தீரனின் தென்றல் – 57
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
காரின் பின்பக்கத்தில் அமர்ந்து சக்தி அபூர்வா ஸ்டோன் பேப்பர் சிசர் விளையாடிக் கொண்டு இருக்க அருகில் இருந்த தன் மனைவியின் கோபப்பார்வைக்கு அர்த்தம் புரியாமல் அதை மறைக்க சீட்டி அடித்துக் கொண்டு இருந்தான் ஆதீரன்.
அதன் பிறகு தென்றல் இன்னும் அதிகமாக முறைக்க “பூர்வி மா… என்னாச்சு உங்கம்மா இன்னைக்கு இவ்வளவு கோபமா இருக்காங்க… நீ ஏதாவது தப்பு பண்ணியா?” ஆதீரன் மகளை கேட்டு மனைவியை வம்பிளுக்க
“மாமா அத்தை அப்புக்குட்டியை முறைக்கல உங்களை தான் முறைக்குது நீங்க தான் ஏதோ தப்பு பண்ணிட்டீங்க” சக்தி சொல்ல
“அப்படியா என்ன தப்புடா செல்லம்?” குழந்தையிடம் கேட்பது போல மனைவியை சீண்ட
“அப்பா தெட்டு உன் பக்கத்துல தானே இருக்கா… அவகிட்ட கேளு எங்கட்ட கேட்டா எப்பிடி தெரியும் வா சத்தி நாம வெளாடலாம்.” என்று அபூர்வா சொல்ல
‘சரி எதுக்கும் ட்ரைப் பண்ணி பார்ப்போம்’ என்று “தென்னுஊஊஊ…” என்று அழைக்க நேரடியாகவே முறைத்திட
“அட எதுக்கு இப்படி லவ்வா பார்க்குற னு சொல்லிட்டு பாருமா… எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்குல..” என்றிட
“முதல்ல உன்னை சொல்லனும் புவிக்குட்டி யார் என்ன கொடுத்தாலும் வாங்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல.. இனி இந்த மாதிரி யார் கொடுத்தாலும் வாங்க கூடாது” என்று அபூர்வா தந்த சாக்லேட்டை தூக்கி வெளியே விசிறி அடித்தாள் தென்றல்.
“உங்க ஃபோன்ல தர்மலிங்கம் சாருக்கு கால் பண்ணி கொடுங்க” தென்றல் கேட்க
“ஹேய் தென்றல் இப்போ எதுக்கு அவருக்கு… இதெல்லாம் ஒரு இஷ்யூ ஆக்க வேண்டாம் தென்றல் பாவம் சார் ஃபீல் பண்ணுவாரு…” சாலையில் கவனம் வைத்து தென்றலிடம் பதில் சொல்ல
“ச்ச்…. ஏற்கனவே அவரு ஃபீல் பண்ணுவாரு னு நீங்க எதையும் சொல்லாம விட்டதால தான் இப்போ இவ்வளவு தூரம் வந்திருக்கு… என்னை ஏதாச்சும் டிஸ்சர்ப் பண்ணா கூட ஓகே. ஆனா, நம்ம குழந்தையை… இன்னைக்கு ஏதாவது ஆகி இருந்தா… இனியும் என்னால இப்படி விட முடியாது…” என்று தென்றல் கூற நம்ம குழந்தை என்று முதல் முறை உரிமை தந்திருக்க சிலிர்த்து போனான் ஆதீரன்.
“இல்ல இருந்தாலும்…” என்று தர்மலிங்கத்திடம் ஷ்ரதா செயலை கூற தயங்க
“மிஸ்டர் ஆதீரன் உங்க ஃபோன் கிடைக்குமா இல்ல நான் அவர்கிட்ட நேர்ல போய் பார்த்து பேசிக்கட்டுமா?” என்று தென்றல் கேட்க
“ஹேய் இருடி… பாவம் அந்த மனுஷன் மனசு கஷ்டப்படாம பேசு” என்று சொல்லி தன் ஃபோனை கொடுக்க தென்றல் அழைப்பை தொடுத்தாள்.
அழைப்பை ஏற்று காதில் வைத்து “என்னப்பா ஆதீ எப்படி இருக்க?” என்று அவர் அன்பாக தொடங்க
“சார் நான் தென்றல் பேசுறேன்..” என்றிட
“சொல்லுமா எப்படி இருக்கீங்க? என்னமா திடீர்னு ஃபோன் பண்ணிருக்க?” அவருக்கு ஏதோ உறுத்த
“சார் அது வந்து… அன்னைக்கு நான் பார்ட்டில வச்சு பேசுனதுனால உங்களுக்கு என் மேல ஏதாவது கோபம் இருக்கா?” தென்றல் தயக்கமாக கேட்க
அவரும் ஒரு நொடி அமைதி காத்து “இல்லமா நீ தப்பா எதுவும் பேசலையே… மனசுல இருந்ததை அப்படியே பேசிட்ட அவ்வளவு தானே… நான் தப்பா எதுவும் நினைக்கல மா..” தன்மையாக கூறினார் தர்மலிங்கம்.
“ஆனா சார்… உங்க பொண்ணுக்கு அது ரொம்ப கோபத்தை வர வச்சிருக்கு “
“என்னம்மா சொல்ற?” அவர் புரியாமல் கேட்க
“ஆமா சார் இன்னைக்கு என்னை கஷ்டப்படுத்த நினைச்சு என் பொண்ணுக்கு ஒத்துக்காததை சாப்பிட கொடுக்க வந்தாங்க… சார் அவங்களை நான் ஏற்கனவே எங்க ஆஃபிஸ் ல வச்சு பார்த்திருக்கேன் மரியாதை இல்லாம நடந்துக்கிட்டாங்க.. அத்தோட என் கணவருக்கு அதிகமா தொந்தரவு கொடுத்திருக்காங்க னு தெரிஞ்சு எனக்கு கோபம் வந்தது நான் அடிச்சேன். தப்புதான் அதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
ஆனா.. அதுக்காக எங்களை பழிவாங்க எங்க குழந்தையை உடம்பு சரியில்லாம ஆக்குறதுல அவங்களுக்கு என்ன சந்தோஷம் சார்..” என்று தென்றல் கேட்க கேட்க மகளின் செயலை நினைத்து கூனி குறுகி போனார் மனதளவில்..
“அம்மாடி தென்றல்.. குழந்தைக்கு எதுவும் ஆகலைல மா… நல்லா இருக்காளா? அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் மா…” என்று அவர் வருந்த
“ஐயோ சார்.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? பாப்பாக்கு ஒன்னும் இல்ல அதுக்குள்ள நானும் அவ அப்பாவும் வந்ததால உங்க பொண்ணு போய்ட்டாங்க… இப்போ கூட இதை சொன்னா நீங்க வருந்துவீங்க வேண்டாம் னு தான் அபூர்வா அப்பா சொன்னாரு. ஆனா எனக்கு தான் மனசு கேட்கலை..
நாங்க பிரிஞ்சிருந்த காலங்கள்ல உங்க பொண்ணு இவரை தொந்தரவு பண்ணினப்போவே உங்ககிட்ட சொல்லி கொஞ்சம் அடக்கி இருந்தா இப்போ இந்தளவுக்கு வந்திருக்காது னு நான் நினைக்கிறேன்… அதான் இப்போ உங்களுக்கு கால் பண்ணேன்.” என்று தென்றல் கூற
“சரி மா எனக்கு புரியுது… நான் முன்னவே இதுக்கு ஏதாவது பண்ணியிருக்கனும் என் பொண்ணை அடக்காம இருந்தது என் தப்பு தான்… இனிமேல் என் பொண்ணால உங்க வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராது…” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார் தர்மலிங்கம்.
பள்ளியில் தனக்கு நடந்த அவமானத்தை பொறுக்க முடியாமல் தன் தோழிகளோடு ஊர் சுற்றி விட்டு மாலைக்கு மேல் தான் வீடு திரும்பினாள் ஷ்ரதா. வீட்டில் தர்மலிங்கம் தனது வக்கீலோடு பேசிக்கொண்டு இருக்க அதை அலட்சியமாக கடந்து சென்ற ஷ்ரதாவை நிறுத்தினார் தர்மலிங்கம்.
“என்னப்பா?” அலட்சியமாக கேட்க
“இதோ பாரு உன்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வைச்சுக்கோ உன் மாமா வருவாரு அவர் கூட ஊருக்கு கிளம்பு…” என்று கட்டளை போல சொல்ல
“எது? மாமாவா? அப்பா அம்மாவோட அண்ணனோ தம்பியோ ஏதோ ஆர்மி மேன்னு சொல்லுவீங்களே அவரா? அவர்கிட்ட நான் ஏன் போகனும்?” ஷ்ரதா கேட்க
“உன்னை உன் அம்மா இறந்தப்போவே அவரோட அனுப்பி இருக்கனும் கட்டுப்பாடோட உன்னை ஒரு பொண்ணா வளர்த்திருப்பாரு… ஆனா அம்மா இல்லாத குறை தெரியாம உன்னை வளர்க்குறேன்னு உன் போக்குல விட்டு இப்போ எனக்கு தான் அவமானம்…” என்று பல்லை கடித்து அவர் கூற
“என்னால உங்களுக்கு அப்படி என்ன அவமானம்?” ஒன்றும் நடவாதது போல ஷ்ரதா கேட்க ஓங்கி அறைந்தார் தர்மலிங்கம்.
“அப்பா…” ஷ்ரதா அதிர உடன் இருந்த வக்கீல் தர்மலிங்கத்தை தடுக்க
“விடுங்க சார்.. இந்த அடியை இவ ஆதீ ‘எனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் உங்க பொண்ணு என்னை தொந்தரவு பண்றா’ னு சொன்னப்போவே கொடுத்திருக்கனும்… ஏய் நீயும் ஒரு பொண்ணு தானே பாவம் ஒரு சின்ன குழந்தை… அது கிட்ட இப்படி மோசமா நடந்திருக்க?” என்று தர்மலிங்கத்தின் கோபத்தை முதல் முறை பார்க்க மிரண்டு போய் நின்றாள் ஷ்ரதா.
“அப்பா… அதுக்காக என்னை அந்த மாமா வீட்டுக்கு போக சொல்லுவீங்களா? அப்பா அவரு எல்லாத்தையும் இப்படி செய்யனும் அப்படி செய்யனும் னு என்னை கண்ட்ரோல் பண்ணுவாரு.. எனக்கு என்னை யார் என்னை கண்ட்ரோல் பண்ணாலும் பிடிக்காது…” ஷ்ரதா திமிராக சொல்ல
“அப்படியா? அப்போ சரி… வக்கீல் சார் நான் சொன்ன மாதிரியே எல்லா டாக்குமெண்டும் ரெடி பண்ணுங்க…” என்றிட
“சார்… எதுக்கும் யோசிங்க சார்.. பொண்ணு மேல இருக்க கோபத்துல தப்பா எதுவும்….” என்று வக்கீல் சொல்ல
“என்ன.. என்ன முடிவு…” பதட்டமாக கேட்டாள் ஷ்ரதா.
“அது மா… நீங்க உங்க அப்பா பேச்சை கேட்டு அவர் சொன்ன மாதிரி உங்க மாமா அத்தையோட போய் அவர் சொல்ற மாதிரி இருக்கனும். இல்லைனா உங்க அப்பா சம்பாத்தியத்துல இருக்கிற எல்லா சொத்துக்களும் ஒரு ஆசிரமத்துக்கு சேர்ந்திடும். அப்பறம் உங்களுக்கு எதுவுமே சொந்தம் இல்ல….” என்று வக்கீல் சொல்ல
“என்னது? அப்பா? என்னப்பா இது ஏன் இப்படி பண்ணீங்க? அப்பா கம்பெனி எல்லாம் என் பெயர்ல தான் இருக்கு… எல்லாமே எனக்கு தான் சொந்தம்…” என்று ஷ்ரதா ஆத்திரத்துடன் கூற
“அந்த கம்பெனி சொத்து எல்லாம் என் சம்பாத்தியம்… இப்போவும் அந்த கம்பெனிக்கு மட்டும் தான் உன் பெயர் இருக்கு… ஆனா அதுக்கு சேர்மேன் நான் தான்.. உன் தாத்தா வீட்டு சொத்து இல்ல ஷ்ரதா… அம்மா இல்லாத பொண்ணாச்சே னு சொல்லி உன் இஷ்டத்துக்கு விட்டேன். இனி உன் மாமா அத்தை கூட போய் இருக்கிறதா இருந்தா இரு… இல்லைனா மொத்த சொத்தையும் ஆசிரமத்துக்கு எழுதி வைச்சுட்டு நான் பாட்டுக்கு காசி ராமேஸ்வரம் னு எங்கயாவது கோவில் குளம் னு உன்னை பெத்து வளர்த்த பாவத்தை தீர்க்க போயிடுவேன்.
காசு பணம் இல்லாம உன் கூட இத்தனை நாள் ஊர் சுத்துன அல்லக்கை ஃப்ரண்ட்ஸ் கூட உன்னை சீண்ட கூட மாட்டாங்க தெரியும் ல…” என்று அதிரடியாக தர்மலிங்கம் மிரட்ட உண்மையில் பயந்து தான் போனாள் ஷ்ரதா.
“அப்பா…. என்னப்பா இப்படி பேசுற? அப்பா பணம் இல்லாம என் ஸ்டேட்டஸ்… என்னால எப்படி ப்பா இருக்க முடியும்?”
“ம்ம்… அப்போ இந்த சொத்து உனக்கு வேணும்ல அதனால உங்க மாமா அத்தை ஊருக்கு போ… உங்க மாமா ஆர்மில இருந்து ரிட்டையர் ஆனவர் தான் சொந்தமா இப்போ ஒரு பிஸ்னஸ் பண்றாரு. ஒரு பிஸ்னஸ் எப்படி பண்ணனும் னு அவர்கிட்ட கத்துக்கோ.
உன் அத்தை ஒரு ஸ்கூல் டீச்சர்… ஒரு பொண்ணா ஒழுக்கமா எப்படி இருக்கிறது னு உங்கத்தை உனக்கு சொல்லி தருவாங்க.. போ நாளைக்கு மார்னிங் உன் மாமா வந்திடுவாங்க அதுக்குள்ள உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வைச்சுக்கோ” என்று கட்டளையாக கூறிட வேறு வழி இல்லை என்று மேலே அறைக்கு சென்றாள் ஷ்ரதா.
அவள் சென்றதும் தர்மலிங்கம் ஆயாசாமாக ஷோபாவில் அமர, “சார் என்ன இருந்தாலும் உங்க பொண்ணு கிட்ட இவ்வளவு கண்டிப்பா பேசியிருக்க வேண்டாம்..” என்று வக்கீல் சொல்ல
“இதை நான் ஆதீ தம்பி என்கிட்ட உங்க பொண்ணு தொந்தரவு பண்றா னு சொன்னப்போவே பண்ணிருக்கனும் லாயர் சார்.. என்ன இருந்தாலும் பொண்ணு ஆசைப்பட்டா அதோட அந்த ஆதீ தம்பி ரொம்ப நல்லவரு தனியா இருக்காரு… இன்னைக்கு இல்லாட்டியும் மனசு மாறி என்னைக்காவது என் பொண்ணை ஏத்துக்கிட்டா அவ வாழ்க்கை நல்லா இருக்கும் னு சுயநலமா இருந்துட்டேன். ஆனா இன்னைக்கு அந்த பொண்ணு தென்றல் ஃபோன் பண்ணி உங்க பொண்ணால என் குடும்பம் பாதிக்குது னு சொன்னதும் அப்போவே இதை தடுக்காம விட்டோமே னு குற்றவுணர்வா இருக்கு..” என்று அவர் வருந்த சற்று நேரம் ஆறுதலாக பேசிவிட்டு கிளம்பினார் வக்கீல்.
மறுநாள் காலை தர்மலிங்கம் சொன்னது போல ஷ்ரதாவின் மாமா வர அவரோடு கிளம்ப ஆயத்தமாகினாள். இரவெல்லாம் யோசித்தும் அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை… ‘இந்த பணமும் பகட்டும் இல்லா விட்டால் தன் நண்பர்கள் மத்தியில் கூட தான் ஒரு செல்லாக்காசு தானே’ என்று புத்தியில் உறைக்க கொஞ்ச காலம் தன் வாலை சுருட்டி இருப்பது நல்லது என்று கிளம்பினாள்.
ஆனால் இவளின் மொத்த அகம்பாவம் திமிர் என்று அனைத்தையும் இவளின் தாய்மாமா மற்றும் அவரின் துணைவியார் எளிதாக அடக்கி ஒடுக்கி விடுவர் என்று அறியாமல் போனாள் ஷ்ரதா.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Super intresting
Interesting
Interesting