💟-2
கொலுசு கால்கள் அந்த இடமே அதிர் வந்து நின்றாள் தன்ஷிகா.
சுட சுட சொம்பில் இருந்த பாலை கவியரசன் மேலே ஊற்ற சென்றாள். அப்பொழுது தான் தனது கைக்கடிகாரம், போனை மேஜையில் வைப்பதற்காக திரும்பியவன் தன்ஷி செயலில் தன் தலையில் சிந்த வந்த சூடான பாலை தடுத்தான்.
அவன் கையில் சூடாக படவும் “தன்ஷி என்ன இது கொதிக்குது.” என்று கை உதறியவன் அங்கிருந்த வாஸ்பேஷன் கை அலம்ப கண்ணாடியில் தன்ஷிகா இவனின் மீது அந்த செம்பு குவளையை வீசியெறிய பார்த்தாள். அதை கண்ணாடி பிம்பத்தில் கண்டு நகர, அங்கே கண்ணாடி சிதறி இருந்தன.
“என்ன தன்ஷி இது… கோவமா வருவ என்று தெரியும் அதுக்காக இப்படியா?” என்றான் கவியரசன்.
“அதான் தப்பிச்சிட்டியே… என்ன ஒரு ஜென்மம்டா நீ… அக்காவை தாலி கட்டி 5 வருஷம் ஆனது. இப்ப தங்கச்சி என்னையும் என் விருப்பம் இல்லாம தாலிகட்டியிருக்க, இதுக்கு எங்க அப்பா அம்மா துணை வேற, உன்னை…” என்று மறைத்து வைத்த நெயில் கட்டர் கத்தியை எடுத்து அவனை குத்த பார்க்க அவனோ லாவகமாக அவளின் கையை பிடித்து அவள் முதுகில் மடக்கி கத்தியை பிடுங்கினான்.
“கொஞ்சம் இடம் கொடுத்தேன் என்ன வேலை பார்க்கற நீ…” என்று அங்கிருந்த சார்ஜர் வைத்து அவளின் கையை கட்டி இறுக்கினான்.
“விடு டா எருமை..” என்று திமிறியவளின் முன் சில பத்திரம் எடுத்து போட்டான்.
அவளோ “முதல் மனைவி உயிரோடு இருக்க இரண்டாம் கல்யாணம் பண்ணி இருக்க உன் மேல கேஸ் போடறேன்” என்று பேசியபின் அங்கே கட்டிலில் அவளை வலுக்கட்டாயமாக அமர வைத்தவன் அவள் முன் அந்த பத்திரம் எடுத்து அவள் படிக்க திருப்பி காட்டினான்.
படிக்க படிக்க அவளின் பார்வையில் கோவம் தனியவில்லை. அடுத்த ஒரு பத்திரம் எடுத்து அவள் படிக்க திருப்பி காட்டினான் அடுத்து ஒரு பத்திரம் எடுத்து காட்ட அவளோ பேச ஆரம்பிக்க தடுத்தவன்
“புரிஞ்சதா… முதல் பத்திரம் எனக்கும் உங்க அக்கா அவந்திகா கோர்ட் கொடுத்த விவாகரத்து பத்திரம் அடுத்து உங்க அக்கா குழந்தை பெற முடியாது கருப்பபையில குழந்தை தங்காது என்ற ஆதாரம்.
அடுத்து அதில் உங்க அக்கா உன்னை கல்யாணம் செய்ய முழு சம்மதம் தெரிவித்து இருக்கா… கடைசி பத்திரம் நீ சைன் பண்ணி இருக்க என்னை கல்யாணம் செய்ய முழு சம்மதம் தெரிவித்து இருக்கற மாதிரி..” என்று மூச்சுவாங்க கூறிமுடித்தான்.
“அது அப்பா இங்க வேலைக்கு என்று என்கிட்ட கையெழுத்து வாங்கியது. நீ அதை இப்படி பண்ணி வைத்திருக்க” என்று சூடாக பேசினாள்.
“ஆமா ஆனா இது நீ இப்ப இப்படி சொன்னா யாரும் ஒப்புக்கொள்ள மாட்டாங்க… கோவிலில் நான் உன் கை பிடித்து கூட்டிட்டு வந்தப்ப அவ்ளோ கோ-ஆப்ரேட் பண்ணின… கோவில் வெளியே இருந்த சிசிடிவி கேமிரால நீயும் நானும் அழகா வந்து தான் கல்யாணம் பண்ணி கொண்டோம்.” என்று சிரிக்க தன்ஷிகா வயிறு எரிந்தது.
“உன்னை நல்லவனு நம்பினேன்டா… வார்த்தைக்கு வார்த்தை ‘மாமா’ என்று எவ்வளவு மரியாதை கொடுத்தேன்… அப்பா அம்மா அடுத்து நீ என்று நம்பினேன்டா… எல்லாம் தப்புனு இப்ப எண்ண வச்சிட்டியே…” என்று அழ, கவியரசன் மனதில் ஒரு கணம் இளகியது.
அடுத்த கணம் “இப்பவும் ஒன்றும் மாறலை தன்ஷிகா உன் வாழ்க்கையில் உன் அப்பா அம்மாவுக்கு அடுத்த உறவு கணவன் என்ற பதவி எனக்கு தான் அதனால் தப்பில்லை” மீண்டும் சிரிக்க கையில் அசைத்து கைக்கட்டை அவிழ்க்க முயல அவளுக்கு உதவியாக கவியரசன் கைகட்டை அகற்றினான்.
அடுத்த நொடி வெளியே போக போனவளை இழுத்து கதவில் சின்ன பூட்டை போட்டு சாவியை எடுத்து கொண்டு நின்றான்.
“நீ என்ன கத்தினாலும் அத்தை மாமா வர மாட்டாங்க… நீ வெளிய போக கூடாது என்று பூட்டினேன்.” என்று விளக்கினான்.
“அக்கா…” என்று கத்தினாள்.
“காலையில் கல்யாணம் பண்ணி வைத்திருக்க…இப்ப நீ கூப்பிட்டா வருவாளா? நீ வேற அரச மரத்தில் கிருஷ்ணர் தொட்டில் எல்லாம் கட்ட வாங்கியிருக்க, பத்தாவது மாதம் குழந்தை வேண்டாம்?” என்று பேச தன்ஷி கவியரசன் கன்னத்தில் அறைய கை ஓங்க, அது அந்தரத்தில் இருந்தது.
“நீ தானே சொன்ன அக்கா ஓகே சொன்னா முத்தம் தர்றேன்னு. இப்ப முறைக்கிற அடிக்க கை ஓங்கற…” என்று கிண்டலாய் பேசினான்.
“அக்காவை பொண்ணு பார்க்க வந்து என்னையே பார்த்தியே அப்போ புரிந்து இருக்கணும் நீ என்ன மாதிரி ஜென்மம்… நீ ஒரு பொறுக்கி…” என்றதும் அவளை அடிக்க கவியரசன் கை ஓங்க தன்ஷிகா இறுக்கமான கண்கள் கண்டு அப்படியே நிறுத்தினான்.
மெல்ல மெல்ல இமை திறந்தவளின் பார்வையில் சமநிலை அடைந்த கவியரசன் “காலையில் உன் கன்னத்தில் என்கிட்ட அறை வாங்கின கன்னம் இருந்தா நல்லா இருக்காது. என் மீசை குத்தி சிவந்து இருந்தா தான் நல்லா இருக்கும்” என்ற் சொன்னதும் தன்ஷிகா முகம் அச்சத்தில் வெளிறியது.
கவியரசன் பால்கனியில் நிற்க கண்டு வேகமாக தன்ஷி அவனை உள்ளே வைத்து லாக் செய்து நிம்மதியாக, அந்த பக்கம் சிரிப்பை அடக்கினான் கவியரசன்.
“இன்னிக்கு தப்பிக்கலாம் டெய்லி தப்பிக்க முடியுமா” என்றான்.
“நாளைக்கு கல்லை தூக்கி உன் மேல போட்டுடுவேன்” தன்ஷிகா சொல்ல கவியரசன் சிரிப்பது நன்றாகவே கேட்டது.
மெத்தையில் பூக்கள் கொண்டு இதயம் வரைந்து இருந்த பூக்களை கண்டவள் அதனை கலைத்து விட்டு கண்ணீரோடு படுத்து உறங்க காலையில் இருந்தே இருந்த களைப்பில் உறங்கி போனாள்.
அதிகாலையில் தன் முன் அலைபாயும் கேசமும் உதடு விசிலில் ஒலியெழுப்ப டிரஸிங் கண்ணாடியில் வெற்று மார்பில் சட்டை பட்டனை மாட்டி கொண்டு இருந்தான் கவியரசன். அவனின் இதய பகுதியில் ஒரு பொட்டு அளவு மச்சமிருக்க அதையே பார்த்தவள்.
“நான் பிறக்கும் பொழுது இருந்த மச்சம் நல்லா இருக்கா?” என்றவனின் குரலில் தான் இவன் எப்படி இங்க கதவு பூட்டி தானே.” என்று பால்கனி பார்த்தாள்
“என்ன தன்ஷி நீ இந்த பக்கம் பால்கனி கம்பி ஓபன் செய்தா அந்த பக்கம் அறைக்கு வழி என்று மறந்துட்டீயா… சரி உனக்கு முதல் நாளே பிபி ஏற்ற கூடாது என்று நீ தூங்கின பிறகு வந்தேன்” என்று கண் அடிக்க இவன் வந்ததே தெரியலை இவன் என்னை.. என்று போர்வை விலகி பார்க்க தான் நேற்று இருந்த அதே கோலம் என்றதும் நிம்மதி அடைந்தாள்.
“பயந்துட்டியா உன்னை ஒன்னும் பண்ணலை… கட்டிலில் மட்டும் பக்கத்தில் படுத்துக்கிட்டேன்” சொல்லி அவள் சேலை உருவ அவனின் தீடிர் செய்கை கண்டு அதிர்ந்து நின்றாள்.
“பூ எல்லாம் நீயே கலைத்து வைத்திருக்க ஆனா சேலை அப்படி இல்லையே அதான்” என்று சேலையை சுருட்டி கிளம்பிட அவன் வீசியெறிந்த சேலை பாத்ரூமில் ஈரமாக இருக்க வேறு வழியின்றி குளிக்க மாற்று உடை எடுத்து அவனை திட்டியபடி குளித்து முடித்தாள்.
இந்த மாமா இந்நாள் வரை கிண்டல் கேலி செய்தப்ப எல்லாம் மச்சினிச்சி உரிமையில் செய்தது பார்த்தா இப்ப கணவன் வேற உரிமை கொண்டாட பார்க்கிறது. அக்கா வேற வந்ததில் இருந்து பேசலை.. மாமா சொல்றதை கேட்டுக்கோ சொன்னதோடு பார்த்தது, ஒன்னும் புரியலை யார்கிட்ட கேட்க தலையே வெடிக்குது.
புலம்பியபடி குளித்து வந்தவள் கைகளை தலைக்கு தாங்க யாரோ வர நிமிர்ந்து பார்க்க அவந்திகா கட்டில் பூக்கள் பக்கத்து அறையில் சேலை என்று பார்வை பதித்து தன்ஷிகா முன் காபி நீட்டினாள்.
“அக்கா நானே உன் லைப்பை அழிச்சுட்டேன்…” என்று கல்யாணம் பற்றி சொல்ல அவந்திகா நேற்றைய இரவு பற்றி சொல்கின்றாள் என்ற யோசனைகளுக்குள் போனாள்.
“உன்னோடது அந்த ரூம் தானே இங்க எதுக்கு வந்த?” என்ற கவியரசன் கடின குரலில் திரும்பியவள்
“என் தங்கைக்கு காபி கொடுக்க வந்தேன்” என்றாள் அவந்திகா.
“இந்த வீட்டு ராணி அவ… அவளுக்கு எது தேவை என்றெல்லாம் திலகவதி அக்கா பார்த்து செய்ய சொல்லிட்டேன் நீ செய்யாதே..” என்றதும் அவந்திகா வெளியேற கவியரசன் முகம் கடினம் குறைந்து சீரானது.
அவந்திகா கொண்டு வந்த காபி எடுத்து வாஷ்பேஷனில் கொட்ட அதற்குள் திலகவதி காபி எடுத்து வந்து சேர்ந்தார்.
“என்னக்கா தன்ஷிகா தேவை எல்லாம் உங்களை தானே செய்ய சொன்னோன்”
“இல்லை தம்பி கொண்டுவர போனேன் அதுக்குள்ள அவங்க எடுத்துட்டு வந்துட்டாங்க” என்றதும்
“இனி அப்படி நடக்காது நம்பறேன் அக்கா பார்த்து” என்று செல்ல திலகவதி பார்த்து புரியாது குடித்து முடித்தாள்.
நேராக தனது அப்பா அம்மா எதிரே நின்றாள்.
“ஒரு பொண்ணு வாழ்க்கை அழிச்சு இன்னொரு பொண்ணு வாழ்க்கை எப்படி சந்தோஷமா மாறும்? எதுக்கு இப்படி பண்ணீங்க? எனக்கு இப்பவே காரணம் தெரிந்தாகனும்.. வாயை திறங்க” என்று கத்தினாள்.
“அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க… வேணுமின்னா உங்க அக்காவை கேளு ஆனா என் எதிரில் கேட்கணும்” என்றதும்
“இங்கும் வந்துட்ட நான் என் அப்பா அம்மாகிட்ட தானே கேட்கறேன்” தன்ஷிகா கத்தினாள்
“நேற்று சொன்னது தான் யாரோ ஒருத்தி வந்து உங்க அக்கா வாழ்வில் நுழைந்து இந்த குடும்பத்துக்கு வாரிசு தர வேணாம். நீ தான் இந்த குடும்ப வாரிசு சுமக்கணும் உங்க அக்கா வாழ்க்கை காப்பாற்றனும். இதுக்கு மேல மாமாகிட்ட அவகிட்ட கேட்டுக்கோ… நாங்க கிளம்பறோம் மாப்பிள்ளை..” வணக்கம் வைத்து கிளம்ப தன்ஷிகா குழம்பி போனாள்.
ஏதோவொன்று மறைக்கிறாங்க அது என்ன? என்று அவந்திகா பக்கம் செல்ல அவந்திகா பார்வை கவியரசன் பார்த்து அவளுக்கு இருக்கும் அறைக்கு சென்றுவிட்டாள்.
சாப்பிட முரண்டு செய்தவளை திலகவதி தான் எப்படியோ சாப்பிட வைத்தாள்.
கவியரசன் ஒரு விவசாயி அவனின் நிலமே அவன் பார்ப்பதால் பணிக்கு ஆட்களை அமர்த்தி இவன் வீட்டிலே இருந்தான். அவன் இருந்ததில் முக்கிய காரணம் அக்கா தங்கை பேசிட கூடாது என்பது மட்டுமே…
தன்ஷி இருந்து இருந்து பார்த்து நேற்றைய அறையில் செல்ல பால்கனி இருந்து எப்படி வந்தான் என்று ஆராய பால்கனி கம்பி கதவு பக்கத்து அறை கண்ணாடி சைடு திறக்கும் ஐன்னல் ஒரு ஆள் வர தோதாக இருக்க ‘உப்ஸ் குரங்கு மாமா’ என்ற் திரும்ப அங்கே கவியரசன் நின்று இருந்தான்.
அவனை தாண்டி கண்கள் கதவை நோக்க கதவு தாழிட்டு இருக்க அவளை நகர விடாமல் நெருக்கி கைகளால் சிறையிட்டு
“உன்னை கல்யாணம் செய்தது எதுக்கு என்று சொல்லனுமா?” என்றான்.
ஆம் என்பதாக தலை அசைக்க “அதுக்கு நீ நான் பிரிந்து இல்லாமல் ஒன்று சேரனும்.. அப்போ நிச்சயம் சொல்வேன்” என்றான் மனதில் ஒரே இதயமாக எண்ணிடும் நாளை எண்ணி இவன் சொல்ல அவளோ ஈருடல் ஒருயிர் என்ற கருத்தில் எண்ணி பால்கனியில் தொங்கிய பூந்தொட்டி அவன் தலையில் இடிக்க வைத்தாள்.
தொடரும்.
Yennamo ragasiyam erukkuu🤔🤔🤔🤔
Story super
Hero sir nalla adi vaanguraane
Intha story already eluthuna story ah …. already padicha maari irukku