Skip to content
55 / 100 SEO Score

அத்தியாயம்-5

 

காலையிலே தனிகாசலத்திற்கு போன் வந்தது. அவரின் நண்பர் ஒருவரிடம் அந்த பக்கம் என்ன பேசி இருப்பாரோ, என்னவோ இங்கே தணிகாசலம் முகம் ரௌத்திரமாக மாறியது.

வீடே அதிரும் வகையில் ”ஐஸ்வர்யா… ஐஸ்வர்யா….” என கத்த ஓடி வந்தது என்னவோ வைதேகி தான்.

”என்னங்க? எதுக்கு இப்படி கத்தறிங்க?” என பதறினார்.

”எங்க உன் பொண்ணு?” என அதிகார தோணியில், பதறிய வைதேகி

”அவ அவ அவளோட ரூமில் தான் இருக்கா கொஞ்சமா காய்ச்சல் போல அதான் தூங்காற கல்லூரிக்கு போகலை.” என்றதும் விறுவிறுவென்று அவளின் அறைக்கு போனார். தணிகாசலம் போகும் விதமே வைதேகிக்கு கலக்கம் தர அவரும் கூடவே வந்தார்.

”ஐஸ்வர்யா என மீண்டும் கத்த அவ்வறையில், அதுவும் தந்தை குரல், இந்த அளவு தன்னை கோவத்தோடு அழைக்க, புரியாமல் எழுந்து நின்றாள்.

நேற்றைய அதிர்ச்சியின் பாதிப்பில் காய்ச்சலும், பயமும் நண்பர்கள் மேலே இழந்த நம்பிக்கையும் ஒரு சேர தள்ளாடி எழ செய்தாள். அவளின் தள்ளாட்டில், பழமையா குணம் கொண்ட தணிகாசலம் மகளை பற்றி போனில் வந்த செய்தியும் சேர்த்து வைத்து அவளை அருவருப்புடன் நோக்கினார்.

”என் என்னப்பா?” என்றால் குரல் சுரத்தை குறைந்து

”நேற்று பார்ட்டி போனியே… பார்ட்டி எங்க நடந்தது?” என கேட்க ஐஸூவோ நேற்றே ஏற்பட்ட கலக்கம் போகட்டும், இன்று அப்பாவிடம் உண்மை சொல்லி அதுக்கும் திட்டு வங்க வேண்டுமா? என அஞ்சி நேற்றைய பொய்யையே சொன்னாள்.

”ஃப்ரெண்ட் வீட்ல அப்பா…” என சொல்லி எச்சி விழுங்க

”உண்மையை சொல்லு..” என்று அவர் திரும்பி கோவத்தோடு கேட்க

”வீட்ல தான் அப்பா…” என்ற அடுத்த நொடி தன் தந்தை தன்னை அடித்து விட்டது புரிந்தது. இதுவரை அவரிடம் அடிவாங்கி பழக்கம் இல்லாமல் இருந்த ஐஸூவிற்கு கன்னம் எல்லாம் எரிந்தது.

”அப்பா..” என ஐஸூ பேச வைதேகியோ ”எதுக்கு இப்ப அவளை அடிக்கறிங்க… என்ன செய்தா?” என்றார்.

”கேளு இவளிடமே கேளு… செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு என் முகத்தில கரியை அள்ளி அள்ளி பூசிட்டா.” என்று கோபம் குறையாமல் கூறினார்.

”புரியற மாதிரி பேசுங்களே… ஐஸூ என்ன ஆச்சு… நீயாவது சொல்லேன்” என கேட்க ஐஸூவிற்கு அழுகை மட்டுமே அருவியாக பொழிந்தது.

”அவள் சொல்வாளா…. அதான் திரும்ப திரும்ப பொய் பேசறாலே… உன் மகள் நேற்று பார்ட்டி சொன்னது வீட்ல இல்லை… அதுவும் பொம்பள பிள்ளைக்கு பார்ட்டி இல்லை… அவ கூட படிக்கற பையனுக்கு… அந்த பையனுக்கு பிறந்த நாளுனு போயிருக்கா” என்றார்.

”அதனால என்ன பையன் பொண்ணு யாராயிருந்தாலும் பிறந்த நாளுக்கு அழைப்பு கொடுத்தா போக தானே செய்வாங்க..” என்று வைதேகி விவரம் அறியாது பேசினார்.

”உன் பொண்ணு போனது வீடாயிருந்தா, உன்னை, என்னை போல அப்பா அம்மா இருப்பாங்க அவங்க கேள்வி கேட்பாங்களே… ஆண் பெண் சேர்ந்து கேக் வெட்ட மட்டும் செய்தா வீட்ல நடக்கும். இங்க தான் சொசைட்டி மாறி போச்சு நாகரீகம் அப்படி இப்படி சொல்லிட்டு தண்ணி தம்மு இருக்கங்களே… அது எல்லாம் வீட்ல சரி சொல்லுவாங்களா….”

”என்ன…” என அதிர்ந்த வைதேகி மகளிடம் திரும்பி ”ஐஸூ… குடி கும்பளாம் என்று இருக்கற இடத்துக்கு தான் போனியா? நீயும் அப்படி?” என்று கேட்க மகளின் முகம் அமைதியிலும் அழுகையிலும் இருக்க வைதேகி கணவனை பார்த்தாள்.

”அது மட்டுமா அங்க இருக்கற பசங்களுக்கு ஆளுக்கு ஒரு பொண்ணு ரூமுணு புக் பண்ணி இருக்காங்க…. உன் பொண்ணு படுக்கை வரை போயிருக்கா…. ” என்றதும் ஐஸூ பதறி கொண்டு

”அப்பா அப்படி எல்லாம் இல்லைப்பா… அங்க போனேன் தான். ஆனா அங்கே என் ஃப்ரெண்ட் லேகா, பூர்வீ வருவாங்கனு நினைச்சேன் ஆனா அவளுங்க ஏன் வரலைனு தெரிலை… என்னை அங்க வரவைக்கிறது தான் அந்த பசங்க திட்டம் பா… தவிர இதுல எனக்கு வேற எதுவும் தெரியாதுப்பா” என முடிக்க தணிகாசலம் அவளை எரிப்பது போல பார்த்தார்.

”இன்னும் எதுக்கு பொய் சொல்ற… நீயும் உன் கூட படிக்கற பையனும் சேர்ந்து தான் ஹோட்டலுக்கு போனிங்க?” என்று தணிகாசலம் கேள்வி கேட்க

”இல்லை அப்பா அது….” என ஐஸூ பேச வரும் முன்

”நான் உன்னை ஒழுங்கா வளர்த்தேனானு எனக்கே சந்தேகமா இருக்கு? எத்தனை பொய்…. உனக்கு எவ்ளோ சுதந்திரம் கொடுத்தேன் எல்லாம் மண்ணா ஆகிட்டீயே…. என் முகத்திலே விழிக்காதே… கூடிய சீக்கிரம் ஒருத்தனை கட்டி வைக்கறேன். அவனோட ஒழுக்கமா வாழு” என தணிகாசலம் மகளை வெறுப்போடு உமிழ்ந்து கடந்தார்.

”அப்பா அப்பா நான் சொல்றதை கேளுங்க” என பின்னாலே வந்த மகளை சட்டை செய்யாமல் வைதேகியை பார்த்து,

”நான் சொல்ற வரை இவளை காலேஜி மண்ணங்கட்டிக்கு எல்லாம் அனுப்பாதே…. காலையில் போனில் என் பிரெண்ட் ராஜிவ் போன் செய்து என்னவெல்லம் சொன்னான் தெரியுமா? சே காதுல கேட்க முடிலை… இவளுக்கு முதலில் ஒரு வரன் பார்த்து விட்டு தான் மறுவேலை” என நகர்ந்தார்.

தனது தந்தை முகம், தன் மீது இத்தகைய வெறுப்பை உமிழ்ந்தது இதுவே முதல் முறை அதில் இருந்தே ஐஸூவால் மீளமுடியவில்லை… வைதேகி தான் மனம் பதைக்க

”என்ன அச்சு ஐஸூ… ஏன் போன? அப்பா இப்படி பேசறார்?” என்றே கேட்க அம்மாவை கட்டி பிடித்து அழுது கரைந்தாள்.

”அம்மா உனக்கு என் ப்ரெண்ட்ஸ் லேகா, பூர்வீ தெரியும் தானே.? அவர்களோட வெங்கட், திலீப், பிரபு மூன்று பெரும் ஒரு குரூப் தானே.. வெங்கட் பிறந்த நாள் என்று ஹோட்டலில் பார்ட்டி கொடுக்கறேன். லேகா, பூர்வீ எல்லாம் வருவாங்க என்று சொல்லி தான் வர சொன்னான் ஆனா அங்க யாருமே வரலை. அவன் என்னை வரவழைச்சு என்கிட்ட அத்துமீற பார்த்தான். நான் உடனே சுதரிச்சு தள்ளிட்டு வந்துட்டேன்… ஆனாலும் அப்பாவிடம் சொன்ன ஆளு நானும் திலிபனும் சேர்ந்தே போனப்பா நண்பர்களா தானே போனோம் அதனால தப்பா சொல்லி இருக்கார்.. அவனுங்க வேணுமின்னா அப்படி ரூம் புக் பண்ணி இருக்கலாம். எனக்கு அது எல்லாம் தெரியாது அம்மா… நானே அங்க இருந்து ஓடி வந்து தான் சேர்ந்தேன் அப்படி இருக்க நானே அப்படி எல்லாம் தப்பு செய்ய போவேனா… அப்பா மற்றவர்கள் பார்த்து பேசியதை வைத்து என்னை கேவலமா நினைக்கின்றார்.. நான் அப்படி இல்லை மா… நான் உங்க பொண்ணு.. கொஞ்சம் கேலி கிண்டல் திமிர் இருக்குமே தவிர ஒழுக்கம் கேட்டு எல்லாம் போக மாட்டேன்…மா..” என கதறி அழும் மகளை நம்பாமல் இருக்க முடியாது. அதே சமயம் கணவரின் பேச்சையும் மீற முடியாது தவித்தார் வைதேகி.

அன்றைய நாளில் எங்கும் போகாமல் வீட்டில் அதுவும் அறையில் முடங்கினாள் ஐஸூ. தவறு செய்த வெங்கட் மற்றும் திலீப் கல்லூரியில் அவள் வந்து இருங்கின்றாளா என நோட்டம் விட மற்ற தோழனின் உதவியால் போனில் கேட்டு அவள் கல்லூரிக்கு வரவில்லை, அவள் வீட்டில் சொல்லவில்லை என்றதும் நிம்மதியோடு வந்து சேர்ந்தார்கள்.

இங்கே ரித்தீஷ் அவள் இன்று தெளிவாக வந்து சேர்ந்தால் வீட்டில் அவள் நலமாக இருக்கின்றாள் என்றெண்ணி வந்தவனுக்கு அங்கே ஐஸ்வர்யா வரவில்லை என்றதும் தவித்துப் போனான்.

அடுத்த நாளும் சென்று கல்லூரியில் பார்க்க அங்கே ஐஸ்வர்யா வரவில்லை என்றதும் மாலையில் அக்கா வீட்டுக்கு போகலாம் என தணிகாசலம் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வாசலிலேயே தணிகாசலம் குரல் உயர்ந்து ஒலித்தது.

”சே இவளால் இன்னிக்கு தான் வருத்தபடறேன்… ஒவ்வொருத்தனும் வரன் கேட்டு நிற்கும் பொழுது கேட்கற கேள்வி இருக்கே, நாக்கை பிடுங்கி சாகலாம்…. இதுவரை எனக்கு சம்மந்தி ஆக துடிச்சவன் எல்லாம், அந்த ராஜிவ் அசோசியட் மீட்டிங் வந்து இவளை பற்றி பேசியதும் எல்லாம் போச்சு. என் காதுபட என்ன பேசறாங்க தெரியுமா?” என எரிந்து விழுந்தார்.

”யாரோ சொல்றதை கேட்டு நீங்க நம்பறீங்க… நான் சொல்றதை ஏன் அப்பா காது கொடுத்து கேட்க மாட்டேங்கறிங்க? உங்களுக்கு அப்போ சமூகத்தில என்ன சொல்வாங்க என்று தான் யோசிச்சிங்க என்னை பற்றி யோசிக்கலை” என பேசியவள் விறுவிறுவென்று கிட்சன் சென்றவள் சமையல் அறைக்கதவை மூடி கேஸ் திறந்து விட ரித்தீஷ் நொடியில் பதறி போனான்.

‘அக்கா அக்கா… ஐஸூ கேஸ் திறந்து வைத்து இருக்கா…” என சொல்ல அவனின் அக்கவோ… கணவருக்கும் மகளுக்கும் நடுவில் போராடி இருந்தவர் தம்பி வருகையில் “அவளை தடுத்து நிறுத்து ஈஸ்வர்” என்றார்.

ரித்தீஷ் கிச்சன் கதவை உடைக்க முயன்று கொஞ்சம் கொஞ்சமாக தாழ்ப்பாள் லேசாக உடைத்து உள்ளே வந்தவன் முதலில் அங்கே இருந்த கேஸை மூடி லைட்டர் கையில் வைத்து இருந்த ஐஸூவை முறைத்து அதனை பிடுங்கி எறிந்து ஜன்னல் கதவை திறந்து விட்டு நின்றான்.

தணிகாசலம் இன்னமும் மனம் இறங்காமல் அதே நிலையில் தான் இருந்தார். வைதேகி தான் மகளை தோளிலும் முதுகிலும் அடித்து அழதார்.

”உன்னை நெருப்புக்கு கொடுக்கவா டி இப்படி வளர்த்தேன்….” என அழ இம்முறை ரித்தீஷ் கோவமாக தான் இருந்தான்.

”மாமா என்ன இது? ஐஸூ மேல நீங்க எவ்ளோ பாசம் வைத்து இருக்கிங்க எப்படி உங்க கண் எதிரில் சாக போறா கல்லு மாதிரி இருக்கிங்க? என்ன ஆச்சு?” என்றான்.

”உனக்கு எல்லாம் சொன்னா புரியாது… உனக்கும் நான் கேட்ட அசிங்கம் எல்லாம் காதில் வரும் பொழுது உங்க அக்கா பொண்ணு செத்து போயிருக்கலாம் யோசிப்ப” என்றார் விரக்தியாக.

”என்ன காதில் வரும்… ஐஸூ மாமா என்ன சொல்றார்? அக்கா சொல்லேன்” என்றதும் நடந்தவையை வைதேகி தனது தம்பியிடம் ஒப்பாரியாக சொல்லி முடித்தார்.

”மாமா அன்னிக்கு என் ஆட்டோவில் தான் அந்த திலீப் வந்தான் அவன் இறங்கி நின்று பேசி பிறகு தான் ஐஸூவை அழைச்சுட்டு போனான். எனக்கு நீங்க பிறந்த நாளுக்கு என்று அனுப்பி இருப்பிங்க என்று தான் நான் ஆட்டோ திருப்பி நின்றேன். ஐந்து நிமிஷம் கூட இருக்காது ஐஸூ அழுதுட்டே வந்து என் ஆட்டோவில் ஏறி இங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டா. இங்க வரும் வரை கூட அவள் என் ஆட்டோவில் தான் ஏறினா என்று கூட அவளுக்கு தெரியாது. அந்த அளவு அவள் அழுகையோட தான் வந்து சேர்ந்தா… அவள் போனதை சொன்ன உங்க ஃப்ரெண்ட் அவள் ஐந்து நிமிஷம் கூட அங்க இல்லை அழுது திரும்பி வந்து விட்டதை சொல்லலையா.?

ஏன் மாமா யாரோ ஒருத்தர் சொல்வதை எல்லாம் கேட்டு நம்ம ஐஸ்வர்யா மேல கோவப்படறிங்க? அவள் தப்பு செய்ய போவாளா? ஒரு நிமிஷம் யோசிச்சிங்களா?” என்றதும் தணிகாசலம் மகள் போனது போலவே திரும்பி இருக்கின்றாள் என்று நிம்மதி அடைந்தாலும் மற்றவர்கள் பேசிய விதம் எல்லாம் மாறுமா? பொண்ணு பற்றிய நிகழ்வுகள் தான் எல்லோருக்கும் சொல்லி புரிய வைக்க முடியுமா? என்ற அயற்சியில் அப்படியே இருந்தாலும் கொஞ்சம் போல அவரின் கோவம் தனிவதை கண்டு கொண்டான் ரித்தீஷ்.

”என்ன மாமா யோசிக்கறிங்க?”

”அவளை இது வரை பொண்ணு கேட்டு போட்டி போட்ட எல்லாரும்…” என்று முடிக்க முடியாமல் நிற்க ரித்திஷிற்கு அது சொல்லாமலே புரிந்தது.

போட்டி போட்ட எல்லோரும் தானாக அவளை வேண்டாம் என்று சொல்லி இருப்பர்கள். வேறென்ன…. இங்கு சேலை எப்படி பாழ் ஆகும் என்று உதற தான் மக்கள் இருக்கின்றார் ஆனால் சேலை எந்த தவறும் இல்லாமல் காற்றில் கூட கிழிப்படும் என்பதை யாருமறியார்.

”அவளை எதுக்கு காலேஜிக்கு அனுப்பாமல் இருக்கிங்க?” என்றான் ரித்தீஷ்.

”அவளை இனியும் அனுப்பனுமா?” என தணிகாசலம் கேட்டார்.

”ஆமா அவள் மீது எந்த தப்பும் இல்லை. அப்ப நீங்களே பூட்டி வச்சி போகாம இருக்க செய்திங்க என்றால் எப்படி? ஊர் அப்போ தப்பா தான் பேசும்.. முதலில் நாளைக்கு அவளை காலேஜ் அனுப்ப வழியை பாருங்க” என்றான்.

”யோசிக்கணும்,…..தனியா அவளை இனி அனுப்ப முடியாது” என்றார்.

வைதேகியோ ”டேய் நீ பழைய மாதிரி அவளை இங்க இருந்து கூட்டிட்டு போ டா…” என்றார்,

ரித்தீஷ் அக்கா மகளை தான் பார்த்தான். அவளோ அவனை ‘சரி சொல்லுங்க எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. ஜெயில் போல இருக்கு’ என்பதாய் பார்ப்பது போல தோன்ற ஹ்ம்ம் என்றான்

-தொடரும்

பிரவீணா தங்கராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!