தீரனின் தென்றல் – 51
Thank you for reading this post, don't forget to subscribe!தீரன் தன்னை பார்க்கும் பார்வை அறிந்து தன் புடவையை சரி செய்து கொண்ட தென்றல் தீயென எரிக்கும் பார்வையில் அவனை முறைக்க அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து தென்றலை நெருங்கி வந்தான் ஆதீரன்.
என்னதான் வெறுக்கிறேன் என்று வாய்கிழிய பேசினாலும் ஆடவன் அருகில் வர வர உள்ளுக்குள் ஏதோ குறுகுறுப்பில் கபோர்ட் ல் சாய்ந்து கண்ணை இறுக மூடி கொண்டாள் தென்றல்.
சில சென்டிமீட்டர் இடைவெளியில் நின்றவன் ஒரு கையை அவளின் இடைக்கு நேராக கொடுத்து பின்பக்கம் இருந்த கபோர்டை பிடித்துக் கொண்டு இன்னொரு கையை உயர்த்தி தென்றல் தேடிய ஃபைலை எளிதாக எடுத்திருந்தான்.
கை கோப்பை எடுத்தாலும் ஆதீரனின் முகம் கீழே தன் மார்போடு நெருங்கி இருந்த தன்னவள் வனத்தின் வெளிப்படும் உணர்வுகளை ரசித்துக் கொண்டு இருந்தான்.
கண்கள் மூடி இருந்தாலும் கூட அவனின் சூடான மூச்சுக்காற்று தென்றலின் உச்சியில் பட அவனின் நெருக்கத்தில் நெஞ்சம் படபடக்க நின்றிருந்தாள் தென்றல்.
சில நிமிடங்கள் அவளின் அவஸ்தையை ரசித்தவன் விலகி இருக்க தன்னைச் சுற்றி ஏதோ வெறுமை போல உணர்ந்த தென்றல் கண்களை திறக்க தென்றல் முன்பு மந்தகாச புன்னகை சிந்தி நின்ற ஆதீரனை முயன்று கோபம் போல முறைக்க
“இந்தா..” என்று ஃபைலை நீட்ட அதை வாங்காமல் அவனை முறைத்து
“வாய்கிழிய வக்கனையா தொடமாட்டேன் படமாட்டேன் னு பேசிட்டு எதுக்குடா என் பக்கத்துல வர?” மூக்கு விடைக்க சீறினாள் தென்றல்.
“ஹேய் லூசு… நான் நீயா சொல்லாம என் விரல் கூட உன் மேல படாது னு தானே சொன்னேன். இப்போவும் கூட என் விரல் கூட உன் மேல படலை.. நான் வரது தெரிஞ்சு நீ விலகி நிக்க வேண்டியது தானே.. உன்னை யாரு அங்கேயே நிற்க சொன்னது? நான் உனக்கு ஹெல்ப் பண்ண தான் வந்தேன்.” என்று பேசியபடி தோரணையாக தன் சுழற் நாற்காலியில் அமர்ந்தான்
“பண்ற தப்பு எல்லாம் பண்ணிட்டு பழி மட்டும் என்பெயர்ல போடுறான்…” என்று முணுமுணுத்துக் கொண்டே தன் வேலையை கவனித்த தென்றல் “ச்சே… அவன் சொல்ற மாதிரி நான் ஏன் அவன் வரும் போது அப்படியே நின்னேன்… அவன் விலகும் போது உள்ளுக்குள்ள ஏதோ ஒரு வலி எதனால?” என்று தன் மனதிடம் சுய அலசல் செய்தவளுக்கு பதில் என்னவோ சுழியம் தான்…
“கன்ட்ரோலா இருக்கனும் தென்றல் கன்ட்ரோலா இருக்கனும்..” என்று தன் மனதுக்கு சொல்லி கொண்டவள் வேலையில் கவனம் செலுத்த முயன்றாள்.
அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு தன் மனைவியோடு வீட்டிற்கு தன் பைக்கில் கிளம்பினான் மதன்.
அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் ல் மதன் சென்று தன் பைக்கை நிறுத்த இவர்களுக்காக அங்கே காத்து நின்றான் திணேஷ்…
“ஹேய் திணேஷ் வா எப்போ வந்த?” சித்ரா வரவேற்க
“இப்போ தான் அக்கா ஒரு அரைமணி நேரம் ஆச்சு…”
“டேய் எங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணிருக்கலாமே சீக்கிரம் வந்திருப்போமே… சித்ரா தங்கியிருந்த ஃப்ளாட் காலியா இருக்கு அங்கேயே ஸ்டே பண்ணு னு சொன்னாலும் கேட்கமாட்டேங்குற…” உரிமையாக கடிந்து கொண்டபடி தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான் மதன்.
மூவருக்கும் காஃபி போட்டு வந்து அமர்ந்தாள் சித்ரா. “என்ன திணேஷ் வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? எங்க கல்யாணம் பத்தி சொன்னியா நீ?” என்று சித்ரா கேட்க
“நீதான் அக்கா அவங்களை பத்தி கவலைப் படுற.. அவங்க நீ பணம் கொடுத்தனு தந்தா சந்தோஷமா வாங்கி வைச்சுப்பாங்க நீ எப்படி இருக்க னு கூட இதுவரை கேட்டதே இல்ல… சரி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குனு அதை சொன்னதுக்கு அப்போ இனிமேல் அவளோட காசு எல்லாம் அவ புருஷனுக்கு தானே போகும் தங்கச்சி கல்யாணத்துக்கு எதுவும் தரமாட்டாளா னு பேசுறாங்க… இவங்களுக்காக நீ செய்ற எல்லாமே வேஸ்ட் அக்கா…” வேதனையோடு பொரிந்து தள்ளினான் திணேஷ்
“ம்ம்… இதே தான் நானும் சொல்றேன் உங்க அக்கா எங்க கேட்குறா?” என்று அலுத்துக் கொண்டபடி காஃபியை குடித்து முடித்தான் மதன்.
“சரிடா… சின்ன தங்கச்சிக்கு கல்யாணம் ஏற்பாடாகி இருக்கு ல… அந்த வேலை எல்லாம் எந்த அளவுக்கு போயிருக்கு” என்று அக்கறையாக விசாரித்தாள் சித்ரா.
“அதானே…இவ திருந்தினா தான் ஆச்சரியம்…” என்று மதன் எழுந்து அறைக்கு சென்று விட
“பத்திரிகை அடிச்சு கொடுக்க தொடங்கிட்டாங்க அக்கா… உனக்கு கொடுக்க நான் பத்திரிகை எடுத்திட்டு வந்திருக்கேன்.” என்று தான் வைத்திருந்த பையில் இருந்து திருமண அழைப்பிதழை எடுத்து காட்டி
“அக்கா நீயும் மாமாவும் கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு வரனும் க்கா… உன்னை அந்த ராஸ்கலுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூடாது னு நீ எவ்வளவு அழுதுருப்ப… நீ அழறது கஷ்டமா இருக்கு னு நான் போய் சொன்னதுக்கு என்னையே எப்படி அடிச்சாங்க நீ ராசி இல்லாதவ னு உன்னை எல்லாரும் ஒதுக்கி வைச்சாங்கல்ல.. உனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைச்சிருக்குனு அவங்க எல்லாருக்கும் நீ காட்டனும்” என்று திணேஷ் சொல்ல சித்ரா அமைதியாக இருக்க
“கண்டிப்பா மாப்ளை.. நீ இப்போ பேசுன பாரு… அதுக்காகவாவது நான் உங்க அக்காவை அங்கே கூட்டிட்டு வரேன். ஆனா யாரோடவும் உறவு கொண்டாட மாட்டோம். அதுக்காக நீ வராம போகாம இருக்காதே.. அப்பப்போ வந்திட்டு எங்களோட தங்கிட்டு போ.. இனிமே எங்களுக்கு இருக்கிற ரத்த சொந்தம் நீ மட்டும் தான்…” என்று மதன் சொல்ல திணேஷ் மனதில் மெச்சிக் கொண்டான் மாமனை
இத்தனை நாட்கள் தென்றலை விட்டு கொஞ்சம் விலகி இருந்த ஆதீரன் அலுவலகத்தில் அவளின் தடுமாற்றம் கண்டதில் இருந்து அவளை வேண்டுமென்றே வம்பிளுப்பது போல பேசுவதும் பார்வையால் சீண்டுவதும் என்று அவனின் சேட்டைகள் கூடிப்போய் இருக்க வெளியே சொல்லி சத்தமாக அவனை திட்டவும் முடியவில்லை பொறுத்துக் கொண்டு கடப்பதும் இயலவில்லை…
எப்போது வெடிக்கலாம் என்று நேரம் பார்த்து காத்திருக்கும் எரிமலை போல தகித்துக் கொண்டு இருந்தாள் தென்றல்.
தர்மலிங்கம் வந்து இவர்களை குடும்பத்தோடு அவரின் கம்பெனி வெள்ளிவிழாவோடு தங்கள் திருமணத்திற்கு விருந்தும் தருவதாக கூறி அழைப்பு விடுத்திருக்க மனைவி மகளோடு கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி அதற்காக தென்றலுக்கும் மகளுக்கும் புது உடை வாங்கி தர நினைத்து தென்றலை அழைத்தால் கண்டிப்பாக வர மாட்டாள் என்று அவனே சென்று கடைகடையாக அலைந்து திரிந்து மகள் மனைவிக்கு அவர்களுக்கு பொறுந்துவது போல உடைகளை வாங்கி வந்தான் ஆதீரன்.
அந்த பார்ட்டிக்கு கூட தான் வருகிறேன் என்று வாய் திறந்து கூறவே இல்லை… அன்று தர்மலிங்கம் கேட்ட போது சரி என்று மட்டும் தலையாட்டியதோடு சரி…. நாளை மாலை பார்ட்டிக்கு செல்லவேண்டும்…
‘ஒருவழியாக தென்றல் வருவதற்கு ஒப்புக் கொண்டாலும் அங்கே ஷ்ரதா இருப்பாளே.. முதல் முறை என்னை பார்க்க வந்திருக்கிறாள் என்று தெரிந்ததற்கே அவளின் கன்னம் பழுக்க அடித்து அனுப்பிய தென்றல் நாளை நிகழ்ச்சியில் வழக்கம் போல ஷ்ரதா கிறுக்கு தனமாக எதையாவது செய்து வைத்தால் தென்றலை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாதே…
ஒருவேளை அதனால் அந்த நல்ல மனிதர் தர்மலிங்கம் மனம் புண்படும் படி எதாவது நடந்து விட்டால்…’ “ஆண்டவா என்னை காப்பாத்துப்பா…” என்று அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்துக் கொள்ள அதை செவி சாய்த்து கேட்க தான் அந்த ஆண்டவனுக்கு நேரம் கிடைக்கவில்லை போலும்….
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Twist awaiting. Intresting
Ena nadakanpotho