தீரனின் தென்றல் – 48
Thank you for reading this post, don't forget to subscribe!மதனுக்கும் சித்ராக்கும் மதன் ஃப்ளாட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்த குமார் அதே போல தென்றல் வீட்டிலும் செய்து வைத்திருக்க முதலில் திகைத்து தான் போனான் ஆதீரன்…
ஆதீரன் தென்றல் இருவரும் கீழே விருந்தில் இருந்த போது இந்த ஏற்பாடுகளை செய்திருக்க தீரனும் அதை அறிந்திருக்கவில்லை. ஆனால் தென்றல் எல்லாம் இவனின் ஏற்பாடு தான் என்று சரியாக தவறாக புரிந்து கொண்டாள் தீரனை..
“டேய் யாரை கேட்டு டா இப்படி ஒரு ஏற்பாட்டை பண்ணித் தொலச்ச?” என்று தனியாக இழுத்துச் சென்று மெல்லிய குரலில் பல்லை கடித்து குமாரை பார்த்து ஆதீரன் கேட்க
“ம்ம்… ஐயரை கேட்டு… டேய் கல்யாணம் ஆனா இதெல்லாம் பண்ணி தானடா ஆகனும்…” குமார் சொல்ல
“அது நார்மல் கல்யாணத்துக்கு… இது…” என்று தீரன் கூறிக் கொண்டு இருக்கும் போதே
“இது என்ன நாடக கல்யாணமா? நாடகத்துலயே கல்யாண எபிசோட் விட இந்த சீனுக்கு தான் மச்சி மவுஸ் அதிகம்…” என்று நக்கலாக குமார் சொல்ல ஆதீரன் முறைக்க
“மச்சான்… எனக்கு புரியுது.. தென்றல் உன்மேல கோபமா இருக்கா.. அதுக்காக உன் பக்கம் இருக்கிற நியாயத்தை எடுத்து சொல்ல உனக்கு ஒரு ஸ்பேஸ் வேணும் ல… அது இப்படி தான்டா க்ரியேட் பண்ண முடியும்..
உங்களை டிஸ்சர்ப் பண்ண யாரும் இல்லை... கொஞ்சம் கொஞ்சமா சொல்லி புரியவை கேட்க தென்றல் தயாரா இல்லாட்டியும் அவகிட்ட பேசிட்டே இருந்தா கண்டிப்பா நீ பேசுற ஆயிரம் வார்த்தைகள்ல ஒரு ஐநூறு வார்த்தையாவது அவ காதுல விழும் ல.. நூறு இருநூறு வார்த்தையாவது என்ன ஏதுன்னு புரியும்ல… எல்லாம் நல்லதுக்கு தான் மச்சான்..” என்று குமார் சொல்லிக் கொண்டு இருக்க
“அண்ணே… உனக்கு அந்த ரூம் ரெடி பண்ணி வைச்சிருக்கு… நீ என்ன இங்க வந்து இவர் கூட பேசிட்டு இருக்க?” என்றபடி வந்த ரூபிணி
“வேலு… பாப்பாக்கு தூக்கம் வந்திடுச்சு நீங்க கூட்டிட்டு போய் சித்ரா வீட்ல தூங்க வைங்க… நானும் அத்தையும் அப்புக்குட்டியை கூட்டிட்டு வரோம்” என்று ரூபா சொல்ல
“எது? சித்ரா வீட்லயா? ரூபி ஏன் மா இங்கேயே இருங்களேன்…” என்று ஆதீரன் அவசரமாக இவர்களை தடுக்கும் வகையில் கூற ரூபி முழித்தாள்.
“டேய்… என்னடா? இங்கே நாங்க எப்படி இருக்க முடியும்? அப்படியே நாங்க என்ன வெளிநாட்டுக்கா போறோம் இங்க பக்கத்து வீட்டுக்கு தானே டா…” குமார் சொல்ல
“சரி டா அப்போ பூர்வியை இங்கேயே விட்டு போங்க” என்று சொல்ல
“டேய்…” என்று பல்லை கடித்தான் குமார். “இப்படி சொன்னா வேலைக்கு ஆகாது… அப்புக்குட்டி..” என்று சத்தமாக குமார் அழைக்க “என்ன மாமா?” என்று ஓடி வந்தாள் அபூர்வா.
“அப்புக்குட்டி இன்னைக்கு சக்தி கூட சேர்ந்து விளையாடிக்கிட்டே தானே தூங்க போறீங்க… நாம ஏற்கனவே பேசிக்கிட்டோம் ல பாரு உங்க அப்பா உன்னை அவன் கூட தூங்க சொல்றான்…” என்று அபூர்வா உயரத்திற்கு குனிந்து குமார் கேட்க
“ஆமா அப்பா… நானும் சத்தியும் விளையாடிட்டே தூங்குவோம்… நீ போப்பா உனக்கு ஒழுங்கா கதை கூட சொல்ல தெரியலை…” என்று தகப்பனை வாரிவிட்டு சித்ரா வீட்டிற்கு சக்தி கையை பிடித்து கொண்டு அபூர்வா ஓடிவிட அவள் பின்னவே பொன்னி ஓடினார்.
தீரனை அந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து நிறுத்திய குமார் அந்த அறையை சாவி வைத்து பூட்ட
“வேலு இந்த ரூமை ஏன் பூட்டுறீங்க?” ரூபா கேட்க
“ம்ம்… உன் அண்ணனை நம்ப முடியாது… தென்றல் ரூமுக்கு போகாம நாம போனதும் இந்த ரூம்க்குள்ள போய் தூங்கிடுவான்… அதான்… டேய் மச்சான் நீ உள்ளே போ… நான் கதவை வெளியே லாக் பண்ணிட்டு போறேன்.. காலையில நாங்களே வந்து கதவை திறந்து உள்ளே வந்துப்போம்…” என்று குமார் சொல்ல தீவிரமாக முறைத்தான் ஆதீரன்.
“சரி… எனக்கு தூக்கம் வருது வா ரூபா நாம போகலாம்…” என்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு கதவை வெளியே இருந்து லாக் போட்டு விட்டு குமார் சென்றுவிட ஏதோ ஒரு தயக்கம் நெஞ்சில் தாக்க தென்றல் இருந்த அறைக்குள் சென்றான் ஆதீரன்.
கட்டிலில் ரூபி கட்டாயப்படுத்தி செய்துவிட்ட அலங்காரத்துடன் அழகு பதுமையாக ஜொலித்த தென்றலை ரசிக்க கூட இடம் தராமல் “ம்கூம்…” என்று முகத்தை திருப்பி கொண்டாள் தென்றல்.
“தென்றல்…” என்று ஆதீரன் பேச்சை துவங்க வெறுப்பாக அவனை பார்த்தவள் “என்ன அதான் எல்லாம் நீ ப்ளான் பண்ணின மாதிரி என்னை ட்ராப் பண்ணி மேரேஜ் பண்ணிட்டியே.. இன்னும் என்ன உனக்கு?”
எள்ளும் கொள்ளும் வெடிக்க தென்றல் கேட்க “ஏய்… நான் என்ன தென்றல் உன்னை ட்ராப் பண்ணேன்.. இதோ பாரு கல்யாணத்துக்கு சம்மதம் னு கூட நான் வாய்திறந்து சொல்லவே இல்ல… நீ ஓகே சொன்ன நான் அதை சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்…” ஆதீரன் சொல்ல
“அதானே… அதானே உன் திட்டம்… அப்போவும் காதலிக்கிறேன் னு வாய் விட்டு சொல்லாம எல்லா காரியங்களையும் சாதிச்சுக்கிட்ட.. இப்போ நீ சம்மதம் னு சொல்லாம என் வாய்ல இருந்து அந்த வார்த்தையை வர வச்சுருக்க…” என்று அவன் மீது புதுவித குற்றச்சாட்டு வைக்க அதிர்ந்து விழித்தான் ஆதீரன்.
“ஹேய்… தென்னு.. எதுக்கு எதை முடிச்சிட்டு பேசுற தென்றல் நான் என் வாய் திறந்து சொன்னா தான் என் காதலை நீ புரிஞ்சிருந்திருப்பியா… நான் உன் மேல உயிரா இருந்தேன் டி…” தன்னை புரிய வைக்க முயன்றான்.
“போதும்..” என்று கை நீட்டி தடுத்தவள் “இதோ பாரு… முதல்ல தென்னு னு கூப்பிடுறதை நிறுத்து… நான் உன்மேல உள்ள ஆசையிலயோ அந்த செத்துப்போன காதலாலேயோ உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லலை… சித்ராவை மதன் அண்ணா அவ்வளவு லவ் பண்றாரு… அவரோட காதல் ல நேர்மையும் உண்மையும் இருக்கு.. நான் அண்ணாவுக்காக சித்ரா கிட்ட பேசிப் பார்க்க நினைச்சேன். ஆனா அம்மா இந்த கல்யாணப் பேச்சு எடுக்கவும் அதை வைச்சு அவங்களை சேர்த்து வைக்கவும்,
என் பொண்ணு அபூர்வா… அவளோட ஆசைக்காகவும் தான் நான் இந்த கல்யாணத்தை பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். இதை அட்வான்டேஜா எடுத்திட்டு வேற எதாவது ப்ளான் எதுவும் பண்ணின… அப்பறம் நீ வேற தென்றலை பார்ப்ப..” என்று எச்சரிக்க
“ஆமா.. இப்போ மட்டும் எப்படி இருக்கியாம்?” என்று ஆதீரன் முணுமுணுக்க
“எதுவா இருந்தாலும் சத்தமா சொல்லு..” என்று கடுப்பானாள் தென்றல்.
“ஏன் தென்றல்? என்னை நம்பவே மாட்டியா?” இயலாத குரலில் கேட்க
“என் நம்பிக்கையை மொத்தமா கொன்னது நீதானே மிஸ்டர் ஆதீரன்…” என்று அவன் விழிகளை பார்த்து முறைத்தபடி தென்றல் கூற மனதளவில் துவண்டு போனவன்
“இப்போ சொல்றேன் தென்றல்…. என்கிட்ட நீ இழந்த நம்பிக்கையை திரும்ப கொண்டு வருவேன்… உன் மனசோட ஆழத்துல புதைச்சு வைச்சுட்டு இல்ல இல்ல னு மறைக்குற பாரு உன் காதல்.. அதையும் வெளி கொண்டு வருவேன் அதுவரைக்கும் உன் அனுமதி இல்லாம என் நகம் கூட உன் மேல படாது.. போதுமா?” என்று சபதம் போல கூறிய ஆதீரன் தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் ஆதீரன்.
தீரன் சென்றதை உணர்வை வெளிக்காட்டாமல் நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் தென்றல்.
பக்கத்து அறையும் பூட்டப்பட்டிருக்க வெளியே கதவையும் குமார் பூட்டிச் சென்று இருக்க எங்கே தூங்குவது… காலையில் சீக்கிரம் எழுந்த அலைச்சல் ஆதீரனுக்கு கண்கள் சொக்கிக் கொண்டு வர “சரி இந்த ஷோபால நைட்டை ஓட்டித் தள்ளுவோம்.” என்று தலையணை போட்டு படுத்தவனுக்கு முட்டி வரை கூட அந்த ஷோபா இடம் தரவில்லை…
ஆறரை அடி வளர்ந்தவனுக்கு நான்கரை அடி ஷோபா எப்படி பத்தும்… அசௌகரியத்தால் சில நிமிடங்கள் அவஸ்தை பட்டவன் அசதியில் உறங்கிப் போனான். திறந்த கதவு வழியே கீழே அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டே இருந்த தென்றல் இரவெல்லாம் உறக்கம் தொலைத்து விடியும் பொழுதில் தான் உறங்கி இருந்தாள்.
காலையில்… ஏதேதோ கற்பனை செய்து தங்கையும் தோழனும் இன்னேரம் சமாதானம் ஆகி இருக்க கூடும் என்று அதீத கற்பனையில் கதவை திறந்த குமார் மொத்தமாக ஏமாந்து போனான்..
காலை உணவு தயார் செய்ய வேண்டும் என்று எழுந்து வந்த பொன்னியும் ஆதீரன் உடலை குறுக்கிக் கொண்டு படுத்திருக்க கண்டு மிகுந்த வேதனை அடைந்து மகளை முணுமுணுவென திட்டிக் கொண்டே சமையலை கவனிக்க அந்த சத்தத்தில் ஆதீரன் உறக்கம் தெளிந்தான்.
ரூபியும் அண்ணன் நிலையை பார்த்து கோபமாக தென்றலை திட்ட அறைக்குள் செல்ல தென்றல் கட்டிலில் படுக்காமல் கீழே அமர்ந்தபடி கட்டிலில் தலையை சாய்த்து உறங்கிக் கொண்டு இருக்க ரூபிணி பொன்னி குமார் மூவரும் புரியாமல் விழிக்க எழுந்து வந்து பார்த்த ஆதீரனுக்கு மட்டும் தென்றலுக்கு தன் மீது இருக்கும் காதல் புரிய உள்ளூர மகிழ்ந்து போய் நின்றான் ஆதீரன்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Wow super love. Intresting