Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39

துஷ்யந்தா-39

   அறைக்கு வந்த பிறகு குழந்தையை படுக்க வைத்திருந்தான். தன்வீயை இரசித்து பார்த்தவன் தன்னருகே திரும்பி பார்க்க பிரகதி இவனை இரசிப்பதை கண்டதும் முகம் திருப்பி கொண்டான்.

     நான் முகம் திருப்பிட்டு போகணும் இவன் போறான் என்று படுத்து கொண்டாள்.

     அடுத்த நாள் காலை விதுரன் சாப்பிடும் பொழுது “பதினொன்றுக்கு சௌமிய வேலைக்கு வரச்சொல்லிடு. பஞ்சுவாலிட்டி எனக்கு முக்கியம்.” என்று போர்க் வைத்து சாப்பிட நேரத்தை பார்த்து சௌமியாவுக்கு போன் செய்தாள்.

    வேலையும் நேரத்தையும் கூறிட சௌமி தயங்கியவாறு “அண்ணி… அவர் கூட வேலைனா பயமா இருக்கு.” என்று மனதில் பட்டதை கூறினாள்.
  
    “சௌமி.. பயப்படாதே. அவனா யாரையும் சீண்ட மாட்டான். சீண்டினா மட்டும் தான் உண்டு இல்லையென ஆடுவான்.” என்றாள்.

     விதுரனை பற்றி பேச்சு வாக்கில் ஹாலில் இருந்தவள் அவளாக அவனை பற்றி அபிப்ராயம் கொடுத்த பின்னே அங்கு விதுரன் சாப்பிடாமல் சிலையாக இருப்பதை கண்டாள்.

     “சௌமி… இன்னிக்கு மணி பதினொன்று இருக்க சொன்னான். கொஞ்சம் வேகமா கிளம்பு” என்று வைத்தாள்.

      “என்ன இந்தளவை புரிஞ்சி வைச்சதுக்கு தேங்க்ஸ். ஆனா… உன் சொல்லுக்கும் செயலுக்கும், இருக்கிற வித்தியாசம்.” என்றவன் பார்வை மாறாக உள்ளதேயென்ற குற்றம் சாட்டும் பார்வையோடு எழுந்து சென்றான்.

     பிரகதிக்கு சங்கடமாய் இருந்தது. அவனை நேர்க்கொண்டு பார்க்க இயலாது தவிக்க குழந்தை அழவும் அவளை தூக்கினாள்.

    குழந்தைக்கு முத்தம் வைத்தவன் அப்படியே பிரகதி நெற்றி வரை வந்தவன் விலகி போனான்.

    அவனின் அருகாமை வந்து பின் தயங்கவும் பிரகதி மேலும தவித்து போனாள்.

      விதுரன் அலுவலகம் வந்தப் பொழுது சௌமியா ஓடிவந்து லிப்டில் ஏறி நேரத்தை பார்த்து பார்த்து வேர்வை துடைத்து பதட்டமடைவதை சிசிடிவி பதிவு முன் கண்டான்.

    அவனின் உதடுகள் தானாக முறுவலித்தது.

   அவன் அறைக்கு வந்து “குட்..குட் மார்னிங்..” என்று என்ன சொல்ல என்பதாய் முழித்து “குட் மார்னிங் சார்” என்றாள் சௌமியா.

   “குட் மார்னிங். டேக் யுவர் சீட்.” என்றவன் அவள் நெற்றியில் வழிந்த வியர்வையை கண்டு ஏசியை அதிகப்படுத்தினான். கூடுதலாக ஐஸ் வாட்டரை நீட்டினான்.

       அதனை தயக்கத்தோடு பெற்று குடித்தாள்.

    “லுக்… இங்க உனக்கு ஜாப் கொடுத்தது உங்கக்கா பிரகதி கூறியதற்காக மட்டுமில்லை. உன்னோட திமிருக்கும் தான்.” என்றான்.

    நாம எப்ப திமிரா இருந்தோம். அச்சோ… இவர் என்ன புதுசா சொல்லறார் என்று பயந்தாள்.

    கைகள் கைக்குட்டையை அழுத்தி அழுத்தி புரியாமல் விழித்தவளை கண்டு, “டூ இன்னோசெண்ட்.” என்று முனுமுனுத்தான்.

    “எப்படி வந்த?” என்று இன்பா இதே கட்டிடத்தில் பணி செய்வதை அறிந்தே கேட்டான்.

  “அண்ணா.. சேம் பில்டிங்ல ஓர்க் பண்ணறார். அவரோட” என்றாள்.

     “ஓ…” என்றவன் விக்னேஷை கைகாட்டி “விக்னேஷ் மற்றதை சொல்வான். அப்சர்வ் பண்ணிக்கோ” என்று தலையசைத்தான்.

    அவளும் தலையாட்டி முடிக்க ஜிமிக்கி இரண்டும் சேர்ந்தாடியது.

     “வாட்.. கிளம்பு.” என்றான். சௌமியா பேய்முழி முழித்து நின்றாள்.

     அதன் பின் விக்னேஷ் செய்ய வேண்டியவையை வரிசையாய் கூறி முடித்து நிற்கவும் புரிஞ்சது என்றாள்.

  மதிய இடைவேளையில் பிரகதிக்கு நன்றி நவில்ந்தாள்.
கூடவே “அக்கா சார் டோட்டலி டிபரண்ட். ஸ்வீட் பெர்சன். தேங்க்யூ அக்கா.” என்று மகிழ பிரகதி “டேக் கேர் மா.” என்றாள்.

     சௌமியாவை அதன் பின் மறந்தே போனாள்.  இரவு ஏழுமணிக்கு வந்த விதுரன் குதுகலமாக இருப்பதாக தோன்றியது.

      உடைமாற்றி ரெப்ரெஷ் செய்து என்று படு உற்சாகமாக திரிந்தான்.

    சாப்பிட அமர்ந்து ருசித்தபடி, “அந்த மியா கியுட்டா இருக்கு. எது சொன்னாலும் பட்டர்பிளை மாதிரி கண்ணை படபடனு அடிச்சிட்டு பேந்தபேந்த விழிக்குது.

     அந்த பூனையை ஒரு நாள் வீட்டுக்கு கூப்பிடு” என்றான்.

    இவன் யாரை சொல்லறான்னு பிரகதி முழிக்க, “உன்னை மாதிரியே சேலை… ஆனா உன் போனிட்டெய்ல் ஹேர் ஸ்டைல் இல்ல. பின்னி க்ளிப்போட்டு.. சும்மா அசத்தலா… அதுவொரு தனி அழகு” என்று ஸ்லாகித்தான்.

      “யாரை வீட்டுக்கு கூப்பிடணும்?” என்று கேட்டாள்.

     “மியா… சௌமியா.” என்றான். பிரகதி கோபமாய் திரும்ப, சீட்டி அடித்தபடி மாடி வளைவில் நடந்தவனை மனதிலேயே வறுத்தாள்.

      மெத்தைக்கு வந்த கணம் மகளை படுக்க வைத்து நிமிர்ந்தவள்.

     “அந்தப் பொண்ணு சௌமியாவுக்கு மேரேஜ் அலயன்ஸ் பார்க்கறாங்களா?” என்று கேட்டான்.

      பிரகதி ஆர்வமாக “ம்.. பட் அவளுக்கு ஒரு சின்ன பிராப்ளம். ஆமா.. ஏன் கேட்கறிங்க?” என்றாள்.
 
     மெத்தையில் காலாட்டியவன் “குழந்தைக்கு ஒரு நல்ல ஸ்டெப் மதரை தேடறேன். அது ஏன் சௌமியாவா இருக்க கூடாது. நான் அதட்டினா சட்னு வாயை மூடறா.

     அடங்காத ஒருத்திக்கு மூக்கனாங்கயிறு கட்டி மேய்ச்சது போதும். இனி அடங்கற பொண்ணா பார்த்து இருந்துட்டா பெட்டர்ல” என்று கேட்க பிரகதி தலையணையை அவனுக்கு எதிர்புறமாக மாற்றி படுத்து கொண்டாள்.

    ‘இந்த மூஞ்சுக்கு நானே அதிகம். ஸ்டெப் மதரை தேடறவன் என்னை எதுக்கு வர சொன்னானாம்.

   வெட்கம் விட்டு நானா பேசனுமாம். போடா.. நான் உனக்கு தேவையில்லைனா நீயும் எனக்கு தேவையில்லை.

   இந்த பிரகதியை என்னனு நினைச்சிட்டு இருக்கான். விளையாட்டுக்கு என்றாலும் விவஸ்தையில்லை ஓவரா தான் போறான்.’ என்று குமைந்தாள்.

      பிரகதி விளையாட்டுக்கு என்றிருக்க விதுரனோ தீவிரமாக சௌமியை ஸ்டெப் மதராக மாற்ற யோசித்தான்.
 
    நிச்சயம் இன்பாவிடம் கேட்டால் ஒரு அண்ணணாக கோபம் வர வாய்ப்புண்டு. அதெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா? என்று தான் சிந்தைனையில் ஓடியது.

   என்ன தான் இன்பாவை முன்பு அடைத்து வைத்து சசியின் வாழ்வு சிறக்க யோசித்து காய் நகர்த்தினாலும் பிரகதி கூறியது போல தீபிகா இன்பா வாழ்வை தலையிட தான் யார் என்ற உண்மை சுட்டது. ஆனால் அதை அப்படியே ஆம் என்று ஒப்புக்கவோ வருந்தவோ செய்யும் ரகம் விதுரன் அல்ல. அவனை பொருத்தவரை அவன் செய்தது சரியே.

     சசி விரும்பியதை கொடுக்க எண்ணினான். அது சரி தவறென்று எண்ணவில்லை. எப்படியும் தீபிகா மாறுவாளென நம்பினான். என்ன சசி திக்குவாய் என்பது அவளுக்கு பெரிதாய் ஏற்க முடியவில்லை.

     எல்லாருக்கும் குறையை ஏற்று வாழும் நிறைவு வந்திடாது.

      தற்போது இன்பாவுக்கு எல்லாம் நலமாய் மாறினாலும் சௌமியா பற்றி பேச்சு எடுத்தால் மீண்டும் மல்லுக்கு நிற்பான்.

     விதுரநீதி இயற்றலிலேயே காரியம் சாதிப்பவன். ஆனால் பிரகதிக்கு பிடிக்கவில்லை.

   ஒரு மனமோ அவளுக்கு பிடிக்காவிட்டால் நீ செய்ய மாட்டாய் என்று நக்கல் செய்தது.

     தனியாக விட்டத்தை பார்த்து சிரித்தவனை கண்டு பிரகதி பொறுக்க மாட்டாமல் தலையணையை தூக்கி நான்கு மொத்து மொத்தினாள்.

     “என்னடி பிரச்சனை உனக்கு. நான் பேச்சுக்கு வரலை. மியாவை தானே பேசினேன்.” என்றான்.

     பிரகதி கோபமாய் அங்கும் இங்கும் எதையோ தேட, “என்ன தேடற?” என்றான்.

      “நேத்து கொடுத்தியே கத்தி. அதை… கொண்டா உன் நெஞ்சுல குத்திட்டு எமலோகம் அனுப்பறேன். சௌமியா மியாவா உனக்கு.” என்று எதிரே தலையணையில் மொத்திட, அவளை இழுத்து முகத்தருகே நெருக்கியவன் எதுவும் செய்யாமல் பக்கத்தில் தள்ளி விட்டான்.

      “என்னை விட்டுட்டு எட்வினை தேடி போனப்பிறகு என்ன உரிமையில அடிக்கிற. சௌமியா மியானு தான் கூப்பிடுவேன். உனக்கு இஷ்டமில்லைனா லண்டனுக்கு பெட்டியை கட்டு. ஐ லைக் சௌமியா.” என்று அழுத்தமாய் கூறி உறங்கினான்.

     இதற்கு பிறகு பிரகதிக்கு உறக்கம் வருமா? முகத்தை திருப்பி உறங்காமல் உள்ளுக்குள் உடைந்தாள்.

        அடுத்த நாள் பிரகதி முகம் மகிழ்ச்சியை துடைத்தெடுத்தது.

     நெஞ்சமெங்கும் பாரம் ஏறியதாக உணர்ந்தாள்.

     ஆனால் அவளொன்றும் இவன் தாங்க வேண்டுமென்று எண்ணி திரும்ப அடியெடுத்து வைக்கவில்லை. முன்பும் அப்படியல்ல இன்றும் அப்படியெண்ணி வரவில்லை. ஆனால் துஷ்யந்தனை காதலித்த சகுந்தலா அடிக்கடி மனதில் வந்து அவன் அன்பை யாசகம் கேட்டு இந்த வெட்கம் கெட்ட மனம் நிற்பது எரிச்சலாக இருந்தது.

     அன்பை தேடும் மனம் எதிர்ப்பார்க்கின்றது. என்ன தான் வெறுக்கின்றவனின் அன்பை தேடுவது தான் விநோதம்.

     உண்மையிலேயே தன் மனம் வெறுக்கின்றதா? அடுத்தவர்களுக்காக என்றால் வெறுக்கின்றது. தனக்கான இதயமாக யோசித்தால் நிச்சயம் வெறுக்கவில்லையே.

       விதுரன் போனிலேயே “இல்லை சௌமியா நீ முடிவெடு. எனக்கு பிரச்சனையில்லை. உன் முடிவு சரியாயிருக்கும்” என்று குளியலறையிலிருந்து கூறினான்.

     பிரகதியோ போனை பிடுங்கி தூர எறிந்தாள்.

     விதுரனோ அவளை முறைத்து கொண்டு தன்வீயை தூக்கி கொண்டு ஹாலுக்கு வந்தான்.

      மற்றோரு போனிலிருந்து சௌமியாவுக்கு மீண்டும் அழைத்து, “சௌமியா… நான் ஒரு பங்ஷன் போகணும். நானும் தர்மாவும் வரமுடியாது. நீ தான் சப்போர்டா நின்று மற்ற வேலையை முடிச்சிடணும். ஓகே… தேங்க்ஸ் டியர்” என்றான்.

    பிரகதியோ தலையை விலுக்கென்று நிமிர்ந்தாள். விதுரனோ என்னவோ யோசனையில் சுழன்றவன் பிரகதியிடம் “இன்னிக்கு ஒரு நேம் வைக்கிற பங்ஷன். ஆக்சுவலி நான் போகணும். அநேகமா லேட்டாகலாம். கதிரோட நீ போயிட்டு இரு. நான் என் வேலையை முடிச்சிட்டு வந்திடறேன். இதுல கிப்ட்ஸ் இருக்கு.” என்றான்.

     “என்ன கிண்டலா… யாரு என்னனு தெரியாத இடத்துல திடீருனு பங்ஷன் போனு சொல்லற… அதுவும் தனியா… கதிரோட… யாரையும் தெரியாம நான் அங்க முழிக்கவா?

    முன்னயாவது நான் உன் பொண்டாட்டி. இப்ப தான் டிவோர்ஸ் ஆச்சே… குழந்தை தான் உன் சொத்து. நான் இல்லை… அதான் ஸ்டெப் மதர் வைக்க தீவிரமா இருக்கியே” என்று கத்தினாள்.
 
    விதுரன் என்ன என்பதாய் பார்த்து ஆமா ஆமா… குழந்தை தான் என் சொத்து. ஸ்டெப் மதர் பார்த்துட்டு இருக்கேன்.” என்று சிரிக்காமல் கூறினான்.

    பின்னர் சீரியஸாக மாறி, “பெயர் சூட்டு விழா வேற யாருக்கோ இல்லை. கதிர் அண்ணாவோட தங்கை மைதிலி இருக்காளே அவளோட குழந்தைக்கு தான்.

   கதிர் அண்ணாவுக்கு சின்ன மரியாதை வச்சியிருந்தா போ. போகலைனாலும் நோ பிராப்ளம். கதிர் தானே என்னை புரிஞ்சிப்பான்.” என்றதில் என் டிரைவர் கூட என்னை புரிந்துப்பான் என்ற உள்குத்தல் அதிகமாகவே இருந்தது.

    விதுரன் கூறிவிட்டு சென்றான். பத்திரிக்கை முன்னே இருக்க நேரத்தை கண்டாள்.

    முதல் முறை குழந்தையோடு சென்று கலந்துக் கொள்ள ஆசைப்பட்டாள். மகளுக்கு இளஞ்சிவப்பு கவுன் அணிவித்து கிளம்பி வெளியே வந்த நேரம் கதிர் பார்த்து சந்தோஷம் அடைந்து வரவேற்றான்.

    “உட்காருங்க மா. சின்னம்மாவோட முதல் விழா… அதுவும் என் தங்கை பொண்ணுக்கு பெயர் சூட்டு விழா.”  என்று அகமகிழ்ந்தான் கதிர்.

     பிரகதி முறுவலிட்டு ஏறியமர்ந்தாள். வண்டி சீராக சென்றது.

     “கதிர் அண்ணா… உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா…? உங்களுக்கு கூட பிறந்தவங்க எத்தனை பேர்?” என்று கேட்டாள்.

    “கல்யாணம் ஆகிடுச்சு மா. ஒரு பையன் 5 வயசுல இருக்கான் தனஞ்செயன் மா. அப்பா அம்மா கூட தான் இருக்கேன்.
    எனக்கு ஒரே தங்கச்சி பேரு மைதிலி. அவளோட பொண்ணுக்கு தான் இன்னிக்கு பெயர் சூட்டு விழா.” என்று கூறினார்.

    “ஓ.. ஐந்து வயசில் பையனா… சூப்பர்.” என்று கூறினாள்.

     அதன் பின் கதிர் திரும்பி திரும்பி குழந்தையை பார்த்தார்.

    “குழந்தைக்கு முதல் முறை பங்ஷன் வர்றாங்க. ஒத்துக்குமா மா?” என்று அக்கறையாய் கேட்டார்.

    “லண்டனில் குழந்தையை கையோட வேலைக்கு கூட்டிட்டு போயிருக்கேன் ணா. அதனால வெளியே போறது எல்லாம் பழகிட்டா. அவங்க அப்பாவோட தனியா விமானத்துல வந்துட்டாளே.” என்று கூறினாள்.

    கதிரோ, “உங்களுக்கு ஏன் மா தலைவிதி. உங்களுக்கு கீழ வேலை செய்ய ஆட்கள் இருக்கறப்ப. நீங்க போய் லண்டனில் தனியா கஷ்டப்பட்டிருக்கணும்.

    மன்னிச்சிடுங்க மா. அடிக்கடி வாய் தவறிடுது.” என்று வண்டியை நிறுத்தினார்.

    அது ஒரு நவீன ஹால். பிறந்தநாள், பெயர்சூட்டு விழா, வளைகாப்பு என்று விழா நடத்த பிரத்யோகமாக கட்டப்பட்ட தனி கட்டிடம்.

  கீழே பார்க் செய்து கதிர் அழைத்து வர, தர்மா வேகமாக வந்து, “வாங்க மேடம். நீங்க வருவிங்கனு எதிர்பார்க்கலை” என்று வரவேற்றான்.

    தர்மாவை கண்டதும் பிரகதி கண்கள் தானாக விதுரனை தேடியது.

     “சார் இன்னமும் வரலை மேம். வந்திடுவார் நீங்க வாங்க” என்று அழைத்தான்.

     கதிர், தர்மா இருவரின் நடுநாயகமாக பிரகதி கையில் குழந்தையை ஏந்தி நடந்து வர, கதிரின் தாய் தந்தை இருவரும் ஓடிவந்தனர்.

    மேடையிலிருந்து தன் பக்கம் வந்து வரவேற்று முதல் இருக்கையில் அமர கூறவும் தயங்கினாள்.

   விதுரன் வந்து தனது தயக்கத்தை போக்கி தன்னை இங்கு சாதாரண மனுஷி என்பதாக காட்ட மாட்டானா என்று இருந்தது.

   அத்தகைய பலத்த வரவேற்பு அங்கு அவளை சூழ்ந்திருந்தது.

     சற்றே மிரண்டு விழித்தாள். மேடையிலிருந்த மைதிலி அங்கிருந்தே வணக்கம் வைத்து நின்றாள்.

     கதிரோ அருகே வந்து “நீங்க வந்து அந்த பிளவர் பாட்டிலில் இருக்கற பேரில ஒன்றை எடுத்து தாங்கமா. அதையே பெயரா அறிவிச்சிடலாம்.” என்றான்.

     “இல்லை… உங்க விதுரன் வந்துடட்டும். அவரே எடுத்து தருவார். நான் எதுக்கு?” என்று மறுத்தாள்.

    “சார் வர லேட்டாகும் மேம். நீங்க எடுத்து தாங்க.” என்று தர்மா மேடை செல்ல கூறினான்.

     பற்றாத குறைக்கு கதிரின் பெற்றோர் குழந்தையை வாங்கி கொண்டு பெயரை எடுக்க கூறி வற்புறுத்தினார்கள்.

    இதென்ன விதமான அன்பு. அரக்கனை ஆராதிக்க ஒரு கூட்டம். பிரகதி மனதில் அந்நொடி தோன்றியது.

   மனசாட்சியோ ஏன் டெவில் கிங்கை நீ காதலித்த போது அவர்கள் விரும்ப மாட்டார்களா? என்று நகைத்தது.

      பிரகதி மேடை வந்துவிட்டாளே தவிர கதிரிடம் தயங்கி, “அண்ணா… நீங்க விதுர் மேல வச்சிருக்கிற அன்பில் என்னை எடுக்க சொல்லறிங்க. மைதிலி வீட்டு சைடில் பெரியவங்க இருப்பாங்க. அப்பா வழியில குழந்தைக்கு முக்கியமானவங்க இங்க இதை செய்தா நல்லதில்லையா. நான் வயசுலயும் சின்னவள்” என்று மீண்டும் கூறினாள்.

     “அட என்னங்க மேம்… நீங்க எடுங்க. மைதிலி என்னோட மனைவி. என் குழந்தைக்கு விதுரன் சார் பெயர் எடுத்து கொடுத்தா என்ன? நீங்க எடுத்து கொடுத்தா என்ன?” என்று தர்மா கூற பிரகதி புரியாது நின்றது ஒரு கணம்.

    அடுத்து கதிரோ “தர்மா என் மச்சினன் மா. பெயரை செலக்ட் பண்ணுங்க” என்று கூறவும் பிரகதி பிளவர் பாட்டிலில் கையை நுழைத்து துழாவினாள்.

    ஒரு வெள்ளை துண்டை எடுத்து ‘காருண்யா’ என வாசித்து முடித்தாள்.

    மைதிலி மற்றும் தர்மா இருவருமே மகளை கையில் எடுத்து காருண்யா என்ற பெயரை ஸ்லோகித்து அகமகிழ்வதை நிறைவாய் கண்டாள்.

   பெயரை கூறி கீழே வந்தவள் படிகளில் சேலை தடுக்க, விதுரன் சரியாய் வந்து பிடித்து நிறுத்தினான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *