Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-5

நிலவோடு கதை பேசும் தென்றல்-5

💟-5

    இரவு தன் அறைக்கு போக அங்கே இவளுக்கு முன் கவியரசன் இருக்க விழித்தாள். உடனே யு-டர்ன் போட்டு கதவு திறக்க போக கதவு அருகே வந்து அவளை போக விடாமல் தடுத்தவன்

“இங்க பாரு தன்ஷி நீ பயப்படறது நியாயம். இத்தனை நாள் என்னை மாமா என்று எண்ணிட்டு சடனா கணவன் ஏற்றுக்க முடியாது. இந்த கதை சினிமா வர்ற மாதிரி உனக்கு டைம் கொடுக்கறேன். உனக்கு உன்னை நான் கல்யாணம் பண்ணியதற்கு காரணம் தெரியனும்னா என் கூடயிருந்து என்னை பற்றி தெரிந்துக்க மாட்டியா?” என்றவனின் குரலில் வலி தெரிய கவியரசன் என்றுமே மனதில் பட்டதை பேசிடுவான் என்று எண்ணி இருந்த தன்ஷிகாவுக்கு இதுவும் உண்மையாக தோன்றியது.

தன்னை தான் மணப்பெண் என்று அவன் முதல் நாள் பார்த்த விஷயம் அவந்திகாவிடம் திருமணம் ஆனா கொஞ்ச நாளில் இங்கு வந்த அன்று சொன்னவன் பார்வையில் அன்றும் காமம் இல்லை இன்று தன்னையே தாலி கட்டினாலும் அவன் பேச்சு எரிச்சல் கோவம் வந்தாலும் பார்வையில் அதே கண்ணியம் இருக்க யோசித்தவள்.

“எதுக்கு மாமா என்னை கல்யாணம் செய்திங்க அக்கா பாவம் தானே… என்னால அக்காவை நிமிர்ந்து பார்க்க முடியலை… உங்களையும் என் கணவரா ஏற்க முடியலை…” என்று முழங்கால் மடித்து அழ செய்ய கவியரசன் என்ன செய்து அவளை மாற்ற என்றறியாது நின்றான்.

எப்பவும் மென்மையாக பேசிட இளகிடும் தன்ஷிகா அதே திமிராக பேச அவள் அதற்கு மேல் திமிராக நடக்க செய்வாள் என்று யோசித்தவன் அதன் படி பேச ஆரம்பித்தான்.

“கணவன் உரிமை எடுத்தா தானா ஏற்று கொள்வ தன்ஷிகா” என்ற குரலில் கிண்டல் செய்ய நிமிர்ந்த தன்ஷிகா அவன் எண்ணியது போலவே

“கைவச்சி பாரு கையை உடைக்கறேன்… போடா லமென் ரைஸ்…” என்று கதவை திறக்க போராடினாள்.

அவனோ கதவை திறக்க தடையாக நிற்க சுற்றி சுற்றி பார்வை பதிக்க தன் அறை போல இங்கு பால்கனி இல்லை அதே போல கட்டிலும் பெரிதல்ல என்று யோசித்தவன்.

“இங்க இருக்க உனக்கு பயமா இருந்தா நாமா வேணுமென்னா மொட்டை மாடியில் தங்கலாம்?” கவியரசன் கேட்க சரி என்று தலை அசைந்தாள்.

அங்கிருந்த தலையனை இரண்டு பெட்ஷிட் இரண்டு தன்ஷி எடுக்க கவியரசன் ஒரு பாயை எடுத்து மேலே வந்து நின்றார்கள்.

மொட்டை மாடியில் வந்து ஆழ்ந்த மூச்சு காற்றை சுவாசிக்க புது புத்துணர்வு பெருகிட தன்ஷி பெட்ஷிட் தலையனை அப்படியே போட்டு விட்டு அங்கே இருக்கும் ஜாதி மல்லி வாசம் இழுக்க அங்கே நின்றாள்.

அதற்குள் கவியரசன் பாய் விரித்து தலையனை போட்டவன் அவள் அருகே வந்து மாடியின் விளிம்பில் ஏறி அமர்ந்து அவளை பார்க்க அவளோ நிலாவினை பார்த்தபடி நிற்க கண்டவன்.

“இந்த நிலவோடு எத்தனை பேர் அவங்க கதை பேசுவாங்க தெரியுமா….? காதல் கவிஞர்கள் முதல் எழுச்சி கவி எழுதுகிறவர்கள் வரை ஆண் பெண் குழந்தை ஒவியன் புகைப்படகாரர் எத்தனை எத்தனை பேர் ஆனா இந்த நிலாவுக்கு அதோட இதமா பேசுற தென்றல் மொழி மட்டும் புரியாது போல..” என்று ஒரு வித சோகமாய் சொல்ல செய்தான்.

அதாவது நிலாவான தன்ஷிகாவிடம் அக்கா அம்மா அப்பா தோழி கண்டக்டர் ஹாஸ்டல் வார்டன் என்று பலர் பேச தென்றலாய் தான் பேசுவது புரியாத நிலவு இவள் என்று எண்ணி சொன்னான்.

“சுத்த பொய்… நிலாவுக்கு ஆயிரம் பேர் பேச காத்திருக்க செய்யலாம் ஆனா நிலா என்றுமே தென்றலை மறந்ததே இல்லை… தென்றல் காற்று வீசாம புழுக்கம் இருந்தா நிலா அழகா இருந்தாலும் யாரும் ஆதரிக்க மாட்டாங்க இந்த தென்றல் நிலாவுக்கு முக்கியம் தான்” தன்ஷி சொல்ல கவியரசன் வானத்தில் மிதந்து போனான்.

“டேய் மாமா என்ன பண்ணி வைத்திருக்க?” தன்ஷிகா கோவ குரலில் திரும்பி பார்க்க அங்கே அவள் பாயை பார்த்து கேட்டாள்.

“அம்மா தாயே உன் ரூம்ல ஒரு பாய் தான் இருந்தது. என்ன முறைக்காதே நான் இதோ இங்க படுத்துக்கறேன் எனக்கு இது பழக்கம் தான்” என்று உட்கார இருக்கும் திண்டில் தலையனை போட்டு படுக்க தன்ஷிகா அமைதியாக போனாள்.

அவன் பழக்கம் என்பதை இவள் கவனிக்கவில்லை.

போர்வையை தன் கழுத்து வரை போர்த்தி இருந்தவள் மெல்ல

“எதுக்கு என்ன கல்யாணம் செய்த?” என்றாள். அவளை பார்த்து

“நீ என்னை லவ் பண்ண பிறகு சொல்றேன்… எனக்கு தூக்கம் வருது குட் நைட்” என்று உறங்க ‘மாமா காரணமில்லாம பண்ற மாதிரி தெரியலை அக்கா சின்ன க்ளிப் கூட யாருக்கும் விட்டு தரமாட்டா அவள் எப்படி..? இரண்டு நாளே தலை வெடிக்குது… இதுல நான் எப்படி இவரை எப்படி சும்மா விட்டேன் தெரியலை… அப்பா அம்மா அக்கா மேல அக்கறை காட்டலை.. அக்காவும் எவ்வளவு பெரிய விஷயம் ஆனா அமைதியா இருக்கா அப்போ அக்கா மேல தப்பு இருக்கா.. இருந்தா என்னவா இருக்கு… அவளுக்கு குழந்தை கலைந்தபிறகு அம்மா அப்பா கொஞ்சம் அதிகமாகவே திட்டினாங்க. ஏதோ அக்கா கவனமில்லாம இருந்தா என்று செம திட்டு அதுக்கு பிறகு மாமா கொஞ்சம் அதிகமாவே அக்காவோட விலகல் பார்த்து இருக்கேன்.

நான் காலேஜுக்கு அங்க போன பிறகு என்ன நடந்து இருக்கும். லீவு ல கூட இங்க அம்மா அப்பா வரவே விடலை… அப்பா மாமா தான் வந்து பார்த்து போனாங்க… அக்கா பேசுவா ஆனா அது என்னவோ எழுதி வைச்சி பேசியது போல இப்ப தோன்றுது. இந்த மாமா எதையாவது சொல்லி தொலைக்குதா கவியரசனை பார்க்க அவனோ முகத்தில் புன்னகை தழுவ உறங்கி இருந்தான்.

“நல்லா தூங்கு டா மாமா… என் தூக்கத்தை பறிச்சுட்டு..” சொன்னவள் நட்சத்திரத்தை எண்ண கண் சொருகி உறங்கினாள்.

அதோடு அடுத்த நாள் சூரிய ஒளி வீச கண் திறந்தவள் சூரியன் ஆரேஞ்சு வண்ணத்தில் இருக்க இரசித்தபடி போர்வை அகற்றி இரசித்தவள் திரும்ப அங்கே கவியரசன் முகத்தில் வெயில் பட தனது போர்வை எடுத்து துணி காயபோடும் இடத்தில் காய போட அவன் முகத்தில் நிழல் பட கீழே சென்றாள்.

கற்பகம் காபி பருக கொடுக்க வாங்கி பருகியவள் தன் தாயை காண அவளோ பிசியாக சமையலில் மூழ்க டிவி ஒலிக்க விட்டாள். கூடவே பாடியபடி குளித்து சாப்பிட்டும் முடிக்க, மாடிக்கு சென்று பார்த்தும்  கொண்டு வந்த துணியை அடுக்க ஆரம்பித்தாள்.

“மாப்பிள்ளை எழுந்துவிட்டாரா தன்ஷி பொங்கல் ஆறிடுது” என்று கற்பகம் சொல்ல தன்ஷியோ ‘பெரிய பொண்ணு வாழ்க்கை அந்தரத்தில் தொங்கவிட்டு பொங்கல் ஆறுது இருக்காங்களே இவங்களை…’ என்று பார்த்தாலும் மணி 10.10 ஆக இந்த மாமா இன்னும் தூங்குதா… மாடிக்கு வந்து நிற்க கவியரசனோ ஆறு மாதம் தூங்காத கும்பகர்ணன் ஆறு மாதம் உறக்கமே பிரதானமாக இருப்பது போல உறங்கினான். 

   இவனை என்ன செய்ய என்று யோசிக்க அங்கே மாடியின் தண்ணீர் தொட்டி ஒரு குழாய் இருக்க அங்கே மாடியில் இருக்கும் செடிக்கு தண்ணீர் விட தண்ணீர் குழாய் இருக்க கண்டவள் ‘மாமா நீ இன்னிக்கு எழுந்து கொள்ளும் பொழுதே குளிக்க போற..’ எண்ணியவள் பைப்பை குழாயில் மாட்டி தண்ணீர் திறந்து விட வேகமாக வந்த தண்ணீர் கவியரசன் மீது பட உறங்கி கொண்டு இருந்தவன் திடுக்கென விழித்து யார் என்று பார்த்தான்.

தன்ஷிகா என்றதும் “தன்ஷி என்ன இது… சேட்டை… நிறுத்து போதும்…” தண்ணீரை கையால் தடுத்து கூறினான்.

அவளோ “மணி என்ன தெரியுமா பத்துக்கு மேல… இன்னும் என்ன தூக்கம் கும்பகர்ணன் 6 மாசமா தூங்குவனாம் அது மாதிரி தூங்கிட்டே இருக்க… “

“நானும் 5 வருஷம் சரியா தூங்கலை” என்று மெல்ல தனக்குள் சொன்னான். 

“என்ன சொன்னீங்க கேட்கலை…” என்றாள் விடாது

“கேட்கலை இரு பக்கத்தில வந்து சொல்றேன்” என்று சட்டென அவள் அருகே வந்தவன் தண்ணீர் பைப்பை பிடுங்கி அவளையும் நனைத்து விட்டான். 

“அச்சோ நான் குளிச்சிட்டேன்” சிணுங்கி விலக அவனோ அவளின் நெருக்கத்தால் போராடி குழாயை மூடி “விடுங்க” என கோவத்தில் “இனி உங்களை மாமா என்று கூப்பிட மாட்டேன்” தீவிரமாக சொல்ல இவனோ சந்தோஷத்தில்

“சொல்லாதே ரொம்ப சந்தோஷம்” என்றான்.

அவள் அக்கா கணவன் என்ற முறையில் தானே மாமா அழைக்கிறாள் அவள். அதனால் அது கூப்பிடி மாட்டேன் என்றதும் இவனும் மகிழ்ந்து கூப்பிடாதே என்றிட மேலும் “கணவனை எல்லாம் ஏங்க என்னங்க என்று தானே சொல்வாங்க இல்லை அத்தான் சொல்லு” என்றான் நிதர்சனமான முறையில் அவளோ

“என்னது அத்தானும் இல்லை பொத்தானும் இல்லை இனி உன் பேர் சொல்லி டா போட்டு தான் பேசுவேன் போடா லெமன் ரைஸ்” என்றாள்.

“டா வா…” சிந்திப்பது போல செய்தவன் “கூப்பிட்டுக்கோ எனக்கு டபுள் ஒகே” என்றான் அவள் துப்பட்டாவில் தலையை துடைத்த படி அவளோ விடுக்கென துப்பட்டாவை உருவி கீழே செல்ல கவியரசன் நீண்ட காலம் சுழலில் சிக்கியவன் மீண்டது போல சந்தோஷத்தில் இறங்கினான்.

கையால் தலை கோதி கொண்டே வந்தவன் போனில் 67 தவறிய அழைப்பு அதில் 7 மட்டும் திலகவதி அழைக்க மற்றவை எல்லாம் அவந்திகா அழைப்பாக இருக்க பெரிதாக எடுத்து கொள்ளாது வந்தவன் குளித்து உண்ண செய்ய திலகவதி போன் மீண்டும் வர எடுத்து பேசினான்.

“எப்போ அக்கா…எப்படி? உடனே வர்றேன் அக்கா… வந்து பார்க்கறேன்.. பரவாயில்லை அக்கா” என்று போனில் பேச தன்ஷி இவனின் பேசும் முகம் கண்டு என்னவா இருக்கும்… என்று சிந்தித்தாள்.

“தன்ஷி உடனே கிளம்பு” என்றவன் போனில் அவந்திகா முதலில் அழைத்த பதிவு பார்க்க நடந்தவையை ஊகித்து கொண்டவன்

தன்ஷிகா பெற்றோரிடம் போகும் விஷயத்தை சொல்லி கிளம்ப அவர்கள் தடுக்கவில்லை.

தன்ஷி தான் “எனக்கு அப்பா அம்மா கூட இருக்கனும் நீ வேணுமின்னா போ…” என்று பொறுமையாக சோபாவில் பாட்டு கேட்டு இருந்தவளை ஏதும் பேசாது இரு கைகளால் அள்ளி அவன் காரில் அமர வைத்தான்.

“யூ.. இடியட்… காட்டு மிராண்டி.. எதுக்கு இப்படி பீகேவ் பண்ற..” என்று திட்ட அவனோ காரில் கண்ணாடி ஏற்றி அவளுக்கு பிடித்த பாடல் தட்டை போட்டு விட்டு காரினை ஒட்டினான். பாடல் இசைக்க கூடவே தன்ஷிகா கவியரசனை திட்டி கொண்டே வர நேராக அவன் வீட்டுக்கு போகாமல் அவன் வயலில் வந்து சேர்ந்தான். 

 அங்கே பாதி எரிந்து அணைந்த கரும்பு தோட்டம் கண்டப்பின்னரே  தன்ஷிகா வாயை மூடினாள்.

தொடரும்

5 thoughts on “நிலவோடு கதை பேசும் தென்றல்-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *