Skip to content
Home » தீரனின் தென்றல்-44

தீரனின் தென்றல்-44

தீரனின் தென்றல் – 44

Thank you for reading this post, don't forget to subscribe!

தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தென்றல் கூறிவிட்டு போக ‘இதை எதிர்பார்த்தேன்’ என்பது போல ஆதீரன் சாதாரணமாக நிற்க “சூப்பர்.. இன்னும் கொஞ்சம் பேசுனா தென்றல் ஈசியா ஓகே சொல்லிடுவா…” என்று கூறிய சித்ராவை அனைவரும் விசித்திரமாக பார்க்க

“அட போங்க சித்ரா… அவ என்னைக்கும் அவளோட முடிவுல இருந்து மாறவே மாட்டா…” ரூபி வருத்தமாக சொல்ல

“ஐயோ.‌.. இங்க தான் உங்க யாருக்கும் ஒரு விஷயம் புரியமாட்டேங்குது… தென்றலை எவ்வளவு லவ் பண்றேன் னு ஆதீ சார் சொல்லும் போது யாராவது அவ முகத்தை பார்த்தீங்களா… ஆதீ சார் கல்யாணத்துக்கு ஓகே னு சொல்லவே இல்லை..‌ தென்றலை உண்மையா ஆயிரம் மடங்கு அதிகமா காதலிக்கிறேன் னு சொன்னாரு.

ஆனா தென்றல்.. சாரை வெறுக்கிறதா இருந்தா பிடிக்கலை னு சொல்லிட்டு போகலாம்ல… ஆனா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன் னு சொல்லிட்டு போனா என்ன அர்த்தம்?” என்று சித்ரா கேட்க

“எனக்கு ஒன்னும் புரியல.. என்ன அர்த்தம் னு நீயே சொல்லிடு தாயே…” என்று ரூபா சொல்ல

“அடி லூசு… தங்கச்சிக்கு மச்சான் மேல இருந்த வெறுப்பு கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிருக்கு… ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தை மனசுல வச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொல்லிட்டு போறா… சித்ரா நீங்க இதை தானே சொல்ல வரீங்க?” குமார் சொல்ல

“எக்ஸாக்ட்லி… தென்றல் முதல் நாள் ஆதீ சாரை பார்த்த அன்னைக்கு இருந்ததை விட இப்போ கோபம் ரொம்பவே குறைஞ்சிருக்கு.. ஆனாலும் அவ கல்யாணத்தை மறுக்க என்ன காரணம் னு நாம அவகிட்ட பேசுனா தான் புரியும்..” என்று சித்ரா சொல்ல

“ஆமா… அடுத்தவங்க மனசை எல்லாம் சொல்லாமலேயே புரிஞ்சுக்க… ஆனா என் மனசு சொன்னாலும் புரிய மாட்டேங்குது..” என்று தன் போக்கில் மதன் புலம்ப

“முதல்ல இவங்க கல்யாணத்தை பார்ப்போம்” என்று அவனைப் போல மெல்லிய குரலில் பதில் தந்தாள் சித்ரா.

“சித்ரா… எப்படி இவ்வளவு தெளிவா சொல்ற மா?” பொன்னி கேட்க

“அம்மா.. தென்றல் வீட்டை விட்டு போய் சார் அவளை கூட்டிட்டு வந்தாருல்ல… அன்னைக்கு நீங்க யாரும் அவகூட பேசலை.. நான் பேசுனேன் தென்றல் அவ அப்பா இறந்ததுக்கும் ஆதீ சார் அம்மா இறந்ததுக்கும் தான் தான் காரணம் னு நினைச்சு ரொம்ப குற்றவுணர்ச்சில இருக்கா… அதை கடந்து அவளால எதையும் யோசிக்கவே முடியலை… அவளோட அந்த எண்ணத்தை தான் மாத்தி ஆகனும்” என்று சித்ரா சொல்ல

“அதை எப்படி மாத்துறது சித்ரா?” ரூபி கேட்க

“தென்றல் மனசுல இருக்குற மொத்தத்தையும் வெளியே கொண்டு வரனும்.. அவங்க மனநிலை முடிஞ்ச அளவுக்கு மாத்த முயற்சி பண்ணனும்… பாஸ் எனக்கு ஒரு யோசனை… பேசாம அபூர்வாவை வைச்சே பேசி பார்ப்போமா?” என்று மதன் கேட்க

“குழந்தையை வைச்சு… அதெல்லாம் சரிவராது வேண்டாம் மதன்..” ஆதீரன் மறுக்க

“இல்ல மச்சி… நாம தென்றல்கிட்ட பேசிப் பார்ப்போம் ஒத்துவரலைனா நாம குழந்தையை வைச்சு பேசலாம்… இதுதான் சரியான யோசனை…” குமார் சொல்ல

“இல்லடா… எனக்கு இன்னும் இது சரியா தோணலை…” ஆதீரன் தயங்க

“அண்ணே நீ சும்மா இரு.. முதல்ல நாங்க பேசி பாக்குறோம்… முடியாட்டி அபூர்வாவை விட்டு கேட்க வைக்கலாம்… நீ பொறுமையா இரு.” ரூபி சொல்ல

“சித்ரா சொன்ன அப்பறம் எனக்கும் கூட இது சரி னு தோணுது மாப்ளை…” பொன்னியும் சொல்ல அரை மனதாக சம்மதம் சொன்னான் ஆதீரன்.

“சரி… அப்போ நான் இப்போவே போய் பேசி பார்க்குறேன்..‌” என்று தென்றல் இருந்த அறை பக்கம் செல்லப்போன ரூபியை பிடித்து இழுத்து நிறுத்தினான் குமார்..

“என்ன ங்க என்னாச்சு?” அவள் சலிக்க

“அடி அவசரகுடுக்கை… கொஞ்சம் அமைதியா இரு. அப்புறமா பேசலாம் அவகிட்ட… அப்படியே பேசுனாலும் கூட நீ உன் திரு வாயை கொஞ்சம் மூடி வை… எதுவா இருந்தாலும் சித்ரா பேசி தென்றலை ஒரு வழிக்கு கொண்டு வருவாங்க..” என்று குமார் சொல்ல அவனை முறைத்த ரூபி

‘நீ வீட்டுக்கு வாடி… உனக்கு இருக்கு…’ என்று கூறும் தோணியில் கண்ணை சுருக்கி முறைக்க சற்று சுதாரித்த குமார்

“இல்ல ரூபி… தென்றல் பிடிவாதம் பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். நீயோ நானோ போய் பேசுனா நம்ம வாயை எப்படி அடைக்கனும் னு அவளுக்கு நல்லா தெரியும்… இத்தனை வருஷம் நாம பேச தொடங்குன உடனே நம்மளை அமைதியாக்குற மாதிரி எதாவது சொல்லிடுவா இல்லையா.. அதான் சித்ரான்னா அவங்ககிட்ட முகத்துல அடிச்ச மாதிரி சொல்ல கொஞ்சம் தயங்குவா… அந்த கேப் ஃபில் பண்ற மாதிரி அம்மா ஏதாவது பேசி மேனேஜ் பண்ணிப்பாங்க…

அதான் செல்லக்குட்டி நான் சொல்ல வந்தேன்.. வீணா நம்ம வாயை கொடுத்து நாமளே புண்ணாக்கிக்க வேண்டாம் பாரு…” என்று அசடு வழிய சமாளிப்பாக குமார் சொல்ல அமைதியாக முறைத்து விட்டு அமர்ந்து கொண்டாள் ரூபிணி.

சற்று நேரம் இவர்கள் ஹாலில் அமர்ந்திருக்க உள்ளே அறையில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் வெளியே வந்து விளையாட துவங்க மதனும் குமாரும் குழந்தைகளோடு விளையாட சித்ரா ரூபா பொன்னி அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

கிச்சன் சென்ற ஆதீரன் ஸ்ட்ராங்காக ஒரு காஃபி போட்டு கொண்டு வந்து “சித்ரா… தென்றல் இன்னும் ரூம்ல இருந்து வரலை..‌ அப்போ கண்டிப்பா அவ அழுதுட்டு தான் இருப்பா… அழுதா அவளுக்கு தலைவலி வந்திடும்… இந்த காஃபியை குடிக்க வைச்சு கொஞ்சம் பேசி பாருங்க..” என்று சொல்ல

சித்ரா வாங்கிக் கொண்டு கதவை உள்ளே பேசுவது வெளியே கேட்க ஏதுவாக திறந்து வைத்து உள்ளே சென்றாள்.

மெத்தையில் குப்புற படுத்து இருந்த தென்றல் சத்தமின்றி அழுகிறாள் என்று சித்ராவிற்கு புரிய

“தென்றல்… எழுந்திரு… எந்திருச்சு இந்த காஃபியை குடி ஃபர்ஸ்ட்..‌” என்று சித்ரா அழைக்க அவள் அசையவே இல்லை..

“தென்றல்…” என்று தொட்டு எழுப்பிய சித்ரா “போதும் தென்றல் ஏன் இப்படி ரூம்ல வந்து உட்கார்ந்து அழுதுட்டு இருக்க? உன்னை யாரும் ஃபோர்ஸ் பண்ணலையே… உன்னோட.. உன் குழந்தையோட ஃப்யூச்சர்க்காக தானே சொல்றோம்.. சரி, விடு எழுந்திரு ஃபர்ஸ்ட்…” என்று பேசியபடி காஃபியை டேபிள் மீது வைத்து விட்டு அருகில் அமர்ந்து தோளை பிடித்து எழுப்பி அமர வைத்து கையில் காஃபி குவளையை திணித்தாள் சித்ரா.

தென்றலுக்கும் அது தேவையாக இருந்தது… எதுவும் பேசாமல் மிடறு மிடறாக குளம்பியை விழுங்க குழம்பிய மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.

“தாங்க்ஸ் ஃபார் காஃபி சித்ரா…” என்று கோப்பையை நீட்ட வாங்கி ஓரமாக வைத்து விட்டு பேச்சை துவங்க சற்று எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டாள் சித்ரா.

“தென்றல்… நான் பேசப்போற விஷயம் உனக்கு தெரியும். உனக்கு பிடிக்காட்டியும் பேசித்தான் ஆகனும். ஆதீ சார் உனக்கு தப்பு பண்ணிருக்காரு தான்… பட் ஹீ ரியலைஸ் ஹிஸ் மிஸ்டேக்… ஓய் டோண்ட் யூ ஃபர்கிவ் ஹிம்?” சித்ரா கேட்க

“அவனை எப்படி சித்ரா மன்னிக்க முடியும்… என்னால கண்டிப்பா முடியாது… கெட்டவரான அவனோட அப்பா சாக என் அப்பா காரணம் னு சொன்னானே… என் அப்பா நல்லவரு சித்ரா… அவரு சாக நான் காரணமாக இவன் தானே காரணம்… அதுல பாதிக்கப்பட்டது யாரு… நான் இவனை எப்படி மன்னிக்க முடியும்?” நின்ற நிலையில் அப்படியே இருந்தாள் தென்றல்.

“தென்றல் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… ஆதீ சார் எதையும் வேணும்னே செய்யலையே.. அவர் கண் முன்னாடி நடந்ததை உண்மை னு நம்பினாரு. அது தப்பு தான்… அவர் தான் பாவம் உணர்ந்துட்டாரே… சரி தென்றல், இதை தவிர ஆதீ சாரை நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொல்ல வேற ஏதாவது காரணம் இருக்கா?” சித்ரா கேட்க

“வேற என்ன காரணம் வேணும் சித்ரா… என்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அவ்வளவு தான்…” ஆணித்தரமாக தென்றல் மறுக்க

“ஐயோ! அதான்டி ஏன் மாட்ட… அதையாவது உருப்படியா சொல்லித்தொலை…” என்று ரூபா எழுந்து வந்து கேட்க

“ஏனா? என் அம்மா தான் காரணம்… போதுமா… ” என்று தென்றல் குரல் அதிர கத்த அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தனர் தென்றலை…

“என் அம்மா தான் நான் இப்போ கல்யாணம் வேணாம் னு சொல்ல காரணம்… என் அம்மாவை நான் இப்போ பார்க்குற நிலைமை தான் காரணம்…” என்று கூறி உடைந்து அழ துவங்கினாள் தென்றல்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-44”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *