📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » நாவல் புத்தகம் அறிமுகம்

நாவல் புத்தகம் அறிமுகம்

நாவல் புத்தகம் அறிமுகம்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  நான் நாவல்னு உதல் உதல்ல வாசிக்க ஆரம்பிச்சது தமிழ்வாணனோட சங்கர்லலால் கதை தான். அதை தவிர அடிக்கடி குமுதம் ஆனந்தவிகடன்ல வர்ற சிறுகதை. வாரமலர்ல வர்ற சிறுகதை.
  இதை தாண்டி ராஜேஷ்குமார் சாரோட பாக்கெட் நாவல் கதைகள் ஒரு மூன்று வாசித்திருப்பேன். அப்பாவோட பழக்கம். அதோட பெரிப்பா வீட்ல சில நாவல் புக். எழுத்தாளர் பெயர் பார்க்காம அப்படியே வாசித்து தள்ளியிருப்பேன்.

  அதனால் பெண் எழுத்தாளர் கதைகள் எல்லாம் ரொம்ப குறைவு. சொல்லப்போனா நிறைய குட்டிஸ் சிறுவர் கதை வாசித்த அளவு கூட காதல் கதைகள் வாசித்ததில்லை.
   ஆனா நிறைய படம் பார்த்திருக்கேன்.
  கதைகள் இப்படி மாத்தலாம். இப்படி முடிவை தரலாம். இந்த மாதிரி கதை இப்படி முடியும், இப்படி செல்லும் என்ற யூகம் 90% ஒத்துப்போகும்.
  சீரியலும் அப்படி தான்.

  என்ன தான் இருந்தாலும் புத்தகமா நாவல் வாசிக்காம இருந்தேன்.

  அன்னிக்கு எங்க (மாமியார்) வீட்ல இருந்தேன். பக்கத்துல அத்தையின் தம்பிகள் வீடு இருக்கும். அதுவொரு காம்பவுண்ட் வீடு. அங்க அத்தை அவங்க தம்பி பேமிலி எல்லாம் ஒரே இடம்.
அங்கேயிருக்கும் (அத்தையின் தம்பி மனைவி) எனக்கு சித்தி. அவங்க மகள்(எனக்கு தங்கை உறவு) ‘பேங்க் போகணும். துணைக்கு வர்றிங்களா அக்கா’னு கேட்டா. திருமணமாகி பெரியவ பிறந்து ஒன்றிரண்டு வருடம் இருக்கும்.
  அங்க சும்மா சுற்றிட்டு டைம்பாஸ் பண்ணினேன். அதனால துணைக்கு வர்றேன்னு கிளம்பிட்டேன். அத்தையும் போக சொல்லிருந்தாங்க.

  பேங்க் ரோட்டுக்கு மெயின் பிளேஸ்ல இருக்கும். அதனால் போக வர வந்துடலாம்னு இருந்தோம்.
  ஆனா தங்கையின் சொந்த தாய்மாமா வீடு பேங்க் பக்கமா அங்கயிருக்கவும், அவ அங்க போயிட்டு பேங்க் போக நினைத்தாள்.
  நானோ ‘தெரியாத வீடா அய்யோ’னு முழிச்சேன். சௌந்தர் சொன்னா, ‘அக்கா நம்ம சாந்தி அக்கா வீடு தான் பயப்படாதிங்கன்னு’ கூட்டிட்டு போனா. அவ சொன்ன நேம் எனக்கு நல்லா தெரிந்தவங்க தான்.

    அத்தை-சித்தி வீட்டுக்கு அவங்க வந்து போவதை பார்த்திருக்கேன்.
  பேங்க்ல போகும் முன்ன அவங்க வீட்ல போனதும் அவங்க என்னை வரவேற்று உட்கார வச்சிட்டாங்க. பேங்க்ல நிறைய கூட்டம் என்றும், நிறைய பிரஸீஜர் இருக்கும் என்றும் சௌந்தரும் அவ மாமாவும் செல்வதாக இருந்தாங்க.
  எனக்கு அப்ப நான்? அதே தான்… கொஞ்சம் என்ன செய்ய போரடிக்குமேனு திருதிருனு விழிச்சேன். இதுல சாந்திக்கா வேற பாட்டு கிளாஸ் டீச்சர் வந்துட்டாங்க. நான் வேற போகணும்.  பிரவீணா சாரிடா.. டிவி பார்க்கறியா இல்லை புக் படிக்கறியானு தவிப்பா கேட்டாங்க.
  சிலரோட முகம் அவங்க மனதை பிரதிபலிக்கும். அவங்க பேஸ் அப்படி இருந்தது. இல்லைக்கா டிவி வேண்டாம் புக் படிக்கறேன்னு சொன்னேன். ஒரு சில புக் தந்து எந்த ரைட்டர் கதை படிக்கறியோ எடுத்துக்கோனு நீட்டினாங்க.

நான் ரமணிசந்திரன் அம்மா கதை ஒன்றை எடுத்தேன்.
   டிவி பார்த்தா பாட்டு கிளாஸுக்கு டிஸ்டர்பா இருக்கும்னு நினைச்சேன். அதோட புக்னா கவனம் கண்கள் இரண்டும் புத்தகத்துல போயிடும்.
    ஆக்சுவலி நான் கொஞ்சம் பாஸ்ட்ரீடர். அதோட புக் எடுத்தா முடிச்சிடற கேரக்டர். அதனால் வேகமாக வாசித்தேன்.
  நல்லா நினைவுஇருக்கு, ரமணிசந்திரன் அம்மாவோட ‘ஒருமலர்’ கதை வாசிக்கறேன்.
  சுவாரசிமாக நேரம் போனதே தெரியலை. ஒரு இருபது பேஜ் வாசிக்காம இருக்கும் சமயம், அக்காவும் கிளாஸ் முடிந்து வந்தாங்க.

“சாரிடா பாட்டு கிளாஸ் மேம். எனக்காக ரொம்ப தொலைவில் இருந்து வர்றாங்க. கிளாஸ் கேன்சல் பண்ணவும் முடியலை. உன்னை தனியா உட்கார வச்சிட்டோமேனு கஷ்டமாயிருக்குனு சொன்னாங்க. அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா டைம் நல்லா போச்சு. புக் இருந்ததால் தனியா இருந்த பீல் இல்லைனு சொன்னேன். அப்பறம் முழுச படிக்கலைன்னா இந்த புக் எடுத்துட்டு கூட போடானு சொன்னாங்க.
  இல்லைக்கா…. இருக்கட்டும்னு சொன்னேன். அதேநேரம் தங்கை மாமா வந்துட்டாங்க. அடுத்து வீட்டுலயிருந்து போன் மேல போன். ஜிகிஷா எங்க அம்மா எங்க கேட்டுட்டே இருந்திருக்க, வீட்டுக்கு போக அவசரமா கிளம்ப,நீ புக் எடுத்துட்டு போடா. படிச்சிட்டு அங்க வை. சௌந்தர் திரும்ப வந்து தருவா.’ என்று சொன்னாங்க.

  ஓகேனு கிளம்பிட்டேன்.

வழிநடுவுல சௌந்தர் வேற சாரிக்கா மத்த நேரம் சீக்கிரம் வேலை முடியும். இன்னிக்கு ஹிந்தி ஆட்கள் பேங்க்ல நிறைய பேஅ ஊருக்கு பணத்தை அனுப்ப வந்துட்டாங்க. அவங்களால டிலே ஆகிடுச்சுனு சொன்னா. அப்ப அங்க நிறைய ஹிந்திக்காரர்கள் பேங்க் மூலமாக வீட்டிற்கு பணம் அனுப்பும் வாரம் போல.
  புக் படிக்க நேரம் போச்சு சௌந்தர். அதோட அந்த அக்கா வர்றப்ப எல்லாம் பார்த்ததால் பிரெண்ட்லியா பீல் ஆச்சு. வித்தியாசமா இல்லை.னு சொன்னேன்.

  இந்த புக் ‘ஒரு மலர்’ சாப்பிட்டு அடுத்த பதினைந்து நிமிடத்தில் வாசித்துட்டேன். அப்பறம் அத்தையும் வாசித்தாங்க. புக் அங்கயே கொடுத்துட்டு சென்னை வந்துட்டேன்‌.

இங்க வந்த பிறகு புக்கோட தாக்கம். ஐ மீன்… நாவல் படிக்கிற ஆர்வம் அதிகமாச்சு. நாவல் புக் படிக்க தேடினேன். இந்த இன்சிடெண்ட் தான் என்னோட பாதைக்கு முதல் செங்கல்.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!