புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-12

நீயின்றி வாழ்வேது-12

விஷாகனிடம் உதயகுமார் பேசியது எல்லாம் போதை தெளிந்து கண் விழித்தப்பிறகு நினைவாக, ‘தப்பு செய்துட்டு வாய் சவடால் வேற விட்டிருக்கேனே. வெளியே போடானு கழுத்தை பிடிச்சி தள்ளிடுவானோ.

என்னதான் இருந்தாலும் இந்த வயசுல எனக்கொரு குழந்தை என்றால் ஊர் என்னை ஏளனமா பார்க்கும்.

சிவனின் கழுத்தில் இருக்கும் வரை தான் பாம்பிற்கு மதிப்பு. அது போலத் தான் இந்த வீட்டில் இருப்பது தனக்கு மதிப்பும், மரியாதையும் ஊர் வழங்கும். இதே மகள் பாசமென்று அபர்ணாவுக்காகச் சென்றால் ஒரே நொடியில் தன் தரம் தாழ்த்தப்படுமென்று’ புரிய அதன் பிறகு சற்று இருக்குமிடம் தெரியாமல் வீட்டில் நடமாடினார்.

விஷாகனுமே எதுவும் அவரைக் கேட்கவில்லை. அவனுக்குத் தந்தை நினைப்பை விட அவர் சொன்ன வார்த்தைக்காக விடாமல் விவேக்கிற்குத் தான் போனில் அழைத்தான்.

விருஷாலியிடம் பேசிட குட்டிக்கரணம் போடாத குறை ஒன்று தான்.

விஷாகன் விவேக்கிடம் “போன் வாங்கித் தந்தியா. அட்லிஸ்ட் அவளிடம் போனை கொடுத்து தொலைடா. முக்கியமா
ஒரு விஷயம் கேட்கணும்” என்று அதட்ட விருஷாலி வீட்டில் செம்பருத்தி அம்மாச்சி ‘போன் கீனு எதுவும் பேசவேண்டாம். இதென்னடா புதுசா இருக்கு. ஒரு செங்கல் பொட்டி வச்சி இஷ்டத்துக்குப் பேசிட்டுத் திரியறது. நான் உசுரோட இருக்கற வரை என் பேத்தி என் சொல் பேச்சு கேட்டு தான் இருக்கணும். அதுவும் கல்யாணம் ஆகறவரை இப்படித் தான்’ என்று விஷாகனிடம் பேச விடாமல் ஒரு வில்லி வேலையைப் போட்டு தடுத்தார் என்பதை எப்படிக் கூறுவான்.

”இல்ல மச்சான் வெளியே இருக்கேன்” என்று கூறினாலும் நைட் வீட்டுக்கு தானே போவ?” என்று படுத்தி எடுப்பான் விஷாகன்.

“போன தடவை மாதிரி மறுபடியும் டூ..டூருக்கு வந்தேன் மச்சான்” என்று பொய்யுரைத்தான் விவேக்.

“கல்யாண வேலையை விட்டுட்டு ஊர்சுத்தற? இதுக்குத் தான்டா உங்க அப்பா உன்னை மதிக்கறதேயில்லை. நாம அட்வைஸ் பண்ணினா முதல்ல நாம ஒழுங்கா இருக்கணும். நீயே தங்கை கல்யாணம் வச்சிட்டு பொறுப்பில்லாம சுத்தினா எப்படி?” என்று கேட்க, விவேக் முகம் வாடிவிடும்.

அதன் பின் இயல்பாகப் பேசுவான். மீண்டும் இரண்டு மூன்று முறை போன்போட விஷாகன் அதட்டலுக்குத் தந்தை, தாயிடம் விவேக் போனை கை மாற்றிக் கொடுத்து தப்பிப்பான்.

விருஷாலி கற்சிலை போல அங்குத் தான் இருப்பாள். ஆனால் மூச்சு கூட விடாத அளவிற்குச் செம்பருத்தி ‘கட்டுப்பாடு’ என்ற பெயரில் அதட்டி இருக்க, வேடிக்கை பார்ப்பாள்.

மாதங்கள் உருண்டோட திருமண நடைப்பெறும் நாட்களின் நெருக்கத்திற்கு வந்தது.

புடவை, நகை என்று சுகன்யா சுகிர்தனை அழைத்துச் செல்ல விஷாகன் பணத்தை மட்டும் தாயிடம் கொடுத்தான். கணக்கு வழக்குயில்லாமல் மருமகளுக்குப் புடவையை எடுத்து அதற்குப் பிரைடல் பிளவுஸ் என்று மூவாயிரத்திற்குத் தைய்க்கவும் கொடுத்து வாங்கியிருந்தார். இதெல்லாம் விஷாகனின் மனைவிக்கு என்ற பரவசம் முகத்தில் மிதக்கும் சுகன்யாவிற்கு.

விஷாகனுக்கோ விருஷாலியிடம் “உங்களுக்காகத் தான் மச்சான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்” என்ற வார்த்தை அவள் வாயால் கேட்டிட மனம் ஏங்கியது.

    விஷாகன் மீண்டும் அலைப்பேசியின் தொடுத்திரையில் பத்து இலக்கு எண்ணை போட்டுவிட்டு பச்சைவண்ண இணைப்பை தொடுத்தான்.

     “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல” என்ற இசைஞானியின் பாடலில் விஷாகன் மெதுமெதுவாய் கரைந்து கொண்டிருந்தான்.

    “சொல்லுங்க மச்சான்” என்ற  குரலில் தொலைந்தவன் எரிச்சலோடு “டேய் உன் தங்கச்சிக்கு போன் வாங்கித் தரச்சொல்லி பணத்தைப் போட்டு எத்தனை நாளாகுது. இன்னமும் என்ன பண்ணிட்டு இருக்க?” என்று எரிந்து விழுந்தான்.
 
       “மச்சான்… கல்யாணத்துக்கு முன்ன போன் வாங்கித் தரவேண்டாம்னு அம்மாச்சி திட்டறாங்க.
  
அப்படியென்ன அவசரம் நீங்க இங்க நாலு நாள்ல வந்ததும் வாங்கிக்கலாம்னு அம்மா சொல்லுச்சு.

  தங்கச்சிக்கிட்ட அதையும் மீறி வாங்கிக்கறியானு கேட்டேன். மாமா வந்ததும் வாங்கிக்கறேன்னு மறுத்து பேசறா?” என்று விவேக் கூறவும் விஷாகன் இங்கே தலையிலேயே அடித்துக் கொண்டான்.

    “சரி… உன் தங்கச்சி விருஷாலியிடம் போனை கொடு” என்று அதே உருட்டல் தோரணையில் பேசினான் விஷாகன்.

இத்தனை நாள் எப்படியோ அடுத்த வாரம் திருமணம் என்பதால், “அவ்ளோ தானே இதோ போறேன்” என்று போனை எடுத்துக் கொண்டு ஓடினான்.

   “விருஷாலி… விருஷாலி… விருஷாலி…” என்று கத்திக்கொண்டு ஓடவும் விஷாகனுக்கு முன்பு கேட்ட அதே இளையராஜா இசைமீட்டுவதாக உணர்ந்தான் அவளது பெயரில்…

   விருஷாலி என்ற பெயரில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான் அந்தக் காளை.

     “என்ன அண்ணா எதுக்கு என் பெயரை ஏலமிடற?” என்று நொடித்துக் கொள்ளும் பெண்ணின் குரலில் விஷாகன் கவனம் போனில் பதிந்து, ஆர்வமேலோங்க இறுக பற்றினான்.

    “போன்ல விஷாகன் மச்சான் உன்னிடம் பேசணும் கூப்பிட்டார்.” என்றதும் ஒரு பக்கம் விருஷாலியின் பாட்டி அனலை காட்ட, தாயோ கையைப் பிசைந்து நிற்க, அங்கிருந்த சில பெண்களோ சிரித்து வைத்து தொலைக்க விருஷாலியோ “நான் பேசமாட்டேன்” என்று மறுக்கப் பார்த்தாள்.

    போனை கைபொத்தி அணைத்து “மாமா ஏற்கனவே கோபமா பேசிச்சு.  இதுல நீவேற கத்திவிடாதே. என்னனு கேட்டு விரசா வச்சிடு” என்றான் விவேக்.

    பாட்டியோ “சட்டுபுட்டுனு பேசி என்னனு கேளு. கூடவே இனி இப்படி அழைக்கக் கூடாதுனு மண்டையில ஏறுறாப்ல பேசி புரியவை” என்று அறிவுறுத்தவும் கை நடுக்கத்தோடு போனை வாங்கினாள்.

     விருஷாலியையே ஆவென்று சுற்றியிருந்த கூட்டம் காணவும், “தனியா போய்ப் பேசிட்டு வா” என்று அதட்டிவிட்டார் செம்பருத்தி அம்மாச்சி.

   அந்த அதட்டலில் ‘பேசு’ என்ற ஒப்புதலைவிட இதெல்லாம் சரியில்லை என்ற கண்டிப்பு அதிகமாகத் தெரிந்தது.

    “ஹலோ… ஹலோ… இருக்கிங்களா?” என்று நோக்கியா காலத்து செங்கல் போனை உற்றுஉற்று பேசினாள் விருஷாலி.

    “இருக்கேன் இருக்கேன்… யார் பேசறேன்னு தெரியுதா?” என்றான் விஷாகன்.

    “ம்ம்” என்றாள் விருஷாலி.
   
    “ம்’ னா?” என்றதும்

     “உதயகுமார் மாமாவோட மூத்த பையன். பெரிய மாச்சான் பேசறிங்க” என்றாள் பவ்யமாக. அந்தக் குரலில் மிதமிஞ்சிய தயக்கமும் பயமும் அதிகமாகவே இருந்தது.

    “சரிதான்… அடுத்த வாரத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் அதுக்கு என்ன முறைனு தெரியுமா?” என்றான் குறும்பாய்.

     “எதுக்குப் போன் பேச கூப்பிட்டிங்க? எங்க பாட்டி முறைக்குது. எங்கம்மா கொஞ்ச நேரத்துல தனியா கூட்டிட்டுப் போய்த் திட்டும். நீங்க போன் போட்டாப்ப அங்கயெல்லாம் கேலியா சிரிக்கறாங்க. கல்யாணம் வச்சிட்டு இப்படிப் பேசறது இங்க வழக்கமில்லையாம். நீங்க இப்படி அடிக்கடி பேசாதிங்க” என்று அழுதிடும் நிலையில் கூறினாள்.

    விஷாகன் நகம் கடித்தபடி, “ஏய்… இதுக்கு முன்ன கல்யாணம் பண்ண பேச்செடுத்தப்ப என்னைப் பிடிச்சிருக்கானு கேட்டேன் அதோட இப்ப தானே பேசறேன். நடுவுல போன் போட்டா மாமா அத்தையில்ல பேசினாங்க. உன்னிடம் எங்க அடிக்கடி பேசினேன்?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

    “இல்லை நீங்க விவேக் அண்ணாவிடம் அடிக்கடி விருஷாலி பேசுவாளானு கேட்டதா அடிக்கடி கேட்கவும்ம்ம்.. அப்படிச் சொன்னேன்” என்றாள் விருஷாலி.

     “கேட்டதுக்கேவா…? சரி நான் கேட்கறதுக்கு ஒரு பதில் சொன்னா போதும். இதோட கல்யாணம் ஆகறவரை பேசலை.” என்றான்.

    தன்னைத் தூரத்தில் இருந்தாலும் கவனிப்பதை உணர்ந்து விருஷாலி, “என்ன பதில் சொல்லணும்?” என்றாள்.

    “உனக்கு எங்க அப்பா ஒன்னு விட்ட மாமா. நான் அவரோட பையன்  என்பதால கல்யாணத்துக்கு ஓகே சொன்னியா? இல்லை என்னை ஊருக்கு வர்றப்ப பிடிச்சிருந்து, கட்டிக்கக் கேட்டதும் கல்யாணம் பண்ண சம்மதிச்சியா?

   ஏய்… பொறுமையா யோசிச்சுப் பதில் சொல்லு.” என்று விஷாகன் தெளிவுப்படக் கேட்டான்.

    “இதுல யோசிக்க என்னயிருக்கு. உதயகுமார் மாமாவோட பையன் என்பதால தான் கல்யாணம் பண்ணறேன்.” என்றாள் தேங்காய் உடைத்தபடி.

    “இங்க பாரு… நான் கேட்கறேது எதுக்குனு புரியாம பதில் பேசாதே. என்னை எனக்காகக் கல்யாணம் பண்ண போறவள் எனக்கு வேண்டும். எங்கப்பனுக்காக என்னைக் கல்யாணம் பண்ணறவள் எனக்கு வேண்டாம். இப்ப  சொல்லு.. என்னைப் பிடிச்சி கல்யாணம் பண்ணறியா? இல்லை என்னனு” என்று நிதானமாகக் கேட்டான்.

    “நீங்க ஒன்னும் பேரழகன் இல்லை. எங்க மாமா பையன் என்றதால தான் கட்டிக்கறேன்.” என்று நேரம் காலமின்றி மனதில் உள்ளதை அப்படியே உரைத்தாள்.

    “ஓ… அப்படியா.. அப்ப இந்தக் கல்யாணம் உனக்கெதுக்கு? என்னை நம்பி வர்றவளை கட்டிக்கறேன். கல்யாண வேலையை நிறுத்திட்டுப் போய்ப் படிக்கிற வேலையைப் பாரு. பஸ்ட் இயர் தானே படிக்கிற. போ… போய்ப் படி போடி.” என்று கோபமாய்ப் பேசி சட்டென அலைப்பேசியைத் துண்டித்து முடித்தான்.

  விருஷாலி பேய் முழிமுழித்து எச்சிலை கூட்டி விழுங்கி, இவர் என்ன இப்படிப் பேசுறாரு? என்று கலங்கியவளாகத் தாய் அன்னத்தை நோக்கி ஓடினாள்.

“அம்மா… அம்மா..” என்று கூப்பிட்டு வந்தாள்.

“என்னடி தெளிவா சொல்லிட்டியா” என்று கேட்க, “போம்மா… மச்சான் கல்யாணத்தை நிறுத்திடுதாம். போ போய்ப் படினு திட்டுது.” என்று கண்ணைக் கசக்கினாள்.

“ஆத்தி… எதுக்கு..? என்னவாம்?” என்று நெஞ்சை பிடித்துச் செம்பருத்தி கேட்டாள்.

“எதுக்குனா… ஒரு வார்த்தை போன்ல பேச விட்டியா… மச்சான் போன்ல பேசாததால ஏதோ பட்டிக்காடுனு நினைச்சியிருக்கும்.

அதான் கடைசி நேரத்துல வேணாம்னு சொல்லுது.

நான் அப்பவே சொன்னேன். இதுவொன்னும் உங்க காலம் மாதிரி இல்லை அம்மாச்சி. இப்ப எல்லாம் போன்ல பேசிக்கறாங்க. நீ தான் பேச விடமாட்டறனு” என்று விவேக் வந்து அம்மச்சியைத் திட்டினான்.

“அடப்பாவத்த… முதல்ல எங்கக்கா அன்னபூரணிக்குப் போனை போடு.” என்று அவனை நொடித்தார்.

“ஒன்னும் தேவையில்லை. முதல்ல விஷாகன் மச்சானுக்குப் போன் பண்ணி தர்றேன். குட்டிம்மா மச்சானோட பேச சொல்லு. மச்சான் அதுகிட்ட ஏதோ கேட்கணும் கேட்கணும்னு சொல்லிட்டே இருந்துச்சு.” என்று விவேக் கூறியதும் தான் விருஷாலிக்கு விஷாகன் கேட்டதே நினைவு வந்தது.

‘என்னை எனக்காகக் கட்டிக்கச் சம்மதிச்சிருக்கியா. இல்லை மாமன் மகன் என்றதால கட்டிக்கச் சம்மதிச்சியானு கேட்டாரே’ என்று திகைத்தவள் மனதில் உருப்போட்டபடி நிற்கவும், அம்மாச்சியோ “போனை வாங்கிப் பேசி தொலையேன்டி” என்று அதட்டினார்.

“என்ன ஆளாளுக்கு அதட்டறிங்க. போங்க… நான் யாரிடமும் பேசலை.” என்று மூக்குறிந்து முட்டிகட்டி முகம் பொத்தி அழுதாள்.

மனதில் ‘எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் மச்சான். கல்யாணத்தை நிறுத்தாதிங்க… உங்களுக்காகத் தான் படிப்பை கூட வேண்டாம்னு கல்யாணத்துக்குத் தலையாட்டியது.’ என்று குமுறலாய் அழுதாள்.

அன்னமோ, “என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ண பார்க்கறிங்களே. ஜோடியா உட்கார வச்சி ஆசைக்காட்டி, இப்படிப் பேசவிடாம பண்ணி எம்புள்ளைய அழவைக்கிறிங்க.?” என்று புலம்பினார்.

செம்பருத்தியோ விவேக்கிடம் “நீ விஷாகானுக்குப் போனை போட்டு தாடா.” என்று ஏதோ தன்னால் இத்தனை களோபரமென்று முதியவள் பதறினார்.

-தொடரும்
Praveena Thangaraj

19 thoughts on “நீயின்றி வாழ்வேது-12”

  1. 😂😂indha idea va apo irundja perusunga panni irundha naan kuda marg life la irundhu escape agi irupen…. So sad😂😂😂…

    Bayapadadha vishali avan summa apadi tan solluvan ana unna tan kalyanam pannipan feel pannadha….

  2. Super sis nice epi 👌👍😍 vishagan ku konjam porumai thevai pa romba kovakaran ah erukaney endha pulla avankita maatikiti enna panna pogudho 🤔🙄 en ma manasula nenaikiradha Avan kita solliyirundha ennavam😢🤧

  3. Itha avan kekum pothe solrathuku enavam avan mela ivlo assai vachitu inga vanthu ivlo pesura manasula irukuratha appdiye sollam la mamakaga kattika poralam . Avane antha varthaiya tha nee sollida kudathunu irunthan

  4. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 12)

    அச்சோ…! கடைசியில எல்லாரும் பண்ண கூத்துல செம்பருத்தி பாட்டியையே கதிகலங்க விட்டுட்டாங்களே…
    இது தேவையா…? ஏன்டாப்பா,
    உதயகுமார் மாமனோட மகன்னு தானே பொண்ணை கேட்டவுடனே கொடுக்க சம்மதிச்சாங்க. உன் அப்பனோட தில்லாலங்கடி வேலையெல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு எப்படி தெரியும். சொல்லிப்பாரு…
    இனிமே தான் அவர் மூஞ்சிலேயே காறித்துப்புவாங்க…! அதை விட்டு போன்ல பேச விடலைன்னு, ஏன்டாப்பா இப்படி வைச்சு செய்யுற..?
    இதெல்லாம் ரொம்ப ஓவரு…
    ஆமா சொல்லிட்டேன்.
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  5. Enaama bihu panrainga…ipo vachana aapu…oorula ivaninga vtula dhan ponnun irukundra madiri pesakudadhu,ukkarakudhunu ha ha semma funny episode

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!