நீயின்றி வாழ்வேது-17
விவேக் ‘பேசாதிங்க’ என்றதும் அடுத்த நொடி அங்கே சில பெரிய(?) தலைகள் வந்து “வத்திப்பெட்டி இருக்கா டா” என்றார்கள்.
“எனக்குப் பீடி சிகரெட் பிடிக்கிற நல்ல பழக்கம் இல்லை மாமா” என்று விவேக் வெடுக்கெனக் கத்தரித்துப் பேசியதும், “இல்லைனா இல்லைனு சொல்லு, நல்ல பழக்கமில்லைனு கிண்டலா? குடிக்கார அப்பன், வட்டிக்கு என்கிட்ட பணத்தை வாங்கிட்டுக் கல்யாணத்தை நடத்தற, நினைவுல வச்சிக்கோ.” என்று வந்தவர் செல்ல, விவேக் தான் தவறு செய்வது போல நின்றான்.
அந்த ஆசாமி போனதும் பின்னோடு வந்த இருபெரிய (தறு)தலைகளும் கூடவே சென்றார்கள்.
“இங்க எதையும் பேசாதிங்க மச்சான். சுவருக்கும் காது கேட்டுடும், எனக்கு ஓரளவு அபர்ணா பேசியதிலேயே விவகாரம் புரிஞ்சிடுச்சு.
இந்தக் கலிகாலத்துல புள்ளைங்க சரியில்லைனு சொல்லற அதே பெரியவங்க தான் சத்தமில்லாம தப்பு பண்ணிட்டு திரியறாங்க.
எங்கப்பா குடிக்காரன், இதோ இப்ப வந்தாரே அவர் என் பிரெண்ட் மாணிக்கத்தோட அப்பா. பெரிய ரயில்வண்டி… பீடி சிகரெட் பழக்கம் இருக்கு.
ஒரு வீட்ல பிள்ளைங்க நல்லவங்களா இருக்காங்க. ஒரு வீட்ல அப்பனுங்க நல்லவங்களா இருக்காங்க. நம்ம தலையெழுத்து அப்பாக்கள் சரியில்லை அவ்ளோ தான். நீங்க மேடைக்குப் போங்க. அங்க படிக்கட்டுல விருஷாலி தனியா நிற்கறா பாருங்க. மீதியை வீட்ல பேசிப்போம்.
நாமயெல்லாம் சொந்தம் தானே.” என்று கூறி விஷாகன் மனதை குளிர்வித்தான்.
லேசாக அரவணைத்து விஷாகன் சந்தோஷமாய் விருஷாலி அருகே வந்தான்.
விவேகிற்குச் சொல்லாமல் புரிந்தது போல விருஷாலியும் புரிந்து கொள்வாள் அதற்கான நேரம் அமையும். தற்போது எதையும் யோசிக்காமல் காதலிக்கத் துவங்க அவளிடையை அணைத்து மேடையை நோக்கி நடந்தான்.
அவன் கைகளின் வெட்பம், அவள் இடையில் அழுத்த, நெளிந்தபடி வந்தாள்.
“என்ன?” என்று கேட்டு நிறுத்த, யாரும் பார்க்கின்றனரா என்று தலையைச் சுற்றி பார்த்து இடையிலிருந்த அவன் கைகளை அகற்றினாள்.
விஷாகனோ கையைக் கட்டி “போ… போடி.. தொடலை” என்று கிறக்கமாய் கூறிட, மேடைக்கு வந்தார்கள்.
விஷாகன் விருஷாலி மீண்டும் அரை மணி நேரம் உறவுகள் சுற்றத்தார்கள் நட்புகள் என்று போட்டோ எடுத்தனர்.
விருஷாலியை சீண்டாவிட்டாலும் இந்த நொடிகளை அவள் தன்னைத் தீண்ட அனுமதிக்காததை வைத்து முகம் தூக்கி வைக்கக் கூடாது என்ற முதிர்ச்சி அவனுக்குள் இருந்தது. அதனாலே முகம் மலர்ந்து நின்றான்.
பதினொன்று பத்து ஆனதும் புகைப்படக்காரர் எல்லாரும் போட்டோ எடுத்துட்டாங்க என்றதும் ‘வெட்டிங் போட்டோ ஷூட்’ எடுக்க ஆரம்பித்தார்.
