துஷ்யந்தா-40
விதுரன் வந்து தாங்கவும் பிரகதி அவன் தீண்டலில் மகிழ்ச்சியாய் கரைந்தாள்.
அது ஒரு நிமிடமே. அடுத்து குழந்தையை வாங்கி மிடுக்காக நின்றவனை கண்டு தான் இனி அதிகப்படியோ என்ற எண்ணமே எழுந்தது.
விதுரனோ “குழந்தையை உன் கையால தூக்கி மைதிலியிடம் கிப்ட் கொடுத்துட்டு வா.” என்றான். அதன் பின்னே மைதிலி குழந்தையை ஏந்த சென்றாள். அப்படியே வந்த தனது முட்டாள் தனத்தை கண்டு மனதிலேயே திட்டிக் கொண்டாள்.
“காருண்யா… காருண்யா.. காருண்யா…” என்று கதிர் பெற்றோர் மும்முறை அழைக்க சொல்ல அதன் படி கூறி பரிசை நீட்டி இறங்கினாள்.
அவளுக்கு அருகே விதுரன் அமர்ந்திருக்க, இதே போன்ற யுகனின் பெயர் சூட்டு விழாவுக்கு விதுரன் பிரகதி அமர்ந்திருக்க, பின்னால் தாய் பத்மாவதி இருந்தது நினைவு வர எதச்சையமாக திரும்பி “அம்மா..” என்றாள்.
அவளின் பார்வைக்கு அந்த முதியவள் பத்மாவதியாக தோன்றிட அப்படி அழைத்து விட்டாள்.
அதன் பின் “அம்மா.. அம்மா நினைவு வந்திடுச்சு.” என்றதும் விதுரனுக்கும் பத்மாவதி எண்ணம் உதித்தது.
“நான் உடனே கிளம்பறேன். கதிர் நீங்களே பிரகதியை வீட்ல விட்டுடுங்க.” என்று எழுந்தான்.
“சார் என்னாச்சு?” என்று கதிர் பதற தர்மாவும் அருகே வந்துவிட்டான்.
“இல்லை.. விக்னேஷ் கால் பண்ணிருக்கான். கொஞ்சம் அவசரம். பிரகதி சாப்பிட்டு கிளம்புவா. நீங்க டிராப் பண்ணிடுங்க” என்று சென்றான்.
‘வந்தான் நின்றான் சென்றான்’ என்பது போல விதுரன் செயல் அமைந்தது.
பிரகதி அவனை நிறுத்த இயலாது தனியாக மீண்டும் நின்றாள்.
கதிரின் தாயே உணவை எடுத்து வந்து கையில் தர எறும்பை போல கொறித்தாள்.
பிறகு விடைப்பெற மைதிலியிடம் வந்தாள்.
“என்ன அண்ணி நீங்க? அண்ணா தான் கொஞ்ச நேரம் நிற்கலை. நீங்களும் போகறிங்களா. கொஞ்ச நேரம் இருங்களேன். உங்களோட பேசணும்னு ரொம்ப நாள் ஆசை.” என்று மைதிலி கூறினாள்.
அத்தனை பேர் பரிசும் புகைப்படமும் எடுக்க காத்திருக்க, பிரகதியோ இன்னொரு நாள் வீட்டுக்கு வருவதாக வாக்கு தந்து விடைப் பெற்றாள்.
கதிர் காரிலே ஏற சென்றவள் “கதிர் அண்ணா நீங்க வேண்டுமின்ன இங்க இருங்க நான் ஒபர் பிடிச்சி போயிடறேன்.” என்றதற்கு கதிரோ “இல்லைமா மைதிலியை தர்மா பார்த்துப்பான். நீங்க உட்காருங்க” என்று புறப்பட்டான்.
“விதுரன் ஏன் திரும்ப போயிட்டான்.” என்று கேட்டதும், “சாருக்கு ஆயிரம் வேலை இருக்கலாம். இங்க வந்து போயிட்டாரே அதுவே பெரிய விஷயம்.” என்று ஸ்லோகித்தான்.
“தர்மா உங்களோட மச்சினன் என்பதை சொல்லவேயில்லையே..” என்று கேட்டாள்.
“அதுவொரு பெரிய கதைமா.” என்று சிரித்தவர் சற்றே வாடியதாகவும் இருந்தார்.
“என்ன கதை அண்ணா” என்று பிரகதி கேட்டு விட்டாள்.
இரண்டு நிமிட மௌனத்தை கடந்து கதிர் பேசினான். “மைதிலி அப்ப தான் படிச்சிட்டு வேலைக்கு போகணும்னு ஒத்த காலில் நின்றா. நான் அதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். கேட்கலை… எங்கயெங்கோ வேலை தேடி அப்ளை பண்ணினா.
ஒரு நாள் விதுரன் சாரிடம் தங்கச்சி படிப்பு முடிச்சி வேலைக்கு போகணும்னு குதிக்கிறானு சொன்னேன்.
சாரு அதனால என்ன அண்ணா. வேலைக்கு போறதில என்ன தப்பு. படிச்ச படிப்புக்கு பொண்ணுங்க வேலைக்கு போய் ஒரு வருஷம் சுயகாலில் நிற்கணும். அப்ப தான் அவங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும்னு சொன்னார்.
நான் வேலைக்கு தேடறா… ஆனா எதுவும் செட் ஆகலைனு சொன்னேன்.
நம்ம ஆபிஸ் ரிசப்ஷன் வேலைக்கு அவங்களை அப்ளை பண்ணி போட சொல்லுங்க. நீங்க பயப்படாம இருக்கலாம். மைதிலிக்கும் வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள் ஆன திருப்தி கிடைக்கும். ஆனா அண்ணா… நம்மை பற்றி எதுவும் சொல்லாதிங்க. அவளோட திறமைக்கு கிடைச்சதா இருக்கட்டும்னு விதுரன் தம்பி சொல்லிச்சு.
நானும் மைதிலியிடம் அந்த ரிசப்ஷன் வேலைக்கு அப்ளையே பண்ண சொல்ல அவளுக்கு வேலை கிடைச்சது. மைதிலி ரொம்ப சந்தோஷப்பட்டா. வேலைக்கு ஆசையா கிளம்பினா. கலர் கலர் சுடிதாரு மாடர்ன் டிரஸ் வாங்கினா.
வேலையெல்லாம் படு ஜோரா செய்தா. என்ன விதுரன் சாருக்கு கீழ தான் நான் கார் ஓட்டறேனு அவளுக்கு தெரியாது.
அவளுக்கு நான் ஏதோவொரு வீட்ல கார் ஓட்டறேனு தான் தெரியும்.
அதனால தினமும் மைதிலி வேலை செய்வதை அவளோட டெடிகேஷன், பஞ்சுவாலட்டி, பெர்பெக்ஷன் இதெல்லாம் விதுரன் சாரே காருல வர்றப்ப என்னிடம் அவளை பற்றி பாராட்டினார்.
அப்ப ஒரு வருடம் முடிந்திருக்கும். கல்யாண பேச்சு ஆரம்பிச்சப்ப குண்டை தூக்கி போட்டா. நான் மகேஷ் என்பவனை விரும்பறேன். கட்டி வையுங்கனு.
மகேஷ் வேறயாருமில்லை. விதுரன் சார் ஆபிஸ் பில்டிங்கில் தான் இரண்டாவது தளத்துல வேலை பார்த்தவன். அடிக்கடி பேசி பழகி நம்பர் மாற்றி பழக்கமானான்.” என்றதும் பிரகதிக்கு என்னவோ இதயம் திக்திக்யென துடித்தது.
விதுரன் ஒரு ரிசப்ஷன் பெண்ணின் கருவை கலைக்க கூறினானே அது கதிர் அண்ணனின் தங்கை மைதிலியா? என்ற கேள்வி மின்னலாய் உதித்தது.
“நானும் காதலுக்கு எதிரினு எல்லாம் இல்லைமா. அதனால மகேஷை பற்றி சாரிடம் கூறினேன். சார் அவனை பற்றி விசாரிக்க சொன்னார். தர்மா விசாரித்ததில் கேரக்டர் சரியில்லைனு ஸ்டேட்மெண்ட் தந்தான்.
அதை வச்சி நான் மைதிலியிடம் சொன்னேன். என் வார்த்தையை நம்பலை. ஒரு டிரைவருக்கு மகேஷ் மாதிரி டேக் போட்டு வேலை செய்யற ஸ்டாப் பற்றி எந்தளவு தெரியும்னு ஏளனமா விட்டுட்டா. அதுவுமில்லாம அவனுக்கு காய்ச்சல்னு மைதிலி அவன் ரூமுக்கு போனப்ப இரண்டு பேரும் தன்னிலை இழந்திருக்காங்க” என்றதும் பிரகதிக்கு தலை சுற்றியது. அப்படின்னா தர்மா எப்படி திருமணம் செய்தான்? என்ற கேள்வி தற்போது ஓடியது.
“தவறோட தண்டனை அடுத்த மாதம் குழந்தையை சுமந்தா. என்னிடம் மகேஷ் கட்டிப்பானு போராடினா. மகேஷோ சொல்லாம கொல்லாம ஊரை விட்டு அப்ப ஓடிட்டான்.
போறப்ப எமர்ஜென்சி என்றும் உன்னை தொடர்பு கொல்ல முடியாதுனு சப்பை கட்டு கட்டிட்டு போயிட்டான்.
அந்த பொய்யை நம்பி மைதிலி குழந்தையை சுமக்க போறதா சொன்னா.
ஒரு நாள் அழுது விதுரனிடம் கொட்டி தீர்த்துட்டேன்.
அடுத்த ரெண்டு நாள்ல அந்த பையனை அடிச்சி உதைச்சி கெட்டவன்னு அவன் வாயால மைதிலி பார்க்க நிஜத்தை நாடகமா அரங்கேற்றினோம். ஆனாலும் மைதிலி அவனை நம்பினா.
குழந்தை அழிக்க மாட்டேனு ஒரே வீம்பு. அப்ப விதுரன் சாரிடம் என்ன செய்யனு முறையிட்டு வருந்தினேன்.
கெட்டவனு பிற்காலத்தில் தெரிஞ்சா இந்த குழந்தையை அழிக்க முடியுமா சார். என்னோட தங்கை வாழ்வை இன்னொருத்தன் கையில பிடிச்சி கொடுக்க முடியுமானு புலம்பினேன். அம்மா ஹாஸ்பிடலுகுகு கூப்பிட்டா வரமாட்டறா சார். குழந்தையை அழிக்க முடியலையே அப்பா பரிதவிக்கிறார் சார்னு புலம்பினேன்.
விதுரன் சார் அடுத்த நாளே ஆபிஸ்ல இருக்கறவங்களுக்கு காமன் செக்கப் செய்ய மருத்துவரை வரசொன்னார்.
மைதிலியை செக் பண்ணி கன்சீவ் என்றதும் சார் அவருக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லைனு ‘எனக்கு கீழே வேலை செய்யற ரிசப்ஷன் கேர்ள் அன்மேரிட்டா இருக்கணும். நிபந்தனை இருந்தும் நீ என்ன கமிட்டட் மட்டுமில்லாம எக்ஸ்ட்ரா லோட்’ என்று பேசினார்.
இங்க வேலைக்கு இருந்தா சில விதிமுறை இருக்கு மீறினா என்னை மனுஷனா பார்க்க மாட்ட. என்னை ஏமாத்தறியானு தான் விதுரன் சாரோட கட்டாயத்தில மைதிலிக்கு கருகலைப்பை ஊசி போட்டு கலைத்தாங்க. தர்மா அப்ப கூட தான் இருந்து மிரட்டினான்.
மைதிலி சாபமிட்டா… கெஞ்சினா… ஆனா விதுரன் சார் கருணையில்லாம தன் கருவை அழிச்சதா புலம்பினா. ஆக்சுவலி என்னாலையும் எங்க அப்பா அம்மா என்னிடம் வருந்தி புலம்பியதாலும் தான் எங்க குடும்ப மானம் போகாம இருக்கவும், ஒரு அயோக்கியனிடம் என் தங்கை மாட்ட கூடாதெனவும் விதுரன் நினைச்சது.
அவருக்கு இது தேவையில்லாத வேலை. வீண் சாபம் பாவம் வரும்னு தெரிந்தே செய்தார்.
அதுக்கு காரணம் காரோட்டியா என்னை பார்க்காலை. எங்களோட வேதனையை அவரோட வேதனையா உணர்ந்தார்.
அந்த நேரம் தான் விதுரன் சார் தேவானந்த் நாக்கை துண்டாக்கினார். அந்த பயத்துல மைதிலி கருகலைப்பை செய்ததாலும் அவரை கண்டு பயந்து வீட்லயே இருந்துட்டா.
வேலைக்கு போகலை மகேஷ் எண்ணும் கிடைக்கலை. அவனோட வீட்டுக்கு ஒரு முறை போனா… அங்க அவயிருந்த அதேயிடத்துல இன்னொரு பெண்ணை கண்டதும் மகேஷே திட்டிட்டு வீட்டுக்கு வந்தா.
அப்ப தான் ஒரு நாள் விதுரன் சார் என்னோட முதலாளினு சொன்னேன். எனக்காக தான் உன்னை கட்டாயப்படுத்தி திரும்ப என் தங்கையா கொடுத்தார். இல்லைனா கரு வளர்ந்து தேவையில்லாத பிரச்சனையும் அருகதையற்றவனோட வாரிசை பெற்று வாழ்வே சூனியம் ஆகியிருக்கும்னு சொன்னேன்.
அவளா போய் சாரிடம் மன்னிப்பும் கேட்டு நன்றியும் கூறிட்டு வந்துட்டா. ஏன்னா அந்தளவு மகேஷோட கெட்டப்பக்கம் பார்த்துட்டா.
விதுரன் சார் ‘இனியாவது கதிர் அண்ணா சொல்ல கேளு மா’ அனுப்பிட்டார்.
அதுக்கு பிறகு மேற்படிப்பு படிக்க விதுரன் சார் சொல்லவும் மைதிலி நர்ஸ் கோர்ஸ் பண்ணினா.” என்று கூறினார் கதிர்.
“இதுல தர்மா எப்படி வந்தார்? விதுரன் போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சிட்டாரா?” என்று கேட்டாள்.
“இல்லைமா… அது ஒரு கோஇன்சிடெண்ட். ஒரு நாள் விதுரன் சாரோட தர்மா என் கார்ல ஏறினான். அப்ப அன்னிக்கு தர்மா விதுரன் சாரிடம் ‘சார் கேட்கறேனு தப்பா எடுத்துக்காதிங்க… ஏன் சார் மைதிலிக்கு இப்படி செய்திங்க. என்னயிருந்தாலும் வாரிசை அழிக்கிற உரிமை நமக்கில்லையே.
ரிசப்ஷன்ல அவ கன்சீவா உட்கார கூடாதுனு நீங்க பண்ணியது ரொம்ப ஓவர் சார்.
பிடிக்கலைனா வேலை விட்டு நீக்கியிருக்கலாம். நீங்க பண்ணியது கொடூரமா இருந்தது.’னு பேசினான்.
எனக்கு கொஞ்சம் பக்குனு இருந்தது. ஏன்னா தர்மாவுக்கும் மைதிலி என் தங்கைனு தெரியாது.
அப்படியிருக்க தர்மா கூடவே இருக்கறவன் அவனே இப்படி தான் நினைச்சிருக்கானா விதுரன் சாரை பற்றி தெரியாதவங்க அப்படி தானே எண்ணுவாங்கனு.
ஆனா சார் அதுக்கு எல்லாம் கவலைப்பட்ட மாதிரி தெரியலை. ‘தர்மா நீயேன் மைதிலிக்கு பீல் பண்ணற. ஏதாவது காரணமிருக்கா’னு கேட்டார்.
தர்மாவோ சட்டுனு ‘ஆமா சார் மைதிலியை விரும்பினேன். அவங்க மகேஷை விரும்பறது தெரிந்ததும் ஒதுங்கிட்டேன்’னு சொன்னான்.
‘ஏன்டா லவ் பண்ணியே அவளை பற்றி வேறயெதும் தெரியாதா?’ விதுரன் சார் கேட்க, ‘இல்லை சார் அவளோட பயடேட்டா பார்த்தேன் பேரண்ட்ஸ் நேம் இருந்தது. அட்ரஸ் ஏதோ போட்டிருந்தது. போனா அவங்க வீடு காலி பண்ணிட்டாங்கனு சொன்னாங்க.’ என்றான்.
‘அப்ப நீ வீடு தேடி போயிருக்கியா’னு விதுரன் சார் கேட்க ஆமானு தலையசைத்தான்.
‘ என்னயிருந்தாலும் லவ் பண்ணின பொண்ணு. மகேஷும் சரியில்லை எப்படி விடறது சார். நான் உங்களிடம் அடவாடியா திரியலாம். ஆனா யாருமில்லாதவனா சித்தப்பா வீட்ல வளர்ந்த எனக்கு, முதல்ல விரும்பிய பொண்ணு சார் மைதிலி. கருஸ்ரீகலைந்ததில் ஒன்னுகெடக்க ஒன்னு பண்ணிருப்பாளோனு பயந்தேன்” என்று உடைபெடுத்து அழ ஆரம்பித்தான்.
விதுரன் சார் வீட்ல தர்மாவை விட்டுட்டு அவன் போனப் பிறகு ‘என்ன சார் இப்படி பேசறானு’ கேட்டேன்.
‘நீ தான் கேட்டியே. என்ன முடிவுனு நீ தான் எடுக்கணும். முதல்ல மைதிலிக்கு மகேஷ் கெட்டவன்னு புரிஞ்சதால படிப்புல கவனம் ஆகிட்டா. தர்மா ஒரு வேளை கட்டிக்க கேட்டா ஏற்றுப்பியா’னு மட்டும் சார் கேட்டார்.
விதுரனோட லெப்ட் ஹாண்டா ஓர்க் பண்ண ஒரு தகுதி வேண்டும். அது தர்மாவுக்கு இருக்கு. மைதிலியை கட்டிக்க தான் அவனுக்கு விருப்பமானு கேட்கணும் சொன்னேன்.
ஆறு மாதம் போனப் பிறகு கார்லயே தர்மாவிடம் என் எதிர்ல தான் கேட்டார்.
மைதிலி என்னை கட்டிப்பாளா சார்னு அவன் கேட்டான். கதிரிடம் கேளு. கதிர் தான் அவளோட அண்ணா. நான் எதுக்கு உரிமையா நடந்தேனு கேட்டியே. அது கதிர்காக’னு சார் சொல்லிட்டு போயிட்டார். பிறகு தர்மாவிடம் பேசி மைதிலியை கன்வைஸ் பண்ணி ஒரு வழியா மேரேஜ் முடிச்சி, இதோ இப்ப குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவே கொண்டாடிட்டாங்க.” என்றான் கதிர்.
“கதிர் அண்ணா… உங்க தங்கை மைதிலி தர்மாவோட சந்தோஷமா இருக்காளா? உங்களுக்கு அசூரா தெரியுமா? இல்லை தீபிகா போல என்னை போல வேற வழியில்லைனு வாழறாங்களா?” என்று கேட்டு விட்டாள்.
கதிருக்கோ தீபிகாவை விடுங்க மா. நீங்களும் விதுரன் சாரும் முன்ன ஒன்னா ஆபிஸ் வருவிங்களே… அப்ப நீங்க என்ன கட்டாயமா வாழ்ந்திங்க. எங்க விதுரன் சாரை தூரத்துல இருந்து எத்தனை முறை இரசித்து பார்த்திருப்பிங்கனு எனக்கு தெரியும்.
பிடிக்காம தான் தன்வீ பாப்பாவை பெற்றுக்கிட்டிங்களா.” என்றதும் இடம் வந்தது.
கார் கதவை திறந்தவன் “வீடு வந்தாச்சு மா. உங்களுக்கு இன்னமும் மைதிலி வாழறது சாரோட அராஜகத்தாலனு நினைச்சா அவ எங்க வீட்ல தான் இருப்பா. எப்பனாலும் போய் பாருங்கம்மா. தர்மா வீடும் பக்கத்துல தான் பார்த்திருக்கான்.
அப்பறம் தீபிகா ஒன்றும் கஷ்டப்பட்டு வாழலை. ராணி மாதிரி வாழ வேண்டிய கீரிடத்தை எட்டி உதைச்சிட்டு வாழ தெரியாத மண்டு.” என்று கூறியும் சென்றான்.
பிரகதிக்கு கடைசியாக கதிர் பேசிய ‘ராணி மாதிரி வாழ வேண்டிய கீரிடத்தை எட்டி உதைச்சிட்டு வாழ தெரியாத மண்டு’ என்றது மனதையும் உடைத்து விட்டது. தானும் அப்படி தானா?
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Vithuran attitude is bad. But his intention is very good. Pragati should understand this. Also can’t think any girl. He loves Pragati very much. Now he is anger how Pragati get ready to.marriage with Edwin. Soon they will together. Intresting
Vidhu oda ovoru action Kum ipo reason thayritha pragathi….
Sowmi ya Avan pakkarathu sasi kaga thana ?😂
Athu varaikkum unna nalla vachu tension paduthuvan paru ….🤣
Intha Deepika mari poonungalukku yathulium manasu niriyathu oppathu ipti thaan adi kadaisila onnum illama poirunga 🤦🏻♀️
Avaloda unna ne compair pannatha pragati 😡 ne vidhu voda vazhnthathukkum avana vittu poorathukum reason niyaiyam anathu😌 enna onnu saynthu vazhum poothu unakku thonuna ennatha avanta velipadaiya share panirunthurukalam and ipti avana pathi paysi sabam kuduthathaium solirukalam ….
Kannal kanbathum poi kadhal kaytpathum poi theera visaripathaye mei ngarathu vidhu visiyathula unakku illama poiruchu ….
Kitta thatta apadi tha pragathi iruka nee
Nice epi😍😍