💖26
நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் நடுவில் கவின் அருகே வந்து “அப்பா போன் பண்ணினாங்க கவின் உடனே கிளம்பு” என்று தன்ஷி சொன்னதும் கவின் அவந்திகாவினால் மனம் வாடி உடல்நிலையை கெடுத்து கொண்டார்கள் என்று எண்ணி கேள்வி கேட்காது கிளம்பினான். ராமேஸ்வரம் சென்றது தான் கவின் அறியவில்லயே.
தன்ஷி தான் ‘கேள்வி கேட்காம வர்றான் லெமன் ரைஸ்…’ என்று மனதில் அர்ச்சனை செய்தபடி வந்தாள்.
கவின் ஏதேதோ யோசனையில் அமர்ந்த நேரம் எந்த ஊருக்கு செல்லும் பஸ் என்று கூட பாராது ஏறினான். ஏற வைத்தாள் தன்ஷி….
தன்ஷி டிக்கெட் செய்த பதிவை காட்டி தன்னிடமே வைக்க கொஞ்ச நேரம் கழித்து தான் கவின் செல்வது ஏசி பஸ் என உணர்ந்தான்.
“இந்த பஸ் எங்க போகுது….” என்றான் ஷிகாவிடம்
“நம்ம ஹனிமூன் பிளேசுக்கு போகுது” என்று நொடித்து சொல்ல கவின் அவள் தன்னை கேலி செய்வதாக எண்ணி அமைதியாக சாய்ந்து கொண்டு இமை மூடி கொண்டான்.
ஷிகா அவனை கண்டு ‘அடேய் லெமன் ரைஸ் நான் கிண்டல் பண்றேனு நினைச்சிட்டு தூங்கறானே… குலதெய்வ சாமி இவனுக்கு கொஞ்சம் அறிவு கொடுப்பா’ என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள அவனும் கண்டு கொள்ளவில்லை.
ஷிகா ஆச்சரியம் காக்கவே என்னவோ கவின் உறங்கி போனான். நடுவில் கூட எழவில்லை. அத்தனை அசதியாக இருக்கலாம்.
“லெமன் ரைஸ்”. என்று கூப்பிட கவின் உறக்கத்தில் இருக்க, மெல்ல அவனின் உதட்டில் அருகே சென்று அவனின் மீசையில் தன் பல்லால் கடித்து இழுத்தாள்.
‘ஸ்…. ஆ…” என்று அலறினான்.
“ஒன்றுமில்லை நான் தான். இறங்கு…” என்றாள்.
அவன் திரு திருவென மீசையை தொட்டு பார்த்தான்.
“கீழ இறங்கு அப்பறம் செக் பண்ணு. ஒரே ஒரு மீசை தான் கடிச்சு இழுத்தேன்.” என்று பெட்டியை எடுக்க அந்த கணம் தான் இறங்கி சுற்று புறம் பார்த்தான்.
அங்கிருந்த கடையில் ஏற்காடு என்று போட்டிருப்பது கண்டு
“ஷிகா இங்க…. அப்ப உங்க அப்பா அம்மா போன் பண்ணியது?”
“அதெல்லாம் பண்ணலை… நீ ஆல்ரெடி புக் பண்ணி கேன்சல் பண்ணிட்ட அதான் இங்க வர பிளான் போட்டேன். எப்படி என் சர்ப்பிரைஸ்”
” ஷிகா அவந்…” என்றதும் பேச்சை விழுங்கினான்.
“இல்ல இப்ப தான் எல்லாம் முடிஞ்சது. நீ மைண்டுல செட் ஆகாம எப்படி? எனக்கு மனசு இருக்கு அது போல உனக்கும் இருக்கு யோசிக்காம” என்று தயங்க, தங்குவதற்கு கவின் அறையை புக் செய்ய அமைதியாக இருந்தவள் அறைக்கு வந்து சேர்ந்ததும் கதவை தாழிட்டாள்.
“கவின் இங்க வந்தது மைண்ட் ரிலாக்ஸ்காக தான். ஹனிமூன்காக இல்லை. இயற்கையான காற்றில் மலை, செடி, கொடி என்று சில்லென்ற காற்றில் நாம இங்க ரசிக்க வந்தோம். சொல்லப்போனா நடந்ததை மறக்க முயல்கின்றோம்.
அத மீறி… வேற நடந்தா அப்போ பார்த்துக்கலாம். நல்லா ஆழ்ந்து மூச்சு விடு… ரிலாக்ஸா டூருக்கு வந்ததா நினை. எதுக்கு பீலிங்….?
அவ செய்ததுக்கு பனிஷ்மெண்ட் கடவுளே கொடுத்துட்டார். அவ்ளோ தான். இங்க பாரு…” என்று சௌமி வீட்டில் அவந்திகா தனக்கு எழுதி வைத்த மன்னிப்பு கடிதமாக ஒன்றை நீட்ட வாங்கி படித்தான். அவந்திகா ஒரு முடிவோடு தான் சௌமி வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாளோ என்னவோ.
அதில் ஏற்கனவே சொன்னதோடு.. என்னை போன்றவளின் இறப்பில் உங்கள் வாழ்வை வீணாக்காதீங்க’ என்று இருக்க கவின் கடிதத்தை திருப்பி கொடுத்தான்.
“எனக்கு அவந்திகா என்ற மனைவி ஐந்து வருஷம் முன்னவே இறந்துட்டா… இது எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனா உன் அக்காவை பற்றி எல்லாம் தெரிந்தும் எனக்காக மாறிட்டு இருக்கற ஷிகாவை தான் பிடிக்கலை. அதான் தள்ளி இருக்கேன்.
என்ன பார்க்கற அவ்ளோ கெடுதல் செய்த உங்க அக்கா இறந்ததுக்கு நீ அழலை என்று மட்டும் சொல்லாதே… எப்பவும் காக்கா குளியல் போல 5நிமிட குளியலில் ஓடி வர்றவ நீ…
இப்ப இடைப்பட்ட நாளில் இருபது நிமிஷம் முப்பது நிமிஷம் ஆக்கற… பாத்ரூம்ல சென்னை-28 ஜெய் மாதிரி அழறது எனக்கு தெரியாதுனு நினைக்கிறியா? சாப்பாட்டு கூட காக்காவுக்கு கொடுத்துட்டு இருக்க… எனக்கு நீ தான் டி பிரச்சனை.
வாயை திறந்து நீ சொல்லலை. ஆனா நீ உன் அக்கா மேல எவ்ளோ பாசம் வைச்சி இருக்க என்று தெரியும். ஹாஸ்டலில் இருந்தப்ப எல்லாம் உன்கூட அத்தை மாமா பேசலை என்று நீ கவலைப்பட்டதை விட, உன் அக்காவுக்கு குழந்தை வேணும், அக்கா ஹாப்பியா இருக்கனும் என்று எப்படி வேண்டினனு தெரியாம இல்லை. அதனால தான் நீ காலேஜ் படிக்கிறப்ப என் கண்கானிப்பில் அவளை உன் கூட பேச வச்சது. ” என்றதும் இத்தனை நாள் தன்னை கண்காணித்து சரியா சொல்றான் என்று பார்வை பார்த்து வைத்தாள்.
“சௌமி வீட்ல நீ அக்கா டெத்கு பீல் பண்ணாத மாதிரியே சீன் போட்ட பாரு அய்யய்யோ செம ஆக்டிங்… ” என்றதும் கேவலோடு தன்ஷி கவின் மார்பில் ஒடுங்கி அழ செய்ய, ‘நீ அழது முடி’ என்றது போல கற்சிலை போல நின்றான்.
இருபது நிமிட கேவலுக்கு பின் “நிஜமாவே அக்கா இப்படி இருப்பா என்று எனக்கு தெரியாது. அவ மேல ரொம்ப கோவம் வந்தது. அவளை உண்டில்லைனு கேள்விக்கேட்டு என் கோபத்தை காட்ட நினைச்சேன்.
சாகும் பொழுது அவ உயிர் கொடுத்தது அவ மேல இருக்கற கோவம் எல்லாம் போயிடுச்சு. எனக்கு அவந்திகா எனக்காக செத்துடுட்டா என்ற வருத்தம் தான் இருக்கு.
அவ லைப்ல சரியான முடிவு எடுக்காம கூடுதலா, என் லைப்ல எப்படி எல்லாம் விளையாடினா என்று தெரிந்தும்..
எங்க நான் சொன்னா நீ என்னை தான் திட்டுவ அதான். அவளுக்காக அழ கூட செய்யலை. அப்பா அம்மா கூட உனக்காக தானோ என்னவோ புத்திர சோகம் இல்லாதது போல இருக்காங்க.” என்று கண்ணீரை துடைத்தாள்.
“கொஞ்சம் காலம் போன எல்லாம் மாறிடும் ஷிகா…. நீ முதலில் ரிலாக்ஸா ஆகு. மற்றது தானா நடக்கும்… இல்லை இல்லை எனக்கு நீ மாறற என்று தெரிஞ்சாலே, உன்னை எனக்கு சொந்தமாக்கிப்பேன்.. புரியுதா” என்று மூக்கை திருகினான்.
“ஆஹ்…. லெமன் ரைஸ்” என்று மூக்கை தேய்து வலியை விரட்டினாள்.
“குளிச்சிட்டு வர்றேன் சாப்பிட்டு சுத்தி பார்க்கலாம்” என்று சொல்ல சிரித்தான்.
இருவரும் சாப்பிட சென்றனர். சுத்தியும் பார்க்க செய்தார்கள்.
முதல் இரு நாள் சுற்றி பார்த்து அவளின் தாய் தந்தையோடு பேச அப்பத்தாவிடம் பேச, இடையில் தர்ஷனிடம் அந்த சிறுமி பற்றி விசாரித்து கொண்டான்.
மூன்றாம் நாள் ஒரு கோவிலில் மரம் இருக்க சென்றார்கள். அங்கே கிருஷ்ணர் தொட்டில் கட்ட சொல்லி விற்பனை பெண்மணி இவர்களிடம் பொம்மை வாங்கிக்க சொல்லி கேட்டார்.
தன்ஷிகாவுக்கு அவந்திகா நினைவு வந்தது. அவளுக்கு முன்னே வாங்கியது. அதன் பின் அப்பத்தா கவியரசன் குழந்தை வேண்டி தன்னிடம் யாசித்தது வேறு தோன்றி மறைந்தது.
கவியரசன் ஷிகா உன் விருப்பம் என்பது போல பார்க்க தன்ஷிகா தான் “அவங்களுக்கு விற்கலை போல ஒன்று தானே இருக்கு வாங்கி கட்டுவோம்” என்று அவள் சொல்லி தலைக்குனிய சட்டையில் இருந்து பணம் எடுத்து நீட்டினான்.
பொம்மையை வாங்கியவள் அதனை கட்ட இடம் தேட விற்ற பெண்மணியோ “ஏப்பா பொஞ்சாதி கூட சேர்ந்து மனதார கட்டுங்க கிருஷ்ணனோ ராதையோ அடுத்த வருஷம் கையில் இருப்பாங்க” என்றதும் சிரித்தபடி வேஷ்டி மடித்து உதவ வந்தான்.
அந்த பெண்மணியும் இடத்தை காலி செய்ய, சுற்றி முற்றி பார்த்த கவியரசன் தன்ஷிகாவை இடை பற்றி தூக்க அந்தரத்தில் பறக்கும் உணர்வோடு அரசமரத்தில் கட்டி முடித்தாள்.
வெற்றிடை கண்ணில் படாது சுடிதார் இருக்க பெருமூச்சை விடுத்து இறக்கி விட்டான்.
அவனின் கண்கள் சென்ற இடம் கண்டு தன்ஷிகா உள்ளுக்குள் சிரித்தவள் நடை போட கவியரசன் பின் தொடர நிதானித்து மெல்ல நடக்க, அவனும் அவளும் ஒரு சேர நடக்க அறைக்கு வந்து சேர்ந்தார்கள்.
“எனக்கு கால் வலிக்கு டின்னர் வாங்கிட்டு வந்திடு கவின். எனக்கு மசாலா தோசை ஓகே. உனக்கு வேண்டுமின்னா பிரியாணி வாங்கிக்கோ.” என்று ஆணையிட்டாள்.
“ஏன்டி வரும் போதே சொன்னா வாங்கிட்டு வந்திருப்பேன்”
“பொஞ்சாதிகாக இதை கூட செய்ய மாட்டியா டா லெமன்” என்றதும் கிளம்பினான்.
இங்கு தன்ஷி குளித்து சேலை அணிந்து பூ சூடி மிதமாக அறையை வாசனை திரவியம் அடித்து அலங்கரித்திட, வந்தவன் அவளின் தோற்றம் கண்டுக்காமல் குளித்து உண்ண ஆரம்பித்தார்கள்.
கவியரசன் சேலை எதுக்கு கட்டி இருக்க? என்று கூட கேட்காது போக எரிச்சலோடு உணவை காலி செய்து லைட் அணைத்து உறங்க, தன்ஷி அர்ச்சனை செய்தபடி திட்டி கொண்டு இருந்தாள்.
கவியரசன் அதனை கேட்டு உள்ளுக்குள் சிரித்தான். கொஞ்ச நேரம் கழித்து அவளின் வெற்றிடையில் கை பதிக்க தன்ஷிகா விதிர்த்து சிலிர்த்து அடங்கினாள்.
“க…க…கவின்…” என்று இழுக்க, உதட்டால் முதுகில் ஊர்வலம் போட திரும்பி கவின் முகம் பார்க்க “கவின்… மீசை கூசுது… ” என்று நெளிந்தாள்.
“நீ மீசைய வர்றப்ப கடிச்சு விட்டதால், பழிக்கு பழி வாங்குது போல” என்றவன் அவனின் சீண்டலை அதிகப்படுத்தி கொண்டான்.
ஷிகா-கவி இணைய ஆரம்பித்தது.
பத்து நாட்களுக்கு மேலே ஏற்காடு குளிரில் தங்கள் தேடுதலை தேடி, அது இனி முடியவே முடியாது என்றது போல அன்பில் காதலில் திளைத்தார்கள்.
தங்கள் ஊரில் வந்து நெல் பயிரிட அது கொஞ்ச மாதங்களில் வளர்ந்து செழிக்க அதே நேரம் தன்ஷிகா வயிறும் வளர துவங்க மயங்கி சரிந்தாள்.
அதற்கான காரணம் கூறப்பட்டதும் கவியரசன் அவள் கன்னம் பற்றி முகமெங்கும் முத்தமிட்டான்.
“தாயி வம்சத்தை விருத்தி பண்ணிட்ட தாயி, இந்த கிழவி உசுரு கொள்ளு பேரன் கண்டுட்டு தான் மேல போகும்” என்று அப்பத்தா தன்ஷிகாவுக்கு சுற்றி போட செய்தார்.
திலகவதி கூடவே இருந்து பார்த்து கொண்டார். ஊரில் அவளின் ஆச்சி இறந்த சில நாளில் திருமணம் பேச்சு போக இதோ இனிதாய் திலகவதி திருமணமும் நடைப்பெற முடிவானது.
நிறை மாத நிலவாய் தன்ஷிகா மாடி படியேறி வந்து கவின் அருகே நின்றாள்.
“என்ன சார் இன்னும் நிலவை தான் ரசிக்கறிங்களா?” என்றாள்.
“பின்ன தென்றல் உறுதுணையே இந்த நிலா தானே!” என்று அவளை அணைக்க கவியரசன் தன்ஷிகாவை அந்த முழுநிலவு ஆசி வழங்கியது தென்றல் மூலமாக….
அடுத்த சில நாளிலே தன்ஷிகா- கவியரசன் இணைந்து வைத்த உருவமாக ‘ஷிகாகவி’ என்ற பெண் குழந்தை பிறப்பாள்.
💟……….சுபம்……💟
– பிரவீணா தங்கராஜ்
இது உண்மை சம்பவம் தழுவிய கதை. கொஞ்சம் கற்பனை சேர்த்து கொடுத்துள்ளேன். பிரியாணிக்காக பெற்ற இரெண்டு குழந்தையை கொண்ற பெண்ணின்(அவந்திகா வைத்து) செய்தி பார்த்து, இந்தக் கதை எழுத தூண்டியது.
👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Super super super super super super super super 💕💕💕💕🌹💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐
நல்லகதை. விறுவிறுப்பான நடை.