துஷ்யந்தா-33
தன் அத்தனை கோபத்தையும் அடக்க வழியின்றி வெளியே இருந்த ஸ்விம்மிங் புலில் நீந்த ஆரம்பித்தான்.
எப்பொழுதும் காரை எடுத்து பயணிப்பது அவன் வழக்கம். இன்று அப்படி சென்றால் விபத்து நேர்வது உறுதி. அவனுக்கோ எதிர்வரும் வண்டிகளுக்கோ இழப்பு நேரிடலாம்.
தான் இறந்தால் பிரகதி சந்தோஷப்படுவாள். ஆனால் மற்றவரின் வாழ்வில் விளையாட விதுரனுக்கு பிடிக்கவில்லை.
மூன்று மணி நேரம் நீரிலிருந்தும் சினம் குறையாமல் போக வெளியே வந்தான்.
ஜிம்மிற்கு அருகே இருந்த ஒர் அறையில் மது வகைகள் அடிக்கியிருக்க பாட்டில்களை இரண்டை எடுத்து பருக துவங்கினான்.
விக்னேஷிற்கு கவலையான காட்சிகளை காண மட்டுமே முடிந்தது. தர்மாவோ “சார் போதும் சார்… டிரஸாவது மாற்றிடுங்க.” என்று ஈரமான ஆடையை சுட்டி காட்டினான்.
இரண்டு பேரும் நாளைக்கு வந்தா போதும். இப்ப போங்க” என்று அதட்டி அனுப்பினான்.
விக்னேஷ் தர்மா இருவருமே சங்கடமாய் வெளியேறினார்கள். முன்பாவது தர்மா விதுரனோடு துணையிருப்பான். தற்போது பிரகதி அருகேயிருக்க தர்மாவாலும் இருக்க இயலாதே.
அதே அறையில் மதுவோடு சாய்ந்து நித்திரை சென்றான்.
பிரகதி அந்த பெரிய வீட்டில் விதுரன் அறையில் தன்வீயோடு தனித்து இருந்தாள். மதியம் சாப்பிட்டு விட்டு குழந்தையை பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தாள்.
விதுரன் அறையிலிருந்து வரவேயில்லை. பிரகதி அவள் மகளை மட்டுமே அக்கறை செலுத்தினாள்.
அனிலிகாவுக்கு வீட்டுக்கு வந்தப்பின்னும் நிலவரத்தை கூறி அச்சம் கொள்ள வேண்டாமென கூறி விட்டாள்.
இரவும் விதுரன் அங்கிருந்து வருவதற்கான அறிகுறி தெரியவில்லை. பிரகதி சாப்பிட்டு உறங்க ஆரம்பித்தாள்.
நள்ளிரவில் குழந்தையை அணைத்து கொண்டு எப்பொழுதும் இருக்கும் நினைவில் கைகளை அலச, அங்கே குழந்தையில்லை.
திடுக்கென எழுந்தால் அந்த மெத்தையில் முழுவதும் ஆக்கிரமித்தபடி விதுரன் படுத்திருக்க அவன் நெஞ்சில் தன்வீ உறங்கி கொண்டிருந்தாள்.
“முகற கட்டை… டிரிங்க்ஸ் பண்ணிட்டை குழந்தையை வேற தூக்கியிருக்கான். குழந்தை உருண்டு கீழே விழுந்திடுமேனு எண்ணமிருக்க.” என்று குழந்தையை தூக்க, இமை சட்டென திறந்தான் விதுரன். அந்த கண்ணில் அத்தனை ஆக்ரோஷம்.
குழந்தை எடுத்து தன்னருகே போட்டு படுக்க, விதுரன் குழந்தையின் கைகால்கள் வருடியவாறே இருந்தான்.
“சசியோட குழந்தை தீபிகா வயிற்றில் வளர்ந்தப்ப ஒவ்வொரு நாளும் பேபி மூவ் மெண்ட்ஸ் அசையறதை பார்த்ததா சொல்வான்.
எனக்கு நம்ம குழந்தை உன் வயிற்றில் இருந்தப்ப நீ எனக்கு அந்த வாய்ப்பையே கொடுக்கலை.
குழந்தை பிறந்தவுடனே இந்த உலகத்துல முதல்ல பார்க்கணும் மனைவி ஆசைப்படறது அவளோட கணவனா தான் இருக்கும். அந்த விதத்துல நான் அந்தளவு கூட உன் மனசை ஜெயிக்கலை.
என்னிடம் சொல்லக் கூடாதுனு அப்படி வீம்பு… எப்படி இத்தனை வன்மம் பிரகதி.? உன்னிடம் இதை எதிர்பார்க்கலை. அப்போ… நிஜமாவே என்னிடம் கண்டிஷன் பேர்ல தான் குடும்பம் நடத்தினியா?” என்றதும் பிரகதி பதிலுக்கு மௌனத்தை தர விதுரனோ “பேசி எக்ஸ்பிளைன் பண்ணி என் கேரக்டரை எக்ஸ்போஸ் பண்ண நான் தயாராயில்லை. எனிவே இதுக்கே வந்த அன்னிக்கே ரேப் அட்டன் பண்ணிருக்கலாம்.” என்றவன் கூறி முடிக்க பிரகதி நிமிரவும், “அடிச்ச போதை மொத்தமா இறங்கிடுச்சு. பை… எனக்கு அகைன் அந்த போதை தேவைப்படுது.” என்றவன் அவளை பார்த்த பார்வையில் பிரகதி திரும்பி கொண்டாள்.
அவன் சென்றதும் கதவை தாழிட்டு முடித்தாள்.
மென்னடையிட்டு மெத்தையில் வீழ்ந்தவளின் விழிகளுக்குள் விதுரனோடு இணங்கி நடந்த நாட்கள் வந்து மோதியது.
கண்டிஷன் என்று விதுரன் பேப்பர் எடுத்து போட்டு முடிக்க நிஜமாகவே முழித்தாள்.
வாய் வார்த்தையாக கூற வேண்டியது தானே. இதென்ன அக்ரிமெண்ட் பேப்பர் போல என்று பார்த்தாள்.
கண்டிஷன் நம்பர் ஒன் தாலி கழுத்துல இருக்கணும். என்றிருந்தது. அவள் ஆதித்யாவிடம் டிவோர்ஸ் கேட்டதும் கழட்டி தூர எறிந்தது கட்டிலில் கீழே உள்ளே சென்றிருந்தது. அதனால் அப்படி எழுதியிருந்தது.
கண்டிஷன் நம்பர் டூ- தீபிகா பற்றி என்னிடம் பேச கூடாது. தீபிகா என்றில்லை அவள் சம்மந்தப்பட்டது எதுவும். பிரகதிக்குமே இனி அது அதிகப்படியாக தோன்ற அடுத்த எண்ணிக்கையை வாசித்தாள்.
கண்டிஷன் நம்பர் த்ரி- என்னோட ஆபிஸ் விஷயம் இந்த பெட்ரூம்குள்ள நான் கொண்டு வரமாட்டேன். நீயும் இழுக்காதே என்றிருந்தது.
கண்டிஷன் நம்பர் போர் – என்னோட தாத்ருவுக்கு எப்பவும் மரியாதை தரணும். மரியாதையின்றி நடந்தா இந்த இடைப்பட்ட காலத்தோட விவாகரத்து நாட்கள் அதிகமாகுமே தவிர மியூட்சுவல் டிவோர்ஸ் கிடைக்காது.
கண்டிஷன் நம்பர் பை – என்னோட நீ அதே ரூம்ல இருக்கணும். ஐ வாண்ட் டூ பி இன் எ பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்.’ என்று இருக்க,
“என்ன நினைச்சிட்டு இருக்க… என்னால முடியாது.” என்று திரும்பினாள்.
“ஓ… பிப்த் கண்டிஷன் படிச்சிட்டியா. சூடாயிட்ட” என்று விதுரன் மெத்தையில் சாய்வாக அமர்ந்தான்.
“உன் நிழல் கூட என் மேல விழாம தப்பிக்கணும்னு பார்க்கறேன். நீ என்ன… நோ வே” என்றாள்.
“ஓ… புருஷன் பொண்டாட்டி என்று தானே டிவோர்ஸ் அப்ளை பண்ணற. நாம தான் அப்படி வாழலையே. இரண்டு மாசம் வாழ்வோம். அப்ப தான் மியூச்சுவல் டிவோர்ஸ் அப்ளை பண்ணுவேன். இல்லைனா காலம் முழுக்க இங்கயே இரு. நானும் தீண்ட மாட்டேன். நீயும் அதே பிரகதியா இருக்கலாம். ஆனா தினம் தினம் இங்க தான் இருக்கணும். என் பார்வையிலருந்து தப்ப முடியாது.
காலத்துக்கு கற்போட கைதியா இருப்பியோ… இல்லை… இரண்டு மாதம் கணவன் மனைவி என்று முறையா வாழ்ந்துட்டு மியூச்சுவல் டிவோர்ஸ் வாங்கிட்டு ப்ரீ பேர்டு ஆவியோ அது உன் இஷ்டம். அடுத்த கண்டிஷன் படிக்கிறியா… இல்லை…” என்று சிரித்து கேட்டதும் பேப்பரை தூர எறிந்திருந்தாள்.
“யோசித்து சொல்லு. இது கண்டிஷன் இல்லை. ஆனா விவாகரத்து கிடைக்காது.” என்றான்.
“நான் வேற எதாவது காரணம் சொல்லி வாங்கிப்பேன் போடா” என்று நகர்ந்தாள்.
“ஆம்பிளை இல்லைனு சொல்ல முடியாது. நீ வெர்ஜியன்…
எனக்கு அபெயரோ இல்லீகல் காண்டெக்டோ, தொழுநோய், எய்ட்ஸ் எதுவும் இல்லை. மதத்தை திணிக்கறதோ, மனநோயாளியோயும் இல்லை.
ஒரு வேளை துறவி ஆகப்போறியா? உன் செக்ஸி ஐஸ்க்கு அதெல்லாம் செட்டாகது. ஏழாண்டு காலமா நான் கண்காணாம இருந்தாலும் நீ எஸ்கேப் ஆகியிருக்கலாம். அட்லிஸ்ட் நான் கிரிமினல் ஏதாவது கேஸ்ல உள்ள போய் இருந்தாவாது உன் டிவோர்ஸ் எளிதாகியிருக்கும்.” என்று அடுக்கிக் கொண்டே போனான்.
“இறைவா… பேசி கழுத்தறுக்காதே. அதுக்கு என்னை கொண்ணுடு. முதல் பாயிண்டை விட்டுட்டு மற்ற எல்லா பாயிண்டும் சொல்லற… மனதளவிலும் உடலளவிலும் கொடுமைப்படுத்தறதை விட்டுட்ட” என்றாள் பிரகதி.
“உன் இதயத்துல கை வச்சி சொல்லு. உன்னை மனதால உடலால ஹர்ட் பண்ணிருக்கேனா?” என்றான். அவனின் நேரிடை பார்வை அக்கண்கள் சொன்ன உண்மை அவளை சுட்டது. பதில் சொல்லாமல் ஒர்நிமிடம் தலை தாழ்த்தினாள்.
“முதல் கோணல் முற்றும் கோணலாவே பார்க்கற. இட்ஸ் ஓகே… உன்னோட அம்மாவுக்கு மகளா, தீபிகா அண்ட் இன்பாவுக்கு தோழியா, என்னை பார்த்தது போதும்.
இரண்டு மாதம்.. இரண்டு மாதம் மனைவியா மட்டும் என்னோட வாழ்ந்து பாரு. அந்த இரண்டு மாதத்துல உன் மனசில் நான் இதே இடத்துல இருந்தா மியூட்சுவலா பிரிந்துடுவோம். நான் இப்பவே அதுக்கான ஏற்பாடு பண்ணிடறேன். சரியா ஒரு வருஷத்துக்கு உன் முடிவு சொல்லு.
சேர்ந்தா கடைசி வரை கூடவே வாழலாம். பிரிந்தா… நானே உங்க வீட்டுக்கு வந்து விட்டுட்டு போயிடறேன். டீல் ஓகே வா.” என்றான்.
பிரகதி குழப்பத்தில் தேங்க, “நைட் வரை யோசித்து ஒரு பதிலை சொல்லு” என்று விதுரன் கிளம்பியிருந்தான்.
பிரகதி தலைவலியோடு அமர்ந்தாள். இவன் தன் வாழ்வில் இல்லாமல் இருந்தால், அபிமன்யு அல்லது எட்வினு மணந்து வாழ்ந்திருப்போமா? பிரச்சனையற்ற வாழ்வு நிம்மதியான உறவு என்று சென்றிருக்கும். ஆனால் விதி ஏன் என்னை இவனிடம் கோர்த்து விட்டது?
எத்தனையோ திருமணங்கள் தாய் தந்தையர் கட்டாயத்தில் நடைப்பெற்று பெண்ணின் மனம் புரியாமலே கற்பு திருமண பந்ததால் கணவனான ஆண் சூரையாடப்படுவதில்லையா?
விதுரன் திருமணம் புரிந்து பத்துமாதம் பொறுமையாக கண்ணியம் காக்கா தானே செய்கின்றான். ஏன் தற்போது விவாகரத்தென வாய் திறக்கவில்லையென்றால் இன்னமும் காத்திருக்கவும் செய்வான்.
முதலில் அவன் காத்திருக்க காரணம் என்ன? அதுவே புரியவில்லை.
அவன் கூறியது போல எனக்கான வாழ்வில் அவனோடு வாழவில்லையா? இல்லையே… என்னை மணந்து கொண்டதால் தான் அவனை உதாசீனம் செய்தேன். மரியாதை தரவில்லை, அவன் பேச்சை கேட்கவில்லை. அன்னையை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும் என் பரீட்சை வரை என்னை அவசரப்படுத்தி வரவைக்கவில்லை. ஏன் வந்ததும் காலை எடுத்து விட்டாரேயென திட்டினேன். அப்பொழுது ரிஜிஸ்டர் திருமணம் செய்ய வேகமெடுத்தவன் என்ன தீண்டவோ துன்புருத்தவோ செய்யவில்லை. இந்த நிமிடம் வரை.
நான் முதலில் அவன் தன்னை கண்டு அடங்கினான் என்று எண்ணினோம் அதுவல்ல… ஒரு மனிதனின் கழுத்தை பிடித்து தூக்கி மிரட்டும் நேரம் கூட அரக்கனாக தெரிந்தவன் தன்னை அடக்க பெரிதாய் நேரம் தேவைப்படாது.
விதுரன் நினைத்தால் தன்னை எளிதில் சூரையாடியிருக்கலாம். அவன் பேச்சு தான் ஏகத்திற்கு சினத்தை தந்ததே தவிர செயல் மிக கண்ணியத்தை பறைச்சாற்றியது.
நாமளும் அவனுக்கு சரிக்கு நிகர் நின்றதால பயந்தான்னு சொல்ல முடியாது. அவனோட ரியாக்ஷன் எல்லாம் பயப்படவும் இல்லை. இவ எனக்கு எதிரியா என்ற ஏளனமும் இல்லை.
வேற என்ன தான் பார்வை அது? அப்பா அம்மாவை காணோம் போது வெளிக்காட்டும் பார்வைகள்.
அப்படின்னா… அப்படின்னா… என்னை முதல்ல இருந்தே… பிறகு ஏன் என்ன அடிக்கடி கோபமா முறைக்கணும்? என்றவள் எப்பொழுது எல்லாம் அவன் முறைக்கும் பார்வை வீசினான், கனிந்த பார்வை வீசினான் என்று பார்வைகளை தரம் பிரித்தாள்.
பெரும்பாலும் தீபிகா பேச்சு எழும் நேரமும் எட்வின் அபிமன்யு என்ற ஆட்களின் விஷயமாக என்றதும் தெளிவடைந்தாள்.
அவனுக்கு தன்னை ஏன் பிடித்தது. அதுவும் இங்கு வரும் முன்னரே… என்னை எங்கயாவது பார்த்திருப்பானா? சே பொத்தம் பொதுவான படத்தில் இப்படி தான் காட்டறாங்க. அவனிடமே கேட்டுடலாமா?
இல்லை… என்னிடம் சொல்லியிருக்கான். தீபிகா மேரேஜ்ல என்னோட ஆட்டிடியூட் பார்த்து அவனோட பெண் பிம்பமா பார்த்ததா சொன்னான். அதோட சாதகமா விட்டு வச்சியிருக்கான். ஆச்சார்யா போல மற்றவர் பேசிட கூடாதென மணந்தான்.
இயல்பிலேயே விதுரன் பெயருக்கு ஏற்றவனான எமகாதகன் அல்ல. ரோமியோ தேடும் ஜுலியடா… என்றவளின் எண்ணங்கள் செல்லும் போக்கில் சிரிப்பு வர, ஜன்னல் பக்கமிருந்து
ஏ துஷ்யந்தா… ஏ துஷ்யந்தா…
உன் சகுந்தலா தேடி வந்தா…
அழகான பூக்கள் பூக்கும்
தேன் ஆற்றங்கரையில்…
அடையாளம் தெரியாத
ஆல மரத்திருட்டில்…
இருள் கூட அறியாத
இன்பங்களின் முகத்தில்…
இரு பேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில்…
வருடித் தந்தாய் மனதை…
திருடி கொண்டாய் வயதை…
அது கிளையோடு வேர்களும்
பூத்த கதை….
என்ற பாடல் கேட்க அவளையறியாது ஜன்னலில் வழியே எட்டி பார்த்தாள்.
‘அப்ப நீ எமகாதகன், அரக்கன், ‘டெவில் கிங்’ இல்லையா… என்னோட துஷ்யந்தாவா?’ என்றவளின் முகம் அந்தி வானமானது.
விதுரனை புதிதாக பார்க்க பழக எண்ணினாள். ஆனால் உடனே மாறவும் மனம் முரண்டியது.
அவன் கூறியது போலவே இது ஒப்பந்தமாகவே முதலில் காய் நகர்த்தி பேசி சம்மதித்து நேரம் அமைய தன் கண்டுபிடிப்பை கேட்டிடலாமா? என்றது அவள் உள்ளம்.
இங்கு அனைத்தும் சாதகமாக விதுரனுக்கு வந்தாலும் சசிதரன் வீட்டில் தீபிகா மது அருந்தி கலக்கத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.
சசிதரன் திக்கித் திக்கி அவளை அடக்க முற்பட கோமதியோ என்ன செய்வதென புரியாது வேலைக்காரர்களின் வேடிக்கை பார்வைக்கு தலைகுனிந்து நின்றார்கள்.
“இங்க என்ன பிக்பாஸ் ஷோ வா நடக்குது. பெரிய இடத்துல நாலுல ஒன்னு இப்படி தான் திரியுதுங்க. வேடிக்கை என்ன வேண்டிகிடக்கு போய் சமையலை பாருங்க.” என்று விதுரன் கர்ஜினையில் வேலையாட்கள் பதறி ஓடினார்கள்.
சசியோ “தீபிகா தீபிகா…” என்று மெல்லமாய் கன்னம் தட்டினான்.
விதுரனோ “ஆமா டா. செல்லமா தட்டு. போதையில இருக்கா. கூப்பிட்டா எழுந்துக்கிற நிலை இல்லை. ரூம் வரை கை தாங்கி தூக்கிட்டு போ. இல்லை தூக்கிட்டு போ” என்று கூறவும் சசிதரன் அதன் பின்னே தூக்கினான்.
கோமதியோ கையில் பிள்ளையை வைத்து கொண்டு, “என்ன விதுரன் இது. ஆசைப்பட்டானேனு கட்டி வச்ச. அவளோட மனசுக்கு பிடிக்காம நடந்தது. இன்னமும் பிடிக்காமலேயே போகுதே.” என்றார்.
அறைக்கதவை மூடியவன் சசியறையில் நெடு மூச்சை இழுத்து விட்டான்.
சசிதரன் அப்பொழுதும் தீபிகாவின் உடையை சரிசெய்து போர்வை போற்றி நெற்றியை துடைத்து விட்டான்
“சித்தி.. புரியாம பேசாதிங்க. இங்க பாருங்க. இந்த நிலையிலும் அவளோட முகத்தை துடைத்து விடறான். இந்த வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்?” என்றான்.
“என்னயிருந்தாலும் மனசுக்கு பிடிக்காம தாலி வாங்கினா எப்படிப்பா.? அதுவும் அவ காதலிச்ச பையன் கட்டியதை கழட்டிட்டு” என்று குழந்தையை தாங்கிக்கொண்டே கேட்டார்.
“சித்தி அவ சசியை திருமணம் பண்ண முழு சம்மதத்தோடு தான் திருமணமேடை வரை வந்தா. இவன் திக்கி பேசவும் பேச்சு முறை பார்த்து தாலிகட்டற நேரமா காதலிச்சவனோடவாது வாழலாம்னு முடிவு பண்ணினா.” என்று தீபிகாவின் மட்டமான திட்டங்களையும் செயல்களையும் கூறினான்.
சசிதரன் உள்ளுக்குள் நொடிந்து போனான். கடந்த முறை ஏன் குடித்த என்றதற்கு இதை அவன் தீபிகா வாயாலேயே அறிந்தான். ஆனாலும் அவன் நேசித்த பெண் என்ற இளக்கம் அவனுள் இருந்தது. அதுவும் தனக்காக ஒரு குழந்தையை ஈன்ற அன்னையாக மாறியபின் அவளை வெறுப்பது எவ்வாறு.
விதுரனோ நல்லது கெட்டது என்ற மனிதரின் நடத்தை கொண்டு அவரிடம் முகம் காட்டும் வித்தைக்காரன்.
“சித்தி அவ இஷ்டத்துக்கு ஆட விடாதிங்க. பணத்தை பிடுங்குங்க. சசி அவ கேட்டானு கார்டை பணத்தை அள்ளி தராதே. புரிதா?” என்றான்
சசி தலையாட்டினான்.
விதுரன் வீட்டுக்கு இரவு வந்த கணம் ஆதித்யாவோ “என்னயா விக்னேஷ் ஏதேதோ சொல்லறான்.” என்றார்.
“தாத்ரு… அதெல்லாம் காதுல போட்டாதிங்க. நான் பார்த்துப்பேன். என்ன நம்புவிங்களா?” என்றான்.
“நம்பறேன்யா… அதான் ஒளிவட்டம் தெரியுதே என் பேத்தியிடம்” என்றார். விதுரன் திரும்பி பார்க்க அங்கே பிரகதி சேலை அணிந்து நடந்து வந்தாள்.
விதுரனுக்கு என்ன புரிந்ததோ பிரகதியை ஏறிட்டு முடித்தான்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
wow interesting eni konjam nalla pogum rendu perum sernthu life start panathum
Interesting👍👍
So…. Avalum devil king ah love pannithaa eruka??? Pinna yen intha pirivu??? Yarum illama valurathu kodumaiana vishayam🙄
Super. Still can’t predict vithuran. Intresting