Skip to content
Home » தொடர்கதை எழுதுவது எப்படி?

தொடர்கதை எழுதுவது எப்படி?

தொடர்கதை எழுதுவது எப்படி?

   தொடர்கதை எழுதுவது எப்படி.? கதை எழுத நிறைய கற்பனை வேண்டும் என்று பலரும் சொல்வாங்க. ஆமா உண்மை தான். கற்பனை நிச்சயம் வேண்டும்.
  
   சிலர் ‘கற்பனைல வாழாத தரையில நில்லு’ இப்படி சொல்லி நக்கல் பண்ணுவாங்க.

    அப்ப கதைகளில் வர்ற கற்பனைகள் வெறும் வாசிக்கவும் அதோட நேரத்தை கழிக்க மட்டும் போதுமா? நிச்சயம் இல்லை.

  இங்க பலரும் தங்களோட மனவுளைச்சல், மனழுத்தம் தனிமையை விரட்டவும் நேரத்தை  போக்குவதற்காக படிக்க வர்றாங்க.

   அப்படியிருக்க அவங்களுக்கு வெறும் கற்பனையை மட்டும் காட்டி மேலும் மேலும் ‘சே நம்ம வாழக்கை தான் மோசம். மத்தவங்க எப்படி வாழறாங்க’னு போலி வாழ்வில் தள்ளக்கூடாது.

   இதுவும் நிதர்சனம் இதுதான் வாழ்க்கையிலயும் நடக்குது. அதனால இது போன்றதோர் பிரச்சனைகள் வந்தால் எப்படி கையாளலும் என்று ஒரு நாயகன் நாயகிக்கு பலரும் வாழ்வில் இன்னலுக்குள் இருக்கும் வாழ்வின் எதார்த்தத்தை கையில எடுத்து, நம்ம கதையிலும் இப்படி நடக்குது. அதற்கு இப்படி தீர்வுகள் கிடைக்கும், தவறான எண்ணங்களா சென்றால் அதை இப்படி வழிநடத்தலாம், உன்னோட தவறை நீ மாற்றலாம் என்று கதை மூலமாக எதார்த்த மக்களின் வாழ்வியலை கதையாக உருவாக்கம் செய்யணும்.

  உருவாக்கம் பெற்ற கதைக்கருவை? எப்படி சுவாரசியமான நிகழ்வுகளால் தொடர்கதையாக மாற்றணும்.

   எப்பவும் நல்லது நடந்தா எப்படி வாழ்க்கை மாறும், கெட்டது நடந்தா எப்படி மாற்றம் கொடுக்கும் என்று இரண்டு விதமா யோசித்து இரண்டுல எது கொண்டு போய் கதையா எழுத வரும் என்று யோசித்து அதை எழுத ஆரம்பிக்கணும்.

   முதல்ல சிறுகதை எழுத பழகினா நாளடைவில் தொடர்கதையா எழுதற பக்குவம் வந்துவிடும்.

   ஒவ்வொரு கதையும் நம் குழந்தை. நம்ம குழந்தை தறுதலையாக வளர்க்க விருப்பம் கொள்வோமா? நிச்சயமா மாட்டோம். அப்படிபட்ட நமக்கு நம்ம எழுதற கதையும் அதில் ஏற்றப்படுகின்ற விஷயமும் சரியானதா இருக்கணும்.

  *கதைகருவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கல்லூரி காதல் அலுவலக காதல் பேருந்து காதல் திருமணமானப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படுவதும் என்று வகை பிரிச்சிக்கணும். கதைக்கருவை ஆழமா மனதில் நிறுத்திக்கணும். அது சம்பந்தமான விஷயங்கள் எல்லாம் நாம் யோசித்து பார்க்கணும். கேட்டது பார்த்தது நமக்கு நடந்தது என்று அலசி கதைக்கருவுக்கு எப்படி கொடுக்கணும்னு கதைச்சுருக்கமா மனசுல உருவகித்து வச்சிடணும்.

* one line points
  முன்ன எல்லாம் ஸ்வீட் அண்ட் ஷான்டா டெலிகிராம் பண்ணுவாங்க. அது மாதிரி கதையோட ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெறும் முக்கிய நிகழ்வை ஒருவரில எழுதி வச்சிக்கணும்.

*காட்சியமைப்பு:
   பொதுவா கல்லூரி காதல் என்றால் நிச்சயம் ஜாலியா கொண்டு போகணும். கல்லூரில ராகிக் முதல் ககிளாஸ்ல எழுதாம வெளியே போகற இன்சிடெண்ட் முதல் சாப்பாடு பிடுங்கி திண்ற வரை இயல்பா வந்தாலே ரசிக்கற மாதிரி இருக்கும்.

கணவன் மனைவி என்றால் பொதுவா வீட்ல என்ன நடக்குதோ அதை தான் எழுதணும். பொய்யா தினமும் நாலு ஹக் கிஸ் என்று இஷ்டத்துக்கு எழுதி மத்த எல்லார் வீட்லயும் இதான். என்ற சோகத்துக்குள்ள வாசகரை கொண்டு வரக்காடாது. நிஜம் எதுவோ அதை ஜஸ்ட் லைக் தட்னு எழுதினாலே வாசகருக்கு புரியும்.
  
*நாயகன் நாயகி  குணத்தை அட்டவனைப் போட்டுக்கணும்.

    எப்பவும் முன்னுக்கு பின் முரணா நாயகிசெயல் இருந்தா நல்லாயிருக்காது.
   எக்ஸாம்பிள் நான் ஒரு கதையில ஆட்டை வெட்டுவாங்கனு நாயகி பீல் பண்ணுவா. பட் அவ பிரியாணி விரும்பி சாப்பிடுவானு முன்பு  எழுதிட்டேன். ஒருத்தர் வந்து ஆட்டை வெட்டினா பீல் பட்டகனா. ஆனா சாப்பிட மட்டும் ஆடு வேண்டுமா? என்று கேட்டாங்க. எனக்கு அப்போ உதிச்சது. அட ஆமால நாயகன் நாயகியோட சொல்லும் செயலும் வேற வேற இருந்தா நல்லாயிருக்காது. அதனால குணங்கள் இப்படி தான் என்றால் அது சம்பந்தப்பட்ட மற்றவையும் சரியா இருக்கானு பார்க்கணும்.

 
கதை மாந்தர் : ஒரு தொடர்கதை அழகா உருமாற மினிமம் 20 episode போதும் அதை தவிர கதை மாந்தர்களை வைத்து எண்ணிக்கையை பொறுத்து மற்றவர்களை எழுத அத்தியாயம் அதிகமாகும். கதை கரு பெரியதாயின் கதை மாந்தரும் அதிகமா இருக்கணும். என்ன குழப்பமில்லாம கொடுக்கணும்.

   ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு கதை இருந்தா மற்றவை எழுத இலகுவா இருக்க,
வாக்கிய அமைப்பும்
உரையாடலும்
பழமொழி
ஏதேனும் கதை வடிவில் கருத்து என்று இடையில் ஏற்றி அழகா கோர்வையா கொடுக்கலாம். சிலருக்கு கதையோடு தொடர்பாக கவிதை எழுத வரும்.

மொத்தமா கோர்வையாக எழுதி முடிக்க ஒரு குழந்தை கையில் தவழும். 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *