Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-23

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-23

துஷ்யந்தா-23

    இன்பாவை இங்கு கண்டதும் அழைத்து விட்டால் ஆனால் தன்னை கழுகு போல துரத்தும் விதுரன் கண்ணில்பட்டால்?

   இன்பா எப்படி இந்த இடத்தில் என்று குழப்பமாய் கேட்டுவிட்டாள்.

     “உனக்கு தான் தெரியுமே பிரகதி. எனக்கு வேலை இல்லைனு. வேலை தேடி நிறைய கம்பெனிக்கு இன்டர்வியு அட்டன் பண்ணினேன். என் லக் எதுவும் செட்டாகலை. சோர்ந்துட்டேன்… அப்ப தான் ஆதித்யா கம்பெனில வேலைக்கு ஆளெடுத்தாங்க இன்டர்வியு அட்டன் பண்ண வந்து பார்த்து ஷாக் ஆகிட்டேன்.” என்றான். அது புரியாததா பிரகதிக்கு தாத்தா பெயரை மாற்றாமல் விதுரன் நடத்தும் கம்பெனியாக இருக்குமென யூகித்து விட்டாள்.

      “அந்த விதுரன் தான் இன்டர்வியு நடந்தப்ப இருந்தான். என்னை கேள்வி கேட்டான். ஆன்சர் பண்ணினேன். என்னை அவனுக்கு நினைவில்லைனு நினைச்சேன். இங்க இருந்து போனா போதும் முருகானு வேண்டினேன். ரிசல்ட் கொஞ்ச நேரத்துல அனவுன்ஸ் பண்ணுவோம் இருங்கனு அந்த விக்னேஷ் என்பவன் கேட் போட்டுட்டான்.
 
     பிறகு ரிசல்ட்ல எனக்கு வேலை கிடைச்சது. அப்பாயின்மெண்ட் லெட்டர் வாங்கிக்கோங்கனு மறுபடியும் விதுரன் இருக்கற இடத்துக்கே அனுப்பினாங்க.

    இந்த முறை யாருமில்லை. விதுரன் என்னிடம் அப்பாயின்மெண்ட் லெட்டர் கொடுத்து கங்கிராட்ஸ் பண்ணினான்.

     கூடவே பெர்சனல் இங்க இழுக்காதே. இது ஆபிஸ். பெர்சனல் வேற அபிஷியல் வேறனு சொன்னான். எனக்கு தூக்கிவாறிப் போட்டுச்சு.

    கொஞ்சம் தைரியம் வரவழைச்சு என்னை ஏன் வேலைக்கு எடுத்திங்கனு கேட்டேன். விதுரன் சிரிச்சிட்டே. நீ நல்லவன் அவ்ளோ தான் சொன்னான்.

வேலையை நானா விட்டுடலாம்னா ஸ்டார்டிங் சேலரியே நாற்பதாயிரம். அதனால சேர்ந்துட்டேன். எத்தனை நாள் வேலையில்லாம இருந்தேன். அஞ்சலி வேற பாவம். காதுல கழுத்துல வளையல்னு கழட்டி தான் வீட்டு நிலவரம் சமாளிச்சா. இதுக்கு மேலயும் அவளை கஷ்டப்படுத்த விரும்பலை.” என்றான்.

       “ஏன்டா.. ஏன் நம்பர் மாற்றிட்ட… வீடும் மாறிட்ட.. ஏன்… விதுரனாலயா?” என்றான்.

      “சே சே விதுரன் உன்னை கேட்டு வந்தப்பிறகு என் பக்கமே வரலை. இந்த தீபிகா தான் அவளுக்கு குழந்தை பிறந்தப் பிறகு ஒரு முறை பார்க்க வந்தா.

    ஒரே தலைவலி… அஞ்சலியை அழ வைச்சிட்டா. அஞ்சலிய போக சொல்லறா. அவளை நான் மறக்க கூடாதாம்.” என்றவன் மௌனமாகி போனான்..

     “சொன்னா நம்ப மாட்ட. நாம ஓடி போகலாம் வானு. தினமும் வந்து என்னை கேட்டு குடைந்தா.

   அஞ்சலியை அவங்க ஊருக்கே போக சொல்லி மிரட்டுறா. என்ன பண்ணறதேனு தெரியலை. நான் வேற அஞ்சலியோட வாழ்வை ஆரம்பிக்கலை. அது வேற அஞ்சலி சொல்லி ஒரு முறை சொல்லி அழ, அந்த வார்த்தையை பிடிச்சுக்கிட்டா. நீ என்னையே நினைச்சிட்டு இருக்கற மாதிரி தான் நானும். என்ன சசி என்னை கட்டாயப்படுத்தி குழந்தையை கொடுத்துட்டான்னு ஒரே புலம்பல். .

      இருக்கற இடம் தெரியறதால தானே தினமும் வர்றானு இடத்தை மாற்றிட்டேன். போன் நம்பரும் மாற்றிட்டேன்.” என்று சோக கதையை விவரித்தான்.

      “ஏன்டா… தீபிகாவை அதிகமா விரும்பியது நீ. ஆனா அவ இப்ப இப்படி பண்ணறதை பார்த்தா அவ தான் உன்னை அதிகமா விரும்பியிருக்காளோனு தோனுது.” என்று பிரகதி பேசினாள்.

     “புல் ஷிட். அதுக்கு பேரு காதலே இல்லை.” என்று விதுரன் குரல் கேட்டது. இன்பா நடுங்கியவாறு எழுந்துக் கொள்ள, பிரகதியோ மூக்குல வேர்த்துடுச்சு வந்துட்டான். என்றவாறு எண்ணினாள்.

     “என்ன காதலே இல்லை. உன்னோட காதல் தான் உயர்ந்தது இல்லை. அவ காதலும் அப்படியிருக்கலாம். கல்யாணத்தப்ப மணமகள் ரூம்ல அலங்கரிச்சு நின்றுகிட்டு இன்பாவை கட்டிக்க முடியலையேனு பீல் பண்ணினா தெரியுமா. அதுக்கு தான் நான் ஹெல்ப் பண்ணினேன்.” என்றாள் பிரகதி.

   இன்பாவை அமர சொல்லி கைகாட்டி விட்டு பேச ஆரம்பித்தான். விக்னேஷ் மற்றவர்களை போக சொல்லி தடுப்பு போட்டான்.

   ஒரு பக்கம் தர்மா மறுபகக்ம் விக்னேஷ் என்று பணியாட்கள் வரமுடியாத அளவிற்கு காவலாய் நின்றனர்.

      “தீபிகா… எந்தளவு சுயநலக்காரினு புரியாம இருக்கிங்க. நீங்க எப்படி காலேஜ் பிரெண்ட்ஸ், காதலன்…?

  ஒன்னு அவ உங்களிடம் ரியல் பேஸை காட்டாம நடிச்சிருக்கணும். இல்லை நீங்க முட்டாள இருக்கணும்.” என்றான் விதுரன்.

    முன்பு தீபிகாவை காதலித்த நேரம் இதை விதுரன் கூறியிருந்தால் மறுத்து பேசியிருப்பான். இன்றோ இன்பா யோசனைவயபட்டான்.

    “ஆக்சுவலி மேரேஜ் என்றதும் இன்பாவை காட்டி நிறுத்தியிருக்கா. அவங்க அப்பாவுக்கு அம்மாவுக்கு பிடிக்கலை. தீபிகா அம்மா கீதாவோட வற்புறுத்தலில் தீபிகாவுக்கு வரன் தேடினாங்க.

     சசி ஒரு முறை தீபிகாவை பேங்க்ல பார்க்கறப்ப யாரோ ஒரு ஹாண்டிகேப்-கு கஜினி அசின் மாதிரி ஹெல்ப் பண்ணிருக்கா.

  அன்னிக்கு தீபிகா பின்னாடியே போய் வீட்டை கண்டுபிடிச்சு என்னிடம் சொன்னான்.

   எனக்கு அவளை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைனு. வீட்ல கோமதி சித்தி கல்யாணம் பேச்சு எடுத்தாலே தன் குறையை எண்ணி வேண்டாம்னு சொன்னவன் வாலண்ட்ரியா கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்னதும் மேற்கொண்டு பேசி முடிக்க சொன்னேன்.

      பரமகுரு விசாரிச்சு பார்க்கறப்ப ஆதித்யா பேரன் எப்படினு கேட்டிருக்கார்.

     என்ன பதில் கிடைச்சிருக்கும். என்ன சொல்லிருப்பாங்க.” என்றான் கேள்வியாய்.

    “உன்னை பற்றி பேசிருப்பாங்க.” என்றாள் பிரகதி.

    “எக்ஸாக்ட்லி…. தாராளமா கட்டி கொடுக்கலாம்னு முடிவோட கீதா தீபிகாவை பிரைன் வாஷ் பண்ணிட்டாங்க. பணக்காரன் என்ற பிம்பம், வீட்டோட இமேஜ் க்ளிக், சசிதரனோட போட்டோ, அவனோட பேங்க் பேலன்ஸ் இப்படி பணமும் அழகும் வச்சி தீபிகா இன்பாவை விட பெட்டர்னு முடிவெடுத்தா.” என்று கூற பிரகதியோ “சே.. பணம் அழகு ஸ்டேடஸ் இதையே சொல்லாதே.” என்றாள்.

     “நீ நம்பலனாலும் அதான் நிஜம். இன்பா ஆதித்யா என்றதும் என்னை நினைச்சி மற்றவங்க பேசியதை வச்சி இன்பா பயந்து எங்கிருந்தாலும் வாழ்கனு தீபிகாவிடம் சொல்ல.. அவளுக்கு அது வசதியா போச்சு.

ஜாலியா கல்யாணத்துக்கு பர்சேஸ் பண்ணினா… சசிதரனோட இரண்டு மீட்டிங்ல அவன் பேசலை. சைலண்ட் போலனு அவளா நினைச்சிட்டா. பட் ட்ரு என்னனா.. கோமதி சித்தி பேசக்காடாதுனு சசிதரனிடம் வார்ன் பண்ணிட்டாங்க. போன்லயும் பேசவிடலை. ரொம்ப பிஸினு சொல்லி தடுத்துட்டாங்க.” என்றான் சற்று இரண்டு விநாடி பெருமூச்சு விட்டான்.

    இதான் மிஸ்டேக்… கல்யாணத்துக்கு முன்ன மேடை ஏறி  முகூர்த்த புடவை வாங்கறப்ப தான் சசி என்னிடம் எங்க இருக்க வர்றியா நீயே லேட்டானா என்ன அர்ததம். என்று பேசியிருக்கான். தீபிகா பார்த்துட்டு கீதாவிடம் பரமகுருவிடமும் கேட்டிருக்கா.

   திக்குவாய் என்றதை தீபிகாவோட அம்மாவுக்கும் தெரியாது. பரமகுரு இன்பாவை விட சசி பெட்டர் ரைய்ட் சாய்ஸ்னு நினைச்சிட்டார். அதுவும் இல்லாம கொஞ்ச நாளுக்கு முன்ன தான் ஒருத்தனோட டங் கட் பண்ணி விதுரன் அரக்கன்னு எல்லாருக்கும் தெரிந்தது. அதனால பயந்து பரமகுரு கல்யாணம் நடக்கலனா நான் ஏதாவது செய்வேன்னு பயந்திருக்கலாம். அதான் உண்மையும்.

    அப்ப தான் நீ உள்ள வந்திருப்ப… நீ வந்த தைரியம். திக்குவாயை கட்டிக்கிட்டு பிரெண்ட்ஸ் பார்வையில கேலிக்கு ஆளாகறதுக்கு பதிலா இன்பாவை மேரேஜ் பண்ணிட்டு அவளோட அப்பா சொத்தை வாங்கிட்டு இன்பாவோட தனியா வாழலாம்னு பிளான் போட்டா.

   டோட்டல் பிளானும் வேஸ்டா போச்சு. என்ன பண்ண நான் என்ட்ரி கொடுத்துட்டேன். எனக்கு சசி விருப்பம் தான் முக்கியம். அவன் திக்குவாய் என்று குனிகுறுகி போறதில் எனக்கு விரும்பமில்லை.
 
     கல்யாணம் தடைப் பெறணும்னா முன்னவே பண்ணிருக்கணும். மேடை வரை வந்துட்டு வேடிக்கை பார்க்க நான் என்ன கேனையனா.

    தீபிகா பணம்னா வாய திறக்கற பொணம். இன்பாவுக்காக கல்யாணம் பண்ணினானு நினைச்சியா… தீபிகா அம்மா அவளிடம் நான் ஒருத்தனோட நாக்கை துண்டா வெட்டிட்டான் என்று சொல்லி அவ பயந்து தாலிக் கட்டிக்கிட்டா.

   நீ சொல்லற காதலும் மண்ணாங்கட்டியும் இல்லை. தீபிகா ஒரு சுயநலக்காரி. பணப்பிசாசு. குழந்தையை வயிற்றுல அழிக்க இரண்டு முறை கருகலைப்பு மாத்திரை சாப்பிட்டா… பட் எதுவும் அப்படி நடக்கலை. நான் வயிற்றுல வச்சப்ப சொன்னாலே அது அவ உயிர் போயிடுமேனு பயத்துல சொன்னது. ஆனாலும் செம கேடி இன்பா அட்ரஸை வாங்கிட்டு அவனிடம் பேசினா தடுக்க கூடாதுனு என்னிடம் பேரம் பேசினா. . 

    ஆல்ரெடி இன்பா அஞ்சலினு ஒரு பொண்ணை மேரேஜ் பண்ணிட்டான்னு விக்னேஷ் சொன்னான். அதுவுமில்லாம நீ எங்கயிருக்கனு தெரிந்தும் சொல்லாம காப்பாற்றிய நல்லவன். இன்னொரு பெண்ணோட வாழ்வை நாசமாக்க மாட்டானு நம்பினேன். அதனால தான் தாராளமா இன்பா அட்ரஸ் கொடுத்தேன்.

   இப்ப வேலை கொடுத்தது அவரோட டேலண்ட்காக.

அப்பறம் எதிரியை பக்கத்துலேயே வச்சிக்கிறது என்னோட ட்ரிக்ஸ்.” என்றான் விதுரன்.

     பிரகதி கடைசி வார்த்தைக்கு அவனை முறைத்தாள்.

     தீபிகா இப்படிப்பட்டவளா… மனம் ஏற்க முரண்டியது. நல்ல வேளை இன்பா வாழ்வு பிழைத்தது. அஞ்சலி நல்லப்பெண் என்று சிந்தனை ஓடியது.

  இன்பா மௌனமாய் கேட்டு கண்ணிர் வடித்தான்.

     “தெரிந்தோ தெரியாமலோ தீபிகாவோட கல்யாணம் நடக்கலைனு எத்தனையோ முறை உங்களை திட்டியிருக்கேன். என்னை அடச்சி வச்சப்ப, உங்களை பிடிக்கலை. ஆனா தீபிகா எனக்கு மேட்ச் இல்லை… எனக்குனு சொல்லறதை விட என் பேமிலிக்கு செட்டாகியிருக்க மாட்டா. எனிவே தேங்கஸ்.” என்றான்.

மனதில் அஞ்சலியோடு இனி நெருஞ்சிமுள்ளாக வாழ வேண்டியதில்லை என்ற நிம்மதி பரவியது.
  
  முன்பு தீபிகா வாழ்வும் அவள் நிலையும் தானே காரணம் என்ற எண்ணத்தில் வாழ முடியாது தவித்தான். அஞ்சலியையும் தொட கூசிப்போனான். இன்றோ அவனுக்கான காதலை அஞ்சலியிடம் தேடி தன் அன்பை வாறி வழங்கிட திட்டமிட்டான். அவளின் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டான் இன்பா.

   “டைம் அப்… சாப்பிடலையா… போய் லீவ் போட்டுட்டு மைண்ட் ரிலாக்ஸ் பண்ணு. மேடம் நீங்க போக போறிங்களா இருக்க போறிங்களா?” என்றான் விதுரன்.

    “இன்பா அட்ரஸ் நம்பர் கொடு.” என்று அவனிடம் வாங்கி அனுப்பி விட்டு “அப்பறம் நீ ஒன்னும் நல்லவன்னு இந்த இன்சிடெண்ல எதுலயும் வரலை டெவில் கிங். ஒருத்தனை நாக்கை துண்டிச்சிருக்க. இன்னொருத்தனை சாவடிச்சிட்ட.

    சரியோ தப்போ தீபிகா தாட். அவளோட காதலை கெடுத்திருக்க. இதெல்லாம் பேலன்ஸ் இருக்கு. நான் புறப்பட்டுட்டேன். இங்க இருக்க மாட்டேன்.” என்று புயலாய் போயிருந்தாள்.

      விதுரனும் தனக்கு தொடர்ந்து அழைப்பு வர அதனை கவனிக்க சென்றான்.

   அலுவலகத்தில் பணிகள் மற்றவர்களுக்கு கட்டளையிட காத்திருக்க பிரகதி கதிர் காரில் ஏறும் வரை கண்ணாடி வழியே பார்த்து விட்டு பணியை தொடர்ந்தான்.

   இன்பாவோ ஒரு கோவில் வாசலில் பூக்கார கிழவியிடம் மூன்று முழம் மல்லிப்பூ வாங்கி கொண்டு அல்வா வாங்கிக் கொண்டும் நிறைவாய் வீட்டை நோக்கி சென்றான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
   


3 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *