நீயின்றி வாழ்வேது-33
திருமணத்தைத் தாய்-தந்தை பேச்சை மீறி ஜெனிபர் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து சுகிர்தனையும் சம்மதிக்கத் தலையாட்ட வைத்திருந்தாள்.
தன் வீட்டில் பேசியிருக்கின்றோம் சற்று காத்திரு என்று சுகிர்தன் கூறியதற்கு ‘எங்க வீட்ல இருக்கறது நான். அங்க எனக்குச் சத்தமேயில்லாம பொண்ணு பார்த்தவங்களோட கல்யாண விஷயம் பேசறார் எங்கப்பா.
இப்ப என்னைக் கல்யாணம் பண்ணுவியா மாட்டியா’ என்று வற்புறுத்தி மணந்து கொண்டாள் ஜெனிபர்.
சுகிர்தன் மனநிலையோ ‘என்னவோ முடிவெடு’ என்று விட்டுவிட்டான். இதோ இங்கு அலுவலகம் இருக்கும் அதே ஏரியாவில் ஜெனிபர், வீட்டு புரோக்கர் மூலமாகத் தேடி அட்வான்ஸ் செலுத்திட, இங்கு வந்து வாழ அனைத்தும் வாங்கியிருந்தாள்.
சுகிர்தன் சிலதை வாங்கினானெறால் பாதிக்கு மேல் ஜெனிபர் தான் அவள் செலவில் வாங்கினாள்.
விஷாகன் மட்டும் ஓரெட்டு பார்த்து விட்டு ‘ஏதேனும் உதவினா கேளுடா’ என்றான்.
ஜெனிபரோ “போர்த் ஃப்ளோர்ல செகண்ட் வீடு.. ஹாங்.. டோர் டெலிவெரி பண்ணிடுங்க” என்று போனில் உணவை வரவழைக்கவும், விஷாகன் அதனைக் கவனித்து, “அநேகமா எங்க உதவி உனக்குத் தேவைப்படாது. பணம் வேணும்னா தயங்காம கேளு. பார்த்துச் செலவு பண்ணுடா” என்று தம்பியை தட்டி கொடுத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டான்.
தனது வீட்டுக்கு வந்த நேரம் சுகன்யாவோ செல்லம்மா அம்மாச்சிக்கு அழுதபடி இளையவனுக்குத் திருமணம் நடந்தேறிய கதையைக் கூறினார். அதுவும் மதம் மாறி நடந்ததைத் தெரிவிக்க, அன்னபூரணி அப்பத்தா வரை சென்றடைந்தது.
“எம்பையன் இருந்திருந்தா இப்படி நடந்திருப்பானா? பால் ஊத்தின இடம் காயறதுக்குள்ள கல்யாணம் கட்டிக்கிட்டானே.” என்ற ஒப்பாரி மட்டுமே.
விருஷாலியோ மற்றவர் தலையெழுத்தை நாம் மாற்ற முடியாதென்று அதில் தலையிடவில்லை.
சுகிர்தன் இல்லாததால் அவனது அறையை அபர்ணாவுக்கு வசதியாகச் செய்து கொடுத்தார் சுகன்யா. விஷாகன் கொடுத்த பணத்தை எல்லாம் தனி டிரஸிங் டேபிள், சின்னக் கட்டில், ஒரு பீரோ அளவுக்கு அவளுக்கு துணிமணிகள், அதற்குத் தகுந்தாற்போலப் படத்தில் காட்டுவது போன்று செருப்புகள் என்று சக்களத்தி மகளாக இருந்தாலும், நான் குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்கின்றேன் என்பதாகக் கவனித்தார்.
விருஷாலியோ ‘இதெல்லாம் நல்லதுக்கில்லை’ என்று தோன்றினாலும் தடுக்கவில்லை. இங்குக் கண்ணைக் கசக்கி காரியம் சாதிக்கும் சிறுமியாக அபர்ணா மாறிவிட்டாள்.
முன்பு எல்லாம் கிடைத்தாலும் சங்கீதா மொத்தமாய் இப்படி வசதி செய்து தரவில்லை. இருக்கற வீட்டுக்குள்ள இது போதும் என்றவர். இங்குச் சுகன்யா அன்பாய் வளர்க்கின்றேன் என்று அதிகமாய் ஆடம்பரத்தை தர, கேட்பது கிடைக்கும் என்ற எண்ணத்தையும் ஊற்றிவிட்டார். இதனால் விருஷாலிக்கும் அபர்ணாவுக்கும் சிடுசிடுப்பு அதிகம் நடந்தது.
விருஷாலி இது வேண்டாமென மறுக்க, அபர்ணா அதை ஆமோதித்து வீட்டில் நடத்தி காட்ட துவங்கினாள்.
இதில் விருஷாலி “என்னவோ போ” என்று சலித்து நகரும் நேரம் அவளிடம் ஆள்காட்டி விரலால் ‘பௌவ் பௌவ்’ என்று விளையாட்டுச் சிறுமியாக வெறுப்பேற்றுவாள்.
விஷாகன் முன்பை விடக் கூடுதல் நேரமாக எட்டுமணிக்கு எட்டரைக்கு என்று வருவதால் ஹாலில் சாப்பிட்டுப் படுக்கப் படுக்கையறை வரவே பத்தரை மணியாகிவிடும்.
தனியாகப் பேசவேண்டும் என்று மனதில் நினைத்தால் அவன் இவளிடம் அவன் தேகத் தேவையை நாடும் முதல் தொடுகையிலேயே இந்த நேரத்தில் பேசவேண்டுமா? என்று தவிர்த்திடுவாள்.
இதில் ராஜன் இந்த ஏரியா பக்கம் தண்ணி கேன் போடும் நேரம் லேசாய் வீட்டில் தலைகாட்டி, “அண்ணா இல்லையாண்ணி… அச்சோ.. ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன். கொரியர் ஆபிஸ்ல இருக்காரா?” என்று இரண்டு மூன்று தடவை தொடர்ச்சியாகக் கேட்டான்.
விருஷாலி “அங்க வர்றப்ப பேச வேண்டியது தானே.” என்றதற்கு, “எங்கண்ணி… இப்ப கடை சாவி என்னிடமும் அகஸ்டியனிடமும் இருக்கு. அண்ணா நேத்தெல்லாம் வரவேயில்லல” என்று பேசினான்.
விஷாகன் விவேக்கிடம் பேசும் நேரம் ‘எங்க உன் தங்கையிடம் சரியா பேசி மூனு நாள் ஆகுது. எப்பபாரு அம்மா அபர்ணாவுக்கு ஏதாவது வாங்கிட்டு வர சொல்லவும் அங்க போறதுக்கும் சுகிர்தனிடம் பேசவுமே சரியா இருக்கு. இன்னிக்கு சொல்லறேன்.’ ‘அச்சோ.. மறந்துட்டேன் டா.’ என்ற பேச்சையெல்லாம் ஓட்டு கேட்டவன் மூளை விருஷாலியிடம் வன்மத்தை கக்கியது.
விருஷாலி எதையும் மூளைக்குக் கொண்டு போகக் கூடியவள் இல்லை. அபர்ணாவோடு கடைக்குப் போதும் போது கொரியர் அலுவலகம் முன் வந்து பேச முயன்றாள்.
டேபிளில் இருக்கும் மரத்தூள் ஒன்று மகேஸ்வரியின் நகத்தின் இடுக்கில் கீறி உள்ளே செல்ல, வலியில் மகேஸ்வரி துடிக்க நெயில் கட்டரின் முனையை அந்த மரத்தூளில் வைத்து மெதுவாய் எடுக்க விஷாகன் உதவினான்.
“அச்சோ.. வலிக்குது.. அம்மா..” என்று மகேஸ்வரி கத்தவும், “இரத்தமேயில்லை.. எதுக்கு அந்த அக்கா இப்படி ஓவரா ரியாக்ட் பண்ணறாங்க” என்று அபர்ணா கேட்க, வெளியேவேயிருந்து பார்த்துவிட்டு “நீ வா பென்சில் பாக்ஸ் வாங்கணும்னு சொன்னல” என்று இழுத்து சென்றாள் விருஷாலி.
மனதில் விஷாகன் தனக்கு மட்டும் அன்பாய் நடக்க வேண்டும். இதென்ன அவளிடமும் அக்கறை? என்ற எண்ணம் பிறந்தது.
அங்கு என்ன நடந்தது? ஏன் கத்தினாள்? ஏன் உதவினான்? என்பது எல்லாம் மூளையில் ஏறவில்லை.
விருஷாலி மனம் லேசாய் ஆட்டம் காட்ட துவங்கியது இந்த நிகழ்வினாலேயோ, ராஜன் பேச்சால் இல்லை.
தாய் அன்னம் போன் போட்டு பேசும் போதெல்லாம், ‘அந்தக் கொரியர் பொம்பளையிடம் மாப்பிள்ளை மயங்கிடப்போறார் டி, ஜாக்கிரதை’ என்று முடிக்கும் போதெல்லாம் கூற கொஞ்சம் கொஞ்சமாய் விஷமாகப் பதிய வைத்ததே காரணமாக இருக்கலாம்.
என்றோ ஒருமுறை என்றால் அன்னம் பேச்சை மறந்திருப்பாள். காலை, மதியம், இரவு என்று ஒரு நாளைக்கு மூன்று வேளையும் மருந்து போலத் தினமும் கேட்டு கேட்டு இந்த 45 நாட்களுமே மகேஸ்வரி என்பவளை விருஷாலி அறியாமலேயே அன்னம் போன் வாயிலாகவே விஷவிதையைத் தூவிவிட்டார்.
முதல் கொஞ்ச நாள், ‘எனக்குத் தெரியும் அம்மா…’ ‘மச்சான் அப்படியில்லைம்மா…’ ‘சும்மாயிரும்மா…’ ‘வாயுக்கு வந்ததை உருட்டாதே….’ ‘உனக்கு இதே வேலையா போச்சு…’ என்று கூறிவந்தவள் தானாக, “சரிம்மா நான் பார்த்துக்கறேன்’ என்று கூறுமளவு வந்துவிட்டதை அவளே அறியாது போனாள்.
இந்த நிகழ்வு இதுநாள் வரை அன்னம் போட்ட விதைக்கு நல்ல உரமாக மாறியது. எனினும் உடனுக்குடன் சந்தேகம் என்னும் சேற்றை, தன் மேல் வாறி பூசிடவில்லை விருஷாலி.
அபர்ணா வேறு ‘பர்க்கர் வாங்கித்தா… சிக்கன் சீஸ் பால் வாங்கித்தா’ என்று அவளிஷ்டத்திற்கு ஆட்டியபடி பீட்ஸா கடைக்குள் தள்ளினாள்.
விருஷாலிக்கு தன்னையே இப்படி வம்படியாக அபர்ணா இழுத்து வந்திருக்க, சுகன்யா அத்தை எல்லாம் இரண்டு முறை மறுத்துவிட்டு இவளிடம் இந்த அடத்தினாலேயே ‘என்னவோ வாங்கிக்கோ’, என்ற முடிவுக்கு வந்திருப்பாரென முடிவே கட்டினாள். சுகன்யாவுக்கு இந்த வயதில் மனக்கஷ்டத்தில் போராடயியலாது அல்லவா? அபர்ணா இஷ்டத்திற்கு இழுக்க, மறுத்துக் காசை கையில் கொடுத்து வாங்கிக்கோ’ என்று தானே கூறியிருப்பார்.
பீட்சா கடைக்குள் விருஷாலி அமர்ந்திருக்க, தலைக்குள் அபர்ணாவும் அன்னம் பேசிய வார்த்தைகளும் நாட்டியமாடியது.
இதில் கொரியர் அலுவலகத்தில் வேலை செய்யும் வளவன் வேறு, எதிரே பழச்சாறு கடையில் இரண்டு ஜூஸ் வாங்கிக்கொண்டு செல்லவும், அந்தப் பழச்சாறு இரண்டும் மகேஸ்வரிக்கும் விஷாகனுக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
ஆனால் கொரியர் அலுவலகத்தில் சண்முகம் அண்ணாச்சி வந்து, மகளின் பள்ளி தோழியான மகேஸ்வரியிடம் “என்னம்மா வேலை பிடிச்சிருக்கா. மானத்துக்கு எந்தக் குறைச்சலும் வராது. விஷாகன் தங்கமான பிள்ளை”யென்று நற்சான்றிதழ் உரைத்திருக்க, மகேஸ்வரி வெளியே நின்றிருந்த விஷாகனை தான் இமைக்காமல் நன்றியுணர்வோடு பார்த்து நின்றாள்.
அதே தெருவில் இருந்த பீட்சா கடையில் பர்க்கரை வாங்கித் திண்றுவிட்டு அபர்ணாவை அழைத்துக் கொண்டு விருஷாலி செல்ல, மகேஸ்வரி பார்வை விஷாகனிடம் இருப்பதைக் கண்டு கொதிகலனாக மாறி விறுவிறுவென நடந்தாள்.
“அண்ணி அண்ணி… அண்ணா கடைக்குப் போகணும்னு சொன்ன?” என்று வினாத் தொடுத்தாள் அபர்ணா.
“உங்கண்ணா ரொம்பப் பிஸியா இருக்கார்.” என்று பல்லைக்கடித்துப் பதில்தர, அதற்கேற்றார் போல அதே ரோட்டில் சற்றுத் தொலைவில் கடந்து சென்ற மனைவியைப் பாராமல் போனில் மும்முரமாகச் சுகிர்தனிடம் பேசினான்.
அங்கு ஜெனிபரின் வீட்டில், ஜெனிபர் தாய் எஸ்தர் மகளைக் காண வந்து வீட்டில் தங்கிட, சில பல பூகம்பம் அவன் வீட்டிலும் நடந்தேறியது.
‘நல்லா வாழுற பிள்ளை தாய் பேச்சு கேட்டுச் சீரழிந்தாளாம்’ இது விருஷாலிக்கு மட்டும் இல்லை. ஜெனிபருக்கும் அரங்கேறியது.
விருஷாலி பெரும்பாலும் யார் சொல்லும் கேட்டு முடிவெடுப்பவள் இல்லை ஆனால் குழப்பிவிட்டார்கள். எப்போது சந்தேகத் தீப்பற்றி எரியுமோ என்று விதி நடுகூடாரத்தில் தலை விரித்துப் பாய் விரித்து அமர்ந்தது.
இதற்கிடையில் அடிக்கடி விஷாகன் அறையில் அபர்ணா ஏசிக்காற்று வாங்க சென்று விருஷாலியின் தனிமையை வேறு அபகரித்துவிட்டாள். சற்று யோசிக்க அவகாசம் தந்தாலும் நிதானமாகச் சிந்திக்கும் திறனுடையவள்.
அபர்ணா கட்டிலில் குதித்துக் குதித்துப் போனில் பாட்டு போட்டுவிட்டு கதவடைத்து நடனமாடினாள்.
விருஷாலி கதவை தட்டி தட்டி ஓய்ந்து கோபம் தலைக்கேற, ஆற அமர கதவை திறந்த அபர்ணாவின் கன்னத்தில் பளீரென அறைந்திருந்தாள்.
“கூப்பிட கூப்பிட கதவை திறக்காம ஆடுற, வெளியே போ, இனி இங்க வராதே” என்று கோபத்தில் மொழிந்தாள்.
சற்று முன் ஐயர்ன் செய்ய வேண்டி, ஐயர்ன் பாக்ஸை போட்டுவிட்டு வந்தவள் சூடேறி அபர்ணா காலிலோ, துணியிலோ பற்றி எரிந்திடுமோ என்ற பயத்தில் தான் இத்தனை அவசரம் காட்டியது. ஆனால் அபர்ணாவுக்கு அதெல்லாம் கருத்தில் நிச்சயம் பதிந்திருக்காது.
அண்ணி ஏற்கனவே ஏசி போட்டால் ஆகாதெனத் திட்டுவாள் தற்போது கட்டிலில் குதிக்கவும் அடித்துவிட்டாள்.
இதைத் தான் அபர்ணா சுகன்யா மாவரைக்கச் சென்று வந்ததும் அழுகையோடு ஒப்பித்தது.
சுகன்யாவோ மருகளை அதட்டவும், விருஷாலி தன்னிலையை விளக்க வாயெடுத்தாள்.
“இங்க பாரு விருஷாலி… நானே இவளை அதட்டறதும் அடிக்கறது இல்லை. சின்னப் பிள்ளையா இருக்காளேனு. நீ ஏன் அடிக்கிற.” என்று கடுகடுத்திடவும் வீட்டில் அமைதிநிலையே குலைந்தது.
இதில் வீட்டுக்கு வந்ததும் விஷாகனிடம் வேறு சுகன்யா ஒன்றுவிடாமல் கூற, ‘ஏன் ஷாலிம்மா?’ என்று தான் பார்வை பதித்தான்.
“இல்லைங்க.. அபர்ணா சொன்னதை வைத்து அத்தை பேசறாங்க.
உள்ள ஐயர்ன் பாக்ஸ் ஆன் பண்ணிருத்தேன். இவ கதவை மூடிட்டா, நான் எத்தனை தடவை கூப்பிட்டேன் தெரியுமா?” என்று தெளிவாக விளக்க முயன்றாள்.
“இல்லண்ணா… அண்ணிக்கு என்னைப் பிடிக்கலை.. ஏசி போட்டாளே திட்டுது. என்னை அடிச்சிடுச்சு… நான் எங்கம்மா இருந்த வீட்டுக்கே போறேன்..” என்று வந்ததும் ஆளாளுக்கு ஒருவராக ஆரம்பித்தார்.
விஷாகனோ “வீட்டுக்கு வரவா வேண்டாமா. இப்படி உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு அடிச்சிட்டுக்கு இருந்திங்கனா, நான் கொரியர் ஆபிஸ்லயே இருந்துடுவேன்” என்று கோபமாய்க் கத்திவிட்டு அறைக்குள் சென்றான்.
விருஷாலி சிலையாக அமர்ந்திருந்தாள். அவர் பணி முழுவதும் தண்ணிகேன் போடும் குடோனில் தானே. அங்குத் தானே தனியறை அமைத்து வரவு செலவை கணினியில் ஏற்றி, மற்ற வாடிக்கையாளரை கூடப் பேச வருவார்கள்.
இப்ப என்ன கொரியர் ஆபிஸ்? இப்படித் தான் சாத்தானின் எண்ணம் மெதுவாய் நுழைந்தது.
விஷாகன் கத்திவிட்டு வந்துவிட்டாலும், ஷவர்நீரில் குளித்து வந்ததும், நாமளும் தேவையில்லாம கத்திட்டோமோ, பேசாம அபர்ணா இந்த ரூமுக்கு வராம இருக்க, அவரூம்ல ஏசியைப் பிக்ஸ் பண்ணிடலாமா? என்ற எண்ணம் பிறந்தது.
இந்த வயதிற்குத் தனியறையே தேவையற்றது. இதில் ஏசி, போன் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்திற்கு அதிகபட்சம் என்பதை அவன் யோசிக்கவில்லை.
அவன் யோசித்தது எல்லாம், அபர்ணா வருகையால், விருஷாலியை தான் தள்ளி நிறுத்தி பழக, விருஷாலிக்கும் தனக்கும் சிறு இடைவெளி முளைக்கின்றதோ என்ற சரியான கண்ணோட்டத்தில் சென்றான்.
சரியான பாதை என்றாலும் இரண்டு பக்கமும் சரிப்படுத்த வேண்டுமே.
அபர்ணாவுக்குத் தனியாக எதையும் செய்து வேறொரு ஆபத்தை விலைக்கு வாங்கிடக் கூடாதென்பதே அவன் மூளைக்கு எட்டவில்லை.
விருஷாலியை திட்டினாலும் அவளுக்கான நிம்மதி தேடி தர முயன்றான்.
அதோடு சுகிர்தன் வீட்டிலும் ஜெனிபர் ஏசி கேட்க அவன் மறுக்க ‘என் பணத்துல வாங்கிக்கறேன்’ என்று ஆரம்பமாகி,’ உன் புருஷன் இதுக்கூட வாங்கித் தர வக்கில்லையா’ என்று எஸ்தர் அலட்சியப்படுத்த, ஏசியால் இங்கும் ஒரு பிரச்சனை எழவேண்டாம் என்றிருந்தது.
ஆனால் அடுத்த நாளே அபர்ணா அறையில் ஏசி மாட்டி விட, “அப்ப நான் நம்ம ரூம்ல வந்து ஏசி போட்டதுக்குத் தான் அடிச்சேன்னு முடிவே கட்டிட்டிங்க அப்படித் தானே?” என்று அதற்கும் கோபமானாள் ஷாலி.
அவள் கோபம் சரிதானே. நடந்த நிகழ்வில் அபர்ணா கூறியது போல உண்மையென நம்பி ‘அபர்ணாவுக்குத் தனியாக ஏசி அமைத்தால், இங்கு அடித்தது அதற்கு என்று ஆணித்தரமாக நம்புவது போலாகிடும்’ என்பதை அவள் கூற, “ஏசி வாங்கியாச்சு. பிக்ஸ் பண்ணிட்டு இருக்கேன். ஏன் வாதம் பண்ணற” என்று அதட்டினான் விஷாகன்.
தாய் எதிரே வாக்குவாதம் புரிவதை அவன் மனம் விரும்பவில்லை.
விருஷாலிக்கோ மனசெல்லாம் லேசாய் வலித்தது. தன் கணவன் தன்னைச் சிறுபெண்ணிடம் வம்பு செய்யுமளவிற்கு எண்ணிவிட்டாரே என்ற மனக்குமறல்.
இரவில் அதைக் கூறித் தெளிவுப்படுத்த அவனோ “நான் அப்படி நினைக்கலைடி. அவ இங்க அடிக்கடி நைட் வந்து படுத்துக்கறா. போ போனு விரட்ட முடியாது. எனக்கு வந்ததும் உன்னை அள்ளிக்கணும் ஆசை. என் விருஷாலி என்னோட கூடக் கொஞ்ச நேரம் இருக்கத் தான் அப்படிச் செய்தேன்.” என்று மனதை மாற்ற துவங்கினான்.
அதில் கரைந்துவிட்டாலும் சுகன்யா அத்தையின் பார்வைக்குத் தான் கெட்டவளாகத் தெரிவேனே என்று வாதாடினாள்.
“யார் என்ன நினைச்சா என்ன ஷாலி. நான் நினைக்கணும். நான் நினைச்சா மட்டும் தான் நீ பீல் பண்ணணும்.” என்று நெற்றியில் முத்தமிட்டு கூறவும் அரைமனதாய் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super😍
அச்சோ. .. விருஷாலி விசாகன் பிரிக்காதிங்க
Sani paai viruchi padukala ellar melaiyum eri utkarndhu irukku adhu erangi poga konja naal agum 😂😂….
Super super akka ❤️…. Waiting for next ud….
Aparna this is too much. Shali don’t get doubt about vishakan. Interesting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீயின்றி வாழ்வேது…!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 33)
அடப்பாவி..! இந்த விஷாகன் ரொம்ப புத்திசாலியா, மெச்சூர்டா இருந்தான். இப்ப என்னடான்னா, பொண்டாட்டி மயக்கத்துலயா, இல்லை ரெண்டு பிசினஸை பார்த்துக்கற டென்ஷன்ல தப்பத்தப்பா முடிவை எடுக்கிறான். இப்ப அந்த சி்ன்ன குட்டிக்கு ஏசி தேவையா என்ன.? அவனோட அம்மாவுக்கு கூட இதுவரைக்கும் ஏசியை வாங்கிப் போடலையே, இப்ப என்ன புதுசா…? வீட்ல இத்தனை பேரு இருந்தும் அந்த குட்டியோட நடவடிக்கையை யாருமே சரியா கவனிக்கலையோ…? அது சரி, இந்த விஷாகன் எதுக்கு கொரியர் ஆஃபிஸ்க்கு போயிடுவேன்னு வார்த்தையை விடறான்…? இவனோட ஆஃபிஸ் தண்ணி கேண் தானே…? மகேஸ்வரி கையில முள்ளுக்குத்தினா, ஒண்ணு அவளே எடுத்துக்கட்டும், இல்லையா வளவனை எடுக்க சொல்லட்டும். இல்லையா டாக்டர் கிட்ட போகட்டும்.
இது என்ன புதுசா….?
ம்ஹூம்…இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை. விஷாகன் வீணாப்போய் ஓணானை உன் பேன்டுக்குள்ள விட்டுக்கறியோன்னு தோணுது.
அது சரி, இந்த அம்மாங்க சும்மாவே இருக்க மாட்டாங்களா…? விஷாலி அம்மாவாகட்டும், ஜெனிஃபர் அம்மாவாகட்டும்… இப்ப எதுக்கு
சாம்பிராணி போடறாங்க.
மகள்களோட வாழ்க்கையில மறைமுகமா விளையாடறதே இந்த கால அம்மாங்களோட வேலையாப் போயிடுச்சு.
புருசன் கிட்ட பொண்டாட்டி போட்டா தலையணை மந்திரம்..
இந்த அம்மாங்க தினசரி தன் பொண்ணுங்க கிட்ட போடற மந்திரத்துக்கு பேரு என்ன..?
ஒரு வாசகம்ன்னாலும்….
அது திருவாசகமோ…???!!!
😄😄😄
CRVS (or) CRVS 2797
Super sis nice epi 👌👍😍 endha aparna va konjam kandichi valarkanum adhu yaarukum puriya matengudhe ethellam enga poi mudiya pogudho 🤔🙄 endha vrushali vera manasula kandadhaium pottu kozhapikudhu adhu ennaiku vedika pogudho 😢
Intha aparna ku over edam kudukaranga…. Rmba panra
kathai etho vera track la mathuringle virushali manasula thappana ennam vara vaika pakuranga a the mari nadakuthu vera shali un manasula entha ennam vara kudathu
Suganya and vishagan konjam yosichu pesanum chinna pillai nu Ellam pananum nu avasiyam ila
Aga inga Shali anga jenifer rendu perukum avanga amma thevai illa ma manasula venda tha ennam varala karanam even inga aparna vishyathula ah yum athu than nadakkuthu konjam aachum aval ah kandikanum atha vittutu ava sollurathu ku aama saamy podakoodathu
Konjam kuda alutha ellathaium pannidarathu… Alutha ellam kidaichidumnu ninaikuthunga….. Spr going waiting for nxt epi😍😍😍😍👌👌👌👌👌👌
NICE EPI.
அதிகப்படியான அடமும் அதில் கிடைக்கும் சலுகையும் அந்த பிள்ளையை தப்பான பாதைக்கு கொண்டு போகும்