துஷ்யந்தா-14
விதுரன் வந்ததும் தீபிகா பத்மாவதி இருவருமே அதிர்ந்தனர்.
தீபிகாவோ இவனை இங்கே எதிர்பார்க்கவில்லை. பிரகதியை மட்டும் ஒருமணியிலிருந்து இரண்டு மணிவரை பார்க்க அனுமதித்து இருப்பான் இவன் அலுவலகம் அது இதென பிஸியாக இருப்பானோன நிம்மதியாக வந்தாள். நிம்மதியை குலைப்பதற்காகவே ஆறடி அவதாரமாக வந்து நின்றவனை கண்டு ஏசியறையிலும வியர்தது வழிந்தது.
“சசியிடம் அம்மா வீட்டுக்கு போகணும்னு அடம்பிடிச்சு அழுது காரியம் சாதித்து பிரகதியை பார்க்க தான் வந்தியா? அவ்ளோ பாசமா? பிரகதி மீது?” என்றவன் பார்வை அவளை பொருட்டாகவே மதிக்காமல் பத்மாவதி விழுங்க முடியாமல் இருக்க நீரை எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி நீட்டினான்.
வாங்கவில்லையென்றால் அதற்கு ஏதேனும் மகளை வஞ்சிப்பானோயென பிடித்து குடித்தாள்.
போதும் என்றதும் பிரகதி வற்புறுத்தவில்லை கை அலம்பினாள்.
பிரகதி போனை எடுக்க சென்றவளை சொடக்கிட்டு அழைத்தான். “எனக்கு சேர்வ் பண்ணு” என்றான்.
பிரகதி திரும்பி முறைத்த முறைப்பில், நகைப்பை மறைத்து, கடிகாரம் பார்த்து, டைம்க்கு வந்துட்டேனா. இல்லை பேச விடாம தடுத்துட்டேனா. பயப்படாம பேசுங்க. பிகாஸ் இங்க வீடியோ ஆடியோ இரண்டும் எனக்கு டெலிகாஸ்ட் ஆகிடும். சிசிடிவி கேமிராவுக்கு பதிலா நேர்லயே கேட்டுப்பேன். அதுல ஆடியோ கிளாறிட்டியா இப்ப பேசற மாதிரி தான் இருக்கும்.” என்று அவனே பரிமாறி உண்ண பிரகதி அலட்சியமாக நின்றாள்.
தீபிகாவுக்கோ அடிவயிறு கலக்கியது. தான் பேசியதை கேட்டிருப்பானோ என்று அச்சம் சூழ்ந்தது.
“பிரகதி உன்னோட லஞ்ச் சாப்பிடலை… உன் பிரெண்ட் சாப்பிட்டாலும் இருக்கும். ஷேர் இட்” என்றான்.
“இல்லை… நான் சாப்பிட்டு தான் வந்தேன். வேண்டாம்… பிரகதி நான் கிளம்பறேன்.” என்று ஓட்டமெடுத்தாள். கீழே விழப்போனவளை பிரகதி தடுத்து நிறுத்தி “என்ன அவசரம். குழந்தை வயிற்றுல இருக்கு தீபிகா பார்த்து ஜாக்கிரதை.” என்றதும் தீபிகா நடைப்போட, “நான் வேண்டுமென்னா கீழ வரை வர்றேன்” என்று பிரகதி போக முனைந்தவளை “அவ தனியா தானே வந்தா. அவளா போவா… நீ என்ன துடுப்பு உட்காரு…” என்றான்.
தீபிகாவே “நீ இரு” என்று பதறி ஓடுவதை கண்டு பிரகதிக்கு பாவமாக இருந்தது.
அன்னை எதிரே இவனிடம் சண்டையிடவும் பிடிக்கவில்லை. ஏற்கனவே இவனை கண்டு பயந்து இருக்க, இனி அன்னையை மேலும் கலவரப்படுத்த விரும்பவில்லை.
“அம்மா… மாத்திரை போடுங்க” என்று மாத்திரை பெட்டியை எடுத்தாள்.
“நீ சாப்பிடு மா” என்று கூறவும் பாத்திரையை எடுத்து கொடுத்து தட்டை வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சிசிடிவி இருப்பதாக விதுரன் கூறியதை கேட்டு பத்மாவதி பயந்தவளாய் தான் மகளை இங்கு விட்டு போக சொன்னது இவன் அறிந்திருப்பானோ என்றே கலங்கி நடுங்குவதை கண்டு பிரகதி அருகே வந்து என்னவென்று கேட்க பத்மாவதி அதை கூறினார்.
“மா… இவன் சொல்லறான்னு நீ நம்பறியே… இந்த அறையில அப்படி எதுவும் இல்லை. இவன் தீபிகாவை மிரட்ட அப்படி பேசறான். இவன் மிரட்டல் எல்லாம் எனக்கு இல்லை. சிசிடிவியும் இல்லை ஒன்னுமில்லை. நேற்று இங்க ஒரு நர்ஸ் அவங்க சேரியை எடுத்து பீளிட் பண்ணிட்டு போனாங்க நினைவுயில்லை” என்றாள்
“ஏன் பிரகதி சிசிடிவி வைக்கிறது எல்லாருக்கும் தெரிந்தா வைப்பாங்க. அவங்க டிரஸ் அட்ஜஸ்ட் பண்ணினா எனக்கு அது பிராபிட் தானே.” என்று தோளைக் குலுக்கி சாய்ந்தமர்ந்தை கண்டு பத்மாவதி அருவருப்பானார்.
“இப்படி பேசினா நான் பயந்து நீ ரிப்பீட்டடா சொல்லற பொய்யை நம்பிடுவேனா. இங்க வந்ததும் அது மாதிரி ஸ்பை கேமிரா இருக்கானு செக் பண்ணிட்டேன். இந்த ஆப் அது மாதிரி டிவைஸ் இருந்தா குறிப்பிட்ட இடத்துல இருந்தா அலார்ட் பண்ணிடும். இதை ஆன் பண்ணி நான் நேற்றே செக் பண்ணிட்டேன். தீபிகாவை எங்கம்மாவை மிரட்டு.. இந்த பிரகதியை மிரட்ட ட்ரை பண்ணாதே. மூக்குடைந்து போவ.” என்று சாப்பிட்டு முடித்தாள்.
“பிரில்லியண்ட்” என்று கை தட்டினான்.
மௌனமாய் நொடிகள் கடக்க, மாத்திரை உபயத்தில் பத்மாவதி சற்றே உறங்கி வழிய சற்று நேரத்திலேயே ஒரு நர்ஸ் வந்து அழைத்து சென்றார்.
“தென் நான் மிரட்டினா நீ மிரள மாட்ட அப்படி தானே? ஓகே எனக்கு இதான் வேண்டும். பிகாஸ் கம்மிங் ப்ரை டே நமக்கு சாந்தி முகூர்த்தம் டேட் பிக்ஸ் பண்ணிருக்காரு தாத்ரு.
சோ பீ ரெடி…” என்று பிரகதி கன்னம் தட்டினான்.
“மறுத்தா?” என்று பிரகதி வேறுபக்கம் திரும்பி பதில் தந்தாள்.
“சிம்பிள்… உங்கம்மா உன்னிடம் பேச மட்டும் செய்யறாங்க. இனி பேச விட மாட்டேன்.” என்று கழட்டி வைத்த கோர்ட்டை எடுத்து புறப்பட்டிருந்தான்.
ஐந்து நிமிடம் சிலையென இருந்தவளை கேரியர் எடுக்க வந்த பெண் சுத்தம் செய்யவும் பிரகதி மென்னடையாக காருக்கு வந்து சேர்ந்தாள்.
ஏதோ சத்தம் கேட்க திரும்பினாள். அப்பொழுது தான் தர்மா மற்றும் விக்னேஷ் இருவரின் நடுவே நாயகனாக விதுரன் நடந்து வந்து அவனின் காருக்கு சென்று அமர்வதை கண்டாள்.
“பார்க்க ஹீரோ மாதிரி இருந்துட்டு பண்ணறது எல்லாம் வில்லன் வேலை” என்று கதிரை வீட்டுக்கு செல்ல ஆணையிட்டாள்.
தனது மடிகணினியை மடியில் வைத்தமர்ந்து பணி தேடுதலில் இறங்கினாள்.
இது அவளுக்கு அபத்தமாக தோன்றியது. விதுரனுக்கு தெரிந்தால் இதற்கும் ஏதேனும் சொல்லி முடிக்குவான். அப்பொழுது தான் ஆதித்யா தந்த நாற்பது பிரசண்டேஜ் ஷேர் நினைவுக்குள் வந்தது.
அந்த காகிதம் அவளின் திருமண பரிசோடு சேர்ந்து பக்கத்து அறையில் பரிசு பொருட்களோடு இருப்பது நினைவு வந்தது.
போகும் முன் போன் அலற எடுத்தாள். பிரகதி எதிர்பார்த்தது போல தீபிகாவே தான்…
“சொல்லு தீபிகா… வீட்டுக்கு போயாச்சா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் வந்துட்டேன். அந்த விதுரன் எப்படி அங்க வந்தான். அவனுக்கு நாம பேசியது தெரிந்துடுச்சா..?” என்றாள்.
“விதுரனோட லஞ்ச் டைம் அங்க தான் ஸ்பெண்ட் பண்ணுவானாம் தீபிகா. முதல் நாளே சொன்னான். அதனால சாப்பிட வந்தான்… கூடவே என்னை கண்கானிக்கவும்.
அதை விடு… நீ பேசியது எல்லாம் அவன் கேட்டிருக்க வாய்பில்லை. அங்க சிசிடிவி எதுவும் இல்லை. சும்மா என்னையும் உன்னையும் மிரட்ட பேசியது.” என்று கூறினாள்.
“நிஜமா? எங்க வீட்ல சில இடத்துல எப்பவும் சிசிடிவி இருக்கும். இன்பாவை பற்றி கேட்க சசி பார்த்துட்டார். அதை வச்சி தான் கேட்டேன். இல்லைனா நிம்மதி தான். நீ எதுக்கோ நான் சொன்னதை யோசி.” என்று துண்டித்தை கொண்டாள்.
அதன் பிறகே மடிகணினியை மெத்தையில் வைத்து விட்டு அறையை நோட்டமிட்டாள். யாரோ வந்து “மேடம் ஆதித்யா ஐயா உங்களை பார்க்கணுமாம் கீழே இருக்கார் வரச்சொன்னார்.” என்று கதவை தட்டி கூறிவிட்டு செல்ல, பிரகதி அவரை தேடி செல்ல முற்பட தனது ஷாலை எடுத்து போர்த்தி நடந்தாள்.
“மச் பெட்டரா மா.” என்று பிரகதி படிக்கட்டில் வரும் பொழுதே கேட்டு வைத்தார்.
“உங்க பேரனை கட்டிக்கிட்டு நல்லா பெட்டரா எப்படி சார் வாழறது? சுத்தி சிசிடிவி… மிரட்டி உருட்டி கல்யாணம் பண்ணிட்டு கைதி மாதிரி வச்சிருக்கான்” என்று கத்தினாள்.
“அப்படியா…. மிரட்டி உருட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்லு.. கைதி மாதிரி வச்சிருக்கான்னு சொல்லாதே மா. நீ போக வர அவனோட காரை கொடுத்திருக்கான். நீ சாப்பிடுவியோ மாட்டியோனு உன்னோட லஞ்ச், டின்னர், டின்னர் என்று கலந்துக்கறான். இல்லைனா அவன் வீட்ல சாப்பிட்டதேயில்லை. எல்லாம் சக்கரம் கட்டிட்டு போகிற வேகம்.
சிசிடிவி…. ஆமா மா. எங்க பார்த்தாலும் இருக்கு. ஒரு கொட்டாவி கூட நிம்மதியா விடமுடியலை. ஆனா பாரு… மிடில் கிளாஸ் பேமில கூட கேட் முன்ன சிசிடிவி வச்சிருக்காங்க. அது அவங்க சேப்டிக்கு. இங்க இருப்பது பங்களா… ஒவ்வொரு அறையுமே ஒரு வீடு கணக்குல வரும். சிசிடிவி இருப்பது தவறில்லையே…?” என்றார்.
“நீ..நீங்க உங்க பேரனுக்கு சாதகமா பேசறிங்க. மற்றபடி அதுல உண்மையில்லை. நான் எங்கயும் போறேன் வர்றேனு கண்கானிக்க தான் கதிரை வச்சிருக்கார்.
லஞ்ச் சாப்பிடறது எங்க அம்மாவோட நான் கூட்டிட்டு தப்பிச்சிடுவேனோனு பயம் அவனுக்கு.” என்று கொதித்து பேசினாள்.
“தப்பு மா. எந்த ஆங்கிளும் நாம பார்க்கிற கோணத்துல தான் இருக்கு.” என்றார்.
“சார்… தீபிகா ஒருத்தனை விரும்பறானு தெரிந்தும்…”
“சாருனு சொல்லாதே மா. உனக்கும் தாத்தா தான்” என்றார்.
“மன்னிக்கணும் சார். நான் கல்யாணத்தையே ஏற்றுக்கலை. உங்களை உறவு முறை வச்சி அழைக்க முடியாது.
தீபிகா விரும்பறானு தெரிந்தும் கொஞ்சம் கூட யோசிக்காம, உங்க பேரன் விதுரன், இன்னோரு பேரன் சசிதரனுக்கு கட்டி கொடுத்திருக்கார். உங்களுக்கு அதுல தப்பாவே தோன்றலையா? அதுவும் இன்பா தாலி கட்டியும் அதை அறுத்துட்டு திரும்ப சசிதரனை விட்டு கட்ட வச்சிருக்கான்.
எவனோ ஒருத்தன் பேசினானு என்னை ஒரு வருஷமா தேடி பழி வாங்கறதுல என்ன ஒரு சாடிஸ்ட்?
இதுல தீபிகா வயிற்றுல கத்தியை வச்சி எங்க வீட்டு அட்ரஸை வாங்கியிருக்கார்.
என்னை பிரப்போஸ் பண்ணின எட்வின் கையை உடைச்சிருக்கார்.
தேங்க் காட் எங்கம்மா காலை வெட்டிட்டானோனு பயங்கர கொலைவெறில இருந்தேன். பட் சுகரால என்றதும் சின்ன நிம்மதி. ஆனா அதை கூட அவனுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டான் பாருங்க… என்ன லிஸ்ட்ல சேர்க்க சொல்லுங்க? அடுத்தவங்களோட சூழ்நிலையை தனக்கு சாதகமா மாற்றி மிரட்டற கேவலமான புத்தி.” என்றாள்.
ஆதித்யாவுக்கு எல்லாம் விக்னேஷால் தெரிந்தவை தான் என்றாலும் பிரகதி வாயால் கேட்டப்பொழுது விதுரன் மேல் துளி கோபம் வரவே செய்தது.
இவனுக்கு மென்மையாகவே நடக்க தெரியாதா? என்று தான் தோன்றியது.
அது வந்து மா?” என்று ஆரம்பிக்க, “தயவு செய்து ஒரு மொக்க பிளாஷ்பேக் சொல்லிடாதிங்க சார். சின்னதுல இருந்து இப்படி ஆகிட்டான் வளர்ந்துட்டான்னு… பதிமூன்று வயசுலேயே அம்மா அப்பா பேச்சை கேட்காம சுயமா எல்லாம் நாமளா தான் வாழறோம். வழிகாட்டுதல் இல்லைனா கூட எத்தனையோ அநாதை பிள்ளைகள் சிங்கிள் பேரண்ட்ஸ் கூட வாழற குழந்தைகள் ரொம்ப நல்லவங்களா தான் இருக்காங்க. ஆறடிக்கு மேல வளர்ந்துட்டு அவனுக்கு அவனோட வாழ்வு வாழ தெரியாலை. எதுவும் சொல்லிடாதிங்க” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
ஆதித்யா கலகலவென சிரிக்க ஆரமபித்தார். “அப்படியேதும் மொக்கை பிளாஷ்பேக் இல்லைமா. விதுரன் அப்பா அம்மா சசியோட அப்பா என் தம்பி எல்லாருமே பிளைட் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அதுவும் விதுரன் காலேஜ் முடிச்சப்ப தான். இப்ப ஒரு மருத்துவமனையில நீங்க ஒரறையில் சாப்பிடறிங்களே அந்த மருத்துவமனையில் தான் கோமதியும் அட்மிட் ஆனா. புருஷன் செத்ததில் ஒரு மாசம் உடம்பு சரியில்லை. சசியும் திக்கி திக்கி கஷ்டப்பட, நானும் அங்க இரண்டு வாரம் இருந்தேன். அதனால தான் அங்க இருந்த விஐபி அறையை நடு சுவரை இடிச்சிட்டு சசி விதுரன் தங்கினாங்க.
சகாதேவன்-மகாலட்சுமி இருந்தாலும் விதுரன் இப்படி தான் இருப்பான். ஏன்னா அவன் சுபாவம் அது. சாதாரணமா ஒத்த பிள்ளையா வளர்ந்தாலே வீட்ல செல்லம் ஜாஸ்தி. இவன் வேற ஒரே பிள்ளையா.. அதுவும் பார்ன் வித் சில்வர் ஸ்பூன். கேட்டதெல்லாம் கிடைச்சிடும்.
பேஸிக்கா இப்படி செல்வம் இருந்தாலே யாருக்கும் அடங்க தோணாது. இதே இந்த கெத்து ஏழைக்கு இருந்தா தன்மானம் கொண்டவன்னு சொல்லிடலாம். பணக்காரனா இருந்தா திமிர் பிடிச்சவன்னு சொல்வாங்க. இது பார்க்கற பார்வை தான்.” என்றார்.
“இப்ப என்ன உங்க பேரன் நல்லவன் அப்படி தானே? என் அம்மாவை என்னோட இருக்க சொல்லுங்க” என்று சவாலிட்டு முடித்தாள்.
“பேசிப்பார்க்கிறேன் மா. அவன் எதுக்கு இன்னமும் அங்க வச்சி மிரட்டறான்னு தெரியலை. விக்னேஷிடம் கேட்டுப் பார்க்கறேன். நீ திருமணத்தை ஏற்றுக்கலைனாலும் என்னை தாத்தானு கூப்பிடலாம்.” என்று எழுந்தார்.
அவர் கிளம்ப உள்ளுக்குள் ஒரு உந்துதல் கூப்பிடேன் என்னவாகிட போகின்றாய் என்றது மனம். ஆனாலும் விதுரனை எண்ணி வாயுக்கு கடிவளமிட்டு பூட்டிக் கொண்டாள்.
மெல்ல படியேறி சென்றவளை வேகமாக உரசி சென்றான் விதுரன். அவன் படிக்கட்டு ஏறும் விதமே இது தான். மெல்ல நடக்க மாட்டான். நடப்பதிலேயே ஓட்டமிருக்கும். அதுவும் தான் அன்னநடையிட்டு யோசித்து நடக்க அவன் வேகம் மரத்தானாக இருந்தது. அவன் வந்துவிட்டானென அறைக்கு போகவும் கால் மறுத்தது. ஆனால் பாதி வழி வந்தபின் திரும்பவும் மனமில்லாது பக்கத்து அறைக்குள் புகுந்து
அறைக்கு வந்து கணம் இடையில் டவல் அணிந்து தலையை மற்றொரு டவலால் துவட்டியிருந்தான்.
பிரகதிக்கு பக்கென்று ஆனது திரும்ப, விதுரனோ இலகுவாக, “தாத்தா டேட் சொல்லிட்டு போனாரா? உனக்கு கம்பெர்டெபிளா? கம்பெர்டெபிளா இல்லானாலும் நான் நாட்களை கடத்த மாட்டேன். நீ மறுத்தா இப்ப ஒரு மணி நேரம் பார்க்கற உங்க அம்மாவை பேச விடமா பண்ணிடுவேன்” என்று இரவாடை அணிந்து அவளருகில் சொடக்கிட்டு முடித்தான்.
“இதுக்கு பேரு வேற… இதுக்கு நான் ஒப்புக்க மாட்டேன். நெருங்கின உன்னை கொன்னுடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரிக்கையாய் பேசி முடித்தவளை முறுவலோடு கடந்தான்.
அவனின் சிரிப்பு எரிச்சலாய் மாறியது. அங்கே இருந்த ஆளுயர கண்ணாடி எதிரெதிரே இருக்க கண்ணாடியில் அவன் பிம்பம் பல முறை தெரிய, அந்த கண்ணாடியை எடுக்க முனைந்தாள்.
“ஏ… என்ன பண்ணற..” என்றதற்குள் அதை எடுத்து தள்ளாடியவள் அவன் மீதே போட்டு முடித்தாள்.
-விதுரகதி தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.