துஷ்யந்தா-45
விதுரன் வயிற்றை பிடித்து சிரிக்க ஆரம்பித்தான். அவனின் சிரிப்பு பிரகதிக்கு எரிச்சலை கிளம்பியது. ஆனால் எமகாதகன் சிரிப்பை நிறுத்தாமல் கெக்கபெக்கவென்று சிரிப்பை தொடர்ந்தவன் அவளின் முகவாட்டத்தை கண்டே தன் சிரிப்பை மனதில் புதைத்து நிறுத்தினான்.
“ஏய்… குழந்தை பிறந்தா இந்த காதல் அன்பு எல்லாம் குழந்தைக்கு மட்டும் தான் இனி தாயான பெண்ணுக்கு இல்லைனு நினைச்சி பீல் பண்ணுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப தான் பார்க்கறேன்.
என் பிரகதி என்னோட அன்புக்கு தவிக்கிறதை பார்த்தா கர்வமா இருக்கு தெரியுமா…. டெவில் குயினுக்கு எவ்ளோ பொஸஸீவ்னஸ்னு” என்றான் மூக்கை பிடித்து இழுத்தான்.
“நான் என்ன பேசறேன். நீ என்ன சிரிக்கற.” என்று கோபித்தாள்.
“ஏய் டெவில் உசிரை வாங்காத டி. எனக்கு நிஜமா சிரிச்சு சிரிச்சு முடியலை. நான் மியாவை சசிக்கு கல்யாணம் பண்ண பிளான் போட்டுயிருக்கேன். நீ என்னடானா எனக்கு கனெக்ட் பண்ணி யோசிச்சிட்டு இருக்க. எனக்கு தான் மனைவி நீ இருக்கியே டி. சசிக்கு தான் மனைவி இல்லை. குழந்தை வச்சி கஷ்டப்படறான். அவனால சமாளிக்க முடியலை. ஒரு பக்கம் சித்தி மறுபக்கம் யுகன்னு படுத்தறாங்க.” என்றதும் பிரகதிக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது. அவனை காற்று புகாவண்ணம் அணைத்து கொண்டாள்.
“நீ என்னை தேடி வராம போனாலும் என் குழந்தையை என்னால தனியா பார்த்துக்க முடியும் டெவில்.
சசிக்கு போலியான காதலி மனைவியா அமைந்தா.
எனக்கு அப்படியில்லையே. இரண்டு மாதம் எனக்கு உண்மையா பாசம் காட்டிய காதலி மனைவியை உன்னை பார்த்தேன். அப்படியிருக்க வேறயொருத்தியை எப்படி தேடுவேன்.” என்று தலையில் தட்டினான்.
“நான் அப்படி நினைக்கலையே. எட்வினை மணக்க போயிட்டேனே.” என்றவள் தவறிழைத்தவளாக அழுதாள்.
“மேக்கப் எல்லாம் கலையுது. அப்பறம் கலைந்த ஓவியமா முகமிருக்கும். இப்ப அழாதே அதுக்கு தண்டனை அப்பறமா தர்றேன்” என்றவனுக்கு குரல் கடினமாய் மாறியிருந்தது.
“என்னால சரியான முடிவெடுக்க முடியலை. எட்வின் கேட்டப்ப அந்த கலாச்சாரத்துல இருந்து யோசித்தப்ப தவறாபடலை. எப்ப இங்க ஆதித்யா தாத்தாவை பார்க்க வந்து உன்னோட சீண்டலை மறுபடியும் அனுபவிச்சேனோ அப்ப தப்பு பண்ணறேனு புரிஞ்சுது.
ஆனா நீ தேடி வரலையேனு நானா உடைஞ்சி போயிட்டேன். எனக்கென்ன தெரியும் அப்ப தான் என் கண்ணுல கருப்பு துணி கட்டி உன்னை கெட்டவனா பார்த்துட்டேனே. இப்ப தானே கதிரும் சசியும் சொல்லறாங்க.” என்றாள்.
“வேண்டாம்… இந்த டாபிக் இப்ப எடுக்காதே… உன் மேல செம காண்டுல இருக்கேன். கணவன் மனைவியா வாழ்ந்த வாழ்வை மறப்பியா நீ. எந்த மாதிரி வாழ்வை தூரயெறிந்த.
எட்வினுக்கு ஓகே சொல்லி சர்ச் வாசல் வரை போயிட்டியே. தன்வீ தூக்கிட்டு வரலைனா நீ வந்திருப்பியா.” என்றவன் கேள்விக்கு பதில் இல்லை.
“சௌமியா வந்துட்டா… நம்ம வழக்கை தற்காலிகமா ஒத்தி வச்சிட்டு போய் அவளை வெல்கம் பண்ணு. அவ வந்துட்டானா சசிக்கு மேரேஜ் பண்ண சம்மதமா வந்திருக்கானு அர்த்தம்” என்றவன் கீழேயிறங்கினான்.
பிரகதிக்கும் இதுவே போதும். முதலில் வந்தவரை வரவேற்போம்மென இறங்கினாள்.
அனிலிகா குழந்தையை தூக்கிக் கொண்டு செல்பி எடுத்தாள்.
அவள் கையால் செய்த கேக்கை கண்டு பூரித்தாள்.
விதுரன் அவளருகே வந்து எல்லாம் சரியாக உள்ளதாயென பார்த்து திரும்பினான். “ஒரு நிமிஷம்” என்றாள் அனிலிகா.
“என்ன?” என்றான்.
“பிரகதி மேல தப்பில்லை. நான் தான் எட்வின் இவளோட நினைப்புல மேரேஜ் பண்ணாம இருக்கானேனு உங்களை மாதிரி ஒருத்தரை நினைச்சி வாழறதை விட உனக்காக காத்துட்டுயிருக்கிற எட்வினை செகண்ட் மேரேஜ் பண்ணிக்கோனு நான் தான் தினமும் போர்ஸ் பண்ணினேன்.
எட்வின் ஆசைப்பட்டவளோடவாது வாழட்டும்னு.
பிரகதி தினமும் இதை பத்தி பேசாதேனு சொல்லுவா. என்னால விதுரனை விட்டு யாரையும் நினைச்சி பார்க்க முடியாது. ஐ லவ் விதுரன்னு நிறைய முறை சொல்லிருக்கா. நான் தான் தீபிகா லைப், கொலைப் பண்ணினவன் நாளைக்கு தீபிகா குழந்தை மாதிரி உன் குழந்தை தூக்கிட்டு போவான். அவனை மதிக்காத உன்னை வீட்டுக்குள்ள கூட சேர்க்க மாட்டான். அட்லிஸ்ட் எட்வினை திருமணம் செய்தா குழந்தையாவது உன்னோடவே இருக்கும்னு சொன்னேன். அவளுக்கும் குழந்தையை பிரிய கூடாதுன்ற எண்ணம் ஓட, எட்வினும் தொடர்ச்சியா கேட்டுட்டே இருந்தான்.
உங்க மேல கோபம். எட்வின் நான் வேற மாற்றி மாற்றி அவளை மாற்ற முயன்றோம். மேரேஜ் வாசலுக்கு வர்றப்ப கூட பிரகதி ‘எனக்கு என்னவோ தப்பாவே படுது அனிலிகானு’ சொன்னா.
அவ இஷ்டப்பட்டு எல்லாம் எட்வினை மணக்க சம்மதிக்கலை.” என்றாள் அனிலிகா. தோழியின் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறினாள்.
“எனக்கு பிரகதி மேல கோபம் தான். என்னை விட்டு ஓடி ஒளிந்தாளேனு. அவ குழப்புத்துல என் மேல இருக்கற கோபத்துல எடுத்த முடிவுனு எனக்கு தெரியும்.
என்னை பார்த்தாளே மேடம் மனசு மாறிடுவா. அதனால தான் இங்கிருந்து ஓடியது. உங்க பிரெண்டுக்கு எட்வின் மேல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லைனு எனக்கு தெரியும். அதுமட்டுமில்ல உங்களுக்கு எட்வின் மேல இன்ட்ரஸ்ட்னும் தெரியும்.
என்ன எட்வின் கையை உடைச்சதுக்கு தினமும் போய் நலன் விசாரிச்சது நீங்க தானே. பிரகதி ஒருமுறை பார்மாலிட்டிக்கு பார்த்துட்டு ஓடிட்டாளே.” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“ஏங்க இதுல பெரிய ஆச்சரியம் அதிர்ச்சி எதுவுமில்லை. எப்ப எனக்கு பிரகதி மேல ஆர்வம் வந்துச்சோ அப்பவே அவளோட குணத்தை அவளை சுற்றி நடக்கிற விஷயத்தை அப்சர்வ் ப்ணணிட்டேன்.
கேக் நல்லாயிருக்கு தன்வீக்கு ஸ்மர்பட்(smurfette) கார்டூன் ரொம்ப பிடிக்குமோ… ஈபில் டவரோட சேர்த்து செய்து இருக்கிங்க?” என்றான்.
“ம் பிடிக்கும். எப்பவும் ‘லாலலலாலா’ னு ஹம் பண்ணுவா. அது இரண்டு தான் அப்போ வாயில நுழையும்.” என்றவள் தயங்கி, “தேங்க்ஸ் பார் அன்டர்ஸ்டாண்டிங்.” என்று பதில் தந்தாள்.
சசியோ சோகமாக இதென்ன இன்னிக்கே வரவழைச்சி இருக்கான். யாரா இருக்கும் என்று கூட்டத்தில் பயந்தான் எனலாம்.
இன்பாவை வேறு பார்க்க கடினாமாக இருந்தது. அவன் பார்வை தீபிகாவை என்னோடவாது வாழ விட்டிருக்கலாமோ என்று கேட்டு கோபமாக இருப்பதாய் காட்டியது.
உண்மையில் அவன் தங்கையை இரண்டாவது திருமணம் செய்ய கேட்கின்றானே என்ற கோபத்தில் இன்பா இருந்தான்.
விஜயலட்சுமியோ வீட்டின் அமைப்பும் ஆடம்பரமும் கண்டு பயத்தில் இருந்தார்.
சௌமியாவோ விழா முடிந்து தன்னிடம் கேட்டால் பதில் என்ன கூறுவது? என்ற யோசனையில் திளைத்தாள்.
முதல் முறை முதலாளி என்ற பார்வையிலிருந்து விதுரன் கூறிய விதத்தில் சசியை கவனித்தாள்.
பதட்டமாக யாரையோ தேடுவதை கண்டாள். அவனின் பார்வை தன் பக்கம் வரவும் திடுக்கிட்டாள். ஆனால் சசி அவளை தாண்டி வேறு யாரையோ தேடியதாக அவளுக்கு தோன்றியது.
கண்கள் குளமாக வெளியே செல்ல வழி தேடினான். எப்பொழுதும் வாடிக்கை தான் தனக்கு ஒரு இடத்தில் இருக்க பிடிக்கவில்லையென்றால் அவ்விடம் விட்டு ஓடும் ஆள் சசி. இன்றும் அப்படி செய்ய நினைத்தான். ஆனால் விதுரன் விடமாட்டான். துரத்தி வரும் சிங்கம் அவன்.
அவன் அழைத்து வரும் ஆட்களுக்கு மத்தியில் தன் இயல்பாய் இருந்தாலே விட்டு விலகிடுவார்களோ என்று சிந்தனைவயப்பட்டான்.
எதச்சயமாக யுகன் கீழே விழ அங்கே விஜயலட்சுமி அவனை தூக்கி நிறுத்தினார்.
“அடிப்பட்டுடுச்சா குட்டி பையா?” என்று கேட்டதும் யுகன் விழித்து பின் வாங்கினான். உடனே சசி வந்து “அ..அவன் யா…யா..ரோடவும் பழ..க தயங்குவா…ன் ந..ன்றி மா” என்று கூறினான். அதற்குள் இன்பா வந்து முன் நின்றான்.
இன்பா அன்னையோடு இருக்கவும் சௌமி ஏதேனும் அண்ணா சசியை மனக்காயம் செய்வானோ என்று ஓடி வந்தாள்.
“நீ…நீ.. எப்ப வந்..த.” என்றான்.
“இப்ப தான் சார்.” என்றாள் கூடவே இன்பாவை கண்டு திட்டிவிடாதே என்பது போல பார்த்தாள்.
“யாரு சௌமியா?” என்று விஜயலட்சுமி கேட்டதும் இன்பாவோ “தீபிகாவோட கணவர் சசிதரன் மா.” என்று கூறினான்.
சசிதரனோ உடைந்திடும் உணர்வில் இருந்தான். “அண்ணா… சும்மா இருக்க மாட்ட” என்றவள் சசிதரனிடம் “சாரி சார்” என்றாள்.
“உ…உங்களோட அண்..ணா அம்மா..வா.” என்றான் அதிர்வோடு.
ஏனென்றால் சௌமியா இன்பாவின் தங்கை என்பது அவனுக்கு தெரியாது.
“ஏன் உனக்கு தெரியாதா? புதுசா கேட்கற?” என்றான் இன்பா.
“தெ..தெரியாது விது..ரன் சொல்லலை.” என்றவன் “சௌ…மியா எனக்கு ஒ..ர்..ரு உதவி செய்ய..றியா.?” என்றான் சசி.
விதுரன் இங்க இருக்கறவங்களில் யாருக்காவது அம்பாயின்மெண்ட் கொடுத்து இதுக்கு முன்ன பேசினானு விக்னேஷ் சார்ட்ல பார்த்து சொல்லறியா.” என்று டைப் செய்து அவளிடம் போன் ஆப் மூலமாக ஒலிக்க செய்தான்.
“எ..எதுக்கு சார்?” என்றாள். உடனே சசி டைப் செய்து அதை ஒலியாக மாற்றிட போனில் நுழைந்தான்.
“அவன் யாரையோ எனக்கு ஜோடி சேர்க்க பார்க்கறான். என்னை கட்டிக்கிட்டு பாவம் இன்னொரு பொண்ணும் கஷ்டப்படணுமா. நீயே சொல்லு. பேசாம அவங்களிடம் தனியா கூப்பிட்டு என்னை நிராகரிக்க கெஞ்சி கேட்டுடலாம்னு பார்க்கறேன்.” என்றான்
அதை ஒலியாக கேட்ட சௌமியாவோ அதிர்ந்தால் என்றால் அவளின் அம்மாவோ சசியை வித்தியாசமாக பார்த்தார்.
இன்பாவோ என்ன கதை விடறான் என்பது போல பார்த்தான்.
அந்த நேரம் பிரகதி இன்பாவை பார்த்து தயங்கி வந்து “வா இன்பா. வாங்கம்மா.. சௌமி.. நைஸ் சேரி உட்காருங்க” என்றாள்.
இன்பா பிரகதி தனியாக சென்றதும் “சாரி இன்பா. சசியை நேரில சந்திச்சா நீ ஹர்ட் ஆகிட்டியா?” என்றாள்.
“அதை விடு தீபிகாவும் செத்துட்டா. தீபிகா விஷயமும் செத்து புதைந்துடுச்சு.
விதுரன் என்ன பண்ணிருக்காருனு தெரியுமா.” என்றான்.
“எ..என்ன?” என்றாள்
“சௌமியை சசிக்கு கட்டிக் கொடுக்க கேட்டுயிருக்கார். ஆமா சசிக்கு இது தெரியுமா தெரியாதா. சௌமியிடமே வந்து என்னை கட்டிக்கிட்டு பாவம் இன்னொரு பொண்ணும் கஷ்டப்படணுமா. நீயே சொல்லு. பேசாம அவங்களிடம் தனியா கூப்பிட்டு என்னை நிராகரிக்க கெஞ்சி கேட்டுடலாம்னு பார்க்கறேன்.’ யாரு அவங்கனு விக்னேஷ் சார்ட் ஒர்க் எடுத்து பார்த்து விதுரன் யாரை ஸ்பெஷல் கெஸ்டா இன்வெயிட் பண்ணினானு லூசுதனமா கேட்கறான்.” என்றான்.
“இன்பா… நிஜமாவே சசிக்கு சௌமியை விதுரன் பேசுவாருனு தெரியாது. விதுரன் யாருனு சொல்லலை. இனி தான் சௌமியா சம்மதம்னா முன்ன நிறுத்தணும்னு சொன்னான்.” என்றாள் பிரகதி.
“அவன் என்ன சைகோவா.? கட்டிக்க போறவனே கல்யாணம் வேண்டாம்னு சொல்லறான். இவன் எதுக்கு துள்ளறான். பிரகதி விதுரனால சசி சௌமி என்று புது பிரச்சனை ஆரம்பிக்குது. தயவு செய்து விதுரனை கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம்னு சொல்லு. நாங்க குழந்தை பிறந்த நாளுக்கு தான் வந்தோம். கல்யாண பேச்சை ஆமோதிக்க இல்லை.” என்றான். அவனின் கொதிகலன் வார்த்தைகளை கேட்டு மௌவுனமானாள்.
அவளுக்கு தெரியும் இதே இன்பா விதுரன் பார்வையை எதிர்க் கொண்டு கருத்தை முன்மொழிவானா? நிச்சயம் மாட்டான் என்றது அவள் மனம்.
“சாரி இன்பா அஞ்சலி வரலை?” என்று கேட்டாள்.
“குழந்தை வச்சிட்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். மூனு மாசம் கழித்து தான் எங்க வீட்டு வழக்கமா பெயர் வைப்போம். அதுவரை வெளியே வரமாட்டா” என்றான்.
கேக் வெட்டும் நிகழ்வு தயாராகி கொண்டிருக்க, விக்னேஷ் அவனது மனைவி விசித்ராவை அழைத்து வந்தான். கூடவே அவனின் இரண்டு வயது மகள் மஹா என்பவளை அழைத்து வந்தான்.
பெயரே கூறிடும் விதுரனின் அன்னை மீது உள்ள பற்றால் வைத்திருக்கின்றான். விதுரன் தாய் மகாலட்சுமியின் அப்பா வீட்டில் வேலை செய்த சின்னசாமியின் மஞ்சுளா அவர்களின் மகன் விக்னேஷ். அப்பா வீட்டின் விஸ்வாசம் கண்டு விக்னேஷை பெங்களூரில் படிக்க வைத்தார் மஹா. கூடவே விதுரனின் வலது கையாக பதவியும் அடைந்தான்.
விதுரனின் இரண்டு பக்கமும் நம்பிக்கையான ஆட்கள் முக்கியம். ஒரு சாம்ராஜியத்தின் வீழ்ச்சி துரோகத்தினால் தான். அப்படிபட்ட துரோகம் செய்வோர் அருகே இருப்பது வழக்கம்.
விதுரனுக்கு துரோகி யார் தன்னலத்தை நாடும் உள்ளமெது என்பதை நன்கறிவான். அதனாலோ என்னவோ இவ்விருவரை சரியாக நியமித்தான்.
பிரகதி விக்னேஷ் குடும்பம், மற்றும் தர்மா மைதிலி காருண்யா என்ற சிறு கூடு, கண்டவள் ஆச்சர்யாவை அங்கு எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரும் இருந்தார்.
பிரகதி தானாக “எப்படியிருக்கிங்க அங்கிள்?” என்றாள்.
“ரொம்ப நல்லாயிருக்கேன் மா. விதுரனோட நலிந்து போன என் தொழிலை புடுங்கி விருட்சகமா மாற்றி என்னிடமே திருப்பி தந்துட்டான். கடவுள் துணையிருக்கு மா அவனுக்கு” என்று பேசினார்.
பிரகதி புரியாது விழித்தாளும் விதுரன் திரும்ப இந்த மனிதரை வாழ வைக்க வழி கொடுத்திருக்கின்றான் என்பது வரை புரியவும் மகிழ்ந்தாள்.
கேக் கட்டிங் நேரம் வர அனைவரும் கூடினார்கள்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Pragathi ipo tha inum alaga purinjikitta vithurana
Super. Inba feel is also important one. Intresting
Super😍😍