Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-3

நிலவோடு கதை பேசும் தென்றல்-3

💟-3 

    தன்னறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்த அவந்திகா எப்படியும் தன்ஷிகா கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டாள் அவளிடம் நயமாக பேசி தனக்கு சாதகமாக அவளை மாற்ற எண்ணி இருக்க அதற்கு வாய்ப்பே தராமல் அரசன் இப்படி செய்து முடிப்பான் என்று எண்ணவில்லை அவந்திகா.

அப்பா அம்மா சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மட்டும் அந்த உண்மை அறியாது இருந்தால் இத்தனை நடந்திருக்காது.

அப்பா அம்மா இனி தன்னை நம்ப போவதில்லை ஆனால் தன்ஷிகா நயமாக பேசினால் எனக்காக உயிரை கூட தரும் பிறவி தான் அவள். கவியரசன் பற்றி ஏற்கனவே அவள் மனதில் இருக்கும் இடம் அறியாமலா..

மனதில் முடிவு எடுத்து தன்ஷிகாவை பார்க்க கதவை திறக்க தன் திட்டத்திற்கு எல்லாம் நந்தி போல கவியரசன் அமர்ந்து அந்த மாத கணக்கு வழக்கு பார்த்திருக்க எதிர் அறையும் பூட்டி இருக்க அறைக்குள்ளே முடங்கினாள்.

மதியம் உணவு சாப்பிட வருகையில் தன்ஷி அவளாகவே அவந்திகா அறைக்கு செல்ல அவந்திகாவை தடுத்த கவியரசன் தன்ஷிகாவை தடுக்க முடியாது இருந்தான்.

“வா தன்ஷி உனக்கு இப்ப தான் மாமா பேச்சு மீறி வர தோன்றியதா?” என்று நக்கலடித்தாள்.

“உனக்கு என் மேல கோவம் இல்லையா உன் வாழ்க்கை பங்கு போட வந்திருக்கேன் நீ இப்படியிருக்க… ஒரு சுடிதார் கூட உனக்கு பிடித்தது என்றால் எனக்கு தர மாட்ட இப்ப எப்படி? நிஜமா நீ தான் அவந்திகாவா என்று டவுட்டா இருக்கு.. எனக்கு இங்க என்ன நடக்கு சொல்லேன்.. ப்ளீஸ்” தன்ஷிகா கேட்க வசதியாக சொல்ல ஆரம்பித்தாள்.

“டவுட்டே இல்லை நானே தான். எப்படியும் எனக்கு குழந்தை இல்லை என்று வேற கல்யாணம் பண்ண இருந்தவர் தான்.. அவருக்கு தான் உன்னை பார்த்த நாளில் இருந்து பிடிக்குமே… நான் வாழா வெட்டியா வீட்டில் இருந்து அதனால் உனக்கும் வரன் தட்டி போச்சு என்றால்… அதான் அப்பா அம்மா இவர் உன்னை கட்டிக்க கேட்டதும் நானும் இங்க இருப்பேன் நீயும் இங்க ராணி மாதிரி இருப்ப என்று அப்பா அம்மா சேர்ந்து ஒப்புக்கொண்டு விட்டாங்க… விதி ஒரே வீட்டில் நீயும் நானும்… சுடிதாரே உனக்கு விட்டு கொடுக்க மாட்டேன் அப்படி இருக்க….” அவந்திகா முகம் எதையும் வெளிப்படுத்தாது இருக்க தொடர்ந்தாள்.

“அப்படி இருக்க என் புருஷன் விட்டு கொடுக்க வைச்சிடுச்சு என்ன செய்ய எனக்கு தான் குழந்தை பிறக்காது என்று கல்யாணம் ஆனா இரண்டாவது மாதமே தெரிந்த விஷயமா போச்சே…” என்று சலித்தபடி கூறினாள். 

“உனக்கு கல்யாணம் ஆனதும் உன் வயிற்றில் கரு தங்கி அது கலைந்து போனப்ப பத்து சதம் பிறக்க வாய்ப்பு உண்டு என்று சொன்னார்களே.. ஐந்து வருஷம் காத்திருக்க செய்து இப்ப என்ன? அதுவும் கல்யாணம் பண்ண நான் தான் கிடைச்சேனா அவருக்கு?” என்று பொரிந்தாள். 

ஐந்து வருஷம் நீ படிக்க போனதால் இருக்கும் மனதில் நினைத்த அவந்திகா கூறிடவில்லை

“உனக்கு நினைவு இல்ல பொண்ணு பார்க்க வந்தப்ப அவர் பொண்ணு நீ தான் எண்ணி விட்டதாக சொன்னது” என்றதும் தன்ஷிகா தலை ‘ஆம்’ என்பதாய் அசைந்தது.

“சரி மாமா மனசு கோணாமா நடந்தியா நீயாவது குழந்தை பெற்றுக்கொடு மனுசன் வேற ஒருத்தியை தேடிட போறார்” என்று தங்கையின் பதிலை எதிர்பார்க்க அவளோ மனதில் ‘மாமா வேற ஒருத்தியை தேடிட மாட்டார்… அவர் ராமர்’ என்ற தன்ஷி மனசாட்சி சொல்ல மறுபுறம் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் அக்கா கல்யாணம் ஆகி இரண்டு மாத கரு தங்கி கலைந்தவ… இத்தனைக்கும் அந்த கரு கலைந்ததுக்கு மாமா தான் காரணம் அக்கா சொன்னா.. இப்ப மாமா என்ன கட்டி கொண்டார். இதுல ராமராக்கும் முருகன் அவன் என்று திட்டினாள்.

அவர் பேச்சு உரிமை கூடி இருக்கு தவிர வருத்தப்படற மாதிரி தெரியலை.. ஏதோ ஒரு சந்தோஷம் தான் அவர் முகத்தில்…

“நான் கேட்டிட்டு இருக்கேன்…” என்ற அவந்திகா இடிக்க கவியரசன் கதவு திறக்க சரியாக இருக்க தன்ஷிகா கை பிடித்து தர தரவென இழுத்து சென்றவன் அவளுக்கென இருக்கும் அறையில் தள்ளினான்.

“எதுக்கு டி அங்க போன?” என்று கடுகடுத்தான். கொஞ்ச நேரம் போனால் அவந்திகா ஏதேனும் பேசியிருப்பாளென காத்திருந்து அவள் தேவையற்றதை பேசவும் கவியரசன் வந்து விட்டான். 

“என் அக்கா பார்க்க போனேன் உங்களுக்கு என்ன?” என்று சண்டை கோழியாய் சிலிர்த்தாள். 

“அக்காவா அது முடிஞ்சிடுச்சு கதை… இனி நீ அவ’ தனி, தனி குடும்பம். உன் வாழ்க்கையில் நான் தான முதலில்.. அதனால் நான் சொல்றது கேளு… நீ அங்க போக கூடாது.” என்றதும்

“நீ சொல்றது கேட்க முடியாது வெளியே போடா” என்று தன்ஷிகா கத்தினாள். தாலி கட்டிட்டானாம் தாலி என்று கத்தினாள். 

“ஏய் அவளோட பிளேனே நீ நான் சண்டை போடனும் தான் டி அதனால் கொஞ்சம் மெதுவா பேசு..” என்று தணிந்தவனாய் பேசினான்.

“யாரு அவ அப்படி நினைப்பவளா? அவ லைப் ஸ்பாயில்னு தெரிந்தே கல்யாணம் பண்ணி வைத்திருக்கா எப்படி இப்போ இப்படி பேச முடியுது… இப்போ கூட உங்களுக்கு ஒரு வாரிசு தான் பெற்று கொடுக்க சொன்னா தெரியுமா..” என்றதும் இகழ்வான முறுவல் புரிந்தவன்

“வாரிசு தானே பெற்றுப்போம்… ” என்றவன் பார்வை தன்ஷிகா கண்களை தான் மேய்ந்தது. அதில் என்னவோ தேடி கொண்டு இருக்க.. கண்களை மாற்றி விட்டான். அவனின் கண்ணில் ஏதோ உணர துவங்கியவள் அவனின் பார்வை மாற்றத்தில் இயல்பில் நடப்பை ஆராய்ந்தாள்.

“இங்க இருந்து சாயந்திரம் உங்க வீட்டுக்கு போகனும். ரெடியா இரு… அங்க போய் பேசற வேலை வேணாம்…” ஏதோ பேச வந்தவளை

“கொஞ்ச கொஞ்சமா நானே சொல்றேன்.. என்னை முதல்ல புரிந்துகொள்ள முயற்சி செய்” என்றவன் வெளியேறி நிற்க யோசித்து குழம்பியவள் தன் வீட்டுக்கு என்றதும் எடுத்து வந்த துணிகளை அப்படியே ஜிப் மூடி எடுத்து வைத்தாள். 

    கதவை திறந்து வர எதிர் அறையில் கவியரசன் அவந்திகாவை என்னவோ சொல்லி எச்சரிக்கை செய்ய, அவளோ தன்ஷிகா பார்த்து விட்டு இதுவரை வராத கண்ணீரை துடைத்தப்படி அவனை கடந்தாள்.

 தன்ஷிகா கடக்கும் நேரம் “என்ன யார் வந்தாலும் மறக்க மாட்டிங்க என்று தெரியாதா உங்களுக்கு வாரிசு தானே அவள் தந்தாலும் மனதில் முதலில் இடம் பிடித்தது நான் தானே” என்று நகர்ந்து செல்ல தன்ஷிகா இடியாய் நின்றாள்.

   கவியரசன் பையை வாங்க முயல தன்ஷிகா வெடுக்கென்ற கொடுக்காமல் செல்ல கவியரசன் தோட்டத்தில் இருந்த அவந்திகா அருகே வந்து

“என்ன அவளிடம் நான் கெட்டவன்னு சித்தரிக்கிற, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவளை பொறுத்தவரை அதான் உண்மை… ஆமா அவ முகதிருப்பி போனா எங்களுக்குள் எதுவும் நடக்காதா… நான் கட்டாயப்படுத்தி எனக்கு தேவையை நான் பார்த்துப்பேன். ஆல்ரெடி நேற்று நடந்தது தான் சேம்பிள்.. அத்தை மாமா வேற எனக்கு சப்போர்ட் நாளையில் இருந்து ராஜ கவனிப்பு நீ வேற அங்க இல்லை நிம்மதியா இருப்பேன். 

என் ஆளுமைல உன் தங்கச்சி வந்துட்டா போதும் அதுக்கு பிறகு சொல்ல வேண்டியதை எனக்கு ஏற்ற மாதிரி சொல்லிப்பேன் வர்றேன்” என்று கிளம்ப அவந்திகா இவர்கள் போவதை தடுக்க இயலாது ஒரமாக நின்றாள்.

ஏற்கனவே இவன் ஆடுவான். அவளை வேற ஐந்து வருஷம் லவ் பண்றான். சும்மாவா விட்டு இருப்பான் தன்ஷி இப்ப வரை கட்டாயப்படுத்தறான் அத வைத்து தான் நான் அவனுக்கு எதிரா மாற்றிடணும் எனக்கு கவியரசன் வேணும் என்றெண்ணியவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

தன்ஷி கையை வில்லன் போல தான் இழுத்து சென்றான். தன்ஷி முக சுழிப்பில் அப்பட்டமாக தெரிந்தது. அவந்திகா திலகவதி கண் பார்வையில் இருக்க வைத்து இருந்தான்.

வழி நெடுகில் தன்ஷி அமைதியாக வந்தாள். கவியரசன் முகம் பார்க்காமல் அவனுக்கு அவளை பார்க்க வசதியாக போனது.
வீட்டுக்கு போனதும் அம்மாகிட்ட என்ன தான் பிரச்சனைனு கேட்கனும்.

“தன்ஷி….” என்று கூப்பிட திரும்ப அங்கே மாங்காய் மிளகாய் உப்பு போட்டு விற்பதை வாங்கி நீட்டி இருந்தான் முகத்தில் அத்தனை புன்னகை சிந்தி.
வாங்கலாமா வேண்டாமா என்ற மனதில் மாங்காய் வாசம் இழுக்க மூன்று துண்டையும் எடுத்து திரும்பி கொண்டாள்.

ஒன்றை சுவைத்தபடி இவனின் முதல் நாள் வருகையை சிந்தித்தாள்.

   அக்காவுக்கு பெண் பார்க்க மாப்பிள்ளை வந்துவிட்டார் என்று சைக்கிளில் வேகமெடுத்து வந்தவள் தாய் காலையில் பேசிய பேச்சில் பின் வாசல் வழியாக வந்து குளித்து தாவணி அணிந்து அக்காவை காண ஓடினாள். 

அவளோ “வந்துட்டியா இப்ப தான் நிம்மதி… தன்ஷி தன்ஷி… மாப்பிள்ளை பார்க்க பயமா இருக்கு… இதுல இந்த காபி தட்டை வேற கொண்டு போகனுமாம் கை உதறுது… நீ இந்த காபி தட்டை கொண்டு போ நான் கொஞ்ச நேரம் கழித்து வர்றேன் ப்ளீஸ்” என்றதும் அக்காவிற்கு பதிலாக தான் காபி தட்டை கொண்டு வந்து நின்றாள்.

தனக்கு வருபவள் முதல் பார்வையில் சந்திக்கும் நேரமாக பார்க்க வேண்டும் என்று புகைப்படம் கூட பார்க்காது வந்த கவியரசன் பார்வையில் தன்ஷிகா விழ அந்நொடியே தனக்கானவள் என்ற எண்ணம் உதிக்க அவளோடு பேசுவது, கெஞ்சுவது, கொஞ்சுவது, சண்டையிடுவது, முத்தமிடுவது என்று எண்ணி பார்த்தவன் அவளை பார்த்து காபி எடுத்து கொண்டான்.

என்றும் மணப்பெண் குனிந்த தலை, அடக்கம், அதிக நகை, அழகு என்று கூடுதல் மேக்கப் என்று சினிமாவில் பார்த்தவனுக்கு தன்ஷிகா முற்றிலுமாக மாறி தென்படுவது போல தோன்றியது.

    தாவணியும் முகம் அலம்பி அப்படியே வந்த மதி முகம். சின்ன கம்பல் சிறிய பொட்டு வளையல் கூட தாவணிக்கு மேட்ச் இல்லை என்று அவனின் ஒரு பார்வையில் அவளை மனதில் ஓவியமாய் பதிந்தாள். 

“நேரமாகுது பெண்ணை கூப்பிடுங்க” என்றதும் கவியரசன் உள்ளம் அதிர்ந்து தன்ஷிகாவை பார்க்க அவளோ திரும்பி திரும்பி பார்த்திட அங்கே ஒரு பெண் பட்டு சேலை தலை நிறைய பூ, முகமெங்கும் பவுடர் என்று குனிந்திருந்த பெண் அவந்திகா வந்தாள்.

“அவந்திகா மாப்பிள்ளையை பார்த்துக்கோ..” பெண்ணின் உறவில் சொல்ல கவியரசன் முகத்தை கண்ட அவந்திகா முதலில் அலட்சியம் அடுத்து ஆச்சர்யம் பின்னர் யோசனை என்று மாறியதை அறியாது. 

 கவியரசன் அவந்திகா அருகே இருந்த தன்ஷிகாவை பார்த்து வருந்தினான்.

‘சே வீட்ல போட்டோ பார்த்து வந்திருக்கலாம். இப்ப பெண்ணை நான் மாற்றி பார்த்தேன் சொன்னா அசிங்கமாக போயிடும். அம்மா அப்பா கட்டி வைத்த பெயர், ஊர்காரங்க எனக்கு கொடுக்கற மரியாதை, எல்லாம் போயிடும். போட்டோ பார்த்து வந்திருந்தா இந்த பெண்ணை சாதாரணமாக பார்த்து இருப்பேன்.
தனக்கு அப்பத்தா மட்டுமே அவர்களும் சுபகாரியம் என்று வர மறுக்க ஊர்காரர்கள் முன் அப்படியே விட்டு விட்டு மேற்கொண்டு பேச கவியரசன் கண்கள் ஐன்னல் வழியாக மாங்காய் எட்டி பறித்த தன்ஷிகா மீதே இருந்தது.

பார்வை ஒரு பக்கம் கடினபட்டு மாற்றி இருக்க, அனிச்சையாக மீண்டும் கண்கள் தன்ஷிகாவை பார்க்க அவளோ மாங்காய் துண்டில் உப்பு மிளகாய் தூள் போட்டு கடித்து வேணுமா என்ற செய்கையால் கேட்க முறுவல் செய்த கவியரசன் தலையை இல்லை என்று மறுக்க கவியரசன் தன்னையே பார்பதை கண்டாள்.

அதே நினைவோடு தன்ஷிகா கவியரசன் பார்க்க அவனோ உரிமையாக அவள் எச்சி படுத்திய மாங்காய் பிடுங்கி உண்ண துவங்கினான்.

இவனை எல்லாம்… என்று பற்களை கடித்தவள் நான் திங்கறது தான் கிடைத்ததா இவனுக்கு என்று திட்டியபடி இருக்க அவனோ “என்னவோ உன் உதட்டை கடித்து திண்ற மாதிரி முறைக்கிற நான் 5 ரூபாய்க்கு வாங்கியது தானே.. ஆனா பாரு நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்…”நான் சொல்லலமா காதலன் படத்தில் வரும்…” என்று சிரிக்க தன்ஷி அதன் பின் இவன் பக்கம் திரும்ப யோசித்து, முறுக்கி கொண்டாள். 

மிதமான வேகத்தில்  வீடு வந்து சேர்ந்தார்கள்.

தொடரும்.

3 thoughts on “நிலவோடு கதை பேசும் தென்றல்-3”

  1. Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *