Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35

துஷ்யந்தா-35

மதியம் சாப்பிட வந்தவளை ஆதித்யா வரவேற்று அமர வைத்தார். “என்னம்மா.. விதுரனோட சண்டையா… காலையிலேயே காபி குடிக்கவோ, டிபன் சாப்பிடவோ வரலை.” என்றவருக்கு என்ன கூறி விளக்குவாள்.

    ஆனால் அவளின் கன்னம் சிவந்திருக்க, பெரியவோரோ “சண்டை பெரிதோ கன்னத்தில் அறைஞ்சிட்டானா? இவனை…” என்று கேட்டு விட்டு ஆதித்யாவை திட்டினார்.
  தீபிகாவை பற்றி பிரகதி கேட்க அந்த கோபத்தில் கன்னத்தில் அறைந்திருப்பானோ என்று முடிவு செய்து கொண்டார். பற்றாததற்கு “இங்க பாரு டா. தீபிகாவை பற்றி பேசி நீ உன் வாழ்வை அழிச்சிக்கிறதா எனக்கு படுது. தயவு செய்து அவனிடம் அவளை பற்றி பேசாம உனக்கானவனா மட்டும் பாரு. அவன் அறைவதற்கான காரணம் புரியும்.” என்று கூறி சாப்பிட்டதும் எழுந்து கொண்டார்.

“தாத்தா.. நீங்க பேசறது புரியலை.” என்று கேட்டாள்.

ஆதித்யாவோ அடிவாங்கியது மட்டும் தான் போல தீபிகாவை பற்றி அறியவில்லையோ’ என்று “அவன் உன்னை கன்னம் சிவக்க அடிச்சிருக்கானே. அதை சொன்னேன் மா” என்றதும் தட்டை திருப்பி கன்னத்தை கவனித்தாள். இரண்டு பக்கமும் ரூஜ் போட்டது போல கன்னம் சிவந்திருந்தது.

தாத்தா அவன் அடித்துவிட்டானென எண்ணி பேசி செல்ல, விதுரனின் முட்தாடி மற்றும் மீசை உரசியும் கன்னம் சிவந்ததை எங்கணம் அவள் மறுத்து பதிலளிப்பாள்.

அவளுக்கு மேலும் வெட்கம் பிடுங்கி திண்றது. சாப்பிட்டு வேகமாக மாடிக்கு சென்று கன்னங்களை மாறி மாறி இரசித்தாள்.

அன்றிரவு விதுரன் எட்டு மணிக்கு வந்தான். பிரகதி அவன் முன்னிருக்க வெட்கம் கொண்டு, கீழே வந்து சேர அவனோ மாடியிலிருந்த மற்றொரு அறை மெத்தையை மாடியில் ஷீட் அணிந்த இடத்தில் போட்டு விட்டு சுற்றி கொசுவலையையும் சேர்த்தே மாட்டி விட்டு, அருகே ரோஜா தொட்டியை சுற்றிலும் அமைத்து வைத்து கீழே வந்தான்.

உணவு உண்ணும் நேரம் மூவரும் சாப்பிட, விதுரன் சாதாரணமாக இருந்தான். பிரகதி அரையும் பாதியுமாக உண்டு அறைக்கு வந்தாள்.

விதுரன் ஆதித்யாவிடம் பேசிவிட்டு அறைக்கு வந்த நேரம் பிரகதி படுத்து போனில் பாடலை கேட்டுக் கொண்டே கால்களில் தாளமிட்டாள்.

மெட்டியில் சின்னதாய் கோர்த்திருந்த மூன்று முத்துகள் ஓசையெழுப்ப, அதனை தீண்டினான்.

சட்டென எழுந்து அமர்ந்தவளை கண்டு, “நைஸ் டிசைன்” என்றான் உலறியபடி.

“நீங்க தான் வாங்கியாந்து மாட்டியது. நீங்க வாங்கியதை நீங்களே நைஸ் டிசைன் சொல்வீங்களா?” என்றாள்.

அவன் இவன் நீ வா போ பேச்சு மாறியதை அறிந்தும் அதை கேட்கவில்லை. அவன் அறியாததா?!

“நீ கூட தான் நானா மேரேஜ் பண்ணின பொண்ணு. பட் கியூட்னு சொன்னா பீலிங்க் ஹாப்பியா தானே இருப்ப. அது மாதிரி தான். மெட்டி நான் போட்டது தான் இருந்தாலும் இருக்கற பிளேஸ் அப்படி” என்றான்.

“அய்ய… பொயட்டிக் வோர்ட்ஸ்ல மெஸ்மரீசம் பண்ண ட்ரையிங்கா?” என்றாள்.

“விதுரனுக்கு பொயடிக் வோர்ட்ஸ் தேவையேயில்லை. பார்வையே போதும். அட் த சேம்… மெஸ்மரீசம் ட்ரையிங் இல்லை ஆல்ரெடி மெஸ்மரீசம் ஆகிட்ட என் மேல” என்றான்.

“சே சே… அதெல்லாம் இல்லை…” என்றாள் வீம்பாக.

“ப்ரூப் பண்ணிட்டா?” என்றான் புருவம் ஏற்றி, பற்றாத குறைக்கு ஒரு பக்கம் தலைசாய்த்து கேட்ட விதத்தில் ‘இதுக்கு மேல ப்ரூப் வேண்டுமா?’ என்று பிரகதி மனமே எள்ளியது.

ஆனால் தலையை உலுக்கி நடப்பை கவனித்த நேரம் மெத்தையில் இருந்த தன்னை இரு கைகளால் ஏந்தியிருந்தான்.

“எ…எ..என்ன பண்ணற?” என்று அவனின் சட்டையை இறுக்கி கொண்டு அவன் கழுத்தில் தன் மற்றொரு கையை மாலையாக்கினாளே தவிர கீழே இறங்க முயற்சிக்கவில்லை.

மாடிக்கு ‘கையில் மிதக்கும் கனவா நீ… கைகால் முளைத்த காற்றா நீ… கையில் ஏந்தியும் கணக்கவில்லையே… நுரையால் செய்த சிலையா நீ…’ என்று எண்ணங்கள் சென்றது.

மாடிக்கு வந்து அங்கிருந்த மெத்தையில் கிடத்தியப் பின்னே சுற்றுப்புறம் உணர்ந்தவளாக மெத்தையும் நெட்டும் அருகே ரோஜா செடிகள் சுற்றியும் இருக்க கண்டாள்.

பிரகதிக்கு மகிழ்ச்சியில் என்ன செய்கின்றாளென அறியாமல் அவன் கன்னத்தில் அவளாகவே முதல் முத்தமிட்டாள்.

“ஐ அம் நாட் கிட்.” என்றவன் கன்னத்தை தடவியவன் ”லைக் திஸ்” என்றவன் இதழ் சங்கமத்தை கற்று கொடுத்தான்.

கற்று கொடுத்தானா? கள்வனாய் அள்ளி செல்கின்றானா அவனே அறிவான்.

அப்பொழுது தான் கன்னத்தில் முத்தமிட்டு குத்தியதற்கு ஓத்தடம் தந்தது போல அவன் செய்கை இருக்க இமை மூடி தொலைய ஆரம்பித்திருந்தாள்.

நள்ளிரவு வரை உறங்காது மினி நைட் லேம்ப் வேறு போட்டுவிட்டு அந்த சிறுவொளியில் அவளையே விழுங்கி கொண்டிருந்தான்.

ஆழ்ந்து மூச்செடுத்த பிரகதி “ரோஸ் ஸ்மெல் அமைஸிங்கா இருக்கு.” இந்த மாதிரி நைட் எப்பவும் மறக்காதுல?” என்று கேட்டாள்.

விதுரன் பதில் கூறவில்லை ஆனால் தலையை மட்டும் ஆம் என்பதாய் அசைத்தான்.

“புதுசா இருக்கு இந்த லைப். ஓப்பந்தத்தோட ஆரம்பிச்சது நல்லா தான் இருக்குல?” என்றாள். அவள் கூறுவதன் உண்மை அறிந்து கொண்டு “ம்ம்” என்றான்.

“எனக்கு தூக்கம் வருது. பட் ஒரு சவுண்ட்..” என்று நிறுத்தினாள்.

“என்ன சவுண்ட்? சைலண்டா தானே இருக்கு. நைட்ல சின்னதா இன்செக்ட் நாய்ஸ் கூட இல்லையே.” என்றான்.

“இல்லை… நான் அதசொல்லலை. உங்க ஹார்ட் பீட் சவுண்ட்” என்றவள் உன் இதயத்துடிப்பு கேட்டு அதில் லயித்து நெஞ்சில் உறங்கவா என்று கேட்க ஒரு மாதிரியாய் திணறி நிறுத்தினாள்.

“என்ன ஹார்ட் பீட்டை நிறுத்திடவா? டிஸ்டர்பன்ஸா இருந்தா சொல்லு. உன் தூக்கத்துக்காக நிறுத்தி வைப்பேன்.” என்றான். அவன் என்னவோ காதல் போதையில் உலறினான்.

இவளுக்கோ அவன் பேச்சு முள்ளாய் குத்தியது. “ஏன் இப்படி பேசற… எனக்கு உன் மேல முகம் வச்சி படுத்தப்ப இதயத்துடிப்பு லயிப்பா இருந்தது. அதுல அடிக்கிட் ஆகிட்டேன் இப்ப உன் நெஞ்சில படுக்கவானு கேட்க நினைச்சேன்.

சங்கடமாயிருந்தது.. டிவோர்ஸ் கேட்டுட்டு இப்ப என்னடி என் மேல தூங்கணும்மா நீ கேட்டுடிவியோனு. நீ என்னடானா?” என்று ஒளிவுமறைவின்றி கேட்டுவிட்டாள்..

“ஏ… டெவில் குயின். என்னிடம் கேட்க என்ன தயக்கம் உனக்கு. என்ன எதிர் கேள்வி கேட்கற உரிமை உனக்கு மட்டும் தான்.

டிவோர்ஸ் கேட்டதும் இதையும் குழப்பிக்காதே. இந்த இரண்டு மாதம் டிவோர்ஸ் என்றது கூட நாம நினைக்க வேண்டாம்.

நீ நான் என்ற தனிமைக்குள்ள எந்த மனக்கசப்பும் வேண்டம். ஒன்லி ஹாப்பினஸ் மட்டும் தான். என்னிடம் வெட்கம் வேண்டாம்… சங்கடம் வேண்டாம்… பிரகதியா மட்டும் இரு.
இந்த விதுரனை ‘டெவில் கிங்’னு கூப்பிடுகிற ‘டெவில் குயினா” என்றவன் நெடுநாளாக கடிக்க துடித்த மூக்கை பல்லால் மென்மையாக கடித்தும் வைத்தான்.

“ஸ்..ஆஹ்… என்ன பண்ணற?” என்று மூக்கை தேய்த்தாள்.

“நான் ரசித்த இடமா முதல் முதல்ல ஒரு லிஸ்ட் சொன்னேன் நினைவுயிருக்கா… மூக்கு, உதடு, மச்சம், இந்த டேட்டூ… அங்கயெல்லாம் கடிச்சி வைக்கணும்” என்றவன் கைகள் அவ்விடத்தை சுட்டுவிரலால் கோலமிட்டு காட்டி முடித்தான்.

பிரகதி மேகத்தில் மிதந்தவலாய் இருக்க “ஏய்… டாட்டூ குத்தினப்ப வலிச்சிதா… சொல்லவேயில்லை நீ.” என்று கேட்டான்.

“அதுவொரு ஆசை… ஆசையை அடக்க முடியலை. அதனால வலியை தாங்கிட்டு டாட்டூ குத்தினேன். ம்.. சின்னது தானே.” என்றாள்.

அடர்ந்த சிகைக்குள் கையை நுழைத்து அவளை நெஞ்சோடு அணைத்து உறங்க வைத்தான்.

தயக்கம் தகர்ந்தவளாய் விதுரனை அவளும் அணைத்திருந்தாள்.

அடுத்த நாளிலிருந்து அலுவலகமும் வந்து சேர்ந்தாள்.

ஒரு பார்ட்னரிடம் விளக்குவது போன்று நுணுக்கமாக விளக்கினான். தொழிலின் பங்கு சந்தை விவாகாரம், லாப நஷ்டம், செயல்முறை விளக்கமென அருகே இன்முகத்தோடு கூறுவான்.

சாப்பிடும் போது பிடித்த படங்களை பாடல்களை அலசுவார்கள்.

கல்லூரி காலமென்றால் தீபிகா, இன்பா இடைசெருகலாக வந்திடுவார்கள்.
ஆஸ்திரேலியா பேச்சென்றால் எட்வின் வராமல் தவிர்ப்பான். அவன் நாசுக்காக தவிர்ப்பதை எண்ணி உள்ளுக்குள் ரசிப்பாள்.
“உன் கதையை சொல்லு சுவாரசியமா இருக்கானு பார்ப்போம்” என்று ஓட்டுவாள்.

“எங்க… சசி என்னோட சீனியர். திக்குவான்… அதோட கிண்டல் கேலினு எவன் வந்தாலும் முகத்தை பேத்துடுவேன். அதனால காலேஜ் ஸ்கூல் கூட அடிதடி பஞ்சாயத்து இப்படி தான் போகும்.” என்று சிரித்து கொண்டே சொல்வான்.

பிரகதியோ “அதானே… விதுரன் இருக்கற இடம் அடிதடி பஞ்சாயத்து இல்லாமலா… உங்க பேரண்ட்ஸ் திட்ட மாட்டாங்களா?” என்று கேட்பாள். அதற்கு “நான் அம்மா செல்லம். அப்பாவுக்கு நான் எது செய்தாலும் அதுல நியாயம் அநியாயம் பார்க்க மாட்டார். ஒரே வாரிசு அதட்டவும் மாட்டார்.” என்றான்.

“அதனால தான் ரொம்ப துள்ளற. திமிரெடுத்து இருக்க” என்று சகஜமாக வாயாட, அவள் உதட்டில் ஒட்டிய சோற்று பருக்கையை எடுத்து சுவைத்தான்.

பிரகதி பேச்சு அப்படியே நின்றது.

இது போல ஒவ்வொரு முறையும் ஏதேனும் அவன் செய்கை அவளை வாயடைக்க வைக்கும். இல்லையேல் வீடாக இருந்தால்… அதுவும் அவன் அறையாக இருந்தால் இதழாலே பூட்டை போட்டுவிடுவான்.

ஞாயிறு என்றால் பாத்டப் முழுவதும் நீரை நிரப்பி உறங்கும் பிரகதியை தூக்கி கொண்டு வந்து அதில் போட்டு அவளின் அடிகளை திட்டுகளை வாங்கி நெடுநேரம் அதிலேயே உழன்ற நேரங்களும் உண்டு.

விதுரன் அவனாக கண்டிஷன் என்ற பெயரை கூட சுட்டிகாட்டாமல் புதுமண தம்பதியரின் வாழ்வை வாழ்ந்தார்கள்.

பிரகதியும் அவனின் அன்பு ஆட்சியில் கட்டுண்டு இருந்தாள். அன்பு ஒன்றுக்கு தானே அடிபணிகின்றது பெண்மனம். அவன் ஆள்வது அன்பாக இருப்பின், மறுக்க வழியென்ன.

பீச் பார்க் ரெஸார்ட் என்று விதுரன் அழைத்து செல்வதும், கோவில் ஆசிரமம் என்று இவள் அழைத்து செல்வதும் என்று வெளியே சுற்றி திரிய தீபிகா மனமோ பற்றி எரிந்தது.

ஏற்கனவே பொறாமையில் விதுரன் என்பவனை பகையாக பார்க்க பிரகதி தோழியென்றாலும் விஷம் கலந்து மகேஷிடம் அனுப்பினாள்.

இன்றோ பிரகதி தோழி என்பதையே மறந்து அவள் வாழ்கின்றாள். கண் கவரும் அழகனான விதுரனோடு உல்லாசமாக வாழ்கின்றாள். நான் இந்த திக்குவாயோடு திணற வேண்டுமா என்ற ஒன்றே அவளை பாடாய் படுத்தியது. சசிதரன் பேரழகு கொண்டவனானாலும் திக்கு நிலையில் தான் வெறுப்பாக மாறியது.

சசிதரனிடம் பணம் கார்டு நகைகள் பறிக்கப்பட்டு இருக்க தாயிடம் பணத்தை வாங்கி பப்பை நோக்கி பயணித்தாள்.

குழந்தை யுகனோ கோமதி வீட்டில் அன்னையில்லாமல் வீலென்ற கத்தி புட்டி பால் பழங்கள் ஜூஸ் என்று ஆகாரமாக மாறி கவனிக்கப்பட்டான்.

தர்மா தீபிகாவை தொடர மேற்பார்வைமிட்டு சசிதரன் அழைத்தால் உதவ செல்ல பணித்திருந்தான்.

    விக்னேஷ் விதுரன்-பிரகதி இருவரின் நெருக்கத்தை ஆதித்யாவிடம் பகிரவே செய்வான். ஆதித்யா அப்பொழுது எல்லாம் பூரித்து கொள்வார்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *