அத்தியாயம்-6
ஐசு ஆட்டோ ஏறி அம்ர்ந்தவள் எப்பொழுதும் இடக்காக பார்க்கும் கண்ணாடியில் கூட ரித்திஷை பார்க்காமல் இருந்தாள். ஆனால் உள்மனம் அவனுக்கு ஒரு நன்றியை தெரிவிக்க சொல்லி நச்சரித்து கொண்டியிருக்க குனிந்தவள் பார்வை நிமிரவே இல்லை.
தந்தையே தன்னை நம்பாமல் பேசிய விதம் அவளுக்குள் தலைநிமிர செய்யவில்லை. நல்ல வேளை அங்கே ரித்தீஷ் மாமா இருந்தமையால் அவருக்கு தனது நிலமை புரிந்தது என நிம்மதியில் இருந்தாள்.
இறங்கும் இடம் வந்த பின்னும் அவள் இறங்காமல் இருக்க கண்டவன்
”ஐ..ஸூ.. என்றவன் பேச்சு காற்றில் மெல்ல கரைந்தது. அவளுக்கு ஐஸூ என்று எல்லோரும் கூப்பிடுவது போல ரித்தீஷ் கூப்பிடுவது பிடிக்காது என உணர்ந்தவன் பெயரை தவித்து
”காலேஜ் வந்துடுச்சு இறங்கு…” என்றதும் நிமிர்ந்து சுற்றி சுற்றி பார்த்தாள்.
நிதானமாக இறங்கியவள் செருமிக்கொண்டு ”ரொம்ப நன்றி மா… மாமா. அது.. நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுவிங்க என்று எதிர்ப்பார்க்கலை…. தேங்க்ஸ்” என்றாள்.
அவனோ ”நல்லவங்க கெட்டவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. யார் எப்படி என்று பார்த்து பழகு…. உனக்கு பிடிச்ச ஃப்ரெண்ட் மற்றவர்களோட பழகறாங்க அவங்களும் நல்லவங்க என்று நாமளா நினைச்சுக்க கூடாது… யோசி” என வண்டியை எடுத்து கிளம்பினான்.
ஐஸூ தனது வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள். தூரத்திலே திலீப், பிரபு, வெங்கட் மூவரும் அவளை பார்த்து விட்டு நெருங்கி வந்தார்கள்.
ஆட்டோவில் வெளிகேட்டுக்கு சென்ற ரித்தீஷ் மனம் அவளிடம் மறுபடியும் அவனுங்க வந்து பேசி பிரச்சனை பண்ணினா என்ன செய்ய, நாம ஒரு வார்னிங் செய்யாமல் வந்துட்டோமே… இல்லை அவளிடம் கொஞ்சம் புத்திமதி சொல்லி எப்படி சமாளிக்க என்றாவது சொல்லிட்டு வந்து இருக்கணுமோ.. என இறங்கி அவளை நோக்கி சென்றான்.
”ஹாய் ஐஸூ அன்னிக்கு நான்.. டிரிங்க்ஸ் பண்ணியதில் உன்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தேன் பட் தண்ணீ இல்லாமல் இருந்தா உன்னிடம் ஜெனுவா தான் இருந்திருப்பேன்” என வெங்கட் முதல் மன்னிப்பு கேட்க அதனை தொடர்ந்து திலீப்
”யெஸ் ஐஸூ…. அன்னிக்கு ரூம் புக் என்று இவன் தெளிவா சொல்லாமல் விட்டுட்டானா நான் நீ ஓக்கே சொல்லி..’ ஐஸூ பார்வை அவனை சுட வாயை மூடினான்.
”மன்னிச்சுடு இனி இப்படி நடக்காது” என பிரபு சொல்ல மூவரையும் பார்த்து
”ஏன் டா உங்களுக்கு தண்ணீ அடிச்சா தப்பா நடக்க தோணுமா என் இடத்தில உன் அம்மா அக்கா இருந்தாலும் இதே மாதிரி நடக்க முயற்சி செய்விங்களா?” என்றதும் மூவரும்
”ஏய்…” என கத்த
”சீ… கத்தாதிங்கடா… உண்மையை சொன்னா உரைக்குதோ… எப்படி எப்படி ரூம் புக் என்றதும் உங்களுக்கு நான் வேற மாதிரி நினைச்சியா? அடிச்செருப்பாளா… நீங்க பெர்த்டே என்ற காரணத்துல தான் நான் அங்க வந்ததே… நீங்க எந்த அளவுக்கு அயோக்கியன் என்று நேரில பட்டு தெரிந்து கொண்டேன். இனி நல்லவன் வேஷம் போட்டு என்கிட்ட பேச வந்து நின்னிங்க… செருப்பாலே அடிப்பேன்… உங்களிடம் நட்பு வச்சேன் பாரு என்னை சொல்லணும்… இனி நான் இருக்கற பக்கம் வந்து நிற்காதிங்க” என கிளம்பி போனாள்.
ரித்தீஷ் இன்றைய ஐஸூவை பார்த்து பிரம்மித்து தான் போனான். அவள் இவர்களிடம் பேசிட பயந்து போவாள் என வந்து நிற்க, அவளோ இப்படி பேசி அவர்களை எதிர்க்க செய்ய, இவனோ சத்தமில்லாமல் திரும்பினான். வகுப்பில் லேகா பூர்வீ வந்து நிற்க லேகா வந்து ”ஹாய் ஐஸூ என்ன டி நேற்று வரலை” என்றாள்.
பூர்வீ எங்கே?” என்ற கேள்வியில் லேகா அவள் இன்னும் வரலை” என சொல்ல ஐஸூவிற்கு உள்ளம் கொதித்தது.
பூர்வீ வகுப்பு தொடங்க முதல் பீரியட் முடிய வந்து நின்றாள்.
ஐஸ்வர்யா பார்வை தன்னை துளைக்க அடுத்த வகுப்பும் முடிய கேண்டீன் நேரம் வர ஐஸ்வர்யா அருகாமை வந்த பூர்வீ அழ துவங்கினாள்.
”ஐஸூ…. என்னையும் இவர்களோட தப்பா நினைக்காதே… என் போனை திலீப் என்னிடம் இருந்து திருடிட்டு போயிட்டான். அதனை போன் பண்ணி கேட்கும் பொழுது நாளைக்கு வந்து வாங்கிக்கோ தான் சொன்னான். சரி அவனிடம் தானே இருக்குனு இருந்துவிட்டேன். எனக்கு அவனுங்க இப்படி பிளான் போட்டு இருப்பானுங்கனு நினைக்கலை…. லேகா தான் திலீப் கூட நேற்று உன்னை பற்றி பேசிட்டு இருக்கும் பொழுது கேட்டேன். என்னால அதுக்கு பிறகு உன்னை பார்க்க நினைச்சேன் முடியலை… இவங்க முகம் தெரிந்ததால் என்னால தாங்கிக்க முடியலை… திலீபை நான் விரும்பினேன் அதனால கூட இருக்கலாம்.. ஆனா இன்னமும் விரும்ப நான் முட்டாள் இல்லை….” என அழ லேகா இங்கு இல்லை என்பதை தாமதமாக உணர்ந்தாள் ஐஸ்வ்ர்யா.
தவறு செய்தவர்கள் ஓடி ஒளிவார்கள் என்பதை அறிந்து கொண்டு பூர்வீயை ஐஸூ தேற்றினாள்.
ஆறுதலாக ஒன்றும் பேசாவிட்டாலும் அவளின் தோளில் தொடுகையே பூர்வீக்கு நிம்மதியளித்தது.
இரு தினம் கழிய மீண்டும் பிரச்சனை ஆரம்பமாகியது. தணிகாசலம் தொழில் வட்டாரத்தில் வரன் தேட, சொந்ததில் இருக்கும் பொழுது வெளியே தேடுவது பெண்ணின் குணத்தில் குறை தேடும் உலகமகா கேள்வி கேட்க சாதாரணமாக கேட்கும் கேள்வி கூட தணிகாசலத்திற்கு வேதனையை கூட்டியது.
கல்லூரி வேண்டாம் என்று மறுக்க அதற்கு ஐஸூவோ ”தப்பு செய்த அவர்களே வந்து நிற்கும் பொழுது ஒரு தப்பும் செய்யாமல் நான் ஏன் கல்லூரி செல்ல கூடாது வெளியே போக கூடாது” என்ற கைதி நிலையில் வாதிட்டாள். தணிகாசலமோ ”ஊரே உன்னை ஒழுக்கம் கெட்டவள் என்று சொல்ல, நீயே இப்படி இருப்பியா எதுக்கும் வீட்டுக்குள் இருக்க என்னவாம் உன் அம்மா எல்லாம் அந்த காலத்தில் அப்படி தானே இருந்தாங்க” என வெடிக்க
”அப்பா நான் தப்பு பண்ணாமலே எதுக்கு தண்டனை? எதுக்கு இப்படி அவசரமா கல்யாணம் பண்ண வரன் பார்க்கறிங்க?” என்றாள்.
”உன்னை ஒருத்தன் கையில் பிடித்து கொடுத்தா, நீ எவனோடவும் பிறந்த நாள் அது இது சுற்ற மாட்ட” என சொல்ல தந்தை தன்னை புரிந்து கொண்டார் என்ற எண்ணம் மீண்டும் தவிடு பொடியாக அமைதியாக அமர்ந்தாள்.
நான் நல்லவள் நான் நல்லவள் என்று எத்தனை முறை சொல்ல வேண்டும்? அப்படி சொல்லி கிடைக்கும் எனது புனிதம் தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமா? அதுக்கு நான் கெட்டவ என்று அப்படியே நினைச்சுக்கிட்டு ஏதோ வரனுக்கு நான் கழுத்தை நீட்டனும் அதானே இவர்களுக்கு வேணும்? என்றே மனதிலே பேசியே முடித்து இருந்தவள் முடிவாக
”கல்யாணம் செய்யுங்க கருமாதி செய்யுங்க” என அறையில் முடங்கி கொண்டாள்.
வேண்டாத வெறுப்பாக அடுத்த நாள் பெண் பார்த்து விட்டு சென்றனர். வெளியூர் மாப்பிள்ளை ஒருவன்… அடுத்த நாள் அதுவும் தவிடு பொடியாக போனது.
யாரோ ஒரு புண்ணியவான் ரித்தீஷ் இது நாள் வரை இங்கே இருந்த கதையும், தற்பொழுது வரன் தேட அவன் இங்கு இருக்கும் பொழுது அவனுக்கு நெருங்கிய சொந்தம் இருப்பின் எதற்கு வெளியே மாப்பிள்ளை தேடல் என கேட்க அதற்கு தனிக்காசலம் உறவுகளுக்குள் திருமணம் வேண்டாம் என்பதை சொல்ல அதற்கு அவரோ ‘இல்லை உங்க பெண்ணை பற்றி விசாரிச்சதில் கூட படிக்கின்ற பையனோட..’ என்ற பேச்சை கேட்க முடியாமல் தணிகாசலம்
”உங்களுக்கு என் மகளை பிடிக்கலை என்றால் விடுங்க அதுக்கு எதுக்கு இப்படி பேசறிங்க” என போனை தூண்டித்தார்.
சுற்றி சுற்றி வெளியே தேட அதில் தணிகாசலமே வெறுப்பை கொண்டார்.
ரித்தீஷ் அன்று எதச்சையமாக அக்கா வீட்டுக்கு வர ”உன் தம்பி வர்றான் நீயே கேளு…” என தணிகாசலம் எழுந்து அறைக்குள் புகுந்து கொண்டார்.
ஒரு பக்கம் ஐஸ்வர்யா மறுபக்கம் தணிகாசலம் என இரு அறையில் இருவர் இருக்க வைதேகி தம்பியை அழைத்து உட்கார சொல்லி அவனை அமரவைத்தார்.
”என்ன அக்கா? ஏதோ ஃபிரிஜ் தண்ணீர் லீக் ஆகுது கரெண்ட் அடிக்கு சொன்ன பார்த்தா அப்படி தெரிலையே….” என்றவன் அதனை ஆராய்ந்தான்.
”உன்கிட்ட பேசணும் தான் வர சொன்னேன்” என வைதேகி மொழிந்தார்.
”பேசறத்துக்கா? பேச என்ன இருக்கு?” என்றார்.
”இருக்கு ஐஸூ பத்தி என்ன நினைக்கற..?” என்று கேட்கவும்,
”வளர்ந்த குழந்தைக்கா அவள்… ஆனா சமீப காலமாக அவள் நல்ல முடிவு எடுக்கறா? அந்த பசங்க கூட எல்லாம் பழக்கறது இல்லை… அதே போல அவனுங்க வந்து மறுபடியும் நல்லவங்க போல பேச முயற்சி பண்ணினாங்க இவளுக்கு அது வேஷம் என்று எல்லாம் புரிந்துடுச்சு… அவளுக்கு பக்குவம் வருது அக்கா” என்று சொன்னான்.
தணிகாசலம் மகளின் இந்த நடவடிக்கை அறியாமல் தான் பேசியது தவறே என தவித்தார். ஏனென்றால் கொஞ்ச நேரம் முன் மறுபடியும் அந்த பசங்க கூட பேசி பழக்குறியே?’ என கத்த செய்தார்.
”சரி அப்போ வளரந்த குமரி என்று சொல்ற?” என வைதேகி கேட்டு நின்றார்.
”கிட்டதட்ட… எதுக்கு அக்கா கேட்கற”
”அவளை கல்யாணம் செய்ய உனக்கு இஷ்டமா?” என்றதும் கேட்டுஅதிர்ந்து போனான்.
”என்ன அக்கா நீ… முதலில் இப்படி பேசறதை நிறுத்து” என்றான்.
”ஏன் ஏன் பொண்ணு ஒழுக்கத்தில் உனக்கும் சந்தேகமா அவள் தான் திரும்ப வந்தா சொன்ன”
”ஐயோ அக்கா ஐஸூவுக்கு எவ்ளோ நல்ல வரன் மாமா தேடிட்டு இருக்கார் நீ என்ன என்னை போயி… நான் ஆட்டோக்காரன் அக்கா… எனக்கும் அவளுக்கும் எப்படி?” என பதறினான்.
கொஞ்ச நேரம் முன் இதுவும் ஐஸ்வர்யா சொல்லிய அதே வார்த்தை தான். தணிகாசலம் எங்கும் வெளியே வரன் தேட தேட எல்லோரும் ஒன்று போலவே ரித்தீஷ் பற்றியும் கேட்க அவரோ மகள் இப்படி சமூகத்தில் பெயர் வாங்கிய பின் ரித்திஷை கட்டி கொடுக்க யோசித்தார். முன்பு அவருக்கே பிடிக்காத இந்த யோசனை தற்பொழுது வேறு வழியில்லை என்றெண்ணி அவர் சொல்ல அதற்கு தான் ‘அவன் ஆட்டோக்காரன் அவனை எல்லாம் எனக்கு கட்டிக்க முடியாது’ என ஐஸூ சொல்ல நேர்ந்தது.
”ஏன் டா நீயே ஆட்டோக்காரன் என்று ஒதுங்கற…. உனக்கு அவ அக்கா பொண்ணு அவளை கட்டிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு தானே அப்பறம் என்ன நீயே மாமாவிடம் கட்டிக்க கேட்க கூட செய்யலாம்” என்றார் வைதேகி. தம்பி தன் மகளுக்கு மணவாளன் ஆக விரும்பினார்.
”நீ புரியாம பேசற அக்கா.. நான் ஐஸூக்கு தகுதியான ஆளே இல்லை… அவளுக்கு மாமா நல்ல வரனா கொண்டு வருவார்… நீ இப்படி என்னை அவளோட முடிச்சு போட்டு கேட்கறதே தப்பு. மாமா காதில் விழுந்தா உனக்கு தான் திட்டு விழும்… நானே ஆட்டோ ஒட்டுறவன்… எனக்குனு என்ன தகுதி இருக்கு? முதலில் இப்படி பேசறதை விடு… நீ இப்படி கூப்பிட்டு கேட்க செய்வனு இருந்தா இங்க வந்திருக்கேவே மாட்டேன்” என திரும்ப இவன் பேசிய வார்த்தை எல்லாம் ஒரு நேரத்தில் தணிகாசலமே எண்ணியது தான். இதோ ஐஸூ கூட கொஞ்ச நேரம் இதை தான் தொண்டை வத்த சொன்னாள்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதுவரை தணிகாசலம் ரித்தீஸ்வரனை மகளின் துணைவன் என்ற கண்ணோட்டதில் பார்த்ததும் இல்லை பேசியதும் இல்லை இன்று தான் அந்த முடிவு எடுத்து அவளிடம் அவனை மணக்க பேச்சு எடுத்தார். அதற்கு ஐசுவரியா மறுக்க அவர் கோவம் கொள்ள மீண்டும் மகளின் பேச்சில் கடுப்பாகி வைதேகி அழைத்து ரித்திஷை அழைத்து அவனின் மனதில் என்ன உள்ளது என்றறிய எண்ணினார்.
அவன் மட்டும் ஐஸ்வர்யாவின் ஒழுக்கம் பற்றி பேசி, அவளை மணக்க வேண்டாம் என்றால், தானே கொல்ல போவதாக உறுமி தான் அறைக்குள் சென்றார்.
அவனோ ஐஸ்வர்யா பற்றி அப்படி பேசுபவனா? அவளின் தகுதி இன்னும் அதே நிலையில் இருக்கு என் தகுதி அப்படியே இருக்கு என மறுத்தான்.
”என் மகள் ஒழுக்கம் கெட்டவள் என்று மறுக்கறியா ஈஸ்வர்?” என்ற தணிகாசலம் குரலில்
‘அப்படி எல்லாம் இல்லை மாமா அவள் குழந்தை…” என இதுவரை தெளிவான குரலில் சொன்னவன் இப்பொழுது மெல்ல சொன்னான்.
”எனக்கு ஐஸ்வர்யாவ உனக்கு கட்டி கொடுக்க சம்மதம்.. நீயும் மற்றவங்க மாதிரி மறுக்க செய்வதா இருந்தா சொல்லு இருக்கற விஷத்தை குடிச்சு செத்து போறோம்” என்று சொல்ல மாமா இதுவரை மிடுக்கோடு பேசி பார்த்த ரித்தீஷ் அமைதியானான்.
”உங்க இஷ்டம் மாமா..” என சொல்ல வேகமாக ஐஸ்வர்யா கோபத்தோடு வெளியே வந்து நின்றாள்.
-தொடரும்.
