நீயின்றி வாழ்வேது-22
விருஷாலி அறைக்குச் சென்றதும் பூனை போலப் பதுங்கி விஷாகனும் அறைக்கு வந்தான்.
லேசாய் கதவை சாற்றி, அவளைப் பின்னாலிருந்து அணைத்தவன், “வீடெல்லாம் பிடிச்சிருக்கா?” என்றான்.
“ம்ம்… ஓரளவு சுத்தி பார்த்தேன் பிடிச்சிருக்கு. எங்க வீட்ல பெட்ரூம் கிச்சன் சேர்ந்தது இங்கயிருக்கற ஹால்.” என்று கூறினாள்.
“ம் எதுக்கு ஒப்பிட்டு சொல்லற? அது முன்ன கட்டியது.. கிராமத்துல அப்படித் தான் இருக்கும். ஏன் எங்கப்பத்தா வீடு பார்த்தல்ல. செல்லம்மா அம்மாச்சி வீட்லையும் அப்படித் தானே.
இங்க வந்து குடியேறணும்னு முடிவு பண்ணி அம்மா வரதட்சனை பணத்துலயும், அப்பத்தாவோட காடு கழனியெல்லாம் வித்து, உங்க மாமா உதயகுமார் கட்டியது. இதுல என்ன பெருமை.” என்றான் விஷாகன்.
“என்ன பெருமையா… மாமாவுக்கு ஊர்ல சொத்து இருக்கு உரிமையா பெரிய அம்மாச்சிகிட்ட வாங்கினாங்க. ஒத்த பிள்ளை காடு கழினியை வச்சி என்ன பண்ணப்போறார். அதனால அதெல்லாம் விற்றுக் காசா கொடுத்தாங்க.
எங்கத்தை என்ன வெறும் கையோட வந்தாங்களா? சொந்த வீட்டுல ராணியா அடியெடுத்து வைக்கணும்னு வரதட்சனையா…” என்றவள் நிறுத்தி விட்டு, “அதையேன் வரதட்சனைனு சொல்லணும். செந்தூரன் அப்பத்தா அன்பா ஆசையா கொடுத்தார்னு சொல்லலாமே.
எங்கப்பா எல்லாம் எனக்குனு ஒன்னும் செய்யலைனு எவ்ளோ வருத்தமிருக்கு தெரியுமா? பொண்ணுங்க காலம் முழுக்க இங்க வந்து ஆளறதுக்குக் கொண்டு வருவது வரதட்சனை கிடையாது. நாங்களும் கொண்டு வந்திருக்கோம்னு சொல்லத்தான். உங்க வீட்ல ஓசில வந்து உட்காரலைனு சொல்லிக்கலாம்.
என்னத்த சொல்லறது… நான் எல்லாம் அத்தை அளவு கொண்டு வரலை.” என்று முகம் வாடினாள்.
“ஏன்டி.. ஏன்… நான் மானஸ்தனா இருக்கறது பிடிக்கலையா. கல்யாணப்பொண்ணு கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் அவளைக் கட்டிக்கிட்டவன் கடைசி வரை அவளையும் சரிபாதியா ஏற்றுச் சரிபாதியா மரியாதை தரணும்.
ஏதோ சொல்வாங்களே… ஆஹ்… ‘கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.’ அது மாதிரி நீ வரதட்சனை கொண்டு வந்தாலும் கொண்டு வராட்டினாலும் எனக்கு அம்மாவுக்கு நிகர் தான் ஷாலி. உன்னிடம் பணத்தை நகையை எதிர்பார்க்கலை’ என்றான்.
“அய்ய… அது அப்படியில்லை… தப்பா சொல்லறிங்க.
‘கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்’ இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
பெத்த பிள்ளை சம்பாதித்துக் கொண்டு வந்தாலும், கொண்டு வராட்டினாலும் பிள்ளையைப் பார்த்துப்பாங்க. அதுக்கு அதான் அர்த்தம் அத்தான். தப்புத் தப்பா சொல்லறிங்க.” என்றாள்.
“நானா… சரி அப்ப மீதிக்கு அர்த்தம் என்ன?” என்று அவளைத் தன்முன் திருப்பி இருபக்கம் அணைப்போட்டு கேட்டான்.
“மீதினா?” என்று புரியாமல் கேட்டாள்.
“பச்… இப்ப சொன்னியே ஒரு விளக்கம். அதுமாதிரி மூன்று நாலு சொலவடை இருக்குமே. ம்ம்… ஆஹ் நினைவு வந்துடுச்சு.
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் -தாய்.
கொண்டு வந்தால்-தந்தை
சீர் கேட்பாள் -தங்கை
கொலை செய்வாள்- பத்தினி
உயிர் காப்பான்- தோழன் எல்லாத்துக்கும் விளக்கம் கொடு” என்று முன்னேறி முகமருகே வந்தான்.
“எனக்கு இதுக்கெல்லாம் ஆன்சர் தெரியும்.
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் -தாய். அதாவது பெத்த பையன் சம்பாரிச்சி கொண்டு வந்தாலும் வரலைனாலும் தாய் மகனை காப்பாத்துவா.
கொண்டு வந்தால்-தந்தை அப்படின்னா ‘என்ன தான் அப்பா சம்பாரிச்சாலும் பையன் பத்து ரூபாய் சம்பாதித்துத் தந்தையிடம் கொண்டு வந்து காட்டினா அவர் சந்தோஷப்படுவார். அதுக்குத் தான் கொண்டு வந்தால்- தந்தை
சீர் கேட்பாள்-தங்கை. என்னதான் தங்கச்சி வீட்டுக்கு அண்ணா ஒரு பிஸ்கேட் பேக்கெட் வாங்கிட்டு போனாலும் இது எங்கண்ணா வாங்கியாந்தது பெருமை பேசுவா. அதனால தன் புகுந்த வீட்ல அண்ணனை தலைநிமிர வைக்கச் சீர் கேட்டு நிற்பாளாம்.
கொலை செய்வாள்- பத்தினி அப்படின்னா புருஷனை கொல்லறதுனு அர்த்தமில்லை. புருஷனுக்கு ஒன்னுனா அதுக்குக் காரணமானவங்களைக் கொலையும் செய்யவும் தயங்க மாட்டாளாம்.
உயிர் காப்பான்- தோழன் என்ன நடந்தாலும் உயிரை கொடுத்தாவது காப்பாத்துவான் எனக்கு இவ்ளோ தான் தெரியும். அம்மாச்சி அவ்ளோ தான் சொல்லித் தந்தாங்க.” என்று பின்னாலே நகர்ந்தாள்.
சுவற்றில் நங்கென்று இடித்து நிற்கவும், “என்னங்க?” என்று விஷாகனை தடுத்தாள்.
“அமைசிங்… ஆமா… என்னனென்னவோ சொல்லற.. அப்படியே ஷாக்ல இருக்கேன். உனக்கு இருபது வயசு தானே. என்னவோ அறுபது வயசு மாதிரி ஒரு செகண்ட் உன் பேச்சை பார்த்து புல்லரிக்குது.
எங்கிருந்து எங்கயோ போன மாதிரி.
உன் விளக்கம் புரிந்து மண்டையில பட்டும் படாமலும் லேசா பதிவாகிடுச்சு. பட் நான் என்ன சொல்ல வர்றேன்னா. உன்னோட நகை பணம் வரதட்சனை இதெல்லாம் சத்தியமா நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை.
பொண்ணு பேரு விருஷாலினு சொன்னாங்க. மூளையில ரொம்ப யோசித்துப் பார்த்தப்ப மஞ்சள் ரோஜாவா சின்னப் புள்ளையா நீ மங்கலா தெரிந்த.
அதனால ஆசையா போட்டோ கேட்டேன். கொஞ்சம் லாங் டிஸ்டன்ஸ்ல ஊர்திருவிழால விளக்கு பூஜைல அவுட் ஆப் போஸ்ல உன் முகத்தைப் பார்த்தேன்.
உன் பெயரை உச்சரிச்ச நாள்லயிருந்து உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்.
எது நடந்தாலும் நீ வேணும்னு முடிவோட, ஒவ்வொரு நிமிஷமும் கனவுல வாழ்ந்தேன். இப்ப உன் கைப்பிடிச்சி உன்னை வளைச்சி எனக்குள் கொண்டு வந்துட்டேன்.” என்று இதயமிருக்கும் பக்கம் கையை வைத்து, “இந்த இடத்துல இருந்து உன்னை இனி நானே நினைச்சாலும் வெளியே தள்ள முடியாது.
இந்த ஏற்றதாழ்வு, பணம், சொந்தபந்தம் எதுவும் நமக்குள்ள கிடையாது. நீ நானாகி, நான் நீயாகி இருவரும் காதலில் வேரூன்றிட்டோம்.” என்று தாடை நிமிர்த்த, விருஷாலி விஷாகனை கட்டி அணைத்திருந்தாள்.
“ஷாலி..” என்று அவனும் அணைக்க, இருவரும் அரவணைப்பால் அன்பை பகிர்ந்தார்கள். சிறிது நேரம் போனது. லேசாய் கன்னமுத்தம் தந்து, “நான் வெளியே போயிட்டு வந்துடறேன்.” என்று ஓடினான்.
வீட்டில் பெரியவர்களிடம் “சின்ன வேலையிருக்கு முடிச்சிட்டு வந்துடறேன்” என்று ஓடினான்.
தண்ணி கேன் கடைக்கு வந்து அனுப்ப வேண்டியதை ‘கமர்ஷியல் காம்பெக்ட் ட்ரக்’ வண்டியில் ஏற்ற ராஜனுக்கும் அழைத்தபடி கதவை திறக்க கை வைத்தான்.
கதவு திறந்திருக்க, “என்ன ராஜன் பழைய பூட்டை போட்டு கதவை மூடியிருக்க. போனமுறையே அது சரியா பூட்டலைனு சொன்னேன். பாரு திறந்தே வச்சிட்டு போயிட்ட.” என்று போனில் பேசி பூட்டின் நிலையைக் கூறினான்.
“மன்னிச்சிடுண்ணா” என்று வருந்தினான்.
“ராஜன்… சண்முகம் அண்ணாச்சியோட வீட்ல பொண்ணு பார்க்கற வந்திருக்கிங்க. உடனடியா வந்து நம்ம மினி டிரக்ல வச்சி கொடுத்துட்டு வா.” என்று ஆபிஸ் கதவை திறக்க, “சரிங்கண்ணா.. இதோ வந்துடறேன்” என்று அணைத்தான்.
இந்தப் பூட்டு இருந்தா தானே இதைப் பூட்டுவான்.” என்று மேல் அலமாரியை திறந்து பூட்டை போட்டு வைத்தான்.
தனக்கான அறையில் வந்து பார்க்க, அங்கே அபர்ணா மூச்சு திணறி சுவாசிக்கப் போராடினாள்.
விஷாகனோ கதவை திறந்ததும் கேஸ் வாடை தெரிய, ஏசியை அணைத்து முடித்து அபர்ணாவை தூங்கினான்.
அருகே இருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்த்தான்.
உடனடியாக வந்ததும் சிகிச்சை கொடுக்கப்பட்டுச் சீரான மூச்சை வெளியிட்டாள்.
விஷாகனுக்குக் கொஞ்ச நேரத்திலே வேர்த்து விட்டது. அதென்னவோ குழந்தைகள் உடலுக்கு நோய் என்றதும் பயந்துவிட்டான்.
தன்னிரு கைக்குள் அடங்கிய அபர்ணாவுக்கு மூச்ச விடச் சிரமம் என்றதும் அந்த இடத்தில் துடித்து விட்டான்.
உடனடியாகத் தந்தைக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரக்கூறினான். அவரும் உடனே அங்கு வந்துவிட்டார்.
இதற்கே மாலை வரை இழுத்துவிட்டது.ஹாஸ்பிடலில் துவண்ட குழந்தையாய்ப் படுத்திருக்க, பிஞ்சு கையில் ட்ரிப்ஸ் போடுவதற்குக் குத்தப்பட்ட ஊசிகளில் லேசாய் கண் கலங்கியது.
உதயகுமார் வந்ததும் “நைட்டு இருந்து நாளைக்குப் போகச் சொல்லறாங்க. என்னால…. இங்க இருக்க முடியாது?” என்று தடுமாறினான்.
திருமணம் முடித்த இரண்டாவது நாளே, ஏதேதோ காரணம் காட்டி ஊரிலிருந்து இங்கு வந்துவிட்டான்.
வீட்டில் விருஷாலி குடும்பம் இருக்கும் நேரம், அவன் இங்கே தங்குவது சாத்தியமில்லாதது.
“விஷாகன் நீ வீட்டுக்கு போப்பா. நான் பாப்பாவை பார்த்துக்கறேன். என்னால நீ எத்தனை கஷ்டப்படுற. போ.. வீட்ல விருஷாலியும் அவ குடும்பமும் உனக்காகக் காத்திருப்பாங்க.” என்று மகனை அனுப்பினார்.
விஷாகனும் தந்தை இருப்பார் தான் இருக்க இயலாது என்று அபர்ணாவிடம் கூறிவிட்டு வீட்டுக்கு வந்தான்.
வீட்டுக்கு வந்தப்பொழுது சுகன்யாவோ கேட் வாசலில் நின்று “அவர் அவசரமா சட்டை மாத்தி போனாரே? என்னாச்சு விஷாகா?” என்று கேட்டார்.
“ஒன்னுமில்லை அம்மா. என் கடையில ஏசி கேஸ் லீக்காகிடுச்சு. அபர்ணா அம்மாவுக்கு ஆஸ்துமா இறந்துட்டாங்க. இந்தக் குழந்தை கொஞ்சமா சுவாசித்ததும் ஒத்துக்கலை மூச்சு திணறி ஒரு மாதிரி ஆகிட்டா. ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். என்னால அங்கயே இருக்க முடியாதே. அதான் அப்பாவை அங்க வரச்சொல்லிட்டு இங்க வந்தேன்.” என்று கூறி முடிக்கச் சுகன்யாவை போலவே வீட்டு வாசல் கதவில் நின்று விருஷாலி தவித்தவளாய் நின்றாள்.
கேட் வாசலுக்கே வந்திருப்பாள். இங்கு வந்த அன்றே வாசலுக்கு வர தயக்கம் இருந்தது.
சுகன்யாவும் விஷாகனும் வீட்டுக்குள் வரவும், “விஷாகா… இத்தனை நாள் நீ அப்ப வருவ இப்ப வருவனு காத்திருப்பேன். இப்ப உனக்காக என் மருமக காத்திருக்கா.
காதலும் நேசமும் கலந்து ஆசையோட எதிர்பார்த்து இருக்கற பெண்களோட தூய மனசை அழுக்காக்காம இதே தூய்மையா வச்சிக்கோ.” என்று வளர்ந்த மகனின் தோளில் வலதுகையை வைத்து, பெண்ணின் அன்பு மனதை தட்டி விட்டு உதைத்திடாதே என்று கூறி சென்றார்.
ஏற்கனவே அபர்ணா உடல் சீரானது என்ற பிறகே வீட்டுக்கு வந்ததால் விருஷாலியை வாசலில் கண்டதும் காதல் உள்ளம் தரிக்கெட்டது.
மாலையில் தலைவாறி மல்லிப்பூ சூடி லட்சுமிகடாட்சம் பொருந்தி நின்றிருந்தாள்.
சங்கரன் எங்கேயோ அரசாங்க கடைக்குச் சென்று வந்த போதையில் சுகிர்தன் அறையில் மட்டமலாக்க கிடந்தார்.
அன்னம் தான் தலையிலடித்து அழுதார். செம்பருத்தி அம்மாச்சியோ “மருமகன் வீட்ல வந்து விழுந்து கிடக்கான் பாரு. இவனை உள்ள வச்சி கதவை சாத்திட்டு சும்மாயிருடி. அவனுக்காகக் கண்ணீர் விடறாலாம் கண்ணீரு.” என்று எரிந்து விழுந்தார்.
விவேக் தனியாக வந்து, அபர்ணாவை பற்றி விசாரிக்க நடந்தவையைக் கூறினான்.
“அச்சச்சோ” என்று பதறினான் விவேக்.
“கெட்டதிலும் நல்லது தான் நடந்திருக்கு விவேக். எப்படியும் நைட் தனியா அபர்ணாவை அங்க என் கடையில இருக்க வைக்க முடியாது. அபர்ணாவை கூட்டிட்டு அவ முன்னயிருந்த வீட்டுக்கும் இனி போனா நல்லாயிருக்காது.
இதோ இப்ப அப்பா அபர்ணா இரண்டு பேரும் ஹாஸ்பிடல்ல இருப்பாங்க.
அப்பா இல்லைனா அதை அம்மா சமாளிச்சிடுவாங்க.
அபர்ணாவும் சேப்டியா சாப்பிட்டு அங்கேயே பாதுகாப்பா தூங்குவா.
நாளைக்கு ஈவினிங் தான் டிராவல்ஸ்ல ஏசி வண்டி புக் பண்ணிருக்கேன். நீங்க கிளம்பியதும் அவளைக் கூட்டிட்டு வந்துடுவேன். விருஷாலியிடம் தான் பேசணும்.” என்று விஷாகன் குரல் லேசாய் வருத்தமாய் முடிந்தது.
“கொஞ்சம் அதிர்ச்சி ஆவா மச்சான். ஆனா எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பா. எங்கப்பா ஒருவிதத்துல குடிகாரர் என்பதால புரிந்துப்பா… பக்குவமா சொல்லுங்க மச்சான்.” என்றான்.
இருவரும் தோளில் கைபோட்டு சிற்றுண்டி விழுங்கினார்கள்.
விஷாகன் பார்வை சிற்றுண்டியோடு சற்றுத் தள்ளியிருந்த விருஷாலியையும் சேர்த்தே விழுங்கினான்.
புதுமணத் தம்பதியாக அடிக்கடி தாபம் கொள்ளும் பார்வை, யாரும் பாராத வேலையில் அவளைக் கிள்ளி விளையாடுவது.
நொடியில் பட்டும் படாமலும் உதட்டு ஒற்றல் என விஷாகன் மதி மயங்கியது பெண்ணவள் மீது.
விருஷாலிக்கும் ஆசைகள் இல்லாமல் இல்லை. விஷாகன் கிள்ளும் போதெல்லாம் அனிச்சையாய்த் துள்ளிவிட்டாலும், அவளுக்கு அவன் தொடுகை சட்டெனச் சங்கமிக்கும் முத்தங்கள், அவன் பான்வைகள் தன்னையே சுற்றியிருப்பது என்று மனதில் பல வண்ண கனவை உருவாக்கியது.
நேற்றும் இன்றும் அவனின் செய்கையில் சில குணயியல்பும் அறிந்தவள், அவன் மீதான நேசம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது எனலாம்.
சுகிர்தன் வந்து அவனது அறையில் மல்லாந்து கிடந்தவரை வேடிக்கை பார்த்து வேகமாய் மாடிக்கு சென்றுவிட்டான்.
அவனுக்குத் துளியும் கீழே வரவிருப்பமில்லை. அதனால் வேகமாய்ச் சாப்பிட்டு விட்டு மாடியில் மடக்கும் கட்டிலை விரித்துத் தலையணை போட்டு போர்த்தி ஹெட்செட்டில் பாடலை கேட்டான்.
ஹாலில் செம்பருத்தி அம்மாச்சி, அன்னம், சுகன்யா உறங்க, விவேக் உதயகுமாரின் அறையில் வந்து படுத்தான்.
“எங்க உதயகுமாரை காணோம்” என்று உறங்கும் நேரம் செம்பருத்தி அம்மாச்சி கேட்க “அவர் வெளியே அவர் பிரெண்டை பார்க்க போயிருக்கார். லேட்டா வருவார்” என்ற பொய்யை உதிர்த்து முடித்தார் சுகன்யா.
விருஷாலி விஷாகன் அறைக்கு வந்தாள்.
ஏசி சில்லிட, மெதுவாய் குளிர் தேகத்தில் பரவவும், “எதுக்குங்க ஏசி? நடுக்கமா இருக்கு.” என்றாள் விருஷாலி.
“எனக்கு ஏசி பிடிக்கும் ஷாலி. பழகிடுச்சு.” என்று குறைக்க முயன்றான்.
சுகிர்தன் கணினியில் வேலை செய்பவன். அவனே பணியிடத்தில் மட்டும் தான் ஏசியில் இருப்பவன்.
விஷாகன் வீட்டில் தன்னறையிலும், தனது கடையில் தனக்கான அறையிலும் ஏசியில்லாமல் இருக்க மாட்டான். குளிர் மழை காலமென்றாலும், அவனுக்குப் பேனுக்குப் பதில் ஏசியை மிதமான டெம்பிரேச்சரில் போடுவான்.
அதே போலக் குடிக்கும் தண்ணீரும் ஐஸ்வாட்டர் வேண்டும். ஊருக்கு கூடக் காசு போனாலும் பரவாயில்லை என்று ஏசி பஸ் சாய்விருக்கை கொண்ட பெர்த் சீட் என்று புக் செய்திருந்தான்.
“அத்தான் குளிருது..” என்று நடுங்கியவளை தன் பக்கம் இழுத்து “எனக்கு வசதியா இருக்கும்” என்று மோகத்தால் வெட்பம் கூட்டினான்.
இங்கு நள்ளிரவு அபர்ணா விழித்து இடத்தைச் சுற்றி பார்த்து, அப்பா இனி அவங்க வீட்ல நாம இருக்க மாட்டோமா. என்னை இனி அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பிடுவிங்களா அப்பா” என்று அபர்ணா கேட்க, உதயகுமார் குலுங்கி அழுதார்.
“அதெல்லாம் இல்லைடா. உனக்கு மூச்சு திணறலுக்கு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கு. இது ஹாஸ்பிடல் தான் அண்ணா உனக்காகத் தனி ரூம்ல வச்சி பார்த்துக்க ஏற்பாடு பண்ணியிருக்கான். அப்படியிருக்க, அனாதை ஆசிரமத்துக்கு எல்லாம் உன்னை விடமாட்டான். அப்பாவே பார்த்துக்கலைனாலும் அண்ணா உன்னை கூடவே வச்சி வளர்ப்பான்.” என்று மகளைத் தூங்க கூறி தட்டிக் கொடுத்தார்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 paavam andha kuzhandhai Amma Ella na oru kuzhandhai endha ulagathula survive pandradhu kashtam pa🥺
Arumai.
உதயகுமார் சொல்ற மாதிரி visakan முடிவு எடுத்தால் நல்ல இருக்கும். தப்பு செஞ்சது உதயகுமார் தானே அத அவரு ஊரறிய ஏத்துக்கட்டும் அந்த பாப்பா பாவம் ஃபேமிலியோட இருக்கட்டும்.
விசாகனும் விருசாலியும் ஒருத்தரும் ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டாங்க விசாகன் சொன்னா அதை அவை ஏத்துக்குவா நல்ல முடிவா எடுப்பா விசாகா.
பெரியவங்க செஞ்ச தப்புக்கு இன்னைக்கு அந்த குழந்தை கெடந்து அல்லல் படுது. அத நெனச்சாலே நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சிட்டு வருது.
Interesting 😍😍😍
Ivar seiyutha thappu ku aparna Vishagan nu ellar um kastapadraga
Super. Vishakan its time to take decision. Intresting
Superb epi interesting.. Avar senja thapuku ippo intha kuzhanthai kashta paduthu😢😢😢😢
Super super ka🥰🥰… Waiting for next ud….
நீயின்றி வழ்வேது…!
(அத்தியாயம் – 22)
வாவ்…! கொண்டு வரா விட்டாலும் – தாய்.
கொண்டு வந்தால் – தந்தை.
சீர் கேட்பாள் – தங்கை.
கொலை செய்வாள் – பத்தினி.
உயிர் காப்பான் – தோழன்.
இந்த பதத்தோட விளக்கம் ரொம்பவே அருமையா இருந்தது.
விஷாகனோட எண்ணங்களும்
அருமை, பேசும் வார்த்தைகளும் அருமை. அதுவும் நீ நானாகி, நான் நீயாகி…. காதலில் வேரூன்றி விட்டோம். செம, செம
கடைசி வரைக்கும் அதே மாதிரி
இருந்தா சரி.
உண்மை தான்..! காதலும்
நேசமும் கலந்து ஆசையோட எதிர்பார்த்து காத்திருக்கும்
பெண்களோட தூயமனசை ஏமாத்தம இருந்தா சரி தான்.
ம்… எல்லாரும் சேர்ந்து வீண் கௌரவத்துக்காக அந்த சின்ன பெண்ணை அனாதையாக்காம
ஆஸ்டல்ல சேர்க்காம இருந்தா சரி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Very interesting
virushali kitta pesi abarnava veetla vachi pathuka mudivu pannu vishaka athu tha nallathu pavam athu chinna ponnu ammavum illama ena panum
Indha aalu evlo Anna koodave vachu pathupanamey….yen avanuku pondati ilaya avanuku pulla varadha seira thappelam senjutu andha sumaiya payan thalaila katuran
Spr going sis eagarly💕 waiting for nxt epi👌👌👌👌
Super super super super super super super super super super super super super super super super super super super super super super
எப்படியோ அவளுக்கு உடல் நிலை சரியாகி விட்டதே
உதயகுமாரின் மட்டமான நடத்தைக்கு இப்படி ஒரு அருமையான பிள்ளைப் செல்வம்.கொடுத்து வைத்தவர் தான்.