துஷ்யந்தா-4
அந்த இரவு நேர கேளிக்கை கொண்டாடும் பப் யாருமற்று இருந்தது. அவன் ஒருவன் இங்கிருக்க யாரையும் உள்ளே வர அனுமதிக்காது பார்த்து கொண்டான். இது அவனின் சொந்த பார். தேவையின்றி இங்கு வருவதில்லை. அப்படியிங்கு வருவதென்றால் இன்று போல அதீத கோபம் கண்முன் தெரியாமல் அவனை ஆட்டி படைத்தால் மட்டும்.
பெரும்பாலும் வீட்லிலேயே மினிபாரை வைத்து அதுவே போதுமானதாக அமையும். இன்று வீட்டுக்கு செல்லவும் பிடிக்கவில்லை.
காரணம் பிரகதி…
“சார் ரூமுக்கு போயிடலாம். நீங்க ரொம்ப…” என்றதும் விதுரன் பார்த்த பார்வையில் தர்மா வாயை மூடினான்.
கண்கள் இரத்த சிவப்பாக காட்சியளித்தது.
“ஆச்சார்யா வீட்டை கையெழுத்து போட்டப்ப என்ன சொன்னான். சொல்லு என்ன சொன்னான். ‘உனக்கு நல்ல சாவே வராதுனு சொன்னான். சொனனானா… அதோட ஸ்டாப் பண்ணிருக்கலாம்ல. தோல்வியே தழுவாதுனு நினைக்காதே விதுரன். அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி வச்சப்பவே உன்னை எல்லாம் மதிக்காம உன்னை மீறி தான் பண்ணிருக்கா. பெருசா பேசிய என்னை நடுத்தெருவுக்கு இழுத்துட்ட. என்னிடம் தான் உன் சவடால் பேச்சு. அவளை மாதிரி ஒருத்தியோ ஒருவனோ வருவாங்க. அப்ப என்னோட சாபம் அதோட கலந்து உன்னை அழிக்கும். காத்திருனு’ பிளஸ் பண்ணிட்டை போறான்.”
“சார் அவரோட பையனுக்கு கூட வேலையை பிடுங்கியாச்சு. இனி பணத்துக்கு வழியில்லை.” என்று விக்னேஷ் கூறினான்.
“இடியட்…. நான் அந்த பொண்ணு பிரகதியை ஏன் விட்டு வச்சிருக்கிங்கனு கேட்டேன். என்ன லட்சணத்துல டா தேடறிங்க. எங்க போனானு தெரியாது. அவளை பற்றி சின்ன க்ளூ கூட என் காதுல வந்து சேரலை. ஆறு மாசம் என்ன டேஸை புடுங்கறிங்க” என்று கைக்கு நேராக இருந்த அத்தனை மது பாட்டிலும் கோப்பையையும் தட்டி விட்டான்.
தர்மாவுக்கோ ஒவ்வொன்றும் அதிக மதிப்பீடு கொண்ட உயர்ரக மது வகைகள். இப்படி பாழாகின்றதே என்ற வேதனை அவன் மனதில் மண்டியது.
“ஆறு மாசம்… ஒரு பெண்ணை கண்டுபிடிக்க முடியலை. இதுல நான் என்ன சாதிச்சுட்டேன்.” என்று மேஜை மீது ஏறி அமர்ந்தான்.
கை நீட்ட மது பாட்டில் எடுத்து தருபவனோ கிளாஸில் ஊற்ற செல்ல விதுரனோ முழு பாட்டிலை வாங்கி தொண்டையில் சரித்தான்.
“சசிக்கு மேரேஜாகி எட்டு மாதம் ஆகுது. நாளை மறுநாள் ஏழாம் மாதம் வளைகாப்பு வைக்கிறாங்க. ஆனா பிரகதி என்ற பெயரை தவிர எதுவும் தெரியலை. இங்க பார்…” என்று ஆப்பிள் போனை தூக்கி வீசினான்.
டூயல் சிம் போட்டு தீபிகா அன்ட் இன்பாவோட ஒல்ட் நம்பர். இந்த நிமிஷம் வரை அவ ஒரு மெஸேஜ் போன் பண்ணலை. கழகு மாதிரி காத்திட்டு இருக்கேன். அவளை கண்டுபிடிக்க முடியலை. எனக்கு என் நிம்மதியே போச்சு.” என்று கேசத்தை அழுத்த கோதினான்.
“சார் உங்களிடம் டேட் பண்ண லாட் ஆப் கேர்ல்ஸ் நம்பர் கொடுத்திருக்காங்க. நீங்க ஓகே சொன்னா அவங்களில் யாரையாவது இன்னிக்கு உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணி மைண்டை டைவர்ட் பண்ணிடலாம் சார்.” என்று தர்மா ஐடியா கொடுத்த தெம்பில் நின்றான்.
“என் கற்பு என்ன போற வர பெண்ணுக்கு தாரை வார்க்கறதா தர்மா.” என்றவன் பார்வை மாறுபாட்டை தர்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
விக்னேஷோ விதுரனை அறிந்த கர்வம் முகத்தில் தாண்டவமாடியது.
“என்னிடம் இழக்க போற பெண்ணின் கற்பு எந்தளவு தூய்மையோ, நானும் தூய அன்பை கற்போட தரணும்.
என்னை கல்யாணம் பண்ணறவளுக்கு நான் தகுதியா இருக்கணும். உனக்கு என்ன தகுதிடா இருக்குனு நாளைக்கு அவள் என்ன விரல் நீட்டி கேட்டுட கூடாது.
என்னை யாரும் விரல் நீட்டி கேட்கவும் விடமாட்டேன். அது என் மனைவியாக போறவளானா கூட.” என்றதும் தர்மா தலை குனிந்து நின்றான்.
விதுரன் அதே இடத்தில் சற்று தள்ளி இருக்கும் மற்றொரு பங்காளாவான தனது வீட்டுக்கு வண்டியை செலுத்த கூறி சாய்ந்தான்.
விக்னேஷோ மெதுவாக விதுரன் சென்றதை அறிந்தப்பின் தர்மாவைவிடம் “என்ன தர்மா சார் அடுத்தவங்களோட நிலைமையை சரித்து கட்டி முன்ன வர்றாருனு பெண் விஷயத்துல சரிந்திடுவார்னு நினைச்சியா. எவளும் கிட்ட நெருங்க விடமாட்டார். என்னவோ நீயா நானா என்று அவரோட மனசுல யாருக்கு முதலிடம்னு போட்டி போட்ட. என்னைக்கும் சாரோட எண்ணம் எனக்கு புரியும் டா.” என்று மார்தட்டினான்.
“இவ்ளோ பேசறவன் சார் தேடற பெண்ணை முன்ன நிறுத்தேன். ஏன் பண்ணலை. நான் நிறுத்துவேன்… அதுக்கான வழியை கண்டு பிடிச்சிட்டேன். அந்த பொண்ணை சார் முன்ன நிறுத்தி உன்னை விட சாருக்கு நான் தான் பெஸ்ட் டேலண்டட்னு நிருபிக்கிறேன் பார்” என்று தர்மா சூளூரைத்து முடித்தான்.
விதுரனோ “பிரகதி.. நீ தான் டி… எவனோ ஒருத்தன் பேசவச்சிட்டு போயிட்ட. உன்னை… உன்னை…
ஐ வில் மீட் யூ சூன்” என்று நெடுஞ்சாணாக மெத்தையில் கத்தியபடி விழுந்தான்.
அவன் உயரத்திற்கு அந்த கட்டில் அவனை உள்வாங்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழி செய்தது.
அறை உறக்கத்தில் மணப்பெண் அலங்காரத்தில், அடர் சிவப்பு வண்ண சேலை அணிந்து யாரோ அமர்ந்திருக்க, விதுரன் கண்கள் மெல்ல மெல்ல கசக்கி மங்கலான பிம்பமாக பிரகதி அம்மெத்தையில் வீற்றிருக்க கண்டான்.
வேகமாக எழுந்தமர்ந்து தலையை உலுக்கி காண அவள் அமர்ந்திருந்த இடம் வெற்றிடமாக காட்சியளிக்க விதுரன் கோபமாக தலையணையை குத்தி முடித்தான்.
நேற்றணிந்த ஆடை மாற்றிட எண்ணி குளிக்க சென்றான்.
பாத்டப்பில் பல மணி நேரம் முழ்கி இருந்தவனின் இமைகள் பட்டென்று திறந்தது.
குளித்து முடித்து தயாரானவன் அலுவலகம் சென்று அமர்ந்தான்.
பணியிடம் சென்றப்பின் பிரகதி என்பவளை மறந்து போனான்.
“சார் உங்களை பார்க்க ஆதித்யன் சார் வந்திருக்கார்” என்றதும் விதுரன் முகத்தில் முறுவல் தோன்றி மறைந்தது.
“வரச்சொல்லுங்க.”
“எதுக்கு என்ன சந்திக்க வந்திங்க. பல தடவை சொல்லிட்டேன். என்னை பார்க்க வீட்டுக்கு வாங்கனு. எப்ப பாரு அலுவலகத்துல வந்து பார்க்கறிங்க” என்று குறைப்பட்டான்.
“டேய் டேய்… நீ பண்ணற அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா. நேற்று முழுக்க வீட்ல தான் இருந்தேன். நீ வரலை. போனை போட்டா ரெஸ்பான்ஸே இல்லை. விக்னேஷ் தான் நீ ஸ்டடியா இல்லைனு சொன்னான். சரி காலையில இங்க வருவனு வந்துட்டேன்.
வீட்டுக்கு வந்தா மட்டும் நம்மளை வரவேற்க ஒரு பொண்ணா இருக்கா. நீ தான் பேசணும். உன் முகத்தை தான் பார்க்கணும்.” என்றவர் விக்னேஷ் கொண்டுவந்த பானத்தை பருகி கொண்டு பேரனை அளவிட்டார்.
முன்பை விட அசுர வளர்ச்சி. பேரனின் முகத்தில் எல்லாம் கண் அசைவில் என்றாலும் ஏதோவொரு கலக்கம் தெரிந்தது.
“யாரோ ஒரு பெண்ணை தேடறதா தர்மா சொன்னான். யார் டா அவ. பழி வாங்கவா? இல்லை… பரிசம் போடவா.” என்று கேட்டதும் “இதுல சந்தேகம் என்ன தாத்ரு பழி வாங்க தான். அவளை கண்டு பிடிச்சி முன்ன நிறுத்தி இங்க பாரு நீ செய்து வைத்த திருமணத்தை ஒன்னும் இல்லாம பண்ணிட்டேனு காட்டணும்.
என்னவோ அந்த இன்பா இந்த தீபிகாவை சேர்த்து வச்சேனு சீனை போட்டு போயிருக்கா. அவளுக்கு தெரியணும் விதுரன் தலைமையில் பத்திரிக்கை அடிச்சா அது படி தான் நடக்கணும்.
இவளாளா என் முதுக்கு பின்னால பேச வச்சி சிலரோட கேலிக்கு என்னை தள்ளிட்டா தாத்ரு.”
ஆதித்யாவோ பேரனை கண்டு “யாருக்காவது அடங்கணுமே.” என்று கூறி முடித்து மேஜை மீது ஒரப்பார்வை செலுத்தினார். மேஜையின் கண்ணாடி பிம்பம் விதுரனின் பிம்பத்தை பிரதிபலிக்க அதன் மூலம் அவன் மனநிலையை கண்டறிய முயன்றார்.
“யாருக்கும் அடங்கணும்னு எனக்கு அவசியம் இல்லை தாத்ரு. ஏன்னா நான் ஒன்னும் யாரோ ஒருத்தனுக்கு கைகட்டி வேலை பார்க்கிற சாதாரணமானவன் இல்லை. அடங்கி போக… அடங்கி போக எனக்கு அவசியமும் இல்லை.
நீங்க சொல்லற மாதிரி மனைவினு அடக்க வந்தா கூட நான் அடங்க மாட்டேன் தாத்ரு.
தாத்ரு நீ என்ன பிரகதியை பற்றி பேசறப்ப இந்த பேச்சை இழுக்கற. அவள் ஜஸ்ட் பழிவாங்கி மூக்கை உடைக்கணும்.” என்றான்.
“பிரகதியை பார்த்தா மூக்கை உடைச்சி, தீபிகா வாழ்க்கை திரும்ப சசியோட தான் அமைச்சிட்டேன்னு மார்தட்டி ஜம்பம் பேசணும். நிஜமா?” என்று ஆதித்யன் கேட்டு முடிக்க விதுரன் கூர் விழியோடு தன் தாத்ருவை பார்த்தான்.
“தாத்ரு நீ என்ன மைண்ட் செட்ல இருக்கனு புரியுது. எதுக்கு வந்திங்க சொல்லுங்க” என்று தன் அலுவலக கோப்பை எடுத்து பார்த்தான்.
பார்ப்பதற்கு மேலோட்டமாக காட்சியளித்தாளும் அவனின் கவனிப்பு உன்னிப்பாக இருந்தது.
“சசிக்கு மேரேஜ் ஆகறதுக்கு முன்ன என்ன சொன்ன. அவனோட மேரேஜ் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணறதா வாக்கு தந்த.” என்று கேட்டதும் கோப்பையை மூடி வைத்தவன்.
“சசிதரன் ஒரு பொண்ணை பிடிச்சது விரும்பினான். தீபிகாவை கட்ட விரும்பினான். உங்க தம்பி பேரன் என்ற காரணத்துக்காக, அவனுக்கு என்ன தெரியும் உன்னை விட வயசுல ஒரு வயது பெரியவன், அப்பா வேற இல்லாதவனு சொல்லி பார்த்துக்க சொன்னதாலா அவன் விரும்பியவளை எவ்ளோ ரிஸ்க் எடுத்து மேரேஜ் பண்ணி வச்சிருக்கேன்.”
“நீ செய்தது தப்பு விதுரன். அந்த பொண்ணு தீபிகா வேறவொரு பையனை காதலிச்சு தாலியும் கட்டியப்பின்ன நீ மாற்றியது.” என்றார்.
அடக்கப்பட்ட கோபத்தை கட்டுப்படுத்தி, “சசி தீபிகாவை விரும்பினான். அவனோட விருப்பம் முக்கியமாபட்டுச்சு. பொண்ணுங்க மைண்ட் செட் சசியை தான் இனி கணவனா நினைப்பா. குழந்தை வேற வந்திடுச்சு. நீங்க ஏன் எமோஷனல் ஆகறிங்க.
அந்த பொண்ணு நினைச்சி பார்க்காத வாழ்வை, தவற விடபார்த்த வாழ்வை நான் திருப்பி புதையலா தந்திருக்கேன்.
சசி அவங்க வீட்டுக்கு ஒரே வாரிசு. பணமழையில ராணியா வச்சிருப்பான். உறவு அதுஇதுனு குடைச்சலும் இல்லை. சித்தி மட்டும் தான்.
இதே அந்த பையன் இன்பா.. அவனை கல்யாணம் செய்தா வாடகை வாழ்க்கை, இரண்டு தங்கை என்று கஷ்டப்படணும் தாத்ரு. யோசித்து பார்த்தா நான் பண்ணது சரி” என்று கூறி சாய்விருக்கையில் விதுரனின் நீதியாக கதை உரைத்து விட்டு அமர்ந்தான்.
“பணம்… தேவையா இல்லையானு அந்த பொண்ணு முடிவு பண்ணிருக்கணும் விதுரா. ஒரு பொண்ணு மனசுல காதலிச்ச இன்பாவை மறக்கணும்னா அது அவ நினைத்தா தான் முடியும். நீயோ அவளை விரும்பிய சசியோ மாற்ற முடியாது.
ஒன்டிகுடித்தனமா, பணக்கார வாழ்வானு தீபிகா முடிவெடுத்திருக்கணும். உன் தலைமை என்றதாலோ உன்னிடம் சசி கெஞ்சி கேட்டதாலோ, நீ சசி-தீபிகா தான் வாழணும்னு முடிவு பண்ணிட கூடாதே.” என்று பேசவும் விதுரன் கோபம் கொண்ட அணையில் ஓட்டையை போட்டார்.
“தீபிகா தான் இப்ப கன்சீவா இருக்காளே. அதெல்லாம் குழந்தை பிறந்தா சசியே கதினு இருப்பா. நீங்க கவலைப்படாதிங்க.” என்று கடைசியாக கூறி கிளம்பினான். தன் தாத்ரு அதேயிடத்தில் இருப்பதை கண்டுக்காமல்.
“என்னயிருந்தாலும் பிரகதி செய்தது சரி” என்றதும் கதவை திறக்க நின்றவன் கண்ணாடி கதவை குத்தி முடித்தான். சிதறிய கண்ணாடிகள் சில்லு சில்லாய் சிதறி தெறிக்க, ”தாத்ரு..” என்று அணையை உடைத்த சினத்தில் கத்தி முடித்தான்.
“எனிவே விதுரன். பிரகதி கண்டுபிடிச்சா என்னிடம் சொல்லு அவளுக்கு பரிசு வச்சிருக்கேன். ஓகே உன்னோட கை எப்படியும் ஆறி முடிக்கும் முன் அவளை கண்டுபிடிச்சிடுவ. இந்த தர்மாவிடம் மருத்துவருக்கு சொல்லி வைக்கிறேன். நான் வர்றேன் விதுரன்” என்று அவனை தாண்டி சென்றார்.
விதுரன் நின்ற நிலையில் கைகள் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, தாத்ரு தன்னை சீண்டி விட்டதன் விளைவு தெரியாது நாளை தீபிகா வளைகாப்பிற்கு செல்லாது தவிர்க்க பார்த்தவன் செல்வதற்கு முடிவெடுத்தான்.
ஆஸ்திரேலியாவில் அனிலிகாவின் பக்கத்து வீட்டு எட்வின் பிரகதியை நிறுத்தி காதலை சொல்லி பதிலுக்காக காத்திருந்தான்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super😍😍
eni kathaila viru virupu than adutha step vithuran odathu ena nu pakanum