புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-31

நீயின்றி வாழ்வேது-31

அடுத்த நாளே மற்றவர்கள் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார்கள்.

சுகிர்தன் அறையிலிருந்த அன்னபூரணியோ தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அபர்ணா கழுத்திற்கு மாட்டிவிட்டு, அருகேயிருந்த மருமகள் சுகன்யாவிடம் “என்னவோ உதய் தப்பு பண்ணிட்டான். நீ தான் என் மகனோட பொண்ணைப் பார்த்துக்கணும்.” கையைப் பிடித்துச் சங்கடமாய்க் கூறிவிட்டு நகர்ந்தார்.

செம்பருத்தி அம்மாச்சியோ விருஷாலியிடம் வந்து, “அம்மாச்சி கிளம்பறேன் ஆத்தா. தெரிந்தோ தெரியாமலே எங்கக்கா குடும்பத்தால நீ கஷ்டப்பட்டா அதுக்கு நான் தான் காரணம். என்னை மன்னிச்சிடு ஆத்தா” என்று அறைக்குள் கூறிவிட்டு, ஹாலுக்குச் சென்றார்.

அன்னமோ விருஷாலியை இடித்து, யாருமில்லையென்றதும் “இங்க பாருடி… புருஷன் குடிச்சிட்டு விழுந்து கிடந்தாலும், என் வீட்ல.. என் மடில விழுந்து கிடப்பான். இந்தவூட்ல எங்கண்ணன் அடுத்தவ மடி தேடி போயிடுச்சு. நீயும் எங்கண்ண பையனை நம்பி மோசம் போகாதே. அந்தக் கொரியர் ஆபிஸ்ல இருக்கற சிறுக்கியை முதல்ல வேலையை விட்டு தூக்கு அவ்ளோ தான் சொல்வேன்.” என்றார்.

“அம்மா என்ன பேச்சு பேசற?” என்று விவேக் கத்தவும், சங்கரன் தானாய் வெளியேறியிருந்தார். அவருக்கு இதற்கு முன் தனக்குப் போகுமிடமெல்லாம் குடிக்காரன் பட்டம் காட்டாத மனைவி, இப்போது எதற்கெடுத்தாலும் உதாரணத்திற்கு இழுக்க அவர் வேறென்ன செய்வார்.

“சும்மாயிரு டா விவேக். ஏதோ மனசை உறுத்தவும் சொல்லறேன்.

ஏன்டிம்மா.. முன்ன கொடுத்த காசை வச்சியிருக்கியா இல்லையா?” என்றதற்கு “அப்படியே இருக்கு” என்றாள் விருஷாலி.

“நல்லது… இந்தா இரண்டாயிரம் இதையும் வச்சிக்கோ. எதுக்காவது உபயோகமாகும். எதுனாலும் சரி நான் இருக்கேன்.” என்று முகவாயை நிமிர்த்தி அன்னம் கூறவும் “சரி” என்றாள் விருஷாலி.

அம்மா அப்பா இருவரும் சென்றதும் விவேக் தலையிலடித்து, “மச்சான் சொக்க தங்கம். தேவையில்லாம அம்மா சொல்லறதை மனசுல வச்சிக்காம, இப்பவே தூக்கி குப்பையில போடு. அபர்ணா பிள்ளையைப் பார்த்துக்கோ. எத்தனையோ இடத்துல அம்போனு விட்டுடுவாங்க. எந்தவூட்ல இப்படிச் சரிக்கு சமமா இப்படி அந்தக் குழந்தையையும் நடத்துவாங்க. மச்சான் மனசு அந்தளவு வெள்ளை.” என்று புகழ, “அய்யோ.. போதும் அண்ணா. அதெல்லாம் மச்சான் தங்கம்னு நீ சொல்லி தெரியவேண்டியதில்லை.” என்று விருஷாலி கூறவும் விவேக் நிம்மதியாய் புறப்பட்டான்.

செந்தூரன்-செல்லம்மா அம்மாச்சி நீண்ட காலத் தம்பதியர்களாக இருக்கவும் விஷாகன் விருஷாலியை அழைத்து விழுந்தான். “தாத்தா… கல்யாணத்தப்ப விழுந்து ஆசிர்வாதம் வாங்குனு அன்னபூரணி அப்பத்தா சொல்லுச்சு. மறந்துட்டேன்… இப்ப ஆசிர்வாதம் பண்ணு.” என்று காலில் விழுந்தான்.

சுருக்கு பையிலிருந்து செல்லம்மா காசை எடுக்க, செந்தூரனோ டவுசர் பேக்கெட்டிலிருந்து எடுத்துக் கையில் திணித்து, “நல்லாயிருக்கணும்யா… நல்லாயிருக்கணும். உன்னை எப்படி நேசிக்கறியோ அதே அளவு உன் பொஞ்சாதியை நேசியா. அம்மாடி உனக்கும் தான்” என்று விபூதி பூசி விஷாகனை கட்டி பிடித்தார்.

வயோதிகர்களைச் சௌவுகரியமாக, பஸ் ஏற்றிவிட்டு விஷாகன் வீட்டுக்கு வந்திருந்தான்.

   நாட்கள் சில நகர்ந்தது….

அபர்ணாவின் அடமும், சுகன்யாவின் விருப்பமும் சேர்ந்து சுகிர்தன் அன்று ஐஸ்க்ரீம் வாங்கி வந்திருந்தான்.

அவனுக்கு அன்னையிடம் தன் காதலை பற்றிப் பகிர வேண்டிய காரியம் கழுத்தை நெறித்திருந்தது. அதனால் அபர்ணா கேட்டதாகச் சுகிர்தனுக்குச் சுகன்யா போன் போடவும், ‘அந்தப் பொண்ணுக்கு வாங்க மாட்டேன்’ என்று அலட்டாமல் ஐஸ்க்ரீமை வாங்கி வந்திருந்தான்.

இந்த நேரம் கூறலாமா தவிர்க்கலாமா என்ற யோசனை எல்லாம் சுகிர்தனுக்குக் கிடையாது. தனக்குக் காரியம் ஆகவேண்டும் என்ற நோக்கம் மட்டும் எழவும், இரவு அன்னையிடம் பேச காத்திருந்தான்.

விஷாகனின் திருமணம் முடிந்தப்பின் ஜெனிபர் பற்றிக் கூறுவதாகத் தான் சுகிர்தன் எண்ணம். ஆனால் அந்த நேரம் தான் அவளோடு சண்டையென்று தவிர்த்தான்.

அடுத்து தந்தை இறப்பு என்று மேலும் தள்ளி சென்றதால் ஜெனிபர் வீட்டில், சர்ச்சிற்கு வந்தவளை, அப்படியே அவளைப் பெண்பார்க்க வந்தவர்கள் முன், அவள் குடும்பம் நிறுத்தவும் பல்லை கடித்துச் சகித்துக் கொண்டாள் ஜெனிபர். இனியும் என்னால் சகிக்க இயலாது. ஒன்று வீட்டுக்கு வந்து மணந்துக்கொள், இல்லையேல் மொத்தமாய்த் தன்னைத் தலைமுழுகு’ என்று ஜெனிபர் கடைசியாய் கூறவும் தான் சுகிர் தாமதம் செய்யாமல் அன்னையைத் தேடி வந்தான்.

வீட்டில் விருஷாலி விஷாகன் சாப்பிட்டு அவர்கள் அறைக்குச் செல்லவும், “அபர்ணா தூங்கிட்டா சொல்லுங்கம்மா. உங்களிடம் பேசணும்” என்று கூறிவிட்டு ஹாலில் காத்திருந்தான்.

சுகன்யாவும் இனி கணவர் வரப்போவதில்லை. அவர் தவறான முறையில் சென்றாலும் தற்போது அபர்ணாவை தன் பொறுப்பு என்ற வகையில் அவளை உறங்க வைத்து வெளிவந்தார்.

“என்னடா பேசணும்.” என்று கவலையாய் வந்து மகன் சுகிர்தன் அருகே அமர்ந்தார்.

“அம்மா… விஷாகன் திருமணம் முடிந்ததும் நானா உங்களிடம் பகிரணும்னு நினைச்சேன். ஆனா அப்பா தவறியதால என்னால எதையும் முடிவெடுக்க முடியலை.” என்று பீடிகை போட்டு ஆரம்பித்தான்.

சுகன்யா அணிந்திருந்த முககண்ணாடியை துடைத்து, மகன் பேசவரும் சாரம்சம் அறிந்திடும் ஆவலில் இருக்க, “நான் ஒரு பொண்ணை விரும்பறேன். பெயர் ஜெனிபர் என் ஆபிஸ்ல தான் வேலை பார்க்கறா.” என்று இடியை இறக்கினான்.

சுகன்யாவை பொறுத்தவரை இது பேரிடியாகத் தோன்றவில்லை. எளிதில் ஏற்கும் முகபாவத்துடன் அவனை ஏறிட்டார்.
அதுவே அவனுக்கு மேலே கூறு என்பதாகத் தோற்றமளிக்க, “அவளுக்கும் எனக்கும் இரண்டு வயசு தான் வித்தியாசம். அவங்க வீட்ல கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அவளை இரண்டு வருஷமா ‘புஷ்’ பண்ணறாங்க.

அவளும் என்னிடம் நிறைய முறை வீட்ல வந்து பேச சொல்லிட்டா.

நான் தான் விஷாகனுக்குக் கல்யாணம் ஆகலைனு தள்ளி போட்டுட்டே வந்தேன். இப்ப அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் வைக்கிற அளவுக்குப் போயிட்டாங்க. என்னால இனியும் தடுக்க முடியலைனா. அவயெனக்கு கிடைக்க மாட்டா. இந்தச் சூழ்நிலையில மறுபடியும் கல்யாணம் பண்ண முடியாது. அதே மாதிரி நீங்களும் வந்து பேச முடியாது.

விஷாகனை வந்து பேச சொல்லுங்க.” என்று முடித்தான்.

சுகன்யாவோ எதையும் மறுத்து பேசவோ, தன் கருத்தை கூறவோ இயலாத வகையில் பேசுபவனிடம் என்ன கூறுவது.

“சரிடா நாளைக்கு அவனிடம் பேசறேன்” என்று முடித்துக் கொண்டு அறைக்குச் சென்றார்.

சுகிர்தனோ நிம்மதியாய் தனது ஜெனிபரிடம் போனில் அன்னையிடம் கூறிவிட்டேனெனத் தகவல் தர, சட்டெனப் போன் போட்டுவிட்டான். அதன் பின் நீண்ட உரையாடல்கள் காதலர்களுக்குத் தொடர்ந்தது.

தண்ணீர் பாட்டில் காலியாகவும் எடுக்க வந்த விஷாகன் தம்பி பேச்சை கேட்டு, அறைக்குள் நீரெடுக்காமல் திரும்ப, விருஷாலி கையை நீட்டவும் தான், அவளுக்குத் தண்ணீரை எடுக்க மீண்டும் வெளிவந்தான்.

யோசனையோடு சுகிர்தனின் காதலுக்கு ஆமோதிப்பது மட்டுமே தன் வேலை என்பதை அப்பொழுதே முடிவு செய்து கொண்டான்.

தண்ணீரை கொடுத்து விட்டு படுக்க வரும் போது விருஷாலி சோர்வாய் கண் திறந்து, “என்னாச்சு தூங்கலையா?” என்று கேட்க, “தூக்கம் வரலை ஷாலிம்மாக” என்றதும் விருஷாலி கையை நீட்டவும் விஷாகன் அவளைக் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் விடியல் அழகாய் விடிந்தது.

சுகன்யா காலையுணவு பரிமாறும் போது, அமைதிகாத்தார்.

சுகிர்தன் “சொல்லும்மா” என்று ஊக்கினான்.

விஷாகன் மடமடவெனச் சாப்பிட்டு அறைக்குள் கிளம்பத் தயாராக, விருஷாலி அவனின் கைகடிகாரத்தை நீட்ட வாங்கி அணிந்தான்.

“இன்னிக்கு அபர்ணாவுக்கு லீவு. கொஞ்சம் லேட்டா கிளம்பலையா விஷாகா.” என்று சுகன்யா கேட்டதற்கு “வேலை தலைக்கு மேலயிருக்கும்மா. வாட்டர் சப்ளை, கொரியர் கடை இரண்டும் நான் தான் கவனிக்கறேன்.” என்று கைகடிகாரம் அணிந்தப்பின் முழுக்கை பட்டனை போட்டுவிட்டு, மடித்து விட்டான்.

“கொஞ்சம் பேசணும் விஷாகா. சுகிரை பத்தி” என்றதும், “சீக்கிரம் சொல்லுங்கம்மா” என்று போனை தன் பேக்கெட்டில் வைத்தான்.

“ஷாலி ஏதாவது வாங்கணும்னா போன்ல கான்டெக் பண்ணு” என்று கூறவும் விருஷாலி தனது புதுப் போனை எடுத்து சரியென்றாள்.

“சுகிர்தன் ஒரு பொண்ணை விரும்பறான் டா. இத்தனை நாள் உன் கல்யாணம் முடியாம எப்படிச் சொல்லணும்னு தவிர்த்திருப்பானாம். அவன் விரும்பின பொண்ணு வீட்ல இப்ப கல்யாணத்துக்கு அவசரம் காட்டவும், உன்னிடம் பேச சொன்னான்.” என்று கூறினார்.

“உங்களுக்குக் காதல் கல்யாணம் ஓகே என்றால் பேசிடலாம்மா ” என்றான்.

லேசாய் உறுத்தினாலும் சுகிர் தன்னிடம் போட்டோ கூடக் காட்டாதவளை ஏற்றுக்கொண்டார்.

“சரிம்மா… நான் என்ன பண்ணணும்” என்று கேட்டதும் சுகிர்தன் சட்டென ஒட்டு கேட்டவன் உள்ளே வந்து, அவங்க அப்பா அம்மாவிடம் வந்து பேசு. அவங்க சரிவந்தா ஓகே, இல்லைனா அவளை மட்டும் கல்யாணம் பண்ணிட்டு வந்துடலாம்.” என்றான்.

ஏதோ கல்யாணம் என்றால் ஒர் பெண் ஒர் ஆண் மட்டும் இணைந்தால் போதுமென்றைவரை தான் அவன் ஞானம்.

“மதியம் லீவு போடு… போய்ப் பேசலாம்” என்று விஷாகன் அவன் கருத்தை கூறிவிட்டு அகன்றான்.

சுகிர்தனோ மனதிற்குள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தான்.

என்ன நினைத்தானோ விஷாகன் விருஷாலியை இன்று கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கையோடு கூட்டிக்கொண்டான்.

விருஷாலியும் கணவனின் தொழிலை கண்ணால் காண ஆவலாய் கிளம்பினாள்.
அபர்ணாவோ தானும் வருவதாக அடம் பிடிக்க, முதலில் விஷாகன் வேண்டாமென மறுத்தான்.

சுகன்யாவோ போக வேண்டாமெனக் கூறவும் பாவமாய் முகத்தை வைத்து லேசாய் அழுகை கொண்டவளாய் மாறினாள்.

விஷாகன் பாவம் பார்த்து அவளையும் கூட வரச்சொல்ல, அபர்ணா உடைமாற்றி ஓடிவந்தாள்.

விருஷாலிக்கு சின்ன ஏமாற்றம் தாக்கியது. தனியாக விஷாகனோட செல்ல இயலவில்லையே.

அபர்ணா முன்னால் அமர, விருஷாலி பின்னால் அமர்ந்தாள்.

லேசாய் வாட்டமாய் வந்தவளின் மனதை படித்தவனாக, அவளின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து, இடையோடு கட்டிக்க இறுக்கினான்.

கணவரோடு பைக் பயணம் அதுவும் அவன் இடையைக் கட்டிக்கொண்டு. ஆனால் தனியாகச் செல்லவில்லையென்ற வருத்தம் சூழ்ந்தாலும் முகத்தில் காட்டாமல் மென்னகைத்தாள்.

நேராக ‘விஷாகன் வாட்டர் சப்ளை’ என்ற போர்டு மாட்டியிருந்த குடோன் போன்றதற்குள் நுழைந்தான்.

உள்ளே ஒர் அறையிருக்க, அபர்ணா வேகமாய்ச் சென்று விஷாகன் இருக்கையில் அமர்ந்தாள்.

விருஷாலி ஒவ்வொரு இடமாய் அங்குப் பார்வை பதிக்க, ராஜன் வந்தான். அகஸ்டியன் வெளியே தண்ணிகேனை சைக்கிளில் வைத்து கட்டி எடுத்து செல்ல, அறிந்தவர் என்ற முறையில் சிரித்தாள்.

ஏசியைக் கூட்டி விட்டு “மகாராணி மேடம் என் சீட்ல உட்காருங்க, அபர்ணா கொஞ்சம் எந்திரி.” என்றான்.

“மாட்டேன் இது என் இடம்” என்று முன்பு வந்து அமர்ந்ததால் சட்டமாய்க் கூறினாள்.

“பச்… கொஞ்சம் எந்திரி. அண்ணி உட்கார்ந்துட்டு எழுந்துப்பா” என்றதும் எழுந்தாள்.

விஷாகன் பார்வையாலையே மகாராணியான தன்னவளை அமர கூறினான்.

விருஷாலி மகிழ்ச்சியாய் அமர்ந்து, “நைஸ்… சின்னதோ பெரிசோ நீங்க முதலாளி.” என்று பெருமையாகக் கூறினாள்.

“தேங்க்ஸ்… அதென்னவோ யாருக்கும் அடிபணிந்து நடந்ததில்லையா. சுகிர் மாதிரி வேலைக்கு எல்லாம் போனேன். ஆனா சாட்டிஸ்பெக்ஷன் வரலை. தனியா தொழில் பண்ணறதுல தான் என் மனசு அலைந்தது.

எனக்குப் பஞ்சபூதம் சப்போர்ட் இருக்காம். அதுவும் நீர் வியாபாரத்துல இறங்கினா நஷ்டமில்லைனு அம்மா கிளப்பி விட, எனக்கு அந்தப் பேச்சை வச்சி, நீரோட என்ன பிசினஸ் என்று யோசிச்சப்ப தண்ணி கேன் தான் சட்டுனு மனசுல பதிந்தது.

முதல்ல பெரிசா வியாபாரம் கொட்டலை. அப்பா நிறையப் பேரோட பழகியதால அவங்களிடம் எல்லாம் அறிமுகப்படுத்தி வச்சார். அதனால போகப் போக வீட்டுக்கு மட்டும் தண்ணி கேன் போட்டதுக்குப் பதிலா கல்யாணத்துக்குத் தண்ணி கேன் போடுறதும் அமோகமா செட்டாச்சு. ராஜன் முதல்ல இருந்தே என்னிடம் வேலை செய்யறான்.

பதினாறு வயசுலயிருந்து. இப்ப பத்தொன்பது வயசு இருக்கும்ல டா” என ராஜனை கேட்க, இவர்கள் பேச்சை ஓட்டு கேட்டுக் கொண்டே இருந்தால் விஷாகன் பேசவும், “என்னண்ணா?” என்று கேட்டதும், “நீ வேலைக்குச் சேர்ந்து மூன்று வருஷமிருக்குமானு கேட்டேன்.” என்றதும் “இருக்கும் அண்ணா” என்று பதறி இடத்தை விட்டு நழுவினான்.

விஷாகன் சேரில் அமர்ந்து அவன் டேபிளில் ஒவ்வொன்றாய் பார்வையிட்டாள்.
அவன் டேபிளில் அவன் புகைப்படத்திற்குப் பின்னால் வேறொரு புகைப்படம் சொறுகியிருக்க, எடுத்து பார்த்தாள்.

அந்த புகைப்படம் அவளுடையது தான். “இதெப்படி இங்கே?” என்று கேட்டாள் விருஷாலி.

“பொன்னுருக்கறப்ப விவேக் எடுத்துட்டு வந்து கொடுத்தான்.” என்று கூறவும் விருஷாலி விஷாகன் இருவரும் தங்களை மறந்து மையல் பார்வையைத் தழுவியிருக்க, அபர்ணாவோ, “போதும் அண்ணி எந்திரி.” என்று கீழே தள்ளாத குறையாக அவளை எழுப்ப தள்ளினாள்.

விஷாகனோ “அபர்ணா.. என்ன அவசரம்” என்று விஷாகன் அதட்டவும், அபர்ணா கண்ணில் நீரை பெருக்க, “எதுக்கு அதட்டறிங்க. விடுங்க… சின்னப் பிள்ளைதானே” என்று எழுந்து விட்டாள்.

“சரி நீ இங்கயிரு நான் போய் ஜிகர்தண்டா வாங்கிட்டு வர்றேன்” என்று சென்றான்.

விருஷாலி ஏதோ பேசவேண்டுமென்று, “நல்லா இருக்குக் கடை. நீயும் அகஸ்டியன் மட்டும் தான் இங்க வேலை பார்க்கறிங்களா?” என்று ராஜனிடம் கேட்டாள்.

ராஜனோ “ஆமா அக்கா. இரண்டு பேர் தான்” என்றவன் வன்மம் புகுந்த மனதால் “முன்ன அண்ணா இங்கயே இருப்பார். இப்ப எல்லாம் கொரியர் ஆபிஸே கதினு போயிடறார்.

அந்தக்கா கூடப் பேசிட்டே வேலை செய்யப் பிடிக்குதாம். இங்க வெட்டி பயல் கூட இருக்கப் போரடிக்கு என்று பேசும்.” என்று திரியை கொளுத்தி போடவும் விருஷாலி பேச்சை தவிர்க்க அமைதியானாள்.

அபர்ணா வேறு அமரும் இருக்கையை விடுத்து எழ செய்தது, ராஜன் பேசியது லேசாய் எரிச்சலை வரவழைத்தது.

எல்லாம் விஷாகனை காணும் வரை தான். சூரியனை கண்டு மறையும் பனித்துளி போலக் கோபங்கள் பறந்தது.

விஷாகன் மூன்று ஜிகர்தண்டா வாங்கி வந்து நீட்ட அபர்ணா விருஷாலி குடித்தனர்.

சற்று நேரம் கழித்துக் கொரியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்று விருஷாலியை எழுப்பினான்.

அவளோ வயிறு புல்லாயிருக்கு என மறுக்க, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.

கொரியர் ஆபிஸ் தந்தையின் உழைப்பு என்பதால் அதையும் பெருமை பேசினான். வளவனைப் பற்றிப் பேசியதும், கூடுதலாகச் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்த மகேஸ்வரியையும் புகழ்ந்தான்.

விருஷாலிக்கு அன்னை கூறியதை நினைக்கக் கூடாதென்றாலும், ஏனோ அதே நினைப்பு வந்து மனதை அறுத்தது.

அவள் கேள்விப்பட்டவரை மாமா உதயகுமாருக்கும், அபர்ணா அம்மா சங்கீதாவுக்கும் காதல்(?) மலர்ந்தது இங்குத் தான் என்று ராஜன் கதைகதையாக ஏற்றிவிட்டவை வேறு மனதை அழுத்தியது.

இதில் அபர்ணா வேறு இங்க அம்மா இருந்தாங்க. அங்க அப்பா இருந்தார். முன்ன எப்படியெல்லாம் இருந்தது. சே… இப்ப அப்பா இடத்துல அண்ணா. அம்மா இடத்துல இந்த ஆன்ட்டி” என்று குறைப்பட்டுப் பேச, விருஷாலிக்கு திக்கென்றானது மனம்.

அந்தக் கடையை அறிமுகப்படுத்திய விஷாகன் ராஜனிடம் பேசவில்லை. இங்கு மகேஸ்வரியிடம் சிரித்துப் பேச லேசாய் காதல் மனம் பொறாமை கொண்டது.

தன் கணவன் என்பதால் இந்தப் பொறாமை தேவையற்றது. ஆனால் அன்பு அதிகரிக்க அதிகரிக்கக் கண்டதையும் மனம் போட்டு குழப்ப தயாராய் இருந்தது.

அதையெல்லாம் தூக்கி போட்டு தனக்கே உரிய பக்குவத்தைக் கையாள முயன்றாள்.

பாதி வெற்றி பெற்று, வேலை செய்பவர் தானே, ஏன் தேவையில்லாத விஷயத்தோட முடிச்சிடற” என்று அதட்டி அடக்கினாள் மனதை.
விருஷாலியும் அதன் பின் மகேஸ்வரியிடம் பேசிவிட்டு அபர்ணாவை அழைத்துக் கொண்டு விஷாகனோடு வந்தாள்.

வீட்டுக்கு வந்தப்பொழுது மகேஸ்வரி பற்றி எண்ணமே வாசலோடு அறுந்துவிட்டது.

சுகிர்தன் அண்ணன் வந்ததும் சாப்பிட்டு அவனின் மாமனாரை சந்திக்க அழைத்துச் சென்றான்.

சுகன்யாவோ “பார்த்துப் பக்குவமா பேசு விஷாகா” என்று மட்டும் கூறி அனுப்பினார்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

16 thoughts on “நீயின்றி வாழ்வேது-31”

  1. super epi . sugirthan thevaiku mattum crt ah vanthu aan kitta pesuran avan aasaiku ethum solla kudathunu rendu perum sammathichitanga. virushali un manasa nee than crt ah vachikanum intha rajan solratha la ketu potu coonfuse panikatha

    1. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
      எங்கும் சில புள்ளருவிகள் இருக்கத்தான் செய்யும்

  2. நீயின்றி வாழ்வேது…!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 31)

    அடப்பாவி…! இந்த ராஜன் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றானே. இதுக்குத்தான், வேலைக்காரனே ஆனாலும் ரெண்டடி தள்ளியே நிப்பாட்டணும்ங்கறது.

    போனது தான் போனாங்க இந்த அன்னம் வாயை வைச்சிட்டு சும்மா போகாம நல்லாவே கொளுத்தி போட்டுட்டு போயிட்டாங்க போல. எந்த நிமிஷம் இந்த சந்தேகப்புகை தீயா பத்தி எரியப் போகுதோ..
    இல்லை, அப்படியே எதுவும் ஆகாம அமைஞ்சிடப்போகுதோ தெரியலை.

    சந்தேகம் முன்வாசல் வழியா வந்தா… சந்தோஷம் பின் வாசல்
    வழியா போயிடுமாம். இது புரிஞ்சுக்கிட்டா சரி.
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  3. Sissss😪oru kru epi padika padika iyo ethachu pblm varumanu bayanthu bayanthu padikarathu iruku appada nu nimaithiya aagarathukulla adutha shali ye visagana purinchakama poiruvalonu bayama iruke…

  4. அடுத்தவங்க நல்லா இருந்தா சில ஜென்மங்களுக்கு கண்ணு பொறுக்காதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!