மணமக்களை மட்டும் மணமகன் அறைக்கு அழைத்து வந்திருந்தார்கள். அங்கே ஏற்கனவே புகைப்படக்காரனின் உதவியாளர் தயாராய் இருந்தான்.
“அண்ணா… இப்படி அணைச்சிட்டு ஒரு ஸ்டில் கொடுங்க” என்று உதவியாளனை கட்டிப்பிடித்து அவன் முகத்தை நெஞ்சில் சாய்த்து உதாரணம் காட்டினான்.
விருஷாலி தயக்கமாய் விஷாகனை ஏறிட, அவனோ நமுட்டு புன்னகையை உதிர்த்து அவளருகே வந்தான்.
“இங்க பாரு… பேய் முழி முழிக்காம இருந்தா ஒரே ஒருதடவை நெஞ்சில சாய்த்து எடுக்கலாம். இல்லை இப்படியே தான் இருக்கணும்” என்றதும் விருஷாலி தொண்டையில் எச்சிக்கூட்டி விழுங்கி நின்றாள்.
விஷாகன் அணைத்து அவள் முகம் காண வைத்து சாய்க்கவும் இதமாய்த் தாய் கூடு போலத் தஞ்சம் அடைந்தாள்.
அடுத்து இடையைப் பிடித்து நிற்க கூறவும், “அதெல்லாம் பிடிக்க விடமாட்டாங்க” என்று விருஷாலிக்கு மட்டும் கேட்கும் அளவிற்குக் கூறி பின்னங்கழுத்தை தேய்த்தான்.
“என்ன அண்ணா நில்லுங்க. அக்கா சீக்கிரம்” என்று உதவியாளன் அவசரப்படுத்தவும், விருஷாலியோ அவன் தோளில் கைகளை மாலையாகப் போட்டு நிற்க, இடையை அழுத்தமாய் வளைத்திருந்தான்.
இருவருக்குள் மையல் குடிப்புகும் நேரம் “அடுத்து முத்தமிடற மாதிரி” என்று உதட்டை குவித்துக் காட்ட, விருஷாலி விழிகள் விரிந்தது.
என்னால முடியாதென்று சொல்லாமல் சொல்ல, அதைப் புரிந்தவனாக, “இல்லை தம்பி அதெல்லாம் வேண்டாம். ஜஸ்ட் இதே போதும். ‘டீசண்ட் டச்’ இருந்தா ஓகே.” என்று நாகரிகமாய் மறுத்தான்.
என்ன அண்ணா இங்க பாருங்க இந்த ஸ்டில் எல்லாம் எடுத்தா செமையா இருக்கும். உங்க ரெண்டு பேருக்கும் போட்டோ பேஸ்” என்று வெட்டிங் போட்டோ ஷூட் சிலதை ஆல்பமாக மாற்றிப் பார்வைக்குத் தந்து, தலையில் ஐஸ் வைத்துக் குளிர்வித்தார்கள்
சில புகைப்படங்கள் முகம் சுழிக்க வைத்தது உண்மை. விருஷாலி ஒவ்வொரு புகைப்படத்தின் பக்கமும் திருப்ப, மறுப்பாய் எழுந்தாள். விஷாகனும் ஆல்பத்தை உதவி போட்டோகிராபரிடம் கொடுத்து வேண்டாமென மறுத்தான்.
“சார் இப்ப இதான் டிரெண்டிங்… நீங்க போஸ் மட்டும் தாங்க. நாங்க வேற ஸீனரில மெர்ஜ் பண்ணிடுவோம்.” என்று பெருமையாகக் கூறினான்.
“நோ தேங்க்ஸ்… இப்ப எடுத்த மாதிரி எடுத்தா மட்டும் போதும்” என்று தவிர்த்தான்.
“சென்னையில இருக்கிங்க. இதெல்லாம் தெரியாதா? இதெல்லாம் சகஜம் சார்.” என்று விவரிக்கவும் விஷாகனுக்கு லேசாய் எரிச்சல் மண்டியது.
“போட்டோ ஷூட் கல்யாண நாள்ல மட்டும் எடுப்பிங்களா.. இல்லை பஸ்ட் நைட் ரூம், பாத்ரூம் இது பின்னாலையும் போவிங்களா.? இங்க பாருங்க தம்பி… போட்டோ எல்லாமே நல்லாயிருக்கு. ஆனா இது கல்யாண ஆல்பத்துல இடம் பெறுவது. நண்டு சிண்டு முதல் பல்லு போன கிழம் வரை பார்ப்பாங்க. இதுல யாரு கல்யாணத்துக்கு வந்தா? யாரெல்லாம் வரலை பார்த்துத் தெரிந்துக்கலாம்.
கொஞ்ச காலம் கழித்து எத்தனை பேர் மண்டையைப் போட்டா, எத்தனை பேர் குட்டிஸா இருந்து பெரியவங்க தோரணையா மாறினாங்க, இப்படிப் பழைய இனிய நினைவை மீட்ட தான்.
அதை விட்டு வெட்டிங் ஷூட் என்ற பெயர்ல பெட்ல உருளறதும் அந்தரங்க பாகத்தைத் தடவறதும் நல்லாவாயிருக்கு. வேண்டாம்னா விட்டுடுங்க. யாராவது இதுக்கு ஓகே சொல்வாங்க அவங்களிடம் ப்ரி-ஷோ பார்த்துக்கோங்க.” என்றான் காட்டமாக.
“எல்லாரும் செய்யறாங்கனு நாங்களும் செய்வோம்னு எடுக்காதிங்க. இதுலயும் ஜெனுவா போட்டோ எப்படி எடுக்கறதுனு பாருங்க. அதைப் பாலோவ் பண்ணுங்க. நிறைய க்ரியேட்டிவ் ஒர்க் வெட்டிங் போட்டோஸ்லயும் இருக்கு.” என்று அறிவுறுத்தவும் புகைப்படக்காரன் அதன் பின் விஷாகன் சொன்ன விதமாக ஆல்பத்தில் டீசண்டாக இருந்த மாடலை காட்டி எடுக்க ஒப்புதல் பெற்று எடுத்தான்.
விருஷாலியோ பெருமையாய் தன்னவனை நோக்கி காதல் வழிய விட, அவளுக்குள் முன்பு புறஅழகால் இதயத்தினுள் விதையாய் விழுந்தவன், தற்போது குணத்தின் மூலமாக இதயத்தில் வேரிட்டு மொட்டு விட ஆரம்பித்தான்.
மதியவுணவு முடிக்கும் நேரம் அன்னம் வந்து சேர்ந்தார்.
மதியம் இரண்டு மணி வரை தான் மண்டபம் வாடகைக்கு எடுத்திருக்க அன்னம் அனைவரையும் சாப்பிட வைத்தார்.
உதயகுமார் சுகன்யாவோடு தம்பதியாய் ‘ரிட்டர்ன் கிப்ட்’ எனத் திருமணத்திற்கு வந்தவர்களுக்குப் பரிசு பொருளை தந்தனர்.
இதே பழைய நிலையென்றால் தாங்கள் ‘ஆதர்ஷ தம்பதி’ என்று மகிழ்ந்திருப்பார் சுகன்யா. தற்போது தான் எல்லா நிலையும் மாறியிருந்ததே, கிப்ட் வாங்கிச் சென்றதும் சிறிது இடைவெளியில் தனிமை கிடைக்கவும், “முன்ன நீங்க கணவரா நடிச்சா தெரியாது. இப்ப நீங்க நடிக்கிறது அற்புதமா இருக்கு. யாருக்கும் சந்தேகம் வராம உங்க பொண்ணும் கல்யாணத்துக்கு வரவச்சிட்டிங்க தானே.” என்று நொடித்துக் கொண்டு தள்ளி இருந்த அபர்ணாவை பார்த்து பொறுமியபடி நின்றார் சுகன்யா.
“நில்லு சுகன்யா… எதை வச்சி நடிக்கிறேன்னு சொல்லற. இன்னொருத்தியே தொட்டுட்டேன்னா…? உன்னை விட்டு இன்னொருத்தியோட வாழ்ந்ததால உன் மேல நேசம் இல்லைனு அர்த்தமில்லை.
விஷாகன் பிறந்தப்ப இரத்தமும் சதையுமா உன்னை ஆப்ரேஷன் தியேட்டர்ல மயக்கதோட பார்த்தேனோ அப்பவே உன்னை நேசிக்க ஆரம்பிச்சிட்டேன் சுகன்யா.
என் தலையெழுத்து கொரியர் ஆபிஸ்ல வேலைக்கு வந்த சங்கீதா பொண்ணுக்கு, என் மேல என்ன ஈடுபாடோ, அவ என்னையே ரசிக்க நான் மனசு தடுமாறிட்டேன். நான் செய்தது தப்பு தான்.
புத்தி சொல்ல அந்தப் பொண்ணுக்குச் சொந்தம் பந்தமில்லை. எனக்கும் கூறுயில்லாம போயிடுச்சு. இப்ப ஆஸ்துமால அல்பாயிசுல அவ போயிட்டா.” என்றவர் வெளியேறியிருந்தார்.
அபர்ணாவால் எந்தப் பிரச்சனையும் எழவில்லையே தவிர யாருக்கும் சந்தேகம் வராமல் இல்லை. சாதாரணமான ஒரு குழந்தை தனியாக இருந்தாலே சுற்றியிருப்பவரின் பார்வை குழந்தை மீது விழும்.
அபர்ணா வேறு நல்லநிறத்தில் கண்ணுக்கு லட்சணமாய்க் குட்டி தேவதையாய் இருக்கப் பார்வை விழாதா? தெரிந்தப்பெண் என்ற சொற்களில் சிலர் அடங்கினார்கள். அதற்குக் கூடவே சென்னை பெண், நல்ல லட்சணமும் இருக்கும் அழகாக இருந்தால் இவர்கள் சாயல் என்று கூறிட முடியுமா? எனக் கடந்தனர்.
சிலர் மட்டும் உத்து உத்து பார்த்திருந்தனர். அவர்கள் சந்தேகம் விஷாகன் மீது விழுந்தது. துளியும் உதயகுமார் மீது சந்தேகம் திரும்பவில்லை.
“பையன் சென்னையில அப்படியிப்படி இருப்பானோ? அதுக்குத் தான் கிராமத்துல அவசரமா கல்யாணம் பண்ணிட்டானோ?” என்று விவேக்கிடம் ஒன்றிரெண்டு பேர் நேரிடையாகக் கேட்க, விவேக்கோ “அதெல்லாம் ஒன்னுமில்லை தப்பா பேசாதிங்க” என்று வாயடைத்து விட்டான்.
விவேக்கிடம் பேசியவர்கள் அன்னம், செம்பருத்தி, அன்னபூரணி, செந்தூரன், செல்லம்மா என்று யாரிடமும் கேட்காமல் இருப்பார்களா?
அதுவும் மண்டபம் வரை வந்து, கழுத்தில் தாலியேறியப்பின் கேட்பவர்களிடம் என்ன பேசுவது?
விருஷாலி சிறுப்பெண் விஷாகனிடம் நேரிடையாகக் கேட்கும் தைரியம் அங்கு யாருக்குமில்லை என்பதால், பேச முடிவெடுத்தது என்னவோ உதயகுமாரிடம் தான்.
இதில் மாலை அன்னபூரணி அப்பத்தா வீட்டில் விருஷாலி விளக்கேற்றி முடித்து அமர விஷாகனும் உரிமையாய் சங்கஜமின்றி இருந்தான்.
விருஷாலி தந்தை குடிப்பதால் அவரால் நடக்கும் எதையும் கண்ணில் கருத்தில் பதியவில்லையே.
அன்னமும், செம்பருத்தியும் எந்த வரதட்சனையும் நகையும் பெரிதாய் போட்டு விமர்சையாய்ச் செய்யாமல் தங்களின் நிலைக்குத் தகுந்தாற்போல இருந்ததால், விஷாகனிடம் எல்லாப் பெண் கொடுத்தவர்கள் நிலையைப் போலத் தயங்கினார்கள்.
செம்பருத்தி தான் அன்னபூரணியிடம் கேட்பதாகச் சாந்தப்படுத்தினார்.
செல்லம்மா அம்மாச்சியோ சுகன்யாவிடம் கேட்டதற்கு, “சென்னையில வேலை செய்தவங்களோட பொண்ணு அம்மா. தேவையில்லாம ஏதாவது பேசி அவனைக் கோபப்படுத்தாதிங்க” என்று கடிந்து வைத்தார்.
விஷாகனின் சித்தப்பா குடும்பமும் அவரின் மகன் ஓடிபோய் மணந்த கவலையில் இதெல்லாம் கேட்கணுமா என்ற எண்ணத்தில் திருமணத்தில் தலைகாட்டி சென்றார்கள்.
ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு செய்கையில் துடிக்க அதற்கு விடையாகச் சிலதை வைத்து சமன் செய்து இரவு சாந்தி முகூர்த்தம் ஏற்பாட்டைக் கவனித்தார்கள்.
அன்னம் மனம் கேளாமல் விவேக்கிடம் “டேய் அந்தக் குழந்தை அபர்ணா மாப்பிள்ளை மாதிரி இருக்காடா. யாரு என்னனு ஒரு வார்த்தை கேளேன்” என்று மகள் வாழ்க்கையில் இந்த வீட்டில் கணவரை தவிர்த்து ஆண்மகன் என்ற ரீதியில் கேட்க கூறி உந்தினார்.
விவேக்கோ “அதெல்லாம் மாமா தங்கமான குணம். போய் வேலையைப் பாருங்க” என்று விரட்டிவிட்டான்.
தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அபர்ணா தனது மகளென நினைத்து கதை கட்டுவதை அறியாது, விருஷாலியென்ற ஜீவனின் கடைக்கண் பார்வையைத் தன் மீதே நிலைத்திருக்கும் விதமாக அவளைச் சுற்றி வட்டமிட்டு இருந்தான்.
விஷாகனின் இத்தனை காலத் தவவாழ்வை கலைக்கும் இரவும் நெருங்கியது.
-தொடரும்.
Praveena Thangaraj

இந்த பிரச்சனை எப்போ தீருமோ…,பாவம் இதுல..அதிகமாக விஷாகன் தல தான் உருளுது.🤨😒🤔
Super epi😍😍😍😍
Super super super super super super super super super super
Vishakan pavam. Marriage over. Interesting sis. Good understanding of Vivek.
Super sis nice epi 👌👍😍 ellarum eppdi vishagan a round katrangaley edhu therinja enna pannuvaano therilaiye 😢🤔🙄
Annam paati andha kozhandha unga pethi tan unga paiyanoda ponnu idhu theriyama aal aalukku enga vichu mela sandhega padringa🤧….
Superb epi . Ellarum vishakan ah doubt paduranga eppadi intha vayasu paiyanuku 7 vayasula ponnu irukuma nu yosika matingla avan nalla mood la intha ammachi tha etho ketu veliya vara pothu unmai
Kalidevi sis.. Avan vayasuku antha age la ponnu irukum. Athan doubt padatanka
Unmai therium pothu avanga apa nilamai… Spr going waiting for nxt epi
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 17)
அடப்பாவி உதயகுமாரா…! கொரியர் ஆபிஸ்ல சங்கீதா உன்னையே லுக்கு விட்டதால, நீயும் கூறுகெட்டத்தனமா மனம் தடுமாறி அவ பின்னாடி போயிட்டியா…? அதே மாதிரி உன் பொண்டாட்டி சுகன்யா யாரையாவது பார்த்து மனம் தடுமாறி தடம் மாறி போயிருந்தா நீ சும்மா இருப்பியா…? இந்நேரத்துக்கு அறுத்து விட்டுட்டுத்தானே மறுவேலையே பார்ப்பே…,! இங்கே எல்லாமே உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயம் என்ற கணக்குலத்தானே நடக்குது… எல்லாம் தலையெழுத்து.
விசாகன், ரொம்ப நல்லாவே போட்டோ ஸூட்டிங்காரருக்கு
பதிலடி கொடுத்தான். இங்கே எல்லாமே கல்யாண போட்டோங்கிற கூத்துல ரொம்ப தரக்குறைவாத்தான் எடுத்திட்டிருக்காங்க. பார்க்கவே
கூச்சமாயிடுது.
கடைசியில அப்படி சுத்தி, இப்படி சுத்தி எல்லாருமே விசாகனைத்தான் டார்கெட்
பண்ண நினைக்கிறாங்க.
ஏன் இளந்தாரி பையன் தான் தடுமாறுவானாமாம்…? அப்பனுங்க தடம் மாற மாட்டாங்களா… நல்லாருக்கே
நியாயம்…!
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice epi.waiting for next…………………..
Very interesting sis, superrrrr
Vishagan andha manushan ku pillai ah pirantha thuku innum enna ellam face pannanumo avan kalyanatha ipadi avan mela doubt padrathu pola aagiduthu yae
Very interesting
ஆனாலும் விசாகன் என்று அந்த ஜீவன் உங்களுக்கு என்ன பாவம் பண்ணுச்சு ரைட்டர் மேடம் அந்த ஜீவனை இப்படி போட்டு பழி வாங்குறீங்களே