Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -7

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -7

துஷ்யந்தா-7

      துஷ்யந்தாவுக்கு இரண்டு நாளாய் எரிச்சல் மண்டியது. பத்மாவதியை அழைத்து வர இவனின் ஆட்கள் சென்றால் அவர்களோ உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
   
     இரண்டு நாளுக்கு முன் பத்மாவதி உடல்நிலை சரியற்று மயங்கி சரிய கூடவே அவரின் உடைமையான போன், மாத்திரை பெட்டி, பணம் என்று வைத்திருந்த கைப்பை தவறி அருகேயிருந்த நீரில் அடித்து செல்ல ஒடையில் படகிலே விழுந்தார்.

    அவசரமாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பிரகதி தெரியப்படுத்த முனைந்தனர். ஆனால் பத்மாவதி சின்னதா மயங்கிட்டேன் அவளிடம் சொல்ல வேண்டாம். எழுந்ததும் நானே பேசிக்கறேன் என்று பேச சக்தியற்று கூறி விட மற்றவர்களுக்கும் சரியென்றுபட்டது.

    உடனே வர பிரகதியாலும் இயலாது அவளுக்கு அடுத்த மாதம் பரீட்சை என்று கூறியதனாலும் அந்த பல்கலை கழகத்தில் இடையில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கேள்விப்பட்டு உள்ளாரே.

      இரண்டு மூன்று நாளாக பத்மாவதி நிலையை கண்டு அதன் பின் கூறிடலாமென முடிவெடுத்தனர் சுற்றுலாவில் தோழியான ஒருத்தர்.

    அவர் கூடவே பார்த்துக் கொள்வதாக கூறியதன் விளைவு மற்ற சுற்றுலா பயணிகள் புறப்படடனர்.

     பிரகதி அன்னைக்கு அழைத்து பார்த்து சோர்ந்தாள்.

     “மாம் கூட பேசிட்டியா?” என்று அனிலிகா ஆங்கிலத்தில் கேட்டதும் உதடு பிதுங்கி இல்லையென்றாள்.

    “போன வாரம் சொன்னாங்க. அங்க சார்ஜ் போட வசதி இருக்கானு தெரியலைனு. மேபீ அதனால தான் போன் சுவிட்ச் ஆப் வருது.” என்று போனையே பார்த்து வாடினாள்.

      தர்மா ஹரித்துவார் வந்தான் கூடவே அழைத்து செல்வதாக கூறி டிஸ்சார்ஜ் செய்ய கூறவும் பத்மாவதி யார் என்ன என்று புரியாது அரை மயக்கத்தில் விமானம் மூலமாக வந்திறங்கி சேர்ந்தார்.

    கூட பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள இருந்த வனிதா விதுரனை பற்றி அறிந்து பத்மாவதிக்கு சொந்தம் என்பதாக கூறி தர்மா கூப்பிட்டு செல்ல விட்டு விட்டார்.

     இங்கு வந்ததும் விதுரன் எதிரே அமரவும் “பிரகதியை வர சொல்லுங்க” என்று போனை முன் வைத்தான்.

    அவன் எதற்கு அழைக்கின்றானென தர்மா மூலமாக அறிந்து வந்த பத்மாவதி முதலில் கூற மறுத்தார்.

     உடல்நிலை பழையபடி மோசமாகவும் மாறியது. ஏற்கனவே பாதி சிகிச்சையில் அழைத்து வந்திருந்தான் தர்மா.

     “இங்க பாரு உன்னை கெஞ்சி கேட்கறேன். என் பொண்ணு படிக்க போய் இருக்கா. அடுத்த மாதம் பரீட்சை முடிந்தா அவளா வந்திடுவா. அதுவரையாவது அவளை வாழ விடு” என்று கையேந்தி சரிந்தார்.

   விதுரன் மீண்டும் அவனுக்கு தெரிந்த மருத்துவமனையில் அனுமதித்து பத்மாவதிக்கு சிகிச்சையை ஏற்பாடு செய்தான்.

     அரை மயக்கத்தில் “உங்களோட போனுக்காக பிரகதி அங்க காத்திருக்கலாம். நீங்க போன் பண்ணலைனு பயந்து சஞ்சலத்தோட இருப்பாங்க. பிரகதி  எண்ணை தந்தா பக்குவமா சென்னை வந்துட்டதா பேசிட்டு பயப்படமா இருக்க சொல்லி உங்களோட பேசவும் வைப்போம்.” என்று விக்னேஷ் பதவிசமாக கேட்டு எண்ணை வாங்கினான்.

      ஆனால் பாதி உண்மையாக பிரகதியிடம் சென்னை வந்துவிட்டதாகவும், போன் தொலைந்து விட்டதும் இனி இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அன்னையிடம் பேசலாமென கூறியிருந்தான்.

   விதுரனோ பத்மாவதியின் கெஞ்சலை ஏற்றவனாக “உங்க மகள் படிக்க ஏதுவா இப்ப டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனா அவளை தப்பிக்க வைக்கவோ, அலார்ட் கொடுக்கவோ செய்தா உங்களை கூலிப்படை வைத்து கழுத்தறுத்து போட்டு, அங்க பிரகதியை கஷ்டப்படுத்த ஆட்களை அனுப்பிடுவேன். இப்ப ஒருத்தனை அங்க அனுப்பிட்டேன். அவளுக்கே தெரியாம கண்கானிக்க.

    ஏதாவது கைமீறி தப்பிக்க பார்த்தா உங்க மகளோட உயிர் ஆஸ்திரேலியாலயே போயிடும். இந்தியாவுக்கு உடல் கூட வந்து சேராது” என்று மிரட்ட பத்மாவதி தவித்து போனார்.

     ஏற்கனவே உடல்நிலை அவதியால் உடல் தளர, விதுரனின் பேச்சில் மனமானது முழுவதும் தளர்ந்து போனது.

     இந்த இரண்டு நாளுக்கே இப்படியா என்ற அச்சம் சூழ்ந்தாலும் பிரகதியிடம் எதையும் கூறி குழப்பம் ஏற்படுத்தி படிப்பை பாதியில் வரவைக்கவும் பத்மாவதி மனம் ஏற்கவில்லை.

    தன்னை கவனிக்க கேர்டேக்கர் வேண்டாம் பட்டு வந்தால் கூட போதும் என்று வேண்டினார்.

     விதுரன் அதற்கு மட்டும் அனுமதித்திருந்தான். இப்படியாக இரண்டு வாரம் கழிய வீடியோ காலில் பிரகதி பத்மாவதி பேசுவது எல்லாம் பதிவாகப்பட்டு விதுரன் பார்வைக்கு சென்றது. மேலும் ஆஸ்திரேலியாவில் ஆரிக் என்பவனை பிரகதியை சுற்றி கண்கானிக்க வைத்தான்.

     விதுரன் பிரகதியின் பரீட்சை முடிவடைய காத்திருக்கும் கழுகாக இருக்க, பிரகதி தன்னை சுற்றி இருக்கும் வலையை கவனிக்காது இருந்தாள்.

       அன்று எட்வின் அடிப்பட்டு கட்டுப்போட்டு அவன் வீட்டுக்கு வந்து சேர, அனிலியா மூலமாக பிரகதி அவனின் உடல் காயம் அறிந்து ஒரு ‘கெட் வெல் சூன்’ எனும் பூங்கொத்தை வாங்கி பார்க்க சென்றாள்.

    எட்வின் காதல் கூறிய போது மறுத்து விட்டாள். தனக்கு எந்தவுணர்வும் வரவில்லையென ஆனால் தற்போது பாவமாக தோன்றியது. அனிலிகா எப்படி ஆனதென கேட்டு முடிக்க ‘லவ் பண்ணுவியா லவ் பண்ணுவியானு’ கேட்டு அடித்ததாக அவன் மொழியில் கூறினான்.

      எட்வினுக்கு தன்னை காண பிரகதி வந்ததில் சந்தோஷமும் அடைந்தான். டின்னில் இருக்கும் ஒருவகை டிராகன் பழக்கலவையை பருக கொடுத்து விருந்து உபசரிக்க, பிரகதி அவன் நலத்தை முன்னிருந்தி பேசி புறப்பட்டாள்.

      அனிலிகா தான் வந்ததிலிருந்து “பாவம் பா. அவன் காதலுக்கு நீ எஸ் சொல்லிருக்கலாம். இன்னும் டீப்பா இருக்கான். எனக்கு தெரிந்து லவ் ரிஜக்ட் பண்ணியதும் இங்க அடுத்த பொண்ணை பார்த்துட்டு போற பாய்ஸ் தான் அதிகம். ஸ்டில் எட்வின் உன்னை லவ் பண்ணறான்” என்றதும் பிரகதியோ சிரித்து கொண்டே, “நோ நோ… அவன் யாரையோ அடுத்த லவ் தேடிட்டான். அதுக்கு தான் இப்ப அடிவாங்கி இருக்கான்.” என்று உரைத்தாள்.

     “நோ வே. அவன் இன்னிக்கும் உன்னை இரசித்து கண் பிளிங் பண்ணாம பார்த்தான்.” என்று அனிலிகா தனது முகநூலை ஓபன் செய்யவும் பிரகதி ஏதோ யோசனைக்குள் உள்ளானாள்.

     முகநூல் என்றதும் ஒரு சேர சலிப்பு வந்தது. அவளுக்கு இந்த சோசியல் மீடியா என்றாலே சுத்த போரிங்.

     எட்வின் கூறியதும் அவன் செய்கையும் மனக்கண்ணில் ஓட்டி பார்த்தவளுக்கு அப்ப என்னை லவ் பண்ணறதால் யார் அவனை அடிச்சிருப்பா? என்று யோசித்தாள்.

    அடுத்த நாள் தன்னை யாரோ தொடர்வதாக தோன்ற பிரகதி சுற்றி முற்றி பார்த்து விட்டு கல்லூரிக்கு அடியெடுத்தாள்.

     அடுத்த வாரம் வரை இதே உணர்வு தாக்க, போனை எடுத்து அவ்வூர் போலிஸுக்கு அழைத்து கல்லூரி விட்டு அனிலிகா வீட்டுக்கு வந்து சேர அவர்களும் வந்து சேர்ந்தனர்.

    போலிஸ் எதனால் வந்து பிரகதியிடம் பேசுகின்றனர் என்று ஆரிக் கண்கானிக்க, பிரகதியிடம் பேசிய போலிஸின் அருகே இருந்த ஒரு வெள்ளையன் ஆரிக் இருப்பிடம் நெருங்கி வந்தான்.

   ஆரிக் காரை எடுக்கும் முன் வந்து நிறுத்த கூறி விசாரிக்க அவனின் பதில்கள் பதட்டமாக, பதறி கொண்டு, திருட்டு முழியும் காட்சியளிக்க சந்தேகத்தின் பெயரில் பிடித்து சென்றனர்.

    கூடவே எட்வின் வந்து அன்று அடித்தது பொழுது இவன் இருந்தானா என்று கேட்க அப்படி தான் தெரிவதாக பதில் தரவும் ஆஸ்திரேலிய போலிஸிடம் நன்றாகவே சிக்கினான்.

    அவனின் பதில் புரிய துவங்கி விதுரனை அழைக்க, அடுத்த நாள் காலையானது.

     போலிஸிடம் பேசி புரியவைக்க முயன்று தோற்றவனாக நின்றான் விதுரன்.

    பிரகதியோ சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தவள் ஆரிக் வேறு சரியான காரணம் கூறாது தடுமாற, எட்வினும் தன்னை அடித்தவன் கூட்டத்தில் இவனும் ஒருவன் என்று சுட்டி காட்ட ஆரிக் விடுதலை பெற நேரமானது. விதுரனுக்கோ இம்முறை பொறுமை பறந்து விட்டது.

    பிரகதிக்கு போன் செய்து விட்டு காத்திருந்தான்.

     “ஹலோ… பிரகதி ஹியர்” என்று தேன் குரலில் தன்னிலை மறந்து ஒர் விநாடியில் விதுரன் லயித்திருந்தான்.
அந்த பக்கம் பிரகதியோ “போனை பண்ணிட்டு சைலண்டா இருக்கு. இந்தியா நம்பர் மாதிரி தெரியுது.” என்றவளின் குரலில் “உங்க அம்மா பத்மாவதி இப்ப எங்களோட கவனிப்பில் இருக்காங்க. அங்க ஆரிக் மேல நீ கொடுத்த கேஸை வாபஸ் வாங்கு.” என்று விழுந்தது சிம்ம குரலாக.

      “இங்க ஒருத்தனை போலிஸில் பிடிச்சா அங்கயிருந்து எங்க அம்மாவை பிடிச்சதா மிரட்டற. யார் டா நீ.” என்று கேட்டாள்.

     அம்மாவை பிடித்து வைத்தும் அமைதியாக கேள்வி விழுகிறதே, பதட்டமில்லை என்ற வியப்பு மேலோங்கியது.

      “ம்ம்… உன் புருஷன்.” என்றான் விதுரன்.

      “இடியட்” என்று அணைத்து விட்டாள் பிரகதி.

      ஆனால் ஆரிக் என்பவன் சந்தேகம் கொள்ளும் விதமாக வந்ததாக கூறியதற்கு வலுவான காரணம் எதுவுமில்லையென நேற்று இரவு வரை வைத்து விட்டு முடிவெடுத்து அனுப்ப செய்தனர்.

    “காரணமில்லைனா லவ் பண்ண சுத்தறவனா இருக்கும். இங்க இந்தியன் யங்ஸ்டர் அதிகம்” என்று எட்வின் கூறவும் பிரகதி சிரித்து விட்டு அதை மறந்தாள்.

     அதே நேரம் அம்மாவிற்கு அழைக்க வேண்டி கால் செய்ய விதுரனே எடுத்து “சொல்லு…” என்றதும் ஹேய் யூ… தி சேம் வாய்ஸ்” என்றதும் “யா… இட்ஸ் மீ. இப்ப தானே சொன்னேன். உங்கம்மா எங்களோட இருக்காங்கனு.” என்றதும் பிரகதி மெல்ல பதட்டமாக இருந்தாள்.

     “ஆரிக் வெளியே வந்துட்டான். உன்னை கண்கானிக்க நான் அனுப்பினவன். என்ன எட்வினோட காதலா? அதெல்லாம் வரக்கூடாது. தப்பு தப்பு… அப்பறம் திரும்ப ஒரு ஜோடியை பிரிக்கிற மாதிரி வச்சிடாதே. உங்கம்மா ரொம்ப கெஞ்சறாங்க. மரியாதையா படிச்சிட்டு நேரா இங்க வர்ற. இன்னும் இரண்டு வாரம் எக்ஸாம் முடித்து இங்க வர்ற” என்றான்.

    “ஹேய் யார் நீ. என்ன ரூல்ஸ் போடற. என்ன  கண்கானிக்க நீ யார்டா. எனக்கு பிடிச்சிருந்தா யாரையும் காதலிப்பேன். எங்கம்மாவுக்கே கேள்வி கேட்கற அதிகாரம் கொடுத்ததில்லை. நீ யாரு  நான் ஸ்டாப்பா ஆர்டர் போடற. உன் திமிரை வேற எவளிடமாவது காட்டு. பிரகதிகிட்ட வச்சிக்காதே. கொன்னுடுவேன்” என்று அணைத்து விட்டாள்.

   இந்த அம்மா போன் யார் எடுக்கறா? அம்மாவிடம் பேசணுமே… திரும்ப போட்டா அவன் தான் எடுப்பானா? என்று நடையோ நடை நடக்க ஆரமபித்தாள்.
  
     கடைசியாக பட்டு தான் அம்மாவை கவனிப்பதாக பத்மாவதி கூறியதை நினைவு கொண்டு, அவளுக்கு அழைத்தாள்.

     “அம்மாவுக்கு சின்னதா உடம்பு சரியில்லை மா. சர்க்கரை கூடிடுச்சு. இப்ப பரவாயில்லை. பேச முடியாது” என்றதும் “பட்டு அம்மா போன் யார் வச்சிருக்கா?” என்றாள் பிரகதி.

     “இங்க தான் மா இருக்கு. ஏன் மா.” என்றாள்.

      “பட்டு அம்மா நம்பரில் யாரோ ஒருத்தன் பேசினான். அம்மாவை ஜாக்கிரதையா பார்த்துக்கோ. இரண்டு வாரத்தில வந்திடுவேன்.” என்று அறிவுறுத்தி வைத்தாள்.

    அதன் பின் படிப்பில் நேரம் தள்ள, வீடியோ காலில் மீண்டும் பத்மாவதி பேசவும் அந்த அவன் யாரென கேட்க வந்து கேட்கவில்லை. அம்மா இப்ப தான் நிம்மதியா மூச்சு விடுவதாக பட்டு சொல்ல, தன்னை மிரட்டி ஒரு முறை பேசியவனை கேட்கவில்லை.
  
     ஆரிக் அதன் பின் நேரிடையாகவே தொடர்ந்து வருவதை அறிந்தாலும் அப்படியொன்றும் பிரகதி பயந்திடவில்லை. என்ன மீறி என்ன நடக்கும் என்பதாக இறுமாப்பில் இருந்தாள்.

   கடைசி பரீட்சை எழுதும் நேரம் காலையில் ஒரு வீடியோ  போன் கால் வந்தது.

     “படிப்பு முடிஞ்சதும் நேரா இங்க வர. நீ கல்யாணம் பண்ணி வச்சிட்டு போனியே தீபிகா-இன்பா அவங்க திருமணம். அது என்னாச்சு தெரிய வேண்டாம். தீபிகாவுக்கு அன்னிக்கே தாலியை அறுத்தெறிஞ்சாச்சு. இந்த விதுரன் தலைமையில் என்ன நடக்க இருந்ததோ அதை நடத்திட்டான். இனி நடக்க போவதும் விதுரனோட பிளான் மட்டும் தான்.” என்று கூறி முடிக்க விதுரன் அருகே பத்மாவதி கத்தியருகே காட்சியளிப்பதே எண்ணத்திலும் எழுதும் காகிதத்திலும் கண்டு பதறினாள்.

     கடைசி பரீட்சை எழுதி முடித்து ஆர்ப்பாட்டமாக அனிலிகாவோடு கல்லூரியே கலக்கி விட்டு விடைப்பெற எண்ணினாள். ஆனால் எண்ணங்களோ தடையாக பத்மாவதி முகமே வந்தது. இது நாள் வரை ஏதோ உடல்நிலை அசதி என்று பட்டுவை பார்த்துக் கொள்ள கூறினோமே. எல்லாம் இவனால் தானா? அதனால் தான் அன்னை முன்பு போல தினசரி காலை மாலை இரவென பேசாமல் ஒரு நாளைக்கு ஒரு முறை என்று பேசினாரோ என்று புரியவும் தன்னையே நொந்தாள்.

      முன்பே ஆரிக் விவகாரத்தில் விதுரன் பேசிய பொழுதே அன்னையிடம் ஒரு போலிஸ் கம்பிளென் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

    ஏன் இப்ப கொடுத்தா என்ன என்று தமிழக காவல் துறைக்கு இங்கிருந்தே ஒரு மெயில் செய்து கம்பிளைன் கொடுத்தாள்.

   அதன் விளைவாக விதுரனின் அலுவலகத்தில் விமலன் என்பவன் விசாரணைக்கு வந்து சேர்ந்தார்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *