதித்து படிக்காமல் போக… அதே போல தந்தை சொல்லியும் கேட்காமல் ஆட்டோ ஓட்டும் பணியில் சென்ற காரணத்திலும் அவன் மீது ஏற்பட்ட எதிர்வினையே இன்று வரை உள்ளது என்று அவளே உணரவில்லை.
அவள் பெரியவள் ஆனா பின்னும் உறவுகள் எல்லாம் அவளை தன்னோடு இணைத்து பேசிய பொழுது அவள் குழந்தை என்றெண்ணி இருந்தான். அதன் பின் இதோ திருமண வயதில் வந்ததும் அவளுக்கு தான் அங்கேயே இருக்க கண்டு மற்றவர்கள் பேச்சு மீண்டும் அதே போல பேசுகின்றனர் என அவன் அங்கிருந்து தனியாக வந்து விட்டதே.
அவனுக்கு அவள் இன்று வரை குழந்தையாகவே தான் தோன்றுகின்றாள். அதை மீறி அவள் திமிராக நடக்கும் சமயம் மட்டுமே அவள் குழந்தை என்பதை தாண்டி அவன் அவளை நங்கை என எண்ண துவங்கினான். அவன் அப்படி எண்ண துவங்கி கொஞ்ச நாட்கள் தான் இருக்கும் அதற்குள் அவனே தனியாக வர அவனுக்குள்ளும் அவள் வேறு உணர்வுகளை தூண்டவில்லை.
தன்னுள் ஏதோ ஒன்று குறைந்து இருப்பதை ஐஸூ உணரவில்லை. அவளுக்கு அது இன்னது என்றும் புரியாவில்லை இழந்தது என்னவென்றே அறியாமல் நடந்து கொண்டு வரும் அவளிடம் வெங்கட் முன் வந்து
”ஹாய் ஐஸூ…” என முன்னே வந்து நின்றவனை எதிர்பாராமல் சற்றே பின் அடைந்தாள்.
”என்ன வெங்கட்… இப்படி திடீரென வந்து பயமுறுத்தற” என்று விலக்கியவளை.
”கொஞ்சம் உன்னை பயமுறுத்த பார்த்தேன் தப்பிச்சுட்ட… சரி அதை விடு நாளைக்கு என்னோட பெர்த்டே, நீ ஈவினிங் என்னோட பார்ட்டி ஹாலுக்கு வர்ற. வர முடியாது அப்படி இப்படி என்று சொல்ல கூடாது. நான் எல்லாரையும் இன்வைட் பண்றேன்… ஸ்பெஷல் நீ அதனால வர்ற” என்றான்.
அவனிடம் மறுக்க முடியாமல் “லேகா, பூர்வீ வந்தா வர்றேன்.” என முடித்து கொண்டாள்.
‘நீ வந்தா மட்டும் போதும் டி அதுக்கு பிறகு நடக்கும் எல்லாம் நாங்க பார்த்துப்போம்’ என வஞ்சம் வைத்தே மனதில் கருவினான். அவனுக்கு ஐஸூ இதுவரை பேசி தன்னை ஒரு மனிதனாக மதிக்காமல் ரித்தீஷ் வேறு அவனை அடிக்க போயி ஒரு ஆட்டோகாரன் அடிக்க வந்து விட்டானே என்ற கோவம் வேறு இருந்தது. அதற்கு வஞ்சம் தீர்க்க காத்திருந்தான்.
பணக்காரர்களில் இப்படிப்பட்ட ஆட்கள் கொஞ்சம் அதிகமாகவே காணலாம்.
விட்டில் ‘தோழிகள் லேகா பூர்வீ இருவரும் தன் கூட படிக்கும் பையனின் வீட்டில் நடக்கும் பெர்த்டே பார்ட்டிக்கு செல்கின்றார்கள்’ என கெஞ்சி ஒரு வழியாக தணிகாசலத்திடம் சம்மதம் பெற்றாள்.
அவள் தணிகாசலத்திடம் சொல்லிய எல்லாம் உண்மை தான் ஒன்றை தவிர அது வெங்கட்டின் வீட்டில் அல்ல ஒரு ஹோட்டலில்… அது மட்டுமே பொய். தந்தை இதற்கே இப்படி அனுப்ப மறுக்கின்றார் இதே ஹோட்டல் என்றால் சொல்லவே தேவையில்லை கேள்வி கேட்காமல் தான் கெஞ்சினாலும் அனுப்ப மாட்டார்’ என பொய்யுரைத்தாள்.
அப்பொய்யே அவளுக்கு தனது மகள் மீது இருக்கும் மரியாதையை நம்பிக்கையை தூள் தூளாக மாற்றி விட்டுவிடும் என அறியாமல் பார்ட்டி விழாவிற்கு கிளம்ப தயாராகினாள்.
கல்லூரியில் இதுவரை அணியாத உடை அதுவும் மிடுக்காகவே இருக்கும் ஒன்றை எடுத்து வைத்து பார்த்தாள். அழகாக இருக்க எடுத்து அடிந்து அலங்கரித்தாள்.
பூர்வீ போன் ரிங் ஆகாமல் ஸ்விட்ச்ஆப் ஆக, லேகா போனிலே திலீப் கையில் இருந்தது.
அவனோ ”என்ன ஐஸூ இன்னும் கிளம்பலையா ஃபங்ஷன் ஆரம்பம் ஆகப்போகுது உனக்காக தான் வெயிட்டிங்” என்ற ஐஸ் மழை பேச்சாக குறுஞ்செய்தி அனுப்பினான்.
”சாரி சாரி உடனே கிளம்பி வர்றேன்” என பதில் செய்தி அனுப்பிவிட்டு ஆட்டோ பிடித்தாள். வீட்டில் இருக்கும் காரில் சென்றால், தந்தைக்கு ஹோட்டலில் பார்ட்டி என தெரிந்து விடும் என்பதால் ஆட்டோவில் பூர்வீ லேகா வருவார்கள் என கிளம்பி கொண்டாள்.
சிக்னல் சாலையில் மீண்டும் பூர்வீக்கு அழைப்பை தொடுக்க அவளின் போனோ அதே பதிலை தர என்ன இது ஹோட்டல் என்று தெரியும் என்ன செய்ய? எப்படி உள்ள போக? என்ற யோசனையில் நின்றாள்.
ரித்தீஷ் ஆட்டோவில் திலீப் பயணித்தான். பிரபு வெங்கட் இருவருக்கும் ரித்தீஷ் நன்றாக தெரியும் ஆனால் திலிபிற்கு அந்த அளவுக்கு பரீட்சையமாக தெரியாது. அந்த காரணத்தால் அவன் ரித்தீஷ் ஆட்டோவில் இருக்க, போனில் பேசியபடி வந்தான். அவன் ஆட்டோ ஓட்டும் நபர் யாரென்றும் பார்க்கவில்லை.
ரித்தீஷ்க்கு இது ஐஸூவின் வட்டார லிஸ்டில் இருப்பவன் என்று வரை அறிந்து இருந்தான்.
ஹோட்டலில் விட்டுவிட்டு ரித்தீஷ் பணம் வாங்கி கொண்டு திரும்ப அதே நேரம் இன்னொரு ஆட்டோவில் ஐஸூ வர கண்டவன் ஆட்டோவை எடுக்க மறந்துப் பார்த்தான்.
திலீப் வேறு வந்தது உறுத்த ஐஸூ அவனை கண்டு கை அசைக்க, அவனும் அவளை புன்னகைத்து வரவேற்று அழைத்துச் சென்றான்.
இதை கண்டு ரித்தீஷ் மீண்டும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கிளம்பி இருந்தவன் மனம் ஏதோ முரண்ட ஐஸூ வரும் வரை இருந்து, அவள் பத்திரமாக செல்கின்றாளா என அறிந்துக் கொண்டு அங்கிருந்த செல்லும் முடிவுடன் பார்க்கிங்கில் நிறுத்தி காத்திருந்தான்.
அவன் மனமோ ஐஸூ இங்க எப்படி வந்தா? மாமா எப்படி விட்டார்? கூட அந்த லூசு லேகா பூர்வீ இருப்பாங்களே அவர்களை காணோம்? என்றே யோசித்து இருக்க ஐந்து நிமிட எண்ண ஓட்டத்தை கலைக்கும் விதமாக வளையல் சத்தம் கொடுத்தபடி ஒரு பெண் தனது ஆட்டோவில் ஏறி
”வண்டியை எடுங்க ….. போங்க.. எவ்ளோ பணம் என்றாலும் வாங்கிக்கோங்க.” என்ற அழுதபடி தன்னை யாரென்று கூட பார்க்காமல் பேசி. முகம் மூடி அழும் ஐஸூவை கண்டு வண்டியை எடுத்தான்.
தனது இல்லம் வந்து விட்டது என்றறிந்த பின் வேகமாக பணம் மட்டும் கொடுத்து முகம் பார்க்க ‘தனது வீடு எப்படி இந்த ஆட்டோக்காரனுக்கு தெரியும்?’ என முகம் பார்க்க அது ரித்தீஷ் மாமா என்றதும் விதிர்த்துப் போனாள்.
பணம் அப்படியே கீழே விழ ரித்தீஷ் அவளின் முகம் பார்த்தே எடுக்க ஐசஸூவிற்கு முகமே கறுத்துவிட்டது.
ஒரு கனம் இவனும் அவர்களை போல தானே லேகா சொல்லவில்லையா? அந்த வெங்கட் சொல்லவில்லையா? என்றெண்ணி கொண்டாலும் அவளின் மீது தோளில் பாந்தமாக இருந்த சால்வை கிழிந்து இருக்க அவனை அதற்கு மேலும் பார்க்க முடியாமல் ஓடிச்சென்றாள்.
தான் தற்பொழுது உள்ளே செல்வது தேவையற்ற ஒன்றாக கருதிய ரித்தீஷ் அமைதியாக வெளியேறினான்.
இங்கு தணிகாசலம் இரவு வீட்டுக்கு வந்து மகள் வந்துவிட்டாள் என்பதிலே நிம்மதி அடைந்தவர் உணவை உண்டு நிம்மதியாக உறங்கினார்.
பெண்ணவளுக்கு உறக்கம் வராமல் போனது. ஐஸூ ஒன்றும் சிலரை போல இல்லை பார்க்க தான் அப்படி. அதுவும் அவளின் நட்பு வட்டாரம் தான் அவளின் இந்த நிலைக்கு காரணம்.
தான் திலீப் கூட போகும் பொழுது மிக கண்ணியமாக ‘உனக்கு டிரஸ் நன்றாக இருக்கு ஐஸூ.’ என்றே சொல்லி அழைத்து சென்றவன் இவள் லேகா பூர்வீ இல்லை என்றதும் பயத்தில் கொஞ்சம் தடுமாற போனில் லேகவுக்கு அழைப்பை தொடுக்க அது திலீப் கையில் இருக்க கண்டவள் வெங்கட் அதற்குள் பாதி மதுவில் இருந்த காரணத்தால்….
”ஐஸூ கண்ணு அவங்க எல்லாம் வரலை வர மாட்டாங்க… நீ மட்டும் தான் எனக்கு பெர்த்டேவுக்கு வந்திருக்க, நீ மட்டும் தான் எங்களுக்கு பரிசு பொருளா மாற போற” என்று சொல்ல அதற்குள் பிரபுவின் பார்வையிலே ‘தான் தவறாக இங்கு வந்து மாட்டி இருக்கின்றோம்’ என உணர்ந்து வெளியே போக முயன்றாள்.
திலீப் சால்வை இழுத்து கையை கட்ட பார்க்க, நொடியில் அவனை தள்ளி விட்டு கதவை சாற்றி வெளியே ஓடி வந்து விட்டாள். நொடியில் தப்பித்த உணர்வு வந்தாலும் பெண்ணவளின் மனம் அந்த இடத்தில் தப்பித்த கனம் மனமெங்கும் பயத்தில் ஓலமிட்டது.
ரித்தீஷ் ஒன்றும் தோன்றவில்லை அவள் சென்ற ஐந்தே நிமிடதிலே ஐஸூ திரும்பியது நல்லது என்று மட்டும் புரிந்தது. அவளுக்கு அவர்கள் இன்னொரு முகம் அறிந்து கொண்டால் என்ற நிம்மதி அவனுக்குள்.
