Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -2

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -2

துஷ்யந்தா-2

பிரகதி மற்றும் நட்புகள் சிலர் வந்திருக்க அதன் நம்பிக்கையில் தீபிகா தெம்பானாள்.

இதில் இன்பா தைரியமாய் வந்து நிற்க மேடையில் ஏற தயங்கிய தீபிகா தந்தை தாய் பேச்சை செவி சாய்க்காமல் பிரகதி கூடவே சென்றாள்.

பிரகதி மைக்கை எடுத்து “ஹாய் இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கின்ற மணகமகன் வீட்டார், மணமகள் வீட்டார் மற்றும் பிசினஸ் பீப்பிள் அக்கம் பக்கம் கிளப் என்று நண்பர்கள் எல்லாரும் வந்திருப்பிங்க.

எல்லாருக்கும் வணக்கம். இங்க நீங்க எதிர்பார்த்த திருமணம் நடக்க போறதில்லை. இதோ என் பிரெண்ட் தீபிகா கல்யாண பொண்ணு இன்பா என்றவரை விரும்பறா. பேரண்ட்ஸிடம் ஏற்கனவே சொல்லியும் அவங்க ஸ்டேடஸ்காக மூடி மறைத்து இந்த சசிதரனை திருமணம் செய்ய முயற்சி பண்ணறாங்க.

இனி அது நடக்காது. ஏன்னா இதே மேடையில் இன்பா தீபிகா திருமணம் நடக்க போகுது.” என்று பேச சசிதரன் முன் வந்து குழப்பமாய் மாறி பார்க்க, அதற்குள் இன்பா தீபிகா கழுத்தில் தாலியை கட்டி முடித்தான்.

பெரும் வாரியான நெருங்கிய உறவுகள் சற்று தள்ளியிருக்க தீபிகா பேசியதை கேட்டு அதனை உணரும் முன் இன்பா தாலி அணிந்திட திகைத்து தடுத்திட வழியறியாது தவித்தனர்.

தீபிகா தாய் தந்தையரோ சசிதரனை வேடிக்கை பார்த்து மேடைக்கு ஏறினர்.

“என்ன தீபிகா இது?” என்று அறைய செல்ல, “சாரி அங்கிள். இதை நீங்க பண்ணி வச்சிருக்கணும். உங்க பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கை இது தான்.” என்றாள் பிரகதி.

தலையில் அடித்து “என் பொண்ணு வாழ்க்கை போச்சே. தீபிகா தப்பு பண்ணிட்ட” என்று அவள் தந்தை அலறாத குறையாக பேசினார்.

கூட்டத்தில் சலசலப்பு அதிகமானது. “இது போதும் பிரகதி. என்னோட வாழ்க்கை திருப்பி தந்துட்ட” என்று முடித்து கிளம்ப ஆயத்தமானார்கள்.

“பெஸ்ட் ஆப் லக் இனி உன் வாழ்க்கை உன் கையில் தான். இன்பா கிளம்பி உங்க வீட்டுக்கு போ” என்று யாரின் பேச்சுக்கும் செவி கொடுக்காது அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

தானும் ஒரு காரில் புக் செய்து விமான நிலையம் நோக்கி சென்றாள்.

இங்கு சசிதரன் அவமானம் அடைந்தவனாக போனை எடுத்து விதுரனுக்கு சுழற்றினான்.

“வாசலில் இருக்கேன் சசி. மேரேஜூக்கு இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கே.” என்றான். அதில் நீ கேட்கும் முன் இதற்கு தானே அழைத்தாய் என்பதாய் பதில் தந்தது அந்த சிம்ம குரல்.

“விதுரன் கல்யாணம் நடக்காது டா.” என்று நடந்தவையை திக்கி திணறி விவரித்து கூறினான்.

“எப்ப நடந்தது?” என்றான்.

சில மணித்துளிகள் என்றதும் “அண்ணியோட அப்பாவிடம் அந்த பையன் வீடு எதுனு கேளு” என்றான்.

திருமணமே நின்றுவிட்டது அண்ணி என்கின்றானே என்றாலும் தீபிகா தந்தையிடம் அந்த பையனின் வீட்டை கேட்டான்.

அவர் இதுக்கு முன் மகளை மறந்திடு என்று வார்னிங் தருவதற்கு சென்றிருக்க அதனால் இன்பாவின் விலாசத்தை விதுரனிடம் கூறினார்.

“அதே நேரத்தில் உனக்கும் அண்ணிக்கும் திருமணம் நடக்கும்.” என்றவன் தனது லெப்ட் ஹாண்ட் விக்னேஷிடம் “அங்க யாரையும் மண்டபத்துல இருந்து போகாம பார்த்துக்கோ” என்று கட்டளை பிறப்பித்தான்.

ரைட் ஹாண்ட் தர்மாவிடம் அந்த வீட்டு விலாசத்தை கூறி அந்த பையனை அண்ணியை தூக்கிடுங்க.” என்றான்.

இவனுக்கு முன்னால் சென்ற கார் அதிவேகமாக பறந்தது. இன்பா ஓலாவிலிருந்து கீழிறங்கி அவனும் தீபிகாவும் வாசலுக்கு அடியெடுத்து வைக்கும் நேரம் தர்மா ஆட்கள் இருவரையும் இழுத்து காரில் தள்ளியிருந்தனர்.

“யார் யாரு நீங்க? போலீஸில் கம்பிளைன் பண்ணவா.” என்று போனை எடுத்து நம்பரை தொடுதிரையில் இன்பா அழுத்த தர்மாவோ அதனை எடுத்து காரிலிருந்தபடி தூக்கியெறிந்தான்.

தூக்கியெறிந்தப்பின் கையை கட்டி ப்ளூ டூத் மூலமாக, “சார் மேரேஜ் ஹாலுக்கு வித் இன் டென் மினிட்ஸ் வந்துடுவோம் சார்” என்றான்.

தீபிகாவுக்கு மேரேஜ் ஹாலா? என்று திக்கென்றானது. அப்படின்னா இவங்க.. இவங்க.. சசிதரன் ஆட்களா? என்று எண்ணி நெஞ்சு துடிப்பை பிடித்து கொண்டு பேச்சற்று அமர்ந்திருந்தாள்.

பிரமாண்டமான மேரேஜ் ஹாலில் சிவப்பு கம்பளத்தில் விஐபி நுழைவு வாயில் பென்ஸ் கார் நின்றது. அதிலிருந்து விதுரன் தனது கம்பீர நடை நடந்து வர, இருபக்கமும் அவனை பாதுகாக்கும் படைகளோடு ரோலக்ஸ் வாட்சில் தங்க மூலம் பூசிய கைகடிகாரத்திலு வைர கற்கள் ஒவ்வொரு நொடி முள்ளிலும் மின்னியபடி கண் கூச, புகைப்பட பிளாஸ் லைட் வெளிச்சத்திலும் நடந்து வந்தான்.

மேடைக்கு வரவும் மற்றொரு பாதை வழியாக தர்மா அந்த இருவரை அழைத்து வந்து நிறுத்தினான்.

தீபிகாவை மேலிருந்து கீழ் வரை இவளா இந்த இடத்திலிருந்து அத்தனை துணிச்சலாய் சசிதரனை வேண்டாமென இவனை மணந்து சென்றது என்ன இகழ்ச்சி அவனின் உதட்டில் கேலியாய் மிதந்தது.

அதிலும் தங்கம் என்றை பெயருக்கு ஒட்டியிருந்த கயிற்றை கண்டு அவன் பார்வையில் இன்பா மீது இன்னமும் ஏளனம் கூடியது.

இன்பாவுக்கு இங்கு வந்து தாலி அணிந்து அழைத்து சென்ற போது இருந்த தைரியம் முற்றிலும் வடிந்தது. அதுவும் விதுரனின் மிடுக்கான தோற்றத்தில் ஏதோ குற்றவாளியாக நிற்பதாகப்பட்டது.

“இங்க சசிதரன் வெட்ஸ் தீபிகா என்று தானே போட்டிருக்கு. அதுக்கு தானே இத்தனை அலங்காரம் ஆடம்பரம். யாரோ ஒருத்தன் எல்லோ ரோப் கட்டி அண்ணியை இங்கிருந்து இழுத்துட்டு போனா, சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க.” என்று இன்பாவுக்கு ஒரறை விடுக்க, இன்பா தரையில் விழுந்தான்.

தன்னை யாரோ இரும்பு கம்பியால் அடித்த உணர்வாக இன்பா மெல்ல எழுந்து நிற்க, “சார் நானும் தீபிகாவும் விரும்பறோம். எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. தயவு செய்து எங்களை வாழ விடுங்க” என்றான்.

“விரும்பறிங்கனா பொண்ணு பார்க்க வந்த அப்ப உங்க லவ்வர் தீபிகா இதை சொல்லிருக்கணும். கல்யாணம்… ஆகிடுச்சா” என்றான் நக்கலாக.

இந்த எல்லோ ரோப் எ ஸ்மால் கோல்ட் அவங்க கழுத்துல கட்டிட்டா இது மேரேஜா. அங்க பாரு இருபது சவரனில் தாலி. வீட்ல போட தனியா இன்னொன்னு ஏழு சவரனில் தயாராகியிருக்கு. அப்படியிருக்க இந்த சின்ன தங்கம் தாலியா டா” என்று அறைவிட, “அய்யோ இன்பா.” என்று தீபிகா அலறுவது எதிரொலித்தது.

“தர்மா.” என்றபடி விதுரன் கண் காட்ட, இன்பாவை பிடித்து நிறுத்தினான்.

இன்பா தள்ளாடி எழுந்து நிற்க, தீபிகா அருகே வந்தவன் சலனமேயின்றி, “அந்த ரோப் அசிங்கமா இருக்கு. உச்சிலருந்து பாதம் வரை தங்கத்துல கிலோ கணக்கில் போட்டுக்கிட்டு சின்ன தாலி கழட்டிட்டு சசி அண்ணாவோட மேடையில அமர்ந்து அவனை மேரேஜ் பண்ணுங்க” என்றான்.

தீபிகா ராட்ஷனா இவன் என்று எரிக்கும் பார்வையில் பார்க்க, “நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் இன்பாவோட உடல்நிலை மோசமாகும். என்ன புரியலையா. அவனோட கைமணிக்கட்டு பாருங்க” என்றதும் அதிலிருந்து ரத்ததுளிகள் சிந்த இன்பா மயக்கத்துக்கு செல்ல நொடிகள் கடந்தது.

“ப்ளிஸ் அவரை காப்பாற்று.” என்று தீபிகா அழ அங்கிருப்பவர் விதுரனின் அராஜகம் அறிந்திட திருமணத்திற்கு வந்த போலீஸ் நெல்சன் கூட வேடிக்கை தான் பார்த்தார்.

தீபிகா நொடிகள் கடத்த இன்பா சரிவதை கண்டாள். தீபிகா தாயாரோ “நீ நல்ல பிள்ளையா சசிதரனை கல்யாணம் செய்தா இன்பா உயிரோடவாது இருப்பார்.” என்று மிரட்ட குனிந்து தாலியை பார்த்து விசும்பினாள்.

தீபிகா தாயோ மகளின் தாலியை கழட்ட, தீபிகாவோ செயலற்று மேடைக்கு ஏறினாள்.

விதுரன் மேடை படிக்கட்டு காண தீபிகா ஏறவும் சசிதரனுக்கு கண் காட்ட உற்சாகமாய் தாலி அணிவிக்க அமர்ந்தான்.

அருகே சசிதரன் அமர்ந்து தாலி கட்ட பார்வை என்னவோ இன்பாவை நோக்கி இருந்தது.

“பிரெண்ட்ஸ் பிளஸ் பண்ணுங்க. இனி தானே அண்ணிக்கு உங்க ஆசிர்வாதம் தேவைப்படும்” என்றான்.

தீபிகா பார்வை விதுரனை பொசுக்கும் விதமாக காண, அதனை சட்டை செய்யாது தர்மாவிடம் “ட்ரீட்மெண்ட் நமக்கு தெரிந்த ஹாஸ்பிடலா பாரு. அண்ணி எடக்கு மடக்கா யோசித்தா இன்பா கழுத்தை கோழி அறுக்கற மாதிரி அறுத்திடலாம்” என்று குண்டை தூக்கி போட்டு சென்றான்.

சசிதரனோ தீபிகா கையை பற்றி அக்னியில் வலம் வர, தீபிகாவோ மனதில் வன்மம் ஏற்றி வலம் வந்தாள்.

விதுரனோ தனது ஒன்று விட்ட அண்ணனின் திருமணம் முடிவடைய, கைகுலுக்கி கடற்கரை வீட்டை பரிசாக கொடுக்கும் பொருட்டு சாவியை கொடுத்தான்.

“ஹாப்பி மேரிட் அண்ணி” என்றவன் “மொறைக்காதிங்க அண்ணி. சசிதரன் உங்களை விரும்பினான். என்னிடம் சேர்த்து வைக்க சொல்லி கேட்டான். என்னிடம் உதவி கேட்டு வந்தவங்களுக்கு நான் பாஸிடிவா பதில் தருவது வழக்கம். என்னை பகைச்சவங்களுக்கு நெகட்டிவ் எண்டிங் தலையெழுத்துல எழுதறது தான் என் ஸ்டைல்.” என்றான்.

தீபிகா அவன் பேச்சை கேட்டு அணலை விழுங்கியவளாக இன்பாவை அழைத்து செல்லும் ஆட்களை கவனித்தாள்.

கூட்டங்கள் சலசலத்து வந்திருந்த பெரும் பணமுதலைகளும் ஒன்றுமே நடக்காதது போன்று பரிசு தந்து வாழ்த்த தீபிகா உள்ளத்தில் கொதிகலனாக மாறி நினறாள். ஆனால் மோதும் வல்லமையின்றி கை பாவையாக மாறி காட்சியளித்தாள்.

இங்கு இது எதுவும் அறியாத பிரகதி விமானத்தில் ஏறி இன்பா தீபிகா காதல் திருமணம் நன்முறையில் அமைந்ததை எண்ணி மகிழ்ந்தாள்.

ஒரு மாதம் கடந்திட, விதுரன் குரூப் ஆப் கம்பெனி மீட்டிங் நடைப்பெற்றது. புதிதாக சந்தையில் புழக்கம் பெற்ற தொடுதிரை கணிப்பொறி அமோகமாக விற்பனையாகி இருக்க அதனை மொத்த இந்தியாவிலும் எவ்வாறு மார்க்கேட்டிங் செய்ய என்று பேசவே குழும செய்தனர்.

அங்கே சிலர் விதுரனின் நடை உடை பாவனை என்று அவனின் செயலை புகழ்ந்து தள்ளியது. எவ்விடத்திலும் பிடிக்காத கூட்டம் என்று உண்டல்லவா. அங்கு அப்படியொரு நபர் ஆப்பிள் வோட்காவை சுவைத்தபடி, “இதென்னயா பெரிய விஷயம். அன்னிக்கு அந்த பொண்ணு அத்தனை பேர் முன்ன வந்து இவனோட அண்ணாவுக்கு நடந்த திருமணத்துக்கு முன்ன அவளோட பிரெண்டுக்கும் அந்த சசிதரன் மனைவிக்கும் கல்யாணம் செய்தா பாரு. டூ போல்ட். விதுரன் அண்ணன் கல்யாணம் என்று தெரிந்தும் துளிக்கூட பயப்படாம திருமணம் செய்து வைத்தா. அந்த பொண்ணு மட்டும் அங்கேயே இருந்தா சசிதரன் மேரேஜ் அந்த தீபிகா கூட நடந்திருக்காது. அத்தனை அழுத்தம் அந்த பொண்ணு. கைதட்டி ஹட்ஸாப் பண்ணுவேன். விதுரன் எல்லாம் எந்த மூலைக்கு.” என்றான் மோகித்.

சரியாக திரைக்கு பின்னிருந்த விதுரன் காதில் தெளிவாய் விழ, விக்னேஷை கண்டான்.

“சார் நீங்க அவங்களை பற்றி கேட்கலை அதனால நானும் அப்படியே விட்டுட்டேன். அவங்க இன்பாவுக்கும், தீபிகா அண்ணிக்கும் காமன் பிரெண்ட்.” என்றான்.

“நேம்… அட்ரஸ்.. அந்த பொண்ணோட ஆதி அந்தம் எல்லாம் இன்னிக்கு ஈவினிங்குள்ள எனக்கு தெரிந்துயிருக்கணும்.” என்றான் விதுரன்.

“சூர் சார்.” என்றான் விக்னேஷ்.

“முடிந்தா உங்க முன்ன நிறுத்தறேன் சார்” என்று தர்மா கூறினான்.

விக்னேஷ் தர்மா இருவரும் ஓருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல நின்றனர்.

விக்னேஷ் தீபிகாவிடம் அவளை அறிய கேட்டு நின்றான். தர்மாவோ இன்பா முன் கேட்டு நிற்க இன்பாவோ சொல்ல மறுத்தான்.

அடிகள் பல வாங்கியும் எதுக்கு அவளையும் சித்ரவதை செய்யவா.” என்று பதில் தந்தான்.

தீபிகாவோ “ஏன் என்னை தான் தங்ககூண்டுல அடைச்சிட்டிங்க. அவளாவது சிறகு விரித்து பறக்கட்டும்” என்று பதில் தந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு “அந்த பொண்ணு பற்றி தகவல் கேட்டிருந்தேனே என்னாச்சு?” என்றான். க்ரீன் டீ சிப் பருகி கொண்டு விதுரன்.

“சார் இன்பா என்னை வெளிய விடுங்கடா. இன்னும் எத்தனை நாள் என்னை இங்கயே வச்சி சாவடிப்பிங்கனு கத்தறாரே தவிர எதுவும் சொல்ல மாட்டேங்கிறார். அவரோட சோசியல் மீடியாவுல எதுலயும் அந்த பொண்ணை காணோம் சார்.” என்று தர்மா தலையை சொரிந்தான்.

விக்னேஷை பார்த்து முடிக்க, “சார் தீபிகா மேடமிடம் கேட்டேன். அவங்களும் எதுவும் சொல்லலை. அதனால தீபிகா மேடத்தோட அப்பா அம்மாவிடம் கேட்டேன். ஏதோ பிரகதி என்ற நேம் மட்டும் சொன்னாங்க. அதை தவிர அவங்களுக்கும் அந்த பொண்ணு எங்கயிருக்கானு தெரியாதாம் சார். தீபிகா மேடத்தோட காலேஜ்ல போய் அட்ரஸ் பார்த்தேன். அது ஒல்ட் அட்ரஸா இருக்கு. அவங்க இரண்டு வருஷம் முன்னவே வேற புது வீட்டுக்கு போனதா… சாரி சார். தற்போது இருக்கற அட்ரஸ் கண்டுபிடிக்க முடியலை அவங்க போட்டோவை தீபிகா மேடத்தோட வீடியோவுல இருந்து உங்க பார்வைக்கு எடுத்து வந்திருக்கேன்” என்று கூறி முடித்தான்.

“பிரகதி” என்றவன் கடைசி சிப் பருகி முடித்து “அந்த பொண்ணோட போட்டோ” என்று கையை நீட்ட அதில் தீபிகா திருமணத்துக்கு வந்த போது வீடியோவில் பதிவாகியதை போட்டோவாக மாற்றி, கவரிலிருக்க எடுத்து தந்தான் விக்னேஷ்.

போட்டோவை கண்ணாடி மேஜையில் பரப்பி முடித்தான் விக்னேஷ். குடித்த சாஸரை அதில் பிடியை தளரவிட மேஜையில் சாஸர் உடைந்தது. அதன் துகள்கள் போட்டோவில் அவளை மறைக்க அதனை எடுத்து பார்வையிட்டான்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *