Skip to content
Home » தீரனின் தென்றல்-61

தீரனின் தென்றல்-61

தீரனின் தென்றல் – 61

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

தீரனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டிக் கொண்டு அனைவரும் சிகிச்சை அறைக்கு வெளியே காத்திருக்க மருத்துவர்கள் வெளியே வந்தனர்.

“டாக்டர் பாஸ் எப்படி இருக்காரு… சார் ஆதீரனுக்கு எதுவும் இல்லையே” என்று குமாரும் மதனும் அவரை நெருங்க மற்றவர்களும் என்ன சொல்வாரோ என்று அருகில் வர

“அவருக்கு தலையில காயம் பட்டதால கொஞ்சம் அதிகமாகவே ப்ளட் லாஸ் ஆகிருக்கு… ஸ்டிச்சஸ் போட்டிருக்கு. காட் க்ரேஸ் அவரோட ப்ளட் க்ரூப் இங்க ஸ்டாக் இருந்ததால ப்ளட் ஏத்திருக்கோம் வலது கை போர்ன் ஃப்ராக்ச்சர் ஆகிருக்கு அப்பறம் சின்ன சின்ன காயங்கள்… மத்தபடி பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல ஹீ இஸ் ஷேஃப்…” என்று சொல்லவே அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்த உணர்வு.

“சார் நாங்க மாப்ளையை பாக்கலாமா?” பொன்னி கேட்க

“ஒவ்வொருத்தரா போய் பாருங்க அவர் அதிகம் பேசவேண்டாம் ஸ்டெய்ன் பண்ண கூடாது” என்று சொல்லி விட்டு சென்றார் மருத்துவர்.

தீரன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறிய பின்னர் தான் தென்றலுக்கு உயிர் கூடு வந்து சேர்ந்த உணர்வு. அதுவரை பித்து பிடித்தவள் போல அமர்ந்திருந்தவள் எழுந்து இவர்கள் அருகில் வர

“தென்றல் இப்போவாச்சும் அழாம இரு டி அண்ணாக்கு ஒன்னும் இல்ல… பாரு உன்னை பார்த்து குழந்தையும் அழறா..” என்று ரூபி சொல்ல

கமலமும் பொன்னியும் தாங்கள் வேண்டுதல் வைத்த கடவுளுக்கு எல்லாம் நன்றி உரைத்துக் கொண்டு இருந்தனர்.

“தென்றல் பாஸூக்கு ஒன்னும் இல்ல.. நீ போய் அவரை பாரு முதல்ல…” மதன் சொல்ல அவன் முடிக்கும் முன்பே அறைக்குள் நுழைந்து இருந்தாள் தென்றல்.

தலை மற்றும் கையில் பெரிய கட்டுடன் இருந்த தன் தீரனை காண நெஞ்சம் கனத்தது தென்றலுக்கு…

வலியை மறைக்காமல் குரலில் காட்டி “தீரா” என்று அழைத்தாள் தென்றல்.

விழி குண்டுகள் அசைய மெல்ல கண் திறந்து பார்த்தான். “தீரா…” என்றபடி தலையில் இருந்த கட்டை தடவினாள்.

“தெ… தென்னு…” என்றான் உயிரின் ஆழத்தில் இருந்து…

“தீரா…. ஏன்டா இப்படி பண்ணா?” கண்ணீரோடு கேட்க அவனுக்கும் கண்ணீர் வந்தது. எத்தனை நாட்கள் இவளின் இந்த அழைப்புக்காக ஏங்கி கிடந்தான்.

இப்போது அதே காதலோடு தனக்கு எதுவும் விபரீதம் நடந்திடக் கூடாது என்று தவிப்போடு அழைக்கிறாள். ஆனால்… அவளின் கண்ணீருக்கு தான் காரணம் என்று நினைத்து வருந்தினான்.

“தென்னு.. அழாதமா கஷ்டமா இருக்கு…” வேதனையோடு சொல்ல

“ஏன் தீரா இப்படி பண்ண? உனக்கு ஏதாவது ஆகிருந்தா என் நிலையை பத்தி யோசிச்சியா? நீ இல்லாம எப்படி டா நான் இருப்பேன் பாப்பா பத்தி யோசிச்சியா” என்று அக்கறையோடு அவள் கோபம் கொள்ள உள்ளுக்குள் அதற்காக மகிழ்ந்தவன் உதட்டில் புன்னகை மலர விட்டான்.

“நான் இங்க ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் நீ சிரிக்கிறியா?” என்று அதற்கும் கோபம் கொண்டாள்.

“ஹேய் தென்னு… நான் எங்கடி போய்டுவேன் உன்னை விட்டு… அதான் அந்த எமனே நேரா வந்து என்னை இழுத்துட்டு போக பார்த்தாலும் நீ அவரோட சண்டை போட்டு திருப்பி கூட்டிட்டு வந்திடுவியே…” என்று காதலாக பார்க்க

“ச்சூ போடா உனக்கு எல்லாமே விளையாட்டு தான்…” கோபம் அழுகை எல்லாம் குறைந்து வெட்கத்தில் சிவந்தது தென்றலவள் வதனம்.

அவளின் வெட்கத்தை ரசித்து அழகாக சிரிக்க சுறுக்கென்று வலி தைத்தது தலையில்…. ஆதீரன் முகத்தை சுருக்க

‘டாக்டர் ஸ்டெய்ன் பண்ண கூடாது னு சொன்னாங்க நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு தீரா…” என்று தென்றல் கூறிக்கொண்டு இருக்க அந்த அறை கதவு திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தனர் அபூர்வாவும் சக்தியும்…

“அப்பா… மாமா” என்று ஆளுக்கொரு பக்கம் வந்து நிற்க வலியை மறைத்து புன்னகைக்க முயன்றான் ஆதீரன்.

“அப்பா என்னாச்சு உனக்கு புண்ணா ரத்தம் வந்துச்சா?” என்று ஆதீரன் கட்டோடு படுத்திருப்பதை பார்த்து அபூர்வா கேட்க

“மாமா அடிபட்டுச்சா இன்னும் வலிக்கா?” என்று கட்டுப் போட்ட கையை பிஞ்சு விரலை கொண்டு லேசாக வருடினாள் சக்தி.

“எனக்கு ஒன்னும் இல்லைடா தங்கங்களா பூர்வி மா அழுதீங்களா?” என்று ஆதீரன் கேட்க

“ம்ம்… ஆமா ப்பா நான் அம்மா அம்மா னு கூப்பிட்டே இருந்தேன் ஆனா தெட்டு என்னை பார்க்க கூட இல்ல அழுதுட்டே உட்காந்தா அது பார்த்து பார்த்து எனக்கு அழ வந்துச்சு…” தாயின் நிலை தனக்கு பயம் தந்து அதனால் அழுததை குழந்தை தனக்கு தெரிந்தவரை கூறியிருக்க

“ஏன் தென்னு” என்று அவளை ஆதீரன் பார்க்க அந்த நொடிகள் மீண்டும் கண்ணை கலங்க வைத்தது தென்றலுக்கு….

“சரி எனக்கு ஒன்னும் இல்ல இனி பாப்பா அழவே கூடாது… சரியா?” சிறிய குழந்தையிடம் கேட்பது போல பெரிய குழந்தைக்கு சொல்ல

“ம்ம் சரி அழ மாட்டேன்” என்று தலையாட்டினர் அபூர்வா சக்தியோடு தென்றலும்…

“சரி அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும் நாம வெளியே இருக்கலாம்… சரியா புவிக்குட்டி… சக்தி வா நாம வெளியே இருக்கலாம்.” என்று தென்றல் அழைக்க

“ம்கூம்… போ அப்பாத நான் கூப்பிட்டு நீ பேசலைல நான் உன்கூட வதமாட்டேன் போ…” என்று முறுக்கிக் கொண்டாள் அபூர்வா.

“ஏய் பெரிய மனுஷி… என்னடி கோபமா?” என்றபடி அவள் தாடையை தென்றல் தொட தட்டி விட்டாள்.

“ஹேய்… என்னடி… பாரு எல்லாம் நீ கொடுக்குற செல்லம் தான்…” என்று தீரனை குறை சொல்ல இருவர் சேட்டையை ரசித்து சிரித்தான் ஆதீரன்.

“சரி டி… வா அப்பா கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என்று சொல்லி அழைக்க

“மாத்தேன் போ… நான் அப்பா கூட தான் இருப்பேன்” என்று ஆதீரன் அருகில் ஓடிச்சென்று நின்று கொண்டாள் அபூர்வா.

“தென்னு விடு பாப்பா மட்டும் இல்ல நீயும் இப்படி என் பக்கத்துலயே இரு…” என்று ஆதீரன் சொல்ல

“ஓ… அப்போ நாங்க எல்லாரும் வேண்டாமா மச்சான்” என்று உள்ளே வந்தான் குமார். அவன் பின்னாலேயே மற்ற அனைவரும் வர

“டேய் அதான் வந்துட்டியே…” என்றிட

“ஓ.. அப்போ பாஸ் நம்மளை பூஜை வேளை கரடி னு சொல்றாரு…” மதன் சொல்ல

“நீயுமா மதன் இவ்வளவு நேரம் தென்னு என்னை ஏத்துக்கிட்டா ங்குற சந்தோஷத்துல இருந்தேன். கரெக்டா வந்துட்டீங்க….” என்று ஆதீரன் கேலியாக சொல்ல

“அப்போ நாங்க வந்ததால உனக்கு திரும்ப வலி வந்திடுச்சு னு சொல்றியா அண்ணா” ரூபா கேலியாக சொல்ல மழுப்பலாக சிரித்தான் ஆதீரன்.

“அட சும்மா இருங்க எல்லாரும்… ஆதீ தம்பிக்கு ஓய்வு வேணும் னு டாக்டர் சொன்னாங்க ல்ல…” கமலாம்மா சொல்ல

“ஆமா… மாப்ளை உங்களுக்கு இப்போ எதுவும் வலி இல்லையே..” பொன்னி கேட்க

“இப்போ பரவாயில்ல அத்தை… லேசா வலி இருக்க தான் செய்யும். ஆனா உங்க எல்லாரோட அன்பும் ஆசியும் என்னை காப்பாத்திடுச்சு…” என்று தீரன் சொல்ல

“சரி அம்மா சார் ரெஸ்ட் எடுக்கட்டும் நாம கேன்டீன் போய் சாப்பிட்டு வரலாம் நீங்க யாருமே இன்னும் எதுவும் சாப்பிடலை..” என்று சித்ரா சொல்ல

“ம்ம்… அதுவும் சரிதான் அத்தை நாம போய் சாப்பிட்டு வரும் போது தென்றலுக்கு எதாவது வாங்கிட்டு வந்து தரலாம். தென்றல் அண்ணா கூட இருந்து பார்த்துக்கோ” என்று ரூபா சொல்ல குமார் மதன் கமலம் பொன்னி என்று அனைவரும் புரிந்து கொண்டு

“சரி நாங்க எல்லாரும் வெளியே இருக்கோம்” என்று கிளம்ப “நாங்க மாமா கூடவே இருக்கோம்.” என்று கூறினாள் சக்தி

“சக்தி வா சாப்பிட போகலாம்….” குமார் அழைக்க

“மாமா எனக்கும் சத்திக்கு சேத்து வாங்கிட்டு வந்துரு” என்று உத்தரவு போட்டாள் அபூர்வா.

“எது? ஏன் பெரிய மனுஷிங்க ரெண்டு பேரும் எங்க கூட வந்து சாப்பிட மாட்டீங்களோ?” என்று ரூபா கேட்க

“இல்ல நான் அப்பா கூட தான் இருப்பேன்…” அபூர்வா அடம்பிடிக்க

“அப்பா தூங்கட்டும் கண்ணு…” பொறுமையாக கூறினார் பொன்னி.

“அப்போ தெட்டு மட்டும் கூட இருக்கா..” என்று தாயை ஏற இறங்க பார்த்து கேட்க

“ஐயோ… இங்க பாரு அப்புக்குட்டி இப்போ நீ எங்க கூட வந்தா உனக்கு பிடிச்ச எல்லாம் சாப்பிடலாம்… ஆனா உங்கம்மா கூட வந்தா அது எதையும் உன்னை சரியா சாப்பிட விட மாட்டா… என்ன சொல்ற?” ரூபி சரியாக அவளை மடக்க தாய் தந்தையை மாறி மாறி பார்த்த அபூர்வா

“அப்பா நான் போய் சாப்பிட்டு உடனே வரேன் உனக்கு எதாவது வேணுமா?” என்று விசாரிக்க

“எனக்கு எதுவும் வேணாம் பூர்வி மா… நீ சாப்பிட்டு வா..” ஆதீரன் சொல்ல

“சரி மா நீ தம்பியை பார்த்துக்கோ நாங்க வரோம்.” என்று கமலம் சொல்லி விட்டு அனைவரும் கிளம்ப

“அம்மா… இவ கேட்குறா னு நீங்க பாட்டுக்கு எல்லாத்தையும் வாங்கி தராதீங்க” என்று தென்றல் கூற

“ஏய் அது எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ அண்ணா கூட இரு டி” என்று ரூபா சொல்லி விட்டு அனைவரும் அகன்றிருந்தனர். தீரன் தென்றலுக்கு தனிமை தந்து விட்டு…

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

3 thoughts on “தீரனின் தென்றல்-61”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *