துஷ்யந்தா-50
இன்பாவின் கண்கள் நொடிக்கு ஒரு முறை விதுரனை கண்டு அச்சத்தில் மிரண்டது.
விதுரனுக்கு தன்னை கண்டு அச்சத்தில் நடுங்கும் இன்பாவை கண்டு எரிச்சலே மண்டியது.
தர்மாவை அழைத்து “அவனை உட்கார சொல்லுடா. என்னை பார்த்து பார்த்து எழுந்து நிற்கறான். நான் என்ன அரக்கனா பூதமா. இல்லை அவன் கண்ணுக்கு அப்படி தான் தெரியுறேனா?.” என்று அதே எரிச்சல் மண்டிய குரலில் கூறினான்.
அடுத்த நொடி அலாவுதின் பூதமாக தர்மா இன்பா அருகே சென்றவன், “சும்மா சும்மா நிற்காம உட்காறறியா. விதுரன் சாருக்கு எரிச்சலாகுது” என்றான்.
இன்பாவோ பாவமாக முகம் வைத்து “டேய் இது உங்களுக்கே அடுக்குமா டா. இப்ப தான் இரண்டு நிமிஷத்துக்கு முன்ன விக்னேஷ் வந்து என்ன உட்கார்ந்திருக்க. எங்க விதுரன் சார் உன்னிடம் மன்னிப்பு கேட்கணுமா? கோமதி அம்மாவிடம் என்னடா பேசினனு முறைச்சிட்டு, சார் எதிர்க்க உட்கார்ந்த அவ்ளோ தான்னு சொல்லி மிரட்டிட்டு போறான். இப்ப நீ வந்து என்ன உட்காருனு சொல்லற.. நான் என்ன தான் பண்ணறது” என்று விட்டால் அழுதிடும் நிலையில் கூறினான்.
தர்மா அவன் தலையில் அடித்து கொள்ள இன்பா அதற்கே இரண்டடி பின் நகர்ந்தான்.
“என் தலையில தானே அடிச்சேன். நீ என்ன டூ ஸ்டெப் பேக்ல ரிவர்ஸ் போற. இதப்பார் சும்மா ஓவர் ஆக்டிங் கொடுத்த தூக்கி போட்டு மிதிச்சிடுவேன். சசிதரன் சாருக்கு மச்சான் ஆகப்போறியேனு சும்மா விடறேன். போய் உட்காரு நீ பாட்டுக்கு உன் தங்கை மேரேஜுக்கு வந்திருக்க அதை மட்டும் பாரு. எங்க விதுரன் சாரை சைட் அடிக்க பிரகதி மேம் வருவாங்க. நீ அடிக்கடி பார்க்கறது இரிட்டேட்டா இருக்கு. புரியுதா…?” என்று கேட்டதும் தலையசைத்த ஆடாக புரிந்தது என்றான்.
இவனை விட்டு நகர்ந்தால் விதுரன் சார் பக்கம் கண் பதித்து அவருக்கு டென்ஷன் ஏற்படுத்துவானென தர்மா தென்னமரமாக அங்கே நின்று கொண்டு வேலியாக மாறினான்.
கோமதி விஜயலட்சுமியிடம் பேசி கிளம்பிய பின் சௌமியை அழைத்து திருமணம் ஆனா நீ சந்தோஷப்படுவியா? இல்லை அவரோட குறை எப்பவாது சொல்லிட்டு இப்படி அம்மா கட்டி கொடுத்திட்டாங்களேனு வருந்துவியா” என்றதும் சௌமியாவிடம் அதே மௌனம்.
“சௌமியா எனக்காக யோசிக்கறியா? அதனால வேண்டாம்னு பார்க்கறியா? என்னை விடு. உனக்கு சசிதரனை பிடிச்சிருக்கா?” என்ற் இன்பா கேட்டதும் சௌமிக்கு அப்பொழுதும் தயக்கம் இருந்தது.
“இங்க பாரு சௌமி உங்கண்ணா மனசுல பீல் பண்ணுவாருனு நினைக்காதே. ஆல்ரெடி அவர் சசிதரனோட நிற்க முடியலை உட்கார முடியலைனு வர்ற வரனை அவரோட தான் கம்பேர் பண்ணிட்டு இருக்கார். நீ உன் மனசுல பட்டதை சொல்லு” என்றதும் சௌமியா வாய் திறந்தாள்.
“இப்ப அவரை ஏற்றுக் கொண்ட என்னோட குறையால அவரை ஏற்றுக்கிட்ட மாதிரி ஆகிடுமானு கவலையா இருக்கு. அப்படியில்லைனா அளவுக்கு மீறின இடத்துல மேரேஜானு ஒரு பயம் வருது.
இதை இரண்டை மீறி சசிதரன் சார். அவரை சாரா பார்த்துட்டு என்னால திருமணத்தை யோசிக்க தயக்கமா தான் இருக்கு.” என்று கூறினாள்.
அஞ்சலியோ “இது தலையை சுத்தி பிடிச்சிருக்கு என்பதை தான் குறிக்குது.
ஆனா பயம், தயக்கம், கவலை எல்லாம் இருக்கு. ஏன் உங்கண்ணாவை திருமணம் செய்யறப்ப எனக்கும் இதெல்லாம் இருந்தது.
அவர் யாரோ ஒரு பொண்ணை விரும்பறாறே என்னை மனைவியா ஏற்றுப்பாரா என்ற தயக்கம், ஏற்கனவே ஒருத்தி மனசுல இருந்தா அவளோட இடத்தை நாம பிடிப்போமா என்ற பயம், சப்போஸ் உங்கண்ணாவை திருமணமாகியும் என்னை அவருக்கு பிடிக்கலைனா என்ற கவலை இதெல்லாம் எனக்கும் இருந்தது. இப்ப பாரு. கையில குழந்தையை வச்சிட்டு இருக்கேன்.” என்றதும் சௌமிக்கு இந்த குழந்தை என்னால சசிக்கு தரயியலாதே என்ற வருத்தம் பெருகியது.
அவளின் வருத்தம் அஞ்சலிக்கு புரிய “சாரி… உனக்கு குழந்தையை… இப்ப அதை விடு. இன்பா மனசுல நான் இடம் பிடிச்ச மாதிரி உன்னால பிடிக்க முடியாதா. இரண்டு பேர் திருமணத்தில சேர்ந்தா குழந்தை தான் முக்கியம் என்பது இல்லை. இரண்டு மனசு சேர்ந்தாலே போதும். உனக்கு ஓகேனா மட்டும் சொல்லு” என்றதும் சௌமியா மனம் சசிதரனையும் யுகனையும் ஒரு சேர மனக்கண்ணில் வைத்து பார்த்தது.
தலையாட்டி சம்மதமாக நின்றாள். அடுத்த நாளே இன்பா விதுரன் வீட்டில் வந்து “சௌமியாவுக்கு கல்யாணம் பண்ண சம்மதமாம்” என்றான்.
விதுரன் பதிலுக்கு எதுவும் கூறவில்லை.
இன்பாவோ ‘நானா வந்து சௌமி-சசி மேரேஜ்க்கு சம்மதிப்பேன் சொன்னான். அதை மாதிரி பண்ணிட்டானே’ என்று மிரண்டே பார்த்து நின்றான்.
“பிரகதி உன் பிரெண்ட் இன்பாவை சசிதரன் வீட்டுக்கு அழைச்சிட்டு போய் கையோட திருமண தேதியை அறிவிக்க சொல்லு.” என்று புறப்பட்டான்.
அடுத்த நொடி பிரகதி தன்வீயை தூக்கி கொண்டு இன்பாவை அழைத்து சசிதரன் வீட்டுக்கு கதிர் காரில் செல்ல, மற்றொரு காரில் தர்மா விஜயலட்சுமி மற்றும் அஞ்சலி அவள் குழந்தை மஞ்சரி என்று சசிதரன் வீட்டுக்கு வந்து கோமதியிடம் பேசி நாள் குறித்தனர்.
விதுரன் மட்டும் பிரகதியை அழைத்து சௌமியாவிடம் திருமண மேடை ஏறும் முன் “உன்னை கஷ்டப்படுத்தி இங்க யாரும் வாழ வைக்கலை. நீ சசிதரனுக்கு மனைவியா வாழ்ந்தாலே போதும். யுகனை பார்த்துக்க கேர்டேக்கர் கூட வச்சிப்போம். இதை ஏன் சொல்லறேன்னா அவனை மனசுல வச்சிட்டு உறுத்திட்டே மணமேடைக்கு வரவேண்டாம். பீ ப்ரி.” என்றான்.
பிரகதியோ என்னயிது இப்படி பேசுகின்றான் என்று பதட்டம் கொண்டு, “என்ன விதுரா பேசற.” என்று அடக்கினாள்.
“இது பேக்ட் பிரகதி. முதல்லயே யுகன் வேண்டாம்னா கூட பிரிப்பேர் ஆகிடலாம். ஆனா பழகிட்டு பிரிய மனம் கஷ்டப்படும் பாரு. இது ஸ்டெயிட் பார்வட் தான் பட் ட்ரூவா இருக்கும்” என்றான்.
பிரகதிக்கு அவனின் இந்த முகம் தான் அடுத்தவர்களிடம் தீயவனாய் காட்டுகிறது. ஆனால் அவன் கூறும் அர்த்தம் அறிந்தால் அவன் சரியாக சொல்வது விளங்கும்.
“சார் எனக்கு கல் நெஞ்சம் இல்லை. உண்மையை சொல்லப் போனா எனக்கு கிடைக்கவே கிடைக்காது என்ற தாய்மையை ‘அம்மா’ என்ற அழைப்பை திருமணத்துக்கு முன்னவே யுகன் கொடுக்கறான். அப்படின்னா இந்த திருமணத்துல நான் சந்தோஷப்படுவேன்.” என்றாள் சௌமியா.
அதன் பிறகே இதோ இன்று பிரகதி சௌமியாவை அழைத்து வர மேடை காத்திருந்தது.
சசிதரன் மேடையில் அக்கினியின் முன் கண் பதித்து அமர்ந்திருந்த தோரணை சௌமிக்கு ரசிக்கும் படியாக இருக்க, ஒருபக்கம் பிரகதி மறுபக்கம் அஞ்சலி என்ற இருவரின் வழிநடத்தலில் சசிதரன் அருகே அமர்ந்தான். என்னவொரு குறை சௌளியின் கூடபிறந்த அக்காவுக்கு சசியை மணப்பதில் பிடிக்கவில்லை. தான் கூறியும் திருமணம் செய்கின்றாரேயென கோபத்தில் வரவில்லை.
இன்பாவுக்கு அவளை சமாதானம் படுத்தி வரவைக்க பேசியும் கடைசி வரை வரவில்லை. விஜயலட்சுமியோ “வரலைனா விடுடா. சொந்தம் எங்க போகப் போகுது அவளோட எண்ணம் இரண்டாதாரமானு யோசிக்கிறா. பின்னால புரிஞ்சிப்பா” என்று விட்டுவிட்டார்.
யுகனோ தன்வீயோடு மேடையில் மகிழ்ச்சியோடு தந்தை கோர்ட் போன்றே போட்டு அசத்தலாக நின்றான். பரமகுரு அவனை மெச்சுதலாக தூக்கி முத்தமிட்டு விழாவை மனநிறைவோடு கண்டார்.
“நான் கூட என்னடா இது பரமகுருவை யுகனோட சேர்த்து வச்சி வேடிக்கை பண்ணறியே உனக்கு அறிவேயில்லைனு நினைச்சேன். பட் இன்னிக்கு மேரேஜில இந்த கோலத்தை பார்த்தா. மன்னிப்பு கொடுத்தது தப்பில்லைனு படுது.” என்று கூறி பிரகதி தோளில் கை போட்டு தலையை முட்டு கொடுத்து இழுத்தான்.
‘என்ன கீதா தான் ரொம்ப பண்ணுது. அது வராம இருந்தாலே நல்லது தான்’ என்று மனதிலேயே நினைத்து கொண்டான். அவருக்கு பெயரளவு கூட மரியாதை தர அவன் மனம் ஒப்பவில்லை.
பிரகதியோ, “விதுர் மேடையில இருக்கோம்” என்று நாணி தள்ளி சென்றாள்.
சசிதரன் மாங்கல்யம் அணிவித்து சௌமியை மனைவியாக மாறி விதுரன் போடும் அட்சதையை கண்டு சசிதரன் நிறைவாய் உணர்ந்தான்.
அடுத்து போட்டோ எடுத்து முடிக்க, கோமதி பால் பழம் என்று நீட்டினார். சௌமியா தயங்க விதுரன் “ஏன் சித்தி இதெல்லாம் திணறுறாங்க பாருங்க” என்றான்.
“சும்மா இரு டா. அவளும் இந்த சடங்கெல்லாம் பண்ணலை. கோபத்துல வீட்டுக்கு வந்தா. சௌமியா அப்படியிருக்க வேண்டாம். சடங்கு சம்மிராதயம் எல்லாம் பண்ணட்டும்.” என்றதும் விதுரன் சௌமியாவை பார்க்க சசிதரன் வாயே திறக்கவில்லை.
“பரவாயில்லை சார் அவங்க விருப்பப்படி விடுங்க” என்றாள் சௌமியா.
“இன்னும் என்ன சார். கொழுந்தனாரை பெயர் சொல்லிடுமா. சசியை விட நாலு மாசம் சின்னவன்” என்று கோமதி கூறவும் “என்ன நாரு?” என்று விழிபிதுங்கினான் விதுரன்.
“விதுரா… அண்ணி முறை” என்று கண்டித்தார் கோமதி.
“சௌமியாவை மியானா கூப்பிடுற. அண்ணினு கூப்பிடணுமாம் டெவில் கிங். எங்க கூப்பிடு அண்ணினு..” என்று வயிற்றை பிடித்து மென்குரலில் பிரகதி சீண்டினாள்.
“சித்தி நீங்க சடங்கை பார்க்கணும்னு சொன்னிங்களே. நான் போய் ஏற்பாடு பண்ணறேன். நாலு மாசம் கேப்பெல்லாம் அவன் அண்ணன் ஆகிடுவானா. இந்த மியா அண்ணியா. நான் வயசை வச்சி பிரகதிக்கு தங்கையினு இல்லை நினைச்சேன்.” என்று புலம்பி ஓடினான்.
சௌமியோ சசிதரன் சிரிப்பானா பார்ப்பானா எதற்கேனும் வாய் திறப்பானா என்று காத்திருந்தாள்.
அவனோ மிகவும் அமைதியாக செய்ய சொல்வதை செய்தான்.
பால் பழம் உண்ணும் நேரம் மட்டும் “பஸ்ட் அ..அவங்களுக்கு கொடுங்க” என்று அஞ்சலியிடம் கூறினான்.
இரவு வரும் வரை அதே போன்ற மௌனத்தை பிரதிபலித்து அமைதியானான்.
இரவு யுகன் கோமதியோடு உறங்க, சசிதரனோ சௌமியா வரவுக்கு காத்திருந்தான்.
எப்படியும் தன்னால் திக்கி திக்கி பேசுவதற்கு பதிலாக வேகமாக போனில் ஆப்பில் டைப் செய்தான்.
சௌமியா வந்ததும் நீட்டி தன் மனநிலையை கூறிட, ஆனால் நடந்தது என்னவோ வந்தவள் அவனிடம், “நமக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். நேரமெடுத்துப்போம்… நீங்க கஷ்டப்பட்டு திக்கி பேசினாலும் பொறுமையா கேட்க நான் ரெடி. பட் இந்த ஆப் மூலமா டைப் பண்ணி அதை ஒலியா பதிவு செய்து வாய்ஸா பேச வேண்டாம்.
நீங்க என்னிடம் திக்கி பேசினாலும் திணறி பேசினாலும் நீங்க பேசினா போதும். இந்த உலகம் உடனே முழ்கிடதே. நாம பொறுமையா பேசி புரிந்துக்கலாம் என்ன அவசரம். அப்பறம் விதுரன் அத்தான் யுகனை பார்த்துக்க கேர்டேக்கரை வச்சிக்கலாம்னு கூட சொன்னார். வேண்டாம்… எனக்கு யுகன் மகனா வேண்டும். இரண்டரை வயது தான் அம்மானு கூப்பிட்டு தானா வர்ற அன்பு எப்படியும் நிலைக்கும். நான் நம்பறேன். நீங்களும் நம்பினா என்னை யுகனுக்கு அம்மாவா பாருங்க. அம்மாவா பார்த்தாலே மனைவியா ஏற்றுக்க ஆரம்பிப்பிங்க” என்று பேசினாள். அவள் புறம் போனை நீட்டி கேட்க கூற வந்தவன் அவளின் பேச்சில் அப்படியே ஸ்தம்பிக்க அவள் அந்த போனை வாங்கி மேஜையில் வைத்தாள்.
“குட் நைட்” என்றாள் சௌமியா.
கண்ணாடியில் மென்முறுவலை வெளிப்படுத்தியவன் அருகே படுத்து கொண்டான்.
இங்கு விதுரன் மொட்டை மாடி டெரசில் தன்வீக்கும் ஒரு தனி மெத்தை அமைத்து குளிராமல் தடுக்க தடுப்பு எழுப்பி இருந்தான்.
தன்வீ அதில் உறங்கிக் கொண்டிருக்க, விதுரன் லேப்டாப்பில் தலையை நுழைத்து நோ… நாட் லைக், திஸ் ஓகே.. பட்… அனதர் என்று எதையோ தேடுவதை கண்டு பிரகதி கையில் சூடான பாலோடு வந்தவள் இடையில் கை வைத்து நின்றாள்.
“ஹலோ மிஸ்டர் டெவில் கிங். நான் வந்துட்டேன் தெரியுமா தெரியாதா. உங்க ஆபிஸ் வேலையை இங்க கொண்டு வரக்கூடாதுனு ஒப்பந்தத்துல இருக்கு.” என்றாள்.
“நான் ஒப்பந்தம் எதுவும் புதுசா போடலையே… இதென்ன புது கதை ஆரம்பிக்கற?” என்றவன் பார்வை லேப்டாப்பிலேயே இருந்தது. உதட்டை கடித்து தேடுதலில் மட்டும் இருந்தவன் கைகள் பாலை கேட்டு கைகள் நீண்டது.
பிரகதியோ பாலை தராமல் அவன் கையில் இதமான சூட்டை வைத்து எடுக்க, “ஸ்ஆ… அம்மா.. டெவில் குயின். சூடா வைக்கிற ஏன்டி” என்று வலது கையை ஊதி தேய்த்தான்.
“பின்ன நான் வந்தும் லேப்டாப்பில இருந்து கண்ணை எடுக்கலை. நான் சேரி கட்டியிருக்கேன். அழகா பொம்மை மாதிரி வந்தா நீ அங்க என்ன பண்ணற.” என்றாள்.
“ம்ம்… நம்ம விஷயமா தான். லாஸ்ட் டைம் ஹனிமூன் போகலை. இப்ப போகணும். எந்த பிளேஸ் பெஸ்ட்டா இருக்கும்னு தேடறேன். நீ ஒரு பிளேஸ் சொல்லேன்.” என்றான்.
வெட்கம் பிடுங்கி தின்று அவன் முகம் காண நாணி அவன் முதுகில் சாய்ந்தாள்.
அவனோ சற்று தள்ளி முடிக்க பிரகதி அவன் மடியில் விழுந்தாள்.
“அவளை மடியில் வைத்து கொண்டு மடிகணினியில் தேடினான்.
சட்டை பொத்தானை திருகியபடி, “இப்ப என்ன அவசரம்.” என்று கேட்டு வைத்தாள்.
“ம்… என் அவசரம் எனக்கு. என்னால உன் வயிறு பெரிசா பலூன் மாதிரி ஆனதை பார்க்க முடியலை.
தன்வீயை வயிற்றுல இருந்தப்ப அவளோட மூவ்மெண்ட்ஸ் என்னால உணர முடியலை.
மாசம் மாசம் செக்கப் கூட்டிட்டு போய் நம்ம குட்டி உயிர் எவ்ளோ பெரிசா வளருதுனு பார்க்க முடியலை.
அதெல்லாம் விட உன்னில் இருந்து என் உயிர் முதல் முதல்லா வெளிவர்றப்ப, லேபர் வார்டுல நான் இருக்கணும்.
என்னோட குட்டி ஜீவனை உலகத்துக்கு வர்றப்ப கைல தாங்கணும்.
அது உடல் முழுக்க இரத்தத்தோட வீறிட்டு அழறப்ப நான் சந்தோஷமா சிரிக்கணும்.
ஆமா சிரிக்கணும்.
அப்ப மட்டும் தானே என் குழந்தை அழுது நான் சிரிக்க முடியும் அதுக்கு பிறகு நான் அழவிடமாட்டேன்.” என்றவனின் வார்த்தைகள் பிரகதியை கொன்றது. அவன் சட்டையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
“சாரி டெவில்கிங்… தாய்மை என்பது பெண்ணுக்கு தான் பல இன்பமான விஷயத்தை மீட்டு கொடுக்கும்னு நினைச்சேன். இந்தளவு ஆசை கனவோட நீ இருப்பன்னு புரிந்தா நான் விட்டு போயிருக்க மாட்டேன்.” என்று கரைந்தாள்.
“பெரும்பாலும் என் இயல்பை நான் யாரிடமும் வெளிப்படுத்தி, நான் இப்படி தான்னு எக்ஸ்பிளைன் பண்ணறவன் இல்லை பிரகதி. அதனாலையோ என்னவோ நான் நல்லவன் உனக்கு தான் கெட்டவனா தெரியறேன்னு என்னால விளக்க முடியலை. ஏன் அப்படி விளக்கினாலும் அது அசிங்கமா தான் இருக்கும். தானா தெரிந்து புரிந்து வாழறது தானே திருமணம்.
இருமனம் சங்கமிக்கறது தானே திருமணம். என்ன எல்லாரும் அதை ஓப்புதலோட நடக்கற திருமணத்தை நினைச்சிக்கிறாங்க. அதுயில்லை. திருமண வாழ்க்கையில இருமனமா மாறி வாழறது தான். என்ன அதுக்கு கொஞ்சம் கால அவகாசம் இருக்கும்.
பெற்றோர் பார்த்து முடிக்கிற திருமணமாவே இருந்தாலும் நேரம் பார்த்து ஒன்னு சேரலாம். ஆனா விருப்பு வெறுப்பு எல்லாம் ஒரே நாளில் பேசி தெரிந்துக்கிட்டோம். இனி அவனை(ளை) பற்றி டாப் டூ பாட்டம் தெரியும்னு ஜம்பமா சொல்ல முடியுமா.
சின்ன சின்ன நிகழ்ச்சில, அனுபவத்துல, சூழ்நிலை சந்தர்ப்பத்துல தான் ஒரு கணவன் மனைவி(காதலர்கள்) புரிந்து நடப்பாங்க. அதுக்கு ஒரு வருஷமாவது நேரம் வேண்டாமா.
அப்படி பார்த்தா முதல்ல சங்கமிக்கறது மனசை விட உடல் தான். அது ஏன் தெரியுமா?” என்று கேட்க கன்னம் தாண்டிய கண்ணீரை அவன் பார்க்கவும் துடைத்து விட்டு இல்லையென தலையசைத்தாள்.
“உடல் ஒன்றுபட்டாலே… இவன்(ள்) எனக்கானவன்(ள்) என்னை ஆள ஆரம்பிச்சிட்டான்(ள்)னு ஒரு உரிமை தானா இருவர் மனதிலும் வந்துடும். பிறகு இந்த மனசாட்சியிடம் நாம வெட்கம் மானம் இல்லாம எப்படி நம்ம கேரக்டரை பிரதிபலிக்கறோமோ, அப்படியே நம்ம துணையிடம் நம்ம இயல்பை காட்டுவோம்.
சாதாரண திருமணத்திலேயே இத்தனை இருக்கறப்ப, நம்ம மேரேஜ்… நான் விளக்க முடியுமா?
இப்ப பாரு உனக்கு முதல்ல என் கண்ணியம் கண்ணில் பட்டுச்சு. உங்கம்மா காலை வெட்டியது நான் இல்லை. அது உடல்நிலைனு தானா புரிந்துடுச்சு. தீபிகா கெட்டவளில்லைனு சசி மூலமா தெரிந்தது. மைதிலி கர்ப்பம் அழிச்சது கதிர் அண்ணாவுக்காகனு தெரிஞ்சுக்கிட்ட, தேவ் நாக்கை துண்டாக்கியது அவனை கொலை செய்ததற்கு காரணமிருக்கும் நீயா இப்ப புரிஞ்சிக்கிட்ட, நானா உட்கார்ந்து சொன்ன காது கொடுத்து கேட்டிருப்பியா.
இப்ப பாரு என்னை விட என்னை அதிகமா லவ் பண்ணி என்னையே சுத்தி வட்டமிட்டுட்டு இருக்க. எனக்கு இந்த காதலி பிரகதி தான் வேண்டும். டெவில் குயின் ஐ லவ் யூடி. என்ன ஸ்வீட் சாப்பிட ஆரம்பிக்கலாமா?” என்று உதட்டை நாவல் ஈரப்படுத்தி நெருங்க ஆரம்பித்தான். பிரகதியோ ஆனந்த கண்ணீரை வடித்தாள்.
“ஓஎம்ஜி அழறியா… டெவில் குயின் அதுக்கு தான் ஹனிமூன் பிளான் போடறேன். என் லைப்ல நான் எதையும் மிஸ் பண்ணறதா இல்லை. என் பிரகதி வாந்தி எடுத்தா ஓடி வந்து கையில வாங்கணும். என்று கூற பிரகதி அழுதவள் கண்ணை துடைத்து சிரிக்க ஆரம்பித்தாள்.” இது போதுமே இந்த துஷ்யந்தனுக்கு சகுந்தலாவை கொள்ளையடிக்க முத்தமிட ஆரம்பித்தான்.
முத்தத்தின் ஆரம்பம் ஒரு முடிவோடு முடிவடையாத ஆரம்பத்தை தேடும் என்பது விதுரநீதி அறியாததா.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
துஷ்யந்தா… ஏ… துஷ்யந்தா…
Epilogue
தன்வீ கோபமாக முகத்தை தூக்கி வைத்து வலது பக்கத்து இருக்கையில் இருந்த பையனின் பாக்ஸை திறந்து பைக் போன்றதொரு ‘அழிப்பானை’ எடுத்து அவளின் இடது பக்கமிருந்த பையனிடம் கொடுத்து முடித்தாள்.
வலது பக்கமிருந்த கிருஷ் என்பவனை அவள் தந்தை விதுரனை போன்று ஒரு குத்தும் விட்டாள். அவன் அழ ஆரம்பித்தான். பற்றாதகுறைக்கு வகுப்பு ஆசிரியர் தன்வீ அடிப்பதை பார்த்திட, அவளை அழைத்து கண்டித்து தனியாக நிற்க வைத்தார்.
பள்ளியிலிருந்து போன் பறந்து பிரகதியை எட்டியது. பிரகதி கதிர் அண்ணாவின் வண்டியில் அவசரமாக ஏறினாள்.
“கிளாஸ்ல ஒரு பீரியட் தான் முடிஞ்சிருக்கும் அதுக்குள்ள கூப்பிடறாங்க. கிளாஸ் டிஸ்பெர்ஸல் டைம் இன்னும் இருக்கு. என்ன பண்ணி தொலைச்சாளோ. கடவுளே.” என்று மேல் முச்சு கீழ் மூச்சு வாங்க பிரகதி புலம்பியபடி இருந்தாள்.
“பாப்பாவை எதுக்கு மா திட்டறிங்க. அதுக்கு ஸ்கூலை பார்த்து மிரண்டு இருக்கும். ப்ரீ.கே.ஜி போகாம டேரக்டா எல்.கே.ஜி போனதால பயந்து உங்களை தேடியிருப்பா மா நீங்க இந்த மாதிரி நேரத்துல டென்ஷன் ஆகாதிங்க” என்று கதிர் கூறினார்.
“யாரு அவளா… பயந்து மிரண்டு… அடப்போங்கன்னா… ப்ரீ.கே.ஜி சேர்ந்த மூன்றாவது நாளே மேம் திட்ட உட்கார்ந்து இருந்த சேரை தூக்கி அடிக்க போயிட்டா. அதுக்கு பயந்து தான் ப்ரீ.கே.ஜி சேர்க்காம வீட்ல ஒரு மேமை கூப்பிட்டு சொல்லி தர ஆரம்பிச்சது. இப்ப யாரை அடிச்சாளோ. என்ன பஞ்சாயத்தோ” என்று நிறை மாத முழுநிலவாக பள்ளி வந்ததும் இறங்கினாள்.
கீழ் தளத்திலேயை பள்ளி முதல்வர் அறை இருந்தது. மேலும் தன்வீயும் அவளின் வகுப்பு ஆசிரியரும் இருக்க, மூச்சு வாங்க வந்தாள்.
“சாரி மேம் இந்த நிலையில் உங்களை வரவழைச்சதுக்கு” என்று மன்னிப்பு வேண்டினார்.
“பரவாயில்லை.. என்னாச்சு தன்வீ பற்றி பேசணும்னு” என்று பிரகதி கேட்டபடி ப்ரின்சிபல் அறையில் அவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
“மேம்.. கிளாஸ்ல என் கண் எதிர்ல ஒரு பையனை அடிச்சிட்டா. இங்க பாருங்க” என்று பக்கத்து அறையில் படுத்திருந்த ஒரு சிறுவனை காட்டினார் வகுப்பு ஆசிரியை.
“ஓஎம்ஜி… என்ன இது கன்னத்துல வீக்கம். த..தன்வீயா அடிச்சா?” என்று தயங்கி கேட்டாள்.
“ஆமா மேம். நேர்ல பார்க்கலைனா நான் கூட நம்பி இருக்க மாட்டேன். ஏதோ ஏரேஸர் எடுத்துட்டானு அடிச்சதா சொன்னா. என்னனாலும் எங்களிடம் சொல்லணும். அவங்க மம்மி வந்தா பிரச்சனை ஆகும். அவங்களுக்கும் போன் பண்ணிட்டோம். இன்னும் வரலை. நீங்களே யோசிங்க இப்படி வீக்கத்தோட இருக்கற பையனை அவங்க அம்மா பார்த்தா என்னாகும்” என்று தணிவாக கேட்டார்.
“கதிர் அண்ணா.. ஐஸ் கியூப் கிடைக்குமா?” என்றதும் அவர் அதனை வாங்க ஓடினார்.
அந்த சிறுவனை மடியில் கிடத்தி கண்ணை துடைத்து விட்டு, “தன்வீ என்ன பண்ணி வச்சிருக்க. கண்ணுல பட்டுச்சினா என்ன ஆகும்” என்று அதட்டினாள்.
“அதுக்கு தான் மம்மி கன்னத்துல அடிச்சேன்.” என்றாள்.
‘திமிர பாரு அப்படியே’ என்று மனதில் எண்ணியவள் “எதுக்கு அடிச்ச. மேமிடம் சொல்ல வேண்டியது தானே” என்று திட்டவும் தன்வீயோ, “மம்மி டூ டைம்ஸ் என் பிரெண்ட் ரிஷி என் திங்க்ஸ் சிலது காணாம போகுதுனு சொன்னான். மேம் எங்கயாவது தொலைச்சிருப்பனு கண்டுக்கலை. முதல்ல என் ஏரேஸர் மிஸ்ஸிங் மேம்னு கண்டுபிடிச்சி தர சொன்னான். மேம் தலைவலிக்கு இதே கம்பிளைன்னா… பென்சில் மிஸ்லிங் ஏரேசர் மிஸ்ஸிங்னு போய் உட்காருனு சொன்னாங்க. எங்கயாவது மிஸ் பண்ண வேண்டியதுனு சொன்னாங்க.
என் பிரெண்ட் ரிஷி எரேஸர் தருண் பேக்ல இருந்தது. கொடுக்க சொன்னா கொடுக்கலை. அதனால என் ஸ்டைலில் நானே எடுத்து கொடுத்துட்டு இவனுக்கு கொடுக்க வேண்டிய ஜஸ்டிஸை கொடுத்தேன்.
நான் ஒன்னும் தப்பு பண்ணலை” என்று கூற கதிர் கைதட்டி மகிழ, பிரகதியோ “அண்ணா.. என்னயிது. நான் கேட்ட ஐஸ் கியூப் எங்க” என்றதும் பள்ளிக்கு எதிரே இருந்த ஸ்டேஷனரி கடையில் ஐஸ் கட்டி வாங்கி வந்ததை நீட்டினார்.
பிரகதி அதனை வாங்கி கன்னத்தில் ஒற்றி எடுத்தாள்.
பிரின்சிபாலோ வகுப்பாசிரியரை கண்டிக்க துவங்கியிருந்தார்.
பிரகதியோ தன்வீயை ஓரப்பார்வையில் மிரட்டியபடி தருணுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்க, சற்றே வீக்கம் மட்டுப்பட்டது.
அதே நேரம் தருண் பெற்றோர் வரவும் அவர்கள் மகனை கண்டு என்ன ஏதென விசாரிக்க, “நத்திங் மாம். எரேஸர் திருடிட்டேன். தன்வீ அடிச்சிட்டா.” என்றதும் அந்த தாய் மகனே திருடியதாக வாய் மொழியில் கேட்க அடிப்பட்டதை புறம் தள்ளி திருடியதற்கு திட்ட ஆரம்பித்தார்.
தருணோ தன்வீ கையிலிருந்த ஐஸ் கீரிம் கப்பை கண்டு ஏக்கமாய் பார்க்க, கதிர் கையிலிருந்த ஐஸ் கப்பை நீட்டினாள். கதிர் கண்ணில் ஒத்தடம் வைக்க ஐஸ்கட்டி வாங்கி வந்தவர் அப்படியே தன்வீக்கு ஐஸ் கப்பை வாங்கியிருந்தார்.
சண்டை போட்ட இருவருமே சமாதானம் அடைந்தனர்.
எதுக்கோ இன்னிக்கு வீட்டுக்கு போய் கன்னத்துல ஒத்தடம் கொடுங்க. யார் பொருளையும் எடுக்க கூடாதுனு தன்மையா சொல்லுங்க” என்று ப்ரின்சிப்பால் கூறி தருணை அனுப்பி வைத்தார்.
தன்வீ அருகே வந்தவர். பிரகதியிடம் “என்னயிருந்தாலும் அடிக்கற பழக்கம் வேண்டாமே. கொஞ்சம் தன்வீயிடம் எடுத்து புரிய வையுங்க. மற்றபடி உங்க குழந்தை ஸ்மார்ட் சைல்ட்” என்று அனுப்பி வைத்தார்.
காரில் ஏறிய தன்வீ ஐஸ்க்ரீம் சுவைக்க, பிரகதி ஏறியதிலிருந்து திட்டிக் கொண்டும் அறிவுரை சொல்வதையும் செவிமடுக்காமல், “கதிர் அங்கிள் அடுத்த முறை வெண்ணிலா வாங்குங்க.” என்று கட்டளையிட்டாள்.
“அடுத்த முறைனா?” என்று பிரகதி விழிக்க, “அடுத்து இதே மாதிரி ஆனா ஐஸ் ஒத்தடம் கொடுக்க ஐஸ்கட்டி வாங்கிட்டு எனக்கு வெண்ணிலா வாங்க சொன்னேன் மா.” என்றாள் தன்வீ.
“சரிங்க மா.” என்று கதிர் சந்தோஷமாய் கூறினார்.
“அப்படியே உங்கப்பா புத்தி டி. நீ நினைக்கிறது நடக்கணும். யார் சொல்லறதையும் காதுல வாங்கறதில்லை. உன்னைய..” என்று திட்டினாள்.
“குழந்தையை திட்டாதிங்க மா” என்று கதிர் ஆதரவு கூற, “எல்லாம் ஏத்தி விடுங்க அண்ணா. எனக்கு தான் வயித்துல புளியை கரைக்குது.” என்று வருந்தினாள்.
மதியம் உணவு உண்ண சரியாய் வீட்டுக்கு வந்த விதுரன் மகளின் செயலில் கொஞ்ச ஆரம்பித்தான்.
ஏற்கனவே கதிர் மூலமாக தர்மாவுக்கும், தர்மா மூலமாக விக்னேஷிற்கும் விதுரனுக்கு மகளின் செயல் வந்து சேர்ந்தது.
உணவை பரிமாறிக் கொண்டே, “எல்லாம் உன்னால தான் டா. அவளை பாரு பார்க்க அப்படியே குட்டி டெவிலா வந்து நிற்கறா.” என்றாள் பிரகதி.
“யாரோ என் குழந்தையை டெவில்னு சொல்லறனு ஒன்ஸ் அப் ஆன் எ டைம் சொன்னதா நினைவு.” என்று பிரகதி முன்பு தான் கூறியதற்கு திட்டியதை நினைவுப்படுத்தினான்.
“அப்ப தெரியலையே இப்படி உன்னையே உறிச்சி வந்து தொலைப்பானு. ஸப்பா…” என்று பசியில் சாப்பிட ஆரம்பித்தாள்.
தன்வீயோ காலாட்டி தந்தைக்கு ஊட்டி விட்டாள்.
“என்னோட பிளட் பின்ன எப்படியிருக்கும். சோ ஸ்வீட்டா தன்வீ.” என்று புகழ்ந்தான்.
“ஏத்தி விடாதே விதுரா. என்னதான் இவ செய்தது சரின்னாலும், அவ அந்த நேரம் சொல்லாம போனா அடிச்சதுக்கு இவ தான் திட்டு வாங்கியிருப்பா. இவ தான் கெட்டப் பெயர் வாங்கியிருப்பா. என்னவோ அந்த பையன் திருடியதை ஒத்துக்கிட்டான். இல்லைனா தன்வீ அடிச்சதுக்கு இவ தான் ஸ்கூல்ல கெட்ட பெயரோட திரிஞ்சியிருப்பா.” என்றான்.
“எக்ஸ்பிளைன் பண்ணினியா டா செல்லம்.” என்ற் தன்வீயை விதுரன் கேட்க, “ஆமா பா. இந்த பிரகதிக்கு விளக்கம் சொல்லி விளக்கம் சொல்லியே நம்ம லைப் டிராஜெடியா போகுது. தம்பி பிறந்ததும் முதல்ல அம்மாவிடமிருந்து அவனை நம்ம பக்கம் அழைச்சிடணும். இல்லை அவனும் மம்மி போல பேசிட்டு இருப்பான்.” என்றதும் பிரகதி அடிக்க துரத்த, அவளோ டைனிங் டேபிளில் கீழே குனிந்து நெளிந்து ஓடினாள்.
முழுநிலவு வயிற்றை பிடித்து தன்வீயை துரத்த ஆரம்பிக்க, விதுரன் அவளை நிறுத்தினாள்.
“எங்கயாவது ஒரு இடமா நிற்கறியா. ஓடிட்டே இருக்க.” என்று பூசணி வயிற்றை கண்டு அதில் கை வைத்தான்.
“என் கண்ணை பாரு. அங்க என்ன சொல்லி தர்ற. அப்பறம் இவனும் உன்னை மாதிரி வளரவா.” என்றதும் “ஆல்ரெடி அஸ்திவாரம் ஸ்ராங்கா என்னை மாதிரி போட்டாச்சு. உனக்கு வேண்டும்னா உன்னை மாதிரி மட்டும் மேனுபேக்சர் செய்து இரண்டு வருஷம் கழிச்சு ரெடி பண்ணலாம்” என்றவனை அடிக்க ஆரம்பித்தாள்.
“எப்ப பாரு என் டேடியை அடிக்கற என்று தன்வீ கோபமாய் நின்றாள்.
“அப்படிதான் அடிப்பேன் போ” என்றாள் சட்டமாய்.
“நீ அடிச்ச நான் கடிச்சிடுவேன்” என்றாள் தன்வீ.
தந்தையிடம் “டேடி வாங்க நாம மாடிக்கு போகலாம்.” என்றதும் அவன் அவளை அள்ளி அணைத்து தூக்கி முன்னே நடக்க பிரகதி இம்மியும் நகராமல் நின்றாள்.
விதுரன் திரும்பி “என்ன டி பிரச்சனை” என்றான்.
“என்னை தூக்கிட்டு போ. நடக்க முடியலை.” என்றாள்.
“நோ டேடி நீங்க என்னை தான் தூக்கணும்.” என்றாள் தன்வீ.
காதல் மனைவியும் மகளதிகாரமும் தூள் பறக்க, விதுரனோ இரண்டு பக்கமும் பார்த்து செய்வதறியாது விழித்தது இரண்டு நொடிகளே.
அடுத்த நொடி மகளை தூக்கி கழுத்தில் அமர வைத்து, கொண்டான். தன்வீ ‘வெவ்வவே’ காட்டி விதுரன் கழுத்தை கட்டி கொண்டு தலையில் “ஹீ இஸ் மை டேடி” என்றாள்.
பிரகதி முகம் சுருங்கும் முன் அவளை தன் இரு கைகளில் ஏந்தினான்.
“விதுரா… பயமா இருக்கு நான் பீல் பண்ணலை கீழ இறக்கு” என்றாள். அவளின் முகத்தை பொத்தி பயந்து போனாள்.
பத்து படிக்கெட்டு ஏறி நடந்தான் தன்வீயோ “ஹே..” என்று உற்சாகமாக கத்தினாள். பிரகதியோ முகத்தை மூடியவள் விரல்களின் இடுக்குகளில் மெதுவாய் பார்த்தாள்.
“ஐயய்யோ… டேய் விதுரா என்ன பண்ணற, பிரகதியை கீழ இறக்கி விடுடா.” என்று கோமதி குரலில் பிரகதி வெட்கம் கொண்டு “அச்சோ அத்தை வந்துயிருக்காங்க இறக்குங்க” என்று கூறினாள்.
பிரகதியை மெதுவாக இறக்கிவிட்டு மகளை தலைமேல் வைத்தபடியே வந்தான்.
“விதுரா… என்னயிது அவ ஒரு உயிர் இல்லை டா. இரண்டு உயிர். அவளை தூக்கிட்டு படியேறுற. பத்தாதற்கு குட்டி வாலு வேற.” என்றதும் மகளை சோபாவில் இறக்கினான்.
“சின்ன சின்ன ஆசை தானே சித்தி, ஏன் சசி இதெல்லாம் ட்ரை பண்ணலையா.” என்றான்.
“ஆமா இவனுக்கு நீ சொல்லி கொடுத்துட்டாலும். அதை அப்படியே செய்துடுவான்.” என்றதும் சசி அன்னையை முறைக்க சௌமியோ முறுவலித்தாள்.
“நீ.. நீ எ..ன்ன.. சிரிக்..கற. நா..ன் உன்..னை தூ..தூ…க்கியதே இல்லை. சுவிட்சர்..லந்து போனப்ப தூக்கினேன்ல.” என்று கூறவும் சௌமி கூடுதலாக முகம் சிவந்து, “அய்யோ சசி.. ஏன் இப்படி.” என்று வெட்கம் கொண்டாள்.
யுகனும் தன்வீயும் விளையாட சென்றதும் பெரியவர்கள் பேச அமர்ந்தார்கள்.
“அப்பறம் சித்தி மருமக வந்தப்பிறகு உங்களை அடிக்கடி இந்த பக்கம் ஆளையே காணோம்.” என்று வம்பிழுத்தான்.
“நான் அடிக்கடி வர்றேன். நீ தான் அந்த நேரம் இல்லை. உன்னை தான் பார்க்க முடியலை. இன்னிக்கு நீ இருக்கறப்ப வரணும்னு வந்தேன். அதுவும் இல்லாம சம்மந்திம்மா வர்றாங்க.” என்று கூறி முடிக்க வாசலில் கார் சத்தம் கேட்டது.
இன்பா அஞ்சலி மற்றும் விஜயலட்சுமியோடு இன்பாவின் பெரிய தங்கை வந்தார்.
வரவேற்று உபசரித்து முடிக்க “என்னோட பெரிய பொண்ணு சடங்காயிட்டா. பத்திரிக்கை அடிச்சி சொந்தப்பந்தத்தை கூப்பிடலாம்னு வந்தோம். நீங்க கண்டிப்பா வந்துடுங்க” என்று கும்பிட்டு கொடுத்தார்.
சௌமிக்கு இரண்டாம் தாரமாக சசிக்கு கொடுப்பது பிடிக்காமலும், அதிகப்படியான வசதி என்ற காரணத்திலும் திருமணத்துக்கு வரமாட்டேன் என்று பிடிவாதமாக முறுக்கி இருந்தவள்.
இன்றோ மகள் பெரியவள் ஆனதும் இன்பாவை தேடி வந்துவிட்டார். தாய் மாமா உறவு முக்கியமல்லவா.
விதுரனோ பத்திரிக்கையை படித்து விட்டு “முடிஞ்சா வர்றேன்.” என்று கூறினான்.
சசியோ சௌமியின் உறவில் மேலோட்டமாய் தான் பழகினான். அதை புரிந்து கொண்டு சௌமி அவனை வற்புறுத்தவில்லை.
அவனாக வர விருப்பம் கொள்ளுமிடம் செல்வது அவர்கள் வாடிக்கை.
அந்த நேரம் தர்மா விக்னேஷ் வந்தனர்.
போட்டி போட்டுக்கு கொண்டு சுதன் மருத்துவமனை வரவு செலவை விக்னேஷ் வந்து காட்ட, தர்மாவோ நம்ம ஆபிஸ் எம்பிளாயிக்கு இன்னிக்கு போனஸ் தரணும் சார்” என்று இவன் ஒருபக்கம் வந்தான்.
“இங்க பேச வராதிங்க மணி இரண்டுக்கு நானே பார்க்கறேன்னு சொன்னேன்.” என்று விதுரன் அனுப்ப முயன்றான்.
“மணி இரண்டாகிடுச்சு சார் நீங்க தன்வீ குட்டிக் கூட விளையாடினா நேரத்தை மறந்திடறிங்க” என்றான் தர்மா.
“வந்துட்டாங்க உங்க சூப்பர் பேன்ஸ். என்னை விட நீங்க அதிக நேரம் செலவிடறது இவங்க ரெண்டு பேரிடம் தான்” என்று பிரகதி கூற, “எங்க மேம் சசி சாரோட நீ போனு என்னை சார் விரட்டி விட்டுட்டார். இந்த விக்னேஷ் தான் கூடவே இருக்கான்” என்று அதிலும் சங்கடமாய் தர்மா உரைத்தான்.
இன்பாவுக்கே இப்படியெல்லாம் விஸ்வாசமா பாசமா இருக்கற உறவை இந்த அரக்கன் எப்படி அடைந்தானோ என்று முதலில் பார்த்த அதே பிரமித்த பிம்பமாகவே விதுரனை பார்த்தான். என்ன முன்பு வெறுப்பாக இருந்தது. இன்றோ அது ஈரெழுத்து மாறி விருப்பமாக மாறியிருந்தது.
- எபிலாக் முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
வாசித்தவர்கள் உங்கள் கருத்தை முகநூலிலோ அல்லது தளத்தின் விமர்சனப்பகுதியிலிலோ அல்லது கருத்தில் கூறலாம்.
இந்த கதைக்கு அடுத்த பார்ட் இருக்கு.
🩷வல்லவா எனை வெல்லவா🩷
விதுரன்-பிரகதியோட பொண்ணு-தன்வீ
பையன்-ஆதிரன்
தன்வீக்கு நாயகனாக யஷ்வந்த்
ஆதிரனுக்கு ஜோடியாக மிருணாளினி
தற்போது சைட்ல போட நாள் எடுக்கும். கிண்டல் பிரதிலிபி இரண்டிலும் இருக்கு.
ஆடியோ நாவலாகவும் பதிவிடப்பட்டுள்ளது.
Wow super ending. Tanvee vithuran xerox. Super. Eagerly waiting for next chapter.
Good ending sis👏👏👏👏👏 Super😍😍
Yanakku na romba month kitta thata 1 yr irrukum ipti oru long full story padichu athuvum ithula starting la padikum poothu konja pressure Achu yaru da invan, Ivana poi hero va kattrangalaye nu but later I like him 😉😊🤩
Ipo irrukura kalathula intha mari irrukarathu thaan crt yathuku polish aa irrkanum vettu na vettu nu enna thonutho atha nayra panittu poittye irrukanum ellarukum kandipa apti irruka thaan asai but Inga ellarukum athu mudiyathaye ….
And pragati ipti oruthana pathu miralama avanta sarikku sariya vaiyadi avanin avalaga change anathu ellam avlo emotions aa irrunchu 🤗🥰 kandipa devil king 👑 queen 👑 thaan ivanga ….
And prathi oda intha asattu thanamana thairiyathukku avanga Amma va parattanum inaikku niriya vittula poonunga bayanthu amaithiya adangi porathu avanga parents nala thaan ithaye prathi mari thairiyama irruntha 3/4 problems avangalaye samalichupanga 😌😌😌😌😌😌😌😌
Dharma , Viki lam vayra level thaan kathir also 🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰🥰
Adhitya thatha 😍😍😍
Inba and sasi rendum orye mari thaan bayam / mirachi
Anjali ❤️ Inga niriya poonunga Anjali mari thaan
Miya 🤣 sowmiya – good hearted ana ipti patta piliya thaan korai soli noogadipanunga 😤 but Ava manasukku Ava nalla irruka 😍
Over all ithu aunty hero story nu sonnalum pathikku mayla apti pakka thonala athukku vidhuvum vidhuvoda vidhudaneethium thaan reason ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ethana thadava padichalum salikatha story sis! Ore episode ah ore naalula 3 times padichiruven. Prathilipila post irukumpothum padichiruven. Thushyanthana paathale pothum nalla irukum
Wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow romba naal kalichi vithur pragathi story padichi manasu romba happy feeling ah iruku intha Mari oru love paduka avlo interesting ah iruku action hero va irunthalum vithur ellathulaum super hero than thelivana mudivu ellathulaum mudivu panitu yosika matan . Athe mari Avan ponnu devil angel . Its acute devil devil queen devil angel family .
Congratulations 🎉💐 sisy
Nice ending sis…. Sorry for the late comment… I am nt feeling well… That’s y… Waiting for next part…. Rowdy girl dhanvi…