நீயின்றி வாழ்வேது-14
விஷாகன் வீட்டில் ஏசி பஸ்ஸை, புக் செய்து குடும்பச் சகிதம் திருமணத்திற்குப் புறப்பட்டிருந்தார்கள்.
சுகன்யா ஒரு பக்கம் முகம் தூக்கி வைத்திருக்க, சுகிர்தனோ மறுபக்கம் முகம் தூக்கி வைத்திருந்தான்.
தனுஷ், ரவி இருவரும் விஷாகனுக்கு மணமகன் தோழனாகக் கனவெல்லாம் கண்டு கிண்டல் கேலியென்று வரதிட்டம் வகுத்தவர்கள்.
இன்றோ மூன்று சீட்டில் அமர்ந்தாலும் நண்பனை தான் விரோதி போலப் பாவித்து பார்த்து வந்தார்கள்.
கடைப்பையன் ராஜன் உதயகுமார் அருகே அமர்ந்ததால் சிவனேயென்று வந்தான்.
அவனுக்கு இது தேவை தான் என்பது போல விதி எள்ளியது. சும்மா வாயை வைத்து இருந்தால் ஒன்று கமுக்கமாய் உதயகுமார் குடும்பம் நடத்தியிருப்பாரோ என்னவோ? விசுவாசத்தில் விஷாகனிடம் கூறியதில் ஒரு கடைப்பையனாக முதலாளிக்கு அறிவிப்பது கூடச் சரிதான்.
அதையும் தாண்டி சங்கீதா இறந்த செய்தியை அறிவித்தது தான் தற்போது அனைத்திற்கும் காரணம்.
தந்தை போவாரா என்ன ஏதென எட்டியிருந்து பார்க்க அங்கே தந்தையின் தலையே தென்படவில்லை. அவருக்கு விஷயம் தெரியுமோ தெரியாதோ என்று தந்தையின் கொரியர் அலுலகம் வந்து பார்த்தான்.
அவரோ கொரியரில் வேலை செய்தவனிடம் “ஏம்பா.. இதை மதியமே அனுப்பியிருக்கக் கூடாதா. இப்ப பாருங்க ஒரு நாள் தாமதமா போகும்.” என்று கடிந்து கொண்டிருந்தார்.
விஷாகன் கைப்பேசியைச் சட்டை பேக்கெட்டில் வைத்து நடந்து வர, தந்தை அவரோ மரியாதையாக எழுந்தார்.
“இங்க என்ன பண்ணறிங்க வீட்டுக்கு போகலையா?” என்று கேட்டான்.
“எப்பவும் ஒன்பது மணி வரை கடை இருக்குமே விஷாகா.” என்ற தந்தை குரலிலும் பேச்சிலும் அந்தப் பெண்மணியின் இறப்பு அறியாதது போலத் தோன்றியது.
அவரிடம் தெரிவிக்கலாமா வேண்டாமா என்று வாசலில் இருந்தவனுக்குச் சட்டென முடிவெடுக்க முடியாமல் திணறினான்.
விஷாகன் சற்று நேரம் அங்கேயே உலாத்தினான்.
உதயகுமாரோ, “அந்த வீட்டுக்கு போகலை தம்பி. நீ பயப்படாதே… அன்னிக்கு கண்ட கருமத்தை குடிச்சிட்டு ஏதோ உலறினேன்.
எப்படி மகள் அபர்ணா முக்கியமோ அதே அளவுக்கு மகன் முக்கியம். நீ என்னோட மூத்த மகன்யா. என்னை முதல்ல அப்பானு பெருமைப்படுத்தியவன். உனக்குக் கல்யாணம் இந்த நேரத்துல அங்க போய் எந்தப் பிரச்சனையும் இழுத்து வைக்க மாட்டேன்.” என்று தழுதுழுத்துக் கூறினார்.
விஷாகனுக்கு இன்னமும் நெஞ்சழுத்தியது. ஒருமுறை இறந்தவரை, திரும்பப் பார்க்க இயலாது என்பது அறிந்தவன். காலையில் சங்கீதா இறந்திருக்க இவருக்காகத் தான் காத்திருப்பார்களோ என்னவோ? மணி வேறு ஆகின்றென கூறிடுவது சிறந்தது எனத் தயங்கி அவரருகே வந்தான்.
“அவங்க… அந்த அபர்ணாவோட அம்மா… அவங்களுக்கு…” என்று திணறியவனாய் முடிக்க உதயகுமாரோ பேனாவை வைத்து ரசீது பில்லை எடுத்து வைத்தார்.
“அப்பா… கடைப் பையன் ராஜன், பெரியார் தெருவுக்குத் தண்ணி போட போயிருந்தான். அந்தப் பொண்ணு இறந்.. இறந்துடுச்சுனு சொல்லறான். உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.
தண்ணீர் குடிக்கப் பாட்டிலை எடுத்தவர் நழுவ விட்டார்.
“தெரியாதேப்பா.” என்று தரையில் அப்படியே அமர்ந்தார்.
“எப்..எப்படி செத்தாங்கனு தெரியலை.” என்று பயந்தான். ஒரு வேளை தந்தை வராதது ஒரு காரணமாகத் தற்கொலை செய்து எழுதி வைத்திருந்தாள்.
“சங்கீதாவுக்கு ஆஸ்துமா அதனால இறந்திருப்பா.” என்று யூகித்தவர் கலங்கினார்.
விஷாகனுக்குக் கேட்க சங்கடமாக இருந்தது. ஆனாலும் கேட்க வேண்டும் நேரம் இல்லையே… “நீங்க போகலையா?” என்றதும்.. “இப்ப தானே தெரியும்.. போகட்டுமா தம்பி?” என்று மகனிடம் அனுமதி கேட்டு நின்றார்.
விஷாகனிடம் இப்படி கேட்டால் எப்படி மறுப்பான்? அவன் ஒன்றும் பாறையை விழுங்கி ஜீரணிக்கும் நாவல் உலக நாயகன் அல்ல. இரக்கமும் மனிதாபிமானமும் கொண்ட சாதாரண நடைமுறை மனிதன்.
“போங்க..” என்றான். உதயகுமார் விழுந்தடித்து எழவும் கால் தடுக்கிட்டு விழுந்தார்.
“அப்பா.” என்றான். எப்பொழுது இவரின் இன்னொரு குடும்பம் விஷாகனுக்குத் தெரிந்ததோ அப்பொழுதிருந்தே ‘அப்பா’ என்ற அழைப்பை அவன் உதிர்க்கவில்லை.
இன்று தானாக அப்பா என்று மீண்டும் அழைத்து விட்டான்.
“அப்பா.. இருங்க.. நான் அந்தத் தெருவரை கூட்டிட்டு போறேன்.” என்று அவனது இருசக்கர வாகனத்தில் அமர கூறினான்.
விஷாகன் வேகம் தான் ஆனால் சென்னை டிராபிக் சிக்னலின் பொறுமை பற்றி அதில் அவதிப்பட்டவரே அறிவார்கள்.
சிக்னல் மாறி பெரியார் தெரு வந்து சேரும் போது தெருவெங்கும் பூக்கள் சிதறி உதிர்ந்திருந்தது.
உதயகுமாரோ நான் வர்றதுக்குள்ள எடுத்துட்டாங்க… ரொம்ப நாள் வரலை, போன் நம்பரும் இல்லையே” என்று சிறுகுழந்தை போல அழுதார்.
உதயகுமார் கடைசியாக விருஷாலிக்கு வாங்கிய புதுப் போனை உடைத்த அன்று இவரின் பழைய சிம்மையும் உடைந்து போட்டிருந்தான். அதன் காரணமாக ஆளும் வரவில்லை. காலண்டரில் இருந்த எண்ணும் அழைப்பு போகவில்லையென ஆறுமணி வரை பார்த்துவிட்டு எடுத்திருந்தார்கள்.
விஷாகனோ சவப்பூக்களின் தடத்தைப் பின் தொடர்ந்து பிணம் எரிக்கும் இடம் வந்து சேர்ந்தான்.
மின்சாரத் தகனம் என்பதால் பிணம் வந்ததும் உள்ளே தள்ளி பொத்தனை அழுத்தியிருந்தார்கள். அதனால் உதயகுமார் சென்ற நேரம் சாம்பலாகக் கிடைத்தாள் சங்கீதா.
விஷாகனோ இந்தச் சூழ்நிலையில் தந்தையைக் கையோடு அழைத்து வீட்டுக்கு வந்திருந்தான்.
தற்போது போனால் தந்தையை யாரேனும் அவமதிப்பாய் பேசி தொலைவார்கள் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு அழைத்து வந்து தலைக்குக் குளிக்கக் கூறினான்.
அபர்ணாவை எண்ணி விஷாகனை ஏறிட, “பச் இருங்க அங்க என்ன நிலவரம்னு ராஜனை பார்க்க சொல்லியிருக்கேன்.” என்று கூறினான்.
அதன் பின் குளிக்கச் சென்றார். ராஜன் வந்து “அந்தக்கா போட்டோவை எல்லாம் தூக்கி ஒளிச்சி வச்சிடுச்சோ என்னவோ, புருஷன் வரலை யாருமில்லைனு பக்கத்து வீட்டு பாட்டி சொல்லவும் ஈவினிங் வரை வெயிட் பண்ணி எரியூட்ட தூக்கிட்டுப் போனாங்களாம் அண்ணா.
அந்த அக்காவுக்குச் சொந்தம் பந்தம் எதுவும் இல்லையாம். அந்தக் குட்டி பொண்ணு அபர்ணா பாட்டியிடம் இருக்கு. அப்பாவை எல்லாரும் திட்டிட்டு இருக்காங்க. இந்த நிலையில் இவர் அங்க போனா சரியா இருக்காது. நல்ல வேளை ஆஸ்துமால இறந்துடுச்சு” என்று கூறினான்.
விஷாகன் தந்தையைப் பார்த்து “அந்தப் பொண்ணு அபர்ணா பாட்டியிடம் இருக்கே. ஒன்னும் பயப்படாதிங்க. இரண்டு நாள் கழிச்சி போய்ப் பாருங்க. அவனுக்கே அந்த வார்த்தை அபத்தமாகத் தோன்றியது.
ஏழுவயது சிறுமி… இன்னமும் குழந்தை மனம் மாறாதவள். அம்மா இறந்துவிட்டாள் வேறு யாரும் சொந்தமில்லை. ஏதோவொரு பாட்டியிடம் இந்த நிலையில் இருக்கின்றாளே.!
உதயகுமாரோ அறையில் அழுதார். ஆனால் இந்த வீட்டிலும் விஷாகனை தவிர யாருக்கும் குழந்தை இருப்பதே தெரியாதே.
உதயகுமாருக்குக் கடைசியாக அடித்து உதைத்து இருந்த நாளில் மருந்துவர்கள் தூக்க மாத்திரையை அரை மாத்திரையும், பெயின் கில்லர் மருந்தோடு போட கூறியிருந்தார்கள். அந்தத் தூக்க மாத்திரை இன்னமும் இருக்கத் தந்தைக்குச் சூடாகப் பாலை ஆற்றி அதில் கலந்து கொடுத்தான்.
அவரும் பாலை பருகி உறக்கத்தில் ஆழ்ந்தப்பின் வீட்டில் சாய்ந்தமர்ந்தான்.
சுகன்யாவோ அப்பா மகன் அன்னியோனியத்தில் சந்தேகம் கொண்டு பேச, “கல்யாணத்துக்குப் போகணும் அவரிடம் மூஞ்சி தூக்கி வைக்க முடியுமா மா. நான் பேசவும் அழறார்” என்று சமாளித்தான்.
சுகன்யாவும் நம்பினார் ஆனால் விஷாகன் படுத்தவுடன் அந்தக் குழந்தை அபர்ணாவை யாராவது தனியாக இருக்கின்றாளெனப் பாலியல் சீண்டல் புரிந்தால்….
ஏற்கனவே கடைப் பையன் ராஜன் அடிக்கடி ‘பேரு தான் பெரியார் தெரு அண்ணா. அங்க வாழறதுங்க எல்லாம் சின்னப் புத்தி பயலுங்க. கல்லுக்குச் சேலை கட்டினா கூட விட்டு வைக்க மாட்டாங்க’ என்று என்றோ சொன்ன பேச்சுக்கள் தற்போது வந்து விழவும் உறக்கமின்றி இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றான். மணி பன்னிரெண்டு பத்து என்பதை அவன் பொருட்படுத்தவில்லை.
சங்கீதா இருந்த வீட்டில் அந்தப் பக்கத்து வீட்டு பாட்டி படுத்திருந்தார். கூடவே அபர்ணா அழுதழுது உறங்கியிருப்பாள் போல.
அபர்ணாவை தாண்டி ஒரு இருபது இருபத்தி ஐந்து வயதுக்குள் ஒரு இளைஞன் படுத்திருந்தான். குடித்து விட்டுச் சரியாகக் கட்டாத லுங்கியும் கொஞ்சம் இறங்கியிருந்த இடத்தில் ஜட்டி பெயரும் என்று அலங்கோலமாகக் கிடந்தான்.
அபர்ணா தூங்கும் நேரம் அன்னை அருகே இருக்கின்ற நினைப்பிலேயே கால் தூக்கி போடவும், விஷாகன் பொறுமை பறந்தது.
கதவு லேசாய்ச் சாற்றியிருந்தது உள்ளே வரவும் பாட்டி எழுந்து யார் என்ன என்று கண்ணைக் கசக்கி கூர்ந்து நோக்கி பார்த்தார்.
அன்று உதயகுமாரை அடித்து அழைத்துச் சென்றவன் என்பதை அறிந்து, “ஏன்ப்பா செத்தவளை பார்க்க கூட உன் அப்பனை அனுப்பலையா?” என்று கேட்டார்.
ஏதோ தான் தந்தையை அனுப்பாதது போலப் பேச்சு வரவும், “அப்பா வந்தார் பாட்டி, தகனம் செய்யறப்ப பார்த்தார். இப்ப தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வச்சியிருக்கேன். அபர்ணாவை அழைச்சிட்டு போக வந்தேன்” என்றான்.
பாட்டியோ விஷாகன் வந்ததும் அபர்ணாவின் ஆடையைச் சரிப்படுத்திக் கூடவே அந்தபக்கம் படுத்திருந்தவன் மீது போர்வை போட்டு மூடியதை கண்டு அனுப்ப எண்ணினார்.
தன் சின்ன மகன் குடித்து ஏதாவது சீண்டி அவப்பெயர் வந்து விடும். அதற்கு இப்பொழுதே பெண் பிள்ளையை உரியவரிடம் அனுப்ப முடிவெடுத்தார்.
“பிணத்தை எடுக்கச் செலவெல்லாம் ஆச்சு.” என்று பேசவும், கடையிலிருந்து வரும் போது பேண்ட் பாக்கெட்டில் வைத்த பணத்தொகையை எண்ணி பார்க்காமல் கையில் வைத்தான்.
பத்து நாள் கழிச்சு வர்றேன் பாட்டி. இப்ப அந்தக் குட்டி பொண்ணை அழைச்சிட்டு போறேன்” என்றவன் அபர்ணாவை தூக்கி இருசக்கர வாகனத்தில் முன் பக்கம் அவளைத் தன் பக்கம் அணைத்தபடி கூட்டி சென்றான்.
காலையிலிருந்து அழுதுழது இருந்ததால் சிறுமியும் கண் திறவாமல் உறக்கத்திலேயே விஷாகனோடு இந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். விஷாகன் தன் அறையில் அபர்ணாவை படுக்க வைத்து போர்வை போர்த்தி விட்டுத் தரையில் படுத்தான்.
அடுத்த வாரம் திருமணம். தந்தை பற்றி அவன் யாரிடமும் பகிராமல் தவிர்க்க பார்த்தான். இன்றோ சூழ்நிலை அவனாகவே மனம் கேளாது அந்த அபர்ணாவை அழைத்து வரவைத்து விட்டது.
அடுத்த நாள் விழித்த போது சுகன்யாவுக்குப் பேரதிர்ச்சி. விஷாகனின் பெண் சாயலில் இருந்தாள்.
அண்ணன் தங்கை ஒன்று போல இருப்பது பெரிய விஷயம் இல்லையே.
சுகிர்தனோ “அந்தாளுக்கு இந்த வயசுல ஒரு மக. நீ ஏன் அவளை இங்க கூட்டிட்டு வந்த. அநாதையா போய்த் தொலையட்டுமே
அந்தப் பொம்பளைக்குப் பிறந்தவளும் நாமளும் ஒன்னா…?
இதப்பார்… அண்ணா என்று இஷ்டத்துக்கு எதுவும் பண்ணி வைக்காத. இந்தப் பொண்ணுக்கு சொத்துல ஒரு பைசா கூடப் போகக்கூடாது.’ என்று அடுக்கினான்.
” வாயை மூடிட்டு போடா. எனக்கெல்லாம் தெரியும்” என்று விஷாகனின் சிம்ம குரலில் தான் சுகிர்தன் வாயடைத்து நிசப்தமானான்.
சுகன்யாவுக்கு ஒரு பொண்ணு சகவாசம் என்றதிலேயே இதயம் ஆட்டம் கொண்டார். அதிலும் இந்த வயதில் பெண்குழந்தை என்றதும் பேச்சு வரவில்லை. கணவரிடம் மட்டும் அல்ல யாரிடமும் பேசாமல் இதோ இப்பொழுது ஏசி பேருந்தில் அமர்ந்து இருப்பது போன்ற அதே நிலையில் தான் இந்த மூன்று நாளும் இருந்தார்.
முதலில் திருமணத்தை நிறுத்தலாம் என்ற முடிவில் விஷாகன் இருந்தான். ஆனால் உதயகுமாரே “அபர்ணாவை அழைச்சிட்டு வந்ததே போதும்யா. கல்யாணம் எல்லாம் நிறுத்ததாதே. எங்களுக்கும் இங்க இருப்பதை விட ஊருக்கு போனா மனசு நிம்மதியாகும். நிம்மதியாகுதோ இல்லையோ நடிக்கவாது சிரிக்கலாம் ” என்று கூறினார்.
விஷாகன் மனமும் திருமணத்தை நிறுத்தினால் கேள்வி எழும், விருஷாலி வேறு வருத்தப்படுவாள். ஏற்கனவே போன வாரம் விளையாட்டாய் கேட்டு அழுது விட்டாளே!
பேருந்தில் அபர்ணா விஷாகனுக்கு முன்னிருக்கையில் அம்ர்ந்து தூங்கி வழிந்தாள்.
தனுஷோ “மச்சி யாருடா இந்தக் குட்டி பொண்ணு. பார்க்க விஷாகனை மாதிரி இருக்கா. அவன் பொண்ணா டா.” என்று கேட்டான்.
ரவியோ “நீ வேற கேட்டா எதுக்கும் பதிலில்லை. எனக்கே அதான் டவுட். கல்யாணம் பண்ண போறான் இந்தப் பொண்ணு யாருனு யாரிடமும் சொல்லலை” என்று கூறவும் இருவரின் மனமும் உதயகுமாரின் மகளாக இருப்பாளோ என்று எண்ணுவதற்குப் பதிலாக விஷாகன் மகளாக இருப்பாளோ? என்று எண்ணினார்கள்.
காரணம் விஷாகன் வயது இருபத்தி ஒன்பது. சிறுமி வயது ஏழு என்றதில் அப்படித் தான் தோழமை கூட்டமே எண்ணியது.
நன்றாகப் பழகியவர்களே இப்படி எண்ணினால் அவனை நம்பி கழுத்தை நீட்டும் விருஷாலி அபர்ணாவை எப்படி எடுத்துக்கொள்வாளோ?
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Interesting epi😍 Eagerly waiting for next update
Sema sema interesting epi
Super sis nice epi 👌👍😍 naan nenachen pa andha ponna vishagan veetuku kootitu varuvan nu😢 Evan nalladhu nenachi seiyiran aana enna nadakumo parpom 🧐
Nalladhe nadakatum
Super super ka…. Waiting for next ud….
Truly visakanuku romba nalla manasu girl baby ah thaniya vidama evlo pblm vandhalum paponu kootitu vandhutan suganya ku ipo kovam iruku adhu sudden ah baby irukuradhu theriyudhula adhan visa ku therinja madiri munadiye therinja avangalum indha ponna thaniya Vida matanga…visa oda indha character avanga parents avana valatha vidham dhan
Vishakan you are really great. But this decision how will shake you in your marriage life. Interesting sis.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சின்ன மனசு உடைக்காதீங்க ன்னு சொன்னா இதோ இப்பவே செய்றேன் அப்படிங்கற மாதிரி பண்ணி வச்சிருக்கீங்க..
பிரண்ட்ஸ் இப்படி பேசினா ஊர் மக்கள் எப்படி பேசுவாங்க…
@Fe 98657 what to do…? Story 🤣 apadi poi ipadi varum. Don’t worry marriage nadakum🫣
Aparna வ… இவன் கூட்டிட்டு வந்துட்டான்….சரி….இதுக்கு அப்புறம் தானே பிரச்சனை ஸ்டார்ட் ஆக போகுது…..அந்த பொண்ணு இவன் ஜாடைல இல்ல இருக்கு…🙄🤔🤔🤔🤔..
Interesting sis…
Adei andha kutty ponnu avan thangachi da ne avanuku ithu kula vae appa nu post lam kudukathiga athuku innumae time iruku da
Ada pavingla friends neengale ippadi pesina mathavanga eppadi pesuvanga vishakan mela ivlo santhegama avana mari antha ponnu iruntha kavala padatha vishaka shali una purinjipa mrg pannipa
Spr going…. Eagarly waiting for nxt epi😍😍
அச்சோ பாவம் ட விஷாகா நீ இதைத்தான் பழி ஓரிடம்
பாவம் ஓரிடம் என்று சொல்வார்களோ
interesting……………
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 14)
அச்சோ..! கடைசியில அந்த சங்கீதாவோட முகத்தை கூட பார்க்க கொடுத்து வைக்கலையோ…?
நல்ல வேளை, பாட்டி உலக ஞானம் அறிஞ்சவங்க, அதான் அழகா அபர்ணாவை விசாகன் கிட்ட ஒப்படைச்சுட்டா.
அடப்பாவி தனுஷூ, உன் கூடவே இத்தனை நாள் பழகியிருக்கான், ஆனாலும் உன் நண்பனை புரிஞ்சுக்கலையாடா ..? இதான் உன் நட்புக்கு அடையாளமா..?
ஏன் டா டேய், விசாகன் முகமே அந்த குட்டிப்பொண்ணுக்கு இருந்தா, உடனே விசாகன் பொண்ணுன்னு முடிவு பண்ணிடுவிங்களா…? ஏன் அவங்கப்பன் உதயகுமார் சாயல் தானே விசாகனுக்கும் இருக்கு…. அப்ப அவரோட இணைச்சு பார்க்க மாட்டிங்களோ…? இப்படியே எத்தனை நாளைக்குடா
பழி ஓரிடம், பாவம் வேறிடம்ன்னே மத்தவங்க மேலே வீண் பழியை ப் போட்டு சுத்திக்கிட்டிருப்பிங்க…?
இங்கே, இவங்களே இப்படின்னா… ஊருக்குப் போனா… அங்க என்ன குட்டையை குழப்ப போறாங்களோ..?
தேவுடா ..! பச்சாஹூ விசாகன்..!
😆😆😆
CRVS (or) CRVS 2797
Very interesting
விஷாகன் கோவக்காரனா இருந்தாலும் பாசக்காரன்