துஷ்யந்தா-42
வீட்டிற்கு வந்த பொழுது விதுரன் எதையோ பருகி கொண்டிருந்தான். மதுவகையில் ஒரு பானம் என்றவரை அறிந்து குழந்தையை கொடுக்கவில்லை. அவனுமே தடுத்து நிறுத்தி கேட்கவில்லை.
அடுத்த நாள் அதே அமைதியோடு எழுந்தனர்.
விதுரன் அவனாக குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டிருக்க, வாசலில் நிழலாடியது. விதுரன் கண்கள் சிவப்பேறியது.
எட்வின் என்றதும் வேகமாக பிரகதி கிச்சனிலிருந்து பாலை சரியாக கூட மூடாமல் டேபிளில் வைத்து விதுரன் முன் வந்தாள்.
“அவனை எதுவும் பண்ணிடாதே.” என்று இடைபுகுந்திடவும் விதுரன் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
பின்னால் அனிலிகா வந்து எட்வின் கையை பற்றவும் விதுரன் பார்வை இருவரின் கைகளில் பதிந்தது.
குழந்தையை அணைத்தபடி “உள்ளவாங்க” என்று வரவேற்றான்.
பிரகதியோ என்ன உடனே சாந்தமாகிட்டான் என்று அதிர்ந்தாள்.
“எப்படியிருக்க பிரகதி?” என்று எட்வின் கேட்டான். அனிலிகா குழந்தையை பார்க்க விதுரனிடம் இருக்கவும் தயங்கி பிரகதியை ஏறெடுத்து பார்க்கவும் தயங்கினாள்.
எட்வினிடம் மன்னிப்பு கூட தற்போது கேட்க இயலாத நிலையும், அவனின் மனநிலையும் அறிய முடியாத சூழ்நிலையில் பிரகதி தவித்தாள்.
அனிலிகாவோ ஏதோவொரு தவறில் கைபிசைந்து நின்றாள்.
எட்வினோ விதுரன் எதிரில் ஏதேனும் வார்த்தை விட்டு விடுவோமோ என்று அஞ்சினான்.
மற்றவர்கள் தான் யோசனையில் பேச தயங்கினார்கள். விதுரனுக்கு தயக்கமில்லை பயமும் இல்லையே.
“வந்திருக்கிற நியூ மேரிட் கப்பிளுக்கு கிராண்ட் லஞ்ச் ரெடி பண்ணு.
ஆப்டர்நூன் நான் ஜாயின் பண்ணிக்கறேன்.” என்று விதுரன் குழந்தையை அனிலிகாவிடம் நீட்டிவிட்டு கிளம்ப மாடிக்கு படிகளில் சென்றிருந்தான்.
எட்வினும் அனிலிகாவும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் தயங்கி பேச வந்ததில் இதுவும் ஒன்று. மிக எளிதாக பிள்ளையார் சுழியிட்டு சென்றவனை எட்வினால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
“இடியட்.. சாரி அனிலிகா. அவன் அப்படி தான் தப்பா….” என்றவள் மனம் அதன் பின்னே ‘விதுரன் எதையும் தவறாக கணிப்பவனா?’ என்று எடுத்தரைத்தது.
“அப்போ… விதுரன் பேசியது. உண்மையா? நியூமேரிட் கப்பிள்?” என்று கேட்டாள்.
“ஐ அம் சாரி பிரகதி. ஸ்கூல் டேஸ்ல இருந்து எட்வினை பிடிக்கும். பட் அந்த பிடிக்கும் என்றதுக்கு அர்த்தம் லவ் என்றதே அவன் உன்னிடம் விருப்பம் தெரிவித்து முடிச்சப்ப தான் புரிந்தது.
சரி பெஸ்ட் பிரெண்டா மூவ் ஆக தான் பார்த்தேன். உன்னை விதுரனை மணந்தப்ப இனி யாரும் நடுவுல வரக்கூடாதேனு லவ் யூனு அனுப்பினேன். இவன் கிண்டல் பண்ணி ஓட்டவும் அதை ஜஸ்ட் பன் என்று சமாளிச்சிட்டேன்.
அகைன் அவன் உன்னை கல்யாணம் பண்ண கேட்டப்ப தான் என்னோட எட்வின் மொத்தமா போயிடுவானேனு பயந்தேன்.
அப்பவும் நம்ம பிரெண்ட் பிரகதி தானேனு இருந்தேன். பட் அகைன் விதுரன் எண்ட்ரில நீ இங்க வந்த பிறகு சர்ச் மேடை வரை வந்த எட்வினை இனி யாருக்கும் விட்டு கொடுக்க முடியலை.
மேரேஜ் பண்ணிக்கறியானு கேட்டேன். அவன் எஸ்னு அக்சப்ட் பண்ணிட்டான்.
நாங்க மேரேஜ் பண்ணிட்டு உன்னை பார்த்து சொல்லிட்டு தன்வீயை பார்க்கலாம்னு இருந்தோம். பட் சொல்ல சங்கடமா இருந்தது. விதுரன் எப்படியோ கண்டுபிடிச்சிட்டார்.” என்ற நொடி விதுரன் வேகமாக படியில் இறங்குவதை கண்டனர்.
“சௌமியா… நீ எது முடிவெடுத்தாலும் ஹாப்பி. அவனை நான் பார்த்துப்பேன்.” என்று போனில் பேசியபடி மகிழ்ச்சியாய் வந்தவன்.
“சாரி நான் ஆப்டநூன் வந்து பேசறேன். ம்ம்… பெரிதா கெஸ் பண்ண மூளை வேண்டாம். பிளாட்டின வெட்டிங் ஸ்பெஷல் ரிங்.” என்று சென்று விட்டான்.
பிரகதியோ அவன் சென்ற பின் அனிலிகா எட்வினிடம் வாழ்த்தை கூறினாள்.
“பிரகதி உனக்கு கோபமில்லையே?” என்றாள் அனிலிகா.
“எனக்கு எதுக்கு? ஆக்சுவலி என்னால மேரேஜ் பண்ணாம எட்வின் இருந்திடுவானோனு பயந்தேன். அதுவும் சர்ச் வரை வந்து. கில்டி பீலிங் கூட ஆச்சு.” என்றவள் எட்வினை ஏறிட்டாள்.
“யா… பிரகதி.. இதுக்கு மேலயும் டிலே பண்ண மனசு வரலை. அனிலிகா முதல்ல சொன்னப்ப கேலியா விட்டுட்டேன். பட் இப்ப முடியலை. உண்மை சொல்லணும்னா.. எனக்கு விதுரனை பார்க்க பயமாயிருக்கு. இதுக்கு மேல உன்னை பார்த்தாலே கொன்றுடுவாரோனு.” என்றதும் பிரகதி சிரிக்க ஆரம்பித்தாள்.
“மேபீ… என்னை சீண்டினா” என்றவள் வாய் கூறிய பிறகே தன்னையறியாமல் அவனை பற்றி சரியாக கூறியதை எண்ணினாள்.
மதியம் விருந்து வைக்க தடபுடலாக மெனுவை கூற கிச்சனிலிருந்து வாசம் தூக்கியது.
அனிலிகாவோ வீட்டை சுற்றி பார்த்து டெரஸ் வந்தவள் “இங்க முளைத்த மொட்டு தான் தன்வீயோ?” என்றாள்.
பிரகதி வெட்கமாய் ஆம் என்று தலையசைத்தாள்.
“ரொம்ப பியூட்டிபுல்லா இருக்கு. டேஸ்டானா ஆளு பா.” என்று விதுரனை பாராட்டினாள்.
பிரகதியோ “ம்” என்றவள் நினைவுகளில் முழ்கி “கீழே வா” என்று கூறி தனக்கு இம்முறை விதுரனை பற்றி அறிந்த விஷயத்தை எல்லாம் கூறி முடித்தாள். கதை பேசி களைத்து போனாள்.
“ஓஎம்ஜி பிரகதி அப்போ விதுரனிடம் சாரி கேட்டுட்டியா?” என்றாள் அனிலிகா.
“நான் ஏன் சாரி கேட்கணும். என்னோட இடத்துல இருந்து பார்த்தா நான் தவறிழைக்கலைனு புரியும்.
சட்டுனு வந்து அம்மாவுக்கு ஆக்ஸிடெண்ட் காலை எடுத்தாச்சுனா சடனா கோபம் வரும். அதுவும் திமிரா கல்யாணம் பண்ணுனு மிரட்டினா பயத்துல தான் கையெழுத்து போட்டேன்.
தர்மா சொன்ன விதம் விதுரனை நான் முதல்ல பார்த்த தோற்றங்கள் அவனை அரக்கனா தான் காட்டியது.
எந்த பொண்ணும் அந்த நிலையில் டெவிலா தான் திட்டியிருப்பா கத்தியால குத்தியிருப்பா.
அவன் காலை வெட்டலை தெரிந்ததும் வேண்டுமின்னா கொஞ்சம் யோசித்து இருக்கலாம். ஆனா கட்டாயத் திருமணம் பண்ணினா அவனோட நல்ல பிம்பம் இருக்கானு தேட முடியாது.
அதுவும் காலேஜ் பிரெண்ட் தீபிகா லைப் பார்த்ததும் என்ன தோன்றும். பழக்கமில்லாத விதுரனை நல்லவனா நினைக்க தோன்றுமா. இல்லை பழகிய பிரெண்ட் தீபிகா கெட்டவள்னு தோன்றுமா.
நமக்கு நாலப்பக்கமும் கண்ணு இல்லையே. நல்லது கெட்டதை எடைப்போட, பழகியிருந்தா ஒரு முடிவுக்கு வர முடியும்.
விதுரன் என்னை எட்டி நிறுத்தி ஒரே அறையில் கண்ணியம் காத்தப்ப அவனோட ஒழுக்கம் கண்ணில் படவே பத்து மாதம் ஆகிடுச்சு. அதுல அம்மா உடல்நிலை, ஹாஸ்பிடல், வீம்பு, ஈகோ, சண்டை, அம்மாவோட இறப்பு, தீபிகா பற்றிய எண்ணம், இன்பா லைப் இதை யோசிக்கவே சரியாயிருந்தது.
விதுரனை மட்டும் நினைத்து வாழ ஆரம்பிச்ச இரண்டு மாதம் அவனோட குணயியல்பு புரிந்தாலும் காரணகாரியம் கேட்கலை. அவனோட செய்கைக்கு நியாயம் இருக்கும்னு புரிந்தது. என்னை உயிரை காதலிக்கறான்னு புரிந்தது. ஆனாலுமே அந்த கொலை….
சட்டுனு ஒரு கொலையை கண்ணுக்கு நேரா பார்த்து, அதையும் கணவனே செய்யறதை ஏற்று ஜீரணிக்க மனசால முடியலை.
ஒரு உயிர் பறிச்சதுக்கான தண்டனை யார் தருவா? குற்றவுணர்வு இல்லையா..? என்னிடம் மட்டும் நல்லவனா அன்பு செலுத்தறவனா இருந்தா போதுமா இந்த நியாய மனசு தான் வாழ விடலை.
இப்ப அந்த ஒரு உயிர் நாலு உயிரை பறித்ததுக்கு தண்டனை என்று தெரியறப்ப மனிதமனம் சமனாகுது. அதுக்காக தவறு சரினு ஆகாதே. மேபீ விதுரன் மேல இருந்த மலை அளவு கோபம் மடுவா மாறிடுச்சு.
நான் இதுல தப்பா எந்த இடத்துலயும் அவனே காயப்படுத்தலை. எட்வினை கட்டிக்க சர்ச் வரை வந்து அலங்கரிச்சு நின்றதும் தன்வீ உருவானதை மறைச்சதும் தான். அதுக்கூட பிராப்பரா டிவோர்ஸ் வாங்கியிருந்தேனே என்ற எண்ணம். எட்வினை கட்டிக்கிட்டா தன்வீயை நெருங்க மாட்டானு நினைச்சேன்.
தன்வீ அவனோட குழந்தைனா என்னை சிறை வைத்து திரும்ப அட்டூழியம் செய்வான்னு நினைச்சேன். இப்ப தான் புரியுது. அவன் முன்ன செய்ததே அவனோட இயல்பு. இயல்பை மாற்ற முடியாது.
இப்பவும் யாராவது அவன் பாதையை வழிமறைச்சா சாய்த்து போட்டுட்டு போக தான் செய்வான்.
நான் மன்னிப்பு கேட்க என் தரப்பில் தப்பும் இல்லை. இதை ஈகோல சொல்லலை. அவனுக்கு என் மேல கோபமும் இல்லை என்ற தெளிவுல சொல்லறேன்.” என்றாள் பிரகதி.
அனிலிகாவோ மெல்ல பிரகதி பின் பக்கம் விழியை செலுத்தியவள் எழுந்து நின்றாள். பிரகதி விதுரன் வந்துவிட்டான் என அறிந்து “சமைச்சது ரெடியாகியிருக்கும். நீ வேண்டுமின்னா எட்வினை எழுப்பி கூட்டிட்டு வா.” என்று பிரகதி விதுரனை கண்டு அவள் பாட்டிற்கு சென்றாள்.
விதுரனோ அவளுக்கு மேலாக உறங்கும் குழந்தையை கண்டு கன்னம் தட்டி ரெப்பிரஷ் செய்ய போனான்.
அறைக்கு வந்தப் பொழுது முறுவல் பூத்தது.
உடைமாற்றி கீழே வந்த நொடி எட்வின் அனிலிகா உணவு மேஜையில் வீற்றிருந்தனர்.
“ம்ம்…” என்று வாசம் பிடித்தவன் “நைஸ் ஸ்மைல்.” என்றவன் வனஜாக்கா சமையல் ஏ ஒன் வாசம்” என்றான்.
பணியாட்களில் ஒரு மத்திய வயது பெண் மகிழ்ந்து கொண்டாள்.
பிரகதியோ மென்னகையோடு பரிமாறினாள்.
“எட்வின் கூச்சப்படாம சாப்பிடு. என்றவள் “அனிலிகா பயப்படாம சாப்பிடு” என்று எடுத்து வைத்தாள்.
சாப்பிடும் நேரம் மௌனமாய் சென்றது. பிரகதியே பார்த்து பார்த்து நட்பு வட்டத்தின் விருப்பமானவையை எடுத்து எடுத்து வைத்தாள். விதுரனுக்கும் அவளே எடுத்து வைத்தாள். அவன் மறுத்து எட்டி நிறுத்தவில்லை
விதுரன் பாதி சாப்பிட்டு கொண்டிருக்க, சௌமியா போன் அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்று காதில் ப்ளூ டூத் ஆன் செய்து பேசினான்.
“ம் சொல்லு சௌமி.
ஏய்… லாக்கர் நம்பர் தெரியாது.
ஒ மை காட் அவன் சொல்லாம போயிட்டானா.?
நான் வாட்ஸப்ல ஒன் டைம் விஸப்பிளா நம்பர் அனுப்பறேன். நாளையிலருந்து நினைவு வச்சிக்கோ.
ஏய் சௌமி.. சாப்பிட்டியா…?” என்று கொஞ்ச நேரம் வெள்ளை பருக்கையோடு துழாவியிருந்தான்.
குழம்பை ஊற்றாமல் கரண்டியில் அப்படியே நிறுத்தி அவனை பத்ரகாளியாக முறைத்த பிரகதியை கண்டு, “சௌமி.. நான் இரண்டு நிமிஷத்துல அனுப்பறேன். நீ வச்சிடு” என்று போனை துண்டித்து விட்டான்.
“குழம்பு ஊற்றாம என்னை எதுக்கு சைட் அடிக்கிற?” என்றான் விதுரன்.
“குழம்பை உன் தலையில ஊற்றவா… இப்ப என் மனசுல அதான் ஓடுது. எட்வின் அனிலிகாவுக்காக பார்க்கறேன்.” என்றாள் மென்குரலில்.
“பண்ணு… அடுத்த நிமிஷம் ஸ்விம்மிங் பூல்ல தூக்கி போட்டு அமுக்கறேன்.” என்றான்.
அனிலிகாவுக்கு அப்படியும் கேட்டுவிட, புரையேறியது. பிரகதியோ குழந்தை சிணுங்க அவளை தூக்க சென்றாள்.
“ஓ… செல்லக்குட்டி… மம்மு சாப்பிடறிங்களா..” என்று தூக்கிக்கொண்டு வர, விதுரனோ அவளை ஒரவிழியில் இரசித்தான்.
அனிலிகாவோ வேகமாக சாப்பிட்டு பிரகதி பின்னால் ஓடினாள். அவளுக்கு விதுரனை பிரகதி இல்லாமல் சந்திக்க கிலியை தந்தது.
எட்வின் விதுரனை பார்த்தவன் விதுரன் பார்வை தன்னை நோக்கி திரும்ப கண்டு சட்டென பார்வை மாற்றினான்.
விதுரன் அப்பொழுதும் சும்மா இல்லாமல், “எக்ஸ்கியூஸ் மீ எட்வின்” என்று சொடக்கிட எட்வின் விதுரன் புறம் திரும்ப சத்தம் வராது ஒரு குத்து விட்டான். “இது என் பிரகதியை திரும்ப வந்து கல்யாணம் செய்ய கேட்டதுக்கு.” என்று ஆங்கிலத்தில் உரைத்தான். அடுத்த நொடி சிரித்து கொண்டே சிக்கன் கபே எடுத்து வைத்து பரிமாறி “அண்ட் தேங்க்ஸ்… உன்னால தான் பிரகதியை ஈஸியா பைண்ட் அவுட் பண்ணினேன்” என்றான்.
எட்வினுக்கு என்னவோ புரிந்தாலும் ‘அம்மாடி… நடுவுல வந்திருந்தேன். நான் செத்தேன்’ என்பதை ஆங்கிலத்தில் நினைத்து முடித்தான்.
வாயை பிடித்து கொண்டு எட்வின் விதுரனை தவிப்பாய் பார்க்க பிரகதி சாதம் ஊட்டியவள் இங்கு வந்து என்ன என கேட்க “நத்திங் பிரகதி.” என்றான்.
விதுரனோ “குழந்தையை என்னிடம் கொடு. நீ சாப்பிடு” என்று வாங்கிக் கொண்டான்.
அன்று இரவு எட்வின் அனிலிகா இருவரும் தங்கினர்.
இரவு விதுரனோ, குழந்தையை தொட்டிலில் போட்டு வாட்சை பார்த்து பார்த்து வாசல் பக்க கதவை ஆராய்ந்தான்.
பிரகதி வரவும் “சௌமியாவை பற்றி என்ன நினைக்கிற.” என்றான்.
பிரகதிக்கு ஏதோ மனமென்னும் கண்ணாடி உடைந்து விரிசல் கண்டதாய் நொறுங்கினாள். ஆனால் வலியை மறைத்து, “என்ன நினைக்க. நல்ல பொண்ணு. ஏன் கேட்கற?” என்றாள்.
“சொல்லியிருந்தேனே ஸ்டெப் மதரா கேட்கலாம்னு.? மறந்துட்டியா?” என்றான்.
“ம்ம்.. அப்ப முடிவெடுத்திட்டியா?” என்றாள்.
“பார்த்தப்பவே… அவ திமிர் பிடிச்சிருந்தது. தாத்ரு இறந்தப்ப ஒரு வார்த்தை பேசினா நினைவிருக்கா?” என்றான்.
என்னவோ திட்டிவிட்டாளா.. அவளை அடக்குவதாக எண்ணி மணக்க போகின்றானா? என்று பிரகதிக்கு தோன்றியது. அதனால் சிலையாய் நின்றாள்.
“பச்… உனக்கு நினைவுயில்லை…. மதிப்பில்லாத இடத்துல குபேரனே இருந்தாலும் வேண்டாம் அக்கானு சொன்னா. நூறு சதம் சரியா வார்த்தை. உன்னை அக்கானு தானே கூப்பிடுவா?” என்று கேள்வி கேட்டான்.
அவளை விதுரன் மணந்தாலும் தான் அக்கா தானே என்பது போல பிரகதி யோசித்தாள். மறுபுறம் சௌமியாவுக்கு திருமணம் பேச அவனாகவே வாயெடுக்கின்றான். அப்படியிருக்க தான் அவளுக்கான வாழ்வை தடுப்பதா? என்று எண்ணினாள்.
அவளுக்கு குழந்தை பிறக்கறது வாய்ப்பு கம்மினு டாக்டர் சொன்னாங்க. மேக்னாவை கூட பார்த்துட்டு ஒருமுறை அதே தான் சொன்னதா அஞ்சலி சொன்னாளே.
கர்ப்பம் தரிக்க குறைவான வாய்ப்பு இருக்கே என்றவள் கூற தயங்கினாள்.
“இது பெட்டர் ஹாப் போஸ்டுக்கும் தான். மற்றபடி தப்பா யோசிக்காதே” எனறான். அவன் ஒரு அர்த்தத்தில் கூற இவளுக்கு வேறொரு அர்த்தமாக அந்த நேரத்தில் புரிந்தது.
பிரகதி “முடிவெடுத்தாச்சுல பிறகென்ன” என்று முதுகு காட்டி உறங்கினாள்.
விதுரனோ… ‘ம்ம்… அப்பறம் என்னவா.. நான் சசியை சரிகட்டணும். சித்தியை ஈஸியா வளைக்கலாம். ஏற்கனவே சசி பத்தி கவலைப்படறாங்க. இந்த சௌமியா கேட்குமா? இன்பா.. அவன் கேட்பானா டவுட் தான்.’ என்று மனதுக்குள் அவனொரு திட்டம் வகுத்தான்.
இதை அறியாத பிரகதி கண்ணீரை தலையணைக்கு தாரை வார்த்தாள்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Aiyo prathi ipAvum avana purinjukkama neeya yosikkara pathiya 🤦🏻♀️
Oh god edvin and ali super jodi pa neenga unmaiya unexpected couples neenga and future la kandipa vidhu pragathi vida innum nalla understanding couple aa irrupinga 🥰🤗😍
Wow sowmi and sasi pair super. Vithuran always clever. Pavam Pragati. Intresting
Crack pragathi😂😂
thana antha possessiveness vanthuduthu la namaku urimayanavanga inoruthara pathi pesum pothu
Interesting