துஷ்யந்தா-3
”நாட் பேட்” என்றவனின் வார்த்தை உதிர்த்து அந்த போட்டோவை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தான்.
கண், மூக்கு, வாய், உதடு, காதென அவள் தோள் வரை புரண்ட கூந்தல் என்று கழுகு கண்ணை கொண்டு அங்கங்களை அலச, இடையில் சிறிதளவு பளிச்சிட்ட பால் மேனி, சிலைக்கு சேலைக்கட்டிய வரிவடிவம், என்றவனின் கவனம் நொடியில் மீண்டும் கழுத்தில் மாங்கல்யத்தை தேடியது.
“மேரேஜ் ஆகாதவளா?” என்றவன் பார்வை நிமிரும் முன் “அவங்களுக்கு திருமணம் ஆகலை சார்.” என்றான் விக்னேஷ்.
“பெயர் என்ன சொன்ன?” என்று கேட்டதும் “பிரகதி சார்” என்றான் தர்மா முந்திக் கொண்டு. பெரும்பாலும் விக்னேஷ் புகைப்படம் வரை எடுத்து வந்து நீட்டவும் தர்மா தனக்கான இடத்தை தக்க வைக்க இப்படி முந்திக் கொண்டு பதிலளிப்பது வழக்கம்.
“நான் அவளை பார்க்கணும். கூட்டிட்டு வா” என்று தர்மாவை பார்த்து கூறினான் விதுரன். தர்மா விழித்து நிற்கவும், “சார் அவங்க இங்க இல்லை. ஏதோ படிக்க அதர் கன்ட்ரிக்கு போனதா தகவல். தீபிகா அண்ணியிடம் கேட்டுட்டேன். அவங்களுக்கு எந்த கன்ட்ரினு தெரியாதுனு சொல்லிட்டாங்க.” என்று முடித்தான்.
“நான் சசிதரன் வீட்டுக்கு போய் அண்ணியிடம் நேர்ல கேட்டுக்கறேன். ம்ம்… தர்மா ரெடிப்பண்ணு.” என்று ஆடை மாற்ற சென்றான்.
சசிதரன் வீட்டுக்கு செல்ல பர்சனல் காரை எடுத்து வந்து முன்னிருத்த ஆணையிட்டுயிருந்தான் தர்மா.
சசிதரன் வீட்டுக்கு அடியெடுத்து வைத்த நேரம் தீபிகாவை தாங்கிக் கொண்டு சசிதரன் குடும்பத்தினர் இருந்தனர்.
மயங்கி அமர்ந்திருந்த தீபிகா இவனா? என்பது போல அஞ்சி நடுங்கினாள்.
தனது திருமணத்துக்கு பிறகு விதுரனை பற்றி அறிந்த விஷயங்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. தன்னால் அவனையும் அவன் குடும்பத்தையும் ஆட்டி படைக்க காத்திருக்க, அவனின் அராஜகங்கள் எல்லாம் கேள்விப்பட்டது திகிலை தந்தது.
“என்னாச்சு… எல்லாரும் அண்ணியை சூழ்ந்து இருக்கிங்க” என்று கேட்டதும் அவளை சுற்றியிருந்தவர்கள் “வா விதுரா உட்காரு… ஏய் கமலா… விதுரன் வந்திருக்கான் பாரு. ஜூஸ் கொண்டா.” என்று சசிதரன் தாய் கோமதி குரல் கொடுக்கவும் சசிதரன் போனில் டாக்டரை அழைத்து விட்டு விதுரன் அருகே அமர்ந்தான்.
“என்ன…டா இங்க? வர சொன்னா கூட ம….றுத்துடுவ” என்றவாறு விதுரன் அருகே இடம் விட்டு அமர்ந்தான்.
“சொல்லறேன்… அவங்களுக்கு என்னாச்சு.” என்று தீபிகாவுக்கு என்னென கேட்டு முடித்தான்.
“தெரியலை டா. ஒரே வாந்தி மயக்கமா வரு…துனு சொன்னா. டாக்டருக்கு போன் பண்ணிட்டேன் வந்துடுவாங்க” என்றான்.
“ஓ…” என்றவன் தீபிகாவின் மயக்கத்தில் சுருண்டிருக்க கேட்க வந்தவையை கேட்க சற்று தாமதப்படுத்தினான்.
“விதுரன் மீட்டிங் எல்லா…ம் அமோகமா இருந்த…தா கேள்விப்பட்டேன். அந்த ஆச்சாரியாவோட கம்பெனியை வாங்க போறி…யாமே. ஏன் டா” என்று கேட்டு நிறுத்த வந்திருந்த பழச்சாறை எடுத்து சிப் செய்தபடி “ரொம்ப பேசிட்டான். அதுவும் என் காதுப்பட, அப்பறமும் சும்மா விடணுமா? அதான் அவனை அடிமட்டத்துல கொண்டு வர இக்கட்டு கொடுத்தேன்” என்று பதில் தந்தான்.
விழிமூடி களைப்பில் இருந்த தீபிகாவுக்கு அடிவயிறு கலக்கியது. யாரோ வந்து தன் கையை பிடிக்கவும் விளுக்கென்று அமர்ந்தாள்.
“பதட்டப்படாதே மா. நான் உங்க குடும்ப டாக்டர் மேக்னா தான்” என்று தீபிகாவை சிகிச்சையை துவங்கினார்.
“எத்தனை நாளா மயக்கம் வாந்தி?” என்று கேட்டதும் “இரண்டு நாளா வாமிட் தெரிந்தது ஆனா அதை பெரிசா எடுத்துக்கலை. இன்னிக்கு முடியலை. காலையிலருந்து எது சாப்பிட்டாலும் வாமிட் ஆகுது.” என்று கூறவும் ஹார்ட் பீட் ஆராய்ந்தவர் மென்குரலில் “பீரியட்ஸ் தள்ளி போயிருக்கா?” என்று காதை கடித்தார்.
இந்த நாட்களை அவள் மறந்தே போனாள். எப்படி நினைவு வைத்திருப்பாள். தீபிகா மனதில் தான் இன்பா என்ன ஆனானோ என்ற பயமும், பதட்டமும் அதிகமாக மனதில் சுழல இதெல்லாம் இந்த மூளையில் உதிக்கும்.
“தெரியலை… சரியா நினைவுயில்லை.” என்று விக்கித்து விழித்தாள்.
“இங்க வாங்க” என்று தனிபட்டு அவளின் படுக்கயறைக்கு அழைத்து சென்றார் டாக்டர்.
“இங்க வருவதற்கு முன்ன ஒரு டவுட் இருந்தது. அதனால ஒரு பிரகனன்ஸி கிட் எடுத்துட்டு வந்தேன். போங்க… இதை உபயோகித்து எடுத்துட்டு வா.” என்று எப்படி உபயோகப்படுத்த வேண்டுமென கூறவும் தீபிகா ஏதோ மந்திரமாக அதை கேட்டு குளியலறைக்கு சென்றாள்.
அந்த கிட்டில் குறிப்பிட்ட படி உபயோகப்படுத்தி முடித்து காத்திருந்தாள்.
கடவுளே… என் மனசுல இன்பா இருக்கறப்பவே சசிதரனோட ஆக்கிரமிப்பில் இப்படியொரு நிகழ்வுல மாட்டுவேனு நினைக்கலை. இப்ப குழந்தையா இருக்கும்னு பயமா இருக்கு. என்னால எந்த குழந்தையும் பெற்றுக்க முடியாது.’ என்று யோசனைக்கு சென்றவளை “தீபிகா… மயங்கிட்டிங்களா?” என்ற குரலில் கதவை திறந்து வந்தாள்.
“கொடுங்க” என்று காத்திருக்க ‘கடவுளே குழந்தையா இருக்க கூடாது என்று மனதில் நினைக்க ஆனால் நடந்ததென்னவோ இரு கோடு காட்டி டாக்டரை மகிழ செய்து, வாழ்த்து வேறு கூறினார்கள்.
அசிங்கத்தை என்னவென்று ஏற்பது திருமணம் என்ற தாலிகயிற்றை கொண்டு கையை கட்டி, பிடிக்காது போனாலும் கட்டிலில் மனைவியாக நின்ற தன்நிலையை… இதற்கு கொண்டாட்டமா என்ற சலிப்பும், கோபமும் தான் தீபிகாவை ஆட்டி படைத்தது. துளியும் மகிழ்ச்சி இல்லாது விதுரனை மனதில் அர்ச்சித்தாள்.
அனைத்துக்கும் காரணம் இந்த விதுரன் தான். அவன் மட்டும் அன்று வராமல் இருந்தால் தான் இன்று இன்பாவோடு வாழ்ந்திருப்பேன் என்ற ஒன்று தான் மனதை அழுத்தியது.
சசிதரன் வந்து அணைத்து இனிப்பை ஊட்டி விட்டு தூக்கி சுற்றி ஆராவரமாக மகிழ்ந்தது அவள் கண்ணிற்கும், கருத்திற்கும் படவில்லை.
கோமதியும், சசிதரனும் தங்கள் வீட்டிற்கு ஒர் உயிர் வர அதனை வரவேற்க தயாரான மனநிலைக்கு சந்தோஷமாக, தீபிகா மட்டும் அமைதியாக வருத்தமுற்று நின்றாள்.
“கங்கிராட்ஸ் அண்ணி. இந்த வீட்ல மாமா இறந்தப்பிறகு சசி திருமணம் தான் அதிகமா எதிர்பார்த்தது. கொஞ்சம் முன்ன பின்ன என்றாலும் திருமணம் முடிந்து இப்ப தான் சசி சந்தோஷமா இருக்கான்.” என்று வாழ்த்து தெரிவித்து முடித்தான்.
“இதுக்கு எல்லாம் காரணம் நீ தான்” என்றவளின் சினமான பேச்சை விதுரன் கவனித்தாலும் கருத்தில் பதியாமல் கூலாக கண்ணாடி அணிந்து, “நான் மட்டுமா உங்க நலனில் அக்கறையா இருக்கேன். உங்க தோழி பிரகதியும் தான். போன் பண்ணி அவங்களுக்கு சொல்லுங்க.” என்று போனை அவள் முன் தள்ளி வைத்தான்.
“அவ நம்பர் எனக்கு தெரியாது.” என்றாள்.
“பொய் அவ எங்க?” என்றான் காட்டு கத்தலில். “விதுரன் என்ன…டா கா…காரணத்தோட வந்திருக்க போல?” என்று சசிதரன் சற்று பயந்தான்.
“எனக்கு உங்க மேரேஜை தடுத்த அந்த பொண்ணு வேண்டும்” என்றான் அழுத்தமாக.
சசிதரனோ “அவளே கன்சீவா இருக்கா. நேற்றே சொன்னா அந்த இன்பாவை விடச்சொல்லி. இப்ப தான் குழந்தை வேற வந்துடுச்சே டா. அவனையும் விட்டுடு. இனி அவங்களாம் எதுக்கு.” என்றான்.
“சசி.. அன்னிக்கு உன்னோட மேரேஜ் நீ விரும்பியபடி நடந்ததே அது உனக்காக நான் மெனக்கெட்டதுனு நினைச்சியா? என்னோட தலைமையில மேரேஜ் என்று பத்திரிக்கையில போட்டுட்டு பொண்ணு ஓடிப்போனா என்ன அர்த்தம்.
நாளைக்கு என் தலைமையில் நடக்க இருந்த திருமண பொண்ணு ஓடிட்டானு தான் பேசுவாங்க. ஆனா இப்ப என் தலைமையில எது நடந்தாலும் அது மாறாது. நடக்கும்னு புரிய வச்சிருக்கேன்.
அண்ணி… அந்த பொண்ணு பிரகதி எங்க?” என்றான். அந்த ஹால் எதிரொலித்து அடங்கியது அவன் குரல்.
“அவயிங்க இல்லை. ஏதோ வெளிநாட்டுக்கு படிக்க போயிட்டா.” என்றாள்.
“எங்க?”
“எங்கனு தெரியாது.” என்றாள் தீபிகா. மசக்கை வாந்தியும் உடலும் அவளை திடகாத்திரமாக நிற்க வைக்காமல் தள்ளாடியது.
“பார்ட்டி ட்ரீட் என்று கொடுத்திருக்கா. எந்தவூருக்கு போனானு தெரியாதா.” என்று கர்ஜித்து கேட்டான்.
“பார்ட்டி தந்தப்ப நான் மேரேஜ் கவலையில் அதெல்லாம் காதுல வாங்கலை” என்றதும் சசிதரனை துணைக்கு அழைத்தது அவள் கண்கள்.
“நம்ப முடியலையே…” என்று விதுரன் கால் மேல் காலை போட்டு கேட்க, “அது உங்க இஷ்டம்” என்றவள் மூச்சிரைக்க நின்றாள்.
“விதுரா.. அவளே வாயும் வயிறுமா இருக்கா. முடிந்ததை எதுக்குப்பா பேசற.” என்று கோமதி இறைஞ்சினார்.
“எனக்கு அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் பெரிம்மா.” என்றான்.
“தெரியாது தெரியாது தெரியாது. தயவு செய்து உங்களோட கட்டாயத்துகுகு என்னை ஆளாக்காதிங்க” என்று அரற்றவும் டாக்டரோ “இப்படிபட்ட நிலையில் இதெல்லாம் தவிர்க்கணும். இல்லைனா குழந்தைக்கு ஆபத்து” என்று முடிக்க தீபிகா அதனை தனக்கு சாதகமாக எண்ணினாள்.
“என்னங்க உங்களுக்கு தான் குழந்தையை சுமக்கறேனே அந்த இன்பாவை விட சொல்லுங்க. அவர் எங்கயாவது போய் வாழட்டும். எனக்கு சத்தியமா பிரகதி எங்கயிருக்கானு தெரியாது” என்று கூறினாள்.
“விதுரா சரிதானே தீபிகா சொல்லறது. அவனை பிடிச்சி கண்கானித்து இனி என்ன பண்ண போறோம்.” என்றான் சசிதரன்.
‘எனக்கு நீ சொல்லறியா’ என்றவொரு பார்வை பார்த்துவிட்டு பிரகதி இப்ப எங்க இருக்கானு தெரியாது.” என்றான் மீண்டும்.
“இங்க பாருங்க என் போனை உடைச்சி போட்டாச்சு. இன்பா போனை கார்ல இருந்து தூக்கியெறிந்தாச்சு. எனக்கு அவ நம்பர் நினைவில்லை. சோஷியல் மீடியா அவளுக்கு பிடிக்காது. நேர்ல இருக்கற மனுஷங்களிடம் பேசணும். இப்படி சோஷியல் மீடியாவுல பேச இல்லைனு வாதிடுவா. அதனால நீங்க நினைக்கிற மாதிரி எந்த முறையிலும் அவளை காண்டெக் பண்ண முடியாது.” என்று கூறி சசியின் கையை பற்றினாள்.
முதல் முறை தீபிகா கை பற்ற சசிதரன் தான் இறைஞ்சி “இப்ப கன்சீவா இருக்கா டா. உன்னால ஒருத்தியை கண்டுபிடிக்க முடியாதா. உன்னிடம் போட்டோவே இருக்கு” என்று பேசி அனுப்ப எண்ணினார்கள்.
விதுரன் இரண்டு நிமிடம் யோசனையில் கழித்தவன் பட்டென எழ, கோமதி, சசிதரன், தீபிகா இரண்டடி பின் நகர்ந்தனர்.
“கங்கிராட்ஸ் அகைன். தர்மா இன்பாவை ரிலிஸ் பண்ணு.” என்று புறப்பட்டான். அவனின் காலடியோசை அடங்கும் வரை தீபிகா மூச்சை இழுத்து பிடித்திருந்தாள்.
இங்கு ஒருவன் தன்னை வலைவீசி தேடிதலை அறியாது ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதியில் “ஓ மை காட் இந்த பிரெட் ஆம்லேட் ஒன்னு தான் எனக்கு ஏதோ ருசிக்குது. அதையும் தீய வைக்கிறியே அனிலிகா” என்று தன் புது நட்பிடம் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.
தமிழ் புரியாது அவள் விழிக்க, பிரகதி சிரித்து கொண்டு அவள் தாயுக்கு போன் போட முயன்றாள். அச்சோ… அனிலிகா உன் தம்பி போனை ரீசெட் பண்ணியதில் என் பிரெண்ட்ஸ் நம்பர் எல்லாம் போச்சு. தேங்க் காட் அம்மா நம்பராவது இருக்கு.” என்று பேசிட ஆர்வமானாள்.
அனிலிகா பிரகதி இருவரும் ஒரே வகுப்பு தங்குமிடம் என்று பிரகதி தேர்ந்தெடுத்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தனது மாடியறையில் கூடவே தங்க வேண்டிட, அனிலிகாவின் அன்புக்கு அடங்கி தங்கினாள்.
“என்னையெல்லாம் யாரும் கன்வெய்ஸ் பண்ணி இங்க தங்க வைக்க முடியாது மா. அனிலிகா நிஜமா அன்பால கூப்பிட்டா அன்புக்கு தான் இந்த பிரகதி அடிபணிவா. அடாவடி பண்ணினா நானும் ரவுடி தான்னு காட்டுவா. என் செல்ல மம்மி உனக்கு தெரியாததா. ஆமா ஊரெல்லாம் எப்படியிருக்கு. போட்டோ எடுத்து அனுப்பு மா.” என்று கூற அந்தபக்கம் என்ன கூறினரோ “உப்ஸ் மம்மி யாயா டைம் ஆகிடுச்சு வை வை” என்று கை கடிகாரம் பார்த்து விட்டு போனை அணைத்தாள்.
பிரட்டோடு முட்டையை வாயில் திணித்து கண்ணாடி டம்ளரில் ஜூஸை பருகி இரண்டையும் கழுவி வைத்து ஓடினாள்.
விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super👍👍😍
super epi