நீயின்றி வாழ்வேது-26
விஷாகனுக்குத் தந்தை இறப்பு பேரதிர்ச்சியைத் தந்தது. ரவி தான் தந்தையை ரோட்டில் பார்த்து மருத்துவமனையில் சேர்த்து விட்டுத் தனக்குத் தகவல் தந்தான்.
அப்பொழுது கூடப் பயப்படற மாதிரி பெரிய அடியில்லைடா. கொஞ்சமா தான். உயிருக்கு ஆபத்தில்லை. பயப்படாம வா.” என்றான் ரவி.
முன்பு சங்கீதா வீட்டில் காபி குடித்து டிவி பார்த்திருந்தவரை தான் அடித்து விளாசி மருத்துவமனையில் சேர்த்தது போலக் கட்டு கட்டி படுத்த படுக்கையில் இருப்பார். மீண்டும் தன் அன்னை சேவகம் செய்ய வேண்டும், சற்று பார்த்து வண்டியோட்ட கூடாதா? என்று தந்தையைத் திட்டிக்கொண்டு வந்தான்.
மருத்துவமனை வந்து சேர்ந்தவுடன் டாக்டர் இறந்துவிட்டார் என்றால் அதிராமல் இருப்பானா?
“சார் ஏதோ சின்ன அடிப்பட்டதா தானே என் பிரெண்ட் ரவி சொன்னான். ரவி அப்படித் தானடா சொன்ன?” என்று டாக்டரையும் நண்பனையும் பார்த்துத் தவித்தான்.
“ஆக்சிடெண்ட் மட்டும் என்றால் பிழைச்சிட்டு இருப்பார். அவருக்குச் சட்டுனு சிவியரா ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.
சிகிச்சை கொடுக்கும் போதே உயிர் பிரிஞ்சிடுச்சு” என்று கிளவுஸை கழட்டி செவிலியர் நீட்டிய தட்டில் வைத்து “சாரி” என்று கடந்து சென்றார் மருத்துவர்.
அதன் பின் இதோ வீட்டில் இத்தனை பேர் இறப்புக்கு வந்து விட்டார்கள். தந்தையின் சடலம் கண்முன் இருக்க ஆடிப்போயிருக்கிறான்
இரண்டு கை பெருவிரல்களையும் சேர்த்து ‘கைக்கட்டு’ம், இரு காலின் பெருவிரல்களையும் சேர்த்து ‘கால்கட்டு’ம், வாயில் வெற்றிலை சீவலை கசக்கி ‘வாய்க்கட்டு’ம், நாடிக்கட்டு, கட்டினார்கள்.
“வயிறு புடைச்சிட போகுது ‘தொப்புள்கட்டு’ போடுங்க” என்று முதியவர் ஒருவர் எடுத்துரைத்தார்.
“பெரிசு… தொப்புள்கட்டு, தலைக்கட்டு, முழங்கால்கட்டு, கோவனக்கட்டு எல்லாம் கட்டியாச்சு” என்றான் இறப்பை முன்னின்று எடுத்து நடத்துபவன்.
உதயகுமார் சடலத்தின் தலைமாட்டில் ஒரு படியில் நெல்லை வைத்து அதில் விளக்கேற்றியிருந்தது.
பக்கத்தில் சொம்பு நீரும், மாலை சூடம் ஊதுபத்தி, வெற்றிலை சீவலென்று வைத்து, வாசலில் வெரட்டியில் சாம்பிராணி போட்டு தேங்காய் உடைத்திருந்தார்கள்.
தந்தை இறப்பு போனின் மூலமாக ஊருக்கு தகவல் சொல்லி முடித்ததும் மொத்தமாய்ப் பரவி, செந்தூரன் தாத்தா, சொல்ல அம்மாச்சி, அன்னப்பூரணி அப்பத்தா என்று ஒப்பாரி கூட்டினார்கள்.
சாதாரணமாகவே ஒப்பாரி வைத்தால் இளகிய மனம் கொண்டவர்கள் கண் கலங்கி கூடவே அழுவார்கள். அன்னபூரணியோ “கிழடு நானே உசிரோட இருக்கேன் என்னை பெத்த ராசா… உனக்கென்னயா அவசரம்” என்று வயிற்றிலும் நெஞ்சிலும் அடித்து அழுதார். செம்பருத்தியோ அக்காவை அணைத்துக் கொண்டு அவர்களும் கூட்டாய் மூக்கு சிந்தினார்.
செல்லம்மா அம்மாச்சியோ, “பூவும் பொட்டும் இழுந்து என் மக நிற்கறாளே ஐய்யனார் ஐயா இதைப் பார்க்கணுமா” என்று செல்லம்மா அம்மாச்சி கூடச் சேர்ந்து கொண்டார்.
கோடிஎடுத்து வந்து, நீர்மாலை சுமந்து வந்தார்கள். தாய் இரு மகன்கள் என்று மூவரும் நீர்மாலை சுற்றி எடுத்தார்கள். விஷாகனுக்கு அபர்ணா உள்ளிருக்க லேசாய்க் குத்தியது. அவளும் மகள் அல்லவா
அபர்ணாவை இந்த முறையும் போன் கொடுத்து அமர வைக்க முடியுமா? வீட்டில் சடலம் இருக்க விளையாட முடியாதே.
விருஷாலி அறையில் அட்டாச் பாத்ரூம் இருக்கும். கூடுதலாகச் சின்னதாக ஒரு ரூமும் இருக்கும். அதில் அவளை அடைத்து வைத்தனர் விவேக்கும் விஷாகனும்.
அவனுக்கு இந்த நேரத்தில் வேறு வழி தெரியவில்லை. அபர்ணாவை பற்றித் தெரிந்தால் இறந்தவர் வீட்டில் களோபரம் நடக்கும். கூடுதலாக இன்றே தந்தையைக் கெட்டவனென்று ஊரே கூடி காறி உமிழும்.
இன்றைக்காவது நிம்மதியாகப் போய்ச் சேரட்டும் என்று அந்த நிம்மதியை வழங்கினான்.
அவனுக்குத் தந்தையை மிகவும் பிடிக்கும். நினைவு தெரிந்த நாள் முதல் தனது நாயகன் அவர் தான்.
தற்போதை அவரின் மற்றொரு முகம் தெரிய எல்லாம் மாறிவிட்டது.
தந்தையைக் குளிப்பாட்டும் போது லேசாய் கண்கள் நீர்த்துளி வழிந்தது. எத்தனை முறை சிறுவயதில் தன்னைக் குளிப்பாட்டி விட்டிருக்கின்றார் என்று குலுங்கி குலுங்கி அழுதான்.
நேற்று வந்த விருஷாலி கூட “மாமா மாமா” என்று அழுது கரைந்தாள். சின்னமகன் சுகிர்தனோ அழவில்லை. சுகன்யாவோ கணவரின் துரோகம் மறந்து அழுதழுது மயங்கமுற்றார். ஏதோ பைத்தியம் போல எங்கேயோ வெறித்து நின்றார்.
கண்கள் மட்டும் வற்றாத ஆறுபோல வழிந்தது.
விபத்தில் அகால மரணத்தைத் தழுவியதால் ஆட்டம்பாட்டத்தை தவிர்த்துப் பிணத்தை எடுத்தார்கள். உதயகுமார் என்ற அடையாளத்தைக் கொண்ட மனிதன் பிணமாகிவிட்டார்.
முச்சந்தி வரை சுகன்யா, விருஷாலி அன்னபூரணி அப்பத்தா, செல்லம்மா அம்மாச்சி, செம்பருத்தி அம்மாச்சி, அன்னம் என்று பலரும் கூடவே வந்தனர். ஒரு கட்டத்தில் கூட வரயியலாமல் போக, செந்தூரன் தாத்தா பேரன்களைத் தாங்கி வழிநடத்தி மருமகனை கடைசியாக வழியனுப்ப வந்தார்.
இடுக்காட்டில் பிணம் எரித்து முடிக்க, தாயுக்கு தலைமகன், தந்தைக்கு இளையமகன் என்று சுகிர்தனை மொட்டை அடிக்கக் கூப்பிடவோ சுகிர்தன் மறுத்துவிட்டான்.
செந்தூரன் வற்புறுத்தவும், “தாத்தா இஷ்டமில்லைனா விடுங்க. மத்த மதத்துல எல்லாம் இப்படிக் கிடையாது. உயிரை வாங்காதிங்க. நாளைக்கு மீட்டிங் அதுயிதுனா மொட்டை தலையோட எங்கயும் போக முடியாது” என்று கத்தினான்.
செந்தூரனுக்குச் சின்னப் பேரன் பேசுவது அதிர்வை தந்தது. இக்காலப் பிள்ளைகளுக்குத் தந்தைக்கு ஆற்றும் கடமையை விட வேலை பெரிதோ என்று சலித்து அதிருப்தி அடைந்தார்.
விஷாகனோ இந்த நேரம் தம்பியை அதட்டவும் இயலாது தவித்தான். ஒரு நொடி அபர்ணா என்ன ஆனாளோ என்று மனம் துவண்டது. விவேக் தான் பூட்டி வைக்கத் திட்டம் கொடுத்தான். விவேக் தன்னோடு வந்தானா என்று தேடினான்.
மொட்டை அடிக்கச் சுகிர்தன் மறுக்கவும், தாத்தா கெஞ்சிக் கொண்டிருக்க, “மீசையாவது மழிச்சிக்கோ” என்று இறங்கி வரவும் போனால் போகின்றதென்று சம்மதித்தான்.
சுகிர்தனால் விஷாகனும் மொட்டை அடிக்கவில்லை. அவனுக்கு நடப்பதை மூளைக்கு ஏற்ற நேரமில்லை. வீட்டில் அபர்ணாவை கண்டு யாரேனும் கேள்விக் கேட்டால்? என்று ஓடவும் முடியாது மீசை மழிக்கப்பட, கண்ணீரை சுரந்து ஏற்றான்.
வீட்டுக்குச் சென்றப்பின் தனதறைக்குச் சென்று பார்க்க அந்தச் சின்னக் கதவு பூட்டுப் போட்டிருந்தது.
அவன் விவேக்கை தேட, அவனோ மச்சானை கண்டு, பேக்கெட்டிலிருந்து சாவியை மட்டும் எடுத்து மீண்டும் பேக்கெட்டில் வைத்ததும் விஷாகன் நிம்மதியடைந்தான்.
இங்குத் தனது வீட்டில் மற்றவர்கள் எல்லாம் பதினாறு நாள் இருப்பார்கள் எப்படி மறைக்க? தந்தை இறப்பு ஒரு பெரும் பாதிப்பு என்றால், அபர்ணாவை பற்றி உண்மை அறிவிப்பது பெரிய மலைப்பு.
எதையும் கையாள தெரிந்தவன் ஆண்மகன். தன்னிலையை வருந்தி வந்தவர்கள் செல்லட்டும் என்று அமைதிக் காத்தான்.
விவேக் எண்ணை அபர்ணா வைத்திருந்த போனில் பதிவேற்றி இருந்தான். பாத்ரூம் போக வேண்டுமென்றால் போன் போட்டு கூப்பிட கூறியிருந்தான்.
வீட்டில் விருஷாலி அறையில் பெண்கள் குழுமியிருந்தனர். விஷாகன் சென்று உடை மாற்றணும் என்றதும் எல்லோரும் அறையிலிருந்து வெளியேறியிருந்தனர்.
அபர்ணா இருந்த அறையைத் திறந்துவிட்டு “பாத்ரூம் போனா போயிட்டு வா” என்று கூறவும், “அண்ணா அப்பா… அப்பா…” என்று அவனைக் கட்டி கொண்டு அழவும், “அவளை அணைத்திருந்தான்.
“அப்பா இனி வரமாட்டாரா?” என்று கேட்டாள்.
மாட்டாரெனத் தலையாட்டவும் இறுக பிடித்துக் கூடுதலாய் அழுதாள்.
விருஷாலி கதவை தட்டவும் அவசரமாய்ப் பாத்ரூமில் அனுப்பி, சத்தம் போடாதே. பாத்ரூம் போயிட்டு முகம் கழுவிட்டுயிரு. வர்றவங்களை அனுப்பிட்டு கதவை திறக்கறேன்” என்று கூறவும் புரிந்தோ புரியாமலோ சரியென்று பாத்ரூம் செல்ல, வெளிக்கதை தாழிட்டான்.
அறைக்கதவை திறந்ததும் விருஷாலி உள்நுழைந்தாள்.
விஷாகன் தலை ஈரமாய் இருக்க , விருஷாலி துவட்ட துண்டை கொடுக்கவும், வாங்கித் துவட்ட ஆரம்பித்தான்.
பாத்ரூம் கதவருகே செல்ல, “என்ன பண்ணற?” என்றான்.
“பாத்ரூம் யூஸ் பண்ணணும்” என்று கூற, பாத்ரூமில் டாய்லேட் பிளஸை அழுத்தும் சப்தம் கேட்க விருஷாலி “பாத்ரூமில் யார் இருக்கா?” என்றாள்.
விஷாகன் திருதிருவென விழிக்க, பாத்ரூம் வெளிப்பக்கம் பூட்டியிருக்க, கதவை திறந்து வைத்து “யாரு?” என்றாள்.
அபர்ணா கதவை திறந்து வெளிவர, விஷாகன் அவசரமாய் அறைக்கதவை மூடினான்.
“இந்தப் பொண்ணு இங்க தான் இருக்காளா? அவங்க அப்பா அம்மா வந்துட்டாங்களா? சாரி இதுவரை எங்கயிருந்தா?” என்று கேட்டாள்.
“அது… இங்க தான் எங்கயாவது இருந்திருப்பா.” என்றான்.
“டிரஸ் மாத்தணும்னு பாத்ரூமை மூடிட்டிங்களா?” என்று கேட்டு உடையை எடுத்து நீட்டினாள்.
விஷாகன் உடையை வாங்கிக் கொண்டு அபர்ணாவை ஏறிட்டான்.
விருஷாலி மூக்குறிந்து கொண்டே தலைவலி தைலம் எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
விஷாகன் நிம்மதியாய் மூச்சு விடுத்து “அபர்ணா கொஞ்சம் கஷ்டம் தான் பட்.. நீ இங்க இன்னிக்கு ஸ்டே பண்ணிக்கோ டா. வீட்ல நிறைய ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க.” என்றான்.
அபர்ணா சரியென்று தலையாட்டினாள். அந்தச் சின்ன அறையில் மீண்டும் சென்றிட, சாப்பிட உணவும் ஸ்நாக்ஸும் கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் இருக்க பூட்டிவிட்டு சாவியை எடுத்து, உடைமாற்றிக் கொண்டு கிளம்பினான்.
இரவெல்லாம் அழுகையும் பேச்சு சத்தமும், உதயகுமாரின் பெருமைகளும் மட்டும் காது தீயும் அளவிற்குக் கேட்டது சுகிர்தனுக்கு.
சுகிர்தனும் வீட்டில் அபர்ணாவை தேடினான். ‘வீடுமுழுக்க அபர்ணா தலை தெரிகிறதா என்று அலசினான். ‘காட்டு பூச்சியை’ எங்க ஒளிச்சி வச்சியிருக்கான். ஆளையே காணோம்.’ என்று கழுகு கண்ணால் தேடி பின்னர் அது தனக்குத் தேவையற்ற விஷயம், கடையில் ஒளித்து வைத்திருப்பான் என்று சுகிர்தனாகவே முடிவுகட்டி கொண்டான்.
‘காடு புகையும் போது வீடு புகையக்கூடாது’ என்று வெளியே உணவை சாப்பாட்டை, ராஜனை விட்டு ஆர்டர் கொடுத்து வாங்கி வந்தான்.
இரவில் அனைவரும் அவரவர் கூட்டிற்குச் சென்றனர். உதயகுமாரின் தம்பி செல்வகுமாரும், தம்பி மனைவி தாமரையும் இருந்தார்கள்.
மற்றபடி தாத்தா-அம்மாச்சி, அப்பத்தா, விருஷாலி குடும்பம் என்று நிறைந்திருந்தார்கள்.
அழுதழுது பன்னிரெண்டு வரை பேசி களைத்துப் பெரியவர்கள் உறங்க, மீதியிருந்தவர்கள் ஒருமணிக்கு உறங்கினார்கள்.
விஷாகன் தனதறையில் இருந்த சின்னக் கதவை வெறித்தான்.
அபர்ணாவுக்குச் சாப்பிட கொடுத்தப்போது அவளின் கண்களும் அழுதபடி இருந்தது. இங்கு அன்னை அருகே செல்லம்மா அம்மாச்சி இருக்கின்றார்கள், அன்னம் அத்தை மற்றும் விருஷாலி கூடவே அமர்ந்து கொண்டிருக்கின்றாள்.
அன்னபூரணி அப்பத்தா அருகே தாமரை சித்தி இருக்கின்றார்கள். கூடயிருப்பதே ஆறுதலாக இருக்கும்.
இங்கு அபர்ணாவுக்கு அப்படியாரும் கூடயில்லை. முன்பு தாய் சங்கீதா இறந்த பொழுது தந்தை இருந்தும் அரவணைக்க முடியவில்லை. தற்போது தந்தை இறந்த கணம் அவளுக்கு யாருமில்லையே என்ற வருத்தம் அவனை வாட்டியது.
விஷாகனும் விவேக்கும் அறையில் படுத்திருந்தனர்.
வேறு யாருமில்லையென்றதும் “நாளைக்கு எல்லாம் இந்தப் பிள்ளை வீட்ல இருக்கறது தெரிந்துடும் மச்சான்.” என்றான் விவேக்.
“இதுவொன்னும் பங்களா இல்லையே விவேக். மூனு ரூம் ஹால் கிச்சன். என் ரூம்ல மட்டும் ஏதோ சின்னதா ஸ்டோர் ரூம் செட் பண்ணினேன். மோஸ்டா ஏதாவது தண்ணிகேன் மெஷின் போட்டுவைக்க உதவும்னு. இப்ப அதுல பாய் விரிச்சி அபர்ணா இருக்கா. பூட்டி வச்சி பூட்டி வச்சி என்ன பண்ணறது.
முடியலை விவேக்… இயல்பாவே என்னால தப்புச் செய்ய முடியாது. தப்பை மறைக்கவும் தெரியாது.
நாளைக்கு எல்லாரும் வீட்ல இருக்காங்களோ இல்லையோ பத்து மணிக்கு அபர்ணாவை முன்ன நிறுத்தி உண்மையைச் சொல்லிடணும்” என்று கூறி தன் கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்து விட்டத்தைப் பார்த்தான். அவனின் பார்வையில் தீர்க்கமான முடிவென்று விவேக்கிற்குப் புரிய துவங்கியது.
விவேக்கிற்கும் சரியென்று படவும், மச்சானுக்குத் துணையாக இருக்க முடிவெடுத்தான். ‘மச்சான் தயவிருந்தால் மலையேறியும் பிழுக்கலாம்’ விஷாகன் பிழைத்து வேதனையைத் தீர்க்கப்படுமா என்று நாளை தான் விடியல் பறைச்சாற்றும்.
-தொடரும்.
Praveena Thangaraj

Nice epi👍👍👍👍👍👍
So sad. Vishakan its time to take decision. Intresting
Romba emotional epi sis 😢🥺 paavam andha kuzhandhi last ah eppo appavum Ella avaruku yedhuvum seyavum mudiyala romba kodumai pa 🥺 endha sugirthan ellam nalla anubavipan pa cha manushan ah Avan 😤 nalaiku enna nadakumo parpom 🤔
Vichu appa oda irappu romba kastama irukku🤧…. Paavam aparna amma um appa um ila andha kozhandhaiya nenaicha kastama irukku🤧🤧…. Indha sugir payan epotan thirundhuvano therila…sjrm nalla mudivu edu vichu…
Vichu oda appa irappu romba kastama irukku 🤧🤧…. Yerkanavae naan padichirundhalum indha scene la enaku azhagai tan varum…. Paavam aparna amma um ila appa um ila rimba kastam andha kozhandhai nilamai…. Indha sugir paiyan epo tan thirundhumo therila….
Skrma sollidu da vichu unmaiya ellarkittayum….
Super super super super super super super super super visagan seekirama solliru apo than ory mudivu kidaikkum aparna pavam 😰😰😰😰😰sukirthan than appa va thappa pesunanu theriyum ellarukum😠😠😠😠😠😠
Super 👌
Emotional epi 😞😞😞😞😞 aparna nelama romba kashtama iruku 😢😢😢😢 chinna ponnu intha vayasula ivolo kashtam😢😢😢 vishakan shld tk Correct decision…. Sukirthan 😡😡😡😡😡😡
Amma vum ipo appavum illama abarana aaruthalum kedaikama pavam antha kolanthai intha vayasula ivlo kastam kudathu . So sad epi sisy. Sikram oru mudivu solla vainga vishaka ah
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 26)
நாளைக்கு, நாளைக்குன்னு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாட்களை கடத்துவாங்களோ தெரியலை.
நாளைக்குங்கிறது என்னைக்கும் கிடையாதுன்னு தானே பொருள். அபர்ணவோட அம்மா இறந்தன்னைக்கு அப்பாவாவது ஆறுதலுக்கு இருந்தாரு. இன்னைக்கு அப்பாவே இறந்துட்டாரு, ஆறுதலா இருக்க வேண்டிய அண்ணன்காரனும் பொநிப்புகள், கடமைகள்ன்னு ஒதுங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை. ஸோ… அவளோட அண்ணன்காரனே கூட இல்லைன்னா, அந்த அபர்ணா தவிச்சு போயிடமாட்டாளா.. ?இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அபர்ணாவை அறைக்கு உள்ளேயே அடைச்சு வைச்ச மாதிரி, உண்மையை அடைச்சு வைக்க முடியும்ன்னு நினைக்கிறாங்க…? தவிர, உண்மையை ஆறப்போடறதும் தப்புத்தானே. ‘ஜஸ்டிஸ் டீலேட்
இஸ் ஜஸ்டிஸ் டினைட்’ தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice going waiting for nxt epi😍😍😍
Vishagan ku udayakumar oda irapu oru vagai la varutham na aparna oda nilamai than rombha kastapaduthu thu pavam avalukku amma vum illa ippo appa na ra uravum illa poiduthu la
Waiting for next ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அபர்ணா நிலையும் பாவம் தான்
அபர்ணா பாவம்
சுகிர்தன் பேசின வார்த்தை ஒரு மனுஷனோட உயிரையே எடுத்துருச்சு அந்த குற்ற உணர்ச்சி அவனுக்கு கொஞ்சம் கூட இல்லையே