தீரனின் தென்றல் – 63
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
“என்கூட சமாதானம் ஆக ப்ளானா? என்னடா ப்ளான்?” என்று ஆதீரன் அதிர்ந்து விழிக்க
“ம்ம்… அதை போய் உன் தென்னுக்குட்டி கிட்ட கேளு… நான் இதை சொன்னதுக்கே அவ என்னை எப்படி பழிவாங்க போறாளோ” என்று முணுமுணுப்பாக குமார் சொல்லிக் கொண்டு இருக்க
“என்ன அண்ணா நீயும் உன் மச்சானும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்னவாம்?” என்று தென்றல் கேட்க
“ஆ.. ஒன்னும் இல்லையே ஒன்னுமே இல்ல” என்று சமாளிப்பாக குமார் சொல்ல சற்று நேரம் அபூர்வா குறும்புகளில் அனைத்தையும் மறக்க வைத்திருந்தாள்.
அதன் பின்னர் ரூபி கமலாம்மா தென்றல் ஆதீரனுக்கு தேவையான பொருட்கள் மற்றும் காலை உணவு எடுத்துக் கொண்டு வர
“அண்ணே எப்படி ண்ணே இருக்க?” ரூபி கேட்க
“ம்ம் பரவாயில்ல ரூபி மா.. லேசா தலை மட்டும் வலிக்குது வேற ஒன்னும் இல்ல…” ஆதீரன் சொல்ல
“தலைவலியா? ஆதீ தம்பி டாக்டரை கூப்பிடவா?” கமலாம்மா பதற
“ஐயோ வேண்டாம் ம்மா… அது கொஞ்சம் வலி இருக்க தான் செய்யும் மயக்க மருந்து வீரியம் குறையுதுல அதான்… டேப்லெட் தந்திருக்காங்க சாப்பிட்டா சரியாகிடும்” என்று தென்றல் பதில் தந்தாள்.
“தென்னு முதல்ல பாப்பாக்கு ஊட்டு பசியா இருப்பா..” அக்கறை கொண்ட தந்தையாக ஆதீரன் சொல்ல
“பாப்பாக்கு நாங்க ஊட்டிக்கிறோம் ஆதீ தம்பி… தென்றல் நீ தம்பிக்கு இட்லி காரம் இல்லாம சாம்பார் கொண்டு வந்திருக்கு நீ தம்பிக்கு எடுத்து சாப்பிட கொடுத்துட்டு நீயும் சாப்பிடு..” கமலம் சொல்ல
“ம்ம் சரிங்க மா…” என்று எடுத்தவளை ஏக்கமாக பார்த்த ஆதீரன் “தென்னு கையில கட்டு இருக்கு… எப்படி சாப்பிடுவேன்” என்று ஏதும் அறியாதவன் போல முழிக்க
“போதும்… ஊட்டி விடனும் அவ்வளவு தானே” என்று சீக்கிரம் ஜீரணம் ஆகும் படிக்கு எளிதான உணவுகள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்க அதேபோல குழந்தைக்கு ஊட்டுவது போல இட்லியை கையால் சாம்பாரில் மசித்து ஊட்டிக் கொண்டு இருக்க,
வெண் பிஞ்சு விரல்களை கடித்து விளையாடிய படியே ஆதீரன் சாப்பிட அவளோ மற்றவர்கள் அறியாமல் அவனை முறைத்து மிரட்டிக் கொண்டு இருந்தாள் பார்வையில்…
சாப்பிட்டு முடித்ததும் “சரி மச்சான் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்பறேன் ரூபா கூட இருந்து பார்த்துக்கோ” என்று குமார் கிளம்ப மதனும் சித்ராவும் உள்ளே வந்தனர்.
அவர்களும் ஆதீரன் நலம் விசாரிக்க “நானும் தென்றலும் வர வரைக்கும் நீயும் சித்ராவும் தான் மதன் பார்த்துக்கோங்க” என்று ஆதீரன் சொல்ல
“இதெல்லாம் சொல்லனுமா பாஸ் நல்லா ரெஸ்ட் எடுங்க ஃபேமிலியோட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க நாங்க பார்த்துக்கிறோம்…” என்று மதன் சொல்ல
“சாரை நல்லா பார்த்துக்கோ தென்றல் நாங்க தினமும் வந்து பார்க்கிறோம்” என்று சித்ரா சொல்ல இவர்களும் விடை
“மதன் தம்பி என்னை கொஞ்சம் ஒரு ஆட்டோ ஏத்தி விடுப்பா நானும் வீட்டுக்கு போய் மதிய சமையலுக்கு பொன்னி அக்காக்கு உதவியா இருப்பேன்.” என்று அவரும் உடன் கிளம்பினார்.
ரவுண்ட்ஸ் வந்த டியூட்டி டாக்டர் ஆதீரனை பரிசோதிக்க “லேசா வலிக்குது னு சொல்றாரு டாக்டர்” என்று தென்றல் சொல்ல
“பெரிய ப்ராப்ளம் எதுவும் இல்லை மா… ரெண்டு மூணு நாள் அப்படி தான் இருக்கும்… பெய்ன் கில்லர் கொடுத்திருக்கோம் டைம்க்கு டேப்லெட் எடுத்துக்கிட்டா சரியாகிடும்” என்று சொல்லி சென்றார்.
“அத்தை எனக்கு போர் அடிக்குது சத்தி அம்மம்மா எப்போ வருவாங்க” என்று அபூர்வா கேட்க
“சக்தி ஸ்கூலுக்கு போறா அப்புக்குட்டி அவளை ஸ்கூல்ல விட்டு அம்மம்மா நம்ம எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க…” ரூபி சொல்ல
“ஆமா வீட்ல இருந்தா ஸ்கூலுக்கு அனுப்புவோம் னு நீ இங்க ஓடி வந்துருக்க… இன்னைக்கு ஒரு நாள் தான் உனக்கு நாளைக்கு நீயும் சக்தி கூட சேர்ந்து ஸ்கூலுக்கு போகனும்…” தென்றல் சொல்ல “சரி” என்று தாயை முறைத்தபடி தலையாட்டி வைத்தாள் அபூர்வா.
சற்று நேரம் கழிய அபூர்வாவிற்கு வேடிக்கை காட்டி வருகிறேன் என்று ரூபி வெளியே அழைத்துச் செல்ல தர்மலிங்கம் வந்தார் ஆதீரனை பார்க்க…
“வாங்க சார்…” என்று தென்றல் ஆதீரன் சொல்ல
“ஆதீ என்னப்பா இது ஏன் இப்படி… நேத்து ஒரு வேலையா வெளியூர் போய்ட்டேன் அதனால இப்போ வந்த அப்பறம் தான் தெரிஞ்சது என்னமா தென்றல் எப்படி நடந்தது?” என்று அவர் பதட்டமாக விசாரிக்க நடந்ததை விவரித்தாள் தென்றல்.
“என்னம்மா இது ரெண்டு பேரும் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டாமா” என்று அவர் வருந்த
“அதெல்லாம் ஒன்னும் இல்லை சார் ஏதோ நடக்கனும் னு இருந்திருக்கு… விடுங்க சார் ஆனா இப்படி நடந்ததுலயும் ஒரு நல்லது என் தென்றல் என் மேல இருந்த மொத்த கோபமும் மறந்து என்னோட தென்னுவா திரும்ப கிடைச்சிருக்கா…” என்று ஆதீரன் பெருமையாக சொல்ல வருத்தம் தீர்ந்து லேசாய் சிரித்தார் தர்மலிங்கம்.
“எப்படியோ ஆதீ… நீங்க ரெண்டு பேரும் குடும்பமா சேர்ந்து வாழ்ந்தா எனக்கு சந்தோஷம் தான்…” மனம் நிறைந்து வாழ்த்தினார் தர்மலிங்கம்.
“அம்மாடி தென்றல் ஆதீ ரெண்டு பேர் கிட்டேயும் என் பொண்ணால உங்க வாழ்க்கைல நடந்த இடைஞ்சல் எல்லாத்துக்கும் அவ சார்புல மன்னிப்பு கேட்டுக்கிறேன் மா…” என்று அவர் தழுதழுக்க
“ஐயோ சார் என்ன இது? சார் உங்க மேல எனக்கு எந்த கோபம் வருத்தம் எதுவும் இல்லை சார்…” தென்றல் சொல்ல
“சார் நான் உங்களை எனக்கு குருவா பார்க்குறேன் தயவு செய்து இப்படி பேசாதீங்க சார்” என்று ஆதீரன் சொல்ல
“இல்லப்பா… என்னதான் நீ கல்யாணம் ஆகிடுச்சு னு சொல்லி விலகி போனாலும் நீ தனியா இருக்க என் பொண்ணை ஏத்துக்கிட்டா அவ வாழ்க்கை நல்லா இருக்கும் னு நினைச்சு தான் அவ உன்னை தொந்தரவு பண்றது தெரிஞ்சும் கண்டிக்காம விட்டேன்.
ஆனா இனிமே அவளால உங்க வாழ்க்கைல குழப்பம் வராது தென்றல் அவளை அவ மாமா அத்தை வீட்டுக்கு அனுப்பிட்டேன்… அப்பாவா என்னால தர முடியாத கண்டிப்பை அவளோட மாமா தருவாரு அவ அத்தையும் நல்லவங்க அவளை மாத்திடுவாங்க…
சரிப்பா நீ சீக்கிரம் குணமாகி வரனும் னு நான் சாமியை வேண்டிக்கிறேன் தென்றல் நான் வரேன் ம்மா எந்த உதவி தேவைப்பட்டாலும் என்கிட்ட தயங்காம கேளு மா…” என்று அவரும் விடை பெற்றார் தர்மலிங்கம்.
இவர்களுக்கு தனிமை தரவே அபூர்வாவை ரூபி வெளியே அழைத்துச் சென்று இருக்க “தென்னு பக்கத்துல வந்து உட்காரு டி உங்கிட்ட நிறைய பேசனும்…” என்று ஆதீரன் சொல்ல
“என்ன தீரா?” என்று தென்றல் அருகில் அமர
“உன் தோள்ல சாய்ஞ்சுக்கனும் தென்னு உன்கிட்ட நிறைய பேசனும் கேட்கனும்.” என்று ஆசையாக ஆதீரன் சொல்ல புன்முறுவலோடு அருகில் வந்து அவன் தலையை தன் தோளில் சாய்த்துக் கொள்ள அவன் கையில் இருந்த ட்ரிப்ஸை அகற்ற உள்ளே வந்தார் செவிலிப் பெண்.
அரவம் கேட்டு தென்றல் விலகி அமர ஆதீரன் ஏமாற்றமாக பார்க்க நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள் தென்றல். “ச்சே கொஞ்சம் கூட ப்ரைவசி கிடைக்க மாட்டேங்குதே” என்று சலித்துக் கொண்டான் ஆதீரன்.
“நீ எதுவும் பேச வேணாம் தீரா எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்… நான் உன்னை சரியா புரிஞ்சுக்கிட்டேன் அதனால நீ கவலைப் படாம ரெஸ்ட் எடு தீரா” என்று சொல்ல அவளை முறைக்க மட்டுமே முடிந்தது தீரனால்.
பொன்னி கமலம் மதிய உணவு எடுத்து வர அனைவரும் சாப்பிட சக்தியை குமாரை விட்டு அழைத்து வரச் சொல்லி சொன்னாள் ரூபி.
அவனும் மருத்துவமனைக்கு நேரடியாக அழைத்து வந்திட ரூபி குமார் சக்தி சற்று நேரம் இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப அபூர்வாவும் “இங்க போர் அடிக்குது சத்தி கூட வெளாட போதேன்” என்று வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
மாலை மதன் வர “மதன் எனக்கு டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டி என்னனு பாரு.. நான் சீக்கிரம் வீட்டுக்கு போகனும்.” என்று ஆதீரன் சொல்ல தென்றல் அவனை முறைக்க மதன் எதுவும் புரியாமல் விழித்தான்.
“பாஸ்… ஏன் பாஸ் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண இன்னும் ஒன் வீக் ஆகும் னு டாக்டர் சொல்லிருக்காங்க” என்று சாதாரணமாக மதன் சொல்ல
“எது ஒருவாரமா? அதெல்லாம் முடியாது.. எனக்கு ஒன்னும் இல்ல உடனே என்னை டிஸ்சார்ஜ் பண்ண சொல்லு இல்ல நானே எழுந்து போய் சீஃப் டாக்டரை பார்க்குறேன்” என்று பெட்டில் இருந்து எழப் போக
“ஏய் தீரா என்ன பண்ற? அமைதியா இரு அதான் அண்ணா ஏற்கனவே விசாரிச்சு வைச்சு சொல்றாருல நேத்து தான் தலையில தையல் போட்டிருக்கு கையும் மூட்டு விலகி இருக்கு உன் உடம்புல பட்ட சிராய்ப்பு கூட ஆறலை அதுக்குள்ள வீட்டுக்கு போகனுமா? அமைதியா இரு…” என்று தென்றல் அதட்டல் போட
“அதெல்லாம் வீட்டுக்கு போன சரியாகிடும் தென்னு எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல மா ப்ளீஸ் பாரு நமக்காக அத்தை ரூபி குமார் மதன் கமலாம்மா னு மாத்தி மாத்தி வந்துட்டு எல்லாருக்கும் கஷ்டம் ல…” என்று நல்லவன் போல பேச
“நீ எதுக்கு சொல்ற னு நல்லா புரியுது அமைதியா இரு.. டாக்டர் சொல்லும் போது டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்” என்று கிட்டத்தட்ட மிரட்ட குழந்தை போல உதட்டை பிதுக்கி தன் சோகத்தை ஆதீரன் வெளிக்காட்ட
“பாஸ் அப்புக்குட்டி மாதிரியே பண்றீங்க… தென்றல் பாஸ் உன்னை பத்தி சொல்லிருக்காரு ஆனாலும் இந்த வர்ஷன் தென்றல் சூப்பர் மா… இப்போ தானே தெரியுது எங்க பாஸ் ஏன் மூச்சுக்கு முன்னூறு முறை தென்னு தென்னு சொல்றாரு னு…” என்று கேலி செய்து விட்டு மதன் கிளம்ப
இரவு தீரன் உண்ண வேண்டிய மருந்துகள் அனைத்தும் தந்து விட்டு அருகில் வந்து அமர்ந்த தென்றல்
“என்ன தீரா… ஏன் இவ்வளவு குழந்தைதனமா பண்ற?” என்று கேட்க
“போடி.. உன் கூட உன் கையை பிடிச்சிட்டு உன் மடியில சாய்ஞ்சு தூங்க ஆசை… ஆனா யாராவது வந்து தொந்தரவு பண்ணிட்டே இருக்காங்க நம்ம வீட்டு ஆளுங்களுக்கு நமக்கு தனிமை கொடுத்து போக எண்ணம் இருந்தாலும் இந்த ஹாஸ்பிடல் ஆளுங்க சும்மா இருக்காங்களா? யாராவது சட்டு சட்டுனு வந்திட்டே இருக்காங்க” என்று சொல்ல
“சரி முதல்ல உன் உடம்பு குணமாகட்டும்… அப்பறம் எல்லாம் பேசலாம்” என்று தென்றல் கூற
“ம்கூம் அதுக்கு முன்னாடி நீ சொல்லு… தென்னு உனக்கு என் மேல இருந்த கோபம் எப்போடி குறைஞ்சது?” என்று கேட்க சட்டென்று கன்னங்கள் சிவக்க வெட்கத்தை பூசிக் கொண்டாள் தென்றல்.
“ச்ச் சொல்லு தென்னு…” மீண்டும் கேட்க
“அதெல்லாம் எப்போவோ போச்சு…” தென்றல் அவனை பார்க்க இயலாது தலை குனிந்து கூற
“அதான் எப்போ?”
“ம்ம்… உன் கையால தாலி வாங்கும் போதே எனக்கு உன் மேல இருந்த கோபம் குறைய தொடங்கிருச்சு தீரா…. அப்பறம் உன்னோட செய்கை ஒவ்வொன்னும் என் கோபத்தை குறைச்சு என்னோட பழைய தீரனை என்கிட்ட தந்துச்சு… நானும் உள்ளுக்குள்ள பழைய தென்னுவா எனக்கே தெரிய ஆரம்பிச்சேன்..” என்று தென்றல் சொல்ல சொல்ல
“ஏய் அப்பறம் ஏன் டி இவ்வளவு நாள் சொல்லாம மறைச்சு வைச்சிருந்த?” என்று ஆதீரன் கேட்க
“ம்ம்… உன்னோட சேர்ந்து நாம எல்லாரும் திரும்ப நம்ம ஊருக்கு போகனும் அங்க நம்ம பரம்பரை வீட்ல அப்பாக்கும் அத்தைக்கும் செய்ய வேண்டிய எல்லா முறையும் செய்திட்டு அங்க வைச்சு என் மனமாற்றத்தை உன்கிட்ட சொல்ல நினைச்சு குமார் அண்ணாகிட்ட அதுக்கு ஏற்பாடு பண்ண சொன்னேன். ஆனா அன்னைக்கே நீ அடிபட்டு ஹாஸ்பிடல் ல சேரவும் உன்னை அந்த நிலையில பார்த்து எனக்கு உயிரே போய்டும் போல இருந்தது தீரா…” என்று தென்றல் சொல்ல
தென்றலை தன்னோடு அணைத்துக் கொண்ட ஆதீரன் மொத்த காதலையும் ஒன்று சேர்த்து அவளின் நெற்றியில் முத்தமாக பதித்திருந்தான் ஆதீரன்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Super intresting
Superb very interesting
💕💕💕💕💕💕💕💕😍