துஷ்யந்தா-8
ஆசையாய் ஆசை ஆசையாய் படிக்க வந்தது. இன்றோ கலங்கியவளாக திரும்புவதை பிரகதியால் ஏற்க முடியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக அவனை போலிஸில் இங்கிருந்தே கம்பிளைன் செய்தும் அந்த விமலன் சென்று விதுரனிடம் பேசி அவனின் ஆளாக மாறி நின்றதை ஜீரணிக்க முடியாது தவித்தாள்.
அதை விட தனக்கு போன் செய்து ‘பரீட்சை முடிந்ததா அங்க என்ன புடுங்கற. அடுத்த பிளைட் ஏறி வர்ற. இல்லை உங்கம்மாவோட கை விரல்கள் துண்டித்து அனுப்பவா?’ என்று அரக்கனின் மறு அவதாரமாக கேட்டதும் பிரகதிக்கு நெஞ்சுக்கூடே அதிர்ந்தது.
ஆனால் எண்ணியதும் கிளம்ப அவளால் இயலவில்லை. ஒருநாள் தாமதமாக மாறியது. அனிலிகாவிடம் மட்டும் தன் இக்கட்டு நிலையை கூறி கிளம்பியிருந்தாள்.
அனிலிகா போனதும் போன் செய்து நிலவரத்தை கூற சொன்னாள். முடிந்தால் அடுத்து அவள் வந்து உதவுவதாக கூறினாள்.
ஒரு நாள் தாமதத்திற்கே சுட்டு விரலை பார்ஸல் பண்ணவா என்று பயத்தை கூட்டிவிட்டான் அந்த விதுரன். இதில் தீபிகா-இன்பா திருமணத்தை வேறு சரியாக கூறாது விட்டுவிட்டானே. தீபிகா இன்பாவுக்கு என்னவானதோ.. இங்கிருந்து சென்றதும் அனிலிகா தம்பி ஆலிவ் மொத்தமாய் ரீசெட் செய்து சொதப்பிவிட்டான்.
பாவம் என்னிடமே இப்படி பேசுகின்றவன் தீபிகா போல திருமணத்தை தடுக்கவும் தைரியமற்றவளிடம் என்னென்ன பேசியிருப்பானோ? இன்பாவை என்ன செய்தானோ? என்ற கவலை தாக்கியது.
விதுரன் போன் வந்ததிலிருந்து சரியாக சாப்பிடாத நிலையில் அனிலிகா தான் கட்டாயப்படுத்தி உணவை உண்ண வைத்தாள். இதோ இன்று அப்படியில்லாமல் சாப்பிட வெறுத்து விமானத்தில் ஏறியதில் இருந்து விமானப்பெண் எது கொடுத்தும் ‘நோ தேங்க்ஸ்’ என்ற சொல்லி புறம் தள்ளிவிட்டாள்.
சொட்டு நீரும் பருகாது விதுரனை அர்ச்சித்து கொண்டே வந்தாள். பற்றாத குறைக்கு அதே விமானத்தில் ஆரிப் வந்து தொலைக்க அடக்கப்படாத சினம் எழும்பியது.
நீண்ட பயணம், மேகக்கூட்டத்தை அருகே கண்டும் இரசிக்க கூடிய மனநிலையில் பிரகதி இல்லை.
சென்னை வந்து இறங்கிய நேரம் ஆரிக் முன் வந்து “விதுரன் சார் கார் அங்க இருக்கு வந்தேறுங்க” என்று ஆணையிட, “அவ்ளோ தூரம் என்னால லக்கேஜை தூக்கிட்டு வர முடியாது. தூக்கிட்டு வா” என்று தனது பெட்டியை ஆரிப்பை தூக்க வைத்து ஒய்யாரமாக அமர்ந்தாள்.
பயத்தை துளியும் வெளிக்காட்டாது ஜன்னலை வெறித்தாள்.
“என்ன வேண்டுமாம் அவனுக்கு… எங்க அம்மாவை என்னடா பண்ணினாங்க. எட்வினை எதுக்கு டா அடிச்ச. என்னை எதுக்கு கண்கானிக்கணும்.” என்று ஆரிப்பை கேட்டு தொலைக்க, “இங்க பாருங்க மேம். உங்களை பாலோவ் பண்ணி டெய்லி அப்டேட் கொடுக்கணும். என்னோட வேலை அது மட்டும் தான். ஏன் எதுக்குனு தெரியாது. விதுரன் சாரை கேள்வி கேட்க என்னால முடியாது. எனக்கு கொடுத்த வேலையில் எட்வின் பற்றி சொன்னேன். அவர் தான் பிரப்போஸ் செய்த கையை உடைச்சிட சொன்னார். அது மட்டும் செய்தேன்” என்று தோளைக் குலுக்கினான்.
“அடப்பாவிகளா… உன் கை கால் வெந்து போக” என்று திட்டினாள். ஆரிப் அமைதியாய் திரும்பி கொண்டான்.
நேராக மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்.
குழப்பமாக வந்து சேர்ந்தவள் “இங்க எதுக்கு” என்று கேட்க, “இதோட என் வேலை முடிஞ்சிது மேம். இனி அவர் தான் உங்களை விதுரன் சாரிடம் கூட்டிட்டு போவார். தேங்க் யூ மேம்.” என்று செல்ல எவனை சொல்லறான் என்று திரும்ப தர்மா நின்றிருந்தான்.
இவன் யாரு விலங்காதவன்? என்று மனதில் எண்ண, “நான் தர்மா. சாரோட லெப்ட் ஹாண்ட். வாங்க..” என்று லிப்டில் அழைத்து செல்ல, பிரகதிக்கு பொறுமை போனது.
“எங்க அம்மா எங்க? இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க” என்றாள்.
“நீங்க தாமதிச்சிட்டிங்க மேம். அதனால சார் வெட்ட சொல்லிட்டார்.” என்று அறையை சுட்டி காட்டினான்.
“வெட்ட சொல்லிட்டாரா… எ… என் என்ன… சொல்லற” என்று அங்கிருந்த அறைக் கதவை திறந்து உள்ளே செல்ல பத்மாவதி உறங்கிக் கொண்டிருந்தார்.
“அம்மா… அம்மா..” என்று உலுக்க கண் விழித்தார். கை விரல்கள் கண்டு தன் கைக்குள் அன்னை கைகளை வைத்து முத்தமிட்டாள்.
“கை இல்லை மேம். காலை வெட்ட சொல்லிட்டார்.” என்று ஏதோ உணவுக்கு ஆர்டர் கொடுத்தவன் போல பதில் தந்து நின்றான்.
பிரகதிக்கு தூக்கி வாறி போட்டு காலில் போர்த்தியிருந்த போர்வையை விளக்கினாள்.
அன்னையின் வலது கால் துண்டாக காட்சியளித்தது.
சாப்பிடாமலும் அன்னையின் நிலையும் கண்டு மயங்கி சரிந்தாள் பிரகதி.
தர்மா உடனே விதுரனுக்கு அழைக்க, விதுரன் வந்து சேரும் முன் பிரகதிக்கு தனி வார்டு அனுமதிக்கப்பட்டு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது.
பிரகதி கண் திறந்த நேரம் எதிரே விதுரனும், அவனுக்கு அருகே மற்றொருவனும் நின்றிருந்தனர். தர்மா அங்கில்லை.
அனைத்தும் கனவாக இருக்கும் என்று “எங்க அம்மா…” என்று கேட்டதும் விதுரன் பார்வையில் நர்ஸ் ட்ரிப்ஸை கழட்டி, பிரகதியின் வீல் பெட்டை தள்ள நகர்ந்து பத்மாவதியின் இடம் வந்து சேர்ந்தனர்.
கனவல்ல தாயின் கால்கள் துண்டிக்கப்பட்டு உள்ளதென அறிந்ததும் ஆக்ரோஷமாக மாறினாள்.
“ஒரு நாள் தாமதம் ஆனதுக்கு எங்க அம்மாவோட காலை வெட்டி இருக்கியே பாதகா. நீ ராட்சஷன் டா. மனுஷனே இல்லை அரக்கன். உன்னை கொல்லாம விடமாட்டேன். உன்னை ஜெயிலுக்கு அனுப்பறேன்” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். விதுரனை அங்கிருந்த மருந்து வைக்கும் பெட்டி போன்ற தள்ளும் இரும்பு ஸெல்ப் வைத்து அடித்தாள். விதுரன் இதை எதிர்பார்க்கவில்லை.
விக்னேஷ் வந்து தடுத்து பிடுங்கினான்.
அடுத்து அங்கே அழகுக்கு வைத்திருந்த ஜாடியை தூக்கி எறிய இம்முறை விதுரனே தன் ஒற்றை கையை வைத்து தடுத்து தட்டி விட்டான்.
“தீபிகா இன்பாவை காதலிச்சா. அந்த திருமணத்தை செய்து வைத்தா… என்னை ஒரு வருடமா பழி வாங்க வந்து நிற்கற. உன் தலைமையில் நடந்தா மாற்ற கூடாதா.” என்று சட்டையை உலுக்கினாள்.
பத்மாவதி மூச்சு திணறி அழைக்க, “இப்படி சத்தம் போட்ட உங்க அம்மாவோட இன்னொரு காலும் இழந்துடுவ. அப்பறம் திரும்ப ஒட்ட வைக்க முடியாது. அங்க உட்காரு.” என்று இருக்கையை காட்டினான்.
“உன்னை வார்ன் பண்ணி அனுப்பிடலாம்னு பார்த்தேன். ஆனா நீ என்னையே அடிச்சிட்ட”. என்று தன் இடது தோளை நீவி விட்டு “விக்னேஷ் காசிராமுக்கு போன் பண்ணு. அந்த பார்ம் கொண்டு வர சொல்லு” என்று கட்டளையிட்டான்.
“ஏன் டா இப்படி பண்ணின. எங்கம்மா காலை வெட்டியிருக்க.” என்று அழுதாள்.
கதறலை செவிமடுக்காமல் தள்ளிவிட்டு நின்றான். தன் கோர்ட் கசங்காமல் ஒர் உதறு உதறி, முடித்தான்.
“இன்னொரு காலும் வெட்டணுமா. டாக்டர்..” என்று குரல் கொடுக்க அந்த மருத்துவ டீன் சூர்யபிரசாத் வந்து நின்றார்.
மீண்டும் பிரகதி காதில் அழுத்தமாய் பதிய “சொல்லறதை கேட்கலைனா இன்னோரு காலையும் மயக்கம் கொடுத்து ரிமூவ் பண்ணுங்க டாக்டர்” என்று கூறினான்.
பிரகதிக்கு அந்த அறையே சூன்யம் பிடித்த வெள்ளை அரக்க மாளிகையாக காட்சியளிக்க பத்மாவதியினை நெருங்க விடாது தடுத்து நிறுத்தினாள்.
“மா… அம்மா…” என்று கதற காதிராம் என்பவரை விக்னேஷ் அழைத்து வந்திருந்தான்.
பிரகதி தூக்கியெறிந்த இரும்பு ஸெல்ப் மருந்து மாத்திரையை தாங்கியதை ஒழுங்குப்படுத்தி விக்னேஷ் அதில் அந்த தாளினை வைத்து பிரகதியை பார்த்து விதுரனிடம் “ஆதித்யா ஐயாவிடம் ஒரு வார்த்தை சொல்லலாமே சார்” என்று சொல்லி வைத்தான்.
“தேவைப்படும் பொழுது சொல்லிப்பேன். ஆனா அவருக்கு தெரிந்திடும்.” என்று கையெழுத்து போட்டு வைரத்தை மணிமகுடமாக ஏற்றி ஜோலித்த பேனாவை அவள் புறம் நீட்டினான்.
“இதுல கையெழுத்து போடு” என்று கூறவும் பத்மாவதி பேசயியலாது மௌனமாய் படுத்திருக்க, இருபக்கம் கண்ணில் இருந்து கண்ணீர் தாரையாக வழிந்தது.
பிரகதி அது என்ன என்று ஒர் முறை வாசிக்க முதலிலேயே அது திருமண பதிவு சான்றிதழ் என்று அறியவும் விட்டெறிந்தாள்.
“சொத்தை வாங்கி எங்களை நடுத்தெருவில் விடுவனு பார்த்தா உன்னை நான் மேரேஜ் பண்ணணுமா. அதுக்கு இந்த மாடியிலயிருந்து குதிச்சி செத்துடுவேன்” என்று இறுமாப்பாய் உரைத்தாள்.
“செத்து போ. ஆனா உங்கம்மா…? அவங்களை யோசிக்கலையே நீ. பச்… எனக்கு இந்த செண்டிமெண்ட் எதுவும் இல்லை பிரகதி. நீ வந்து ஒரு மணி நேரத்தில இந்த மேரேஜ் நடத்தி காட்டறேனு எனக்குள்ள சவால் விட்டேன். என் மனசாட்சிக்கிட்ட கூட நான் தோற்க கூடாது. சைன் இட்” என்று பேனாவை முகத்திற்கு முன் நீட்டினான்.
காசிராம் லேட் பண்ணினா நீங்க போங்க. பட் சூர்யபிரசாத் நீங்க உங்க பேஷண்ட் பத்மாவதியோட காலை வெட்டி தள்ளுங்க. எந்த கேஸும் வராம நான் பார்த்துக்கறேன்.” என்று கண் காட்டினான்.
பத்மாவதியோ உதடு பிரித்து “பிரகதி… நீ நல்லாயிருக்கணும். அதுக்கு… ” என்றவர் பேச இயலாது மூச்சு விட சிரமமாக பேசினார்.
“மிஸ் பிரகதி காலை வெட்டணுமோ நீங்க இந்த மாடில இருந்து குதித்து சாகறிங்களோ. அது இரண்டாம் பட்சம் தான். இதே நிலையில் உங்க அம்மா இருந்தா அவங்களாவே இறைவனடிக்கு போய் சேர்வாங்க. அப்பறம் எங்களை குத்தம் சொல்ல கூடாது.” என்று சூர்யபிரசாத் கொளுத்தி போட்டு விதுரனின் பார்வைக்கு காத்திருந்தனர்.
பிரகதி அன்னையையும் விக்னேஷ் கையிலிருந்த தாளையும் மாறி மாறி பார்த்து விடுக்கென பிடுங்கி தன் கையெழுத்தை கிறுக்கி விதுரன் முகத்தில் விட்டெறிந்து பத்மாவதியை கட்டி கலங்கினாள்.
சூர்ய பிரசாத் உடனே பத்மாவதியை சிகிச்சை எடுக்க தனியறைக்கு அழைத்து செல்ல பத்மாவதியை பார்த்து திக்பிரமை பிடித்தவளாக நின்றாள் பிரகதி.
விதுரனோ போனை சுழற்றி “ப்யூ மினிட்ஸ்ல போட்டோ அனுப்பறேன். காட் எங்கேஜ்மெண்ட் என்று போட்டு நம்ம ஆபிஸ்ல ஷேர் ஹோல்டர், நம்ம கூட ஓர்க் ஒப்பந்தம் செய்த அனைவருக்கும் இந்த விஷயம் நியூஸா போய் சேரணும்.
முக்கியமா ஆச்சாரியா வீட்டுக்கு… அதே பொண்ணை மேரேஜ் பண்ணறதா.” என்று பேசி வைக்க பிரகதி கண்கள் சூரியனை இரண்டு துண்டாக கண்ணில் தத்தெடுத்தவள் போல காட்சிக்கு நின்றாள்.
விக்னேஷ் தனியாக சென்று ஆதித்யா ஐயாவிற்கு அழைத்து விதுரனின் செய்கையை கூறி முடித்தான்.
“ஓ மை காட்… இப்ப பிரகதி நிலைமை என்ன?” என்று கேட்டார் அவர்.
“ஐயா… இப்ப பிரகதி முழுக்க முழுக்க விதுரன் சார் மேல கோபமா இருக்காங்க. உங்களுக்கு தெரியாதா. விதுரன் சார் அப்படி தான் பண்ணி வச்சிருக்கார். இந்த தர்மா ஆரிக் வேற எல்லாத்துக்கும் துணை போனாங்க” என்று வருந்தினான்.
“பிரகதி வந்த முறை சங்கடத்தை தந்தாலும் சரியான ஆளை தான் விதுரன் பிடிச்சிருக்கான். என்ன ஒரு விதுரனையை நம்ம சமாளிக்க முடியாது இதுல பிரகதி மாதிரி என்றால்…” என்று பேசவும் “விக்னேஷ்” என்ற விதுரன் குரல் கேட்டு “ஐயா விதுரன் சார் கூப்பிடறார் வைக்கிறேன் ஐயா.” என்று பணிந்து வைத்தான்.
பிரகதியோ பத்மாவதி அனுமதித்திருந்த வார்டின் வெளியே கண்ணாடி தடுப்பு வழியாக கலங்கியவள் தூரத்தில் எதிர்புறம் விதுரன் சூர்யபிரசாத்திடம் பேசி சிரித்து கொண்டிருப்பதை கண்டு, ‘சிரி டா… நீ சிரிப்பது இதான் கடைசி நாளா இருக்கும். ஏன்டா இவளை கட்டாயப்படுத்தி மேரேஜ் பண்ணணும்னு நீ பீல் பண்ணுவ.’ என்று மனதுக்குள் சூளுரைத்தாள்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
apadi feel pana viapiya pragi ma nadakathe
Super 😍😍😍