Skip to content
Home » தீரனின் தென்றல் – 6

தீரனின் தென்றல் – 6

ஆதீரனின் யோசனை சரியாக வேலை செய்ய தென்றல் அவளின் தாய் மற்றும் மகளோடு கம்பெனியில் கொடுத்த க்வார்டஸ்க்கு வந்து விட்டாள். கம்பெனி ஆட்கள் ஷிஃப்ட்டிங் வொர்க் செய்தாலும் கூட அவளின் உடன்பிறவா சகோதரன் ஒரு காலத்தில் ஆதீரனின் உயிர் நண்பனுமாகிய குமாரவேல் என்ற குமாரு அவன் மனைவி ரூபிணி மற்றும் அவர்களின் குழந்தை சக்திஸ்ரீ என்று மூவரும் சேர்ந்து வந்திருந்தனர் இந்த வீட்டை பார்த்து அவளின் வசதிகளை தெரிந்து கொள்வதற்காக…

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

மதன் அனுப்பிய காரிலேயே தென்றலோடு குமார் அவனின் குடும்பமும் வந்து இறங்க வாசலிலேயே இருந்து வரவேற்றான் மதன்.

“என்ன சார் இது.. எதுக்கு கார் எல்லாம் அனுப்புனீங்க?” சங்கடமாக தென்றல் கேட்க

“இட்ஸ் ஓகே தென்றல்… குழந்தைங்க பெரியவங்க னு இருக்காங்க.. சோ, உங்களுக்கு கம்ஃபர்டா இருக்கட்டுமே..” என்று மதன் சொல்லி கொண்டு இருக்க தென்றலை பார்த்து அருகில் வந்தாள் சித்ரா…

“ஹாய் தென்றல்… வாங்க வணக்கம் அம்மா.. நான் சித்ரா… தென்றல் கூட ஒன்னா ஆஃபிஸ் ல வொர்க் பண்றோம்…” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு ரூபிணி குமார் பக்கம் திரும்பி “நீங்க தான் தென்றலோட அண்ணன் குமார் அண்ணி ரூபா இல்லையா? ஆமா … இந்த குட்டீஸ் ல அபூர்வா யாரு சக்தி யாரு” என்று கேட்க

“இவ சக்தி இவ அபூர்வா” என்று அடையாளம் காட்டினாள் தென்றல்.

“ஆமா… எங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கே… எப்படி? தென்றல் சொன்னாளா? என்ன சொன்னா எங்களை பத்தி?” ரூபா கேட்க

“நல்ல விதமா தான் சொன்னாங்க… அண்ணன் அண்ணி னு…” என்று சித்ரா சொல்ல

“ஏன் அத்தை… எங்க மம்மியோட புகழை இவ்வளவு தான் சொன்னியா நீ?” என்று முன்னாள் வந்து நின்றது வாண்டு… ரூபிணி குமாரின் ஐந்து வயது மகள் சக்திஸ்ரீ.. அதை கேட்டு குமார் சிரித்து விட முறைத்தாள் ரூபி…

“என்னடி? உனக்காக தானே நான் இப்படி சேர்த்து வைக்கிறேன்..‌ உனக்கு இப்போ கேலியா தான் தெரியும்.. நீங்களும் கூட சேர்ந்து சிரிக்கிறீங்க… வீட்டுக்கு வாங்க…” என்று மிரட்டலை போட்டாள் ரூபிணி.

“அதெல்லாம் எதுவும் இல்லை ங்க… அன்னைக்கு நீங்க ஃபோன் பேசும் போது ஸ்பீக்கரில் தான் இருந்தது. நீங்க பேசுன எதுவும் தப்பு இல்லையே… பொம்பளை பிள்ளைங்கள பெத்த எல்லா அம்மாக்களுக்கும் இப்படி தான் ஒரு பயம் இருக்கும்.” என்று ஆதரவாக சித்ரா சொல்ல

“சரி சரி… இப்படி பேசிட்டே இருந்தா.. வாங்க வீட்டுக்குள்ள போகலாம்” என்று அழைத்து சென்றான் மதன். வீடு ஆதீரன் உத்தரவின் பெயரில் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு ஃபர்னிச்சர் எல்லாம் போடப்பட்டு இருக்க தென்றலோடு சித்ராவும் சேர்ந்தே அதிர்ந்தாள்.

“சார்..‌ வீடு இப்போ தான் பெய்ண்ட் பண்ணிருப்பீங்க போல ஃபர்னிச்சர் கூட எல்லாம் புதுசா இருக்கு…” தென்றல் சந்தேகமாக கேட்க

“ஆ…. ஆமா தென்றல்… ஆக்சுவலா வீடு.. எல்லா வீடுகளும் ஃபுல்லி ஃபர்னிச்சர் பண்ணிட சொல்லிருந்தாரு நம்ம பாஸ்… அதனால அப்போவே வாங்கி போட்டது தான் இதெல்லாம்… இப்போ திரும்ப ஒருதரம் வீடு க்ளீன் பண்ணி பெய்ண்ட் பண்ணும் போது ஃபர்னிச்சருக்கும் பண்ணிருப்பாங்க…” என்று ஒருவாறு கோர்வையாக கூறி முடித்தான் மதன்.

‘என்ன இவரு இப்படி புளுகுறாரு…’ என்று சந்தேகமாக சித்ரா அவனை பார்க்க அவனோ தென்றலிடம் கூறிய பொய்யை நம்பினாளோ என்னவோ என்று அவளின் முகத்தை ஆராய்ந்தபடி நின்றிருந்தான்.

“சரி விடு டி… உங்க முதலாளி ரொம்ப நல்லவர் போல.. இல்லாட்டி இந்த காலத்துல இப்படி எல்லாம் யாராவது செய்வாங்களா?” ரூபா சொல்ல

“அதானே… தங்கச்சி மா… என் பொண்டாட்டி எல்லாம் ஃப்ரீயா கிடச்சா டிஸ்ஸூ பேப்பரை கூட விடமாட்டா…” என்று ரூபா இருப்பதை மறந்து அவளின் புகழை பாட தொடங்கினான் குமார்.

“என்னாது?” ரூபா குரல் உயர்த்த

“ஒன்னும் இல்ல தங்கம்… நேரமாச்சு பால் காய்ச்சிடலாம்… வாங்க ம்மா..‌” பேச்சை மாற்ற அத்தியாவசியமாக சில பாத்திரங்கள் மட்டும் ஒரு கட்டைப்பையில் போட்டு தென்றலின் அம்மா பொன்னி எடுத்து வந்திருக்க ஏற்கனவே அங்கே இருந்த அடுப்பில் வைத்து பாலை காய்ச்ச சொன்னார் தென்றலிடம்…

“ரூபா… நீயே பண்ணுடி” என்று ஒதுங்கிக் கொண்டாள் தென்றல். ரூபிணி பால் காய்ச்சி சாமிப்படம் முன்பு வைத்து சாமி கும்பிட்டு அனைவருக்கும் பாலை ஊற்றி கொடுக்க எடுத்துக் கொண்டு அப்படியே வீட்டை சுற்றி பார்த்தாள் தென்றல்.

இரட்டை படுக்கையறை அதனோடு சேர்ந்த கழிவறை… சமையலறை ஹால் பால்கனி என்று அளவாக அழகாக இருந்தது வீடு.

“ம்ம்… பரவாயில்ல ப்பா… க்வார்டஸ்னு சொன்னதும் எப்படி இருக்குமோ னு நினைச்சேன். ஆனா நல்லா இருக்கு.” என்று ரூபா சொல்ல

“இது நம்ம பாஸூக்கு கிடைச்ச முதல் ப்ராஜெக்ட் தென்றல்… அதாவது நீங்க கேள்வி பட்டிருப்பீங்க வர்மா க்ரூப்ஸ்… அவங்க அந்த கம்பெனி ஸ்டாஃப்ஸ்க்கு க்வார்டஸ் கட்டிதர தான் நம்ம பாஸ் கிட்ட பிஸ்னஸ் பேச வந்தாங்க. பட் பாஸ் அவருக்கு ப்ராபீட் ஆ ஒரு ப்ளாக் இருக்கிற வீடுகளை தரனும் னு சொன்னாரு. ஏன்னா அவரோட கம்பெனி ஸ்டாஃப்ஸ்க்கு க்வார்டஸ் வேணும் னு பாஸ் நினைச்சாரு. சோ, அவரோட லாபத்துல ஒரு அப்பார்ட்மெண்ட் கட்றதை விட ஒரு அப்பார்ட்மெண்ட் ல ஒரு ப்ளாக் கேட்குறது ஓகே னு தோணுச்சு அவருக்கு…

அதில இருந்து வர்மா சாரும் நம்ம பாஸூம் நல்ல ஃப்ரண்ட்ஸ்…” என்று மதன் விளக்க

“ஓ… அப்படியா? எங்க அண்ணன் வர்மா சாரோட சாஃப்ட்வேர் கம்பெனில தான் வொர்க் பண்றான். அது மூலமா தான் அந்த கம்பெனி ல வேக்கண்ட் இல்லை… அவரோட ஃப்ரண்ட் நடத்துற கம்பெனில வேக்கண்ட் இருக்கு னு எனக்கு சஜஷன் கொடுத்தான்…” என்று தென்றல் கூற தொழில் விஷயமாக பேச்சு செல்ல எது நடந்தால் என்ன நம் வேலை முக்கியம் என்பது போல யாரும் அறியாமல் தென்றல் மற்றும் குழந்தைகளை ஃபோட்டோ எடுத்து கொண்டான் மதன்.

குழந்தைகள் விளையாடும் போது சிறு சிறு வீடியோவும் எடுத்தான். சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு “சரிங்க ம்மா… இந்த வீட்டுக்கு அடுத்த வீடு பன்னிரண்டு தான் என்னோட வீடு.. எந்த உதவியா இருந்தாலும் என்னை உடனே கூப்பிடுங்க” தென்றல் என்று சித்ரா விடைபெற

“முதல் உதவியா இந்த வாங்க போங்க இதை விடுங்க சித்ரா… நான் உங்களை விட இளையவ தானே…” என்று தென்றல் கூற புன்னகையோடு “சரி” என்று சொல்லி சித்ரா விடை பெற

“சரி அப்போ நானும் கிளம்பறேன்..‌ தென்றல் எதிர் ஃப்ளாட் தான் நாங்க இருக்கோம்… எதுவாக இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க..‌” என்று அவனும் விடை பெற

“நாங்க இருக்கோமா? சார் அப்போ உங்க குடும்பமும் இருக்காங்களா? எங்க சார் எதிர் வீடு தானே கொஞ்சம் இன்ட்ரோ பண்ணுங்க சார்..‌” வெகுளியாக ரூபா கேட்டு விட சட்டென்று மதன் முகம் மாற சித்ராவும் முகம் வாடினாள்.

“எனக்கு யாரும் இல்லை ங்க… எனக்கு இப்போதைக்கு இருக்கிற ஒரே உறவு எங்க பாஸ் மட்டும் தான்… அவரு அப்பப்போ என்கூட தங்குவாரு. இப்போ வெளியூர் போயிருக்காரு.” என்று சொல்லி விட்டு மதன் அந்த பக்கம் திரும்பி தன் ஃப்ளாட் உள்ளே சென்று விட முகமும் அகமும் வாட விடை பெற்று கிளம்பினாள் சித்ரா.

“ஏன்டி.‌‌… இப்போ உனக்கு இந்த டீட்டெய்ல் அவசியமா?” குமார் கோபமாக கேட்க

“ஏங்க சும்மா இருங்க.. ஏற்கனவே அக்கம் பக்கம் வீட்டு ஓனர் னு யாரையும் விசாரிக்காம இவங்களை குடி வச்சு நாம எவ்வளவு கஷ்டப்பட்டோம்… இப்போவும் அதே மாதிரி எதையும் தெரியாம இங்க தங்க வைக்க முடியுமா?” என்று தனக்கு தென்றல் மீதான அக்கறையை ரூபா தெரிவிக்க அவளை தோளோடு அணைத்து உள்ளே அழைத்துச் சென்றாள் தென்றல்.

அங்கே… மதன் அனுப்பிய தென்றல் மற்றும் குழந்தை ஆபூர்வா வின் புகைப்படங்களை விரல்களால் தழுவி தன் தென்றலை அணுஅணுவாக ரசித்துக் கொண்டு இருந்தான் ஆதீரன்…

  • தொடரும்…

2 thoughts on “தீரனின் தென்றல் – 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *